சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

Image and video hosting by TinyPic
அந்த காலத்தில் நடிகர் பிரபுவிற்காகவே இந்த மாதிரியான அழகான பாடல்களை தாயாரிப்பாளர்கள் சேர்த்தார்களோ என்னவோ!… வெள்ளை ரோஜா படத்தில் மற்றொமொரு குளு குளு தென்றல் போல ஒரு பாடல் கேட்போமா? ஜானகி மேடம் பாலு குரலில் இந்த பாடல் மனதுக்கு இதம் தரக்கூடிய ரம்மியமான சூழ்ந்லைக்கு அழகான ரிதமுடன் கொண்டு செல்வதை நாமும் முற்றிலும் உணரலாம்.

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
சந்தனக்காடு நானும் செந்தமிழோடு

மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்கு மின்னல் போல நின்றாயே

மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் நின்றேனே

தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே

தாவிப்பாயும் மீனைப்போல நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே

கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
ரரரா ரரரா ரர்ரா ரரரா

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே

ஆனது நெஞ்சம் நீயோ என் வாழ்க்கையின் சொந்தம்

என்றென்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் திங்கள் தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது

உன்னை என்றும் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

Get Your Own Music Player at Music Plugin

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: