Archive for April, 2007

பொன் ஒன்று கண்டேன்

April 30, 2007

பொன் ஒன்று கண்டேன்…

படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதந் ராமமூர்த்தி
பாடகர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், டி,எம்.சவுந்திரராஜன்
எழுதியவர்: கண்ணதாசன்

Image and video hosting by TinyPicImage and video hosting by TinyPic

பாலு அவர்கள் பாடாத பாடல்

Image and video hosting by TinyPicImage and video hosting by TinyPic

பாடலை கேட்டீர்களா நண்பர்களே? டி.எம்.எஸ் அண்ணாவின் குரலையும். பி..பி.ஸ்ரீனிவாசன் அவர்களின் குரலையும் இந்த பாடலில் பலமுறை கேட்ட அனுபவஸ்தர்களுக்கும், பழைய பாடல் விரும்பிகளுக்கும். இந்த பாடலை கேட்டு ரசிப்பதற்க்கு சிரமமமாகத்தான் இருக்கும். இந்த பாடல் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாலு அவர்களூம், அவரின் புதல்வர் சரண் அவர்களும் இணைந்து பாடிய பாடல். இந்த பாடல் பாலு தீவிர ரசிகர்களூக்காக பதிவாக போட்டுள்ளேன். பழைய பாடலின் உயிரோட்டம் அப்படியே ஒவ்வொரு வரியிலும் தங்களின் குரலில் இருவரும் வெளிகாட்டியுள்ளார்கள். எனக்கு தெரிந்தவரை பல தடவை இந்த பாடலை அவரின் நிகழ்ச்சியில் நேரடியாக கேட்க வாய்ப்புகிடைத்தது. எல்லா நிகழ்ச்சியிலும் நான் இந்த பாடலை மெய்சிலிர்த்து மிகவும் ரசித்துக்கேட்டேன். இந்த பாடலைப்பாடும் போது அதிக இடங்களில் தன் மகன் சரணை கொஞ்சுவார் அதை காண கண்கோடி வேண்டும். இந்த பாடலை சிரமப்பட்டு தேடிபிடித்து கோப்பாக இங்கு வழங்கியிருக்கிறேன்.

ஒரு வார இதழில் இந்த செய்தியை ஒரு சில மாதங்களுக்க் முன் படிக்க நேர்ந்தது. அதை தங்களீடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் டி.எம்.எஸ் அண்னா உடல்நிலை சரியில்லாமல் சில மாதங்கள் படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். பாலு அவர்கள் கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்தபோது. மேற்கண்ட பாட்லையும், மற்றும் நாளைநமதே பாடலையும் தான் நிகழ்ச்சிகளீல் அடிக்கடி பாடுகிறேன் என்று சொன்னதற்க்கு. டி.எம்.எஸ் அண்ணா பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் பாலு அவர்களை ஆசிர்வதித்தார். இதேபோல் பாடாத பாடல்கள் பலவற்றை பாலு அவர்கள் பாட வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசை. அவை நிறைவேறுமா? பாலு அவர்களுக்கே வெளிச்சம்.

பாடல் வரிகள்: ஸ்ரீதர் ராஜகோபாலன் அவர்களுக்கு நன்றி

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

Advertisements

பாலுவின் பாமாலை தொகுப்பு # 5 (15 பாடல்கள்)

April 28, 2007

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

முதலில் பாடகர்கள் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் தனக்கு முன்னாலே பாடிய பாடகர்களின் பிரபல பாடலகளை பாடித்தான் வருவார்கள். திரு. டி.எம்.எஸ் அண்ணா தியாகராஜா பாகவதரின் பாடல்கள் சாயலில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். பாலு அவர்களூம் திரு. கண்டசாலா அவர்களின் குரலிலும், திரு. பி.பி,ஸ்ரீனிவாஸ் குரலிலும் நிறைய பாடல்கள் பாடித்தான் சினிமா உலகிற்க்கு வந்தார். பின்னர் அவரவரின் தனிப்பட்ட திறமையால் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டு தன் சொந்த குரலில் பாடி அசத்தி ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நின்றார்கள். இவை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். திரு.கண்டசாலா அவர்களின் குரல் சாயலில் பாலு அவர்கள் பாடிய பாடலை எனக்கு நீண்ட காலமாக கேட்க வேண்டுமென்று ஆவலாக இருந்தது. அவை இப்போது தீர்ந்துவிட்டது.

Image and video hosting by TinyPic

இனிப்பு பலகாரகடைக்குச்சென்றோமென்றால் அதுவும் வட இந்தியா ஸ்வீட் ஸ்டால்களில் பல விதமான இனிப்பு பதார்த்தங்கள் வைத்துருப்பார்கள் கண்ணிப்பறிக்கும் கலர்களில், பலவிதமான ருசிகளில் ஜிகினாவேலைப்பாடுகள் செய்து படையலாக அடுக்கி வைத்திருப்பார்கள் எல்லாவற்றையும் ஒரு கை பார்ர்கத்தோன்றும். எல்லா இனிப்புகளிலும் ஒரே சுவை சர்க்கரை சேர்த்திருப்பார்கள். அதேபோல் இங்கேயும் உங்கள் காதுகளுக்கு இனிப்பான பாலு அவர்களின் பாடல்களை படையலாக வைக்கிறேன். இதிலும் எல்லா பாடல்களிலும் சர்க்கரையாக பாலுவின் குரல் தான். இருந்தாலும் நம் ருசிக்காக எல்லா பாடல்களிலும் தனித்தனியாக சுதாகர் அவர்களின் சுவையான கவிதைக்குரல் நம் உள்ளங்களை தேன் குளத்தில் முக்கியெடுக்கும். அவர் கவிதைகுரல் பாலு அவர்களின் மீது அவர் கொண்ட அன்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பொதுவாகவே யாழ் சுதாகர் எல்லா பிரபல பாடகர்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வெங்கலக்குரலோன் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல்கள் அநேகம், எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரின்இசைத்தொண்டு வாழ்க வளர்க. மேலும் என் பள்ளிப்பருவத்தில் நான் மிகவும் ரசித்த இலங்கை வானோலி அறிவிப்பாளர்கள் அமரர் திரு. கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கும், திரு.அப்துல் ஹமீது அவர்களின் குரலுக்கும் அடிமையானவன், பலநாட்கள் கழித்து மீண்டும் யாழ் சுதாகரின் குரலால் ஈர்க்கப்பட்டு மயங்கி அவரின் படைப்புகளை இந்த தளத்தில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த பாடல்களை பல முறை தளத்தில் கேட்டுட்டிருப்பீர்கள் பலமுறை கேட்டாலும் ஒரு முறையும் சலிக்காத பாடல்கள். மேலும் “பழகப்பழக பாலும் புளிக்கும் என்பார்கள், ஆனால் இந்த பாலுவின் பாடல்களை கேட்க கேட்க மேன்மேலும் இனிக்கும்”. இந்த தொகுப்பை பலமுறை கேட்டுவிட்டேன். எனக்கு திகட்டவில்லை.
உங்களூக்கு?
உங்கள் ரசிகன் திரு.சுதாகர் அவர்களின் படைப்புகளை தங்களின் முன் வைத்திருக்கிறேன். முடிந்தவரை முழுவதையும் ஒரு கை பாருங்கள் நண்பர்களே. தேவையான இனிப்பான பாடல்கள் மட்டும் வேண்டுவோர் . ஒவ்வொரு ப்ளேயரின் அம்புகுறியின் மீதும் அழுத்துங்கள் உங்கள் செவிகளில் தேன் சொட்டுக்கள் சொட்ட ஆரம்பிக்கும்… பிறகு என்ன மகிழ்ச்சிதான். வார விடுமுறையை பாலுவின் தொகுப்புடன் கொண்டாடுங்கள்.

குறிப்பு: பாடல் தகவல்கள் வரிகள் பின்னர் சேர்க்கப்படும் அதுவரை பாட்டை கேட்டுக்கிட்டே இருங்க..

மலரும் நினவுகளுக்கு மரியாதை தருகின்ற மதுரகீதங்கள்

1. இறைவன் என்றோரு கவிஞன்
படம்: ஏன்
இசை: டி.ஆர்.பாப்பா

உன் அழகால் என் மனதை பரிதவித்தாய்
கண் அழகால் என் கவிதை அலங்கரித்தாய்
பின் அழகால் என் இமைகளை இயக்க வைத்தாய்
நடை அழகால் என் கவிதை சொக்க வைத்தாய்

2. படைத்தானே பிரம்ம தேவன்

படம்: எல்லோரும் நல்லவரே
இசை: வி.குமார்

இயற்க்கையின் ஒவ்வொரு வண்ணக்கோலத்திலும்,
வசீகரத்திலும் மட்டுமல்ல நான் ரசிக்கின்ற ஒவ்வொரு பாடலிலும்
நீ மட்டும் வந்து முகம் காட்டிச்செல்லுகின்ற அதிசயம் என்ன?.

3. அழகிய சென்னிற வாணம்

இசை: ஜி.கே.வெங்கடேஸ்

பொங்கும் பூங்குழலாக உள்ளம்
துள்ளவைக்கும் புதிய பாடலோ,
இதயம் இனிக்கின்ற இடைக்கால பாடலோ,
நெஞ்சில் நிறைந்த பழைய பாடலோ
எந்த வகை பாடலைக்கண்டாலும்
நல்ல பாடல் தருவேன்.

4. மேகமே தூதாகவா..

சங்கீத சாமரம் வீசுக்கொண்டிருக்கும்
அழகுக்கு இலக்கணமாய்

ஆடிவரும் இலக்கியமே
நிலவுக்கு இளையவளே
உன் பெருமை பாட வந்தேன்.

5. கண்ணே என் அழகு ராணி
படம்: பொக்கிஷம்
இசை: சத்யம்

ஆயிரம் நிலாவை சேர்த்தாலும்
அதை தங்கமாக அள்ளிப்போட்டாலும்
மயிலே உனக்கு நிகரில்லை
உன் அழகே கவிஞருக்கு பெரும்தொல்லை.

6. வா பொன்மயிலே எந்தன் ஏக்கத்தில் தவிக்கிறேன்.

படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா

இமைக்காக கண்ணில் சரிபாதி தந்தாலும் இறைவன்
இமைக்காக கண்ணில் சரிபாதி தந்தாலும் இறைவன்
உனக்காக நானோ என்னை முழுதும் தருவேன்.

7. தேவி….., தேவா…. அம்பிகை நேரில் வந்தாள்

உனது புன்னகையில் உதயமானதே என் கவிதை புத்தகம்
உனது புன்னகையில் உதயமானதே என் கவிதை புத்தகம்
அதன் இரண்டாம் பாகத்தை எழுதச்சொல்லுகின்றாய் எனக்கு சம்மதம்.

8..உன்னை நான் பார்த்ததில்லை

படம்: கண்ணாமூச்சி

சங்கீத சந்தோசம் தரும் சமுத்திரத்தில் மூழ்கி
யான் எடுத்த இன்னும் ஒரு முத்து.

9. சமுத்திர ராஜகுமாரி சுகபுஷ்ப சுகுமாரி..

பூங்குயிலின் தமிழ் கேட்டு பாடவந்தான்
ஏழிசையை அவன் சிரிப்பில் தேடிக்கண்டாள்
தேன் இனிமை தேவி முன்னிலையில் அனுபவித்தான்
அந்த பரவசத்தை பெருமிதமாய் பாட்டில் தந்தான்

10.. சப்தஸ்வர புன்னகையில் கண்டேன்

மலைத்தேன் அருந்தி வான் சொர்க்கம் அல்ல
நல்ல நேரம் பிறந்தது கலை பேசும் கண்ணே
என் ஆசை எல்லாம் படிக்க என் ராஜயோகம் பிறந்தது..

11.பொன்னான உலகம்

சரத்பாபு, மேனகா ஜோடி

அன்பு வந்து மெல்ல மனக்கதவை தட்டி திறந்தாள்
என் உள்ளம் எங்கும் ஆசைகளை கொட்டிக்கொடுத்தாள்
என் உள்ளம் எங்கும் ஆசைகளை கொட்டிக்கொடுத்தாள்

12 ஓர் ஆயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை

ஆனாலும் இசைக்கும் குயில்களின்
மயங்கி ஆனந்த ராகம் முடங்குது நெஞ்சம்
பூலோக சொர்க்கம் புன்னகை அமுதம்
உன்னை வர்ணித்து பாட வார்த்தைக்குள் தஞ்சம்.

13 நீ ஒரு ராகமாலிகை என் நெஞ்சம் ஒரு காதல் மாளிகை

படம்: பெண் ஒன்று கண்டேன்

தமிழ் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை
அது போல தான் யான் தொகுத்து தருகின்ற பாடல்களும்.

14 உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.

படம்: நீயா
இசை: சங்கர்கனேஷ்
வாணி ஜெயராம்

தினம் தினம் விடிய விடிய நிலாவையும்
சங்கீத சந்தோசத்தை சாய்ந்தாடவைக்கும்
கவிதையாக்கம் யாழ் சுதாகர்.

15. நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி

வீணை ராஜு அவர்களுக்கு அஞ்சலி!

April 27, 2007

தாமதமான பதிவு – மன்னிக்க.

24-மார்ச் மற்றும் 31-மார்ச் தேதிகளில் பெரியவர் எம்.சுப்ரமணிய ராஜு அவர்கள் நடுவராக வந்திருந்து என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஆசிர்வதித்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். அந்த வயதிலும் குழந்தையைப் போன்று குதூகலத்துடன் கைகளை ஆட்டி தலையசைத்து பாடல்களை ரசித்த அந்தக் காட்சிகளை மறக்கவே முடியாது.

அவரைப் பார்க்கையில் எனக்கு காலம் சென்ற என் தாத்தாவும் விகடன் தாத்தாவும் நினைவுக்கு வந்தார்கள்.

07-ஏப்ரல் அன்று நிகழ்ச்சி வழக்கமான நேரத்தில் துவங்கவில்லை. (www.numtv.com மூலமாக இந்நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன்) – ‘ஏதோ சரியில்லையே’ என்று உள்ளூர ஒரு உணர்வு. பிறகு கனத்த சோகம் ததும்பும் முகத்துடன் தோன்றிய பாலு சொன்னது இங்கே.

மிகவும் வருத்தமாக இருந்தது.

அந்தப் பெரியவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

ஓ தேவன்.. கோவில் வீணை..

April 27, 2007

Image and video hosting by TinyPic
ஜானகி மேடத்தின் ஜாங்கிரி குரலுடன், பாலு அவர்களின் குரலில் மைக் மோகன் நடித்த “ஓ மானே மானே” படத்தில் ஒரு அழகான, அசத்தலான மெலோடி பாடல்.

ஓ தேவன்…. கோவில் வீணை..
பாடும் இசை கேட்க்கும்
காதல் சுகம் தேடும்
ஓ தேவன்…. கோவில் வீணை..

தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் நேரம்
யாரோடு பேசும் ஹோ..
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் நேரம்
யாரோடு பேசும் ஹோய்..

கண்ணே மணமாலை
முன்னாள் வரும் வேளை
கண்ணே மணமாலை
முன்னாள் வரும் வேளை

மலரே மாலைச்சோலை
பாதைச்சூடும்

ஓ தேவன்…. கோவில் வீணை.

தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ
நீராடுதே ஹோய்
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ
நீராடுதே ஹோய்

இங்கே ஒரு வானம்
அங்கே மழை மேகம்
இங்கே ஒரு வானம்
அங்கே மழை மேகம்

நிலவே காதல் தீபம் போலே
வருவாய் இங்கே

ஓ தேவன்…. கோவில் வீணை..
பாடும் இசை கேட்க்கும்
காதல் சுகம் தேடும்

லாஆஆ.. லாலா
லாஆஆ….லாலா

என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 12

April 25, 2007

12-வது பாகமான இந்த வாரத்தை (31-மார்ச்) ஒளிப்பதிவு செய்ய கோட்டைவிட்டு விட்டேன். மன்னிக்க. அதுதான் நமது ஆபத்பாந்தவர் கோவை ரவீ இருக்கிறாரே. அவர் ஒலிப்பதிவு செய்து சுட்டிகளை அனுப்பியிருந்தார். அவை இங்கே. கேட்டு மகிழுங்கள்.

முந்தைய வாரம் கலக்கிய ராகினி இந்த வாரம் ‘மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயராத்துப் பொண்ணு’ பாடலை பாலு பாடியது போலவே குரல் ஏற்ற இறக்கங்களுடன் பாடியதைக் கேட்டு பாலுவே அடக்கமாட்டாமல் சிரித்தது கண்கொள்ளாக் காட்சி. அதைப் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டதை நினைத்து நிரம்பவே வருத்தமாக இருக்கிறது.

ராகினி சந்தேகத்திற்கிடமின்றி வெற்றிபெற்றார். அவருக்கு வாழ்த்துகள்.

கோவை ரவீ அவர்களுக்கு நன்றிகள்.

I’m feeling like crying ! EPP – 24th March 2007

April 25, 2007

24-மார்ச்-07 அன்று ஒளிபரப்பான என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காது அட்டகாசமாகப் பாடினார்கள். இவ்வாரம் நிகழ்ச்சித் தொடரின் பதினோராவது பாகம்.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

என்ற திருக்குறளுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார் பாலு.

“வீணை ராஜு” என்றழைக்கப்படும் 84 வயது இளைஞர் – 65 வருடங்களாக திரையிசைத் துறையில் பணிபுரிந்தவர் – நடுவராக வந்திருந்தார். அந்த வயதிலும் பாடல்களை பலவித உடலசைவுகள், முகபாவங்களுடன் அவர் ரசித்தது ரசிக்கும்படியாக இருந்தது.

பாலு அவரை அறிமுகப்படுத்தியபோது அப்போது வந்த பல படங்களின் பாடல்களில் வரும் விசில் குரலுக்குச் சொந்தக்காரர் அவர் என்று சொன்னதைக் கேட்க அதிசயமாக இருந்தது. அதோடு கொன்னக்கோல், வீணை, மேண்டலின், சந்தூர் போன்ற வாத்தியங்களையும் வாசிப்பதில் பண்டிதம் பெற்றவர் என்றும் சொன்னார்.

பலேபாண்டியா படத்தில் “நீயே உனக்கு என்று நிகரானவன்” பாடலில் எம்.ஆர்.ராதாவுக்கு கொன்னக்கோல் – ஜதி – சொல்லிப் பிரபலமானவராம் வீணை ராஜு அவர்கள். “நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்”, “நீரோடும் வைகையிலே” போன்ற பாடல்களில் வரும் விசில் சத்தத்தை ‘இசைத்தவர்’ இவர் என்றும் குறிப்பிட்டார் பாலு. நடுவரது இரு புதல்வர்களான லோகு, சீனு இருவரும் திரையிசைத் துறையில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

முதலாவதாகப் பாட வந்தவர் தில்லியிலிருந்து வந்திருந்த கொங்கணி மொழி பேசும் ஆஷா. ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நல்ல உச்சரிப்புடன் தமிழ்ப் பாட்டைப் பாடியது சிறப்பு. அவர் பாடியது கவியரசர் எழுதிய மெல்லிசை மன்னர் இசையமைத்து சுசீலாம்மா பாடிய சொன்னது நீதானா பாடலை.

அவரது தமிழ் உச்சரிப்பைப் பாராட்டிய பாலுவின் மறுமொழி இங்கே. மனோபாலாவும் குறிப்பாக பாடலின் காட்சியைப் படமாக்கிய விதத்தைக் குறிப்பிட்டுச் சிலாகித்தார்.

இரண்டாவதாக வந்தவர் காயத்ரி. இவர் பாடியது ‘கண்கள் இங்கே’ – கர்ணன் படத்திலிருந்து.

இந்தப் பாடலைப் பற்றிக் பாலு குறிப்பிட்டது.

அப்புறம் வந்தது கெளதம் மேனன் படத்தில் வரும் நீண்ட முடியுடைய வில்லன் போன்ற தோற்றத்துடன் – ஆனால் சன்னமாக மென்மையுடன் பாடிய பரத். இவர் பாடியது உயிரே படத்திலிருந்து உன்னிமேனன் பாடிய ரஹ்மானின் இசையில் வைர பூங்காற்றிலே உன் ஸ்வாசத்தை – பாடலை. நன்றாகப் பாடினார்.

நான்காவதாக வந்தவர் இறுதியாண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் டாக்டர் சத்தீஷ். அவர் பாடியது ஒவ்வொரு பாலு ரசிரும் என்றும் ரசிக்கும் பகலில் ஓர் இரவு படத்தின் ‘இளமையெனும் பூங்காற்று’ பாடலை. குரல் விசேஷமாக இல்லாவிட்டாலும் சன்னமாகப் பாடினார்.

இவரும் ‘பயனம்’ ‘கவணம்’ என்று உச்சரித்ததைச் சுட்டிக்காட்டினார். பாலு இந்தப் பாடலைப் பற்றிச் சிலாகித்துப் பேசியது இங்கே.

அவர் ‘தனியாக’ என்பதைத் ‘தணியாக’ என்று அழுத்தி உச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய பாலு மற்றபடி அவர் நன்றாகப் பாடியதையும் அவர் குரல் இந்தப் பாடலுக்குப் பொருந்தியிருப்பதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அடுத்து வந்த ராகினி அதிரடி கொடுத்த பிரமிப்பிலிருந்து விடுபடுவதற்கு நீண்ட நேரம் ஆனது. அவர் மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தின் ‘பேசுலாவுதே தேன் மலராலே’ என்ற அந்தப் பழைய பொக்கிஷத்தைப் பாடியதை நாள் முழுதும் கேட்கலாம் போல. கொசுறாகச் சொல்ல நினைத்தது அவரணிந்திருந்த அந்த அழகான ஆடையைப் பற்றி! 🙂 அந்தச் சில நிமிடங்களுக்கு ‘அந்தக் காலத்திற்கே’ நம்மைக் கொண்டு சென்றார் அவர்.

இந்தப் பாடலைப் பாடுவது அவ்வளவு எளிதல்ல. கஷ்டமான கமகங்கள் நிறைந்த ஆலாபனையை அழகாக எளிதாகப் பாடினார் ராகினி.

இந்தப் பாடலைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார் பாலு. அது இங்கே.

இறுதிப் போட்டியாளராக வந்தவர் மாலதி. முன்பே வா என்ற சில்லுன்னு ஒரு காதல் படப் பாடலைப்(கவிஞர் வாலி – ரஹ்மான் இசை) பாடினார். இதுவும் தலை எது கால் எது என்று புரியாத கடினமானப் பாடல் (பல்லவியும் சரணமும் இடைவெளியில்லாது வரும் மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும் பாடல்!). படத்தில் பாடியிருப்பவர் அழகான ஸ்ரேயா கோஷல்.

தமிழ் தெரியாத பாடகிகளில் தமிழை ஓரளவுக்கு நன்றாக உச்சரிப்பது ஸ்ரேயா கோஷல் என்று குறிப்பிட்டார் பாலு. தனித்துவத்தால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இசையமைப்பாளர்கள் வரிசையில் ரஹ்மானும் குறிப்பிடத் தகுந்தவர் என்று சொன்னார் பாலு.

ரஹ்மானின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டே வந்தவர் ‘I’m feeling like crying’ என்றார். எனக்கு நிறைய சமயங்களில் இது நேர்ந்திருக்கிறது. “கேட்பாரற்றுத் தெருவில் கிடந்து ஐந்து லட்ச ரூபாயை ஆட்டோக்காரர் கண்டெடுத்து நேர்மையாகக் காவல்துறையுடன் ஒப்படைத்தார்’ என்றோ, ‘தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாகக் கொடுத்தார்’ என்பது போலவோ நல்ல செய்திகளைப் படிக்க, பார்க்க, கேட்க நேர்கையில் எனக்கு லேசாகக் கண்கள் கலங்குவதுண்டு. நல்லவர்களும் நல்லனவும் அபூர்வமாகிப் போய்விட்ட தற்கால சூழ்நிலையில் இம்மாதிரி நல்லவனற்றைக் கேட்கையில் மனம் நெகிழ்வதும் கண்கள் கலங்குவதும் – சரி விடுங்கள் – பதிவு திசை திரும்பிவிடும்.

நிகழ்ச்சியின் இறுதியில் பாலு எத்தனையோ இரவுகளில் என் குழந்தைகளைத் தூங்க வைத்த, இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ‘நிலவு தூங்கும் நேரம்’ பாடலைப் பாடினார் – இனிமையாக என்று தனியாக வேறு குறிப்பிட வேண்டுமா?

***

கண்ணதாசனே.. கண்ணதாசனே..

April 25, 2007

Image and video hosting by TinyPic

இரண்டு வாரங்களாக பழைய பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவற்றில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான் அதிகம். இந்த பதிவில் அவரைப்பற்றி ஒரு பாடல். பாடாலாசிரியர் திரு.காமகோடியான் அழகான வரிகளில் எழுதிய “மரிக்கொழுந்து” என்ற படத்தில் ஒரு பாடல் கேட்போமா? //அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே// இந்த வரிகள் காட்சிக்கு எப்படி பொருந்தியிருக்கிறதோ தெரியவில்லை படத்தை பார்த்தவர்களுக்குதான் வெளிச்சம். இருந்தாலும் இந்த வரிகள் சின்னகுயில் சித்ரா அவர்களின் குரலுக்கு எப்படி பொருந்துகிறது கேளுங்கள். தேனிசை தென்றல் தேவா அவர்களின் அற்புதமான மெட்டில் கண்ணதாசனின் புகழைப்போற்றி பாடும் பாலு அவர்களின் குரலினிமையும் நம்மனதை ஒரு விதமான குதுகலத்துடன் அல்லோகலப்படுத்துகிறது. நீங்களூம் அனுபவியுங்கள்.

கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

உள்ளங்கை வேர்வை எந்தன் தோகை பேரை எழுதட்டும்
உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்

கண்ணுக்குள் ரேகை உண்டு காணவேண்டும் வா வா வா
பெண்ணுக்குள் பூவும் உண்டு தீயும் உண்டு நான் ரோசா

அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே..

ஆத்தாடி இளமையின் ரகசியம் பிறந்தது விழிகளிலே..

ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு..
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு..
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

என்னென்ன கோலம் உண்டு ஜாதி உண்டு உன் கண்ணில்..
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்..

தித்திக்கும் பாலும் கொண்டு தேனும் கொண்டு நான் வாரேன்
ஒத்திகை தேவையில்லை ஒடி வந்து நான் தாரேன்..

வைகாசி பொறந்தது உனக்கு ஒரு மங்கல சேதி வரும்..

கைராசி இணைந்தது உனக்கு ஒரு நிச்சயம் தேதி வரும்..

ஆதாரம் நீயாக தினமொரு மனம் வரும் புன்னகை புரிந்திடு

கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

கல்யாண ராமனுக்கும்…

April 24, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

சூப்பரான ஆலாபனை பாடல் ஒன்றை கேட்போமா நண்பர்களே? 1970ஆம் ஆண்டு சங்கர் கனேஷ் இசையமைப்பில் வெளிவந்த “மன்னவன்” படப்பாடல் பாலு அவர்களூம், சுசீலாம்மா அவர்களூம் சேர்ந்து தங்களின் குரலில் இதோ // வா…. ; பக்கம் வா…; நெருங்கி வா…; தா… தொட்டுத்தா…; தொடர்ந்து தா…// என்று ஒரு திருமணம் விருந்தே படைத்திருக்கிறார்கள். திருப்தியாக சாப்பிடுங்கள் இல்லை இல்லை திருப்தியாக கேளூங்கள்.

படம்: மன்னவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு: பீ.சுசீலா
இசை: சங்கர் கனேஷ்
வருடம்: 1970

எஸ்.பி.பாலு: ஆஹா ஹா ஹாஹா
பீ.சுசீலா: லலலா லலலா லலலா
எஸ்.பி.பாலு: ஹே ஒஹோ ஹோ
பீ.சுசீலா:லலலா லலலா ஆஹா ஹாஹா
எஸ்.பி.பாலு: லலலா லலலா
பீ.சுசீலா:ஒஹோ ஹோ
எஸ்.பி.பாலு: லலலா லலலாலாலா
பீ.சுசீலா:ஒஹோ ஹோ

பீ.சுசீலா:
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ

எஸ்.பி.பாலு:
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

பீ.சுசீலா:
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ

எஸ்.பி.பாலு:
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

பீ.சுசீலா: நாணம் என்ற காலிருக்கும்? முன்னாள் வர

எஸ்.பி.பாலு: நூறு வகை சீதனும் பின்னால் வர

பீ.சுசீலா: நாணம் என்ற காலிருக்கும்? முன்னாள் வர

எஸ்.பி.பாலு: நூறு வகை சீதனும் பின்னால் வர

பீ.சுசீலா:
நாள்.. மணநாள்.. தேடினால்
தா.. சுகம்.. தா நாடி வா

எஸ்.பி.பாலு:
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

பீ.சுசீலா:
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

எஸ்.பி.பாலு:
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்

பீ.சுசீலா:
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

எஸ்.பி.பாலு:
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்

பீ.சுசீலா:
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

எஸ்.பி.பாலு: வா….

பீ.சுசீலா:பக்கம் வா…

எஸ்.பி.பாலு: நெருங்கி வா…

எஸ்.பி.பாலு: தா…

பீ.சுசீலா: தொட்டுத்தா…

எஸ்.பி.பாலு: தொடர்ந்து தா…

பீ.சுசீலா:
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

எஸ்.பி.பாலு:
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

கடவுள் மீது ஆணை….

April 24, 2007

Image and video hosting by TinyPic

1973ஆம் ஆண்டு இசைமமைப்பாளர் திரு. சங்கர் கனேஷ் அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த “ராதா” இந்த படத்தை எனக்கு பார்த்த நினவே இல்லை. இந்த பாடலின் பல்லவியே மிகவும் அபாரமாக இருக்கும் “கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன், உயிர் காதல் மீது ஆணை வேறு கைத்தொடமாட்டேன் கைத்தொடமாடேன்” இந்த வரிகளை அடிக்கடி உபயோகிக்கும் காதலர்களூக்காகவே எழுதப்பட்டது மட்டுமல்ல யாகூ பாலு ரசிகர்களூக்காகவும் எழுதப்பட்டது அப்படித்தானே நண்பர்களே? பாலு அவர்களே…
“கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்”

படம்: ராதா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, பீ.சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1973.

படம்: ராதா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, பீ.சுசீலா
இசை: சங்கர் கனேஷ்
வருடம்: 1973.

எஸ்.பி.பாலு:

கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

பீ.சுசீலா:
உயிர் காதல் மீது ஆணை
உயிர் காதல் மீது ஆணை வேறு கைத்தொடமாட்டேன்
கைத்தொடமாடேன்.

எஸ்.பி.பாலு:
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

எஸ்.பி.பாலு:
பச்சைப்புல்லில் மெத்தை விரித்து
பஞசவர்ணக்கிளி இரண்டு
இச்சை தீரக்கட்டி புரண்டு
விளையாடும் போது

பீ.சுசீலா:
பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க

எஸ்.பி.பாலு:
ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க

பீ.சுசீலா:
இடம் தந்த பின்னாள் என்னும் தடம் மாறுமோ
இடம் தந்த பின்னாள் என்னும் தடம் மாறுமோ

எஸ்.பி.பாலு:
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

பீ.சுசீலா:
உயிர் காதல் மீது ஆணை
உயிர் காதல் மீது ஆணை வேறு கைத்தொடமாட்டேன்
கைத்தொடமாடேன்.

எஸ்.பி.பாலு:
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

பீ.சுசீலா:
பனியிட்ட முத்தம் மலரில்
முளையிட்ட மொத்தம் கிளையில்
முதல் எந்த முத்த மழையில்
நான் பார்க்கிறேன்

எஸ்.பி.பாலு:
கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்

பீ.சுசீலா:
தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்

எஸ்.பி.பாலு:
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ ஓஓ
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ ஓஓ

எஸ்.பி.பாலு:
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

பீ.சுசீலா:
உயிர் காதல் மீது ஆணை
உயிர் காதல் மீது ஆணை வேறு கைத்தொடமாட்டேன்
கைத்தொடமாடேன்.

எஸ்.பி.பாலு:
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்

பங்களூருவில் பாலுவிற்கு விருது!

April 21, 2007

Image and video hosting by TinyPic

நன்றி: தினமலர்.காம்