Archive for February, 2006

இது குழந்தை பாடும் தாலாட்டு

February 28, 2006

முரண்கள் நிறைந்த வரிகளைக் கொண்ட பாட்டு இது… SPBயின் குரலில் பாடல் வெகு அழகாகவே ஒலிக்கிறது..

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

இசையும் மெல்லிய ஆனால் உயிரோட்டமுள்ள இசை.. வீணையை அழகாக உபயோகித்துள்ளார் டி. ராஜேந்தர்.

இந்த பாட்டின் வரிகள் ரொம்ப பிடிக்கும் எனக்கு.. கவித்துவமான வரிகள்..

வடமிழந்த தேரது ஒன்றை
நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண்மீனை பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்.

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

பாடலின் சுட்டி : இது குழந்தை பாடும் தாலாட்டு
பாடியவர் : SPB
படம் : ஒர் தலை ராகம்
இசை : டி. ராஜேந்தர்.

Advertisements

ஜோடி நதிகள்

February 28, 2006

கீதம் ப்ளாக்கில் ரொம்ப நாளைக்கு முன்னால் போட்ட பாடல். ஒரு அருமையான எஸ்.பி.பி. பாடல். இப்போது ‘பாடும் நிலா பாலு’வில் மறுபதிப்பு செய்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

“அன்பே ஓடிவா” படத்தில் இருந்து. இந்த பாடலை நான் ஒரே நாளில் 20 தடவை கூட கேட்டிருக்கிறேன். அந்த தொடக்க S.P.B ஹம்மிங் ரொம்ப அருமை. எப்போதுமே அலுக்காத பாடல். கேட்டு பார்த்து சொல்லுங்கள்.

படம் : அன்பே ஓடிவா
பாடல்: ஜோடி நதிகள்
பாடியவர்: S.P.B
இசை: இளையராஜா


உன்னைத் தொட்ட தென்றலொன்று

February 28, 2006பலவிதங்களிலும் “கல்லூரி”ப் படங்களின் வழக்கமான கட்டமைப்பை உடைத்த படம் தலைவாசல். விஜய் போன்ற நல்ல நடிகர்களை அறிமுகப்படுத்தி, நாஸரின் அற்புதமான நடிப்பை வெளிக்கொணர்ந்தது. “கானா பாடல்கள்” “மடிப்பு அம்சா” என்று எத்தனையோ விதங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட படம். கல்லூரி முதல்வராக பாலுவும் நன்றாகச் செய்திருந்தார்.

படத்தில் கானா பாடல்கள் நிறைய உண்டு. ஆனால் இந்தப் பாடல் வேகமான தாளகதியில் அதே சமயத்தில் மெல்லிசையாக பாலுவின் இனிய குரலில் நம்மைத் தென்றலாகத் தொட்டுத் தழுவிச் செல்லும். உடன் பாடியது சித்ரா (குரலில் அவ்வளவு ஒரு வித்தியாசம்!). இசைஞானி பாணியிலேயே இசையமைத்திருப்பவர் பாலபாரதி (அமராவதி படத்திற்கும் இவர்தான் இசை. கலக்கலான பாடல்களுள்ள படம். எங்கே போனார்?)

உன்னைத் தொட்ட தென்றலொன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா?

(உன்னைத் தொட்ட)

தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே

உறங்கும் போதும் உந்தன் பேரைச்
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதும்
உச்சி வேர்க்கிறேன்

இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்.

(உன்னைத் தொட்ட)

உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்

பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே

நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

(உன்னைத் தொட்ட)

Get this widget | Share | Track details

காங்கேயங் காளைகளே.. ஓடுங்கடா Govt. சாலையிலே

February 27, 2006

‘டேய் ஆ(ட்)ச்சிய புடிக்கிறேன் ஆ(ட்)ச்சிய புடிக்கிறேன்னு காரக்குடிப்பக்கம் போய் சொல்லிடப்போறாண்டா. புடிச்சி அடிச்சுப்புடுவாக..’ 🙂

**

‘அண்ணே என்னண்ணே கேட்டு(gate-u) மூடிட்டிங்க..’

‘டேய் கேட்டுத்தானடா மூடினேன் கேணப்பயலே. கேட்காம மூடினாத்தான் தப்பு’

**
இதெல்லாம் இந்த பாட்டுக்கு நடுவில வரும் டயலாக்ஸ்.. ரொம்ப நகைச்சுவையா இருக்கும். சிவகுமார் நடிச்ச படம்.. இதுல சிவகுமார் அவர் அண்ணனான ஜெய்சங்கருக்கு பொண்ணு தேடிப்போவார்.. மாட்டு வண்டியிலே போகும்போதே இந்த பாட்டு.. நடுவிலே மக்கள் கூட பேசுற டயலாக்கெல்லாம் அப்படியே வரும்

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாறேன்
மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணூ தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன்..

ஒரு இடத்துல வண்டி மாட்டை நிக்கவைக்க SPB எழுப்பும் ஒலி நமக்கு கண்முன்னே அந்த மாட்டு வண்டி நிக்கிறது தெரியும்.

பாடலின் சுட்டி : காங்கேயங்காளைகளே… ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
படம் : இன்று நீ நாளை நான்
இசை : இளையராஜா

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. கேட்டுப் பாருங்க

நிலவே என்னிடம் நெருங்காதே!

February 26, 2006

முதன்முதலாக மேடையேறிய SPB அவர்கள் இப்படித்தான் ஆரம்பித்தார்.

பிறகு சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தபோது மெல்லிசை மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. பாலுவின் குரலைக் கேட்ட MSV அவர்கள் உடனே அவருக்கு “ராமு” படத்தில் கண்ணதாசன் இயற்றிய பாடலைப் பாடும் வாய்ப்பளிக்க, பாலு பாடிய பாடல் “நிலவே என்னிடம் நெருங்காதே”.

இப்பாடலை இதுவரை PBS பாடியது என்று நம்பிக்கொண்டிருக்கும் ஆத்மாக்களே… இது SPB பாடியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அட.. நிஜமாதான். கேட்டுப் பாருங்களேன்.

கோடையில் ஒரு நாள் மழை வரலாம் – என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?
பாலையில் ஒரு நாள் செடி வரலாம் – என்
பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?

நிலவே என்னிடம் நெருங்காதே – நீ
நினைக்கும் இடத்தில் நானில்லை


சரிசரி. உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். SPBS பாடினதுன்னு வச்சுக்கலாமா? :o)

பாட்டுப் பாடவா படத்தில் பாலு நடித்துப் பாடியதிலிருந்து எடுத்தது இது!

***

என் காதலே என் காதலே

February 26, 2006

S P B யும் கத்ரி கோபால்நாதின் ஸாக்ஸபோனும் இணைந்து பாடிய இந்த பாட்டு ரொம்ப தனித்துவம் வாய்ந்தது. உபயோகிச்சிருக்கும் இசைக்கருவிகள்னு பாத்தா ரொம்ப கம்மிதான்.. முழுக்க முழுக்க SPBயின் குரல் ஆட்சி செய்த பாட்டு இது. குரலில் அவ்வளவு உருக்கம்.. அதே அளவு உருக்கத்தை ஸாக்சபோனிலும் கொடுத்திருக்காரு கத்ரி கோபால்நாத்.. வரிகளுக்கு இடையே வரும் சின்ன சின்ன இடைவெளியும்கூட(pause) ஆயிரம் உணர்ச்சிகளை சொல்லுது.. அற்புதமான பாட்டு.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள்..
ரெண்டில் என்ன் தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
..

அழகான கவிதை வரிகள். இந்த பாட்டின் வெற்றிக்கு காரணம் இத்தகைய வரிகளும், SPBயின் குரலும்தான்.. ஸாக்சபோனையும் மறக்கக்கூடாது.

அமைதியான, அழகான பாடல்.. கேளுங்க..

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்ததும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்ததும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

காதலே பூவெறிந்தால் எந்த மலையும் கொஞசம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா… இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா.. இல்லை போவதா..
அமுதமென்பதா… விஷமென்பதா..
இல்லை அமுதம் விஷமென்பதா…

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்ததும் நீ
என் கண்ணிரண்டை கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

இது மாற்றமா.. தடுமாற்றமா..
என் நெஞ்சிலே.. பனி மூட்டமா..
நீ தோழியா… இல்லை எதிரியா..
என்று தினமும் போராட்டமா..

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்ததும் நீ
என் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு

அவள் ஒரு நவரச நாடகம்

February 26, 2006

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார் பாலு. கிட்டத்தட்ட மொத்த பாடலும் தண்ணீருக்கடியில் நளினமாக எடுக்கப்பட்டிருக்கும். மெல்லிசை மன்னரின் இசையில் இது ஒரு தென்றலாக வந்து தழுவுகிறது.

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

(மரகத மலர்)

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா

(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

(அறுசுவை)

ஊடல் அவளது வாடிக்கை

(ஊடல்)

என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா

(அவளொரு)***

காதல் ஓவியம் – சிவாவின் கீதம் சங்கீதத்தில்

February 25, 2006

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது

அம்மா அழகே உலகின் ஒளியே

பூவில் வண்டு கூடும்

சங்கீத ஜாதி முல்லை

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

நதியிலாடும் பூவனம்

நன்றி சிவா

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

February 24, 2006

Image hosting by TinyPic

கனவுலகில் அழைத்துச் சென்று சஞ்சரிக்கவிட்டு, உதடுகளில் புன்னகையை விரிக்கச் செய்யும் பாடல் இது – எப்போது கேட்டாலும்.

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

(விழியிலே)

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே

(ஓவியனும்)

காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
கால்களுக்கு வளர்ந்த பூங்கொடி

(விழியிலே)

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

(விழியிலே)

சில பாடல்களைக் கேட்கும்போது இசை எம்.எஸ்.வி. என்று நினைத்தால் இளையராஜா இசையமைத்திருப்பார். இளையராஜா என்று நினைத்தால் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். இப்படிப் பல பாடல்களுக்குக் குழம்பியிருக்கிறேன். அப்படித்தான் இந்தப் பாடலுக்கும் சமீபம் வரை மெல்லிசை மன்னர்தான் இசையமைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகு பார்த்தால் இசைஞானி இசையமைத்திருக்கிறார்! கவிஞரையும் தவறாகவே அனுமானித்திருந்தேன். எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

புவனா ஒரு கேள்விக் குறி என்பது சரியாகத்தானிருக்கிறது! 🙂 (1977-இல் வந்த படம்!)

***

பஞ்சு அருணாசலம்
இளையராஜா
புவனா ஒரு கேள்விக்குறி

இயற்கை என்னும் இளைய கன்னி

February 23, 2006இப்போதே இத்தனை இளமையான குரலில் பாடுகிறாரே. பாட வந்த புதிதில் அவர் குரல் எவ்வளவு இளமையாக இருந்திருக்க வேண்டும் என்று யோசிக்கும் பட்சத்தில் ஒரு முறை சாந்தி நிலையம் படத்தில் அவர் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் போதும். குரலில் இளமை அள்ளிக்கொண்டு போகும். பல தலைமுறைகளைக் கடந்து இன்னும் அவர் பாடிக்கொண்டிருப்பதன் பிரம்மாண்டத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். வயதானாலும் கம்பீரம் குறையாத சிங்கம் போன்று, இன்றும் இனிதாக ஒலிக்கும் அவரது குரலுக்குக் கோடி நமஸ்காரங்கள். அதைக் கொடுத்த இறைவனுக்கு கோடி நன்றிகள். இனி பாடல்..

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட

(பொன்னிறத்து)

தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

(இயற்கை)

அது சரி. “இயற்கை என்னும் இளைய கன்னி” பாலு தமிழ்ச் சினிமாவில் பாடிய முதற் பாடல் இல்லை என்பது தெரியுமா?