Archive for March, 2007

அங்கம் புது விதம் அழகினில்

March 30, 2007

Image and video hosting by TinyPic
ஆலாபனை மற்றும் ஹம்மிங் பாட்டுக்கள் பாடுவது என்றால் பாலு அவர்களூக்கு அவ்வளவு அலாதி பிரியம். இதோ இந்த பாடலின் முதலில் வரும் ஆலாபனை ஒரு வித வித்தியாசமான உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நம்மை அப்படியே ஒரு பெரிய காலியான அறையின் நடுவே அமர்த்திவிடும் அங்கு பாடல் கேட்பது போல் தோன்றும். அதனுடன் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து அவர் போடும் அழகை இந்த வரிகளீல் கேளூங்கள். ///பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்.. பறவை பறக்கும் அழகோ..தேவியின் வென்னிய மேனியில் விளையாடும் பொன்னழகு//.. என்று பாலு அவர்களூம் //மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்….மயங்கி கழிக்கும் அழகோ..காதலின் ஆரம்ப போதையில்..உறாவாடும் உன்னழகு..// என்று எல்.ஆர்.ஈஸ்வரியும் நம்மை தங்களின் குரலால் அல்லாட வைக்கிறார்கள்..

படம்: வீட்டுக்கு வீடு
இசை: திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி , எல்.ஆர். ஈஸ்வரி
வருடம்: 1970

எல்.ஆர். ஈஸ்வரி: லலலலா லாலா ஆஆஆஆ

எஸ்.பி.பி: ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்

எல்.ஆர். ஈஸ்வரி:லலலல லாலா ஆஆஆஆ

எஸ்.பி.பி: ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்

எல்.ஆர். ஈஸ்வரி:லலலல

எஸ்.பி.பி
அங்கம் புது விதம் அழகினில்
ஒருவிதம் மங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புது விதம் அழகினில்
ஒருவிதம் மங்கை முகம் நவரச நிலவு

எல்.ஆர். ஈஸ்வரி:
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

எஸ்.பி.பி: நவரச நிலவு

எல்.ஆர். ஈஸ்வரி:அதிசய கனவு

எஸ்.பி.பி:நவரச நிலவு

எல்.ஆர். ஈஸ்வரி:அதிசய கனவு

எஸ்.பி.பி
பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வென்னிய மேனியில்
விளையாடும் பொன்னழகு

எல்.ஆர். ஈஸ்வரி:
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி கழிக்கும் அழகோ
காதலின் ஆரம்ப போதையில்
உறாவாடும் உன்னழகு

எஸ்.பி.பி: கற்பனை அற்புதம்

எல்.ஆர். ஈஸ்வரி:காதலே ஓவியம்

எஸ்.பி.பி: தொட்டது பட்டதும்

எல்.ஆர். ஈஸ்வரி:தோன்றுமே காவியம்

எஸ்.பி.பி:கற்பனை அற்புதம்

எல்.ஆர். ஈஸ்வரி:காதலே ஓவியம்

எஸ்.பி.பி:தொட்டது பட்டதும்

எல்.ஆர். ஈஸ்வரி:தோன்றுமே காவியம்

எஸ்.பி.பி:
அங்கம் புது விதம் அழகினில்
ஒருவிதம் மங்கை முகம் நவரச நிலவு

எல்.ஆர். ஈஸ்வரி:
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

எஸ்.பி.பி:
தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடகப்பார்வையில்
கலை நாளூம் சொல்லிவிடு

எல்.ஆர். ஈஸ்வரி:
பாரெனும் மெல்லிய பனியில் ஓடிய
பருவமெனும் காலை இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு

எஸ்.பி.பி:வந்தது கொஞ்சமே

எல்.ஆர். ஈஸ்வரி:வருவதோ ஆயிரம்

எஸ்.பி.பி:ஒவ்வொரு நினவிலும்

எல்.ஆர். ஈஸ்வரி:உலகமே நம்மிடம்

எஸ்.பி.பி:
அங்கம் புது விதம் அழகினில்
ஒருவிதம் மங்கை முகம் நவரச நிலவு

எல்.ஆர். ஈஸ்வரி:
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

Advertisements

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே

March 29, 2007

Image and video hosting by TinyPic

குழந்தைகளூக்கு யோசனை சொல்லும் பாடல்கள் நிறைய வந்திருக்கின்றன. பாலு அவர்கள் பாடிய இந்த பாடல் தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் வருகின்றன. தீர்க்க சுமங்கலி இந்த படத்தின் பெயரை கேட்டாலே பல பேருக்கு உடனே நினவுக்கு வரும் பாடல் ஒன்றே ஒன்று மல்லிகை பூபோல பல்லைக்காட்டி அடிக்கடி சிரிக்கும் நடிகை கே.ஆர்.விஜயாவிற்காக வாணிஜெயராம் அவர்கள் பாடிய மிகவும் பிரபலமான பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் தான் அது. அந்தகாலத்தில் எல்லோரையும் ஒரு வித மயக்கத்தில் ஏற்படுத்திய பாடல். இந்த பாடலில் கே.ஆர்.விஜயா அவர்கள் தன் பால் போன்ற பச்சரிசி பல்லை காட்டி சிரித்து சிரித்து பாடி நடித்த இந்த காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்கமுடியாது. பாலு அவர்களின் தளத்தில் மற்ற பாடலை ஏன் இப்படி விமர்சிக்கிறார் என்று நினக்கத்தோன்றுகிறதா? நல்ல விஷயங்களை பாராட்ட நேரம், இடம், பார்க்ககூடாது, தள்ளியும் போடக்கூடாது. ஏனென்றால் பிறகு மறந்துவிடும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பாலு அவர்கள் என்னிடம் நேரில் சொல்லியபடி நீங்கள் என் ரசிகர்கள் தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்க என் பாட்டுக்களை விட மற்ற பிரபல பாடகர்கள் கோவைக்கு வரும் போது அவர்களை சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்து அவர்களின் பாடல்களையும் கேட்க வேண்டும். என்று அறிவுரை தந்தார். அதே யோசனையைத்தான் பாலு அவர்களின் ரசிகர்களூக்கும், இனி வரப்போக்கும் குழந்தை பாலு ரசிகர்களூக்கும் இந்த பாடல் போல் யோசனை சொல்லிக்கொள்வதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

பாடல்: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
படம்: தீர்க்க சுமங்கலி
பாடியவர்கள்: பாலு, சுசீலா
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்: 1974

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டு என்பேன்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்

அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்

அன்னை தந்தை பிள்ளை என்று
அவன் தான் தந்தான் மனிதனிடம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்

தேகம் என்பதை பார்த்திருந்தால்
தினமும் வயது வளருமடா
உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால்
உலகில் அமைதி கிடைக்குமடா
தேகம் என்பது கோயிலடா
அதில் உள்ளம் என்பது தெய்வமடா

அம்மா அப்பா செய்வது போலே
நாமும் கேட்பதனாலே
இன்பம் வளரும் துன்பங்களாலே
எல்லாம் உண்டு வாழ்க்கையிலே

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்

கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே
முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே
ஸ்ரீராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே
நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே

ஆறாம் வயதில் படித்தது தான்
அறுபது வரைக்கும் வளருமடா
சேரும் இடத்தில் சேர்வதுதான்
சீரும் சிறப்பும் வழங்குமடா
நல்லவர் நூல்களை படித்துவிடு
வரும் நண்பனை ஒழுங்காய் தேர்ந்து எடு

தென்னை மீது தேங்காய் வருது
வாழை மீது பழங்கள் வருது
அன்னை போல பிள்ளைகள் நாங்கள்
அப்பா போலே வளர்வோம் நாளை

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்

காலங்களாலே கடவுள் தந்தான்
கண்ணிரு நாயகனை
கருணையானாளே மேகம் தந்தான்
கனிவுள்ள செல்வங்களை
ஆலமரம் போல் நாளும் வளர
அருள்வான் வாழ்க்கையிலே
அன்னையை தேடி ஆனந்தம் பாடி
வாருங்கள் பிள்ளைகளே

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 9

March 28, 2007

இந்த வார நிகழ்ச்சி அருமையானதொன்று. பங்கேற்றவர்களும் சளைக்காது நன்றாகப் பாடினார்கள். நடுவராக விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான திரு.ராமமூர்த்தி. அடிக்கடி மெல்லிசை மன்னர் கூட இல்லாததைப் பற்றிச் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டேயிருந்தார்.

பாலு

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

என்ற திருக்குறளுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

முதலில் பாட வந்தவர் ரவி. இவரை ஏற்கெனவே SS Music-இல் வந்த இசையமைப்பாளர்கள் தீனா, கங்கை அமரன் பங்குபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். அதில் செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடலை அட்டகாசமான ஆலாபனையுடன் ஸ்ருதி சுத்தமாகப் பாடி அசத்தியிருந்தார். இந்நிகழ்ச்சியிலும் அவர் பங்குபெற்றது நல்ல விஷயம். இதில் அவர் பாடியது அபூர்வ ராகங்களிலிருந்து “அதிசய ராகம் ஆனந்த ராகம்” பாடலை. நன்றாகப் பாடினார். அது இங்கே.

இப்பாடலைப் பற்றி பாலுவும் ராமமூர்த்தி அவர்களும் சிலாகித்துச் சொன்னார்கள். அதிசய ராகத்தில் (மகதி) அமைந்த இந்தப் பாடலைப் பற்றி அவர்கள் சொன்னது இதோ.

இரண்டாவதாகப் பாட வந்தவர் நேத்ரா, சென்னையிலிருந்து. கணீரென்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “பேசுவது கிளியா” பாடலைப் பாடினார். அவர் பாடியது இங்கே.

மெல்லிசைப் பாடலைக் கீழ் ஸ்தாயியில் பாடுவதில் உள்ள கஷ்டத்தை பாலு விவரித்து இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டது இங்கே.

பின்பு பங்களூருவிலிருந்து வந்த கிருத்திகா – இவரது லேசான ஒற்றைத் தெற்றுப் பல் நடிகை சித்தாராவை நினைவூட்டியது – கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, கன்னடத்தின் பாவ (Bhava) கீதை ஆகியவற்றைப் பயின்று வருவதாகக் குறிப்பிட்டுவிட்டு கீரவானி ராகத்தில் அமைந்த ஜானியில் ஜானகி பாடிய காற்றில் எந்தன் கீதம் என்ற அற்புதப் பாடலைப் பாடினார். ஆரம்ப ஆலாபனையில் லேசாகத் தடுமாறினார். பின்பு நன்றாகப் பாடினார். அது இங்கே.

இவருக்கான பாலுவின் மறுமொழியும் மனோபாலா பாடலைப் பற்றிக் குறிப்பிட்டதும் இங்கே.

நான்காவதாகக் கேரள திருச்சூரிலிருந்து வந்திருந்த பெண் குட்டி நிவேதிதா முதல் மரியாதை படத்தில் ஜானகி பாடியிருக்கும் அருமையான பாடலான ‘ராசாவே ஒன்ன நம்பி’யை அருமையான புன்னகையுடனும் நல்ல Expressions-களுடனும் பாடினார். அது,

மனோபாலா இந்தப் படத்தின் படபிடிப்பில் சிவாஜி பாரதிராஜாவுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அது,

பின்பு தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த விஜயலக்ஷ்மி வானம்பாடி படத்தில் சுசீலா பாடியுள்ள அருமையான ‘கங்கைக் கரை தோட்டம்’ பாடலை அழகாகப் பாடினார்.

இதற்கான பாலுவின் மறுமொழி இங்கே.

இறுதியாகப் பாட வந்தவர் கேரளா, திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்த ஷாலு. சின்னக் குயில் சித்ராவை பயிற்றுவித்த ஓமனக் குட்டி அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டு வருவதாகச் சொன்னார். அவர் பாடியது அலையாயுதேவில் சாதனா சர்கம் பாடிய வைரமுத்துவின் வரிகளில் ‘சிநேகிதனே’ பாடலை. ஏனோ இந்தப் பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம் ஒரு படத்தில் விவேக்கை ஓட்டும் கோவைசரளா (பிச்சைக் காரி வேஷம்) சினேகிதனேய் என்று இழுத்து இழுத்துப் பாடியதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது! 🙂

ஷாலு பாடியது இங்கே.

பல்லிடுக்கிற்குள் பாடாமல் வாய் நிரம்ப வாயைத் திறந்து பாட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொன்னது இங்கே.

இறுதியாக பாலு பேசிய சமூகப் பிரச்சினை – குடி தண்ணீர் பற்றாக்குறை பற்றியது.

எண்பதுகளின் துவக்கத்தில் முதல் தேசிய விருதை வாங்குவதற்காக டெல்லி சென்றிருந்த பாலு அங்கு ஏற்பட்ட அனுபத்தைப் பகிர்ந்து கொண்டார். தெருவில் பானைத் தண்ணீரை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்களாம். அப்போது தண்ணீரை விற்பது அதிசயமாகத் தெரிந்தது. இந்த 25 வருடங்களில் தண்ணீர் பற்றாக்குறை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டு தண்ணீரைச் சேமிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகாமல் கவனமாக உபயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பல வருடங்களுக்கு முன்பே இயக்குநர் சிகரம் “தண்ணீர் தண்ணீர்” படத்தை எடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார்.

உண்மைதான். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த தலைமுறையினர் நட்டாற்றில் – சுடு மணலில் – நிற்க வேண்டியிருக்கும்.

***

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 8

March 28, 2007

ஏனோ தெரியவில்லை. 24-பிப் நிகழ்ச்சியும் 3-மார்ச் நிகழ்ச்சியும் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இரண்டாவதாக இதற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்ட போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்தப் பாகங்களில் பங்கெடுத்தவர்கள் ஒரு மாற்று குறைவு என்றே எனக்குத் தோன்றியது.

மார்ச் 3-ஆம் தேதியன்று ஒளிபரப்பான பகுதியின் ஒலிக் கோப்பை இங்கே கேளுங்கள். இதை அனுப்பிய நண்பர் கோவை ரவீ அவர்களுக்கு நன்றி.

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 7

March 28, 2007

24-பிப்ரவரி அன்று ஒளிபரப்பான என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் நண்பர் கோவை ரவீ அவர்கள் அந்நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார். 24-பிப்ரவரி அன்று ஒளிபரப்பான முதல் பகுதியின் ஒலிக்கோப்பு இதோ.

EEP 24.2.07.mp3

ஆரம்பம் இன்றே ஆகட்டும்

March 28, 2007

Image and video hosting by TinyPic

1970 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த
படம் காவியத்தலைவி. முதன் முதலில் ஹோட்டல் ரம்பா படம் மூலம் அத்தானோடு பேசி என்ற பாடலை பாலு அவர்களிடம் சோடியாக இணைந்து பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள்
பொதுவாகவே ஈஸ்வரி குரலில் ஒரு வித கிக் இருக்கும். பாடல் வரிகளை நன்றாக உச்சரித்து
பாடக்கூடியவர். இதோ இந்த பாட்டில் வரும் அவரின் இனிமையான ஆலாபனைகளை அனுபவியுங்கள் அவர் பாடும் வரிகளையும் கேளுங்கள் பாலுவிடம் எவ்வளவு ஈடு கொடுத்து
பாடுகிறார் என்று..//சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் சந்திக்கும் வேளை ஏனம்மா..ஆ..ஆ..ஆ..ஆ…பட்டங்கள் பெற்றால் போதுமா..பண்பாடும் மாறிக்கூட போகுமா..ஆரம்பம் இன்றே ஆகட்டும்..//

கவியரசர் கண்ணதாசனின் வரிகளுடன் கொசுவத்திசுருளும்
இன்றே சுத்தட்டும்…ம்ம்ம்ம்ம்ம்.. ஆஹாஹா அப்போதும் தள்ளி போடக்கூடாது..
இப்போதே.. ஆரம்பம் இன்றே ஆகட்டும்..

ஆ..ஆ..ஆ..ஆ…
ஆ..ஆ..ஆ..ஆ…

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆரேழு நாட்கள் போகட்டும்

ஆஹாஹா அப்போதும் தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக்கொள்ளக்கூடாது

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆரேழு நாட்கள் போகட்டும்

ஆஹாஹா அப்போதும் தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக்கொள்ளக்கூடாது

பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாளே பார்த்தால் போதுமோ
ஆ..ஆ..ஆ..ஆ..கண்டாளே உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆரேழு நாட்கள் போகட்டும்

ம்ம்ம்ம்ம் அப்போதும் தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக்கொள்ளக்கூடாது

முத்து சரம் வாடும் வண்ணம் மெல்ல அழைக்க
பட்டு தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் இணைக்க

முத்தமிடலாம் கொஞ்சம் பொருத்தால்
சப்தமிடுவேன் சுறு சுறுப்பாய்

லலலாஆஆஆஆ லலலாஆஆஆஆ

சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் சந்திக்கும் வேளை ஏனம்மா
ஆ..ஆ..ஆ..ஆ…பட்டங்கள் பெற்றால் போதுமா
பணபாடும் மாறிக்கூட போகுமா
ஆரம்பம் இன்றே ஆகட்டும்

ஆ..ஆ..ஆ..ஆ…ஆரேழு நாட்கள் போகட்டும்

ஆஹாஹா அப்போதும் தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக்கொள்ளக்கூடாது

என் அன்பே அன்பே

March 28, 2007

Image and video hosting by TinyPic

//உன் காதல் மாளிகை நான் அல்லவோ..ஓ ஓ..// என்று ஜானகி மேடமும்,
//உன் ராகமாலிகை நான் அல்லவோ..ஓ ஓ.. // பாலு அவர்களூம்..
பாடல் வரிகளை ஒருவர் மாற்றி ஒருவர் இசையின் கடலில்
நீந்தி விளையாடும் அழகை கேளுங்கள். இந்த பாடலின் இனிமையில் மனம் மயங்காதவர்
எவரும் உண்டோ? இதோ மேலும் அழகான வரிகள் // பூம்பாவைமனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் தேன்தேன் தரும் ப்ருந்தாவனம் கண்ணே.. உன் ப்ரேமாயனம் பாராயனம் செய்கிறேன்
தினமும் காதல் கிளி கீதாஞ்சலி கொய்கிறேன்.// இதேபோல் இருவரும் பாடிய பல பாடல்கள்
அதிகம் கேட்டீருப்பீர்கள். பாடும் ஆசை உள்ளவர்களுக்கு பாடி பழகி பார்க்க இது ஒரு அருமையான
பாடல். பாலு அவர்கள் எப்படி அனுபவித்து பாடியிருக்கிறார் இந்த வரிகளை //நீ வாராமலே பொழுதாயிரம் போனது..
அழகே பலராத்திரி சிவராத்திரி ஆனது..//

படம்: உன்னைத்தேடி வருவேன்
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
வருடம்: 1985
டைரக்டர்: C.V. Sridhar

ஜா: என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
பாலு: நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

ஜா: உன் காதல் மாளிகை நான் அல்லவோ..ஓ ஓ
பாலு: உன் ராகமாலிகை நான் அல்லவோ..ஓ ஓ

ஜா: என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
பாலு: நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

ஜா: பூம்பாவைமனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் தேன்தேன் தரும் ப்ருந்தாவனம் கண்ணனே
பாலு: உன் ப்ரேமாயனம் பாராயனம் செய்கிறேன்
தினமும் காதல் கிளி கீதாஞ்சலி கொய்கிறேன்

ஜா: காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் பாட
பாலு: சந்திரோதயம் நீயாக சொர்க்காலாயம் நான் கான

ஜா: கண்ணா உன் கை வண்ணம் தாளாத வைபோகம்
பாலு: அன்பே உன் சிங்காரம் அழகான ஸ்ரீராகம்

ஜா: ஓ ஓ ஓ ஒ அன்பே அன்பே அன்பே வா
பாலு: என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
ஜா: நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

பாலு: நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பலராத்திரி சிவராத்திரி ஆனது..
ஜா: வான் நான் பாடுவேன் உன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்

பாலு: உன்மேலே ஒரு கண்ணாக உன்னோடு நான் ஒன்னாக

ஜா: என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு
பாலு: மெதுவாக தொட்டாலும் பதமாக பட்டாலும்

ஜா: இதுமேனி நோகாதோ புண்ணாகி போகாதோ
பாலு: ஓ ஓ ஓ ஒ அன்பே அன்பே அன்பே வா

ஜா: என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
பாலு:நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

ஜா: உன் காதல் மாளிகை நான் அல்லவோ..
பாலு:உன் ராகமாலிகை நான் அல்லவோ..

ஜா: என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
பாலு: நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

பாலுவின் பாமாலை தொகுப்பு # 3

March 27, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

போனால் போகட்டும் என்று விடமுடியாததும் மேலும் போனால் என்றும் கிடைக்காததுமான உங்கள் பொன்னான ஒரு மணிநேரத்தை… சந்தனத்தில் மணக்கவைத்து.. பாலாற்றில் தோய்த்து எடுத்து.. பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்து.. மா, பலா, வாழை முக்கனிகளின் சுளைகளை
தேனில் ஊறவைத்து சுவைத்து பார்க்க..நமக்கெல்லாம் படைக்கின்ற காந்தக்குரலோன்
திரு. யாழ் சுதாகரின் கவிதை வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும், பிரமிக்க வைக்கும்
இசையருவியாய் மேடு பள்ளங்களில் தவழ்ந்து வரும் கீதநதி பாலுவின் பாமாலை மூன்றாவது தொகுப்பை தங்களின் செவிக்கு படைக்கும் சுதாகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவருடன் நானும் பெருமையடைகின்றேன், மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், இந்த பாலுவின் பாமாலைதொகுப்பில் பலபாடல்கள் ஏற்கெனவே முன்பதிவாக வந்திருந்தாலும் இந்த 14 பாடல்களின் இனிமையை எத்தனதடவை கேட்டாலும் தித்திக்காது அப்படித்தானே..?

குறிப்பு: இந்த தொகுப்பில் இடம் பெறும் பாடல்கள் வரிகள் மற்றும் தகவல்கள் பின்னர் பதியப்படும் என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். — கோவை ரவீ

குயில் குதுகுலம் பொங்கும் பாடல்களோடு சுதாகர்
1.காலங்களே காலங்களே

காதல் இசை பாடும் இன்னொரு ஊஞ்சல்

2. ஓ மைனா ஒ மைனா

ஆயிரம் ஆயிரம் நினவுகளை அசைபோடும் பாடல் பொக்கிஷங்களுக்கு சுதாகர வரவேண்டும்.

3.ஆயிரம் நினவு

எங்கே அந்த சொர்க்கம் இங்கே அந்த சொர்க்கம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினம் கொஞ்சும் நந்தவனக்குரலில் இருக்கின்றது.

4. இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்ல

என்னைவிட்டு வேறுயாரு இது போன்ற அசத்தலான பாடல்களை தருவார்கள்.

5. அவள் ஒரு நவரச நாடகம்

ஆயிரம் இரவை ஒன்று சேர்த்தால் வருகின்ற கொடுமை அதுதான் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் நெடில் குறில் மகிமை.

6. ஆயிரம் நிலவே வா..

தேன் சொட்டுகின்ற இனிமையை மாங்கனிகளுக்கும் சவால் விடுகின்ற குரல்..

7. மாதமோ ஆவனி மங்கையோ மாங்கனி..

ஆறு வயது முதல் 100 வயது வரை அனைத்து தரப்பு ரசிகநெஞங்களையும் வசப்படுத்தும் பாடல்களோடு சுதாகர்.

8. வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச்சேரும்..

எனக்கே கிடைத்த வெற்றிகளில் நான் பெருமை படுகின்ற வெற்றி பழைய பாடல் பொக்கிஷங்களோடு எனது வாழ்கை பயணம் நடைபெறுவது.

9. இயற்க்கை எனும் இளையகன்னி

மெல்லிசை மன்னரின் அசத்தலான இசையில் மற்றுமொரு பாடல் பொக்கிஷம்..

10. பொட்டு வைத்த முகமோ…

தேனியே தேன் கேட்க்கும் அதிசயம், கனியே கனிக்கேட்கும் விநோதம்…

11. இதழே.. இதழே தேன் வேண்டும்..

இதயம் தொடுகின்ற பாடல் தெரிவுடன் யாழ் சுதாகர்..

12. இமயம் கண்டேன் பொன் கட்டில் கட்டும் நேபாளத்தின்..

அதி மதுர கீதங்களை தொடர்ந்து தருவது என்பது அட்சயப்பத்திரத்திலிருந்து எடுப்பது போல..

13. நாலு பக்கம் வேடருண்டு

பாடல்கள் துவக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாபனை செய்கின்ற அழகே தனி..

14. காதல் ராணி கட்டிகிடக்க..

நீராழி மண்டபத்தில்..

March 23, 2007

Image and video hosting by TinyPic
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, வாலி அவர்கள்
நீராழி மண்டபத்தின், இசைதர்பாரில் வீற்றிருக்க
பீ.சுசீலா, பாலு அவர்களின் குரல்கள்
நாட்டிய நர்த்தனமிட….நம்மையெல்லாம்
அந்த இசைதர்பாருக்கே அழைத்து செல்கிறது
எம்.ஜி.ஆர்,, வாணிஸ்ரீ நடிப்பில்
இந்த தலைவன் படப்பாடல்.. கேளுங்கள்..

பாடல் : நீராழி மண்டபத்தில்
படம்: தலைவன்
பாடியவர்கள்: பாலு, சுசீலா
பாடல்: வாலி
இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
வருடம்:1970

நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கைத்தொடும்போது தலை குனிந்தாள்

வாடையிலே வாழை இலை குனியும் ம்ம்ம்ம்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டாள் – அவள்
பூமுகத்தில் முத்தம் நூறு கொண்டான்

நீராழி மண்டபத்தில்

தேனளந்தே இதழ் திறந்திருக்க – அதை
தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

போய் மறைந்த நிலவும் முகிழ்ந்திருக்க வந்து
வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துறைக்க

பேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெருவதிலே ஒன்றை இனைந்திருக்க
கீழ்திசையில் கதிர் தொன்றும் வரை அங்கு
பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை

நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

ஊர்கோலம் போகின்ற..

March 22, 2007

Image and video hosting by TinyPic

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் போல
கோவை ரசம் ஊற்றெடுக்கும் பாலுவின் குரலுடன்
பூச்சுடும் நிலமங்கை எல்.ஆர்.ஈஸ்வரியின் வசீகர குரலும்
இணைந்து வழங்கும் இனிமையை காண
அமைதியை நாடும் நமக்காக… ஓர் அழகான பாடல் கேட்போமா?

பாடல்: ஊர்கோலம் போகின்ற
படம் : அக்கரை பச்சை
பாடியவர்கள் : பாலு, எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1974

ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
ஊராருக்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
ஊராருக்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
ஊராருக்கு சொல்லுங்கள் ஒன்று

கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடைபோடும் வேளை
உறவாட இதமான சோலை – இதை
அறியாது நகரத்தின் சாலை
இது ஒரு வாழ்வு இனிமையை காண
இது ஒரு வாழ்வு இனிமையை காண

அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று
கொஞ்சுவதை பார்த்து கோவை ரசம் ஊற்று
கோவை ரசம் ஊற்று.

பூச்சுடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்

ஒன்றோடு ஒன்றாக கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓடும்

ரதி எனும் தேவி
ரகசியம் பேச
ரதி எனும் தேவி
ரகசியம் பேச

மதன் எனும் தேவன்
மடி விளையாட

நாதஸ்வரம் மேளம் நதிகள் இடும் தாளம்
நாதஸ்வரம் மேளம் நதிகள் இடும் தாளம்

தாளாட்டும் மேகம் தாளவில்லை மோகம்
தாளவில்லை மோகம்…