Archive for October, 2006

பொன்னி நதி வெள்ளம் இன்று

October 31, 2006

Image and video hosting by TinyPic
முதல் வசந்தம் (1986) படத்தில் பாண்டியனும் ரம்யாகிருஷ்ணனும் நடித்திருக்கிறார்கள். என்ன முயற்சித்தாலும் இந்தப் பாட்டையும் அவர்களையும் ஒட்ட வைக்க முடியவில்லை! நினைவுகளிலும் காட்சிப் பதிவுகள் இல்லை. படம் பார்த்திருக்கிறேனா என்று கூட நினைவில்லை. ஆக இப்படிச் சொத்தையான பதிவிற்கு மன்னிக்க. அதனால் என்ன? பாலுவின் குரலைத் தவிர வேறு எது இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன? பொன்னி நதி வெள்ளம் பொங்கி வரும் இன்பத்தை பாலுவின் குரலைக் கேட்கையில் நாம் பெறுகிறோமே அது போதாதா?

குதூகலமான அருமையான இனிமையான பாடல்! இளையராஜா இசை! ஆறும் அது ஆழம் இல்லை, அது சேரும் கடலும் ஆழம் இல்லை என்ற தத்துவப் பாடலை இசைஞானி பாடியிருக்கிறார்.

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ அ அ ஆ அ அ ஆ அ அ ஆ
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூ மேனி
பருகத் துடிக்கும் நான் தேனி
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தந்த முகம் இன்ப முகமே
தெய்வம் சேர்த்த நம் கைகள்
சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல்
சொர்க்கம் தேடுது
இது இளமை இனிமை புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனந்தன்னில் சுகம் வந்தது
மலர்தன்னில் மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை மேகங்கள் மங்கை தந்தது
அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது

இனி இனிமை கனவுகள் உதயம்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நானும் என்னிடம்
நீ தங்கமே என்னிடம் இன்பமே

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

Advertisements

சலங்கை ஒலி – வேதம் அணுவிலும் ஒரு நாதம்

October 31, 2006

Image and video hosting by TinyPic
“போயும் போயும் சினிமா. அதப் பாத்துட்டு ஏண்டா இப்படி உணர்ச்சிவசப் படறீங்க. அது வெறும் நிழல். ஜஸ்ட் பொழுதுபோக்கு. பாத்துட்டு விட்றணும்” என்பது போன்ற வசனங்களை நான் சிறியவனாக இருந்தபோது பெரியவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நான் பெரியவனனானதும் சிறியவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் சில திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு என்ற வளையத்துக்குள் அடக்கிவிட முடியாது. அலைகள் ஓய்வதில்லை என்ற விடலைக் காதல் படம் வந்த புதிதில் பெரும் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருங்கே சந்தித்தது. “பசங்களைக் கெடுக்க வந்த படம்” என்று பெரியவர்கள் திட்டிய படம். படம் இருக்கட்டும். “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே” என்ற சாகா வரிகளுடன் ஒரு பாடல் இருக்கிறதே! அதை இன்று கேட்டாலும் இதயத்தைத் துளைத்துக்கொண்டு உள்ளிறங்கும் வலிமை படைத்த பாடல் அது.

கமலின் குணா படத்தின் பாதிப்பு நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்தது. மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சியை நாம் மறந்திருக்க முடியாது. மஹாநதி? வேண்டாம். விடுங்கள்.

சலங்கை ஒலி ஒவ்வொரு காட்சியிலும் நம்மைத் தொடர்ந்து பாதித்த படம். இந்தக் காட்சி அனாவசியம் என்று விட்டுவிட முடியாத படம் அது. படம் நம்மை முழுவதும் ஆக்கிரமித்து உணர்வுகளின் கொந்தளிப்பில் நம்மை ஆழ்த்தி துன்புற்று இன்புற்று ஆரவரித்து மகிழ்ந்து சிரித்து காதலித்து அழுது ஆற்றி மரண வலியையும் கொடுத்துக்கொண்டே இருந்தது.

அந்தப் பத்திரிகை அலுவலகக் காட்சியில் “எத்தனை சம்பிரதாயங்கள் இருக்குன்னு தெரியுமா உனக்கு?” என்று எகிறும் ஷைலஜாவிற்கு எப்படி ஆடவேண்டும் என்று பாடம் புகட்டிவிட்டுக் கமல் சொல்வார்.

Yatho hastha thatho drushti
Yatho drushti thatho manaha
Yatho manas thatho bhaavaha
Yatho bhaavas thatho rasaha

கைகளைத் தொடரும் கண்கள் – கண்களைத் தொடரும் மனம் – மனதைத் தொடரும் Bhaவம் – Bhaவத்தோடு சேரும் ரஸமும் – இதைத் தமிழாக்கம் செய்வதைவிட அப்படியே விட்டுவிடலாம் போலத் தோன்றுகிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் வரும் இந்தப் பாடல் படத்திற்கே முத்தாய்ப்பானதொரு பாடல். நொடிக்கு முப்பது பிரேம்களில் இயக்கத்தைக் காட்டுகிறது சினிமா. இந்தப் பாடலில் 30 அல்ல – ஒவ்வொரு பிரேமும் பேசும்.

“கா………………..மா…………..” என்று உச்ச ஸ்தாயியில் பாலு பாடலை ஆரம்பிக்கும் போது இருள் சூழ்ந்த சூன்யத்தில் தனியே நின்று அலறும் உணர்வை உடனடியாக நமக்குத் தந்து விடுகிறார். க..ம..க…ஸா… என்னும் போது நம் ஆத்மாவின் குரல் நமக்குள்ளே எதிரொலிக்கும் பிரமை எழுகிறது. மரணத்தை நோக்கி அணுவணுவாக நகர்ந்து செல்லும் ஆத்மாவின் அமைதியான ஆனால் ஆவேசப் போராட்டத்தை நொடி நொடியாக நேரடி வர்ணனை செய்வது போல் இந்தப் பாடல் செய்கிறது. அந்தத் துன்ப உணர்வில் விழுந்து நீந்திச் சென்று கண்கள் ஈரமாகாமல் கரைசேருவது இதயம் படைத்தவர்களுக்கு இயலாத காரியம். அதே போல் தனது படத்தையம் பெயரையும் தாங்கிய நடன விழா அழைப்பிதழை மரணப் படுக்கையில் இருக்கும் அம்மாவிடம் காட்டி, பின்பு சலங்கையணிந்து “நாத விநோதங்கள்” பாடலின் சரணத்தைப் பாடி ஆடி, அம்மாவின் மூச்சு நின்றதும் தனது நடன பாவத்திலிருந்து மெதுவாக விலகி அம்மாவின் காலடியில் விழுந்து கதறும் அந்தக் காட்சி!

அப்படி உங்கள் கண்களில் நீர் துளிக்கவில்லை என்றால் உங்கள் இதயத்தை மருத்துவரிடம் உடனடியாகச் சோதித்துக் கொள்வது நலம்.

கமல் அந்த வயதில் செய்த நடிப்புச் சாதனைகளை அவ்வளவாக தற்காலத்தில் செய்வதில்லை என்பது ஒரு தீவிர ரசிகனாக என் வருத்தம்.
Image and video hosting by TinyPic
மருத்துவமனை படுக்கையில் அமர்ந்துகொண்டு கமல் நடனம் சொல்லித் தருவது சினிமாத்தனமாக இருக்கிறதே என்று சிலர் நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. எந்த விஷயத்திலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தீவிரமாக இருப்பவர்களுக்கு அது சாத்தியம்தான். விபத்தில் கால் முறிந்து படுக்கையில் இருந்தும் உடற்பயிற்சியை நிறுத்தாமல் டம்பள்ஸ் இரண்டை வைத்துக் கொண்டு கைகளுக்கு பயிற்சி எடுத்த ஆசாமிகளோடு பழகியிருக்கிறேன். இரண்டு மூன்று நாள்கள் சோறு தண்ணீர் எடுக்காது ப்ராஜக்ட் வேலைகளை முடிக்க ஆயிரக்கணக்கில் மென்பொருள் வரிகளை எழுதிவிட்டு நான்காவது நாள் இருக்கையில் அப்படியே விழுந்து களைப்பில் உறங்கிய நண்பர்களைத் தெரியும். மனதிருந்தால் முடியும்!
Image and video hosting by TinyPic
மேடைக்குப் பக்கவாட்டில் சக்கர நாற்காலியில் நண்பன் சரத்பாபுவிடம் கைதாங்கலாகக் காத்திருந்து “விட்டேற்றியாகக் கற்றுக்கொண்ட சிஷ்யை எப்படி ஆடப்போகிறாளோ?” என்று தவிப்புடன் இருக்கும் கமல், ஜெயப்ரதா, இருவரின் மாசறு நட்பை அறிந்ததும் மனதைப் பிடித்திருந்த சந்தேகப்பேய் விலகிவிட, அதுவரை செய்த குரு நிந்தனைகளை நினைத்து வருந்தி அழுது, நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் சலங்கையணிந்து நீண்ட கமகங்களுடன் கூடிய ஆலாபனையுடன் மேடையில் ஆடியவாறே தோன்றும் ஷைலஜா, அவரின் ஆவேசமான அற்புதமான நடனத்தில் தனக்குத் தெரிந்த கலையை வெற்றிகரமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிட்டது அறிந்ததும் பூரித்து கண்களாலேயே ‘என்னுடைய தயாரிப்பு எப்படி?’ என்று ஜெயப்ரதாவிடம் வினவும் கமல், மேடையேறும் தனது கனவு பலிக்காமல் போய்விட்டாலும் ஷைலஜாவின் நடனத்தில் தன்னையே மேடையில் காணும் இணையுலகத்தில் (Parallel Universe) சஞ்சரிக்கும் கமல், இங்கு சிஷ்யை ஆடிக்கொண்டிருக்க, அதுவரை தனக்கு உறுதுணையாக நின்ற ஆத்ம நண்பன் சரத்பாபுவின் கையில் தலைசாய்த்து இறுதி மூச்சை விடும் கமல், அவரை அதிர்ச்சியுடன் நோக்கும் சரத்பாபு – அரங்கத்திற்கு வெளியே செல்லும் கடைசிப்பயணத்தில் மழை தாக்காது கைகளால் இறந்த நண்பனுக்குக் குடையாக மறைக்கும் சரத்பாபு, அவர்களோடு இணைந்து குடைபிடித்து வரும் ஜெயப்ரதா – கடவுளே! – மானுட உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் புதிய பரிமாணங்களை சகட்டுமேனிக்குத் தாங்க முடியாத வண்ணம் கொடுத்து நம்மை பிரமிக்கச் செய்திருக்கும் இயக்குநர் கே.விஸ்வநாத் – ஹம்ஸாநந்தி ராகத்தில் இப்பாடலுக்கு மெட்டமைத்த இசைஞானியின் மந்திர இசை! எல்லாவற்றுக்கும் மேலாக பாலுவின் அந்த தெய்வீகக் குரல்….

பாடலின் இறுதியில் அவர்

jayenthi pe shukruthino rasa siddhaha
ka vishwaraha naasthi theshamya shakkaie
jaraa maranajam..bayam..
naasti.. jaraa maranajam. bayam.
naasti.jaraa maranajam.bayam

என்று உச்சாடனம் செய்யும்போது மரணத்தை அருகாமையில் இருந்து ஸ்பரிசித்த உணர்வு கிடைக்கிறது!
Image and video hosting by TinyPic
கமல் பத்திரிகையலுவலகத்தில் ஷைலஜாவுக்கு பரதநாட்டியம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று “பஞ்சபூதங்களும் முக வடிவாகும்” பாடல் வரிகளுக்கு விதவிதமாக ஆடிக்காட்டிவிட்டு வேலையை இழந்து வெளியே வர, தன்னைத் திட்டும் நண்பன் சரத்பாபுவிடம் அவர்களது நட்பைப் பற்றி இப்படிப் பாடுவார்!
Image and video hosting by TinyPic
“கலையாத நினைவு நான்
விலகாத உறவு நான்
சிதையேறும் போதிலும்
மறையாத பந்தம்
விலகாது நண்பனே
நமதான ஸ்நேகம்”
Image and video hosting by TinyPic
இதைத்தான் பாலு நம்மைப்போல அவருக்கிருக்கும் அவரது இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அவரது ஒவ்வொரு பாடலின் மூலமும் தினமும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். அவரது பாடல் காலங்காலமாக நமக்கு இன்னும் பல வருடங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கும்! அவருக்கும் நமக்குமான அந்த ஸ்நேகம் – ஒரு விலகாத உறவு!

கா…….மா……….நீ……
கமகஸ
மாகஸா
கஸா
நீ ஸா நிதமக
தமக மக
ஸரீஸா
கமாகரி
கமாக மாதமா தநிதா நிஸாநி ரீ

வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நிரிஸநிதமக
கதமகரிஸநீ
நிரிஸநிதமக
பதநிஸரீஸ காரிமகதம
கமதநிஸாநி தநிபதகமரிகஸா
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
தேகங்கள் எரியும் யாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்

உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே

வேதம் அணுவிலும் ஒரு நாதம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ
அதிதி தேவோ பவ

எனையாளும் குருவென்ற தெய்வம்
எதிர்வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்
நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆடு
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
வேதம்

jayenthi pe shukruthino rasa siddhaha
ka vishwaraha naasthi theshamya shakkaie
jaraa maranajam..bayam..
naasti.. jaraa maranajam. bayam.
naasti.jaraa maranajam.bayam

வேதம்……..

சலங்கை ஒலி – காவிரி மங்கை வந்தாளம்மா

October 28, 2006

Image and video hosting by TinyPic
ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!!

எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது!

இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.

மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ “ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு” என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை.

சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் “காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி” என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் “சிதாரா”வில் இடம் பெற்றது.

தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மன்னிக்கவும்.. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் இந்தப் பாடல் எங்கும் கிடைக்கவில்லை. மக்கள் யாரிடமாவது இருந்தால் தயவிட்டு கொள்சி பிடி! மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

10/30 : நண்பர் கோவை ரவீ சிரமமெடுத்து இந்தப் பாடலைத் தேடிப்பிடித்து அனுப்பியிருக்கிறார். அது இங்கே.

சலங்கை ஒலி – தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

October 24, 2006

Image and video hosting by TinyPic
“கிணற்றுக்குக் குறுக்காக இருக்கும் குழாய் மேல் நின்று கொண்டு கமல் நடனமாடும் பாடல்” என்ற வகையில்தான் இந்தப் பாடல் எனக்கு அறிமுகமாகி இருந்தது. ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். சிறு வயதில் தீவிர ரஜினி ரசிகனாக இருந்தபடியால் கமல் படங்கள் எதையும் பார்த்ததேயில்லை. பதினைந்து பதினாறு வயதானதற்கு அப்புறம்தான் ஓரளவு நல்ல படங்களை ரசிக்கும் பக்குவம் வந்து அதற்குப் பிறகு பழைய கமல் படங்களைத் தேடிப் பிடித்து ஒவ்வொன்றாய் பார்த்தேன். சலங்கை ஒலி, மூன்றாம் பிறை போன்ற படங்களெல்லாம் அந்த வகையில் அடக்கம்.

சலங்கை ஒலியைப் பார்த்தபோது ‘சே. இந்தப் படத்தை அது வெளியிடப்பட்ட காலகட்டத்தில் பார்க்காமல் விட்டுவிட்டோமே’ என்று நொந்து கொண்டாலும் வெளியிடப்பட்ட காலத்தில் அதைப் பார்த்திருந்தால் அதை இந்த அளவிற்கு ரசித்திருப்பேனா, பிடித்திருக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே. வயதாக ஆக நமது எண்ணங்களும் சிந்தனைகளும் விருப்பங்களும் வெறுப்புகளும் மாறுகின்றன. இளவயதில் அடிதடியோடு பொறிபறக்கும் பொழுதுபோக்குப் படங்கள் மீதுதான் நாட்டமிருந்ததேயொழிய சலங்கை ஒலி மாதிரி படங்கள் மீது இல்லை. படம் முழுதும் “யோவ் படத்தைப் போடுங்கய்யா” என்று நான் குரலெழுப்பிக்கொண்டிருந்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது். அந்த வயது அப்படி.

தகிட ததுமி பாடலின் முக்கியத்துவம் பின்னாளில் படத்தைப் பார்த்தபோது புரிந்தது. காட்சியமைப்பு, தான் உயிரினும் மேலாகக் காதலித்த மாதவி மணமானவள் என்று தெரிந்ததும் கணவனிடம் சேர்த்துவைத்த பாலகிருஷ்ணாவின் பாத்திரப் படைப்பு, அவன் மாதவி எங்கோ சுமங்கலியாக சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறாள் என்று நம்பிக் கொண்டு, வாழ்க்கையில் தானறி்ந்த கலையால் விடாமுயற்சி செய்தும் வெற்றியடையாது தோற்று, குடிக்கு அடிமையாவதும், மாதவியின் மகளுக்கு நடனம் பயிற்றுவிப்பதற்காக மாதவியால் – அவளால் என்று அவன் அறியாமலேயே- வரவழைக்கப்பட்டு வந்த இடத்தில் குடித்துவிட்டு போதையில் மழையில் நனைந்துகொண்டே கிணற்று மீது ஆடுபவதும், அவனைப் பார்க்கும் விதவையான மாதவி எப்படிக் காப்பாற்றுவது என்று தவித்து, ஆபத்துக்குப் பாவமில்லை என்று குங்குமம் அணிந்து கொண்டு வந்து கிணற்று மேலிருந்து இழுத்து இறக்குவதும், தன்னைப் பற்றியும் நடனத்தைப் பற்றியும் மோசமாக விமர்சனம் எழுதிய அந்தக் குடிகாரனையே குருவாகக் கொண்டுவந்த அம்மாவின் போக்கு புரியாமல் கோபத்தோடு இருக்கும் மாதவியின் மகள் ஷைலஜா, அவன் மீது அம்மா காட்டும் கரிசனத்தையும், விதவையான அம்மா திடீரென்று குங்குமத்தோடு வருவதையும் பார்த்துவிட்டு அவர்களைச் சந்தேகப்படுவதும் – என்று மிக கனமான முள் மீது நடக்கும் காட்சியமைப்புகள். ஆவேசமான மெட்டு – இசை – மின்னும் நடிப்பு – எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக உணர்வுப் பூர்வமான பாலுவின் குரல் – என்று எல்லா சங்கதிகளும் சேர்ந்து நம்மை மந்திரித்துவிட்டது போலக் கட்டிப்போடுகிறது இந்தப் பாடல்.

Image and video hosting by TinyPic
தன்னை இழுத்து கிணற்றின் மீதிருந்து இறக்கும் மாதவியை எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு கண்டதும் பாலகிருஷ்ணன் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் – நெற்றிக் குங்குமம் மழைநீரில் கரைவதைக் கண்டு பதறி சட்டென்று கையைக் குடையாக நெற்றியில் வைக்கும் அந்தக் காட்சியில் முகபாவங்கள் – பின்னணியில் பாலுவின் நம்மை நடுங்கிப் பதறச் செய்யும் ஆஆஆஆ என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் ஆலாபனை, இசைஞானியின் உயிரை உருக்கும் இசை, கமலின் நடிப்பு – எதைத்தான் குறிப்பிட்டுச் சொல்வது!

பாலு பின்னியெடுத்திருக்கிறார். காட்சியமைப்பின் உயிர்நாடியாகக் கமல் என்றால் பாடலின் உயிர்நாடியாக பாலுவின் குரல்! முதுகெலும்பாக இசைஞானி! தெலுங்கில் பாடலாசிரியர் வெட்டூரி சுந்தர ராமமூர்த்தி. தமிழில் இந்தப் பாடலை எழுதியவர் வாலி என்று நினைக்கிறேன்.

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி

ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா
தாளமிங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது அ அ ஆ அ அ ஆ
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவமுண்டு பாவமில்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

அ அ அ அ அ அ அ அ அ அ

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுத்தது என் பேனா
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

சலங்கை ஒலி – வான் போலே வண்ணம் கொண்டு

October 20, 2006

Image and video hosting by TinyPic
சலங்கை ஒலி சரத்பாபு போல ஒரு நண்பர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நண்பனின் திறமை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தன் சொந்தக் கஷ்டங்களோடு அவனுக்கும் வாய்ப்பு தேடி அலைவதென்ன – படாத பாடு படுவதென்ன. நல்ல குணசித்திர நடிகரான அவரின் நடிப்பு அன்றிலிந்து சமீபத்திய அண்ணாமலை உள்பட பல படங்களில் சிறந்து வெளிப்பட்டிருக்கிறது. ஜீப்பை ஓட்டிக் கொண்டு “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்று பாடிக்கொண்டு அவர் வருவது இன்னும் நினைவில் நிற்கிறது. அவரது குரலும் கம்பீரமாக இருக்கும்.

குடிகார நடன இயக்குநரிடம் கமலுக்கு வாய்ப்பு கேட்டு கெஞ்சி நிற்பதும் அவரை வணங்கச் சொல்லி கமலிடம் சைகையிலேயே தெரிவிப்பதும் என்று மனிதர் கலக்கியிருப்பார். அந்த குடிகாரன் பாட்டுக்கு நடனத்தை அமைக்கச் சொல்ல கீதாவும் கமலும் சேர்ந்து பரதநாட்டிய பாணியில் நடனம் அமைத்திருக்க தயாரிப்பாளரும் அவருடைய ‘அல்லக்கை’ ஆளும் வந்து கம்போஸிங் ஆயிற்றா என்று வினவ, நடன இயக்குநர் அவர்களை ஆடிக்காட்டச் சொல்வார். கமலும் கீதாவும் கிருஷ்ண லீலையை அழகாக நடனமாடிக் காட்ட தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொள்வார். நடன இயக்குநர் ஆத்திரமாகி “நான் சொல்லிக் கொடுத்ததை ஆடுடான்னா இவனா ஒண்ணை ஆடறான்? இதுக்குத் தான் சாஸ்திரம் தெரிஞ்சவனையெல்லாம் அசிஸ்டெண்டா வச்சிக்கக் கூடாதுங்கறது” என்று சொல்லிவிட்டு கீதாவை இழுத்து மடி மீது போட்டுக்கொண்டு ‘டட்டடய்ங்’ என்று அவரே காட்சியை விவரிக்க தயாரிப்பாளர் வாயைப்பிளந்து கொண்டு ரசிப்பார். பிறகு கமலும் கீதாவும் நம் சினிமாக்களுக்கே உரித்தான விரச அசைவுகளுடனான நடனத்தை ஆடுவார்கள். ஆடி முடித்ததும் மரத்திற்குப் பின்புறம் பல்லைக் கடித்து ஆத்திரத்தை மென்று கண்ணீர் தளும்ப நிற்பார் கமல். பிறகு வீட்டுக்கு வந்து சரத்பாபுவிடம் சண்டை போடும் காட்சியும் இப்படி கிடைத்த வேலையை விட்டுவிட்டு வந்து நிற்கிறாயே என்று கத்தும் சரத்பாபு கமல் மேல் டம்ளர் தண்ணீரை வீசுவதும் மிகவும் இயல்பான காட்சி.

பாலுவும் ஷைலஜாவும் இந்தப் பாடலை இடையிடையே அழகான ஆலாபனைகளோடு பாடியிருக்கிறார்கள்.

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே – அஹா
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே -பல
விந்தைகள் செய்தவனே
அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உள்ள தேவரெல்லாம்
போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே
மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி – அன்று
செய்த லீலை பல கோடி
மண்ணில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

சலங்கை ஒலி – இது மெளனமான நேரம்

October 20, 2006

Image and video hosting by TinyPic
அழகிய தீயே ஒரு அருமையான படம். அதில் கதாசிரிய நபர் கதை சொல்லும்போது ‘கதாநாயகியோட பாவாடையைப் பிடிச்சு இழுத்தான்’ எனச் சொல்ல நண்பர்கள் பதறி ‘டேய். என்ன்ன்னடா?’ என, அவர் ‘அது ஒரு “கமர்ஷியலுக்காக”டா’ என்று சமாதானப் படுத்துவார். ஆனால் தமிழ் சினிமாக்களின் வழக்கமான ‘கமர்ஷியலுக்காகச்’ சேர்க்கப்படும் “ஐட்டங்கள்” எதுவும் இல்லாத சுத்தமான படம் அது. அழகிய தீயேவைக் கொடுத்த ப்ரகாஷ்ராஜ்ஜுக்கு நன்றி. அதுமாதிரி எளிமையான ஆர்ப்பாட்டமில்லாத படங்கள் எளிய ஆனால் நல்ல கதைகளுடன் தமிழில் நிறைய வரவேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா! பார்க்கலாம். நிற்க.
Image and video hosting by TinyPic
எதற்கு அ.தீ. ‘கமர்ஷியல்’ விஷயத்தைக் குறிப்பிட்டேன் என்றால், சலங்கை ஒலி போன்ற அற்புதமான படத்தில் ‘மெளனமான நேரம்’ பாடலை ஒரு ‘கமர்ஷியலுக்காகச் சேர்த்திருக்கிறார்களோ என்று ஆரம்பத்தில் சந்தேகம் வந்தது. கமலுக்கும் ஜெயப்ரதாவுக்கும் இடையே துளிர்த்து மலரும் காதலை கே.விஸ்வநாத் முடிந்தவரை வரம்பு மீறாது இப்பாடலில் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். இந்தப் பாடல் ஒன்றும் மூன்றாம் பிறையின் பொன் மேனி உருகுதே அளவிற்கு இல்லையே!

Image and video hosting by TinyPic
காதல் என்பது இரைச்சல்கள் இல்லாத இனிய மென்மையான விஷயம். அதைக் கூடுமானவரை, இசைஞானியும், இயக்குநரும் மனதில் கொண்டு இப்பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

பாலுவும் ஜானகியும் அழகாகப் பாடியிருக்கிறார்கள். பாலுவின் பிரத்யேகச் சிரிப்பும் பாடலில் உண்டு.

மெளனமான நேரம்
மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம் – இது
மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்றே கேளுங்கள்

இது மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ?
புழங்கும் அலையைக் கடல் மூடிக்கொள்ளுமோ?
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே
பாதம் போகுமோ
பாதை தேடியே
பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ – இது

மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்றே கேளுங்கள்

இது மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்

சலங்கை ஒலி – நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்

October 19, 2006

Image and video hosting by TinyPic
சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.

என்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்குக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.

படத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள்! அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே ‘பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்’ என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து – வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது – உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு – நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே – கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் – நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும்? இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.
Image and video hosting by TinyPic
அதைத் தொடர்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் – அருமையான காட்சிகள்.

இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!

பிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே!

சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!

வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்
வந்தே பார்வதீப ரமேஷ்வரம்.

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே

பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்!
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்!

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன திரனனன திரதிரதிரதிரதிரதிரதிரதிர

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே