Archive for November, 2006

ஹே.. வள்ளிமயில் வள்ளிமயில்

November 30, 2006

Image and video hosting by TinyPic

கதாநாயகன், கதாநயகியை கிண்டல் செய்யும் பாலு பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவர் பாடும் உச்சரிப்புகள் அச்சக் பச்சக் என்று சூப்பராக இருக்கும். உதாரனத்துக்கு அடியே மனம் நில்லுனா பாடல், மற்றும் கடட வண்டி கட்ட வண்டி இப்படி பல பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சம்சார சங்கீதத்தில் டி.ராஜேந்தர் இசையில் இந்த பாடலை கேளூங்கள். டப்பாங்குத்து இசைக்கும், அற்புதமான மெலோடிக்கும் டி.ராஜேந்தர் இசை ஆபாரமாக இருக்கும்…

ஹே.. வள்ளிமயில் வள்ளிமயில் எங்கே வர்ற
வந்து வந்து நெஞ்சுகுள்ளே தொல்லைத்தர்ற
வள்ளிமயில் வள்ளிமயில் எங்கே வர்ற
வந்து வந்து நெஞ்சுகுள்ளே தொல்லைத்தர்ற

மின்னலப்போல் சிரிச்சே கண்களத்தான் பரிச்சே
ஓ மின்னலப்போல் சிரிச்சே கண்களத்தான் பரிச்சே
இரட்டை ஜடை பின்னலிட்ட மோகினியே
இள மனசை கொள்ளை கொண்ட காமினியே
இரட்டை ஜடை பின்னலிட்ட மோகினியே
இள மனசை கொள்ளை கொண்ட காமினியே

ஹே.. வள்ளிமயில் வள்ளிமயில் எங்கே வர்ற
வந்து வந்து நெஞ்சுகுள்ளே தொல்லை தர்றே
வள்ளிமயில் ஹை வள்ளிமயில் ஹை எங்கே வர்ற ஹை
வந்து வந்து ஹைநெஞ்சுகுள்ளே ஹை ஹை தொல்லைத்தர்ற
ஹை ஹை.. ஹை ஹை..

Advertisements

ஆடியிலே காத்தடிச்சா

November 28, 2006

Photobucket - Video and Image Hosting

Image and video hosting by TinyPic

தத்துவார்த்தமான வார்த்தைகள் கொண்ட பாடல்கள் அதிகம் உள்ளன. எல்லாமே மிகவும்
நமது வாழ்க்கைக்கு உதவுவதாகவே இருந்தன. நடிகர் அஜித் நடித்த வில்லன் படத்தில்
இரு வேடங்களில் மிகவும் அபாரமாக நடித்திருப்பார். அதுவும் இந்தப் படத்தில் நடித்துள்ள
மனநிலை சரியாக இல்லாத காட்சியில் நல்ல ரசிக்கும் படியாக தன் திறமையைக் காட்டியிருப்பார்.

இந்தப் பாடல் இந்தப் பட வெற்றிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்தது எனலாம்.
மழைச் சாரல் ஒலியுடன் துவங்கும் இது ஒரு சிறிய பாடல், இருந்தாலும் நல்ல ரசிக்கக்கூடிய வரிகளைக் கொண்ட இந்த குறும்பாடலின் மெட்டமைப்பு என் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. அதுவும் இந்தப் பாடலே ஆறு வரிகளைக் கொண்டது.

தம் கடமைகளில் முன்னேற முயற்சி செய்யும் உள்ளங்களூக்கு இந்த வரிகள் மிகவும்
தன்னம்பிக்கை தரும் விதமாக இருக்கும். பாலு தன் அழகான குரலில் எப்படி வழங்குகிறார் என்று கவனியுங்கள் நண்பர்களே….

ஆடியிலே காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறு குளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலு திசை திறந்துருக்கு நடக்கிற தெம்பு இருக்கு
முன்னேறு எட்டு வைய்யடா முத்து மகனே
மனசு மருகி மயங்காதே உலகம் பெரிசு மறவாதே

ஆடியிலே காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறு குளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலு திசை திறந்துருக்கு ந்டக்கிற தெம்பு இருக்கு
முன்னேறு எட்டு வைய்யடா முத்து மகனே.

நினைத்தாலே இனிக்கும்

November 25, 2006

Photobucket - Video and Image Hosting

இந்த பாடலைப்போல் லா லா லா என்று புதிய படப்பாடல் பொய் படத்தில் பாடல் ஒன்றை
பாலு அவர்கள் தன் தனிதிறமையை அற்புதமாக காட்டி பாடியிருப்பார். திரு.இளயராஜா, பாலு
ஜோடியில் இருவருக்கும் பயனங்கள் முடிவதில்லை படம் பெரிய வெற்றியை எப்படி தேடித்தந்ததோ?. அதேபோல் திரு.எம்.எஸ்.வி, பாலு இருவருக்கும் நினைத்தாலே இனிக்கும் மாபெரும் வெற்றியை தேடிதந்தது. பாலுவின் ஆலாபனை பாடல்கள் பலவற்றை கேட்டிருப்பீர்கள்.இந்த நினைத்தாலே இனிக்கும் இந்த ஆலாபனை பாடல் கேளுங்கள் பாடல் வரிகளே இல்லாமல் பாலு அவர்களால் அட்டகாசமாக பாட முடியும் என்று நிருபித்த பாடல் இது.

ஆமாம் இப்போதும் நினத்தாலே இனிக்கும் ரசிகர்களே..

ஆஹா ஆஹாஆ ஹா

ஹே ஹே ஹா ஹா
ஹா ஹா ஹா ஹ

ம்ஹ், ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்
ம்ஹ், ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்

லால லலா லலா ல்லா
லால லலா லலா ல்லா
நினைத்தாலே இனிக்கும்

னனா னனா னனா னனா
னனா னனா னனா னனா

லால லலா லலா ல்லா
லாலல்லா
ல லா ல லா ல லா
ல லா ல லா ல லா
நினைத்தாலே இனிக்கும்

ல லா ல லா ல லா
நினைத்தாலே இனிக்கும்

ஹாஆஆஆ ஹ்ஹாஆஆஆஆ
ஹாஆஆஆ ஹ்ஹாஆஆஆஆ
ஹாஆஆ ஹ்ஹாஆஆஆஆ ம்ஹ்ம்

னனனனா னனா னனா
னனனனா னனா னனா

நினைத்தாலே இனிக்கும்

னனனனா னனா னனா
னன னனா னனா னனா

நினைத்தாலே இனிக்கும்

தனன்னா தானன்னா
தனன்னா தானன்னா

ஹாஆஆ ஹ்ஹாஆஆஆஆ ம்ஹ்ம்

தனன்னா தானன்னா
தனன்னா தானன்னா
ஹாஆஆ ஹ்ஹாஆஆஆஆ ம்ஹ்ம்

An affair to remember

நினைத்தாலே இனிக்கும்

அன்னை மடியில் கண் திறந்தோம்

November 23, 2006

Image and video hosting by TinyPic

சோகப்பாடல்கள் என்றாலே எல்லோருக்கும் நினவுக்கு உடனே வருவது தாஸண்ணாதான் (திரு. ஜேசுதாஸ்) அவர் பாடிய பல சோகப்பாடல்கள் நம்மையும் சேர்த்து அழவைத்துவிடுவார். அதுவும் அம்மா வின் மீது பாடும் சோகப்பாடல்கள் என்றாலே ஒரு ஸ்பெஷாலிட்டி அவர் பாடலில் இருக்கும். உதாரனத்துக்கு ரஜினிகாங்திற்காக பாடிய அம்மா என்று ஆழைக்காத பாடல், இதுபோல் நிறையவே இருக்கிறது. அவரைப்போலவே நம்ம தலைவரும் சோகப்பாடல்களில் கலக்கோ கலக்கோ என்று கலக்குவார். தாசண்ணா சோகத்தில் அழவைப்பார் என்றால் தலைவர் தன் குரலால் சோகத்தில் அப்படியே நம் உள்ளங்களை முங்கவைத்துவிடுவார். உதாரணத்திற்க்கு பல பாடல்கள் உள்ளன இனி அடுத்த அடுத்த பதிவில் நாமும் சேர்ந்து அழலாம் எதற்கும் கண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஓ..ஓ..ஒ.. இன்னும் நான் எந்த பாடல் என்று சொல்லவே இல்லையா? அதாங்க….. 1988 ஆம் வருடம் வெளிவந்த திரு. ஹம்சலேகா இசையமைப்பில் அழகான பாடல் அன்னை மடியில் கண் திறந்த்தோம்.. பாடல். இந்த பாடலில் பாலு பல இடங்களில் அழ வைத்துவிடுவார் அப்பேர்பட்ட சோகக்குரல் எப்பேர்பட்ட கல்நெஞ்சக்காரர்களையும், கரையவைத்துவிடும்….

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

ராரரேஏஏஏ…ராரரேஏஏஏ…ராரரேஏஏஏ…
ராரரேஏஏஏ…ராரரேஏஏஏ…ராரரேஏஏஏ…

அன்னை என்பவள் அருகில் வந்துமே
பிள்ளை அறியவே இல்லையே..
பிள்ளை அன்னையை அறிந்தவேளையில்
அன்னை உலகில் இல்லையே..
ஓரக் கண்ணிலே உயிரை சுமந்தவள்..
உன்னைத் தேடியே உலகில் அலைந்தவள்..
சேரும் இடத்திலே சேர்ந்துவிட்டாள்..
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பது
வகுத்த நெறியடா மகனே..
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே.
அண்ணன் தந்தவள் அனலில் வேகிறாள்
அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்
சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்..
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

மான் கண்ட சொர்க்கங்கள்

November 22, 2006

Photobucket - Video and Image Hosting

Image and video hosting by TinyPic

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 47 நாட்கள் படத்தில் பாலு பாடிய இந்த பாடல்
மிகவும் பிரபலமானது. இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் பொறுமை வேண்டும். இந்த பாடலில் உள்ள தனிதன்மை என்னவென்றால் பாடல் முடிவதுபோல் தோன்றும் ஆணால் முடியாது திரும்பவும் துவக்கத்தில் இருந்து வருவது போல் இருக்கும். இந்த பாடலில் பாலுவின் குரலின் இனிமை வார்த்தையால் எழுதமுடியாது அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்தப்படத்தை சிறிய வயதில் பார்த்ததால் காட்சியமைப்புகள் என் கண்முன் வரமறுக்கின்றன… ஆகையால் அதிகமாக விளக்கமுடியவில்லை.. மன்னிக்கவும்..

முக்கியமாக எனக்கு பல நாட்கள் பெரும் சந்தேகமாக இருந்துவருகிறது அது என்னவென்றால் பாலு அவர்கள் இந்த பாடலின் பல்லவியில் வரும் முதல் வரி மான் கண்ட சொர்க்கங்களா? அல்லது நான் கண்ட சொர்க்கங்களா? என்று நம் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பார் நான் பல பேரிடம் கேட்டும் அப்போது தான் யோசிக்கிறார்கள் மறுபடியும் பாடலை கேட்க வேண்டும் மென்று. இதைப்பற்றி பல்வேறு குழுமத்தில் விவாதங்கள் நடந்துருக்கின்றன என்று தெரிகிறது. இருந்தாலும் தாங்களும் இந்த பதிவை நன்றாக கேட்டுவிட்டு சரியான வரி எதுவென்று சொல்லுங்களேன்…

பாலுவுடன் சேர்ந்து நீங்களும் காணுங்கள் சொர்க்கத்தை….

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே

என்றேன்று பக்கங்கள்
பெண் நெஞ்சில் பொங்கும் துக்கங்களே
என்றேன்று பக்கங்கள்
பெண் நெஞ்சில் பொங்கும் துக்கங்களே

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே

தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்
தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்

பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவள் மஞ்சம்

தண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பொன் மங்கை

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே

வேதங்கள் அறிகின்றாள் வேதனை தருகின்றாள்
நல்லவன் அல்லாத பாதையில் செல்கின்றாள்
வேதங்கள் அறிகின்றாள் வேதனை தருகின்றாள்
நல்லவன் அல்லாத பாதையில் செல்கின்றாள்

அப்பாவி பெண் உள்ளம் இப்பாவி பேர் வந்து தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஒர் வண்ணம்
மாறுது அவன் பாதை வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமள் நின்றாளே இப்போது

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
என்றேன்று பக்கங்கள்
பெண் நெஞ்சில் பொங்கும் துக்கங்களே

ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே..ஏ.ஏ.ஏ சேயென கண்டோமே..ஏ..ஏ.ஏ
ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே சேயென கண்டோமே

தேனின்று தாளாத நோய் கண்டாளே இப்போது

பாசத்தில் நீராடி பந்ததில் போராடி
வேஷத்தை தொடர்வாளாம் வேதனை பெருவாளாம்
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூ மாது

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
என்றேன்று பக்கங்கள்
பெண் நெஞ்சில் பொங்கும் துக்கங்களே

தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ
தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ

எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கு பனிமூட்டம் இப்போது

இந்திய தாய் நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை ஏங்குகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
என்றேன்று பக்கங்கள்
பெண் நெஞ்சில் பொங்கும் துக்கங்களே

அடடா இது தான் சுகமோ

November 21, 2006

Photobucket - Video and Image Hosting

துடிக்கும் கரங்கள் தமிழில் முதன் முதலாக பாலு அவர்கள் இசையமைத்த இந்த படம் ஸ்ரிதர் டைரக்சனில், திரு ரஜினிகாந்த் நடித்த படம். கோவையில் ஒரு படவிநியோகஸ்ரின் மகன் எனது நண்பர் மூலம் இந்த பாடல் பதிவு செய்த மறுநாளே காசெடில் எனக்கு கிடைத்தது. அன்றே பாடலை கேட்டு பாலுவிற்கு வாழ்த்துக்கடிதம் எழுதிஅனுப்பினேன். அதுமட்டுமல்லாமல் எனது நண்பர் திரு. கஸ்தூரிரங்கன் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடீயோவில் நடந்த இந்த பாடல் ஒலிப்பதிவில் கலந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த பாடலில் எனக்கு ஏதோ ஒரு வித்தியாசமான சுவை தெரிகிறது என்னவென்று, எப்படிசொல்லவது என்று தெரியவில்லை. ஒரு வேளை வித்தியாசமான மெட்டாகவும், அருமையான ஒலிப்பதிவாகவும் இருக்கலாம் இல்லை இனிமையான பாலுவின், ஜானகி குரல்களும் இருக்கலாம். குறிப்பாக பாலு அவர்கள் இசை முடிந்த வரை யார் சாயலும் இல்லாமல் இருக்கும். அதே போல் இந்தபடத்தில் அனைத்துப்பாடல்களும் மிகவும் வித்தியாசமாக இசையமைப்பட்டிருக்கும்.

பாலுவின் பாடல்கள் கேட்டாலே போதும் நண்பர்களே.. இப்படி நினக்கத்தோன்றுமே…

அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழா கோலமே

அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழா கோலமே

விழிகளும் விழிகளூம் தழுவிடும்பொழுதினில்
ஏனோ எனோ லீலைகள்
விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்

கண்ணங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்

கருங்கூந்தளின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

அடடா ஹோ இது தான் ஹோ சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழா கோலமே

ஒரு கொடி இடையினில் இருகுடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி
தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி

நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்

குழல் வீணையின் தந்திகள் என்ணை மீட்டும்

அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழா கோலமே

லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால

பட்டுச் சேலை தரேனுன்னு

November 17, 2006

Image and video hosting by TinyPic
சிப்பிக்குள் முத்துவில் இந்தப் பாடல் ஒரு கொசுறுக் காட்சி. தீபாவுக்குக் குத்துப் பாடல் இல்லாத குறையைத் தீர்க்க இந்தக் கொசுறுப் பாடலைச் சேர்த்திருக்கிறார்களோ என்று படம் பார்த்தபோது தோன்றியது – இந்தப் பாடல் காட்சியில் அவர் குளிக்க கமல் சோப்புப் போடுவார்! கே.விஸ்வநாத் ஸார், இது உங்களுடைய ‘கமர்ஷியல்’ சமரசமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பாடல் இல்லாதிருந்தாலும் படம் எதையும் இழந்திருக்கப் போவதில்லை என்று சொல்வேன்.

நாட்டுப்புற பாடல் போன்று ஒலிப்பதாலோ என்னவோ இந்தப் பாடலின் எளிமை மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டது.

பட்டுச் சேலை தரேனுன்னு ஆஆஆஆ
பட்டுச் சேலை தரேனுன்னு
படகேறிப் போனதென்ன மாமா
பட்டுச் சேலை தரேனுன்னு
படகேறிப் போனதென்ன மாமா
கட்டியுள்ள சேலை நிக்கவில்லை மேல
நிலாவந்து சிரிக்குதே வாசந்தான் மாமா
நிலாவந்து சிரிக்குதே வாசந்தான் மாமா
தன்னனன தானா தானானானானா தன்னனன

தாலி ஒண்ணு வேணுமின்னு
தண்ணிக்குள்ள தவமிருக்கேன் மாமா
தாலி ஒண்ணு வேணுமின்னு
தண்ணிக்குள்ள தவமிருக்கேன் மாமா
தாலி வந்து தந்தா இங்கே விருந்துண்டு மாமா
வெத்தலைய மாத்து வாசந்தான் மாமா
வெத்தலைய ஹோய் மாத்து வாசந்தான் மாமா
வெத்தலைய ஹாங்… அப்ப..

மனசு மயங்கும்

November 16, 2006

Image and video hosting by TinyPic
மென்மையான காதலையும் சத்தமாக டங்குடகரா என்று இரைச்சலாகச் சொல்வது இன்றைய தமிழ்ப்படங்களின் பிரதான பாணியாகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் யாருக்கும் காது கேட்காதது போலக் கத்திக் கத்திப் பேசுகிறார்கள். கத்திப் பாடுகிறார்கள். காதலனும் காதலியும் கூட மூன்றடி இடைவெளியிலிருந்தாலும் (அல்லது இடைவெளியில்லாது ஒட்டிக்கொண்டிருந்தாலும்) கைகளை நீட்டி விரலால் எச்சரித்துக் கத்திப் பேசி காதல் செய்கிறார்கள் – ‘காதல்’ என்பதற்குப் பதில் ‘கத்தல்’ என்று சொல்லலாம். கண்றாவி!

சிப்பிக்குள் முத்துவில் நாயகி இளம் விதவை. அவளுக்குப் புதிய கணவனாக மனதளவில் சிறுவனாக இருக்கும் இளைஞன். விதவையென்றால் பட்ட மரமாக நிற்கவேண்டும் என்பது நமது சமூக எதிர்பார்ப்பு – அல்லது நிர்ப்பந்தம் – அவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு, உணர்வுகள் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படாத நிதர்சனங்கள்.

அப்படிப்பட்ட தம்பதியருக்கிடையே தாம்பத்தியத்தைத் துவக்க ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும் சலவைத் தொழிலாளித் தம்பதிகள் – சலவைத் தொழிலாளிதானே என்று அலட்சியமாகக் காட்டாமல் அவர்களையும் ஒரு ஆத்மாவாக மதித்து காட்சிகளைச் சித்தரித்திருப்பார் கே.விஸ்வநாத்.

தீபாவை கவர்ச்சிக் கன்னியாகவே காட்டிய படங்கள் அதிகம். இந்தப் படத்தில் அவருக்கும் ஒரு நல்ல பாத்திரம். இஸ்திரி செய்துகொடுப்பதோடு நின்றுவிடாமல் வாடிக்கையாள குடும்பத்தின் ஒரு அங்கமாக அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவர்கள் கஷ்டப்படும்போது உதவியாக இருந்து என்று நிறைய காட்சிகளில் வருவார் தீபா. தயங்கித் தயங்கித் தொடங்கும் பாடல் பிறகுத் தென்றலாகச் செல்லும். ஆபாசமாகிவிடும் சாத்தியம் அதிகமுள்ள சம்பவங்களை நுணுக்கமாக, நாகரீகமாக கே.வி. கையாண்டிருப்பார் நளினமான காட்சியமைப்புகள் மூலம். கமலுக்கும் சவாலான காட்சிகள். ராதிகாவும் அருமையாகச் செய்திருப்பார்.

பாலுவும் ஜானகியும் பாடியிருக்கும் இந்தப் பாடல் கணவர்-மனைவிக்கான அருமையானதொரு காதல் பாடல். சற்றே அந்தரங்கமான வரிகளுடன் – திரையரங்கத்துக்குப் பொடிப்பசங்களுடன் வந்திருந்தால் நெளிந்து கொண்டு ரசிக்க வேண்டிய பாடல். சரணங்களுக்கு இடையே ஒலிக்கும் ஆவேசமான வயலின்களிசையும் இறுதியில் ஆசுவாசப்படுத்தும் அமைதியான புல்லாங்குழலின் ஒலியும் – ராஜா!

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில்
மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு

ம்ம்ம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை
மடிகள் ரெண்டும் தலையணை

நீரில் நெருப்பின் வேதனை
அணைத்துக்கொண்டேன் தலைவனை
அணைத்துக்கொண்டேன் தலைவனை

இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ

புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ

மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கலையில் சிப்பிக்குள் முத்து தேடு

காதல் எங்கே பலவகை
உனக்கு மட்டும் புதுவகை
உனக்கு மட்டும் புதுவகை
காமன் கலைகளும் எத்தனை
பழக வேண்டும் அத்தனை
பழக வேண்டும்.

காதல் யாகங்களோ காம வேதங்களோ
காதல் யாகங்களோ காம வேதங்களோ

உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில்
மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு

கண்ணோடு கண்ணான என் கண்ணா

November 15, 2006

Image and video hosting by TinyPic
கோவிலில் சேட்டை செய்யும் சிறுவனை ராதிகா அடித்துவிட ‘திடீர்’ அப்பா கமல் பையனைச் சாந்தப்படுத்துவதற்காகப் பாடுவதாக வரும் இந்தப் பாட்டு இன்னொரு அற்புதமான பாட்டு. பாலுவும் ஜானகியும் அழகாகப் பாடியிருப்பார்கள்.

சரணங்களின் வரிகள் எளிமையாக இருந்தாலும் மிகவும் கனமான செய்திகளைத் தாங்கி நிற்கும் வரிகள் (கவிஞர் வாலி). அப்போதைய அவர்களின் நிலையை

//ஊர விட்டுப் போனாலும்
போக ஒரு ஊரி்ல்லை ஹா
சொந்தம் பந்தம் பாத்தாலும்
சோறு தர ஆளில்லை
//

என்ற வரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

விதவையாக இருந்து விபத்துபோல திடீர் திருமணம் நடைபெற்ற பெண்ணின் நிலையை

//சின்னப் பையன் நீயல்ல
அள்ளி வைத்துத் தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல
புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது
அடடா அன்று
இப்போது நான் கொண்டது
பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது
//

என்ற வரிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். படத்தில் ராதிகாவின் பாத்திரத்தை நன்குணர்ந்து அமைதியாக ஆனால் அற்புதமாக நடித்திருக்கிறார். கமல் செய்திருப்பது எளிதாகத் தோன்றினாலும் எளிதாக நடிக்கக்கூடிய பாத்திரமல்ல அது.

அற்புதமான உடலசைவுகளுடனும் முக பாவங்களுடனும் வசன வெளிப்பாடுகளுடனும் பாத்திரமாவே தனக்குத்தானே ஒவ்வொரு படத்திற்கும் சவால்விட்டுக் கொள்கிறார் – அந்த நிகரில்லாத கலைஞன்.

இசைஞானியின் இசையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பின்னணி இசையும் பாடல்களின் மெட்டுகளும் காலம் கடந்து அவரின் பெயரைச் சொல்லும். பாலு? ஜானகி? இவர்களின் தாலாட்டும் குரல்களைக் கேட்பதற்காகவே குழந்தைகள் வேண்டுமென்றே அழும் போல!

ச்ச்ச்ச்ச்ச் ச்ச்ச்ச்ச்ச் ச்ச்ச்ச்ச்ச்
கண்ணோடு கண்ணான என் கண்ணா
ச்ச்ச்ச்ச்ச்
உன்னை எவரடித்தார் கண்ணா
ச்ச்ச்ச்ச்ச்

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

அன்னை உன்னை அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான்தானே
உன் அப்பனும் நான்தானே

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை யாரடித்தார் அப்பா

நல்ல தாயின் கண்ணிரண்டில்
கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும்
நடிப்பதில் லாபமென்ன
வெண்ணையைக் கண்ணன்போல்
திருடிவிட்டாயோ
வீதியில் மண்ணெல்லாம்
தின்றுவிட்டாயோ
அம்மா.. மண்ணைத் திங்க நான் சிறுவனோ
மாயவனோ… கிறுக்கனோ.. நீயே பாரு ஆ…

வெறுப்பது அம்மாதான்..
வெறுப்பது அம்மாதான்
விட்டுவிட்டுப் போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை மிதிச்சா
சேதங்கள் வாராதே ஹா..ஹா..
அழுகை வராதோ
எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும்
போக ஒரு ஊரி்ல்லை ஹா
சொந்தம் பந்தம் பாத்தாலும்
சோறு தர ஆளில்லை

பக்கத்துல அவ இருந்தா
பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும்
கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லாப் போடு இன்னும் போடு போடு!

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

சின்னப் பையன் நீயல்ல
அள்ளி வைத்துத் தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல
புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது
அடடா அன்று
இப்போது நான் கொண்டது
பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது
ஆ..
என்னம்மா மனசுக்குள் பாரமா?

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

அன்னை என்னை அடித்தாளே சாமி ஸ்ஆஹா
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமீ

அன்னையும் நான்தானே
அய்யோ நீ ஆம்பளை!
உன் அப்பனும் நான்தானே

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

தர்மம் சரணம் கச்சாமி

November 15, 2006

Image and video hosting by TinyPic
உன்னால் முடியும் தம்பியின் “அக்கம் பக்கம் பாரடா” ஒரு வகை என்றால் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் “தர்மம் சரணம் கச்சாமி” இன்னொரு வகை.

பிச்சையெடுத்தாவது காப்பாற்று என்பதை வேதவாக்காகக் கொண்டு சிறு பையனை பலகை வண்டியில் அமர்த்திக் கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு உண்டியல் குலுக்கிக்கொண்டே கமல் பாடுவதாக வரும் இந்தப் பாட்டு பல செய்திகளை நமக்குச் சொல்கிறது. நிதானமான குரலில் பாலு அற்புதமாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். குழந்தை குரலில் பாடியிருப்பது ஜானகி என்று நினைக்கிறேன். கொட்டாங்கச்சி வயலின் இசையை மறக்கவே முடியாது.

சிப்பிக்குள் முத்து படத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. அடுத்த பதிவுகளில் அவை வரும். இப்போது பாலுவின் தர்மம் சரணம் கச்சாமியைக் கேட்போம்.

தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

போகும்போது….ஆஆஆஆ
போகும்போது அள்ளிக்கொண்டு போவது யாரு
கல்லறை மெய்யப்பா
சில்லரை பொய்யப்பா
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

பசி எடுக்குது பாத்துப் போடுங்க
சில்லரை வேணுமா என்னக் கேளுங்க
பசி எடுக்குது பாத்துப் போடுங்க
சில்லரை வேணுமா என்னக் கேளுங்க
தவிக்கிற போது தண்ணீரில்லை
அழுதும் பார்த்தோம் கண்ணீரில்லை
தண்ணீரில்லை கண்ணீரில்லை
தண்ணீரில்லை கண்ணீரில்லை

தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

பசி எடுப்பதால் காதடைக்குதே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
பசி எடுப்பதால் காதடைக்குதே
கர்ணன் வீட்டிலும் கதவடைக்குதே
பெற்றவனுக்கோ ஞானமில்லை
படைத்தவனெங்கே காணவில்லை
சொந்தமில்லை பந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை

தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி