Archive for August, 2006

மெல்லத் திறந்தது கதவு – வா வெண்ணிலா

August 31, 2006

Image and video hosting by TinyPic
சில பாடல்களைப் பற்றி பதிவுகள் எழுதும் போது எனக்கு நேரிடும் சங்கடங்களைச் சொல்லி முடியாது. கமல் படங்களின் பாலு பாடல்களைப் பற்றி எழுதும்போது எழும் தடுமாற்றம். அப்புறம்.. அப்புறம்.. அமலாஆஆஆஆஆஆ!

நான் விடும் ஜொள்ளை நினைத்து எனக்கே ரொம்ப வெட்கமாக இருக்கிறது. என்ன செய்வது. அதற்காக பாலுவின் பாடல்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியுமா? வலை பதிய புத்தி அழைக்கிறது. ஆனால் மனது விரல்களை விசைப் பலகையில் நகர்த்துவேனா என்று அடம்பிடிக்கிறது. சரி. பிரயாசைப்பட்டால்தானே வேலை ஆகும்.

மதுரை தமிழ்ச்சங்கம் சாலையிலிருக்கும் அந்தத் திரையரங்கத்தின் பெயர் மறந்துவிட்டது. அங்குதான் மெல்லத் திறந்தது கதவு (1986) படத்தை வெளியிட்டார்கள். தியேட்டர் சாலையிலிருந்து சற்று உள்ளடங்கியிருக்க சாலையோரங்களில் வண்டி மாடுகள் நிறைய சாணி போட்டு புரண்டுகொண்டு, வைக்கோல்பிரிகளும், அவை கழித்தனவும் கலந்து அந்தப் பகுதியே ஒரு தினுசான பசுமஞ்சள் நிறத்தில் இருக்க போக்குவரத்து சந்தடி மிகுந்திருக்கும். பழங்காநத்தத்திலிருந்து மெனக்கெட்டு யாராவது அந்தக் கோடியிலிருக்கும் ‘தரமான’ திரையரங்குக்குச் செல்வார்களா? நான் சென்றேன் – நண்பர்களுடன். முழுமுதற் காரணம் அமலா இல்லை என்று நான் துண்டு போட்டுத் தாண்டினாலும் நீங்கள் நம்பப் போவதில்லை. ஆனால் அந்தத் தேவதை காரணம் இல்லை – அதற்கு முன்னால் தேவதையின் படங்களை நான் பார்த்திராததால். ஆர்.சுந்தரராஜனின் படங்களென்றால் பாடல்கள் அருமையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் – ராஜாங்கத்தின் வீட்டு அசெம்பிள்டு செட்டில் மெ.தி.க. பாடல்களைக் கேட்டு பிரமித்துப் போயிருந்ததாலும், ‘மைக்’ மோகன் இருந்ததால் கட்டாயம் பாடல்களை நம்பிப் போகலாம் என்ற Brand Loyalty-யினாலும், எல்லாவற்றிற்கும் மேல் மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இணைந்து இசையமைத்த படம் என்பதாலும் – ஆக இத்தனைக் காரணங்களும் எங்களை உந்தித்தள்ளி அந்தத் திரையரங்கத்திற்குக் கொண்டு சென்றது என்பதுதான் உண்மை.

இசைக்கல்லூரி என்ற களனில் நான் அதற்கு முன்பு எந்தப் படங்களையம் பார்த்ததில்லை (எதாச்சும் வந்திருக்கா?). அந்த பச்சைப்பசேலென்ற மலைப்பிரதேச குளுகுளு (ஊட்டி?) சூழ்நிலையை மிகவும் ரம்யமாகக் கேமரா படமாக்கியிருக்க, ஆரம்ப காட்சியிலேயே படத்தில் ஒன்றிப் போனேன். படத்தை இரண்டு பாதியாகப் பிரித்து ராதாவுக்கும் அமலாவுக்கும் கொடுத்திருக்கிறார் ஆர்.சு. மோகனைப் பார்த்து பொறாமையில் வெந்து போனேன். கடுப்பாக இருந்தது.

அமலாவின் முகத்தைப் பார்க்க மோகன் படும்பாட்டை நன்றாகவே படமாக்கியிருந்தார் ஆர். சுந்தரராஜன். ஆனால் எப்படித்தான் அமலாவை புதைகுழியில் மூழ்கடிக்க அவருக்கு மனசு வந்ததோ தெரியவில்லை. சரியான கல் நெஞ்சக்காரர் போல! மோகனின் நண்பர்கள் குழாம் – குண்டுகல்யாணம் மட்டுமே ஒரு தனிப்படை! – அமலாவின் முகத்தைப் பார்க்கத் தந்திரம் செய்து சென்ட் பாட்டிலின் மணத்தை ‘மல்லிகை’ ‘முல்லை’ ‘மரிக்கொழுந்து’ என்று அடித்துக்கொண்டு பர்தா அணிந்து வரும் அமலாவிடம் சந்தேகம் கேட்க, முகத்திரையை அவர் விலக்கும் அந்த நொடியை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. யம்மாடி! திக்பிரமை பிடித்தது என்று சொல்வதன் பொருளை அந்த நொடியில் உணர்ந்தேன்.

இசை? வார்த்தைகள் போதாத அற்புத இசையமைப்பும் தேனினும் இனிய பாடல்களும் நிறைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான படமாக்கத்துடன் – மொத்தப் படமும் ஒரு தென்றலாக நம்மைத் தழுவிக்கொண்டது என்று சொன்னால் மிகையாகாது.

மாணவர்கள் காத்திருக்க இசை ஆசிரியர் (கல்லூரி முதல்வராகவம் மோகனின் அப்பாவாகவும் நடித்திருப்பார்) மோகனைப் பார்த்து பாடச் சொல்ல அவர் ‘நூரி’ வருவதற்காகத் தயங்கிக்கொண்டிருப்பார். ‘என்ன ஆச்சு? ஏன் பாட மாட்டேங்கறே?’ என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அமலா வந்துவிட, அவரைப் பார்த்த நொடியில் மோகன் ‘வா வெண்ணிலா’ என்று ஆரம்பிப்பாரே – பாடகராக அவர் திரையில் பரிமளித்ததற்கு இதைவிட சிறப்பான உதாரணக் காட்சி வேண்டாம் – அட்டகாசம். பாடலை கற்பனையூருக்குக் கொண்டு சென்று மோகனையும் (முகத்திரை இல்லாத) அமலாவையும் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர். மோகனுக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்திருக்கும்! பாடலில் இணைந்த புருவங்களுடன் பளீரென்று திரையில் அமலா மெதுவியக்கத்தில் முகத்தைக் காட்டும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் பரபரப்பு அடைந்ததை என்னால் உணர முடிந்தது – ‘தலைவர் வர்றாருய்யா’ என்று தலைவரைப் பார்த்ததும் காத்திருக்கும் ரசிகர்கள்/தொண்டர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு இரைச்சல் பரவுமே – அதுபோல இரைச்சல் பரவியதிலிந்து. என்ன.. இங்கு தலைவருக்கு பதில் (என்) தலைவி! சரி போதும்! ரொம்ப வழியறேன்ல?

வா வெண்ணிலா என்ற அற்புதமான பாடலின் மெட்டை பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். பாடல் முடிந்ததும் ஒரு ஏக்கப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை! இதே பாடலை பின்பு தோழியின் திருமண நிகழ்ச்சியில் அமலாவும் தோழிகளும் பாடலை அட்டகாசமாகப் பாடி ஆடுவார்கள் – கலக்கல் அது!

கிட்டத்தட்ட இதே காட்சியமைப்பில் இதற்கு முந்தைய காட்சியொன்றில் அமலாவைப் பாடல் பாடும்படி ஆசிரியர் பணிக்க, நூர்ஜஹானாக இருப்பவரின் முகத்திரைக்குப் பின்னிருந்து ‘பாவனகுரு பவனபுரா’ என்ற ஸ்லோகம் இனிதாக வருவது மோகனுக்கு மட்டுமல்ல நமக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாடல் எனக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. சித்ரா பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாவனகுருபவன புராதீஸமாஸ்ரயே
ஜீவனதரஸம்காஸம் க்ருஷ்ணம் கோலோகேஸம்
பாவித நாரதகிரிஸம் த்ருபுவனாவனாவேஸம்

பூஜிதவிதிபுரந்தரம் ராஜிதமுரளீதரம்

வ்ரஜலலனா நந்தகாரம் அஜிதமுதாரம் க்ருஷ்ணா
ஸ்மரஸதசூபகாகரம் நிரவதிகருணாபூரம்
ராதா வதன சகோரம் லலிதாஸோதரம்பரம்

பாவனகுரு பாடலைக் கேட்க

நல்ல வேளை. அப்போது தமிழ் வலைப்பதிவுகள் இல்லை. இருந்திருந்தால் பர்தா போட்டவரை எப்படி இந்தப் பாடலைப் பாடவைக்கலாம் என்று ஆளாளுக்கு கம்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பி பகுத்தறிவையும் கூர்தீட்டி எதிர்படுபவர்களையெல்லாம் வெட்ட ஆரம்பித்திருப்பார்கள்.

அந்தப் பாடல் காட்சியைப் பார்க்க நேர்ந்தபோது மனதில் அமலா, திரைப்படம் போன்ற லெளகீக சமாசாரங்களெல்லாம் மறைந்து ஒரு நெகிழ்வுணர்வு விஞ்சி நின்றதே. இதே போன்ற ஒரு உணர்வு சிப்பிக்குள் முத்து படத்தில் நடந்து கொண்டிருக்கும் கமல் கடந்து போகும் ஒரு இஸ்லாமியரின் சவ ஊர்வலத்தில் திடீரென்று நுழைந்து பெட்டியைத் தோளில் ஏந்தி குரான் வாக்கியங்களை ஓதியபடி செல்லும் காட்சியைப் பார்க்கையில் ஏற்பட்டது – கண்ணில் நீர் துளிர்க்க வைத்தது. உடனே நினைவுக்கு வரும் இன்னொரு காட்சி பம்பாய் படத்தில் எரியும் வீட்டிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடும் இஸ்லாமியராய் நடித்த கிட்டி, அவரைப் பின்தொடரும் இந்துவாய் நடித்த நாஸர் – உள்ளே மறந்துவிட்ட மறைநூலை நினைத்துக் கதற – இந்துவாய் நடித்த நாஸர் உயிரைப் பொருட்படுத்தாது உள்நுழைந்து மறைநூலை எடுத்துக்கொண்டு வெளியே வரும் காட்சி!


இன்றைய வலைப்பதிவுகளைப் பார்க்கையில் அந்த மத நல்லிணக்கம் எங்கே மதம்பிடித்து ஓடிப்போனது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிற்க.

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

Advertisements

இதயமே இதயமே

August 29, 2006

Image and video hosting by TinyPic
இதயத்தை அறுக்கும் என்று சில உணர்வுகளைச் சொல்வார்கள். அவற்றில் பிரதானமானது காதல். மனிதனைப் பைத்தியமாக அடித்து சுயநினைவின்றி கனவுலகில் சஞ்சரிக்க வைத்து துன்பப்பட வைத்து, ஏக்கத்தைக் கூட்டி, எதிலும் நாட்டமில்லாமல் அடிக்கக் கூடிய உணர்வு காதல். விசித்திரமான இந்த உணர்வைப் பற்றி காலங்காலமாக எல்லாரும் அலசி ஆராய்ந்து எழுதி – அது காமம் தான் என்று சிலர் அறுதியிட்டுச் சொன்னாலும் அதுமட்டும்தான் என்று நம்ப முடியாமல் மறுக்கச் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஏராளமாகக் காதல் கதைகளும், பாடல்களும், படங்களும் வந்தாகிவிட்டது. இன்னமும் சலிக்காது காதலித்துக்கொண்டிருக்கிறோம்.

மனிதன் இருக்கும் வரை காதல் இருக்கும். காதலை காமம் மட்டும்தான் என்று துண்டு போட்டுத் தாண்டினாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதயம் படத்தில் வரும் “இதயமே இதயமே” என்ற பாடல் நம்மை காதல் அவஸ்தைக்குள்ளாக்கி துன்பப்படுத்தும் ஒரு உன்னத பாடல். பாடலின் முதுகெலும்பு இசை என்றால் ஜீவன் பாலுவின் குரல். மனிதர் என்னமாய் குழைத்துக் குழைத்துப் பாடியிருக்கிறார். அப்படியே நம் எண்ணங்களைச் செலுத்திக்கொண்டு போகிறது அவர் குரல். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கே கிடையாது. செவியில் நுழைந்து ஆத்மாவைத் தொடும் பாடல். காதலர்களின் துன்ப நிலையை கதிரும் நன்றாகப் படமாக்கியிருக்கிறார் என்பது என் கருத்து.

முதல் சரணம் முடிந்ததும் வரும் “இதயமே இதயமே” என்பதை பாலு எப்படிப் பாடுகிறார் கேளுங்கள். விவரிக்க முடியாத உணர்வுகளை என்னுள்ளே எழுப்புகிறது அவரது குரல்.

இரண்டாவது சரணத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யைச் சேர்க்க எப்படித்தான் கவிஞருக்கு மனது வந்ததோ தெரியவில்லை. என்ன சொல்கிறார் தெரியுமா?

“அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா”

என்ன கிண்டலா என்று கேட்கத் தோன்றவில்லை?

பாலுவின் பாடல் உலகெங்கும் ஒலிக்கிறது. நெஞ்சைத் தொடவில்லை என்று நல்ல பாடல்களை ரசிக்கும் யாரும் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா?

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

பூங்கொடிதான் பூத்ததம்மா

August 29, 2006

Image and video hosting by TinyPic
இதயம் (1991) திரைப்படம் வந்த புதிதில் கல்லூரி வட்டாரங்களில் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். அதிலும் ஹீரா என்ற தேவதையைப் போலத் தோன்றிய பெண் கல்லூரி யுவதிகளின் மத்தியில் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தினார்.

இயக்குநர் கதிரின் முதல் படம். சிறந்த புதுமுக இயக்குநர் சினிமா எக்ஸ்பிரஸ் விருதை அவருக்குப் பெற்றுத் தந்த படம்.

ஜனகராஜ் மாணவர்களுடன் சேர்ந்து மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிக்குச் சென்று தலைதெறிக்க வரும் காமெடி என்ற பெயரிலான ‘உவ்வேக்’ காட்சி படத்திற்கு ஒரு திருஷ்டி. ஒருவேளை அந்தக் காட்சியை அழகிய தீயே படத்தில் சொல்வது போல ‘ஒரு கமர்ஷியலுக்காகச்’ சேர்த்திருக்கலாம். கருமம். இம்மாதிரி சமரசங்களை மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களே செய்யும் போது கதிர் செய்ததில் ஆச்சரியமில்லை. அந்தக் காட்சியை நீக்கிவிட்டுப் பார்த்தால் படம் ஒரு அழகான பூங்கொத்து. அந்தக் காட்சியின் முடிவிலும் முரளி சின்னி ஜெயந்திடம் செருப்பாலடித்த மாதிரி ஒரு கூர்மையான வசனத்தைப் பேசுவார்.

ஹீரா! அறிமுகமானது இப்படத்தில். அரைகுறை ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த நாயகிகளின் மத்தியில் ஆறுதலாக, அழகான பருத்திப் புடவையில் வந்து எல்லாரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் – நடிப்பு சுத்தமாக வரவில்லையெனினும். பிறகு அவரும் தடம்மாறி தமிழ் சினிமா கதாநாயகிகளின் இருக்கையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தில் இறங்கி, தரமிறங்கி கண்ட படங்களிலும் கண்டகண்ட வேடங்களை ஏற்று வீணாய்ப் போனார்.

படம் பார்த்து முடித்ததும் நீண்ட நேரம் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைத்த உணர்வைத் தந்தது. அடிதடி வெட்டு குத்து ஆபாசம் என்று கலக்காமல் காதல் உணர்வை மென்மையாகச் சொல்வதில் கதிர் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம். காதல் என்ற ஆதாரச் சுருதியை அவர் இன்னும் விட்டுவிடவில்லை. பிரம்மாண்டம், பஞ்ச வசனங்கள், தாதா, ஏய் என்று ஆளாளுக்கு ஆண் பெண் வித்தியாசமில்லாமல் தொண்டையைக் கிழித்துக்கொண்டு அலறுவது, அருவாள், சொடக்கு போடுதல், காய்கறிச் சந்தை சண்டை என்று வழக்கமான சினிமா விதிகளுக்குள் அடங்கிப் போகாமல் காதலை மட்டும் மென்மையாகச் சொல்லவேண்டும் என்ற அவரது படங்கள் எனக்குப் பிடித்தமானவை. அவரது படங்களை நான் வாழ்த்து அட்டைகளுக்கு ஒப்பிடுவேன் – இதயம் படத்திலிருந்து காதலர் தினம் வரை!

நண்பர்களோடு கூட்டமாகச் சென்று மதுரை ஐயர் பங்களா பகுதியில் இருக்கும் இளையராணி மகாராணி திரையரங்குகளில் ஒன்றில் இந்தப் படத்தைப் பார்த்தேன். பழங்காநத்ததிலிருந்து ஐயர் பங்களா quite a distance – அப்போது! படம் பார்த்துவிட்டு ஹீராவைப் பார்த்துவிட்டு காய்ச்சல் வந்தது போல மயங்கிப் புலம்பிக்கொண்டிருந்த நண்பர்களை நான் கேட்ட ஒரு கேள்வி சட்டென்று மின்சாரம் பாய்ச்சி சுயநினைவுக்குக் கொண்டுவந்ததோடு அதை ஆயுசுக்கும் மறக்கமுடியாதபடி செய்தது. இன்றும் இதயம் என்றால் என்னருகே வராமல் தலைதெறிக்க ஓடுவார்கள். 🙂

இதயம் படத்தில் காதலைச் சொல்ல முடியாமல் “என்றும் மாணவன்” முரளி கடைசிவரை தவிப்பார். “சொல்லித் தொலையேண்டா” என்று கத்தலாம் போலத் தோன்றும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும் எனக்குத் தெரிந்து இப்படிக் காதலைச் சொல்லமுடியாமல் தாழ்வு மனப்பான்மையுடன் கடைசிவரை இருந்தவர்கள் என் பள்ளி கல்லூரி வகுப்பறைகளில் இருந்தார்கள்.

இம்மாதிரி மெளனித்து இருப்பவர்களின் கண்களை என்றாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா? அதில் தேங்கியிருக்கும் உணர்வுகளின் ஆழத்தை உணர்ந்தால் ஆடிப்போவோம். அப்படியொரு ஆவேசம் அதில் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் மடை திறந்து தாவும் நதியலைகளைப் போல உணர்வுகள். ஆனால் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதேயில்லை. கனவுகளில் காதலிப்பவர்கள்.

இதயம் படத்தில் பிரபுதேவாவின் “ஏப்ரல் மேயிலே” புயல் நடனத்தை மறக்க முடியுமா? அவர் நடனத்தில் ஆட்சி செய்த காலம் அது. ராஜு சுந்தரத்தின் “ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி”யும் ‘கமர்ஷியலுக்காகச்’ சேர்த்தவைகளில் ஒன்று.

ஜேசுதாஸ் பாடிய “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடலை மறக்க முடியுமா? மென்மையிலும் மென்மையான அருமையான பாடல். இரவில் கேட்கக் கூடிய சிறந்த பாடல்களில் ஒன்று இதுவும்.

இது தவிர பாலு அற்புதமான இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். காதலைச் சொல்லாது ஊமையாக இருக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் பூங்கொடிதான் பூத்ததம்மா பாடல் அருமையானதொரு பாடல். இசைஞானியின் இசையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இம்மாதிரி அற்புதமான பாடல்களை துணை நடிகர்கள் யாராவது பாடும்படி எடுத்திருந்தால் சட்டென்று ஒரு பெரிய ஏமாற்றம் மனதுக்குள் எழும். இப்பாடலிலும் அப்படியொரு ஏமாற்றம் எழுந்தது – மெளனராகத்தில் பனி விழும் இரவு பாடலை மணிரத்னம் படமாக்கிய விதம் ஏமாற்றத்தைத் தந்ததைப் போல. பாலுவின் குரலை நினைத்துக்கொண்டு காட்சியமைப்பை மறக்கலாம்.

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ…ஓ…ஓ…ஓ…

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ…ஓ…ஓ…ஓ…

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

ஜன்னல் காற்றாகி வா!

August 28, 2006

Image and video hosting by TinyPic
பாலுவும் சாதனா சர்கமும் பாடியிருக்கும் இந்தப் பாடல் தெனாலியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்திலிருந்து விலகி நிற்கும் பாடல்! கமலின் முகம் மட்டும் திரை முழுதும் காண்பிக்கப்பட அவருடைய அழகான சிகையலங்காரமும், இயற்கை எழில் நிறைந்த இயற்கைப் பின்னணியும், வித்தியாசமான உடைகளும் கூட ஜில்லென்று ஜோ வேறு.
Image and video hosting by TinyPic

இசைப்புயலின் இசையில் சாதனா சர்கம் ‘ஸ்வாசமே’ என்று அழகாக ஆரம்பிக்க தாளம் சூடுபிடிக்கத் தொடங்கி முழு வீச்சில் பறக்கும் மெட்டு அபாரமானது.
Image and video hosting by TinyPic
இதயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டே நம்மைக் குளிர்விக்கும் பாடல்.
Image and video hosting by TinyPic

அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய் என்ற வரியை பாலு எவ்வளவு ஆழத்துடன் பாடுகிறார் கேளுங்கள் – சிலிர்க்க வைக்கும் மந்திரக் குரல்!

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல ஹ்ஹ
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

வாசமே வாசமே
வாசமே வாசமே

என்ன் சொல்லி என்னைச் சொல்லு
கண்கள் ரெண்டில் கண்கள் செல்லு
சிறகுகள் முளைக்குது மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் செய்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அர(பு)தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே

வாசமே வாசமே

என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா… வாசமே…

எங்கே எந்தன் காதலி நீயா நீயா யாரடி

August 25, 2006

Image and video hosting by TinyPic
எனக்குள் ஒருவன் படத்தில் கமல் அறிமுகமாகும் பாடல் ஒரு அட்டகாசமான அமர்களப் பாடல். ஷோபனா சினேகிதியுடன் ‘யாரந்த மதன்?’ என்று கடுகடுப்புடன் நிகழ்ச்சிக்கு வந்து காத்திருக்க, ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, மேடை காலியாயிருக்க – எப்படி எப்போது மதன் வரப்போகிறார் என்று எல்லாரும் ஆவலாக இருக்கையில் – ஹெலிகாப்டரில் வந்து இறங்குவார் மதன் கமல். அப்படியே பாடலை ஆரம்பித்து படு ரகளை செய்வார். அநியாயத்திற்கு இளமை துள்ளும். கமலோடு சேர்ந்து இன்னொரு நடிகர் அட்டகாசமாக இந்தப் பாடலில் நடித்திருப்பார் – வேறு யார்? பாலுவேதான் – தனது குரலால்.

நல்ல பாடல்களும் நடிப்பும் இருந்து என்ன பிரயோஜனம்? விழலுக்கு இறைத்த நீராக (அப்பாடி. எத்தனை நாளாயிற்று இந்தப் பழமொழியை உபயோகித்து!) படம் பப்படமாகி விட்டது. இப்படி நல்ல பாடல்களிருந்தும் வீணாய்ப் போன படங்கள் நிறைய.

இருந்தாலும் கமலுக்காகவும் நம் பாடும் நிலாவிற்காகவும் இந்தப் பாடலை நன்றாகவே ரசிக்கலாம். இடையிடையே வரும் வசனங்களையும் கமலுக்குப் பொருத்தமாக அற்புதமாகப் பாடியிருக்கிறார் பாலு!

ரபபப்பா ரபபப்பா
ரபபப்பா ரபபப்பா பா
ஹே ரபபப்பா ரபபப்பா பா
ரபபப்பா பபபப தாததாததாத
ஹே ஹே ஹே

எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலில்
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது

எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
ரருரருரருரபபப்பா ரருரருரருரபபப்பா ஹே

காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி
அடி கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை

காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே

Hey You!
ஓடை மலரே மேடைக்கு வா
ஹாஹா
பேடைக்குயிலே பேர்சொல்லி வா
Your sweet name please?
லல்லி.
லில்லி?
Don’t be Silly. லல்லி
கள்ளி

காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே

கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி ஹஹா
கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை

ஹே ஹே ஹே ஹே யா..

என்னைப் போல ஆட யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
என்னைப் போல ஆட ஹ யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
நான்தானே மன்மதன்
தரவேண்டும் சம்மதம்

Welcome baby.
என்ன அதிசயம்! ஒரு நிலவு தரையிலிருந்து புறப்பட்டு விண்ணுக்கு வருகிறதே!
என்ன மெளனம்? பேசு கண்ணே. உன் குரல் என்ன ராகம் என்ற நான் சுரம் பிரித்துச் சொல்கிறேன்.

உங்களுக்கு எத்தனை வாத்தியம் வாசிக்கத் தெரியும்?

ஆ… நான் வாசிக்காத வாத்தியம் நீ ஒருத்திதான் அன்பே

என்னோடு பாடுவீர்களா?

சொல்லாதே அப்படி. சங்கீத பாஷையில் நீயும் நானும் சுதி சேருவோமா என்று சொல்

Come on Everybody!

Everybody

That’s good..

ஹே ஹே ஹே ஹே ய்யா!

முத்தம் போதாது சத்தம் போடாதே

August 25, 2006

Image and video hosting by TinyPic
எனக்குள் ஒருவனின் இந்த டூயட் பாடலை Sweet-heart ஜானகியும் செல்லம் பாலுவும் ஜாலியாகவும் அழகாகவும் பாடியிருக்கிறார்கள். முத்தம் பாடல் வரிகளில் மட்டுமல்லாது பாடலின் படமாக்கத்திலும் நிறைந்திருப்பதால் அதைப்பற்றி மேலும் விளக்கவேண்டியதில்லை. பின்னே கமல் அல்லவா? 🙂

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே..
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே..
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே

இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே.
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே

தமிழ்நாட்டில் எப்போதோ மதுவிலக்கு ஹா ஹா ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதி விலக்கு

புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு என்னை தின்னும் இன்று
இது காமன் வண்டு என்னை தின்னும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி ஏங்காதே……என் கண்ணே

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே..
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே

உன்னைப் பார்க்கும் போதே.. நனைந்தேனே நானே
உன்னைப் பார்க்கும் போதே. நனைந்தேனே நானே
இன்று நான் கூறும் பூவானேன் நோய் வந்ததே

இதழ் சாறும் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாறும் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே… ம்ம் முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே
ஹ ஹஹ்ஹா ஹா

இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே..
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே

வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

August 25, 2006

Image and video hosting by TinyPic
பூந்தளிர் (1979) என்ற படத்தைப் பற்றிய தகவல்கள் என்னிடம் அதிகமாக இல்லை. மோகன் என்பவர் இயக்கியிருக்கிறார் என்று தெரிகிறது. இளையராஜா இசை என்று கேட்டாலே தெரிகிறது. ஆனாலும் இந்தப் பாடலை சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.


சொல்லத்தெரியாத ஏக்கத்தைக் குரலில் குழைத்து பாலு உணர்வுப் பூர்வமாக அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது. உறுத்தாத இசையும் சேர்ந்துகொண்டு நல்ல இரவில் கேட்கக்கூடிய பாடலாகவும் இருக்கிறது. எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இப்பாடல் விருப்பமான பாடல்களில் ஒன்று – பாடல் பாடப்பட்டு 27 வருடங்களாகி பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் சலிக்காமல் கேட்க வைக்கும் பாடல்.

“கண்மணிஈஈஈ” என்று பாலு பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல. “நான் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் பாலுவைத் துரத்தித் துரத்திக் காதலித்து கல்யாணம் செய்திருப்பேன்” என்று தே.ராஜேந்தர் ஏன் சொன்னார் என்பதற்கு இருக்கும் ஏராளமான சாட்சிகளில் இப்பாடல் இன்னொரு சாட்சி!

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேகம் கொட்டட்டும்

August 24, 2006

எனக்குள் ஒருவன் (1984) படம் சரியாக ஓடவில்லை. அதை மதுரையில் நரிமேட்டைத்தாண்டி வரும் மீனாட்சிபுரத்தில் இருக்கிற ஒரு டூரிங் கொட்டாயில் நான்கைந்து முறை பார்த்திருக்கிறேன் – அந்த உபேந்திரா பாத்திரத்திற்காக மட்டும்.

புருவங்களை இழுத்து ஏற்றிக் கட்டியது போல நேபாளி மாதிரி தோற்றமளிக்க கமல் நிறையவே மெனக்கெட்டிருப்பார். அது போக அந்தக் கேபிள் கார் சண்டையும் நன்றாக இருக்கும். கோழிக்குஞ்சு மாதிரி ஷோபனா மருண்ட விழிகளோடு அறிமுகமான படம்.

இளையராஜாவின் இசையில் அருமையான சில பாடல்கள் இருக்கின்றன. மேகம் கொட்டட்டும் என்ற இந்தப் பாடலின் குடை நடனத்தை அப்போது மிகவும் சிலாகித்துப் பேசிக்கொண்டோம். பாடலின் கேஸட்டில் கமலும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார். இது மாதிரி கேஸட்டில் மட்டும் கேட்க முடிகிற பாடல்ளைப் பட்டியலிட்டால் பெரிதாக நீளும்.

ஜாலியான இந்தப் பாடலை பாலு அருமையாகப் பாடியிருப்பார். இது தவிர இன்னும் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வரும்.

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

ய்யா ய்யா ய்யா ஹாஹா

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ மழையை இசை மழையாய் நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான் வரை கேக்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு
கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது

மேகம் ஹ கொட்டட்டும் ஹ ஆட்டம் உண்டு.. யா

வா…வாவாவாவ்வா வ்வவாவ்வா, வ்வவாவ்வா வ்வவாவ்வா ஆ ஆ ஆ

மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம் அலையென்ன ஓயுமா
மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்த்தாலே அலையென்ன ஓயுமா

ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்
ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
ரசிகரின் ஆர்வத்தை பார்க்கிறேன் உங்கள்
பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேனே..ஏ..ஏ

லா லா லல்லா லாலா லாலா
லா லா லல்லா லாலா லாலா

T.R. & Bala – # 10 இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

August 24, 2006

உயிருள்ளவரை உஷா (1980) படத்தில் வரும் இந்தப் பாடலை பாலு அழகாகப் பாடியிருப்பார். குறிப்பாக சரணங்களை அவர் ஆரம்பிக்கும் விதமே அருமையாக இருக்கும். ‘தென்றலதன் விலாசத்தை’ என்று அவர் பாடுவது சொக்க வைக்கிறது. கூடப் பாடியிருப்பது ஜானகியா? நம்பவே முடியவில்லை.

ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ

ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா?

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?
மோகினி போல் வந்து காளை என் உயிரினை பருகியும் சென்றாளோ

தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ? ம்ம்ம்
மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ? ம்ம்ம்

கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்
மின்னும் விழியை மெல்ல வைரம் கண்டது
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு

பொன்னுருகும் கன்னம் குழிய
ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்
இந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு
அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு
முத்துச் சரங்கள் இதழோரம் ஹாஆஆஆஆ

பாவை இதழது சிவப்பெனும் போது ஹ
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பாவை இதழது சிவப்பெனும் போது ஹ
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ?
மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ?

ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா?

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?
மோகினி போல் வந்து காளை என் உயிரினை பருகியே சென்றாளோ?

T.R. & Bala #9 – தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

August 24, 2006

தங்கைக்கோர் கீதத்தில் வரும் இந்தப் பாடல் மேடையில் பல்வேறு வண்ண விளக்குகளுடன் கண்களைக் கூசச் செய்யும் பளபள உடைகளுடன் 80 களி்ல் வந்த பல்வேறு டிஸ்கோ பல்வேறு பாடல்களைச் சேர்ந்த ஒன்றுதான் என்றாலும் எனக்கு இந்தப் பாடலின் சரணங்களும் அதை பாலு பாடியிருக்கும் விதமும் மிகவும் பிடிக்கும்.

தைதை தைதை தைதை தைதை
யாயாயா யாயாயா ஹே

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபபப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பா
மலருன்னை நினைத்து பபபப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பா

மைவிழி ரபபபபபரபபபபப
மயக்குதே ஹாஹாஹாஹா தரத்தரத்தர தரத்தரத்தரத்தரதா யா.

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால் மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம் தகதகதகதகதக ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம் தகதகதகதகதக

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா

தவம் கூட செய்வேன் தேவதையே கண்திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றிப் போவாயோ
திரியற்றுக் கருகும் தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து உன்னைத்தானே அணைத்தேன்
நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ
நினைவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ