Archive for February, 2007

பொட்டு வச்சதாரு யாரு யாரு

February 28, 2007

Image and video hosting by TinyPic

பிரபு, மீனா, நதியா ஆகியோர் நடித்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரன் படத்தில் ஏற்கனவே என்னவென்று சொல்வதம்மா ஒரு அழகான பாட்டை கேட்டோம் இதே படத்தில் மேஸ்ட்ரோ இளயராஜா இசையமைத்த மற்றுமொரு பாடல் “பொட்டு வச்சதாரு யாரு” என்ற ஒரு சோகப்பாடல் கதாநாயகன் தன் தாய் மீது மிக்க பாசத்துடன் பாடும் இந்த பாடல் என் மனதை ரொம்பவும் கவர்ந்து விட்ட பாடல். பாலு எவ்வளவு சோகத்துடன் ஒவ்வொரு வரியிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் கேளுங்கள். குறிப்பாக இந்த வரிகளில் // கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு// மேலும் //கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா.. இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா.. ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு.. தாய் வாடினால் சேய் தாங்குமா// என்னை நானே மெய் மறந்து போனேன். இந்த பாடலை ரொம்ப நாளாக பதிவில் பதிய வேண்டுமென்று காத்திருந்தேன். பாடல் சுட்டி தற்போது தான் கிடைத்தது உடனே பதிந்துவிடேன்.

Image and video hosting by TinyPic

பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு… யாரு….

Advertisements

இனியவளே..இளையவளே

February 27, 2007

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர் இசையமைப்பில் பிரகாஷ்ராஜின் முதல் தயாரிப்பில் வெளிவந்த பொய் படம். பா.விஜயின் அழகான பாடல் வரிகளில் பாலு பாடிய இனியவளே பாடல் காட்சிக்காவது பார்க்கலாம் என்று நினத்திருந்தேன். அதற்க்குள் படம் என்னை பொய்யாக்கி விட்டு வந்த வேகத்தில் பொசுக்குன்னு பொட்டிக்குள் போய் படுத்துக்கொண்டது. புதுப்படம் பார்க்கவேண்டுமென்று நினைத்தால் படம் வெளியான முதல் வாரத்திலே பார்த்து விடவேண்டும். இப்போதுதான் முதல் ஐந்து வாரங்களூக்குள் நான்கு அல்லது ஐந்து தியேட்டர்களளில் போட்டு ஓரளவுக்கு வசூல் செய்துவிடுகிறார்கள் எல்லாம் திருட்டு வீசிடி பயம் தான் காரணம். மேலும் இந்த படத்தை இயக்குநர் திலகம் கே.பாலசந்தர் சார் இயக்கியிருந்தார். பாலசந்தர் சார் இயக்கி படம் ஒடாததால் அவருகே பிரகாஷ்ராஜின் மீது சின்ன வருத்தம் என்று ஒரு தினசரி நாளிதழில் படித்த நினவு. இந்த காலத்தில் படம் எடுக்க வேண்டுமென்றால் படத்தில் எல்லாமுமே மிகவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். புதுமையை புகுத்த வேண்டும், இல்லையென்றால் சினிமா துறையில் குப்பை கொட்டி வெற்றி காண்பது பெரும் பாடாய் போய்விடும்.. மேலும் தயாரிப்பாளர்களூக்கு லாபம் இருந்தால் தான் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் மகிழ்ச்சி. படம் பொட்டிக்குள் படுத்துக்கொண்டால் என்ன? பாடல் காட்சியை நாம் ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ள முடியும். இந்த பாடலில் கடைசி வரிகளில் வருவது போல் //ளா ளா ளா ளா இனியவளே.. இளையவளே// என்று பாடி //ளகரம் இது போதுமா.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா// என்று நம்மளையையும் சேர்த்து அசரவைத்துருபார்.

ளா ளா ளா ளா ளா
ள்ளா ள்ளா ள்ளா ளா ளா
ளா ளா ளா ளா இனியவளே
இளையவளே
ளா ளா ளா ளா இனியவளே
தெரிந்தவளே
தள்ளி தள்ளி இருந்தவளே
எள்ளி எள்ளி சிரித்தவளே
துள்ளி துள்ளி நடந்தவளே
கள்ளி கள்ளி அவள் இவளே
ளா ளா ளா ளா இனியவளே
இளையவளே
ளா ளா ளா ளா இனியவளே
தெரிந்தவளே

உள்ளம் உள்ளம் உள்ளம்
துளளும் துள்ளும் துள்ளும்
வெள்ளும் வெள்ளும் வெள்ளும்
உயிர் அளளும் அள்ளும் அள்ளும்
உள்ளம் உள்ளம் உள்ளம்
துளளும் துள்ளும் துள்ளும்
வெள்ளும் வெள்ளும் வெள்ளும்
உயிர் அளளும் அள்ளும் அள்ளும்

வேளை வேளை நிலவு – அதில்
கோழை கோழை கனவு
பிள்ளை பிள்ளை மனது
எனக்குள்ளே

காலம் காலம் ஏது
சிறு பாலம் பாலம் ஏது
குள்ளம் குள்ளம் ஏது
எனக்குள்ளே

மேளம் கொட்டும் நன்னாள்
தாளம் கொட்டும் பொன்னாள்
அந்த நாளும் என்னால்
நமக்குள்ளே

ளா ளா ளா ளா இனியவளே
இளையவளே
ளா ளா ளா ளா இனியவளே
தெரிந்தவளே

தள்ளி தள்ளி இருந்தவளே
எள்ளி எள்ளி சிரித்தவளே
துள்ளி துள்ளி நடந்தவளே

ளா ளா ளா ளா ளா
ளா ளா ளா ளா ளா

ளகரம் இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேண்டுமா
ளகரம் இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேண்டுமா

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

February 26, 2007

Image and video hosting by TinyPic

இளையராஜாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வாணிஜெயராமும் பாலுவும் இணைந்து நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இளையராஜா வந்ததுக்கு அப்புறம் அவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு. பாலுவும் ஜானகியும் சேர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். பிறகு சித்ரா!

ஜெய்சங்கரும் ஜெயசித்ராவும் நடித்திருக்கும் வண்டிக்காரன் மகன் படத்தில் பாலுவும் வாணிஜெயராமும் பாடியிருக்கும் இந்தப் பாடல் அருமையானதொரு பாடல்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாரலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க
தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோஓ. ஓஒ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க
எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை விழலாமோ மஞ்சம் வரலாமோ
சேலையை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

நழுவ நழுவ என்னைத்தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து
வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட காமன்கிணையாக

காவல் தடைப்போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

– வற்றாயிருப்பு சுந்தர்

.

மணமாலையும் மஞ்சளும் சூடி

February 26, 2007

Image and video hosting by TinyPic

தங்கைமீது பாலு பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் தேசிங்கு ராஜேந்தர் படங்களில் அவரே எழுதி இசையமைத்த தங்கை மீது பாடல்கள் ஏராளாமாக உள்ளன அவர் படங்களில் தங்கைமீது அதிக பாசத்தை தெரிவிக்கும் வரிகள் கொண்ட பாடல்கள் மிகவும் உருக்கமாக இருக்கும் இனிவரும் பதிவுகளில் அவைகளும் பதியபடும். அந்த வகையில் நடிகர் சத்ய்ராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப்பிள்ளை படத்தில் மணமாலையும் என்ற இந்த பாடல் மிகவும் அழகாக இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சியும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். இந்த பாடலில் வரும் இந்த வரிகள்//சின்னஞ்சிறு கிளியே வா..செம்பவழ கொடியே வா.. திறை போல் உடலில் அணியும் திலகம்..நிலையாய் வாழட்டுமே // மேலும் //ஓராண்டு போனப்பின்பு.. உன் பிள்ளை ஓடி வந்து.. ஹதாய் மாமன் தோளின் நின்று.. பொன்னூஞ்சல் ஆடும் அன்று ..// நான் மிகவும் ரசித்த இடம் பாலு எவ்வளவு ஆத்மார்த்மாக பாடி நம் கண்களீலும் கண்ணீர் மொட்டுக்களை பூக்கவைப்பார். குறிப்பாக //உன் பிள்ளை ஓடி வந்து.. ஹதாய் மாமன் தோளின் நின்று.. பொன்னூஞ்சல் ஆடும் அன்று..// குரலிலே சின்ன்ன்ன்ன்ந்தக ஒரு சிரிப்பு சிரித்து
பாடியிருபார் குழ்ந்தை நம் தோள் மீது ஆடுவது போல ஒரு உணர்வை ஏற்ப்டுத்துவார்.

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு

உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..

திறை போல் உடலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
ஹதாய் மாமன் தோளின் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதோதோ காட்சி ஒன்று
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வா..
தங்கம் தந்த தமிழே வா..

கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 3

February 24, 2007

செண்பகராஜ் தோற்றுப் போவார் என்று எங்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. சின்ன வயது பாலுவைப் போன்ற உருவ அமைப்பு மட்டுமல்லாது பாடிய ஒவ்வொரு பாடலையும் அபாரமான முகபாவத்துடனும் குரலினிமையுடனும் அவர் அனுபவித்துப் பாடியதைப் பார்த்தபோது அவ்வளவு அழகாக இருந்தது.

தில்லுமுல்லு படத்தில் பாலு பாடிய ராகங்கள் பதினாறு பாடலை செண்பகராஜ் அவ்வளவு அழகாக எழுதி வைத்துக்கொள்ளாமல் பாடியரை நடுவர்களில் ஒருவரான மனோபாலா வெகுவாகப் பாராட்டினார்.

ஆரம்பச் சுற்றுகளில் நன்கு பாடிய பத்மநாபன் குமார் இந்தச் சுற்றில் ஏனோ சுரத்தேயில்லாமல் பாடியதோடு குரலும் ஒத்துழைக்க மறுத்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் தனது கர்நாடக சங்கீதப் பின்னணியைப் பயன்படுத்திச் ஸ்ருதி சுத்தமாகப் பிசகாமல் பாடிக்கொண்டே முன்னேறினார் – புதுப்புது அர்த்தங்களில் பாலு பாடிய அபாரமான ‘கேளடி கண்மணி’ பாடலைப் பாடி.

‘படங்களில் சிக்கலான காட்சியமைப்புகளை வெற்றிகரமாகக் கொடுப்பதில் மிகுந்த திறமையாளர் பாலசந்தர்’ என்று அவருக்குப் புகழாரம் சூட்டிய பாலு, ‘அந்த ஆதங்கம்ங்கற உணர்வு இருக்கு பாருங்க – அதை இசையில் கொண்டு வர இளையராஜாவைத் தவிர வேற யாரால் முடியும்? என்ன மாதிரியா கம்போஷிஷன் இது! இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இளையராஜாவுக்கு நூறு கோடி கொடுக்கலாம்’ என்று இசைஞானியை மிகவும் சிலாகித்துப் பேசினார் பாலு. ஒன்றைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். அனைத்து வார நிகழ்ச்சிகளிலும் நான் பாலுவின் விவரணைகளிலிருந்து பொதுவாகக் கண்டது இளையராஜா மீது அவர் வைத்திருக்கும் அபாரமான அன்பினையும், அபிமானத்தையும், பாசத்தையும். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவரைப்பற்றிச் சிலாகிக்கத் தவறவேயில்லை பாலு.

பிரதான நடுவர் நஞ்சப்ப ரெட்டியார் (புல்லாங்குழல் கலைஞர்) அவர்களிடம் பாலு மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் வாசித்த அனுபவத்தையும் இருவரின் அணுகுமுறைகளில் இருக்கும் வித்தியாசத்தைப் பற்றியும் கேட்டார். ஓங்கி உயர்ந்த அந்த 80 வயதுப் பெரியவர் மெதுவாகச் சொன்னது ‘இவரு (இசைஞானி) வீட்லருந்து வந்து மெட்டைப் பாடி வச்சுருக்கற கேஸட்டை ஒரு தடவை போட்டுக் கேப்பார். அவ்வளவுதான். கீ போர்டுல கையே வைக்கமாட்டார். மொத்த இசைக்குழுவினருக்கும் கிடுகிடுன்னு நோட்ஸ் எழுத ஆரம்பிச்சு இருவது முப்பது நிமிஷத்துல முடிச்சு கொடுத்துட்டு ரிகார்டிங்குக்கு அனுப்பிருவார்’ என்று சொல்லிவிட்டு நெற்றியைத் தொட்டு ‘அவருக்கு இங்க கீ போர்டு இருக்கு’ என்றார். கேட்கையில் புல்லரித்தது. பாலுவும் அந்த உதாரணத்தை மிகவும் பாராட்டிக் குறிப்பிட்டார். “பிரிட்ஜ் மேல அவரு காரு காலைல போச்சின்னா கடிகாரத்துல ஆறே முக்கால் ஆகிருக்கான்னு பாத்து நேரத்தைச் சரியாக்கிக்கிடலாம். நேரந் தவறாதவர்’ என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்த நஞ்சப்ப ரெட்டியார் மெல்லிசை மன்னரைப் பற்றி ‘அவரு ஆர்மோனியத்தை வச்சி எல்லாத்தையும் கூப்பிட்டு வச்சி வரிசையா ஒவ்வொருத்தரும் வாசிக்கவேண்டிய நோட்ஸை கிடுகிடுன்னு வாசிச்சே காட்டிடுவார்’ என்று குறிப்பிட்டது சிறப்பு.

இறுதியில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டபோது இரண்டே மதிப்பெண்கள் வித்தியாசத்தில் பத்மநாபன் குமார் செண்பகராஜைத் தோற்கடித்து வெற்றிபெற்ற போது சோகமாகத்தான் இருந்தது. பரிசை அறிவித்த பாலு நமது மனவோட்டத்தை உணர்ந்துகொண்டது போல ‘தம்பி செண்பகராஜ் வெகுசில இடங்கள்ல ஸ்ருதி பிரச்சினை இருந்ததைத் தவிர எல்லாவிதத்துலயும் மிகவும் சிறப்பாப் பாடினார். அருமையான எக்ஸ்பிரஷன்ஸ். நல்ல குரல். எல்லாம் அருமை. இன்னும் கொஞ்சம் ஸ்ருதி சுத்தமாக சில இடங்கள்ல பாடியிருந்தா அவருக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கும்’ என்றவர் ‘பத்மநாபன் குமார் டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கார். ஆனா செண்பகராஜைக் கம்ப்பேர் பண்ணா அவரைவிட இவருக்கு எக்ஸ்பிரஷன்ஸ் கொஞ்சம் கம்மிதான். ஆனா அவரோட சங்கீத பேக்ரவுண்ட் அவருக்கு உதவிருக்கு. ரெண்டு பரிசு கொடுக்கணும்னா கட்டாயம் செண்பகராஜுக்கு ஒரு பரிசு கொடுப்பேன். ரெண்டு பேருக்கும் ரெண்டே மார்க்தான் வித்தியாசம். It’s a tough decision for us’ என்று குறிப்பிட்டுச் சொன்னதும் பாராட்டியதும்தான் சற்று ஆறுதலைத் தந்தது.

செண்பகராஜ் – மனதைத் தளரவிடாது முயற்சியைத் தொடருங்கள். வெற்றி உங்களுக்கு வெகு அருகில்.

இந்தச் சுற்றில் வெற்றி பெற்ற பத்மநாபன் குமாருக்கு வாழ்த்துகள்.

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 2

February 24, 2007

Photobucket - Video and Image Hosting

பாலு கலக்கு கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கும் என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் சில வாரங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம். இது வரை பார்க்காவிட்டால் இனிமேல் பார்க்க ஆரம்பியுங்கள்.

ஆரம்ப ஓரிரு வாரங்களில் பாடகர்களில் சிறப்பாகப் பாடியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை நடுவர் குழு செய்து முடித்தார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு குழுக்கள் பிரித்து அக்குழுக்களில் சிலரை கடந்த நான்கு வாரங்களாக ஒளிபரப்பாகிய பகுதிகளில் பாலுவும் நடுவர்களும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடையில் இறுதிப் போட்டி ஒன்று வைத்து அதில் சிறப்பான ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஊகம் செய்வது எளிதுதான். ஆனால் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களைப் பற்றிக் குறிப்பிடவே இந்தப் பதிவு.

பெப்ஸி குடித்து பீட்ஸா கொறித்து குத்துப் பாடல்களை ரசிக்கும் இளைய (தறு)தலைமுறை என்ற பரவலான எண்ணத்தைப் போக்கும் வண்ணம் அற்புதமாகப் பாடும் இளைஞர்களையும், யுவதிகளையும், மாணவ மாணவிகளையும் நிகழ்ச்சியில் காணக் கிடைத்தது ஒரு சந்தோஷம் என்றால் அவர்கள் தமிழை நன்கு உச்சரித்துப் பாடியது இன்னொரு சந்தோஷம்!

பாடல்களுக்கு இடையிடையே அப்பாடல்கள் தொடர்பான அரிய தகவல்களை பாலு அள்ளித் தருவது மிகவும் சிறப்பு. நிறைய தகவல்களை முதன்முறையாகக் கேட்டு வியந்தேன்.

முதல் பாகத்தின் இருவார நிகழ்ச்சிக்கு மனோபாலாவுடனும், பாலுவுடனும் மையத்தில் நடுவராக அமர்ந்திருந்தது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். நிறைய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் – புதுச்சேரிக் கச்சேரியில் 18 வயதுப் பையன் 38 வருடத்திற்கு முந்தைய பாடலை விரும்பிக் கேட்டது உட்பட!

கலந்துகொண்ட அறுவரில் முதற் சுற்றிலேயே வெற்றிபெறப் போவது திவ்யா என்பது உறுதியாக ஊகிக்க முடிந்தது. என்னவோ மேடையில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடிய அனுபவசாலி மாதிரி ஆழ்ந்து அனுபவித்து நல்ல பாவங்களுடன் பாடினார். அவர் பாடிய “தூது வருமா” பாடலைக் கண்களை மூடிக் கேட்டிருந்தால் படத்திலிருந்தே அசல் பாடலைக் கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டிருக்கும். இசைக்குழுவும் சிறப்பாக பாடல்களுக்கு வாசித்தார்கள். அவர்களின் திறமையையும் பின்னணி இசை நுணுக்கங்களைப் பற்றியும் பாலு அவ்வப்போது குறிப்பிட்டு எடுத்துச் சொல்லத் தவறவில்லை.

பங்குபெற்றவர்கள் ஒவ்வொருவரும் பாடி முடித்ததும் பாடிய விதத்தில் இருந்த குற்றங் குறைகளை அவர்களது மனம் நோகாவண்ணம் மிகுந்த அன்புடன் எடுத்துச் சொன்னார் பாலு.

இருவார முடிவில் வெற்றி பெற்ற திவ்யாவுடன் “ஓ பட்டர்பிளை” என்ற மீரா பாடலை பாலு அட்டகாசமாகப் அவருக்கேயுரித்தான பாணியில் பாடி அசத்தினார்.

திவ்யாவிற்கு வாழ்த்துகள்!

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

February 23, 2007

கைராசி படத்தை நான் பார்க்கவில்லை. சில சமயங்களில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அதைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றும். இப்பாடல் காட்சிகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் சுத்தமாகப் பொருந்தாமல் இருக்கின்றன.

பாடலைக் கேட்டால் உங்கள் மனதில் விரியும் காட்சிகள் என்ன? பாடலின் மெட்டும் இசையும் இனிய குரல்களும் உங்கள் மனதில் விரித்துச் செல்லும் ஓவியங்கள் என்ன? அதை அப்படியே அவதானித்துக்கொண்டு பாடலைக் கேட்டால் மதி! படத்தில் பிரபு பனியைத் தாங்க ஏகப்பட்ட ஆடைகளைப் போட்டுக்கொண்டு, பனிக்கட்டி மீது திடுதிடுமென்று ஓடிவந்து ராதாவை அணைத்துக்கொண்டு சிரிப்பார் – பாடலில் இழைந்தோடும் ஓவியக்கவிதையின் சாயல் எதுவுமே இல்லாமல். ஆக இப்பாடலை கேட்பதோடு நிறுத்திக்கொள்வது உத்தமம்! பாலுவும் ஜானகியும் எப்படிப் பாடியிருப்பார்கள் என்று விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. வழக்கம்போல நாம் மகிழ்ந்துபோகும் வண்ணமே அழகாகப் பாடியிருக்கிறார்கள்.

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

nilavondru kanden….

ஜோடி ஜோடி ஜோடி தான்

February 22, 2007

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

சிங்காரி சரக்கு நம்ம சரக்கு, நாந்தாண்டா இப்ப தேவதாஸ், ஒரு ஜீவன் தான் உன்னோடுதான் போன்ற பாலு பாடிய இந்த மாதிரி குடிகார பாடல்கள் காட்சிகள் பார்த்து, கேட்டு ரொம்ப வருடங்கள் ஆகிடுச்சு. இப்ப ஒவ்வொன்றாக நினவுக்கு வருகிறது.மணிரத்னம் டைரக்சனில் இந்த வருடம் வெளிவந்த அமெரிக்காவில் ப்ரிவியு போட்ட குரு (புதுசு) படத்தில் இருந்து ஒரு பாடல். ஜோடி பாடல் கேட்டவுடன் அந்த பழைய பாடல்கள் எல்லாம் என் மனதில் படையெடுக்கின்றன. இந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஆகையால் காட்சியமைப்பு விளக்கமுடியவில்லை. கதையை பற்றி ஒன்றும் சொல்லும் போல் இல்லை என்று கேள்விப்பட்டேன். ஐஸ்வரராய் ஜுரம் உலகம் எல்லாம் பரவும் போது மைஎஸ்.பி.பி ப்ளாக் மட்டும் என்ன விதி விலக்கா? நாமும் போடாவிட்டால் என்னாவது இந்த ப்ளாக்கின் ரசிகர்கள் கோவிக்கமாட்டார்களா? (சந்தடி சாக்கில் நானும் ஐஸ்வரராய் பற்றி சிலது எழுதிவிட்டேன் அப்பாடா ஹி..ஹி..ஹி.. கண்டுக்காதீங்கோ.)
Image and video hosting by TinyPic
அமிதாபின் புதல்வர் அபிசேக் பச்சன், உலக அழகி ஐஸ்வராய் நடித்திருக்கிறார் எல்லோரின் கனவுகளிலும் மண் அள்ளி போட்டுவிட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று பத்திரிக்கையில் செய்தி அடிபட்டுகொண்டே போகிறது பொருத்திருந்து பார்ப்போம். பத்தோடு பதினொன்றாய் வாழ்த்து சொல்ல இப்போதாவது ஒரு வாய்ப்பு த்ருவார்களா என்று பார்க்கலாம். பாலு, சித்ராவின் குரலை இந்த பாடல் வைரமுத்துவின் போதையான வரிகளில் ரஹ்மான் இசையில் கேட்கலாமா… பழைய பாலுவின் போதை குரல் மீண்டும் கேட்க ஒரு வாய்ப்பு..

குறிப்பு: பாட்டை ஒடவிட்டு பாட்டை பாடி பாருங்கள் இல்லயென்றால், பாடல் காட்சியை பார்த்திருந்தால் தப்பித்தீர்கள் என்னைபோல் பார்க்காதவர்களூக்கு தலையும் காலும் ஒரு மண்ணும் புரியாது.

ரெண்டு மாங்கா டோய்..
ரெண்டு மாங்கா டோய்..
அட ஒத்த கல்லுல
அட ஒத்த கல்லு ரெட்ட மாங்கா
அட ஒத்த கல்லுல
அட ஒத்த கல்லு ரெண்டு மாங்கா

யெல யெல யெல யெல
யெல யெல யெல யெல

ஜோடி ஜோடி ஜோடி தான்
எதுவும் ரெண்டு தான்
ஆணும் பொண்ணும் வானு மண்ணும்
எதுவும் ஜோடி தான்
போடு குரு போடு குரு
பாவம் என்னாய்யா
ஒண்ணு ஒண்ணு ஒண்ணெல்லாம் ரெட்டையாச்சுனா
தாலி கட்டும் பெட்டையோ ரெட்டையாச்சுனா

பார்த்து குரு பார்த்து குரு
பதில் சொல்லையா

பாடத்தில் பெரிய சங்கிலி ரெண்டு சேராதோ
கைரெண்ட வெலங்கு ரெண்டு கட்டிவிடாதோ
ஒத்த நெஞ்சு தாங்குமோ
யெம்மோ யெம்மோ யெம்மோலே
யெம்மோ யெம்மோ யெம்மோலே
யெம்மோ யெம்மோ யெம்மோ யெம்மோலே
யெம்மோ யெம்மோ யெம்மோலே
யெம்மோ யெம்மோ யெம்மோலே
ஒத்தையம்மா ரெட்டை பிள்ளைதான்

ஜோடி ஜோடி ஜோடி தான்
எதுவும் ரெண்டு தான்
ஜோடி ஜோடி ஜோடி தான்
எதுவும் ரெண்டு தான்
எதுவும் ஜோடி தான்
போடு குரு போடு குரு
பாவம் என்னய்யா

ஓஹோ ஹோ ஹோ ஹோ பாப்பாய்யா வணக்கம்
நாசர் பாய் சலாம்
ஹே சீதம்ம ராம் ராம் உன் பேர மறந்துட்டேனே
ஹரெரெரெரே
நில மட்டும் உச்சியிலி ரெண்டு முலைச்சிட்டா
பகலுக்கொன்னு ராவுகொன்னு ஒத்திவெச்சிகிட்டா
கரெண்ட் கட்ன்னா ஒத்த நிலவ ஏத்துக்குவேன்
ஊரு பார்த்து கேட்குமே எவன் செஞ்சது டோய்
போதை ஏற மேதை ஆகி புத்தி வந்துருச்சு குரு.

ஜோடி ஜோடி ஜோடி தான்
எதுவும் ரெண்டு தான்
தாலி கட்டும் பெட்டையும்
எல்லாம் ரெட்டையாச்சு ன்ன
பார்த்து குரு பதில் சொல்லய்யா

யெல யெல யெல யெல
யெல யெல யெல யெல
யெல யெல யெல யெலோ

கண்ணு ரெண்டு பூத்து கெடக்க
காத்திருக்க முலைச்ச கத்திருக்க

ஹே புல்ல பெத்த ஒடம்பே
பூத்து நிக்கும் அரும்பே
வெயில் பட்டு வாடிவிடாதே
மொத்ததில் ரெட்டை நான் பெத்துருக்கேன்
கட்டு ஒடம்பே வெச்சுரிக்கேன்
இன்னும் ரெண்டு பெத்துக்கப்போறேன்

ஹே சின்னா கிறுக்கு முத்திரிச்சே
கன்னு கைத்த அத்திரிச்சே
தன்னித்தொட்டியில் சிக்கி கிச்சே – பொலம்பினிகிரிச்சே
ஹே சின்னா கிறுக்கு முத்திரிச்சே
கன்னு கைத்த அத்திரிச்சே
தன்னித்தொட்டியில் சிக்கி கிச்சே – பொலம்பினிகிரிச்சே
உன் புட்டி வாசம் நிருதிகோ
புத்தி கொஞ்சம் திருத்திக்கோ
பில்லை பெத்த அப்பனா
குத்துகல்ல போல நில்லு ஹரேரே
இவங்கோ சொல்லறத கேளு

மூணு பக்க்ம் கடலு தண்ணி முட்டி நிக்குது
பூமி கூட தண்ணீப்போட்டு தலைய சுத்துது
பொன்னுமயிலே பொன்னுமயிலே பொன்னுமயிலே
ஒதத நெஞ்சு தாங்குமோ தாங்குமோ தாங்குமோ

யெம்மோ யெம்மோ யெம்மோ யெம்மோ
யெம்மோ யெம்மோ யெம்மோலோ
யெம்மோ யெம்மோ யெம்மோலோ
யெம்மோ யெம்மோ யெம்மோ யெம்மோ
யெம்மோ யெம்மோ யெம்மோலோ
யெம்மோ யெம்மோ யெம்மோ யெம்மோலோ
யெம்மோ யெம்மோ யெம்மோலோ
யெம்மோ யெம்மோ யெம்மோலோ

ஒத்தையம்மா ரெட்டை பிள்ளைதான்

பொங்குதே புன்னகை

February 21, 2007

Image and video hosting by TinyPic
ஒரு பழைய பாடல் கேட்போமா?.. திருமதி. பி.பானுமதி டைரக்சன் மற்றும் இசையமைப்பிலும் ஒரு இனிமையான பாடல் கவிஞர் கண்ணதாசனின் அழகான வரிகளைக்கொண்ட பாடல் “பொங்குதே புன்னகை” இந்த பாடல் “இப்படியும் ஒரு பெண்” என்ற படத்தில் வருகிறது. இந்த படத்தில் ஷீலா, ரவிசந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் என்னுடைய ஸ்கூல் இறுதி ஆண்டில் 1975 வெளிவந்தது. இந்த பாடலை பாலுவுடன் சேர்ந்து பி.வசந்தா பாடியுள்ளார். இவர் சில பாடல்களே பாலுவுடன் பாடியிருந்தாலும். எல்லா பாடல்களூம் இனிமையாக இருக்கும் அதிகபட்சம் (ஹம்மிங்) ஆலாபனை அதிகம் வரும் பாடல்களே பாடியிருப்பார் உதாரானம் பொட்டுவைத்த முகமோ, திருமகள் தேடி வந்தாள் போன்ற பாடல்கள். தொடக்கத்தில் வரும் //ஹோ ஹோ.. ஹோ ஹோ.. ஹோ ஹோ.. ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஹெ ஹே.. ஹெ ஹே…// பாலு குரலில் வரும் ஹம்மிங் நம் நினவுகளை கொசுவத்தி சுருளாய் சுற்றிக்கொண்டு சென்று விடும்.

ஹோ ஹோ.. ஹோ ஹோ.. ஹோ ஹோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
ஹெ ஹே.. ஹெ ஹே…

பொங்குதே புன்னகை
பொங்குதே புன்னகை

புள்ளியிட்ட கலைமானை
அல்லியிட்ட விழியோரம்

பொன்மின்னல் வெள்ளம் பொங்குதே

போதுமா புன்னகை
பொட்டு வைத்த முகத்தோடு
கட்டி வைத்த இதழ் மீது
புது வன்னக்கோலம் போதுமா
போதுமா புன்னகை

மணமகள் வைதேகி நடைப்பார்க்கிறேன்

தசரத ரகுராமன் முகம் பார்க்கிறேன்

இனி கல்யாணமே

சுப வைபோகமே

அது இல்லாவிடில்

கண்கள் மழை மேகமே

இந்த ரகுராமன் வனமெங்கும் ஒரு ராகமே

பொங்குதே புன்னகை

போதுமா புன்னகை

மழைக்காலம் வரும் போது

மழை வந்தது

மணக்கோலம் வரும் என்று

மனம் சொன்னது

அன்பு விளையாதது

நெஞ்சில் சிலையானது

கலையான நம் சொந்தம்

கலையாதது

பொங்குதே புன்னகை

போதுமா புன்னகை

புள்ளியிட்ட கலைமானை

அல்லியிட்ட விழியோரம்

பொன்மின்னல் வெள்ளம் பொங்குதே

பொங்குதே புன்னகை

மண்ணிலிந்தக் காதலன்றி

February 20, 2007

இது ஏற்கெனவே பதியப் பட்டப் பாடல்தான் என்றாலும் இந்த ஒளிக் கோப்புக்காக இன்னொரு முறை கேட்கலாம் – பார்க்கலாம். அதிலும் ஆரம்ப சில நொடிகளில் வரும் ராஜாவின் பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு ஒரு கண்கொள்ளாக் காட்சி.