Archive for May, 2007

தீன்தேனா தீ வடியும் தேனா

May 31, 2007

Image and video hosting by TinyPic

நானா பாடுவது நானா என்ற ஒரு பழைய பாடலை பாலு அவர்களும், வாணிஜெயராமுடன் பாடியிருப்பார். அதே சாயலில் இந்த பாடலும். புதிய படப்பாடல் சரத்குமார் நடித்த வெளிவந்த தலைமகன் என்ற படம். படம் பார்க்கவில்லையாதலால் காட்சியமைப்பை பற்றி விவரிக்கமுடியவிலை. பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. விறுவிறுப்பான மெலோடி பாடல் இது. முதல் முறையாக கேட்பதால் சில இடங்களில் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. சரியான பாடல் வரிகள் கிடைத்ததும். சரிசெய்யப்படும். ரிலாக்ஸாக பாடலை கேளூங்கள். தயவு செய்து பாடிப்பார்க்க முயற்ச்சி செய்யாதீர்கள் நாக்கு சுழற்றிக்கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல.

படம்: தலைமகன்
நடிகர்: சரத்குமார்

தீன்தேனா தீ வடியும் தேனா

தீந்தேனா உனக்குள் கலைந்தேனா

கண்ணைத்தொட்டு கண்ணம் கிள்ள
மார்ப்புக்குள்ளே மையம்
கொள்ள வந்தேன் நான்

என் நெஞ்சுகுள்ளே பூக்கள் பூக்க
உன்னை சந்தித்தேனா வந்தேனா
காதல் செய்ய வழிவிடுமதனா

தீன்தேனா தீ வடியும் தேனா

தீந்தேனா உனக்குள் கலைந்தேனா

என்னை வளைத்தெடுத்தவன் என்று
நெஞ்சில் கிளந்ததெடுத்தவன் நீயே
நீதானா ஆஆஆஆ ஆஆஆஆ

இல்லை கரம் பிடித்தவள் கட்டில் மீதே
வரம் கொடுத்தவள் நீயே நீதானா ஆஆஆஆ

இன்று கைகளில் உன்னை கொடுத்தாய்
உன்மார்பில் என்னை புதைத்தாய்
எட்டி நின்று சூட்டி என்னை காதல் செய்தாய்
ஆடைகள் நழுவுது ஆடை

எல்லாம் தீண்டும் போது சிறகுகள் வருது

ஹ..தீன்தேனா தீ வடியும் தேனா ஆஆஆஆ..

தீந்தேனா உனக்குள் கலைந்தேனா ஆஆஆஆ

ஹே ஹே நானோ பகை முடிப்பவன் உன்னை
தூக்கும் கரம் படைத்தவன் அன்பே
அறிவாயோ ஹஹாஆஆஆஆ
நானோ தினம் படித்தவன் எந்தன்
உலகில் சதம் அடித்தவன் அன்பே
தெரியாதோ ஒ ஓஓ

ஹோ நீ சிரித்தால் ஒரு மெய் சிலிர்க்கும்
உன் மனத்தால் என்னை கலைத்தாய்
ஒரு கதையெனும் சேலைக்கட்டிவிட்டாய்
உயிர்வரை அதிறுது

ஆடையெல்லாம் தீண்டும் போது
சிறகுகள் வருது

கைராசி வளர்பிறையே வா வாஆஆஆஆ
கைவீசி கவிதை சொல்ல வா வாஆஆஆஆ

கண்ணைத்தொட்டு கண்ணம் கிள்ள
மார்ப்புக்குள்ளே மையம்
கொள்ள வந்தாயோஓஓஓஓ

நாண்கள் எல்லாம் அள்ளிச்செல்ல
என்னைச்சந்தித்தாயோ
ஆஹா கண்ணில் என்ன நடு நிலைமலையோ

தீன்தேனா தீ வடியும் த்தேனா ஆஆஆஆ

தீந்தேனா உனக்குள் கலைந்தேனா ஆஆஆ

Get this widget | Share | Track details
Advertisements

தாழம்பூவே வாசம் வீசு

May 30, 2007

Image and video hosting by TinyPic
ரஜினிசார் பாடல் கேட்டு அதிக நாட்கள் ஆனபடியால் ஓர் அழகான அமைதியான பாடல் கேட்போம் என்று எனக்கு தோனித்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கை கொடுக்கும் கை படத்தின் பெயரே அழகாக இருக்கும். பாடலைப்பற்றி கேட்கவே வேண்டாம். தடால் புடால் என்று அதிரடியாக ரஜினி சார் நடித்துக்கொண்டிருந்த வேளையில் வெளிவந்த இந்த படம். ரஜினியின் நடிப்புக்கு பெரும் புகழை தேடித்தந்த படம். இந்த படத்தில் ரேவதி கண் தெரியாத பாத்திரத்தில் நடித்து அனைவரின் அனுதாபத்தையும் பெறுவார். மேஸ்ட்ரோ ராசய்யா அவர்களின் அற்புதமான இசையமைப்பில் //நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி.. ஆராரிரோ பாடவோ// என்று பாலு அவர்கள் நம் மனதை தாலாட்டுவார்.. தூங்கிவிடாமல் பாடலை அனுபவியுங்கள்.

Image and video hosting by TinyPic

வருடம் 1984
படம்: கைகொடுக்கும் கை
நடிகர்கள்: ரஜினி, ரேவதி
இசை:இளையராஜா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது பார்வை பார்த்தேன்
தோளின் மீது துண்டாய் ஆணேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி மலர் கொடுப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நேரம் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏஏஏ..ஏஏஏஏ

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

Get this widget | Share | Track details

செவ்வந்தி பூ மாலைக்கட்டு

May 29, 2007

Image and video hosting by TinyPic

சின்னக்குயில் சிட்டுவுடன் (சித்ரா) பாலு அவர்கள் பாடிய ஒரு அழகான டூயட் பாடல். தங்கத்தின் தங்கம் என்ற படத்தில் அழகான வரிகளுடன் பாடல் எழுதி அசத்தலான இசையும் கோர்த்து தந்துருக்கிறார் “ஏ புள்ளே கருப்பாயி” ராஜ்குமார் அவர்கள். நம்மையறியாமல் தாளம் போடவைக்கும் பாடல். என்னைப்பொருத்த வரையில் பாலு அவர்களும் சித்ரா மேடமும் மிகவும் அசால்டாக பாடியுள்ளார்கள் என்று நினக்கிறேன் இந்த பாடலிலும் எந்த ஒரு இடத்திலும் அதிக சிரமப்பட்டு பாடவில்லை. அவ்வளவு சுலபமாக மிகவும் எளிமையாக பாடியுள்ளார்கள். இந்த படத்தை பார்க்கவில்லையாதலால் காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லலாம் பாடல் கிராமத்து சூழ்நிலையில் எடுக்கப்பட்டிருக்கும். நீங்களூம் தான் உங்கள் மனசில் எந்த வித டென்சன் இல்லாமல் இந்த அழகான பாடலை கேளுங்களேன்.

படம்: தங்கத்தின் தங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
இசை.எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: எஸ்.ஏ.ராஜ்குமார்

செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு
சிங்காரம மேடையிட்டு
சேரபோறேன் மேளம்கொட்டு

சித்தாடப்பூவிழி மாமனப்பார்த்து
சித்தாடப்பூவிழி மாமனப்பார்த்து
சேதியும் சொல்லித்தான் மாலைய மாத்து

செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு

மாமன் தொடத்தானே
இந்நேரம் பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூமேனி உன்னால
அந்தி நிறமானேன்

ஏலப்பூங்குயிலே உன் மாமன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னிக்கி முதன்முதலா
பெண்ணே உன் கண்ணுக்கு
பனிஞ்சு நின்னேன்

காலடி மண்ணுக்கு
தண்ணீரும் புதுசு இல்லே

செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு
சிங்காரம மேடையிட்டு
சேரபோறேன் மேளம்கொட்டு

பாட்டு புது பாட்டு
பொண்மானே பாடித்தாலாட்டு
நூறு பொறப்பெடுப்பேன் உன்னோடு
காதல் சீராட்டு

நூறு பிறவியென்ன மச்சானே
உள்ளத்த கொடுத்ததெங்கே
வானம் இருக்கும் வரை
உன்னோடு அன்புக்கு வயசு இல்ல

தோளுக்கு முந்தான
நெஞ்சுக்கு மாமன் தானே

செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு
சிங்காரம மேடையிட்டு
சேரபோறேன் மேளம்கொட்டு

சித்தாடப்பூவிழி மாமனப்பார்த்து
சித்தாடப்பூவிழி மாமனப்பார்த்து
சேதியும் சொல்லித்தான் மாலைய மாத்து

செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா ஜோடிச்சிட்டு
சிங்காரம மேடையிட்டு
சேரபோறேன் மேளம்கொட்டு

Get this widget | Share | Track details

தலையில் கிரீடங்கள்

May 28, 2007

Image and video hosting by TinyPic

Photo Sharing and Video Hosting at Photobucket

பாலு அவர்கள் பாடிய இந்த பாட்டு நிலாப்பெண்ணே என்ற படத்தில் வருகிறது. இந்த பாடல் ஒரு வித வெறுப்போடு பாடும் பாடல். படத்தை நான் பார்த்ததில்லை. இந்த படத்தின் தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கலாம். நல்ல பாடல்கள் தேடிக்கொண்டிருந்த போது வித்தியாசமான இந்த பாடல் எனக்கு கிடைத்தது என் மனதை கவர்ந்த பாடல். //இந்தியத்தில் மனிதன் இன்று இயந்திரமாக மாறிவிட
எந்திரத்தில் பூப்பறிக்க சுற்றமும் இங்கே கூடிவிடும் .. உன் துன்பம் நீ சொல்ல மொழியில்லை
உனக்காக நீ வாழ வழியில்லை… காசுக்கு கைத்தட்டும் கூட்டங்கள் ஹஹ.. அழுதலும் கண்ணீரில் மெய்யில்லை வாழ்வென்பதா சாவென்பதா தேகம் ஏதும் இல்லையே// இந்த வரிகளூம், இதனுடன் // கால்வலிக்க ஓடும் நதி கடல் வழி போயிருக்கும்.. வாழ்க்கையென்ற கண்ணீர் நதி எங்கு சென்று சங்கமிக்கும்.. ஏனிந்த வாழ்வோடு அச்சங்கள்
எல்லோரும் காமத்தின் எச்சங்கள்.. ஊருக்கு நீவாழ உயர்ந்தாலும் .. உயிரோடு காயங்கள் மிச்சங்கள் .. உன் பாதையில் நீ போகிறாய்.. மேலும் மேலும் சுமைகள்.. //பாடல் வரிகள் சிந்திக்ககூடியவையாக இருக்கும் எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

Image and video hosting by TinyPic
படம்: நிலாப்பெண்ணே
நடிகை: திவ்யபாரதி
Music: வித்யாசாகர்
Producer: சத்யா மூவிஸ்
Director: தமிழழகன்

தலையில் கிரீடங்கள்
காலில் லாடங்கள் ஹ
பேதை மனிதனே
தள்ளாட்டமா
யார் சொல்லி மண்ணில் விழுந்தாய்
யார் சொல்லி உலகை அறிந்தாய்
ஏனிங்கே சிழுவை சுமந்தாய்
கண்ணிரில் ஞானம் தேடி அலைந்தாய்
தலையில் கிரீடங்கள்
காலில் லாடங்கள் ஹ
பேதை மனிதனே
தள்ளாட்டமா

இந்தியத்தில் மனிதன் இன்று
இயந்திரமாய் மாறிவிட
எந்திரத்தில் பூப்பறிக்க
சுற்றமும் இங்கே கூடிவிடும்
உன் துன்பம் நீ சொல்ல மொழியில்லை
உனக்காக நீ வாழ வழியில்லை
காசுக்கு கைத்தட்டும் கூட்டங்கள் ஹஹ
அழுதாலும் கண்ணீரில் மெய்யில்லை
வாழ்வென்பதா சாவென்பதா
தேகம் ஏதும் இல்லையே

தலையில் கிரீடங்கள் ஹஹ
காலில் லாடங்கள் ஹ
பேதை மனிதனே
தள்ளாட்டமா

கால்வலிக்க ஓடும் நதி
கடல் வழி போயிருக்கும்
வாழ்க்கையென்ற கண்ணீர் நதி
எங்கு சென்று சங்கமிக்கும்
ஏனிந்த வாழ்வோடு அச்சங்கள்
எல்லோரும் காமத்தின் எச்சங்கள்
ஊருக்கு நீ வாழ உயர்ந்தாலும்
உயிரோடு காயங்கள் மிச்சங்கள்
உன் பாதையில் நீ போகிறாய்
மேலும் மேலும் சுமைகள்

தலையில் கிரீடங்கள்
காலில் லாடங்கள் ஹ
பேதை மனிதனே
தள்ளாட்டமா
யார் சொல்லி மண்ணில் விழுந்தாய்
யார் சொல்லி உலகை அறிந்தாய்
ஏனிங்கே சிழுவை சுமந்தாய்
கண்ணிரில் ஞானம் தேடி அலைந்தாய்
தலையில் கிரீடங்கள்
காலில் லாடங்கள் ஹ
பேதை மனிதனே
தள்ளாட்டமா

Get this widget | Share | Track details

தேடாத இடமெல்லாம் தேடினேன்

May 25, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகர் விஜயகாந்த் அவர்களின் படப்பாடல்கள் இந்த தளத்தில் அதிகம் இடம் பெறவில்லை அவர் படத்திலும் இனிமையான பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்த தளத்தின் உரிமையாளர் “வற்றாயிருப்பு” சுந்தருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் தளத்தில் பதிய பாடல்களை “தேடாத இடமெல்லாம் தேடினேன்” என்று பல இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் போது நான் எப்ப்ப்ப்ப்ப்ப்ப்பவோ கேட்ட பாடல்களை மீண்டும் கேட்டு பதிய அற்புதமான ஒரு வாய்ப்பு தந்துள்ளாரே அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அதுபோலவே, நீங்களூம் அதிகம் கேட்டிறாத பாடல் இவை. குறிப்பாக இந்த வரிகளை கேளூங்கள் //நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ.. உன்னை நான் பார்த்தது.. பிறிந்தோம் இணைந்தோம்.. விதிதான் சேர்த்தது..// .. //முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்.. இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா.. என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ
அடடா இதுதான் இறைவன் நாடகம்.. உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்..//

ஆஹா.. ஆஹா., என்னதொரு இனிமை. பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். இதுபோல புதிய பாடல்கள பாலு அவர்கள் பாடி இனிமேல் எப்போது கேட்க போகிறோம். அந்த கடவுளுக்கே வெளிச்சம். இனிமையான கேளுங்கள்… மகிழ்ச்சியுடன் இருங்கள்.

Image and video hosting by TinyPic

படம்: வசந்தராகம்
நடிகர்: விஜயகாந்த்

தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆணாலும் நான் தேடும் பல்லவி
தாளாமல் வாடினேன்
தண்ணீரில் ஆடினேன்
Image and video hosting by TinyPic
இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

லல்லலலல லலலலலலலாஆஆஆஆ

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்

வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா ஆஆஆஆ
Image and video hosting by TinyPic
வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா
துண்பங்கள் தீர்ந்ததம்மா

Image and video hosting by TinyPic

நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ
உன்னை நான் பார்த்தது
பிறிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா ஆஆஆஆ
Image and video hosting by TinyPic
மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா
என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ
அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது

Get this widget | Share | Track details

போறவளே பொன்னுதாயி

May 24, 2007

Photo Sharing and Video Hosting at Photobucketv

ராஜ்குமார் இசையமைப்பில் ஒரு சோகப்பாடல் கேட்போமா? ரெயிலுக்கு நேரமாச்சு படத்தில் வரும் “போறவளே பொன்னுதாயி” என்ற இந்த சோகப்பாடல் என் மனதை உலுக்கிய பாடல். ராஜ்குமார் அற்புதமான இசையமைப்பில் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. அவையெல்லாம் தேடி பிடித்து பதிய வேண்டும். இந்த பாடலில் வரும் ரிதம்ஸ் மிகவும் அழகாக இருக்கும். என்மனதை கவர்ந்த இந்த வரிகள் //கல்லோடு கடலுறச.. கடலுதண்ணீயை மீனுறச.. உன்னோடு நானுறச.. ஊறுகெல்லாம் தெரியுமடி.. மூக்குத்தி முத்தழகி.. வாக்கு மறந்ததென்ன.. பூவெல்லாம் நீதானே.. பொழுதெல்லாம் நெனச்சேனே// பாலு அவர்களின் சோகக்குரல் அமுக்கான் போல என் மனதை அமுக்கி கொள்ளைகொண்டு போகும் பாடல். பாடலுடன் சேர்ந்து நீங்களும் தான் கொஞ்சம் வருந்துங்களேன்..
Image and video hosting by TinyPic

படம்: ரெயிலுக்கு நேரமாச்சு

நடிகர்: ராமராஜன், நிசாந்தி

இயக்குநர்: பாரதி மோகன்
தயாரிப்பு: ஸ்ரீ சாந்தாலாயா
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி
Image and video hosting by TinyPic

தேடி வந்த சோடிக்கிளி
ஓடி விட்டாலாகாதடி

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி
Image and video hosting by TinyPic

கல்லோடு கடலுறச
கடலுதண்ணீயை மீனுறச
உன்னோடு நானுறச
ஊறுகெல்லாம் தெரியுமடி
மூக்குத்தி முத்தழகி
வாக்கு மறந்ததென்ன
பூவெல்லாம் நீதானே
பொழுதெல்லாம் நெனச்சேனே

தொட்டுப்பேசி விட்டுபோனா
கெட்ட பேரு யாருக்கு

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

தேடி வந்த சோடிக்கிளி
ஓடி விட்டாலாகாதடி

ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஓஓஓஒ
ஆத்தாலும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு
சுருபுளியமரம் கண்மணியே நீ
பூவாடும் நந்தவனம் கண்மணியே
Image and video hosting by TinyPicv
மையல தந்துவிட்டு
மறையாதே பொன் மயிலே
வெள்ளரியில் வெயில் பட
விடுவோனோ கண்மணியே
Image and video hosting by TinyPic

நதிமேல வரும் ஓடம்
நதிக்கு சொந்தம் ஆகாதடி
கண்ணீர கண்டாலுமே
கறையாதோ என் தேகமே

சந்தேகம் கொள்ளாதே
அந்த சாமி காத்திடும்

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

தேடி வந்த சோடிக்கிளி
ஓடி விட்டாலாகாதடி

Get this widget | Share | Track details

ஓடம் கடலோடும்

May 23, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏதோ.. அதில் ஏதோ…. அதை நானும் நினக்கின்றேன்,, ஏனோ அது ஏனோ.. அதை நானும் ரசிக்கின்றேன். என்னமாதிரியான அழகான பாடல். இந்த பாடலை பதிவாளர் திரு. ஜி. ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்..

படம்: கண்மணிராஜா
நடிகர்: சிவக்குமார்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, பி.சுசீலா

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன
Image and video hosting by TinyPic
ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன

ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்
ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்
ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்

மேகங்கள் மோதுவதால்
மின்னல் வருவது எதனாலே
எதனாலே..
Image and video hosting by TinyPic

தேகங்கள் கூடுவதால்
இன்பம் வருமே அதுபோலே

ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன

நாடிகளில் புதுவெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது

Image and video hosting by TinyPic

நாடிகளில் புதுவெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது

நல்லது தான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லது தான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது

பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே
பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே

இரவு என்னும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே வருகிறதே
இரவு என்னும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே வருகிறதே

ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன

Get this widget | Share | Track details

காதல் கதை சொல்வேனோ

May 22, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகர் ரகுவரன் ஒரு படத்தில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரே வார்த்தையை மறுபடி, மறுபடியும் சொல்லி பலத்த கைத்தட்டல் வாங்கி பிரபலமானார் எந்த படம் என்று நினவுக்கு வரவில்லை. அந்த வசனம் “ஐ நோ ஐநோ” என்ற வசனம். அதே போல இதே ஆங்கில வார்த்தையை பாலு அவர்கள் 1976 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வாணி ஜெயராமுடன் சேர்ந்து ஒரு கலக்கலான பாடல் “உனக்காக நான்” பாடியுள்ளார். நடிகர் திலகமும் தன் நடிப்பில் அசத்தியிருப்பார். ரொம்ப நாளாக இந்த பதிவிற்காக தேடி பிடித்து கேட்டேன். இந்த பாடலில் இரண்டு பேரும் ஒரே கொஞ்சல் மயம் தான் போங்கள். உச்சக்கட்டம் இந்த வரிகள் தான் //ஆஹா ஓஹோ ஆஹா…. நோ.. நோ… ஏய்… நோ.// .எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது போங்க சார். ஹி.. ஹி.. ஹி… உங்களையும் விட்டுவிடுவேனோ.. னோ..னோ…

படம்: உனக்காக நான்,
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாலு, வாணிஜெயராம்
1976 ஆம் வருடம்

ஐ வோண்ட் யூ சே யுநோ
ஐ ஹோப் யுநோ..

நோ நோ நோ நோ. நோ,…

காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
கன்னி தேன் கொள்வேனோ
Image and video hosting by TinyPic

நோஓஓஒ

நாணம் கொள்ளாமல்
ஐ ஹோப் யுநோ..

நோ….. நோ..

Image and video hosting by TinyPic
அழைக்கின்ற மான் கண்ணோ .. நோ
அணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
முன்னூறு நான் கொள்வேனோ.. நோ
தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
கையோடு மை சேர்ப்போனோ

நோ நோ நோ நோ. நோ,…
ஹஹ
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ

துடிக்கின்ற பெண்மானோ…
ஹோ ஹோ
நான் ரசிக்கின்ற அம்மானோ
ஆஹா
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
Image and video hosting by TinyPic
வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
அள்ளாமல் நான் போவேனோ
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ

ஆஹா ஓஹோ ஆஹா….
நோ.. நோ… ஏய்… நோ..

ஐ வாண்ட் யூ சி யுநோ
ஐ ஹோப் யுநோ..

காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
இன்ப தேன் கொள்வேனோ
நாணம் கொள்ளாமல்

ஐ வாண்ட் யூ சி யுநோ
ஐ ஹோப் யுநோ

நோ நோ நோ நோ..
ஆஹா ஹா ஹா…

Get this widget | Share | Track details

ஓ ஓ ஸ்வர்னமுகி

May 21, 2007

படம் பேர் என்னவோ கருப்பு வெள்ளைதான். இந்த பதிவை பார்ப்பதற்க்கு கலர் கலராக இருக்கும் படங்களை பாட்டுடன் கேளுங்கள்.
Photo Sharing and Video Hosting at Photobucket
படம்: கருப்பு வெள்ளை
பாலு, சித்ரா
இசை: தேவா
பாடலாசிரியர்ள் காளிதாசன்

ஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனபூவினில் வந்தனம் கூறிடவா
இந்திரப்பூஜைக்கு மந்திரம் பாடிடவா

அந்தியிலே புது தந்தியினில்
இளம் சுந்தர வீணையொன்று
சிந்தட்டும் ராகம் இன்று

Photo Sharing and Video Hosting at Photobucket

உன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி

நந்தா வருக வந்தாள் மனதில்
புல்லாங்குழல் ஒலிக்கும்

பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து
தந்தேன் என்னை மயக்கும்
Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket
மீரா ஒன்று உள்ளம் கூடும்
வேடந்தாங்கலிலே

ஆஆஆஆ..
உலா வந்தால் தென்றல் பாடும்
ஓடை மூங்கிலிலே

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket
என்னை அள்ளு சின்னக்கணனனைப்போல்
தினம் என்னை அள்ளு அள்ளூ
இன்பத்தின் கீதை சொல்லி

ஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி

உன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி

இன்னொரு யுகமும் பின்னால் தொடங்கு
கண்ணே நான் வருவேன்

இங்கே மறந்த இன்பம் இருந்தால்
அங்கே நான் தருவேன்
Photo Sharing and Video Hosting at Photobucket

இதோ இந்த மண்ணும் விண்ணும்
பாடும் ராகம் எது
ஓஓஓஓ
ஒரே சொல்லில் அர்த்தம் கோடி
காதல் வேதம் அது

கண்ணும் கண்ணும் சுகம்
பிண்ணும் பிண்ணும்
அந்த மன்மதன் மின்னல் ஒன்றே
மன்னனை காயம் பன்னும்

உன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி

உன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனபூவினில் வந்தனம் கூறிடவா
இந்திரப்பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புது தந்தியினில்
இளம் சுந்தர வீணையொன்று
சிந்தட்டும் ராகம் இன்று

ஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி
ஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி

Get this widget | Share | Track details

இதழில் கதை எழுதும் நேரமிது

May 18, 2007

Image and video hosting by TinyPic

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளில் பாலு, சித்ரா ஆகியோரின் மந்திரக் குரல்களில் நம்மை அப்படியே சொக்கவைக்கும் பாடல் இந்த இதழில் கதை எழுதும் நேரமிது. லலிதா ராகத்தில் இந்தப் பாடலை இசைஞானி அமைத்திருக்கிறார் என்று அறிகிறேன். சீதாவும் கமலும் அழகான கவிதையாகக் காட்சியளிப்பார்கள் இந்தப் பாடலில்.

கமல் நாயகிகளை தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டும், கைகளில் ஏந்திக் சுற்றுவதும் ஒன்றும் புதிதல்ல – சகலகலாவல்லவனிலிருந்து தெனாலி வரை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்! 🙂 இதில் ஒரு மாறுதலுக்கு கமல் முதுகில் சீதா சவாரி செய்வார்.

கதாநாயகனாக சினிமாவில் தோன்றுவது ‘நாக்குத் தள்ளும்’ விஷயம் என்று இந்தக் காட்சியைப் பார்த்தாலே தெரியும்! ‘அவங்களைத் தூக்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே நடந்து பாட்டுக்கு தப்பாம உதட்டசைக்கணும்’ என்று சோப்ளாங்கி நாயகர்களிடம் இயக்குநர் சொன்னால் எப்படி அடிவயிறு கலங்குவார்கள் என்று உணர முடிகிறது. நான் கதாநாயகனாக இருந்து இயக்குநர் என்னிடம் அப்படிச் சொன்னால் ‘ஈரோ ஈரோயினைத் தூக்கறதைத்தான் எல்லாப் படத்துலயும் மக்கள் பாத்துட்டாங்களே. நம்ம புதுமையா ஒண்ணு பண்ணலாம் ஸார். பேசாம ஈரோயின் ஈரோவைத் தூக்கற மாரி வச்சிரலாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்தி நமீதா மாதிரி (ஹிஹி) ஆஜானுபாகு நாயகியிடம் என்னைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சொல்லிவிடுவேன்! 🙂

(லலிதா) ராம் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இசை வல்லுநர். மரத்தடியில் என்னைப் போன்ற (இசை)ஏழை எளியவனுக்கும் புரியும்படி அழகாகக் கர்நாடக இசையைப் பற்றி நிறைய எழுதினார். ஒரு கட்டுரையில் திரையிசை (பாடல்கள் தவிர பின்னணி இசை) பற்றிக் குறிப்பிடுகையில் இசைஞானியின் சமயோசித உத்திகளைப் பற்றிக் குறிப்பிட்டு இப்படி எழுதினார்:

“இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா? இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு “உன்னால் முடியும் தம்பி” படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி “பொறுப்புள்ள பையனாக வா” என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்? அதே படத்தில், ‘இதழில் கதையெழுதும் நேரமிது’ என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது? அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப் பார்த்தால் கூடப்போதும். அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்!!!!

****

இந்த மாதிரி எத்தனை படங்களில் எந்த மாதிரி டகால்டி வேலைகளையெல்லாம் ராஜா செய்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கையில் இசைஞான சூன்யமாக இருப்பதை நினைத்து பெருமூச்சுதான் விடமுடிகிறது! 😦

(லலிதா) ராம் எழுதிய மரத்தடி கட்டுரைகளை இங்கே படிக்கலாம்!

சீதாவிடம் பெயர் என்ன என்று கேட்டு அவர் அதற்கு ‘L K A மலம்’ என்று அவர் சொல்லிவிட, பேஸ்தடித்தது போல் அந்த இடத்திலிருந்து அகலும் கமல் வீட்டுக்குப் போய் அண்ணி மனோரமாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அங்கே போய் நொந்த முகத்துடன் உட்கார்ந்து கொள்ள ‘பேர் கேட்டியா?’ என்று விசாரிப்பவரிடம் சொல்ல முடியாமல் தயங்கி ‘அத எப்படி ஒங்கக்கிட்ட சொல்லுவேன் அண்ணி?’ என்று புலம்பி ‘நீங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்றேன். சாப்பிடும்போது சொல்ல முடியாது அண்ணி’ என்று எழுந்து சென்று விட ஒன்றும் புரியாமல் மனோரமா ‘அப்படி என்னப்பா சாப்பிடும்போது சொல்லக்கூடாத பேரு? வாந்தியா?’ என்று அவரைப் பின்தொடர்வதும் சரியான நகைச்சுவை வெடி! அதைத் தொடர்ந்து சீதாவைத் திரும்பவும் சந்திப்பவர் (அந்த இடத்தை எங்கே பிடித்தார்கள்? பச்சை பசேலென இப்போதைய இளவேனிற் கால அமெரிக்கா மாதிரி) ‘என்னங்க பேரு இது. ஒங்க அப்பா அம்மாவை உடனே பாக்கணும். பாத்து கன்னா பின்னான்னு திட்டப் போறேன். அறிவிருக்கான்னு கேக்கப் போறேன்’ என்று தொடங்கி புலம்பித் தள்ளுவார். ‘அட்டெண்டன்ஸ் எப்படி எடுப்பாங்க? நீங்க வந்தாச்சான்னுகூட கேக்க முடியாதேங்க’ என்று அழும் நிலைக்கு வரும்போது நமக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது. சீதாவுக்கும்தான். அழகான பல்வரிசையுடன் வாய்விட்டுச் சிரிப்பார். இதற்கு மேல் கமலைச் சோதிக்கவேண்டாம் என்று முடிவு செய்து ‘என் பேர் அது இல்லைங்க’ என்றதும் அந்தப் பதிலை உள்வாங்கிக் கொள்ளாமல் ‘அப்படியா’ என்று அசிரத்தையாகச் சொல்லும் கமல், பிறகு குதித்து எழுந்து ‘அப்படியா? ஹய்யோ‘ என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடுவார். ‘லலித கமலம்ங்கற பேரைத்தான் சுருக்கி உங்கக்கிட்ட L K A ம்..’ என்பவரை முடிக்க விடாமல் தடுத்து இதழ்களைக் கமல் மூட, அழகாகத் துவங்கும் இந்தப் பாடல். தமிழ்ச் சினிமா அல்லவா? ஆதலால் இந்தப் பாடலிலும் தப்பாமல் நடுவில் அந்த இடத்திலிருந்து தாவிக் குதித்து பனிப் பிரதேசத்தில் சரணத்தைப் பாடுவார்கள் – ஜெர்க்கின், கோட்டு இல்லாமல் சாதாரண உடைகளில் கமலும், சீதாவும்!

கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும் பாடல் இது!

“இதழில் கதை எழுதும்” என்ன அபாரமான காதல் கற்பனை! சான்ஸே இல்லை! படத்தைப் பார்க்கும் போது ‘கதை என்ன, மெகா சீரியலே எழுதலாமே!’ என்று அந்த வயதில் தோன்றியது. 😉

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது