Archive for June, 2006

மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில்

June 27, 2006

Image and video hosting by TinyPic
ஜெய்கணேஷ் ஒரு நல்ல குணசித்திர நடிகர். 2001-இல் புற்றுநோய்க்கு இரையாகிவிட்டது சோகம். கதாநாயகனாகவும் வில்லனாகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சட்டென நினைவுக்கு வருபவை அன்றைய ஆட்டுக்கார அலமேலு, அவள் ஒரு தொடர்கதை, நீயா, வருவான் வடிவேலன், சமீபத்திய உள்ளத்தை அள்ளித்தா, மலபார் போலிஸ். அவர் தொடர்பான பாடல்களிலும் நிறைய பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. “தெய்வம் தந்த வீடு” “கீதா சங்கீதா சங்கீதமே” “பாலாபிஷேகம் செய்யவோ” “அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்” போன்றவை.

ஜெய்கணேஷ் நடித்த முத்தான முத்தல்லவோ என்ற படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் பாலு பாடியிருக்கும் இனிமையான பாடலொன்று இருக்கிறது.

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

கார்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசைபாடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே

கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே
இனி வேறென்ன வாழ்க்கையிலே
இனி வேறென்ன வாழ்க்கையிலே

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்தி வர
மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்தி வர
ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும்
ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில் ஹாஆஆ
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
தேவலோகமும் தெய்வ கீதமும்
ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ

கார்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசைபாடி
இசைபாடி ஹா
இசை பாடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி

Advertisements

ஆவாரம் பூவு ஆறேழு நாளா

June 27, 2006

Image and video hosting by TinyPic
பாலசந்தர் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் 1984-இல் வெளிவந்த அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் ராஜேஷ் சரிதா நடித்திருந்தார்கள். சரிதா அற்புதமான நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருந்தார். வலுவான திரைக்கதையில் ராஜேஷ் நடிப்பும் சிறந்து இருந்தது.

Image and video hosting by TinyPic
அதில் வரும் ஒரு அற்புதமான ஜோடிப் பாடலை V.S. நரசிம்மன் இசையில் பாலுவும் பி.சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். தேனினும் இனிய குரலில் ஆரம்ப ஹம்மிங்கை சுசீலா ஆரம்பித்துப் பாட சரணங்களுக்கிடையில் வயலின், புல்லாங்குழல், கிடார் ஆகியவை தென்றலாய் நம்மை வருடுகின்றன. நீண்ட நாட்களுக்கு இது இசைஞானியி்ன் இசை என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அது சரி. இசைஞானியின் How to Name It இசைத் தொகுப்பில் தனி வயலின் நாதம் ஒன்று நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுமே – அதை வாசித்த அதே V.S. நரசிம்மன்தான் இந்தப் படத்தின் இசை என்று நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு இளையராஜாவின் வயலினாகக் கேட்டிருக்கிறது! 🙂

Image and video hosting by TinyPic

எண்பதுகளில் சென்னையில் மேற்கத்திய இசைக்குப் பிரபலமான இரண்டு குழுக்கள் Madras Philharmonic and Choral Society Orchestra (MPCS)-ம், The Madras Chamber Orchestra (MCO)-ம். MCO-வுக்கு V.S. நரசிம்மன் தலைமை தாங்கி 1985 வரை உற்சாகமாக நிகழ்ச்சிகள் நடத்தி வந்திருக்கிறார். அப்போது இசைத்துறையில் ஏற்பட்ட தேக்க நிலையில் குழு காணாமல் போய்விட்டது. பின்பு மறுபடியும் 1993-இல் திரையிசையில் நிறைய பங்களிப்புகள் செய்துள்ள V R சேகர் (cellist), B J சந்திரன் (viola), K முரளி (violin), V.S. நரசிம்மன் ஆகியோர் இணைந்து The Madras String Quartet என்ற குழுவைத் துவக்கி மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் நிறைய கச்சேரிகள் செய்து வந்தார்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இனி அச்சமில்லை அச்சமில்லையில் உள்ள “ஆவாரம் பூவு” என்ற அருமையான பாடல்.

ம்ம்ம் ம்ம்ம்ம் ஹாஆஆ ஆஆஆஆ

ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

ஒம் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பாக்கும் போது தவிப்பாச்சு
செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு

பார்வையிலே கெலிச்சாளே
புளியங் கொம்பா புடிச்சாளே
வேரோடதான் மனச பறிச்சாளே

ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நாம் போகும் பாதையில் காத்திருக்கு
ஒன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு

ஒங் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசையை நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பாக்கும் இளைய கொடி

பொறக்காமத்தான் ஒம்ம பாத்தேன்
ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்

ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நாம் போகும் பாதையில் காத்திருக்கு
ஒன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு

ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

ம்ம்ம் ம்ம்ம்ம் ஹாஆஆ ஆஆஆஆ

Hello world!

June 26, 2006

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

ஸ்ரீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி

June 23, 2006

Image and video hosting by TinyPic
சில பாடல்களைக் கேட்கத் துவங்கியதும் உடலில் ஒரு பரவசம் பரவி நாடி நரம்புகளெல்லாம் துடிக்கும். அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? “சினிமா பாடல்” என்ற எந்த வரையறைகளுக்குள் அடங்காது தனித்து நிற்கும் அற்புதப் பாடல்கள் பல தமிழ்ச் சினிமாக்களில் வந்திருக்கின்றன.

மகாநதி (1994) படமே நம்மை தூக்கத்திலிருந்து உடலை உதறி எழுந்திருக்கச் செய்யும் படம். அதைப் பற்றி ஆரம்பித்தால் நான் இப்போதைக்கு நிறுத்த மாட்டேன். மேலும் அப்படத்தைப் பார்த்ததினால் மனதளவில் நான் அடைந்த துன்பத்தை மறுபடியும் அனுபவிக்க தயாரில்லை. அதனால் மகாநதி பற்றி இன்னொரு நாள் இன்னொரு பதிவில் வைத்துக் கொள்ளலாம்.

மகாநதியில் பல அருமையான பாடல்கள். “ஸ்ரீரங்க ரங்க நாதனி்ன்” என்ற இந்தப் பாடல் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாடல் வகையில் அமைந்த ஒரு அற்புதமான பாடல். பாடல் ஆரம்பிக்கையிலேயே நம் மனதில் இடையறாது எழுந்து கொண்டிருக்கும் இரைச்சல்களை உஷ் என்று அடக்கி விடுகிறது. அற்புதமான மெட்டும், இசையும், குரலும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. வாலி – அவரது சொந்த மண்ணைப் பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ – அற்புதமாக எழுதியிருக்கிறார்.

“இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி” என்று முதல் வரி முடிந்ததும் ஒரு வீணை இசைக் கொத்து வரும். அதற்குக் காட்சியாக கோவில் தூண்கள் சரசரவென்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் வினாடியில் கடந்து போவதைக் காட்டுவார்கள். வெகு அபூர்வமாக பாடலும் காட்சியாக்கமும் அற்புதமாகச் சில பாடல்களுக்கு அமையும். அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதற்கு அந்த ஒரு காட்சியே சாட்சி.
Image and video hosting by TinyPic
மகாநதி ஷோபனாவும் பாலுவும் பாடியிருக்கும் இந்தப் பாடலை நான் எப்போது கேட்டாலும் காவிரியின் நினைவுகள் வந்து மனதில் நிரம்பிவிடுகின்றன. காலில் ஒட்டிய மணலைத் தட்டிவிடவும் தோன்றுகிறது.

ஆஆஆஆஆஆஆ

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ் பாயிரம்

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வ லோகமேதானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்களேதடி

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

உச்சி வகுந்தெடுத்து

June 21, 2006

Image and video hosting by TinyPic

ரோசாப்பூ ரவிக்கைக் காரி (1979) படத்தை வீட்டுக்குத் தெரியாமல் பார்த்தது நினைவிருக்கிறது. அப்பாவி சிவக்குமாருக்கு அழகான பட்டணத்துப் பெண் தீபா மனைவியாக வர, கிராமத்துக்கு பளீரென்று அழகாக வலம் வரும் தீபாவை பலர் கண் வைக்க, தீபாவும் வழி தவறிப் போவார் என்பது போன்ற கதை – சரியாக நினைவில்லை. அந்த கிராமத்தில் யாரும் ‘லவுக்கையே’ அணிவதில்லை. பட்டணத்திலிருந்து தீபா கொண்டுவந்து கொடுக்கும் உள்ளாடையை ‘லவுக்கை’க்கு மேலே போட்டுக்கொண்டு (சூப்பர் வுமன்?) அழகு பார்க்கும் கிராமத்துப் பெண்மணிகள் வெட்கப்படும் காட்சி சரியான காமெடி.

வெகுளி சிவகுமார் வெளியூருக்குச் சென்று ஏகப்பட்ட சாமான்களை மற்றவர்களுக்காக வாங்கிக்கொண்டு வரும் வேலையைச் செய்வார். புறப்படுகையில் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி வாங்கி வரச் சொல்வதை சுவாரஸ்யமான பாட்டாக “வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ” மலேசியா பாடியிருப்பார். கிராமத்து மணம் கமழும் பாடல்கள் இளையராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. “மாமன் ஒரு நா மல்லியப் பூ கொடுத்தான்” என்ற பாடலும் இருக்கிறது. வாணி ஜெயராம் பாடியிருக்கும் “என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்” ஒரு அற்புதமான பாடல்.

பாலுவின் இந்தத் தனிப்பாடல் மிகவும் அருமையாக இருக்கும். நொந்த உள்ளத்தின் உணர்வுகளைத் தனது குரலில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் மனிதர்.

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல ஹ
நாயமென்ன கண்ணாத்தா

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 10

June 21, 2006

Image and video hosting by TinyPic
இயக்குநர் சிகரத்தின் சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தை நான் பார்க்கவில்லை. மணியனின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். சிவகுமார், ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, சுபா ஆகியோர் நடித்தது. ஆனாலும் இந்தப் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மெல்லிசை மன்னர் இசையமைத்து ஜானகியுடன் அவரே பாடியிருக்கிறார்.

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
Image and video hosting by TinyPic
படத்தில் பாலுவுடன் இருப்பவர் இந்த “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்” பாடல்களுக்குக் காரணகர்த்தாவான திரு. செல்ல முத்தையா – திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் இயக்குநர். அவருக்கு பாலுவின் ரசிகர்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காற்றில் மிதக்கும் புகைபோல இம்மாதிரி பாடல்கள் மனதோரத்தில் எப்போதும் மிதந்துகொண்டேயிருக்கின்றன. பாலுவின் குரலில் இப்பாடல் அருமையாக ஒலிக்கிறது.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 9

June 20, 2006

Image and video hosting by TinyPic

சீர்காழி கோவிந்தராஜன் என்றதும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அவரது பக்திப் பாடல்கள்தான்.

* கணபதியே வருவாய்
* நீ அல்லால் தெய்வம் இல்லை
* நீயே என் வாழ்வுக்கு
* பன்னிரு விழிகளிலே
* தை பூசத் திருநாளில்
* தீராத வினை தீர்க்கும்
* விநாயகனே வினை தீர்ப்பவனே

என்று உருகி உருகி அவர் பாடியிருப்பதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம். அதே போல திரைப் பாடல்களிலும்

* சங்கே முழங்கு
* நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற (இதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் தலைவர்களே போஸ்டர் அடித்து கட்-அவுட் வைத்துக்கொண்டு “நாங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று பாடிக்கொள்கிறார்கள்!)
* ஆடி அடங்கும் வாழ்க்கையடா (ஜுன்-20 அன்று மறைந்த உவமைக் கவிஞர் சுரதா இயற்றியது)
* அமுதும் தேனும் எதற்கு (இதுவும் உ.க.சுரதா இயற்றியது)
* உள்ளத்தில் நல்ல உள்ளம்
* ஓடி விளையாடு பாப்பா
* கண்ணன் வந்தான் அங்கே
* காட்டுமல்லி பூத்திருக்கு
* கண்ணான கண்ணனுக்கு அவசரமா
* எங்கிருந்தோ வந்தான்
* பணம் பந்தியிலே
* ஓடம் நதியினிலே
* காதலிக்க நேரமில்லை
* வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா
* இருக்கும் இடத்தை விட்டு
* அறுபடை வீடு கொண்ட திருமுருகா
* தலை வாரி பூச்சுடி உன்னை
* மதுரை அரசாளும்
* திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
* பணம் பந்தியிலே
* நடந்தாய் வாழி காவேரி
* உலகம் சமனில்லை
* கல்லிலே கலை வண்ணம் கண்டான்
* எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்

என்பது போன்ற நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Image and video hosting by TinyPic

அவர் பாடலென்றாலே வரலாறும் புராணங்களும் கண் முன் சிற்பங்களாக வந்து நின்றுவிடுகின்றன. சிறுவயதில் நீண்ட நாள்களுக்கு அவர்தான் உண்மையான அகத்திய முனிவர் என்று – கேபி. சுந்தராம்பாளை ஒளவையார் என்று நம்பியது போல – நம்பியிருந்தேன்.

Image and video hosting by TinyPic
மணியோசை படத்தில் V. ராமமூர்த்தி அவர்கள் இசையில் அவர் பாடியுள்ள தேவன் கோவில் மணியோசை பாடலை பாலு அவர்கள் தன் பாணியில் பாடியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

பத்மஸ்ரீ, டாக்டர். சீர்காழியை நினைவு படுத்தி இந்தப் பாடலைப் பாடி மரியாதை செய்திருக்கும் பாலுவுக்கு மிக்க நன்றிகள்.

சின்னச் சின்ன தூறல் மின்ன

June 19, 2006

Image and video hosting by TinyPic

வத்திராயிருப்பின் கூரை வீட்டில் வாழ்ந்த போது மழை பெய்த நாட்களில் வீட்டிலிருக்கும் பாத்திரங்களையெல்லாம் எடுத்து கூரையின் எண்ணற்ற ஓட்டைகள் வழியாகக் கோடு மாதிரி இறங்கும் நீரைப் பிடித்து வெளியே கொட்டிவிட்டு நடுங்கும் இரவுகளில் சேர்த்து வைத்துத் தைத்த சாக்குப்பைகளைப் போர்த்திக்கொண்டு உறங்கியதுண்டு. எப்போதும் நசநசவென்று வீட்டுக்குள் ஈரமாகவே இருக்கும். அந்தச் சூழ்நிலையில் வளர்ந்து பின்பு முற்றம் இருந்த (வாடகை) வீட்டுக்குக் குடி போனோம். அப்போதும் வீட்டுக்குள் மழை பெய்தாலும் நனையாமல் மழையை அனுபவித்து மகிழ முடிந்தது. சட்டென்று இறங்கி நனைந்து குளிக்கவும் முடிந்தது.

எனக்கு அப்படி முற்றம் வைத்துக் கட்டிய வீடுகள் மிகவும் பிடிக்கும். வீட்டில் பல செளகரியங்கள். வீட்டுக்குள் நன்கு வெளிச்சம் வரும். மழை உள்ளேயே பெய்து குளிரும். வறண்ட நாட்களில் வெப்பத்தைக் குறைத்து, காற்றோட்டமாய் இருக்கச் செய்யும். நான்கு மூலைகளின் மரத் தூண்களில் சாய்ந்து கொள்ளலாம். தெருவில் கிரிக்கெட் விளையாடும் பையன்கள் ஓங்கி அடுத்த பந்துகள் முற்றத்தின் கூரை வழியாக வழிந்து வந்து நடு வீட்டில் விழும். வடாமை மொட்டை மாடியில் போட்டு காகங்களுக்குத் தாரை வார்க்காமல் நடுவீட்டிலேயே விரித்துக் காயப் போடலாம் – இன்னும் பல வசதிகள்.

தமிழில் கிராமத்துப் படங்களில் பெரும்பாலும் முற்றம் வைத்த வீடுகள் வரும். சிலவற்றில் முற்றப் பாடல்களும் வரும். அதிலும் சில முத்துப் போன்ற மிக அருமையான பாடல்களாக இருக்கும். அப்படிக் கிடைத்த ஒரு முத்து செந்தமிழ் பாட்டு படத்தில் வரும் “சின்னச் சின்ன” முத்துப் பாடல்.

அந்தப் பாடலைக் கேட்டதும் பைத்தியம் பிடித்தாற்போல மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டேயிருந்தேன். படமாக்கமும், நடிப்பும், இசையும், பாடலும் என்று அனைத்து வகையிலும் – தூறலாக அல்ல, அடைமழையாய் பெய்து நெஞ்சை கொள்ளை கொண்டது அது. பாலுவின் குரல் அந்தத் தூறல் போலப் பெய்து, அடை மழையாய் மாறி, இடி மின்னலுடன் அதிர்ந்து, கடைசியில் மழை நின்றது போல் நிசப்தமாய் முடியும்.

பிரபு மிக நன்றாகச் செய்திருந்தார். “அனைவரும் இங்கு சரிசமம் என்று உணர்த்திடும் மழையே” என்ற வரிக்கு அவரது முகபாவம் அற்புதமாக இருந்தது. கஸ்தூரியும் நன்றாக நடித்திருந்தார்.

இந்தப் பதிவைச் சாக்காக வைத்துக் கொண்டு நான் முன்பு எழுதிய அகவிதை ஒன்றை இங்கே குறிப்பிட்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன். ஹிஹி.

ஆரம்ப இசை அமர்க்களம். பின்பு எல்லாமே அருமைதான் – இது ஒரு இசைப் பிரவாகம்! இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படம்! பி.வாசு இயக்கிய பிரபு படம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். 😉

முதலில் “தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா” என்று பாலு பாடியதும் “அது தேகம் சிலிர்க்குதம்மா” என்று திருத்துவார் பாடகி. உடனே “உனது தூறலும்” என்று மறுபடி திருத்திப் பாடும்போது ஒரு அனாயசமான சிரிப்பை ‘உனது’ என்ற வார்த்தையில் சிந்துவார் கேளுங்கள். அசத்தல்.

வரிகள் வைரமுத்துவா?. பாடல் முழுதும் நல்ல தமிழில் எழுதிவிட்டு “வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்” என்பதில் மட்டும் ஏன் “மானம்” என்ற கிராமத்துப் பேச்சுத் தமிழைச் சேர்த்தார் என்ற தெரியவில்லை. ஒரு வேளை வெடித்த பூமியின் மானம் போகிறது என்ற அர்த்தத்தில் எழுதியிருப்பாரோ?

ஒவ்வொரு முறை கேட்கும்போதும் வாழ்க்கையின் இனிய பருவங்கள் நினைவில் வந்து போகின்றன. அவை எங்கே என்று மனதும் கேட்கிறது. அதனால்தானோ என்னவோ பாடலைக் கேட்கையில் விழியோரங்களில் தூறல் ஆரம்பித்துவிடுகிறது.

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

(ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா அது தீண்டும் மேகம் இல்ல தேகம் சிலிர்க்குதம்மா)

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா

நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துளிர்க்குதம்மா
மனித ஜாதியில் பசியில் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் இன்று
பாரில் உன்னை சொல்வதுண்டு

இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

(படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் கதையால்ல இருக்கு. பிழைக்குன்னு எழுதலையே மழைக்குன்னுதானே எழுதிருக்கேன்?)

ஓஹோஹ்ஹோ

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை ஒளியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்

உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 8

June 19, 2006

Image and video hosting by TinyPic
அது 1983-84 இருக்கும். முசிறியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஏற்கெனவே இருந்த டூரிங் தியேட்டர் தவிர புதிதாக நல்ல வசதிகளுடன் ஒரு தியேட்டர் கட்டி அதுவரை சில படங்கள் வெளியாகியிருந்தன. விஜயகாந்த் படங்களெதையும் நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை. ரத்தச் சிவப்பான கண்களுடன் சிவப்பு மல்லி போன்ற அவரது படங்கள் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் “வைதேகி காத்திருந்தாள்” வித்தியாசமான படம் என்று நண்பர்கள் சொன்ன போது அரை மனதுடன்தான் திரையரங்குக்குச் சென்றேன்.

Image and video hosting by TinyPic
அடிதடி ரத்தம் எதுவும் இல்லாமல் ஆரம்பித்த படத்தைப் பார்த்து அதிசயமாக இருந்தது. அதிலும் விஜயகாந்த்தின் எல்லைச் சாமி போன்ற தோரணை வித்தியாசமாக இருந்தது. ரம்மியமான குளுமையான ஒளிப்பதிவு, கிராமத்துச் சூழ்நிலை என்று நான் வாழ்ந்த கிராமத்தை ஒவ்வொரு காட்சியிலும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க, படத்தில் ஆழ்ந்து போனேன்.

சட்டென்று ஜெயசந்திரன் ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்று இரண்டு தடவை பாடிவிட்டு நிறுத்த, குற்றால அருவி மாதிரி ஒரு வயலின்களின் கூட்டம் இசையைப் பிரவாகமாக ஓடச் செய்யுமே – அப்படியே உடலெல்லாம் புல்லரித்துப் போனது. அதி அற்புதமான மெட்டு, உன்னத இசையுடன், ஜெயசந்திரனின் இனிய குரல் அப்படியே சொர்க்கத்துள் இருக்கும் உணர்வினைத் தந்தது. சொக்கிப் போன பாடல் அந்தப் பாடல். அன்று மட்டுமல்ல, இன்று வரை எவ்வளவோ தடவை கேட்டிருந்தாலும் சற்றும் அலுக்கவே அலுக்காத பாடல். அன்றிலிருந்து இன்று வரை நெஞ்சின் அடி ஆழத்தில் எப்போதும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாடல்!

சமீபத்தில் ஜெயா டிவி ஒளிபரப்பிய மாஸ்ட்ரோவின் நிகழ்ச்சியிலும் ஜெயசந்திரன் இந்தப் பாடலைப் பாடினார்.

முன்பே குறிப்பிட்டிருந்தாலும் இந்தப் பதிவுக்குத் தொடர்புடையதாய இருப்பதால் இன்னொரு முறை குறிப்பிடுகிறேன். எப்பொழுதுமே “அந்தக் காலப் பாடல்கள் மாதிரி வருமா?” என்று சொல்லிக்கொண்டே இருக்கும் என் தந்தைக்கு மிகவும் பிடித்த “இநதக் காலப்” பாடல் இது. “உங்களுக்குப் பிடித்த இளையராஜா இசையமைத்த பாடல் எது?” என்று கேட்டால் இமைப்பதற்குள் ‘ராசாத்தி ஒன்ன’ என்று அவர் இப்போதும் சொல்லுவார். “அவனுக்குக் கடவுளோட அனுக்ரஹம் இருக்கு. இல்லாட்டி இந்த மாரியெல்லாம் பாட்டு வராது” என்று இளையராஜாவைக் குறிப்பிட்டு பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார் – அவர் ரசிக்கின்ற இந்த ஒரே பாடலை வைத்து.

70 வயதான அவரிடமிருந்து 5 வயதாகும் என் மகள் வரை எல்லாராலும் – அந்தப் பாடல் காட்சியில் வரும் மூதாட்டி போலவே – தலையாட்டி ரசிக்கப்படுகின்ற இந்த அற்புத பாடலை பாலுவின் குரலிலும் கேட்போமா?

இளையராஜாவின் குழுவில் வயலின்களின் கூட்டம் தேனீக்கள் கூட்டம் மாதிரி. அவை கட்டும் தேன் நிரம்பித் ததும்பும் கூடுகளே இம்மாதிரி பாடல்கள்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 7

June 18, 2006

Image and video hosting by TinyPic

A.R. ரஹ்மான் பாடியிருக்கும் இந்தப் பாடலின் படமாக்கம் மிகப்பெரியதொரு ஏமாற்றம். இதே போல பாட்டை மட்டும் கேட்டுவிட்டு எப்படியெல்லாம் படமாக்கியிருப்பார்கள் என்று மனக் கோட்டை கட்டிக்கொண்டு சென்றால் அதை மெனக்கெட்டு தவிடுபொடியாக்கியிருப்பார்கள். ஒரு வேளை இம்மாதிரி பாடமாக்கியதற்கு மணிரத்னத்திற்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். பாடலின் ஒரே ஆறுதல் cut shots ஆக வரும் அரவிந்தசாமி மனீஷாவின் கொஞ்சல்கள். அதோடு அழகான சோனாலி பிந்தரேயும். மத்தபடி இசைக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை இசைப்புயல்.

Image and video hosting by TinyPic

இந்தப் பாடலின் ஹம்மா (கிண்டலாக) ஒலிக்காத பட்டிமன்றங்களே அந்தச் சமயத்தில் இல்லை என்று சொல்லி விடலாம். இப்போது அந்த அரபிக் கடலோரத்தை பாலு குரலில் கேட்கலாமா? இசைப்புயலை மறுபடியும் அப்படியே வீசச் செய்வது இசைக்குழுவினருக்குக் கடினமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி பரவாயில்லை. கேட்கலாம்.