Archive for May, 2006

பயணங்கள் முடிவதில்லை: இளைய நிலா

May 31, 2006

Image and video hosting by TinyPic
கிடார் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் “இளைய நிலா பொழிகிறதே” என்ற பயணங்கள் முடிவதில்லை (1982) படத்தில் வரும் பிரபலமான பாடல். கோவைத் தம்பியின் படம்.

இளையராஜா இளைய நிலாவில் பொழிந்தது போல கிடார் மழையை வேறு எந்தப் பாடலிலும் பொழிந்ததாக நினைவில்லை (என் இனிய பொன் நிலாவே – இளைய நிலாவிலிருந்து வெகு தூரம் இருக்கும் பாடல்).

அப்போது நடக்கும் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாது பாடப்பட்ட கிடார் வாசிப்பவர்களின் ஆதர்ச பாடலாக இளைய நிலா திகழ்ந்தது என்றால் மிகையாகாது. லண்டன் ட்ரினிடி கல்லூரியில் கிடார் வாசிக்கும் திறனுக்குத் தங்கப் பதக்கம் வென்றவர் இளையராஜா. அவருக்கு இந்தப் பாடல் ஒரு தங்கப் பாடல்.

மோகனுக்கு ஒரு அசுர ஏற்றத்தைத் தந்த படம் பயணங்கள் முடிவதில்லை. அதற்குப் பின்பும் பல வருடங்களுக்கு சுரேந்தர், இளையராஜா, பாலு ஆகிய பெரு நிழல்களில் நின்று ஒளிர்ந்தவர் மோகன் – நிறைய அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும் அவர்.

அந்நியன் போன்று கோடிகளிறைத்து ஆடம்பரங்கள் ஏதும் இல்லாது எளிய கதை, காட்சியமைப்புகளுடன் 250 நாட்கள் ஓடியது பயணங்கள் முடிவதில்லை.

படத்தில் எல்லாப் பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள். பாலுவும் ராஜாவும் ஆட்சி செய்த பாடல்கள்!

இந்தப் பாடலில் கிடாரும் பாலுவும் போட்டி போட்டுக் கொண்டு திறமையைக் காட்டியிருப்பார்கள். கனமான குரலில் பாலு அவ்வளவு இனிமையாகப் பாடியிருப்பார்.

படத்தில் பூர்ணிமா எழுதி வைத்திருந்த கவிதைக் காகிதம் காற்றில் பறந்து மோகன் மடியில் வந்து விழ, அவர் உடனடி காப்பி போல உடனடியாகப் பாடத் துவங்க, எஸ்வி சேகர் கிடார் வாசிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலை மோகன் பாடும்போது பூரித்துப் போகும் பூர்ணிமாவின் புன்னகை சிந்தும் முகம் நன்றாக நினைவிருக்கிறது.

“இந்தச் சென்னை மாநகரத்திலே இப்படிப்பட்ட ஒரு சிறப்பான வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கேன்” என்ற வசனத்தை அடிக்கடி சொல்லும் கவுண்ட மணியும் அவர் பங்குக்குக் கலக்கியிருப்பார்.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

இசைஞானிக்கும் பாலுவுக்கும் வரிகள் தந்த வைரமுத்துவுக்கும் ஒரு பெரிய ஜே!

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

Advertisements

"ஆலாபனா" தெலுங்குப் படத்தின் பாடல்கள்

May 31, 2006


சலங்கையில் ஒரு சங்கீதம் படத்தின் மூலப் படம் தெலுங்கில் “ஆலாபனா” என்று வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். தெலுங்குப் படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்.
1. கலிஸே ப்ரதி ஸந்யலோ (கனவா இது உண்மையா?)
2. ஆ கனலுலலோ (யார் அழைத்தது கனவு ராணியா?)
3. ஆரு ருதுவுல (சலங்கையில் ஒரு சங்கீதம்)
4. ஆவேஸ மந்த்தா (யாரோடு யாரோ?)

சலங்கையில் ஒரு சங்கீதம் # 4 : நடராஜர் குடிகொண்ட

May 31, 2006


இந்தப் பாடலை காதல் ஓவியத்தின் சங்கீத ஜாதி முல்லை பாடலுக்கு ஒப்பிடலாம். ஆனால் எனக்கு இப்பாடல் சங்கீத ஜாதி முல்லையை விடச் சிறந்ததாகப் படுகிறது.

சங்கீத ஞானமில்லாமல் இம்மாதிரிப் பாடல்களைக் கேட்டு நடுவில் வரும் தாளங்களை எழுத முயல்வது எவ்வளவு மடத்தனமான இயலாத காரியம் என்பதை உணர்ந்தேன். அதிலும் இரு குரல்களாக வரும் வரிகளைக் கேட்கத்தான் முடிகிறது. எழுதுவது எனக்குச் சாத்தியமே இல்லை. சரணத்திற்கு முன்பு வரும் தாளச் சொற்களையெல்லாம் விட்டுவிட்டேன். தவறுகள் நிறைய இருக்கின்றன. அறிந்தவர்கள் குறிப்பிட்டால் திருத்திவிடுகிறேன். நன்றி.

சலங்கையில் ஒரு சங்கீதம்
உலகெலாம் அதன் ஓங்காரம்
கலைராஜன் இங்கே பதம் பாட
கலைவாணி இங்கே நடம் ஆட
விண்ணும் மண்ணுமே ஒன்று கூடுமே
ஈசா பரமேசா பெண்பூவை நீ வாழ்த்தவா

ஆஆஆஆஆஆஆ

நடராஜன் குடிகொண்ட கலையல்லவா ஆஆஆ
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உயிராகி
உயிரோடு கருவாகி உடலோடு உயிராகி
வாழும் ஒரே கலைதானல்லவா
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா ஆஆஆ
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா

தகஜுமி தாம் கிடதகதாம் தக தஜம் திமி தஜம் தனு தஜம் தரிகிட தக தாம்

புலித் தோலில் உடை கொண்டு பொலிகின்ற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்
புலித் தோலில் உடை கொண்டு பொலிகின்ற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்

பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதிலென்ன கங்காதரா ஆஆஆஆ
பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதிலென்ன கங்காதரா ஆஆஆஆ

மலைகள் இடிய மழையும் பொழிய
கடலும் வடிய திசைகள் விடிய
வனமுகில் வரும் தினம்
தினம் தொழும் தினம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம்

நடராஜன் குடிகொண்ட கலையல்லவா ஆஆஆ
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உயிராகி
உயிரோடு கருவாகி உடலோடு உயிராகி
வாழும் ஒரே கலைதானல்லவா
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா ஆஆஆ
நடராஜன் குடிகொண்ட கலையல்லவா

தகதிமி தகஜனு தகிட தாம் தாம்
பகைவரை ஒழித்திடும் வலிமை வேண்டும்
ஜனு தகதிமி தக கிடத தீம் தீம்
உலகினில் கொடுமைகள் ஒழிய வேண்டும்
தகிட தம் தம்
உனது வடிவம்
ஜனுத தம் தம்
நெருப்பின் வடிவம்
தகிட தீம்
இரு கரம்
தகிட தீம்
பயங்கரம்
தகிட தீம்
இரு கரம்
தகிட தீம்
பயங்கரம்
இரு கரம்
பயங்கரம்

அண்ட சராசரம் ஆகிய எங்கும்
நின்று நிலைப்பது சக்தியின் அங்கம்

கணகணகணகணகணகணகணகண யகண தம்
தணதணதணதணதணதணதணதண தகன ஜம்
கணகணகணகண பகண ஜம்
தணதணதணதண ரகண ஜம்
தகண மகண
யகண ககண
தகண மகணம்
ரகண ஜகணம்
யகமக யககண தபபக ரகஜம்
யகண மகண யகண ககண தகணக

நடராஜன் நந்தினி
பரமேசன் பத்தினி
குலங் காக்கும் சித்தினி
குறையாத பத்தி நீ
அகிலாண்ட தேவி நீ
அணையாத ஜோதி நீ
அகிலாண்ட தேவி நீ
அணையாத ஜோதி நீ

அறியாத பெண்களைக் காக்கட்டும் உன் சக்தி
மகிஷ ராஜ சமர்த்தினி
எரியட்டுமே அக்கினி
மகிஷ ராஜ சமர்த்தினி
எரியட்டுமே அக்கினி


ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

May 30, 2006

தில்லு முல்லு படம் ரஜினியின் மகுடத்திலிருக்கும் ஒரு வைரம். நகைச்சுவை நடிப்பு கடினம். தனக்கு அதுவும் அனாயசமாக வரும் என்று ரஜினி அப்போதே ஆணித்தரமாக நிரூபித்த படம் தில்லு முல்லு. சரவெடி போன்று காட்சிக்குக் காட்சி தேங்காய் ஸ்ரீநிவாஸனும் ரஜினியும் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். செளகார் ஜானகியும் பூர்ணம் விஸ்வநாதனும் அவர்கள் பங்குக்குப் போட்டுத் தாக்க படம் முழுதும் ஒரே ரகளை.

நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர்களை தேங்காய் போட்டுக் காய்ச்சியெடுப்பார். பாரதி பெயரை வைத்துக்கொண்டு வரும் நபரின் ழகர லகர ஷகரப் பிரச்சினைகளால் எரிச்சலடையும் தேங்காய், அந்த நபரை “ஒரு கட்டுச் சுள்ளியில் ஒரு சுள்ளி கோணல் சுள்ளி” என்று சொல்லச் சொல்வதும், “கஸ்டப்” படும் அந்த நபரை நன்றாகத் திட்டித் தீர்த்து வெளியே துரத்துவதும் அதிரடி நகைச்சுவை.

தேங்காயைக் கவர்வதற்காக “அய்யம் பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள்” அவதாரம் எடுத்து வரும் ரஜினி அவரது “எங்கியோ போயிட்டே” பதில்களால் தேங்காயைப் புல்லரிக்கச் செய்து வேலையையும் வாங்கிவிடுவது கலக்கல் காட்சி.

தில்லுமுல்லுவில் வரும் இந்தப் பாட்டு கேட்பதற்குச் சுகமானது. மெல்லிசை மன்னரின் இசையும் கவியரசரின் வரிகளும் பாடலுக்கு அழகு சேர்க்க பாலு அருமையாகப் பாடியிருப்பார்.

ஆஹா அ அ அ அ ஆஆ
ஓஹோ ஓஓஓஓஓஓஓஓஓ

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பாடும் போது நான் தென்றல் காற்று

May 29, 2006


நேற்று இன்று நாளை.. என்றும் மெல்லிசை மன்னர் மெல்லிசை மன்னர்தான். அவரது இசையில் தென்றல் காற்றாக பாலு பாடியிருக்கும் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

“எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே!” – ஆமாம் பாலு. நீங்களும் தென்றல் காற்றும் ஒன்றுதான்.

“யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே” – ஆமாம் பாலு. எங்களில் கலந்து எப்போதும் ஸ்வாசம் போலக் கூடவே உங்கள் கானங்களை இருக்கச் செய்திருப்பதால், காற்றும் நீங்களும் ஒன்றுதான்.

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று


Oh Butterfly!

May 27, 2006


மீரா (1992) பி.ஸி.ஸ்ரீராம் இயக்கி ஒளிப்பதிந்த படம். “அந்தக் கால” விக்ரமும், அழகு ஐஸ்வர்யாவும் நடித்திருந்த படம். ஷங்கர் பாணியில் ஒரு வருடமோ என்னவோ இழுத்து எடுக்கப்பட்ட படம். அழகுணர்ச்சி மிகுந்திருப்பவர்கள் கனவுகள் நிரம்பியவர்கள். யதார்த்தத்தைச் சுலபத்தில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தப் படமும் நிரம்ப அழகுணர்ச்சியுடன் எடுக்கப்பட்ட ஒன்று – அதனால் யதார்த்தத்திலிருந்து ரொம்பவே விலகியிருக்கும் காட்சியமைப்புகளும் சம்பவங்களும் நிரம்பியிருக்கும்.



இளையராஜா இசையும் “அழகாக” இருக்கும் – கிட்டத்தட்ட இசையைப் பார்த்துவிடலாம் போல!

“லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு” என்ற காவியங்களில் வரும் இலக்கியப் பாடலொன்று இருக்கிறது. இதை விட்டுவிட்டால் சில அற்புதமான பாடல்கள். “பனிவிழும் மாலையில்”, “புது ரூட்டுலதான்” இரண்டு ஜாலியான பாடல்கள் இருக்கின்றன. மனோ இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். ஜானகியம்மா பிஸியாக இருந்தாரோ என்னவோ ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார். 🙂

குறிப்பாக இந்தப் பட்டாம்பூச்சிப் பாடல் மிக அருமையாக இருக்கும். வாலியின் வரிகளை பாலுவும் ஆஷாவும் சத்தமில்லாது பறந்து செல்லும் பட்டாம்பூச்சியைப் போல மென்மையாகப் பாடியிருப்பார்கள். பட்டாம்பூச்சியைப் போன்றே அழகான மெட்டைக் கொடுத்திருக்கும் இசைஞானிக்கு ஒரு பெரிய ஷொட்டு! வாழ்த்து அட்டை மாதிரி அழகாகப் படமாக்கியிருப்பார் பி.ஸி. பிடித்தது ஐஸ்வர்யாவின் வளைந்த இடையில் வயலின் வாசிக்கப்படும் காட்சி! 🙂

ஆரம்ப இசை “ஒரு கடிதம் எழுதினேன்” பாடலை நினைவு படுத்துகிறது. அருமையான சீரான தாளம். “உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன் எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ” என்பதை பாலு எப்படிப் பாடுகிறார் பாருங்கள். இனிய உணர்வுகளை எழுப்பும் பாடல்.

ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை


சலங்கையில் ஒரு சங்கீதம் # 3 : யார் அழைத்தது கனவு ராணியா?

May 25, 2006

பாலுவின் உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து பாடல் நடனமாடிக் கொண்டே போகிறது. இசை அற்புதம். இன்னொரு இனிய பாடல் சலங்கையில் ஒரு சங்கீதம் படத்திலிருந்து. பாடல்கள் அனைத்திலும் பாலு முழுமையாக ஆளுமை செய்திருக்கிறார்.

ஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?

தித்தை தித்தை திகதை திமிதை தத
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆனந்த மங்கை தஸரிஸதஸரிஸதநிதநிமா
ஆகாய கங்கை ஆஆஆஆஆஆஆஆஆ
சலங்கை என்னிடம் ஜதி பாடுது தஸதநிதா
அதனால் என் மனம் சுதி சேருது தநிதநிதா
ஆகாயம் வரைக்கும் என்னுள்ளம் பறக்கும்
ஆகாயம் வரைக்கும் என்னுள்ளம் பறக்கும்
சலங்கையது குலுங்கியதே
நவரசங்களும் இவள் வசம் இலவசம் அட

யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?

மதஸா ஸநிதமதமதஸா தபநிதமதநிஸா மதநி
ஸாரிஸரிகம மாகஸகமதா நிதஸநிதமக தமக ஸகமதநி

நீ வந்த பெண்ணே ஆஆஆஆஆஆ
ஆனந்தம் பெண்ணே தஸநிஸதஸநிஸதநிதநிமா
சதுரங்க நாட்டியம் நடந்தாலென்ன ஆஆஆஆ
சலங்கையின் ஓசையில் விடிந்தாலென்ன
நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன்
நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன்
கலைமகளே திருமகளே
விழியசைந்தது உயிர் வரை அடைந்தது அட

யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கிவிட்டது
யார் அழைத்தது கனவு ராணியா?
நான் ரசிப்பது கலையின் வாணியா?


சலங்கையில் ஒரு சங்கீதம் # 2 – கனவா? இது உண்மையா?

May 25, 2006

இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். அவர்கள் குரல்களோடு, இசை சுழன்றாடி, நம்மை ஒரு கனவுலகுக்கே இட்டுச் செல்லும். கேட்டுப் பாருங்கள். மனங்களின் சங்கமச் சுழற்சியில் நாமும் சிக்கிக்கொண்டு தவிப்போம்.

கனவா? இது உண்மையா?
அழகே? இது பெண்மையா?
கனவா? இது உண்மையா?
அழகே? இது பெண்மையா?

பூவே தேனில் நனைந்தாயா?
நீயே வந்து இணைந்தாயா?
பூவே தேனில் நனைந்தாயா?
நீயே வந்து இணைந்தாயா?

கனவா? இது உண்மையா?
மனமே? பதில் இல்லையா?

உன் சலங்கை ஓசையெல்லாம் யாரடி – அது
எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி
உன் சலங்கை ஓசையெல்லாம் யாரடி – அது
எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி

வாழ்க்கை போன போக்கிலே போகிறேன்
வாழ்கவென்று சொல்லடி வாழ்கிறேன்
அழகே அழகை மறுக்காதே
ஜதியே சுதியை வெறுக்காதே

மனமே பதில் இல்லையா?

முத்தமொன்று சிந்தி விட்டேன் அன்னமே
அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே
முத்தமொன்று சிந்தி விட்டேன் அன்னமே
அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே

மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே பாதியே
இல்லையென்று போவதோ மீதியே
மயிலே மயிலே வர வேண்டும்
மடியில் உறங்கும் வரம் வேண்டும்

கனவா? இது உண்மையா?
மனமே? பதில் இல்லையா?
கனவா? இது உண்மையா?
மனமே? பதில் இல்லையா?

நடனம் ஆட மனம் துள்ளும்
விதியைக் கேட்டால் விடை சொல்லும்

சலங்கையில் ஒரு சங்கீதம் # 1 யாரோடு யாரோ?

May 25, 2006

நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் பாடல்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தேன். சிரமமெடுத்துப் பாடல்களைத் தேடித்தந்த கோவை ரவீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தெலுங்கில் வந்த “ஆலாபனா” என்ற படம் தமிழ் ஒலி வடிவத்தில் “சலங்கையில் ஒரு சங்கீதம்”-ஆக வந்தது. ரயில் தொழிலாளராக வரும் மோகன் பானுப்பிரியாவைக் கண்டு காதலிக்கும் கதை. பானுப்ரியாவின் நடனத் திறமையை வெளிக்காட்ட இன்னொரு படம்.

ஒரே சமயத்தில் இசைஞானி காதல் ஓவியத்திற்கும் சலங்கையில் ஒரு சங்கீதத்திற்கும் இசையமைத்திருப்பார் போல. எனக்கு இவ்விரு படங்களின் பாடல்/இசையில் நிறைய ஒற்றுமை இருப்பதுபோல் பிரமை ஏற்படுகிறது – ஒவ்வொரு முறை கேட்கும்போதும்.

காதல் ஓவியம் பார்த்தேன். ச.ஒ.சங்கீதம் பார்க்கவில்லை – மற்றபடி இரண்டு படங்களும் ஊற்றிக்கொண்டன என்பது இன்னொரு ஒற்றுமை!

சலங்கையில் ஒரு சங்கீதத்தில் அசத்தலான சில பாடல்கள் இருக்கின்றன. பாலு கலக்கியிருப்பார். காதல் ஓவியம் பாடல்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறைவில்லாத அருமையான பாடல்கள். ஆனால் ஏனோ காதல் ஓவியம் பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு இப்படத்தின் பாடல்கள் பேசப்படவில்லை.

இந்தப் பாடலில் சலங்கையின் இசை மட்டும் பிரதானமாக ஒலிக்க மிக மிக மென்மையாக பாலு பாடியிருப்பார். தனிமையில் கண்மூடி இப்பாடலைக் கேட்டால், குரலும் சலங்கை ஒலியும் கைகோர்த்துக்கொண்டு நடந்து செல்வதைப் பார்க்க முடியும்!

ஆஆஆஆஆ நிஸநிஸநிஸநிஸநிஸநிஸ தநிஸதநிஸ தநிஸ தபநி
ஸரிகஸரிகஸரி
ஸாஸஸாஸஸாஸஸாஸ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இனியவளே
உன் மெளனம் கூட
ராகங்கள் தானா?
தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே
நான் மீட்டும் வீணை உன் மேனி மானே
உனக்காகத் தானே ஆலாபனை
என் பாடல் உந்தன் ஆராதனை
மலர்கள் பிறந்த போது – அதில்
பிறந்து வளர்ந்த மாது
பருவம் அடைந்த கனவு
இவள் சலங்கை அணிந்த நிலவு
இதய வீட்டின் தீபம் இவளன்றோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மயிலாடக் கண்டு மழை வந்ததென்ன
ரயில் பாதையெல்லாம் ரதம் வந்ததென்ன
பூக்காடு எல்லாம் உந்தன் நிழல்
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்

உறங்கிக் கிடந்த ராகம் – இன்று
உன்னை நினைந்து பாடும்
கலைந்து போன மேகம் – இன்று
வானில் வந்து கூடும்
பழகும் இதயம் உன்னைப்
பிரியுமோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இனியவளே
உன் மெளனம் கூட
ராகங்கள் தானா?
தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ


நீலக் குயிலே உன்னோடுதான்

May 24, 2006

மகுடி படம் (1984) மோகனும் நளினியும் நடித்தது என்று நினைக்கிறேன். மகுடி என்றாலே நாகம் மட்டும்தான் மயங்க வேண்டுமா? ராஜாவின் மகுடி ஊதியிருக்கும் இந்தப் பாடல் அப்படியே நம்மை மயங்கிப் போகச் செய்துவிடும். ஜானகியும் பாலுவும் இனிமையாக அருமையாகப் பாடியிருக்கிறார்கள். வீணையும் வயலினும் போட்டி போடுகிறது. பின்பு புல்லாங்குழல் தாலாட்ட பாடல் நம்மை மலைச் சாரலுக்கும் நதிக்கரைக்கும் கொண்டு போகிறது. இரண்டாவது சரணத்திற்கு முந்தைய வயலின் இசையைக் கேட்டுப்பாருங்கள்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது தென்றலே என்னைத் தொடு படத்தில் வரும் “கண்மணி நீ வரக் காத்திருந்தேன்” பாடலின் மெட்டும் நினைவுக்கு வருகிறது. இரண்டும் ஒரே ராகத்தில் அமைந்ததா என்று தெரியவில்லை.

குயில்கள் இரண்டு பாடிக்கொள்ளும் இனிய பாடல்.

கபகரிஸா ரிஸஸதஸா
கபகரிஸா ரிஸஸதஸா
ஸரிகபகரி கபகரி ஸரிஸா
ஸரிகபகரி கபகரி ஸரிஸா

கபதப கபகரி ஸரிகபதா
கபதப கபகரி ஸரிகபதா

தபதபதப தபதபத
தபதபதப கபதபகபஸா ஆஆஆ

நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்தக் காற்றே
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா

நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடைக் காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வர லய சுகமே வா வா

நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
நீலக் குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்….ஆஆஆஆஆ