Archive for December, 2006

என்னோடு பாடுங்கள்

December 31, 2006

Image and video hosting by TinyPic

ஜனவரி மாதம் இந்த உலகத்தில் பிறந்த, எல்லா உயிர்களூக்கும், இனிமேல் பிறக்கப்போகும் உயிர்களூக்கும் மற்றும் 2007 ஜனவரி ஒன்றாம் தேதி அன்று பிறக்கபோகும் ஆங்கில புத்தாண்டிற்க்கும் சேர்த்து எஸ்.பி.பாலு ரசிகர்கள் சார்பாக ஒரு வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். ஆமாம் நண்பர்களே எத்தனை தடவை நண்பர்களுக்கே ஒவ்வொரு வருடமும் பிற்ந்த நாள் சொல்வது. வரும் ஆண்டு என் இனிய (இணைய) நண்பர்கள் அனவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும் என அன்புடன் புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதில் நானும் மகிழ்கிறேன்.

Image and video hosting by TinyPic

நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் நடிப்பு சில நேரங்களில் நம் மனதிற்கு ஒரு நிறைவை ஏற்படுத்தும் உதாரணத்துக்கு முதல் மரியாதை போன்ற பல படங்களில் அவருடைய க்ளோசப் காட்சிகள் குப்பென்று ஒரு திருப்திகரமாக நம் மனதிற்கு சந்தோசதையளிக்கும். அந்த வகையில் திரு.யோகாநந்தன் டைரக்சனில் 2000 வருடம் வெளிவந்த மேஸ்ட்ரோ இளையராஜா இசையமப்பில் நான் வாழவைப்பேன் என்ற படத்தில் திரு. ரஜினிகாந்துடன் சேர்ந்து வரும் இந்த பாடல் காட்சியில் சிவாஜி அவர்களூக்கு அதிகமாக க்ளோசப் காட்சிகள் இருக்கும். பாலுவின் குரலுக்கு மிக மிக அற்புதமாக வாயசைத்து
நடித்துருப்பார். //கண் பறிக்கும் வைரக்கட்டி.. கல்லிழைத்த தங்கப்பெட்டி..கைகொட்டி தாளம் தட்டி ஆட// என்று இந்த வரிகளில் பாலுவும் ஒலிப்பதிவு கண்ணாடி கூண்டில் தன் குரலால் நடித்திருப்பார். பாலுவுடன் அவருடைய ரசிகர்களாகிய நாமும் புது வருடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வோம்.

Image and video hosting by TinyPic

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள் தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

பூம்பிறைகள் வின்னில் இரண்டு
புகழும் ஒன்று கூடும் உண்டு
தேயாமல் எங்கும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னாள்
வார்த்தை ஒன்று மெல்லச்சொன்னாள்
நோய் பறந்து போகும் கண்ணா
நானம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day
Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day

Advertisements

T.R. & Bala – # 13 : மாலை எனை வாட்டுது

December 28, 2006

Image and video hosting by TinyPic
பூக்களைப் பறிக்காதீர்கள் படம் வெற்றிகரமாக ஓடியது. முக்கிய காரணம் இனிமையான பாடல்கள். சுரேஷ்-ம் நதியாவும் நடித்தது. நதியா நதியா என்று ஜுரத்தோடு தமிழ்கூறும் நல்லுலகு பிதற்றிய காலகட்டம். பாலுவும் ஜானகியும் இந்தப் பாடலை அட்டகாசமாகப் பாடியிருக்கிறார்கள்.

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா மடியைத்
தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
எனையே *ஏய்த்திடவா* (சரியாகத் தெரியவில்லை)

மாலை நமை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
மாலை நமை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

பிறையே பிறையே மூன்றாம் பிறையே

December 28, 2006

Image and video hosting by TinyPic

வானவில் படத்தில் வரும் இந்த சிறிய சோகப்பாடல் தினமும் அலை பாயும் நம் மனதில்
அமைதியை ஏற்படுத்தும். இந்த பாடலிலும் வரிகள் அருமையாக எழுதப்பட்டிருக்கும். அதே போல் இசையமைப்பில் துவக்கத்திலும், முடிவிலும் அமைதியான இசை எல்லோரையும் கவரும். இந்த பாடலையும் பாலு மிகவும் அனுபவித்து பாடியிருப்பார்.

பிறையே பிறையே மூன்றாம் பிறையே
வரும் நாளெல்லாம் வளர் பிறையே

பௌர்னமி நிலவு உனக்குள் இருக்கு
பகலாக இருப்பாய் வளர்பிறையே

வெளிச்சம் மறையக்கூடும்
மதிப்பதில்லை விடிந்து தோன்றும்

விதைகள் உதைக்கும் போதும்
இழப்பது இல்லை முளைக்கும் மீண்டும்

தூங்கு பொண்மானே நாளை உன் நாளே

ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி

December 27, 2006

Image and video hosting by TinyPic

மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் ரயிலின் சீரான ஒட்டத்தின் இசையோட வரும் இந்த பாடலின் துவக்கத்தில் உற்சாகமாக ஆரம்பிக்கும் இந்தப்பாடல் மீண்டும், “மீண்டும் ஒரு காதல் கதை” என்ற படத்தில் வரும் பாடல் இந்த பாடல் நம் மனதை காத்தாடி போல் உயர தூக்கிச்செல்லும்.. இந்த பாடலின் சரணத்திங்களில் பாலு தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார். வார்த்தைகளைத் புரிந்து கொள்ள நான் மிகவும் தடுமாறிப்போனேன். சில சமயங்களில் உச்சஸ்தாயியில் பாடி நம்மையெல்லாம்
மேம்போக்காக கேட்க்க விடாமல் மிகவும் கவனமாக கேட்க வைத்துவிடுவார். பெரும்பாலும் பாலு பாடல்கள் கேட்க நான் என்றுமே கஷ்டப்பட்டதில்லை ஏனென்றால் அவரின் உச்சரிப்பு அவ்வளவு தெள்ளத்தெளிவாக தெளிந்த நீரோடை போல இருக்கும். இந்த மாதிரி பாடல்களில் நாம் கேட்பதற்கே இவ்வளவு சிரமப்படுகிறோம் என்றால் பாடுவதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்று தெரிகிறது. எனது நெருங்கிய நண்பர் கொல்கட்டா பாலாவுக்காக இந்த பாடலை பதிகிறேன்..

ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி
இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான் ஹேன்
இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான்
நான் போக வழிபன்னறேன் ஹே ஹே
நூலேணி உண்டாக்குறேன்
ஆத்தாடி காத்தாடி
அடி ஆத்தாடி காத்தாடி

வேணாம் படு வேகம் போறே இடம் வேணும்
வேணாம் படு வேகம் போறே இடம் தேடும்

ஹெ தெக்கப்பக்க காற்றோட
தொங்கிட்டு கூத்தாட
போகும் இந்த காத்தாடி
அட சாயங்காலம் நேரம் தான்
ஏரோப்ளேன் வேகம் தான்
போகுது பார் காத்தாடி

பப்பரபப்பா… ரபப்பரபப்பா…
ரபப்பரபப்பா… ரபப்பரபப்பா…

நான் போக வழிபன்னறேன் ஹே ஹே
நூலேணி உண்டாக்குறேன்
ஆத்தாடி காத்தாடி
அடி ஆத்தாடி காத்தாடி
ஆத்தாடி காத்தாடி யேய்

வேகம் விளையாடு பாலம் உடையாது
தரத்ததரத்ததராஆஆ
பயமாய் கிடையாது வாணம் உடையாது
வேகம் விளையாடு பாலம் உடையாது
வாணம் பூமி ஒன்னாகக்கும்
பாதை ஒன்னு உண்டாக்கும்
வேல ஒன்னு பன்னப்போறேன்

வாணத்திலே நானேறி மேகத்திலே தேரேறி
ஊர்கோலம் போகப்போறேன்

பப்பரபப்பா… ரபப்பரபப்பா…
ரபப்பரபப்பா… ரபப்பரபப்பா…

நான் போக வழிபன்னறேன் ஹே ஹே
நூலேணி உண்டாக்குறேன் ரபபப்ப்பரா
ஆத்தாடி காத்தாடி
அடி ஆத்தாடி காத்தாடி

இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான்
இந்திரலோகம் தான் ஹா சந்திரலோகம் தான்
நான் போக வழிபன்னறேன் ஹா ஹா
நூலேணி உண்டாக்குறேன்
ஆத்தாடி காத்தாடி அடி
ஆத்தாடி காத்தாடி
ஆத்தாடி காத்தாடி
ரபப்பரபப்பா… ரபப்பரபப்பா…

தாமிரபரணி ஆறு

December 26, 2006

Image and video hosting by TinyPic

நெல்லை மாவட்டத்தில் இருப்பவர்கள் தாமிரபரணி ஆற்றின் அழகை வெகுவாக ரசித்துருப்பார்கள். நான் ஒரு தடவை சுற்றுலா சென்றிருக்கிறேன். தாமிரபரணி என்ற அழகான பெயர் கொண்ட புதுப்படம் ஒன்று வந்திருக்கிறது. படம் எப்படி இருக்குமோ தெரியாது. நான் அந்த படத்தை பற்றி எதுவும் சொல்ல வரவில்லை. தாமிரபரணி என்ற பெயரில் வரும் பாடல் இது. என்னுடைய முன் பதிவில் கூவுரகுயிலு சேவலப்பார்த்து என்ற அருமையான மெலோடி பாடலை கேட்டீர்கள் இந்த பாடலும் திரு. கஸ்தூரி ராஜா டைரக்சனில் பாடலும் அவர் எழுதியதா என்று எனக்கு சந்தேகம்? வெளிவந்த படம் சோலையம்மா, நடிகை சுகன்யா சோலயம்மாவாக நடித்த படம் என்று நினக்கிறேன் சரியாக நினவில்லை. திரு. தேவாவின் அற்புதமான இசையமைப்பில் பாலூவும் மற்றும் எஸ்.ஜானகி குரலில் மற்றுமொரு அமைதியான பாடல். சோலையம்மா படத்தை நான் பார்க்கவில்லையாதலால் அதிகம் விவரிக்க முடியவில்லை. அருமையான பாடல்கள் கொண்ட படம் என்று மட்டும் தெரியும்.

எஸ்.பி.பாலு:
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.ஜானகி: வாசம் வீசும் பூவு வாடை காத்து நோவு

எஸ்.பி.பாலு: வாசம் வீசும் பூவு வாடை காத்து நோவு

எஸ்.ஜானகி:
ஆஹாஆஆஆஆ
மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டுப்போக வந்த தாமிரபரணி ஆறு

எஸ்.பி.பாலு:ம்ம்ம்ம்

எஸ்.ஜானகி:இது தரையில் நடக்கும் தேரு
ம்ம்ம்ம்

எஸ்.பி.பாலு:தாமிரபரணி ஆறு

எஸ்.ஜானகி:ஹோஓஒ
இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.ஜானகி:
கண்ணும் கண்ணும் பேசறப்போ
காதல் வேகம் காத்தடிக்கும்

எஸ்.பி.பாலு:
நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ
காமரசம் ஊற்றெடுக்கும்

எஸ்.ஜானகி:
கண்ணும் கண்ணும் பேசறப்போ
காதல் வேகம் காத்தடிக்கும்

எஸ்.பி.பாலு:
நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ
காமரசம் ஊற்றெடுக்கும்

எஸ்.ஜானகி:
கட்டு குலையாத உன் மேனி புன்னாகி
சொட்டச்சொட்ட நீராடும்

எஸ்.பி.பாலு:
விட்டு பிரியாத ஒன்றோடு ஒன்றாகி
கட்டுப்பட்டு போராடும்

எஸ்.ஜானகி:
தினவாடும் இதுதானே
புதுவாசம் தான் சுகமது வர

எஸ்.பி.பாலு:
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.ஜானகி:
ஹாஆஆஆஆ
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.பி.பாலு:
கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்

எஸ்.ஜானகி:
சந்தம் ஒன்னு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

எஸ்.பி.பாலு:
கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்

எஸ்.ஜானகி:
சந்தம் ஒன்னு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

எஸ்.பி.பாலு:
கள்ள விழி பொன்னே
ஒரு மின்னல் உண்டாகி
மெல்ல மெல்ல சூடேறும்

எஸ்.ஜானகி:
துள்ளி வரும் கால்கள் நின்றாடும் தள்ளாடும்
பின்னி பின்னி தானாடும்

எஸ்.பி.பாலு:
சுகபோகம் விளையாடி
இசைபாடும் நாள் இணைந்து வரும்

எஸ்.ஜானகி:
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.பி.பாலு:
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.ஜானகி:வாசம் வீசும் பூவு

எஸ்.பி.பாலு: வாடை காத்து நோவு

எஸ்.ஜானகி:வாசம் வீசும் பூவு

எஸ்.பி.பாலு: வாடை காத்து நோவு

எஸ்.ஜானகி:
ஆஹாஆஆஆஆ
மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டுபோக வந்த
தாமிரபரணி ஆறு

எஸ்.பி.பாலு: ம்ம்ம்ம்

எஸ்.ஜானகி:இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.பி.பாலு:ஆஹாஆஆஆஆ
தாமிரபரணி ஆறு

எஸ்.ஜானகி:ஆஹாஆஆஆஆ

எஸ்.பி.பாலு:இது தரையில் நடக்கும் தேரு

எஸ்.ஜானகி:ஆஹாஆஆஆஆ

எஸ்.பி.பாலு: தாமிரபரணி ஆறு

எஸ்.ஜானகி:இது தரையில் நடக்கும் தேரு

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

December 26, 2006

Image and video hosting by TinyPic

போட்டோ: நன்றி ரஜினி ரசிகர் குழு

படங்களின் பெயர் வைப்பதிலேயே யோசிக்கவைத்தவர் இயக்குனர் திரு . கே. பாலசந்தர் அவர்கள். அவரின் படங்களுக்கு வித்தியாசமான பெயர் வைப்பதில் கில்லாடி. அவர் படத்தின் பெயரிலேயே அதிகபட்ச கதையையும் அடக்கிவிடுவார். அந்த வகையில் வந்த ஒரு படம் தப்புத்தாளங்கள் இதே போல் தற்போது திரு. பார்த்திபன் வித்தியாசமான பெயர்களை தன் படங்களூக்கு வைப்பார். வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கே போய் விடும் மனிதனின் கதைதான் இது பாடலின் வரிகளும் அப்பட்டமாக அதைத்தான் எடுத்துச்சொல்கிறது. இந்த மாதிரியான வாழ்க்கை விரக்தியின் பாடல்களை ரஜினி சாருக்கு பாலு பல பாடல்கள் பாடியுள்ளார். இந்த மாதிரி பாடல்களுக்கு ரஜினி நடிப்பதென்றாலும், ரஜினிக்காக பாலு
பாடுவெதென்றாலும் இருவருக்கும் அல்வா சாப்பிடுவது போல.. இருவரும் அருமையாக அனுபவித்து செய்திருக்கிறார்கள்… அப்படியே பாட்ட கேட்டு நீங்களும் வாழ்க்கையை வெறுத்துடாதீங்க…

அட என்னடா பொல்லாத வாழ்க்கை
ஹ என்னடா பொல்லத வாழ்க்கை
யாரை நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா
அட போகும் இடம் ஒன்னு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போய் அலட்ட்டிக்கலாமா

அட என்னடா பொல்லாத வாழ்க்கை
என்னடா பொல்லத வாழ்க்கை

காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தான்ப்பா
நம்ப நிலை தேவலையப்பா

முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடுஹுஹு
இல்லை ஓடுற வரைக்கும் ஓஓஓடு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹ
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை

படிக்க ஆசை வச்சேன் முடியல ஹாஹ்ன்
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
படிக்க ஆசை வச்சேன் முடியல ஹாஹ்ன்
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிக்கிட்டா போய் கேளு
???????????
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போய் அலட்ட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க்கை
ஹட என்னடா பொல்லாத வாழ்க்கை

கூவுற குயிலு சேவலப்பார்த்து

December 24, 2006

Image and video hosting by TinyPic

திரு. தேவா இசையமைப்பில் பாலு, ஜானகி மேடம் பாடிய பாடல் சோலையம்மா படம் திரு.கஸ்தூரிராஜா டைரக்சனில் வெளிவந்தது. இந்த படத்தில் எல்லாப்பாடல்களூம் அழகான பாடல்கள். துவக்கத்தில் பாலு வசனத்துடன் பேசி குழல் ஓசையுடன் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து பாடும் இந்த பாடல் மனசுக்கு இதமாக இருக்கும்.
//ஊர் உறங்கும் நடு சாமத்துல கண் மூடி மூடி தாளம் போடுது மாமா// எஸ்.ஜானகியின் குரலில் இந்த வரிகள் இன்னும் அபாரமாக இருக்கும்.

எஸ்.ஜானகி:
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு

எஸ்.பி.பாலு: அவ்வளவு தானா? இப்ப பாரு

எஸ்.ஜானகி: சரிதான்

எஸ்.பி.பாலு: ப்ச் மேலபாடு

எஸ்.ஜானகி: நீயும் பதில் சொல்லக்கேட்டு

எஸ்.பி.பாலு: ச்ச்ச்ச் ஒஹோ ஹோ

எஸ்.ஜானகி: ம் பரவயில்லையே

எஸ்.பி.பாலு: ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி

எஸ்.ஜானகி: மாமா மயங்கிடலாமா

கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா

கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா

ஏன் மனசு ஒரு ராகத்துலே
தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது
மா நீ விலகும் அந்த நேரத்துல
உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது

எஸ்.பி.பாலு:
அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்
கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்

எஸ்.ஜானகி:
நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு

எஸ்.ஜானகி: மாமா
எஸ்.பி.பாலு: ம்ம்ம்
எஸ்.ஜானகி: மயங்கிடலாமா
எஸ்.பி.பாலு: ம்ஹ்ஹிம்
எஸ்.ஜானகி: அட மாமா மயங்கிடலாமா

ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நானும் மயங்கினேன் கேட்டு
மானே

எஸ்.ஜானகி:ம்ம்

மனசுக்குள் தேனே

எஸ்.ஜானகி:ம்ம்ஹிஹ்ம்

மானே மனசுக்குள் தேனே

நான் அருகே வரும் நேரத்துல
மண்மேல தானே கோலம் போடுது மானே

எஸ்.ஜானகி:
ஊர் உறங்கும் நடு சாமத்துல
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா

வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா

எஸ்.ஜானகி:
குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா

நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து
மானே

எஸ்.ஜானகி: ம்ம்

மயங்குறேன் நானே

எஸ்.ஜானகி: ம்ஹா

எம்மானே மயங்குறேன் நானே

எஸ்.ஜானகி:
ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா
ம்ஹ்ஹ்ம்

எஸ்.ஜானகி: மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்

December 23, 2006

Image and video hosting by TinyPic
பொல்லாதவன் படத்தில் இந்தப் பாடலை பாலுவும் வாணிஜெயராமும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை மெல்லிசை மன்னர்.

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா

ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா

நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே

ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்குச் சுகமாக வருகின்றதோ

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்குச் சுகமாக வருகின்றதோ

எந்நாளும் உன்மேனி பொன்னல்லவா
எழுதாத கதைசொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன்மேனி பொன்னல்லவா
எழுதாத கதைசொல்லும் கண்ணல்லவா

ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா

ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா

ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

ஹே நவிலே

December 22, 2006

Image and video hosting by TinyPic
ரவிச்சந்திரன், ரஜினி, ஜுஹி சாவ்லா நடித்த (டப்பா) படமொன்றைப் பார்த்திருக்கிறேன். ரவியின் கன்னடப் படங்களெதையும் பார்த்ததில்லை – பார்க்கும்படியான கன்னடப்படங்கள் எதுவென்று தெரியாததாலும் எதையம் பார்க்கவில்லை. ஆனாலும் பெங்களூரில் இருந்த சமயத்தில் (1998) அவ்வப்போது தொலைக்காட்சியில் கன்னட சானல்களைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதுண்டு. அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட காதில் கேட்ட இந்த நவிலே என்ற பாடல் மனதில் ஒட்டிக்கொண்டது. பாலுவின் அந்தப் பாவமும், மெட்டும் மனதை என்னவோ செய்தன.

Kalavida என்ற இந்தப் படத்திற்கு (1997) ஹம்சலேகா இசையமைத்திருக்கிறார். பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


T.R. & Bala – #12 : பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

December 22, 2006

Image and video hosting by TinyPic
என் தங்கை கல்யாணியில் இன்னொரு தங்கச்சிப் பாடல் – ஆனால் பாலுவின் குரலுக்காகக் கேட்கலாம். சரணத்திற்கு முன்பு வரும் வயலின் இசையும் புல்லாங்குழல் இசையும் அருமை.

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே
தங்கச்சி நீ கேக்கவில்லையே

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆஆஆஆ