சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

Image and video hosting by TinyPic
அந்த ஒரு நிமிடம் (1985) படத்தைப் பற்றிக் கேட்காதீர்கள்! நான் அழுது போடுவேன் ஆமா! ‘அந்த ஒரு நிமிடம்தான்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது ஒன்றுதான் படத் தலைப்புக்குச் சம்பந்தமான ஒரே விஷயம்.

கமல் ஏன்தான் இம்மாதிரிப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறாரோ என்று தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று. இயக்குநர், தயாரிப்பாளர் என்றெல்லாம் சாக்கு சொல்லி தப்பிக்க முடியாதபடி அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. ‘இம்மாதிரிப் படங்களில் / கதைகளில் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் அவருக்குக் கட்டாயம் இருந்திருக்கும். சரி விடுங்கள். குப்பைப் படங்கள் தராத வெற்றி நடிகர்கள் உண்டா?

மேஜர் சுந்தரராஜன் வில்லன். ஊர்வசி கதாநாயகி. மற்றபடி சரியான மசாலா படம். மே.சு. மோதிரத்தில் விஷ ஊசி மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டு ஆட்களைக் கொல்வது போன்று வந்த நினைவு – அய்யோ என்று கத்தலாம் போன்ற கதையும் காட்சியமைப்புகளும்.

இசைஞானி இசை. மிஞ்சியது நல்ல சில பாடல்கள். அதிலும் சிறந்ததாக இந்தப் பாடல். பாலுவும் ஜானகியும் கலக்கியிருப்பார்கள். மெட்டும் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். முதல் சரணமும் மூன்றாம் சரணமும் ஒரே மாதிரி இருக்க இரண்டாம் சரணத்தின் மெட்டை வேறுமாதிரி அமைத்திருக்கிறார் ராஜா.

‘அன்பு லைலா’வும் அதற்கான ‘ம்’ பதிலும் – எங்கேயோ நம்மைக் கொண்டுபோகும் குரல்கள். கவிமழை பொழியுமா என்று கேட்டுமுடித்ததும் பாலு அவருக்கேயுரித்தான ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பார் கேளுங்கள். இந்தச் சிரிப்பிற்காகவே மதுரை டீக்கடைகளில் இந்தப் பாடலை மறுபடியும் மறுபடியும் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.
Image and video hosting by TinyPic
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மெளனமே சொல்லும் அல்லவா
இன்பமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகவே வருகவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
கவிமழை பொழியுமா?

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
எழுதவே எழுதவே
பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: