Archive for September, 2006

செப்-24 : சிகாகோவில் பாலுவின் இன்னிசை நிகழ்ச்சி!

September 22, 2006

Sri Construction & Sizzle India proudly presents “SPB Live in Chicago”

September 24, 2006 – 5pm Sunday

At

Trinity High School
7574 West Division
River Forest
IL 60305

செப்-23 : மினியாபோலிஸில் பாலுவின் இன்னிசை நிகழ்ச்சி!

September 22, 2006

Enjoy a night of your favorite songs from the past and present with the master of
Indian Playback Music, Padmashri Dr. S.P Balasubrahmanyam.

Celebrate the music of Indian Cinema with melodies in different Indian languages. On Saturday, September 23, 2006 at Benson Great Hall,Bethel University, St. Paul, MN.

100% of the proceeds from the show benefit child welfare projects that Vibha supports in India and the US . Please visit us at http://www.vibha.org and http://minnesota.vibha.org.

Prices and Seating Arrangement:

Tickets are priced at $25(Level 4) , $45(Level 3), $55(Level 2) and $75(Level 1)
– $5 off for full-time students.
– Free admission (no free seats) for children under 5.
– 15% discount for groups of 10 or more.

Buy Tickets:

Important notice

Online sales have stopped. Tickets are available now only through the box-office.

From box-office by Phone: Tickets can be purchased by calling the box office within 11 AM-5 PM.

Call Benson Great Hall box office at 651-638-6333. Both group discounts and student discounts available at all levels. 15% discount for groups of 10 or more.All major credit cards accepted. Customers who are buying tickets right now have to pick up the tickets on the day of the event from the box-office.

We cannot mail the tickets anymore because with just a couple of days left, the tickets may not reach the buyers in time. However, we must again stress here that the moment you order tickets from box-office, your seats will be reserved and on the day of the event, when you show up at the box-office and ask for your tickets, your reserved tickets will be given to you. So the sooner you order, better seats you get. Also please show up at the concert hall early, if you are picking up tickets from box-office. Show starts at 6.30 PM. If you have questions, feel free to call the contacts below.

Tickets will also be sold on the day of the event (September 23) from the box-office starting from 5.30 PM. So just show up and buy the tickets on the spot.

All purchasers are guaranteed the best seat in the category (Level) at the time of purchase. Indian food will be available at the concert hall.

For more information please contact Veeresh Mathad (763-607-7438) or Sayeed Abbas (651-644-2703) or email spbconcert@minnesota.vibha.org

Time

6:00 pm, Saturday, September 23, 2006 !!!

Please be at your seats by 6:15 pm. The concert starts at 6:30 pm.

Location

Bethel University, 3900 Bethel Drive, St. Paul, MN 55112-6999

If you have any questions, please e-mail us at spbconcert@minnesota.vibha.org

தேவன் தந்த வீணை

September 19, 2006

Image and video hosting by TinyPic
மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் மற்றுமொரு ஒரு அருமையான குளுகுளு தென்றல் போன்ற பாடல் கேட்போமா? இந்தப் பாடல் உன்னை நான் சந்தித்தேன் என்ற படத்தில் வரும் தேவன் தந்த வீணை பாடல். நடிகர் மோகன் பிரபலமாக இருந்த சமயத்தில் வந்த படம். இந்த பாடலை மோகன் மிகவும் அனுபவித்து பாடலுக்கு வாயசைத்திருப்பார்.

மோகன் என்றாலே அவருக்குக் குரல் கொடுத்த சுரேந்தர் நினைவுக்கு வருவார். காதல் ஓவியம் கதாநாயகன் கண்ணனுக்கும் இவர் தான் குரல் தந்தவர். அறிமுக நாயகர்கள் பலருக்கும் குரல் தந்திருக்கிறார். பாடும் வானம்பாடியிலும் ஆனந்த்பாபுவுக்கு சுரேந்தர்தான் குரல் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் குரலை நன்றாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

உன்னை நான் சந்தித்தேன் படத்தில் பல நல்ல பாடல்கள் இருக்கின்றன. தாலாட்டு மாறி போனதே பாடலை ஜானகி அற்புதமாகப் பாடியிருப்பார்.

தேவன் தந்த வீணை பாடலை சுரேந்தரும் பாடியிருக்கிறார். சுரேந்தர் பாலுவுக்காக ட்ராக் பாடியிருப்பார் என்று நினக்கிறேன். எனக்கு நினவில்லை. இரு பாடலுக்கும் குரலில் அதிகம் வித்தியாசம் இருக்கும். பாலு அவர்கள் இந்த பாடலை தனித்தன்மையாக ஐஸ்கிரீம் போல பாடியிருப்பார். படத்தில் ஜானகியோடு ஜெயசந்திரனும் இதே பாடலைப் பாடியிருக்கிறார்.

இரண்டு பாடல்களை நீங்கள் கேட்டால் உங்களுக்கு நன்றாக புரியும். மேடைக் கச்சேரிகளில் அதிகம் பாலு பாடல்கள் தான் சுரேந்தர் பாடுவார்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடலான “கண்ணே கலைமானே” பாடலுக்கு இசையமைத்த பெருமை இசைஞானிக்கு உண்டு. அதைப் பாடிய பெருமை ஜேசுதாஸ் அவர்களுக்கு உண்டு. கவியரசுவின் மறைவுக்குப் பின்னரும் அவர் முன்பு இயற்றியிருந்த பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று இந்த “தேவன் தந்த வீணை”!

இந்த அற்புதமான மெலோடியை உங்களூக்காக சமர்ப்பிக்கிறேன். பாடலின் துவக்கத்தில் வரும் பாலுவின் ஹம்மிங் கேளுங்கள்…

ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மோகமோ..
மோகமோ.. சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ..
நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.ஆ.

வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தேன்.. இங்கு வந்தேன்..
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

தீண்டாய்

September 15, 2006

‘சின்னப் பையனா இருந்த காலத்துல இருந்து ஏ.ஆர்.ரஹ்மானை நான் பார்த்திருக்கிறேன் – இன்று உலகமெங்கும் புகழடைந்திருப்பதற்கு பக்தியும் இடைவிடாத உழைப்பும் அடக்கமும் காரணம்’ – என்று இசைப்புயலைப் பற்றி புகழ்ந்தார் பாலு – சென்ற வாரம் இங்கு நடந்த இசை நிகழ்ச்சியில். ரஹ்மானின் ரோஜா படத்தில் ‘காதல் ரோஜாவே’யில் ஆரம்பித்து அவரது இசையமைப்பில் அற்புதமான பாடல்களை பாலு பாடியிருக்கிறார்.

Image and video hosting by TinyPic
இஷா கோபிகரை முதன்முதலாக குமுதத்திலோ விகடனிலோ அட்டைப் படமாகப் பார்த்தேன். மூச்சு திணற வைக்கும் அழகுடன் அழகாக அறிமுகமானார். அப்புறம் சமரசங்கள் செய்துகொண்டு இந்திப் பக்கம் போய் அரைகுறை ஆடைகளில் ஆடி பத்தோடு பதினொன்றாக வரிசையில் சேர்ந்துகொண்டார் என்பது வேறு கதை. நமக்கு வேண்டாம்.


Image and video hosting by TinyPic
என் சுவாசக் காற்றே (1999) படத்தின் ‘தீண்டாய்’ பாடல் வைரமுத்துவின் வரிகளில் ஒரு அற்புத கவிதை – படமாக்கமும் கவிதையாக இருக்கும். அழகான அரவிந்தசாமியும் அழகான தேவதை போன்று இஷா கோபிகரும் அழகான பாடல் வரிகளும் அழகான மெட்டும் இசையும் பாலு, சித்ராவின் அழகான குரல்களும் இணைந்தால் ஒரு பாடல் எப்படி இருக்கும் – இந்தத் தீண்டாய் பாட்டைப் போலத்தான்.

Image and video hosting by TinyPic

பாடலின் பல்லவி ஆரம்பிக்குமுன் வசன கவிதையாக வரும் “கன்றும் உண்ணாது” என்ற வரிகளை எழுதியது வைரமுத்து அல்ல. குறுந்தொகைத் தொகுப்பில் உள்ள அந்தப் பாடலை எழுதியது வெள்ளி வீதியார் (என்ன அழகான தமிழ்ப் பெயர்!). குறுந்தொகைன்னா? என்று புருவம் நெறிக்கும் மக்களுக்கு – திருவிளையாடல் படத்தில் சிவன் சிவாஜி தருமி நாகேஷிடம் கொடுத்தனுப்புவாரே “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!” என்ற பாடல். அதுவும் குறுந்தொகைப் பாடல்தான்.

இசைஞானியும் இசைப்புயலும் இப்படித் திரையிசையில் சங்கப்பாடல்களை பொருத்தமாகப் புகுத்திக்கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. இது கவிஞர்களின் யோசனையா அல்லது இயக்குநர்களின் யோசனையா தெரியவில்லை. அது சரி. இக்காலக் குழந்தைகளுக்கு ‘டமிலே’ படிக்கத் தெரியவில்லை. இதில் சங்கத் தமிழ் பாடலைக் காட்டினால் It’s weird! என்றுவிட்டு ஓடிப் போய்விடுவார்கள்!!!

ம்ஹிம். பள்ளியில் படித்த காலத்தில் தமிழய்யாக்கள் “படி படி” என்று நொக்கியெடுக்காமல் இப்படிப் பாட்டாகப் படித்திருந்தால் சங்கப் பாடல்களையெல்லாம் கரைத்துக் குடித்திருக்கலாமே என்று இப்போது ஆதங்கமாக இருக்கிறது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய்
தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய்
தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித் தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின் மேலே ஜதி பாடும் சாரல் போலே
என்னில் இன்பம் துன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசு நாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

தீண்டாய் மெய் தீண்டாய்
தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத் தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங் காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டு வந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ் மேல் என்ன
பனியோ தேனோ

நீ சுவைத்தால் என்ன

தீண்டாய் மெய் தீண்டாய்
தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய்

தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்…
படி தாண்டாய்…

படி தாண்டாய்…
படி தாண்டாய்…

செப்-16 : பீனிக்ஸ்ஸில் பாலுவின் இன்னிசை நிகழ்ச்சி!

September 15, 2006

Event: The Third Annual Mahima Concert – A Mega Indian Light Music concert in Hindi, Tamil, Malayalam, Kannada, and Telugu.

Artists: Popular play-back singer S.P.Balasubrahmanyam accompanied by SPB Charan, SP Shailaja, Usha & party

For the first time in Phoenix, Arizona

When: 4:30 PM on Saturday, September 16, 2006
Where: IKEDA Theater, Mesa Arts Center

Please view the Parking Structure Map to make parking at the Mesa Arts Center easier for you. Please note that Mesa City charges $5 (cash only) for parking.

தென் மதுரை வைகை நதி

September 14, 2006

Image and video hosting by TinyPic
தர்மத்தின் தலைவன் (1988) படத்தில் அற்புதமான பாலுவின் பாடலொன்று இருக்கிறது. தமிழ் சினிமாவின் வழக்கமான பியானோ வாசிக்கும் பாட்டுதான். ஒரு மாறுதலுக்காக ஹீரோ ரஜினிக்கு பதிலாக பிரபு பியானோ வாசிப்பார். ஆனாலும் ரஜினி பியானோ வாசிக்கும் டிரெஸ் – அதான் வெள்ளை கோட்டு பேண்டு..ஸாரி..கோட், பேண்ட், பட்டாம்பூச்சி டை – அணிந்திருப்பார். ரஜினிக்கு கோட் அட்டகாசமாகப் பொருந்தும். அநியாயத்திற்கு ஸ்டைலாக இருப்பார் மனுஷன். அண்ணாமலை, பாட்ஷா எல்லாம் நினைவுக்கு வருகிறதா? 🙂

சுகாகினி பார்த்துக்கொண்டிருக்க முதல் சரணத்தைத் தம்பி பிரபுவுக்காகவும் இரண்டாவது சரணத்தைத் தாரம் சுகாசினிக்காகவும் பாடிமுடித்து கடைசியில் கோரஸாக நிறைவு பெறும் பாடல். பாலுவுடன் சுசீலா பாடியிருக்கிறார். மலேசியா வாசுதேவன் பல்லவியைக் கடைசியில் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லை.

இசைஞானியின் இனிய மெட்டு. இனிய பாலுவின் குரல். இனி என்ன? ரசிக்கவேண்டியதுதான் பாக்கி!

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என்னாசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் இன்று
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா எந்நாளும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

செப்-15 : சியாட்டிலில் பாலுவின் நிகழ்ச்சி!

September 14, 2006

Hindu Temple & Cultural Center
(A 501 (c) (3) Non Profit Organization registered in WA)
3818, 212th Ave SE, BOTHELL, WA 98021
Tax ID: 94 – 3087412; Ph: (425) 483-7115 http://www.htccwa.org

presents Live Musical Concert featuring

Padmasri Dr. SP Balasubramanyam

(first time ever in Seattle & will sing songs from Hindi & South Indian languages)
on

Friday, September 15th 2006 at 8:00 PM
Roethke Auditorium, Kane Hall Room 130,
University of Washington, Seattle.

with SP Sailaja, SPB Charan, Mallikarjun, Purnima & orchestra from India.

Suggested Donation(s) (and not limited to):

$35, $50, $75, $100, $250 and $500.

Donations accepted for advertisement in Program Brochure!!!

Donations which qualify for complimentary tickets:
“Sponsor a Tile Program” – $2,000
Donor Membership – $5,000
Family Life Membership – $1,000
& Individual Life Membership – $500

All proceeds from the concert will benefit phase II main temple construction for future generations.

Advance tickets are available online at:
https://www.sulekha.com/ticketsV3/buytickets.aspx?cid=484262

Donations will be matched by Microsoft, Boeing, Washington Mutual, Starbucks, Cingular Wireless & other participating companies.

Limited $75 & $100 seats .. Tickets selling fast !!!!!!

Advance ticket purchases will get prefered seating choice.

Snack & Dinner Coupons are available to purchase online.
Advance purchase will help us serve you better !!!!!

For advance tickets & more information please contact:

Vishwa: (425) 269-4066; Hima: (206) 779-5517;
Krish: (425) 466-9391; Kannan: (425) 503-1471;

Arun Sharma: (425) 359-1780; Nitya: (425) 485-3389;
Vanisri: (425) 803-3066; spbala2006@gmail.com;

செப்-10 : பாஸ்டனில் பாலு!!!

September 8, 2006

மக்களே! ஞாயித்துக் கிழமையன்னிக்கு நேட்டிக் உயர்நிலைப் பள்ளியோட உள்ளரங்கத்துல பாலுவின் இன்னிசைக் கச்சேரி மதியம் 3 மணிக்கு ஆரம்பி்க்குது.

எல்லாரும் இஷ்டமித்ர பந்துக்களோட வந்து நிகழ்ச்சியை ரசிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்!!!

Image and video hosting by TinyPic

A Light Music Extravaganza Featuring S.P.B ,S. P. Shailaja & S. P. B. Charan

S. P. B and his 13 member orchestra will regale you with your favorites songs from Tamil, Telugu, Hindi, Kannada, etc. movies.

Performing Artists: S.P.Balasubrahmanyam,S.P.Shailaja,MallikarjunPurnima

Children 5 years and older will need a ticket and will be assigned a seat; Children under 5 must be seated with their parents.

Photography and audio/video recording is strictly prohibited inside the auditorium

Seat numbers will be emailed to you by a MITHAS volunteer within 3 days of your purchase

Where:Natick High School Auditorium 15 West StNatick, MA (01760)US

When:Sep 10 2006 3:00PMto Sep 10 2006

No. of Admission : $ 100, $75, $50, $35 & $25, Dinner with the Artists after the Concert : $30

Contact : Tushneem DharmagaddaPhone : 781 541 0346

www.mithas.org

செப்-9 : ஓர்லாண்டோ நகரில் பாலுவின் இன்னிசை நிகழ்ச்சி!

September 8, 2006
Light Music Concert in Orlando By
Padmasree Dr. SP Balasubrahmanyam

Image and video hosting by TinyPic
With full orchestra will entertain you with the popular film songs in
Hindi, Telugu & Tamil and other languages.

SP Bala has recorded 36,000Songs in the last 35 years in Hindi, Telugu, Tamil, Kannada, Malayalam, Punjabi & Oriya. He is a 6 times National Award winner.

On September 9th from 6.00 pm at Hindu temple Hall, 1994 Lake Drive, Casselberry- FL-32707

Tickets : $25, $50,
VIP Sponsors $500 (for 2 persons), $1000(for 5 persons)

For Tickets & more Info:

Mahendra Kapadia (407-595-9224),
Dr Pillai (407-718-8733),
Hashmukh Mistry (407-257-3816)
Srininivas Jarugula (321-262-6197),
Dr Anita Gupta (407-333-4510),
Ravi Gandhi (407-402-4560),
Annapurna Raju (407-718-7512),
Gopal Iyengar (407-876-7686),
Dr Mohan Saoji (321-948-0300)
Dr Murthy Nallamshetty (407-687-5506),
Dr Arvin Oberai (407-977-4404)
Dr Buchi Reddy (407-617-3804),
Dr Swami (407-902-8910)
Bhakta Bhasyam (407-716-8141)
Chitra DeshPande (407-345-5161),
Lata Kumar (813-679-7928),
DrMadhu Sudhan (352-237-8007)

Sponsored by Hindu Society of Central Florida (407-699-5277)

For directions please visit http://www.hindutempleorlando.org (Baby sitting is available)

சொல்லாயோ.. சோலைக்கிளி..

September 8, 2006

Image and video hosting by TinyPic
ரொம்ப நாளாகவே என் மனதில் அலைபாய்ந்து கொண்டு இருக்கும் ஒரு பாடல் இது… இன்று உங்கள் செவிக்கு..

ஒரு மேசையின் மீது பல தித்திப்பான இனிப்புகளை வைத்துவிட்டு உங்களுக்குத்தான் எல்லாமும் ஒரு பிடி பிடியுங்கள் என்று சொன்னால். அதிலே எந்த இனிப்பைத் தேடிப் பிடித்து சாப்பிடவேண்டும் என்று ரொம்பத் திணறித்தான் போவோம் இல்லையா நண்பர்களே அதே போல் பாலுவின் பாடல்களிலே அவருடைய குரலின் இனிமை ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மைத் திணறடிக்கும்.
Image and video hosting by TinyPic
அந்த வகையில் மிகவும் பிரபலமாகாத படம் ஒன்று அல்லி அர்ஜுனா (2001). கேள்விப் பட்டிருகீறீர்களா? பாரதிராஜா மகன் மனோஜ் நடித்தது. சொல்லாயே சோலைக்கிளி என்ற ஒரு பாடலுக்காகவே அந்தப் படம் பிரபலமானது என்பது என் சொந்தக் கருத்து. பாடலை பாலுவுடன் பாடகி சொர்ணலதா மிகவும் இனிமையாகப் பாடியுள்ளார். பாடலில் இரண்டாவதாக வரும் இந்த வரிகளை எப்படி ஆத்மார்த்மாக பாடியுள்ளார் என்று குறிப்பாக கவனியுங்கள் தொடக்கத்தில் நான் ஏன் அப்படிக் குறிப்பிட்டேன் என்று உங்களுக்குப் புரியும்.

இந்த ஊமை நாடகம் முடிந்ததே..ஏஎ.ஏஎ.ஏஎ…ஏ
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வா.. வாழ்ழ்ழ்கவே.ஏ.ஏ

முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேஎன் என்னவென்றால் சமீபகால நடிகர்கள் சூர்யா.. ஸ்ரீகாந்த்.. அதிகமாக, வலது காலை ஊன்றிக்கொண்டு இடது காலால் தன் உடலோடு சேர்ந்து மெதுவாக ஒரு நடன அசைவு கொடுப்பர்களே.. அதேபோல் இந்தப்பாடலில் வரும் மென்மையான தாளம் கேட்போர் எல்லோரையும் அனுபவித்து ஆடவைக்கும்.
தொடக்கத்திலும், முடிவிலும் வரும் மனதை கொள்ளைக்கொள்ளும் சொர்ணலதாவின் அந்த ஹம்மிங் அப்பா.. அனுபவியுங்கள் நண்பர்களே….

-கோவை ரவீ

ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்

ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்

ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்

ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்

சொல்லாயோ.. சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது..ம்ம்.ம்…ம்ம்.

சொல்லாயோ.. சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்ல்ல்ல்ல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது…ம்ம்..ம்ம்..ம்ம்

இந்த ஊமை நாடகம் முடிந்ததே..ஏஎ.ஏஎ.ஏஎ…ஏ
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்கவே.ஏ.ஏ

சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக்கடந்த காதலிது…கண்ணோரம் காதல் பேசுதே.ஏஎ..ஏ.எ..ஏ.எ

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே ஒற்றைக்கிளி மொழிகள் போல
இச்சைக்காக நானும் மறைத்தேன்…

பச்சைக்கிளி மூக்கைப்போல.. வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்..

நீயில்லாமல் சோலையில்லை.. பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச்சொல்லி காதல் வளர்த்தேன்..

பொய்யும் கையும் ஆயிரம் பூட்டு
மெய்யும் கையும் ஒத்தைச்சாவி
எல்லாபூட்டு.. இன்றே திறந்தேன் ஹோ ஹோய்

சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக்கடந்த காதலிது…கண்ணோரம் காதல் பேசுதே

ஹோய்..சொல்லாயோ.. சோலைய்ய்க்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது..ம்ம்.ம்…ம்ம்.

இந்த ஊமை நாடகம் முடிந்ததே..ஏஎ.ஏஎ.ஏஎ…ஏ
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வா.. வாழ்ழ்ழ்கவே.ஏ.ஏ

செய்யாத காதலுக்கெல்லாம் சேர்த்து நம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானையளப்போம்..

புதிய கம்பன் தேடிப்பிடித்து.. லவ்வ்வ்வாயனம் எழுதிடச்செய்வோம்
இரவில் கூடி கவிதைப்ப்டிப்போம்..

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்..
நெஞ்சம் நெஞ்சம் மோதிக்கொள்வோம்..
சண்டை போட்டு இன்பம் வ்ளர்ப்போம்..

பூவும் பூவும் மோதிக்கொண்டால் தேனைத்தாதே சிந்திச்சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…ம்ம்

ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ..
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ