Archive for July, 2007

சேலை குடைப்பிடிக்க

July 31, 2007

இசையமைப்பாளர் திரு. சங்கர் கனேஷ் இசையமப்பில், பாடலாசிரியர் வாலி அவர்களின் கில்மாஷ் வரிகளில் ஓர் பாடல் அழகான “சேலை குடை பிடிக்க” என்ற பாடல் தான் அது. இந்த பாடல் “ஆயிரம் முத்தங்கள்” என்ற படத்தில் நடிகர் சிவக்குமாரும் ராதாவும் அனுபவித்து நடித்திருப்பார்கள். அவர்களுக்கும் மேல் பாலு அவர்கள் வாணிஜெயராமும், வயலினுடன் சேர்ந்து தங்கள் குரலிலே நடித்து நம்மை ஒரு வழி செய்து விடுவார்கள் (குறிப்பாக பாடலின் இடையில் வரும் ஸ்வரங்கள்.. யப்பா கலக்கறாங்கப்பா). இந்த பாட்டை கேட்டு இருவருக்கும் ஆயிரம் என்ன கோடானு கோடி முத்தங்கள் தரலாம்.

படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடியவர்கள்: பாலு, வாணிஜெயராம்
நடித்தவர்கள்: சிவக்குமார், ராதா
இசை: சங்கர் கனேஷ்
பாடாலாசிரியர்: வாலி

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூசுதடி

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேட்கிறது
ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேட்கிறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒன்னாக வாட்டுறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒன்னாக வாட்டுறது

ஈரம் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது

ம்ஹ்ம், அதற்கென கேள்வி இன்ப வேள்வி செய்வோமே

னாகர்த்து னாகர்துது னாகர்துது தானேனாஆஆ
தர்ரேன்னா னா னா னா னாஆ

காதலின் முத்தங்கள் இல்லாத காரணம் சொல்லுங்கள்

உன்னைக்கண்ட நேரம் நெஞ்சில் மோகம் உண்டாச்சு

விரகமும் ஒருவகை தீயல்லவா ஹாஆஆ
விரகமும் ஒருவகை தீயல்லவா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேட்கிறது.. ஹ

ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
ரெண்டும் ஒன்னாக வாட்டுறது

பட்டினி என்னோடு இப்போது பாட்டென்ன உன்னோடு

பசிக்கு என்ன கேள்வி உந்தன் தேவை சொல்லய்யா

தன்னன..தன்னன..தன்னன..தானனா
தனன னானா தனன னானா
தனன..தானனா. ன னனாஆஆ.
தானனா. ன னனாஆஆ.

கற்களும் கற்கண்டா என் ஆசை காதலி கைப்பட்டா

உதட்டுக்குள் சாமி அந்த தேனை வச்சானே

நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா ஹ
நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூ..சுதடி

வாசிக்கத் தெரியாது சங்கீதம் வாசனை எனக்கேது

ம்ஹஹ.. அதற்கென நானும் தொட்டால் நாதம் உண்டாக்கும்

பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக

வயலினும் பெண்ணும் ஒன்றே என என்னிக்கொள்ளம்மா

ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா ஆஆ
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேட்கிறது ம்ஹம்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒன்னாக வாட்டுறது

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூசுதடி

Get this widget | Share | Track details

உள்ளத்தில் நூறு நினைத்தேன்

July 28, 2007

ஆமாம் இந்த வரிகளில் எவ்வளவு உண்மை பாலு அவர்களை பார்க்கும் போதெல்லாம் இந்த வரிகளைத் தான் //உள்ளத்தில் நூறு நினைத்தேன்… உன்னிடம் சொல்ல தவித்தேன்// என்று கேட்க நினக்கத்தோன்றும். ஆணால் அவரை பார்த்ததுமே எல்லாமே மறந்து விடும்..

படம்: மாப்பிள்ளை அழைப்பு
இசை: வி.குமார்
பாடியவர்கள்: பாலு, பி.சுசீலா
வருடம்: 1972

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
தேராடும் வன்ன உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணாலே கண்ணிரண்டும்
வாறாதோ பாடாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

புது புது அர்ச்சனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

தேனாட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப்புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சக்கரையும் திகட்ட

முப்பொழுதும் இன்பசுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

உன்னைத்தொடுவது இனியது

July 27, 2007

உத்தரவின்றி உள்ளேவா என்ற பாடலை சென்ற வாரம் கேட்டோம்.உன்னைத்தொடுவது என்ற இந்த இனிமையான பாடலில் வரும் //லலலல லலலல லாலாஆஆ… லலலலலலலலல லாலாஆஆ.. லலலல லலலல லாலாஆஆ.. லலலலலலலலல லாலாஆஆ// இந்த ஹம்மிங் ஒன்றே போதும் நம் உள்ளங்களை தள்ளாட வைக்க. பாலுவும் சுசில்லாம்மாவும், ஈஸ்வரியம்மாவும் போட்டி போட்டுகொண்டு சதிராடுவார்கள். போதாதற்க்கு சாய்பாபா பாடகர் வேறு பட்டைய கிளப்புவார். இவர் அந்த காலத்தில் அதிகமாக மேடை நிகழ்ச்சிகளீல் காணலாம் அதிக பட்சம் பாலு பாடல்கள் தான் பாடுவார். அருமையான பாட்கர் இவரைப்பற்றி மேலும் விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம்.

படம்: உத்தரவின்றி உள்ளேவா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பாலு, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா
பாடாலாசிரியர்: கண்ணதாசன்
வருடம்: 1971

உன்னைத்தொடுவது இனியது
நான் சொல்லித்தருவது புதியது

இனி மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

உன்னைத்தொடுவது இனியது
நான் சொல்லித்தருவது புதியது

இனி மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

பாவை உண்டு பாலும் உண்டு
பள்ளிப்பாடம் சொன்னால் என்ன

தேவையென்றால் கோடி உண்டு
தேடித்தேடி தந்தாள் என்ன

லலலல லலலல லாலாஆஆ
லலலலலலலலல லாலாஆஆ

லலலல லலலல லாலாஆஆ
லலலலலலலலல லாலாஆஆ

ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்

ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
அதே முகம் என்றால்
இதோ என்னைத் தந்தேன்

சேரன் சோழன் பிறந்தும் வருவான்
பாடும் கீதம் கல்யாணம் எல்லாம்
அன்பே பேசி என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்

உன்னைத்தொடுவது இனியது
நான் சொல்லித்தருவது புதியது

இனி மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

தேவன் எங்கும் மோக வன்னம்
சிந்தும் பாடும் பென்னல்லவோ

மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் பொன்னும் நீயல்லவோ

லலலல லலலல லாலாஆஆ
லலலலலலலலல லாலாஆஆ

லலலல லலலல லாலாஆஆ
லலலலலலலலல லாலாஆஆ

நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ

நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ

நான் மாமதுரை காதலில்
வரும் மன்னவனின் நாயகி

ராணி சீதை சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப்போல் இல்லை

தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தாள் தாங்காது தாயே
ராதை உலகில் வாழும் அம்மா
கண்ணே பூர்வ ஜென்மம்

உன்னைத்தொடுவது இனியது
நான் சொல்லித்தருவது புதியது

இனி மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

லலலல லலலல லாலா
லலலல லலலல லாலா

வெற்றி மீது வெற்றி

July 26, 2007

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் 1970ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து வெற்றிபடம் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படம். இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனதில் சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றும் எப்படி சொல்வதென்று என்னால் எழுத முடியவில்லை அத்துடன் அந்த படம் வந்த சமயம். என் பள்ளி நாட்களில் பாடல் தினமும் ஒலிபரப்பட்ட காலங்களில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இப்போதும் தொடர்ச்சியாக மனதில் தோன்றி மறையும். அப்போது
மனதிற்க்கு சுகமாகவும் இருக்கும். இப்போது பாடும் பாலு அவர்களின் குரலுக்கும் அப்போதைய பாலு அவர்களின் குரலுக்கு எவ்வளவு வித்தியாசம் கேளூங்கள். குறிப்பாக இந்தப்பாடலை கேட்டாலே எல்லோருக்கும் தன்னையறியாமல் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளூம் அப்படி பட்ட உணர்வை எம்.ஜி.ஆர் அவர்கள் தன் நடிப்பால் தந்திருப்பார். ஒரு வீட்டின் அறைக்குள்ளே அங்கும் இங்கும் ஓடி ஆடி மேஜை நாற்காலி மேல் தாவி குதித்து ஒர் ஆர்ப்பாட்டமாக நடித்திருப்பார் அவை கண்கொள்ளாகாட்சியாக இருக்கும். பாலு அவர்கள் பங்கேற்கும் எந்தவொரு பாராட்டு நிகழ்ச்சியிலும் அடிக்கடிஇந்தப்பாட்டின் பல்லவியின் இரண்டு வரிகளை பாடி ரசிகர்களை உச்சத்திற்க்கு கொண்டு சென்றுவிடுவார். மேலும், ஒரு இனிமையான நிகழ்ச்சியும் இங்கு சொல்ல விரும்புகிறேன். 1980 வருடம் ஒரு ஞாயிற்று கிழமை மாலையில் நண்பர்களூடன் அவரை சந்திக்க சென்ற போது அவரை காண அவர் வீட்டின் ஹாலில் காத்திருந்தோம். எத்தனை ஒற்றுமை பாருங்கள். அப்போது டிவி தூர்தர்சனில் இந்த
படத்தை ஒளிரப்பினார்கள். இந்த படத்தில் துவக்கத்திலேயே வரும் இந்த பாடலை கேட்டும், காட்சியை பார்த்தும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆகையால் எப்போது இந்த பாடல் கேட்டாலும் நினவுக்கு வரும். இந்த நிகழ்ச்சி என் மனதில் இன்னும் பசுமையாக பதிந்துள்ளது. பாலுவின் இளமையான குரலை மறுமுறை நீங்களும் தான் கேளுங்களேன்.

படம்: தேடி வந்த மாப்பிள்ளை
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
வருடம்: 29.8.1970
நடிகர்: எம்.ஜி.ஆர், ஜெயலலித்தா
இயக்குநர்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பத்மணி பிக்சர்ஸ்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

கற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அதை உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

அன்று தொட்டு நீ நினைத்த என்னம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

உறவோ புதுமை நினைவோ இனிமை

July 24, 2007

எனக்கு நன்றாக நினவுக்கு வருகிறது கமல்ஹாசன் தலையில் கருப்பு கலர் குல்லா போட்டுக்கொண்டு சைக்களில் பாடும் பாடல் ஓர் பழைய பாடல் ஆடு புலி ஆட்டம் என்ற படத்தில் வரும் “உறவோ புதுமை” என்ற அழகான பாடல். சைக்கிள் மணியுடன் துவக்கத்தில் ஆரம்பிக்கும் இந்த பாடல் ஒருவித சிலிர்ப்புடன் இனிமையாக இருக்கும் குறிப்பாக இசையமைப்பு நன்றாக இருக்கும். பாலு அவர்களின் அழகான குரலில்
//எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம்
உறவுகள் ஆயிரம் இறந்திடும் காலம்//.. ஆமாம் நண்பர்களே எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் “இத்தளத்தில்” நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம். எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் இந்த வரிகளில் தான் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன.

உறவோ புதுமை நினைவோ இனிமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை

உறவோ புதுமை நினைவோ இனிமை

காற்றில் ஆடும் கொடிமலர் போலே
கண்களில் ஆடும் கொடிமலர் கண்டேன்
பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன்
பாவையின் ஜாடையில் என்னை நான் மறந்தேன்

உறவோ புதுமை நினைவோ இனிமை

தேவன் கோயில் நாதமும் ஒலியோ
திருசபை ஒலிக்கும் கீதமும் குரலோ
மார்கழி மாதத்தின் மலர்களின் உடலோ
மாங்கனி இதழ்களில் தவழ்ந்தது என் உயிரோ

உறவோ புதுமை நினைவோ இனிமை

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம்
உறவுகள் ஆயிரம் இறந்திடும் காலம்

உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை

உறவோ புதுமை நினைவோ இனிமை

Get this widget | Share | Track details

பாத கொலுசு பாட்டு பாடி

July 23, 2007


திரு.சத்யராஜ், சுகன்யா அவர்கள் நடித்து 1990 ஆண்டு வெளிவந்த திருமதி பழனிச்சாமி படம் செமி காமிடி படம் என்று நினக்கிறேன். படம் பார்க்கவில்லையாதலால் அதிகம் விவரிக்க வாய்ப்பில்லை. இந்த படத்தில் ஓர் அழகான மனதை மயக்கும் ஒரு மெலோடி பாடல் “பாத கொலுசு” என்று தொடங்கும் இந்த பாடல் சத்யராஜ், சுகன்யாவை வர்ணித்து பாடும் காட்சி பாடலாசிரியர் பல இடங்களில் அழகாக வர்ணித்து இருப்பார். முதல் சரணத்தில் சில வரியைத் தவிர எல்லா வரிகளூம் நம்மனதை கிறங்கடிக்கும்.. டிவியில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்தவரை இந்த படத்தில் கவுண்டரின் அட்டகாசம் தாங்கமுடியாது. நகைச்சுவை காட்சிகளில் நன்றாக நடித்திருப்பார். இந்த பாடலின் மெட்டும் பாலு அவர்களின் இனிமையான குரல் அற்புதமான வரிகளுடன் நம் இதயத்தை அழாகான தாளத்துடன் தள்ளாட வைக்கும். நீங்களும் தான் அனுபவியுங்கள்.

படம்: திருமதி பழனிசாமி
நடிகர்கள்: சத்யராஜ், சுகன்யா
வருடம்: 1990

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்

பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னுப்பூத்த செவ்வரளி பூவூ
செப்பால செஞ்சுவச்ச அம்மன் செல தான் ஹ ஹ ஹ

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்திவரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடைத்தான் ஏந்திவரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச்சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்ப்பாவை அழகு
ஒன்னாக கலந்த முந்நூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான் ஆ ஆஆ

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டிவைத்த சித்திரமே
தென் பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கைமனக்கும் தென் பழனி சந்தனமே
தென் காசி தூறலிலே கண் விழித்த சென்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ ஓஓஓஒ

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன்வைரம் கொடுத்தாளும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டு உடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலம் நேரம் மாலையிடத்தான் ஹ ஹா

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னுப்பூத்த செவ்வரளி பூவூ
செப்பால செஞ்சுவச்ச அம்மன் செல தான் ஹ ஹ ஹா

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

நீலக் குயில்கள் ரெண்டு மாலைப் பொழுதில் இன்று

July 20, 2007


கேட்கக் கேட்க அப்படியே நம்மை ஈர்க்கும் வசியப் பாடல் இது. ஆரம்ப ஹோய் ஹொய்யாவும் அதைத் தொடரும் இசையும் சரணத்தை முதலில் பாடும் குரலும் அந்தக் கால வானொலி நிகழ்ச்சிகளின் பாடல்களையும் (வயலும் வாழ்வும்) இசையையும் நினைவூட்டின! அப்புறம் பாலு ஆரம்பித்து அவரது தேனான குரலால் நம்மைத் தென்றலாய்த் தழுவுகிறார்.

படம், இசை, கவிஞர் பற்றிய விவரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

ஹொய்ஹொய்யா ஹொய்யா
ஹொய்ஹொய்யா
ஹொய்ஹொய்யா
ஹொய்ஹொய்யா ஹொய்யா
ஹொய்ஹொய்யா

நீலக் குயில்கள் ரெண்டு
மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு

ஹொய்ஹொய்யா ஹொய்யா
ஹொய்ஹொய்யா
ஹொய்ஹொய்யா ஹொய்யா
ஹொய்ஹொய்யா
ஹொய்ஹொய்யா ஹொய்யா

நீலக் குயில்கள் ரெண்டு
மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு

நீலக் குயில்கள் ரெண்டு
மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு

மாலையிட்ட மாமன்கூட பொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் மானம் போலக் கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று காத்துக் கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்

நீலக் குயில்கள் ரெண்டு
மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹஆஆஆ
ஆயிரம் ஆசைகள் கொண்டு

நேற்றிரவு தூங்கும்போது நூறு கனவு
நான் அணைக்க வந்தாள் அந்தக் நீல நிலவு ஆஹா
கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப் பொழுது
காணவில்லை நாந்தான் கண்ட கன்னியழகு
தேடியணைத்தான் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்

நீலக் குயில்கள் ரெண்டு
மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு

Get this widget | Share | Track details

தூங்காதே தம்பி தூங்காதே

July 19, 2007

தூ.த.தூ. படத்தின் இந்த எளிமையான பாடல் எனக்குப் பிடித்தமானது. பாடல் வரிகளின் எளிமைதானே சாமான்யர்களிடம் பாடலைச் சேர்க்கிறது? இதே போல அமைந்ததாக உன்னால் முடியும் தம்பி பாடலையும் சொல்லலாம்.

தூங்காதே தம்பி தூங்காதே
இப்பத் தூங்கிப்புட்டுப் பின்னாடி ஏங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்பத் தூங்கிப்புட்டுப் பின்னாடி ஏங்காதே

பட்டுக்கோட்டை வார்த்தைகளப் போட்டு
நம்ம புரட்சியாரு பாடிவச்ச பாட்டு
கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதக் கேட்டு
ஒன் சுறுசுறுப்பைக் காரியத்துல காட்டு
தூங்காதே தம்பி தூங்காதே
இப்பத் தூங்கிப்புட்டுப் பின்னாடி ஏங்காதே

தோலிருக்க சொளை முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சுக்கத்தான் கொடுத்திருக்கான் மூளை
தோலிருக்க சொளை முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சுக்கத்தான் கொடுத்திருக்கான் மூளை
நாம முழிச்சுக்கிட்டே இருக்கையிலும்கூட
நாம முழிச்சுக்கிட்டே இருக்கையிலும்கூட
தலையில் மொளகரைக்க ஆளிருப்பான் கூட

தூங்காதே தம்பி தூங்காதே
இப்பத் தூங்கிப்புட்டுப் பின்னாடி ஏங்காதே

தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
ஓயாம சுத்துதடா பூமி அட
ஓயாம சுத்துதடா பூமி

அது ஓய்வெடுக்கும் நாளிருந்தா காமி

தூங்காதே தம்பி தூங்காதே
இப்பத் தூங்கிப்புட்டுப் பின்னாடி ஏங்காதே

Get this widget | Share | Track details

நான் ஒரு டிஸ்கோ டான்சர்

July 19, 2007

ஒரு வித்தியாசமான நடனமாடத் தூண்டும் சுறுப்சுறுப்பான, சூடேற்றும் பாடல் ஒன்றைக் கேட்போமா நண்பர்களே. ஏன் அந்த நாட்களில் இந்த மாதிரி டிஸ்கோ பாடல்கள் அதிகமாக காற்றினிலே மிதந்து வந்து இளஞர்களை மட்டுமல்லாமல் என்னையும், நான் இஸ்கூல் படித்த காலத்தில் இந்த மாதிரி பாடல்களை ரொம்பவே கவர்ந்தது. நான் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்பேன். அந்த வகையில் இந்தி இசையமைப்பாளர் திரு. பப்பிலஹரி அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த பாடல் ……..

இந்த பாடலில் நம்ம தலைவர் பாடும் இந்த வரிகளைத்தான் கேளூங்கள். //எத்தனையோ மனம் தள்ளாட// இந்த வரிகள் எப்படி நம் மனதை தள்ளாட வைக்கிற பாலுவின் குரலை அனுபவியுங்கள்.

படம்: பாடும் வானம்பாடி
இசை: பப்பி லஹரி (தமிழ்: சங்கர் கனேஷ் ??)
நடிகர்: ஆனந்த் பாபு
வருடம்: 1985

நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
எங்கேயும் எந்தன் கீதம்
எங்கேயும் எந்தன் ராகம்
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்

சங்கீதம் கொண்டாட சந்தோசம் உண்டாக
பொன்னான நேரம் இந்நேரம்
என்னென்ன எண்ணங்கள் என்னென்ன வண்ணங்கள்
மின்னாமல் மின்னும் கண்ணோரம்
அங்கங்கள் ஆடட்டும் ஆனந்தம் தேடட்டும்
இன்பத்தின் வெள்ளோட்டம் எங்கேயும் பொங்கட்டும்
கமான் சிங்கர்ஸ்
இதோ இளமை …
இதோ இனிமை…
இதோ புதுமை…

நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்

நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹேய்
நான் பாடும் பாடல்கள் சூப்பர் ஹ
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
எங்கேயும் எந்தன் கீதம்
எங்கேயும் எந்தன் ராகம்

நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டி..ஸ்..கோ.. டான்சர்

இசையிலே ஒரு போதை
இணைந்ததே இந்த வேளை
எத்தனையோ மனம் தள்ளாட
மெல்லிசை தான் நான் பாட

பாடாத ராகங்கள் போடாத தாளங்கள்
கேட்காதா கானம் என் கானம்
நாள் தோறும் என்பாட்டு நீங்காத பூங்காற்று
பாரட்ட வேண்டும் எல்லோரும்
கச்சேரி கேளுங்கள் கைதாளம் போடுங்கள்
டிஸ்கோவை பாருங்கள் நழ்வாழ்த்து கூறுங்கள்
ஹே ஹே ஹேய்

ஒரே சுகம் தான்..
ஒரே சுவை தான்..
ஒரே இசை தான்..

நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹே ஹேய்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டி..ஸ்..கோ.. டான்சர்

எங்கேயும் எந்தன் கீதம்
எங்கேயும் எந்தன் ராகம்
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
ஐயம் அ டிஸ்கோ டா…. ன்….ஸ…..ர்ர்ர்ர்

நான் தான் டாப்பு

July 17, 2007

Image and video hosting by TinyPic
சூப்பர்ஸ்டார் படத்தில் பாலு அவர்கள் பாடிய எத்தனையோ மெலோடி பாடல்களைப்பாடியிருக்கிறார். இதோ இந்த பாடல் தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும் பாடல் “நான் தான் டாப்பு” என்ற பாடல். இந்த படத்தில் சந்தனக்காற்றே என்ற ஒரு அழகான பாடலை ஏற்கெனவே சென்ற மாதம் கேட்டோம். சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகனேசன், ஜெய்சங்கர், முத்துராமன், கமல்ஹாசன், ரஜினிகாந்த போன்ற நாயகர்கள் எல்லோரும் அதிகபட்சமாக கதாநாயகிகளை கிண்டல் செய்யும் பாடல்கள் பாடி ஓய்ந்துவிட்டார்கள். தற்போது புதிய கதாநாயகர்கள் கதாநாயகிகளை கிண்டல் செய்யும் பாடல்கள் ஓரிரண்டு படங்களில் தவிர அதிகம் பார்க்கமுடிவதில்லை, பாடல் கேட்கவும் முடிவதில்லை. அந்த வகையில் இது ஒருவகை கிண்டல் பாடல் தான். அந்த காலகட்டத்தில் ரஜினிசார் படத்தில் இந்தவகையான பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். அவரின் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடிச்சு துள்ளிகுதித்து லூட்டி அடிப்பார்கள் என்னமோ அவர்களே பாடுவது போல அதுல அவங்களுக்கு ஒரு கிக் போலும். தற்போது வரும் அழகான பாடலுக்கு மத்தியில் இந்த பாடலில் வரும் வரும் வரிகள் எல்லாம் ரஜினி பாஷையில் சொல்வதென்றால் “ஜுஜிபி”. இந்தபாடலில் என்ன இருக்கு இதப்போய் பதிந்திருக்கிறார் என்று நீங்கள் நினக்கத்தோன்றலாம். அதிகமாக மெலோடி பாடல்களை கேட்டு உருகிபோய்விட்டீர்கள். ஒரு சின்ன மாறுதலுக்காக இந்த பாடலையும்தான் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன். தாங்கள் விரும்பினால் இதுபோல பலபாடல்கள் ஒவ்வொன்றாக பதியப்படும்.

நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
அடி நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு

நீ நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா
நீ நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா

நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு

போடா போடா
முரட்டுக்காளை
செல்லாது உன்
தில்லு முல்லு

அட போடா போடா
முரட்டுக்காளை ஹன்ஹா
செல்லாது உன்
தில்லு முல்லு

நீதான் சின்னப்பிள்ளை
போட்டாலே செய்யும் தொல்லை
கண்கள் கழுகுப்போல பொல்லாதவன்

இது டிஸ்க்கோ அடி பார்த்துக்கோ
இது டிஸ்க்கோ பார்த்க்கோ
ஜோடி என்ன சேர்த்துக்கோ
இது கோ கோ இத கத்துக்கோ
என்ன வாத்தியார ஏத்துக்கோ

அடி நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு

நீ நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா
நீ நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா

அடி நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு

மானா மதுரை மரிக்கொழுந்தே
மதராசுக்கு நீ எப்பவந்தே
மானா மதுரை மரிக்கொழுந்தே
மதராசுக்கு நீ எப்பவந்தே

பாடாத குயிலப்போல
ஆடாத மயிலப்போல
ஓடாத
எங்கப்போற

பரட்டை ஹ
செம்பரட்டை

பரட்டை செம்பரட்டை
நீ பாடுறது கொறட்டை
உன் பாட்ட நான் கேட்ட
நீ பார்த்து விடு கொறட்ட

அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு

அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு