Archive for January, 2007

எங்க போய் சொல்லுவேன்

January 29, 2007

Image and video hosting by TinyPic
மனிதன் தன் வாழ்க்கையில் அன்றாட வேலையில் அலுவலகத்திலோ, வீட்டிலோ பல அனுபவங்கள் அப்போது தன் மனதில் நிகழும் சோகங்களை பல நேரம் இப்படி நினப்பதுண்டு. அவை தான் இந்தபாடல் பல்லவியான “எங்கே போய் சொல்லுவேன் என்னன்னு சொலுவேன்” என்ற பாடலைப்பற்றி தான் இந்த பதிவு. பார்த்திபன் தனி முத்திரையை பதித்து படங்களில்
மிகவும் அழகான தலைப்பை வைப்பதிலும் வித்தியாசமாக விழா எடுப்பதிலும் கில்லாடி டைரக்டர் பார்த்திபன். பாக்யராஜிடம் துணை டைக்ரடராக பணிபுரிந்தவர். ஆணால் அவர் சாயல் சிறிதும் இல்லாமல் படம் எடுப்பவர். அந்த வகையில் 2000 ஆம் வருடம் அவர் டைரக்சனில் வெளிவந்த குடைக்குள் மழை படம் அவரே மதுமிதாவுடன் சேர்ந்து நடித்தவர் படம் வியாபாரக ரீதியாக பெரும் வெற்றியடையவில்லை என்று நினக்கிறேன்.
ஆணால் அந்த படம் பெரிதும் பேசப்பட்டது என்பது நிச்சயம். மன்னில் இந்த காதல் இன்றி என்ற பாடலை மன்னில் இந்த காதலின்றி என்ற் மூச்சுவிடாமல் பாடிய பாலு இந்த பாடலில் மூச்சு விட்டாலும் தொடர்ந்து வரிகளை பாடி நம்மை அசத்திய்ருக்கிறார். மேஸ்ட்ரோவின் தலைவாரிசு திரு. கார்த்திக்ராஜா ஒரு ஆற்புதமான மெட்டில்
Image and video hosting by TinyPic
இந்த பாடல வரிகள் பாமரருக்கும் புரியும் படி பாடலாசிரியர் திரு. நா.முத்துகுமார் எழுதியிருப்பார் அவருக்கு என் பாராட்டுக்கள். பாடலை நன்றாக உன்னிப்பாக கவனியுங்கள் உங்களூக்கே புரியும்.
Image and video hosting by TinyPic
இந்த பாடலில் இசையமைப்பில் கார்த்திக் அதிக சிரமம் எடுத்து கொண்டதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் மெட்டு செமி பாஸ்ட் பாடலாகவும் பாடல் துவக்கத்தில் இருந்து முடியும் வரை ஒரே தாள கதியில் நைலான் நூலபோல் நேராக பிடித்தது போல் இருக்கும். அந்த நேர்க்கோட்டில் கூட பாலு தன் குலாப்ஜாமூன் குரலால் சோகத்தை ஜீராவாக
பிழிந்துருப்பார். //பார்த்தா சிரிச்சா காத்தா மறஞ்சா பஞ்சர் ஆனேன்னடா ஆஆஆஆ..ஆஆஆஆ// சுழுக்கி சுழுக்கி அவ உதடு இரண்டும்.. சுருக்கு கயிறு மாட்டியதே எங்க போய் சொல்லுவேன் என்னன்னு சொல்லுவேன்// அந்த சோகத்தை இந்த பாடலின் பல வரிகளீல் கேட்க்கலாம்.. நிச்சயம் உங்களுக்கும் மனதிற்கு ஒரு திருப்தியான பாடலாக இருக்கும்.

dscf0067
covairavee

எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்

தன்னன தனனன ஹேய்
தன்னன னனன

எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
சாவியில பூட்டா தொங்கவிட்டு போனா
பூட்டியிருந்த வீட்டில் ஒட்டடையா ஆனேன்
ஜன்னலத்தான் தொறந்தேன் நிலாவா வந்தா
ஆஆஆஆ ஹேய்ஏஏஏஏஏஏஏ..
நிலான்னு நெனச்சேன் பலூனா பறந்தா
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
ஐஸ் வ்ச்சு போனா தண்ணி வெந்து போச்சு
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
பார்த்தா சிரிச்சா காத்தா மறஞ்சா
பஞ்சர் ஆனேன்னடா ஆஆஆஆ..ஆஆஆஆ
நெஞ்சாலே துப்பாக்கி சொறிஞ்சாலே
இல்லாமே பூப்போலே சுட்டாலே
நிஜத்தை என்னன்னு சொல்லுவேன்
என்னன்னு.. சொல்லுவேன்
என்னன்னு..என்னன்னு.. .என்னன்னு..
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
சாவியில பூட்டா தொங்கவிட்டு போனா
பூட்டியிருந்த வீட்டில் ஒட்டடையா ஆனேன்
என்னன்னு.. சொல்லுவேன்
என்னன்னு..என்னன்னு.. .என்னன்னு.. என்னன்னு..

காதல் கூட ஒரு வெங்காயம் ம்ம்
காதல் கூட ஒரு வெங்காயம்
உரிக்க உரிக்க ஒன்னுமில்ல
காதல் என்பது ஒரு உள்காயம்
மறந்து போக மருந்துமில்ல
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
சீட்டு கட்டில் வந்த ராணி அவ
ஜோக்கராக்கி போனாலே என்
பரமபதத்தில் உள்ள ஏணியிலே
பாம்பப்போல நின்னாலே
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்
கண்ணக்கட்டி இருக்கிற கூட்டம்
கண் தொறந்து பார்த்த என்
கண்ணையே காணமடா ஆஆஆஆ
அத நெனச்சு அன்னாடம் அழுதாச்சு
இப்ப எனக்கு கண்ணீரும் சேர்ந்தாச்சு
நிஜத்தை என்னன்னு சொல்லுவேன்
என்னன்னு.. சொல்லுவேன்
என்னன்னு..என்னன்னு.. .என்னன்னு.. என்னன்னு..
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
சாவியில பூட்டா தொங்கவிட்டு போனா
பூட்டியிருந்த வீட்டில் ஒட்டடையா ஆனேன்

களவு போன ஒரு ஆட்டோவா ஆஆஆஆ
ஹ ம்ஹ களவு போன ஒரு ஆட்டோவா
என்னன்னு நானே தேடுறனே
பறந்து போன ஒரு சிக்னலிலே
பச்சைக்காக எங்குறனே
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
சட்டை பையில அவள சொருகி வச்சேன்
பேனா முள்ளு குத்தியதே
சுழுக்கி சுழுக்கி அவ உதடு இரண்டும்
சுருக்கு கயிறு மாட்டியதே
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
நாசெத்து ரொம்ப நாளு ஆச்சி
என் சாமிக்கு நான் மட்டும் சாட்சி
எறிச்சாலும் புதைச்சாலும் எனக்கு
ஒன்னும் மரியாதை இல்லேஏஏஏஏ
மறுபடியும் மண் மீது பொறந்தேங்க
அப்போதும் அவளால இறப்பேங்க
நிஜத்தை என்னன்னு சொல்லுவேன்
என்னன்னு.. சொல்லுவேன்
என்னன்னு..என்னன்னு.. .என்னன்னு.. என்னன்னு..

எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்லுவேன்
எங்க போய் சொல்லுவேன்
என்னன்னு சொல்ல்ல்ல்ல்லுலுலுவேன்

ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ

Get Your Own Music Player at Music Plugin

Advertisements

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

January 27, 2007

Image and video hosting by TinyPic
அந்த காலத்தில் நடிகர் பிரபுவிற்காகவே இந்த மாதிரியான அழகான பாடல்களை தாயாரிப்பாளர்கள் சேர்த்தார்களோ என்னவோ!… வெள்ளை ரோஜா படத்தில் மற்றொமொரு குளு குளு தென்றல் போல ஒரு பாடல் கேட்போமா? ஜானகி மேடம் பாலு குரலில் இந்த பாடல் மனதுக்கு இதம் தரக்கூடிய ரம்மியமான சூழ்ந்லைக்கு அழகான ரிதமுடன் கொண்டு செல்வதை நாமும் முற்றிலும் உணரலாம்.

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
சந்தனக்காடு நானும் செந்தமிழோடு

மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்கு மின்னல் போல நின்றாயே

மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் நின்றேனே

தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே

தாவிப்பாயும் மீனைப்போல நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே

கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
ரரரா ரரரா ரர்ரா ரரரா

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே

ஆனது நெஞ்சம் நீயோ என் வாழ்க்கையின் சொந்தம்

என்றென்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் திங்கள் தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது

உன்னை என்றும் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

Get Your Own Music Player at Music Plugin

ஆழ்கடலில் தத்தளித்து

January 25, 2007

Image and video hosting by TinyPic
1982ஆம் வருடம் தேசிங்கு ராஜெந்திரன் டைரக்சனில் வெளீவந்த ராகம் தேடும் பல்லவி படத்தில் நடிகர் சங்கர், அனுபமா ஆகியோர் நடித்த படம். சங்கர் டி.ராஜெந்தர் ஓரிரு படங்களில் நடித்தவர். இவரின் திறமையை டி.ஆர் சரியாக பயன்படுத்த படவில்லை போலும். சங்கர் திறமைய குறைவக குறிப்பிடுவதற்கு அவர் ரசிகர்கள் மன்னிக்கவும் என் மனதில் தோன்றியதை எழுதினேன். பாலு பாடிய இந்த பாடல் வரிகளூக்கு எப்படியெல்லாம் உனர்ச்சிகளை காட்டியிருக்கவேண்டும். போதாதற்க்கு காட்சியமைப்பு கடலோரத்தில் மாலைவேளையில் மங்களாக எடுத்தது பார்த்து பார்த்து கண்ணுக்குதான் வலியெடுத்தது. இந்த வரிகள் //காதல் மொழியை பொழிந்தவள்.. கானல் நீராய் மறைந்ந்ந்தவள்// பாடல் காட்சி முழுவதும் உனர்ச்சியின் சோகத்தில் பாலுவுடன் சேர்த்து நம்மையும் அழவைத்து விட்டது.

ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த
முத்து ஒன்றை விதி அவன் பறித்தது ஏன் ஏன்
உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜை அவன் கலைந்தது ஏன் ஏன்

ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த
முத்து ஒன்றை விதி அவன் பறித்தது ஏன் ஏன்

உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜை அவன் கலைந்தது ஏன் ஏன்

காதல் மொழியை பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்ந்ந்தவள்
சாவு வந்திடும் முன் சேர்ந்து இறந்திடுமோ
அந்த புன்னகையை இன்று காணவில்லை
அது ஏன் .. அவள் வார்த்தை தொலந்ததேன்
என் வாழ்க்கை கலைந்ததேன்

ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த
முத்து ஒன்றை விதி அவன் பறித்தது ஏன் ஏன்
உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜை அவன் கலைந்தது ஏன் ஏன்

லலா…ஆஆஆஆ.. லலா
லலா..ஆஆஆஆ.. லலா

மார்கழி மாத கோலமிட்டாள்
பன்னீர் குடம் தூக்கி வந்தாள்

கரைப்போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்
கதை மாறிடவே கரை வேறு கண்டாள்
பல அலைகளூடன் புது நதியைக் கண்டாள்
அது ஏன்.. என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக்கடலானேன்

ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த
முத்து ஒன்றை விதி அவன் பறித்தது ஏன் ஏன்
உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜை அவன் கலைந்தது ஏன் ஏன்

வானம் நிறம் மாறும்

January 25, 2007

Image and video hosting by TinyPic
திரு. பாக்யராஜ் டைரக்சனில் வெளிவந்த தாவனிக்கனவுகள் படத்தில் மற்றுமொரு டூயட் பாடல்
வானம் நிறம் மாறும். இந்த பாடல் ஒரு இனம் புரியாத ஒரு சுகத்தை நம் மனதிற்க்கு ஏற்படுத்தும். நானும் பலமுறை கேட்டுப்பார்த்து கூர்ந்து கவனித்ததில். பாலுவும், ஜானகியும் தன் இனிமையான குரலில் உச்சஸ்தாயிலும் இல்லாமல், குறைந்த ஸ்தாயிலும் இல்லாமல் இடையில் சிறிது கூட ஸ்ருதி வில்காமல் ஒரு மெலோடியான பாடலாக இந்த குளிர்காலத்தில் சில்லென அனுபவத்து பாடியிருப்பார்கள். இவை தான் காரணம் என்று எனக்கு புரிந்தது. உங்களுக்கு ஏதாவது புரியுதா? இந்த மாதிரி பாடல்களை கமல், மோகன் மற்றும் ரகுமான் ஆகியோர் நடித்திருந்தால் பாடலுக்கு அட்டகாசமாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்கள்.
இந்த மாதிரி அழகான பாடல்களை பாலு மிகவும் சிரமப்பட்டு தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஆனால் பாக்யராஜ் சில நேரங்களில் சொதப்பிவிடுவார் அதனால் பாடல் எடுபடாமல் போய்விடுகிறது. இதற்கு பல பாடல்கள் உதாரணமாக சொல்லலாம். அவையும் ஒவ்வொன்றாக பதிவு செய்யப்படும்.

ஆஆஆஆ.. ஆஆஆஆ
ஆஆஆஆ.. ஆஆஆஆ
ஆஆஆஆ.. ஆஆஆஆ

வானம் நிறம் மாறும்
இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

நாள் தோறும் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும்
இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

மன்மதக்கலை எங்கு விற்பணை
மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை

அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முதல் நாளூம் தேவ கன்னிகை

மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்
பஞ்சனை பூபாளம் பாடிடுமே

இனி தேவன் கோவில் பூஜை நேரம்
காதல் தீபம் நாடும்

வானம் நிறம் மாறும்
இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்று தரும் வேளை ஹஏது நித்திரை

கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளி தரவேண்டும் அன்புக்கட்டளை

சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்

இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
தாகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும்
இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

நாள் தோறும் ஹிம் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும்
இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

வா வா என் வீணையே

January 24, 2007

Image and video hosting by TinyPic
கமல் நடித்த சட்டம் படத்தில் மற்றுமொரு ஒரு அழகான காதல் வரிகளை கொண்ட பாடல். இந்த பாடலை பதிவில் போடாமல் இருந்தால் பாலு ரசிகர்கள் என்னை உண்டு இல்லைன்னு செய்து விடுவார்கள். இந்த படத்தில் அதிகபட்ச பாடல்கள் பாலுவுடன் வாணிஜெயராம் அவர்கள் தன்னுடைய வித்தியாசமான குரலில் பாடியிருப்பார்கள். தீர்க்கசுமங்கலியில் நடித்த கே.ஆர்.விஜயாவிற்காக “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. ஒரு காலத்தில் அனைவரையும் குரலுக்காகவே பைத்தியமாக அலையவைத்தவர். இப்போதும் இந்த பாடலை கேட்டால் ஒரு வித சிலிர்ப்பு நம் உடலில் ஏற்படும். இவர் பாலுவுடன் சேர்ந்து பல ஹிட் பாடல்கள் தந்துருக்கிறார். தற்போது அவரை அதிக மேடைக்கச்சேரிகளில் கூட காணமுடிவதில்லை வயதாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். வெளி நாடுகளில் அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் பாலு ரசிகர்கள் வாணி ஜெயராமை
அத்தனை சீக்கிரம் மற்க்ககூடியவர்கள் இல்லை. இந்த பதிவை திருமதி. வாணி ஜெயராமிற்காக சமர்ப்பிக்கிறேன். அவர் மேன் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து பாடல்களை தரவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.
Image and video hosting by TinyPic

வா வா என் வீணையே

லலா

விரலோடு கோபமா

லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே
உன் ஞாபகம் கூட

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே
உன் ஞாபகம் கூட

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ

தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீனை நான்

தனனா

விரல் மீட்டும் வேளை தான்

தனனா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமோ ஓஓஓஒ
கிள்ளாத முல்லையே
வந்தாடும் பிள்ளையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஓஓஓ

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்

கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்

வா வா வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமோஓஓஒ

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா

இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ

வா வா வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

வா வா உன் வீனை நான்
தனனா
விரல் மீட்டும் வேளை தான்
தனனா தனனவ்னனா

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு

January 23, 2007

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
1974ஆம் ஆண்டு மெல்லிசை மன்னரின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளி வந்த
அத்தையா மாமியா என்ற படத்தில் பாலு அவர்கள் எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடிய இந்த பாடலில் வரும் //மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட.. வருவாய் என் கண்மணி//
இந்த வரிகளை அப்போதே எவ்வளவு ஜாலியாக பாடியிருகார் கேளுங்கள் நண்பர்களே…பாலு அவர்களின் “அச்சக்.. பச்சக்கென்ற” அருமையான உச்சரிப்பு பாடல்களை ரசிக்க வேண்டுமென்றால் இந்த மாதிரி பாடல்களை தான் கேட்டு ரசித்து அனுபவிக்கவேண்டும். குறிப்பாக அந்த முதலில் வரும் //லா லாலலா லாலலா.. லலலலா லலலலா லலலலா வ்லலலலா// மயங்காத உள்ளங்கள் தான் ஊரினில் உண்டோ? இந்த பழைய பாடலான மறந்தே போச்சு, ட்ராப்டில் எழுதி வைத்து சுத்தமாக மறந்தே போச்சுங்க 2 நாளுக்கு முன்
குழுவில் சில பாலு ரசிகர்கள் நினவு படுத்தினார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல் நாமும் தான் இந்த பாடலின் உச்சரிப்புகளை ரசிப்போமே……

லா லாலலா லாலலா
லலலலா லலலலா லலலலா லலலலா

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

இதுதான் இடமா நினைத்தது வருமா
இடமுண்டு விளையாட
எதற்க்கும் பொழுதுண்டு உறவாட

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட
வருவாய் என் கண்மணி
விறைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு
தருவாய் என் பொண்மனி

கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது
அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்து எந்தன்
மலர்வாய் முத்தங்கள்
பெறுவாய் என் மன்னனே

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

முதல் நாள் கல்யானம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம் தான்
முதல் நாள் கல்யானம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம் தான்

ஒரு நாள் இல்லாமல் திரு நாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்
ஒரு நாள் இல்லாமல் திரு நாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்

கொடுத்தாள் முந்நூறு கொடுப்பேன் எந்நூறு
தடுத்தாள் என்னாவது
கொடுத்தாள் முந்நூறு கொடுப்பேன் எந்நூறு
தடுத்தாள் என்னாவது
எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்த்தான் இன்றாவது

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

மறந்தாபோகும் மனசுக்கு தெரியும்
இடமுண்டு விளயாட ஹோ.

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

January 23, 2007

Image and video hosting by TinyPic
அந்த ஒரு நிமிடம் (1985) படத்தைப் பற்றிக் கேட்காதீர்கள்! நான் அழுது போடுவேன் ஆமா! ‘அந்த ஒரு நிமிடம்தான்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது ஒன்றுதான் படத் தலைப்புக்குச் சம்பந்தமான ஒரே விஷயம்.

கமல் ஏன்தான் இம்மாதிரிப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறாரோ என்று தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று. இயக்குநர், தயாரிப்பாளர் என்றெல்லாம் சாக்கு சொல்லி தப்பிக்க முடியாதபடி அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. ‘இம்மாதிரிப் படங்களில் / கதைகளில் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் அவருக்குக் கட்டாயம் இருந்திருக்கும். சரி விடுங்கள். குப்பைப் படங்கள் தராத வெற்றி நடிகர்கள் உண்டா?

மேஜர் சுந்தரராஜன் வில்லன். ஊர்வசி கதாநாயகி. மற்றபடி சரியான மசாலா படம். மே.சு. மோதிரத்தில் விஷ ஊசி மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டு ஆட்களைக் கொல்வது போன்று வந்த நினைவு – அய்யோ என்று கத்தலாம் போன்ற கதையும் காட்சியமைப்புகளும்.

இசைஞானி இசை. மிஞ்சியது நல்ல சில பாடல்கள். அதிலும் சிறந்ததாக இந்தப் பாடல். பாலுவும் ஜானகியும் கலக்கியிருப்பார்கள். மெட்டும் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். முதல் சரணமும் மூன்றாம் சரணமும் ஒரே மாதிரி இருக்க இரண்டாம் சரணத்தின் மெட்டை வேறுமாதிரி அமைத்திருக்கிறார் ராஜா.

‘அன்பு லைலா’வும் அதற்கான ‘ம்’ பதிலும் – எங்கேயோ நம்மைக் கொண்டுபோகும் குரல்கள். கவிமழை பொழியுமா என்று கேட்டுமுடித்ததும் பாலு அவருக்கேயுரித்தான ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பார் கேளுங்கள். இந்தச் சிரிப்பிற்காகவே மதுரை டீக்கடைகளில் இந்தப் பாடலை மறுபடியும் மறுபடியும் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.
Image and video hosting by TinyPic
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மெளனமே சொல்லும் அல்லவா
இன்பமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகவே வருகவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
கவிமழை பொழியுமா?

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
எழுதவே எழுதவே
பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

தலைமகனே கலங்காதே

January 22, 2007

Image and video hosting by TinyPic
மிகமிகக்குறைந்த இசைக்கருவிகள் கொண்டு ஒரு பாடல் இது, சோகப்பிரியர்களுக்கு ஒரு அற்புதமான பாடல் கேட்பதற்க்கு முன் திருவண்ணாமலையார் மீது பாலு பாடிய அருணாச்சலனே, போன்ற பக்திப்பாடல்களின் ஆல்பத்தை பலபேர் கேட்டிருப்பீர்கள் அதிக பிரபலமான ஆல்பம். அதில் எல்லாப்பாடல்களும் பக்திபரவசத்துடன் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
Image and video hosting by TinyPic
திருவண்ணாமலை கிரிவல பாதை முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெருவிளக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்று ஒரு செய்தி. அவர் லிங்கேஷ்வரர் மீது வைத்திருக்கும் பக்தியை காட்டுகிறது. அதனால் தான் அருணாச்சலம் என்ற பெயரில் ஒரு படத்தை 1997 ஆம் ஆண்டு சி.சுந்தர் டைரக்சனில் தயாரித்தார். இந்த படத்திற்கு தேனிசைத்தென்றல் தேவா அமைதியாக, அழகாக இசையமைத்திருக்கார். இதில் ரஜினியுடன், ரம்பா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.Image and video hosting by TinyPic
தாய் தான் தெய்வம், தாய்க்கு தலைமகன் என்று நம்முன்னோர்கள் சொல்வதுண்டு. இந்த பாடலில் கேளுங்கள் அற்புதமான வரிகளை //தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே.. உன் தந்தை தெய்வம் தானடா.. ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ// என்று இன்று இளையதலைமுறைக்கு சொல்வது போல் வரிகள் வரும், மேலும் சில சோகப்பாடல்களை பாலுவின் குரலை கேட்டால் நம் துன்பங்கள் இருக்கும் இடம் இல்லாமல்
மறைந்துபோவது நன்றாக தெரியும்

உதாரணத்திற்கு இந்த பாட்டின் இந்த இரண்டு வரிகளை மட்டும் கேளுங்கள்//ஹேஏஏஏஏஏமேகங்கள் அதுபோலே.. சோகங்கள் கலைந்தோடும் ஹாஆஆ// ஆஹா ஹா ஹா என்ன ஒரு இனிமை….
Image and video hosting by TinyPic
பாலு ஒரு பாராட்டு விழா நன்றியுறையில் இப்படி பேசியிருப்பார் ஒரு நல்ல இசையை தருவது கடவுளின் அருகாமையில் நம்மை கொண்டு சேர்க்கும் அந்த “கடவுள் எனக்கு இன்னொரு ஜென்மம் கொடுத்தால்! இந்த குரல் கொடுத்தால்! நான் இந்த இசை சேவை செய்ய இதற்காக பட்ட பழைய கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு சேவை செய்ய மற்படியும் கஷ்டங்கள் அனுபவிக்க தயாராயிருக்கிறேன், உங்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கும் பாடுபடுவேன்” என்று மிகவும் உருக்கமாக சொல்லுவார். அதேபோல் இவரின் இந்த இனிமையான குரலைக் கேட்பதற்கு, மேன் மேலும் பலஜென்மங்கள் அதே இறைவன் எனக்கும், அணைத்து எஸ்.பி.பி. ரசிகர்களூம் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ
உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஹேஏஏஏஏஏமேகங்கள் அதுபோலே
சோகங்கள் கலைந்தோடும்ம்ம்ம் ஹாஆஆ
நீ போகும் பாதையெல்லாம் ம்ம்
நியாயங்கள் சபையேறும்
என்னாளும் உன்னோடு
உன் அன்னை மனம் வாழும் ம்ம்ம்ம்
தெய்வங்கள் அருளோடு
இசையாவும் மலர் தூவும்..ம்..ம்..ம்

தலைமகனே கலங்காதேஏஏஏ
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதேஏஏஏஏ
தனிமை கண்டு மயங்காஆஆதே

ஏ..ஏ.ஏ..ஏ..ஏ…..ஏ..ஏ..ஏ..ஏ…ஏஏஏஏ

அம்மம்மா சரணம் சரணம்

January 19, 2007

Image and video hosting by TinyPic

1984ஆம் வருடம் வெளிவந்த இசையமைப்பாளர் கங்கைஅமரன் அவர்களின் இசையில், கமல், மாதவியுடன் சேர்ந்து சரத்பாபு நடித்த சட்டம் ஒரு அற்புதமான படம். இரு நண்பர்களின் நட்பை அழகாக வெளிபடுத்தும் படம். இந்த படத்தில் அணைத்து பாடல்களூம் இனிமையாக இருக்கும். இந்த படத்தில் கமல் நடிப்பில் அசத்துவார். சரத்பாபுவின் குரல் மிக நன்றாக இருக்கும். அதேபோல் நிழல்கள் ரவி குரலும் நன்றாக கணீர் என்று இருக்கும். இந்த பாடலும் பாலுவின் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

போட்டோ: நன்றி தமிழ்திரை

அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தேவைகள்
அடி ராதா தெரியாதா இளம் போதை
தெரியாத தொடராதா உன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா ஆஆஆஆ

அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நல் இரவும் பூஜைகள் தானே

அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தேவைகள்

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அ..பி..ஷேகம் நடத்த

நீ வாங்க வந்த வரமென்னவோ
நீ தானே காட்சி தரவேண்டுமோ

நான் பார்க்க மனம் சேர்க்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி

அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க

குழலோடு வந்த கோபாலன் நான் தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ

உன்னை பார்க்க நான் சேர்த்து பாராட்ட
வா மன்னவா ஆஆஆஆ

அம்மம்ம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரனும் தரனும்
என் தே..வை..கள்

நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்

கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா.. தா.. தா.

லல்லா லலலா லல்லா
லல்லா லலலா லல்லா

ஓ மானே மானே மானே. .

January 19, 2007

Image and video hosting by TinyPic
1983ஆம் வருடம் வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கனேசன் மற்றும் பிரபு நடித்த படம் வெள்ளை ரோஜா படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பாதிரியார் வேடத்தில் உஜ்ஜாலா சொட்டு நீலம் போட்டது போல் பளீர் என்று வெள்ளை அங்கியில், மெகா சைஸ் மூக்கு கண்ணாடியில் அமர்க்களமாக இருப்பார். படத்தில் அவரை பார்க்கவே நம் மனதிற்க்கு ஒரு வித திருப்தி ஏற்படும். இவருக்காக மலேசியா வாசுதேவன் ஒரு அருமையான பாடலை பாடியிருப்பார். ஓ மானே மானே மானே பாடல் பிரபுவிற்காக காட்சியமைக்கப்பட்டது. பாடலில் பிரபு புகுந்து விளையாடியிருப்பார். பொதுவாக அவருடைய எல்லா டூயட் பாடலிலும் அனாயசமாக டான்ஸ் ஆடுவார். யப்பா எப்படித்தான் அந்த கனமான உடம்பை வைத்துக்கொண்டு பாடலுக்கு ஸ்டெப்ஸ் போடுகிறாரோ தெரியவில்லை?
அவருக்கே வெளிச்சம். அதே போல் சண்டைக்காட்சியில் கூட வெளுத்து வாங்குவார். இந்த பாடலில் வரும் //ஹேஏஏஏஏஏஏஏஏஏ.. காலை பனித்துளி.. கண்ணில் தவழ்ந்திட.. கனவுகள் மலர்கிறது இந்தவரிகள் போல் நம் மனதிலும் கனவுகள் மலர்கிறது.
Image and video hosting by TinyPic
போட்டோ: நன்றி தமிழ்திரை

ஓ மானே மானே மானே.
உனைத்தானே

ஓ மானே மானே மானே..
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சின்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே

ஓ மானே மானே மானே..

உனைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

ஹேஏஏஏஏஏஏஏஏஏ..
காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது

பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிற்து

ஆசையின் மேடை
நாடகம் ஆடும்

ஆயிரம் பாடல்
பாவையை தேடும்

நீ தேவன் கோவில் தேரோ
உன் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ.. ஹோய்..

ஓ மானே மானே மானே..
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சின்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
தேனே தேனே..

ஓ மானே மானே மானே..

உனைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

ஹேய்ய்ய்ய்ய்..
நீலபூவிழி ஜாலம் தெரியுது
நினவுகள் இனிக்கிற்து

பாடல் கோபுரம் ஏந்தும் ஓவியம்
கைகளீல் தவழ்கிறது

மந்திரம் ஒன்றை
மன்னவன் சொன்னான்

மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்

என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா

என் காதல் கோவில் ஜீவன்
கண்ணா வா ஹோய்..

ஓ மானே மானே மானே..
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சின்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே

ஓ மானே மானே மானே..

உனைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே