தலைமகனே கலங்காதே

Image and video hosting by TinyPic
மிகமிகக்குறைந்த இசைக்கருவிகள் கொண்டு ஒரு பாடல் இது, சோகப்பிரியர்களுக்கு ஒரு அற்புதமான பாடல் கேட்பதற்க்கு முன் திருவண்ணாமலையார் மீது பாலு பாடிய அருணாச்சலனே, போன்ற பக்திப்பாடல்களின் ஆல்பத்தை பலபேர் கேட்டிருப்பீர்கள் அதிக பிரபலமான ஆல்பம். அதில் எல்லாப்பாடல்களும் பக்திபரவசத்துடன் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
Image and video hosting by TinyPic
திருவண்ணாமலை கிரிவல பாதை முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெருவிளக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்று ஒரு செய்தி. அவர் லிங்கேஷ்வரர் மீது வைத்திருக்கும் பக்தியை காட்டுகிறது. அதனால் தான் அருணாச்சலம் என்ற பெயரில் ஒரு படத்தை 1997 ஆம் ஆண்டு சி.சுந்தர் டைரக்சனில் தயாரித்தார். இந்த படத்திற்கு தேனிசைத்தென்றல் தேவா அமைதியாக, அழகாக இசையமைத்திருக்கார். இதில் ரஜினியுடன், ரம்பா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.Image and video hosting by TinyPic
தாய் தான் தெய்வம், தாய்க்கு தலைமகன் என்று நம்முன்னோர்கள் சொல்வதுண்டு. இந்த பாடலில் கேளுங்கள் அற்புதமான வரிகளை //தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே.. உன் தந்தை தெய்வம் தானடா.. ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ// என்று இன்று இளையதலைமுறைக்கு சொல்வது போல் வரிகள் வரும், மேலும் சில சோகப்பாடல்களை பாலுவின் குரலை கேட்டால் நம் துன்பங்கள் இருக்கும் இடம் இல்லாமல்
மறைந்துபோவது நன்றாக தெரியும்

உதாரணத்திற்கு இந்த பாட்டின் இந்த இரண்டு வரிகளை மட்டும் கேளுங்கள்//ஹேஏஏஏஏஏமேகங்கள் அதுபோலே.. சோகங்கள் கலைந்தோடும் ஹாஆஆ// ஆஹா ஹா ஹா என்ன ஒரு இனிமை….
Image and video hosting by TinyPic
பாலு ஒரு பாராட்டு விழா நன்றியுறையில் இப்படி பேசியிருப்பார் ஒரு நல்ல இசையை தருவது கடவுளின் அருகாமையில் நம்மை கொண்டு சேர்க்கும் அந்த “கடவுள் எனக்கு இன்னொரு ஜென்மம் கொடுத்தால்! இந்த குரல் கொடுத்தால்! நான் இந்த இசை சேவை செய்ய இதற்காக பட்ட பழைய கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு சேவை செய்ய மற்படியும் கஷ்டங்கள் அனுபவிக்க தயாராயிருக்கிறேன், உங்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கும் பாடுபடுவேன்” என்று மிகவும் உருக்கமாக சொல்லுவார். அதேபோல் இவரின் இந்த இனிமையான குரலைக் கேட்பதற்கு, மேன் மேலும் பலஜென்மங்கள் அதே இறைவன் எனக்கும், அணைத்து எஸ்.பி.பி. ரசிகர்களூம் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ
உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஹேஏஏஏஏஏமேகங்கள் அதுபோலே
சோகங்கள் கலைந்தோடும்ம்ம்ம் ஹாஆஆ
நீ போகும் பாதையெல்லாம் ம்ம்
நியாயங்கள் சபையேறும்
என்னாளும் உன்னோடு
உன் அன்னை மனம் வாழும் ம்ம்ம்ம்
தெய்வங்கள் அருளோடு
இசையாவும் மலர் தூவும்..ம்..ம்..ம்

தலைமகனே கலங்காதேஏஏஏ
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதேஏஏஏஏ
தனிமை கண்டு மயங்காஆஆதே

ஏ..ஏ.ஏ..ஏ..ஏ…..ஏ..ஏ..ஏ..ஏ…ஏஏஏஏ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: