Archive for August, 2007

520. அவளொரு மேனகை

August 31, 2007

சிவரஞ்சனீ….. என்று பாலு ராகமாக இழுக்கும் அவளொரு மேனகை பாடல் சிவரஞ்சனி படத்தில் வருவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – நிறைய தளங்களில் படத்தின் பெயர் ‘நட்சத்திரம்’ (1980) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சிவரஞ்சனி என்று ஒரு நடிகை இருந்தார். கமல்ஹாஸனின் கலைஞனில் போதை அடிமையாய் வந்து மாடியிலிருந்து விழுந்து செத்துப் போவாரே அவர்தானே?

இந்தத் தனிப் பாடலில் பாலு ஒவ்வொரு வார்த்தையையம் கனகம்பீரமாகவும் அதே சமயத்தில் இனிமை குன்றாது பாடிக் கலக்கியிருப்பார். ஒவ்வொரு சிவரஞ்சனி ஆலாபனையிலும் அவரது குரலின் வீச்சு அபாரமாக இருக்கும். ஓரிடத்தில் ‘அபிமான’ இன்னொரு இடத்தில் ‘அவளொரு’ என்று குரலின் பாவத்தைச் சட் சட்டென்று மாற்றிப் பாட எப்படித்தான் முடிகிறதோ இவருக்கு!

பாடலின் மெட்டே வித்தியாசமாக இருக்கிறது இந்தப் பாட்டில். ஊகிக்க முடியாதவாறு சரணத்தின் மெட்டு வரிக்கு வரி மாறிக்கொண்டே போகிறது. இசை ஷங்கர் கணேஷ் அவர்கள்.

‘பார்வையில் குளிரும் மார்கழி மாதம்’ – என்ற வரியைப் பார்த்தால் வைரமுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு.

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை

கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோடு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

காவியப் பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
காவியப் பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள நாதம்

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

அவள் சிங்காரப் பூங்குழலாவணி மேகம்
தேனுலாவிடம் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்
தாமரைப் பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
முடியோ ஆலயச் சங்கொலி
இடையோ அசைந்திடும் கிண்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பனில்லை கவிதைபாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பனில்லை கவிதைபாட ஆஆஆஆஆ

அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவளது பக்தனன்றோ

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

Aval Oru Menakai.m…
Advertisements

519காதோரம் கனகாம்பரம்

August 31, 2007

இசையமைப்பாளர், பாடலாசிரியர் திரு. தாணு (இவரின் படத்தை யாராவது தேடி அனுப்பி வைக்கலாமே?) அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களூடன் அமலா சேர்ந்து நடித்த படம் புதுப்பாடகன் இந்த படத்தில் ஏற்கெனவே ‘மயில் தோகை’ மற்றும் ‘சின்ன பூவே’ ஆகிய இரண்டு பாடல்கள் கேட்டு மகிழ்ந்தோம். இதோ இந்த பாடலை சுனந்தா அவர்கள் பாலுவுடன் சேர்ந்து பாடியுள்ளார். சுனந்தா அதிகம் அவருடன் பாடவில்லை ஒன்றோ இரண்டோ பாடல்கள் தான். இந்த பாடலில் பாலு அடிக்கும் லூட்டி இருக்கே யம்மா சொல்லி மாளாது. அதுவும் கதாநாயகியை கிண்டல் அடிக்கும் பாடலாயிற்றே அவருக்கு சொல்லியா தரவேண்டும் மனுசன் ‘சுண்டல்’ செய்துவிடுவார் போங்க. இந்த பாடலை கேட்டு எழுதுவதற்குள்ளே எனக்கு தாவு கழண்டுவிட்டது. அவருக்கென்ன பாடிவிட்டு போய்விட்டார். இப்போது பாடலை கேட்டு தட்டச்சு செய்யும் எனக்குத் தான் காது பஞ்சர் ஆகிவிட்டது.

இதோ இந்த பாடலில் ஒரு வார்த்தை
//அப்பா, ஐயோ, அம்மாஆ உய்ய்ய்ய்ய்//
எப்படி பொருத்தமான படம் கிடைத்தது பாருங்கள், கேளூங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

படம்: புதுப்பாடகன்
பாடியவர்: பாலு, சுனந்தா
இசை: தாணு
பாடாலசிரியர்: தாணு

ஜிகு ஜிகு ஜிகுஞ்சா
ஜிங்கிடு ஜிங்கிடுச்சா
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்

மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
போடு காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்

ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
டிக்கிடு டிக்கிடு டிக்கிடுடிக்கிடு
ஐய்… ஆஹா….

க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு

க்ர் க்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அத்தப் பொண்ணே கிட்ட வாடி
ம்ஹும்..
ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி
ஹோஓஓ..
அத்தப் பொண்ணே கிட்ட வாடின்னா
ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி
கண்ணான கண்னாட்டியே
வாடி பொண்டாட்டியே… யேய்…
கண்ணான கண்னாட்டியே
வாடி பொண்டாட்டியே…
கட்டாக உன்னை கட்டி
கொண்டு போகும் மதுர காளை

காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
காதோரம் கனகாம்பரம்.. ம்ஹாஆ
தெருவோரம் காதல் வரும்

தரிகரிடதோம்..தரிகரிடதோம் ..
தரிகரிடதோம்.. தரிகரிடதோம்.. ஹாஆ

இய்யயயயப்ப்ப்ப்பாஆஆ

உன்னைப் பார்த்த பின்னாலே,
அப்புறம்
உலகம் சுத்துது தன்னாலே,
ஹ சுத்தும்
உன்னைப் பார்த்த பின்னாலே,
உலகம் சுத்துது தன்னாலே

கள்ளூண்டபோதைப் போல… ஹ
தள்ளாடி உந்தன் மேல
கள்ளூண்டபோதைப் போல
தள்ளாடி உந்தன் மேல

பட்டாடம் உந்தன் மேனி தொட்டு கிட்டா தோசம் இல்லே

காதோரம் ம்ஹஹ
கனகாம்பரம் ம்ஹஹ
தெருவோரம் ம்ஹஹ
காதல் வரும் ம்ஹஹ
மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
காதோரம் ஹஹ கனகாம்பரம் ஆஹஹா
தெருவோரம் ஹ காதல் வரும்

டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கட டிங்கு டக்கட
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கட டிங்கு டக்கட
ஹாஆ

ஆஹா, ஐயோ, அம்மாஆ உய்ய்ய்ய்ய்

ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட..ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..

க்ர் க்ர் குர்ர்ர்ர
க்ர் க்ர் குர்ர்ர்ர்
க்ர் க்ர் குர்ர்ர்ர்
க்ர் க்ர் குர்ர்ர்ர் குர் குர்

ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே
ம்ஹஹா
நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே
ஐயோஓஓ
ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே
நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே

கதிரும் விளைஞ்சிடும்
புதிரும் புரிஞ்சிடும்
கதிரும் விளைஞ்சிடும்
புதிரும் புரிஞ்சிடும்

எனக்கு ஒரு பதிலை சொல்லு
இல்லாவிட்டா கிணத்துல தள்ளூ
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ய்
தள்ளிட்டியேடி யப்ப்ப்ப்பாஆஆஆஆ

காதோரம் கனகாம்பரம்
கிணத்துக்குள்ளே காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
கிணத்துகுள்ளே காதல் வரும்

மாமனுக்கு தாரமில்ல மச்சான்கிட்ட மோகம் இல்ல
அச்சாரமா தரவேணும் அவதிபடு ஆளவிடு
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹோ ஹோய்
இந்த புடி இந்தபுடி மேல வந்தேன்னா…பாரு..
வந்து புடிச்சேன்னா பாரு.. உதை வாங்கப்போறீங்க ஆமா

Get this widget | Share | Track details

516 சின்ன கண்ணன் தோட்டத்தில்

August 30, 2007


செந்தூரப்பூவே என்ற படத்தில் ஏற்கெனவே செந்தூரப்பூவே தேன் சிந்தவா என்ற ஒரு டூயட் பாடலை இதே தளத்தில் திரு.யாழ் சுதாகர் சார் தொகுப்பில் கேட்டுள்ளோம். அதே படத்தில் இதோ ஒரு சுறுசுறுப்பான தாளத்தில் ஒரு பாடல் கேட்பதற்கு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் திரு. மனோஜ் கியான் அவர்களின் இசையமைப்பு அபாரமாக இருக்கும். பாடலின் நடுவில் வரும் பிஜிஎம்,. கோரஸ் இந்த பாடலுக்கு அதிகமான இனிமையை கூட்டும். கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: செந்தூரப்பூவே
பாடியவர்கள்: .டாக்டர். பாலு, சின்னக்குயில் சித்ரா
நடிகர்: ராம்கி,
இசை: திரு.மனோஜ் கியான்
பாடலாசிரியர்: திரு.முத்துலிங்கம்

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட

வென்னிற ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட
வென்னிற ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

பூவைப்போல பூத்திருந்தேன்
பூவுக்காக காத்திருந்தேன்
பூஜைக்காக பூக்கள் தந்து
பூவை வாழ்வில் மணம் தந்தாள்

நெஞ்சம் என்னும் பூங்குருவி
நித்தம் உந்தன் பேர் எழுதி
சந்தம் பாட என்னும் போது
சொந்தமாக நீ வந்தாய்

உனக்கெனவே மனக்கதவை
திறந்தது இங்கே வா வா

உன் மஞ்சள் குங்குமம் ஒளிவீச
என் நெஞ்சம் துள்ளூது கதை பேச

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட

திங்கள் என்றும் தேய்ந்தாலும்
கங்கை வெள்ளம் ஓய்ந்தாலும்
எந்தன் அன்பு தேயாது
அதில் காதல் வெள்ளம் ஓயாது

வானவில்லும் நிறம் மாறும்
வீசும் தென்றல் திசை மாறும்
மங்கை எந்தன் காதல் உள்ளம்
என்றும் இங்கே மாறாது

மனதினிலே கனவுகளை
விதைத்திட இங்கே வா வா

என் ஆசை நாடகம் அறங்கேற்
ஒரு வேளை வந்தது உன் வடிவாக

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட

வென்னிற ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே

அந்த வானம் பூக்களை தூவாதோ

புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
ஒரு தேவதை வந்தது நீராட

வென்னிற ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

Get this widget | Share | Track details

517. நீ ஆண்டவனா

August 30, 2007

வானமே எல்லை படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட். வித்தியாசமான மெட்டு, இசை என்று ஒவ்வொரு பாடலும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும்.

பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் இந்தப் பாடலில் மெலிதாக விரவியிருக்கும் சோகம் மனதை என்னவோ செய்யும். வேகமான தாளத்திலிருந்தாலும் இது மென்மையான, அழகானதொரு பாடல். பாடலின் காட்சியாக்கம் இறுக்கமானதொரு சூழ்நிலையில் அமைந்திருக்கும். சாக முடிவெடுத்த – சமூகத்தை வெறுத்த இளைஞர்கள் – அழுது கொண்டிருக்கும் அனாதைக் குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காகப் பாடுவதுபோன்று அமைந்திருக்கும் இந்தப் பாடல். தற்கொலை மனநிலையில் குழந்தையைச் சமாதானப்படுத்தும் அக்கறை, அன்பு என்று உணர்ச்சிப் பிழம்பான கட்டத்தில் – அதை மெல்லியதாக, ஆனால் அழுத்தமாக தனது குரலில் வெளிப்படுத்தியிருப்பார் பாலு.

வைரமுத்துவின் வரிகளைச் சித்ராவின் துணையுடனும் மரகதமணியின் இசையுடனும் ஒரு உன்னதப் பாடலாக ஒலிக்கச் செய்த பாலுவை – ஒரு ‘குரல் மந்திரவாதி’ என்று சொல்லலாமா?

நீ ஆண்டவனா தாய்தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத பொது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்

தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

நீ ஆண்டவனா தாய்தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

ஆரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரோராரோ
ஆரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
வான்வெளியில் தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கைவீசியே
சூரியனை தாலாட்டுதே

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானால் சேலையில்
இனி உன் கதை எம் வாழ்வில் வரவா செலவா
முள்ளென்பது ரோஜாவி்ல உறவா பகையா

காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

நீ ஆண்டவனா தாய்தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

Get this widget | Share | Track details

518. "500- Soul Soothing Success"

August 30, 2007

“Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful” once a famous Musician and Philosopher Albert Schweitzer quoted. Writing a blog is not at all an innovative idea, nor writing a musical blog. But, it’s a novel idea to create an exclusive blog for a singer who has taken our souls with his soothing voice, which knew the feelings pathos to happy and comical to catastrophic effects, and he is SP Balasubramaium, fondly, SPB.

On this day, the blog for SPB goes very strongly with five hundred plus songs, I would convey my gratitude to Sundar, who initiated this noble work and as you all aware, a simple words of thanks can’t suffice for his work, which needs some special mention. And, like his mentor SPB, I love Sundar’s dedication and sincerity in his work and I knew even he burns the midnight oil to post the songs and the song selection also very good, but more than that, what I like with his writing is that his nostalgic nuances between songs and hilarious effects which will make the readers to get rid of hysterics hectic mechanical life, and who will forget his side-splitting sense ‘PPP ananum’ in the song ‘Jaadhighal Illaiyadi pappa’, ohoo great!! Sundar always takes to the heaven using his pen flight. Thanks Sundar, continue this noble work and we are all here with you.

Next Ravi sir, fondly ‘THE UNCLE’, and one can’t believe two things, one that he is the person who uttered that he can’t write about a song, albeit he enjoys it, and secondly he is of 50. But now see his zeal and enthusiastic filled extolling writing about SPB, simply splendid. And, like Sundar, he is also very sincere and dedicated in his SPB blog works and he has an immeasurable collection of SPB’s songs, which I’ll burgle one day from him!! Ravi uncle, keep it up.

And, Dasaradhi sir, who always transforms any live SPB’s concerts into text format, and his flawless flow of language crowns feather to SPB’s musical cap. And last but not the least, Vikas, who always eulogizes SPB’s Hindi songs, and his work in the SPBINDIA blog needs a special mention.

I’ll be failing in my duty if I won’t mention about the visitors of this blog, they always encourages the above people with their comments, and few to list, Prasanna (Raaja’s fan, and SPB’s fan too, it seems!!!), Ashok (Mr.Moderator!!), Usha & Usha, Mahi(Oru vidha Bhayam Ennaku!!!), Raghavan & Ghana Prabha (Song DBAs) and all.

I wish you all the very best, and do not stop your noble work, which is for a singer and a human who stimulated us with his magical voice.

Others Love Music, so They Like SPB,
But we all Love SPB, hence like Music.

VIVA SPB!!!!!!!!!!!!!!!!!!!!!!

Proud of having “HIS” name

S.Balasubramaian

515. எனைத் தேடும் மேகம்

August 29, 2007


கண்ணோடு கண் படத்தில் வரும் இந்தப் பாடலை வாணிஜெயராமும் பாலுவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். ரதியே என்று பாலு முடித்ததும் வாணிஜெயராம் ‘ஆஆஆஆஆ’ என்று செய்யும் ஆலாபனை நம்மைப் பரவசப்படுத்துகிறது என்றால் வாணி அழகே என்று முடித்ததும் பாலு செய்யும் ஆலாபனை நம்மை மேகங்களில் சஞ்சரிக்க வைக்கிறது.

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் – ரதியே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் – அழகே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை
அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை

இங்கே எல்லாம் வாழும் கண்ணா விழியில் மழை
இங்கே எல்லாம் வாழும் கண்ணா விழியில் மழை
கருகாதே கலங்காதே
இது முள்ளில் செய்த காதல் பாதை

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் – ரதியே
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடைபோடும் பணக்கார சாபம்
நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடைபோடும் பணக்கார சாபம்

காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தா விடும்
காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தா விடும்
விழி ஓரம் சுடும் ஈரம் எனை செய்து செய்யும் காதல் சோகம்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் – அழகே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

Get this widget | Share | Track details

514. T.R. & Bala – # 15: தங்க நிலவே உன்னை உருக்கி

August 29, 2007


தே.ராஜேந்தரின் பாசமலர் தங்கைக்கோர் கீதம் படம். நல்ல பாடல்கள் பல இப்படத்தில் இருக்கின்றன. ஆனாலும் ‘தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி’ பாடலை மட்டும் குறிப்பிட்டு கேலி செய்வது சிலருக்கு வழக்கம். அதை விடுங்கள்.

எளிய இசையில் புல்லாங்குழல் கூட வர பாலு அருமையாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிய பாடல். அழகான தாலாட்டுப் பாடல். இரவில் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டி தூங்க வைக்கச் செய்ய முடியும் பாடல்.

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே
ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன் ஹ..
ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன்
நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன்
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்
கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்

தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

Get this widget | Share | Track details

513சின்னப்பூவே மெல்லத் தூங்கு

August 29, 2007


இசையமைப்பாளர் திரு. தாணு இசையமைப்பில் அழகு மயில் தோகை பாடல் ஒன்றை புதுப்பாடகன் படத்தில் கேட்டோம். இதே படத்தில் ஒரு தாலாட்டு பாடல் கேட்க மனதிற்கு இதமாக இருக்கும். இந்த படத்தில் நடித்த நடிக நடிகையர் யாரென்று தெரியவில்லை. பாடல்கள் எல்லாவற்றையும் பாடியிருப்பார் பாலு.

படம்: புதுப்பாடகன்
பாடியவர்: பாலு
இசை: தாணு
பாடலாசிரியர்: தாணு

ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்
ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..
ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..

சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு
சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு

எந்தன் ஆசைக்கிளியே
கண்ணில் தூக்கம் இல்லையே
சின்னப்பூவே மெல்லத்த் தூங்கு
விழி வாசல் இமை மூடு

மனக்கும் முல்லை அரும்பே
மயக்கும் பிள்ளைத் தமிழே
மனக்கும் முல்லை அரும்பே
மயக்கும் பிள்ளைத் தமிழே

சின்னப்பிஞ்சு முத்துச்சரமே
சிரிக்கும் வண்ணமயிலே
கண் உறங்கு

சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு

எந்தன் ஆசைக்கிளியே
கண்ணில் தூக்கம் இல்லையே
ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்
ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்

பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதறாகி போனது மஞ்சம்
பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதறாகி போனது மஞ்சம்

கண்மணியே கண்மணியே
காண வில்லை என் மணியே
கன்னிப்பெண்னின் உள்ளம் அது
ஹஹ யானை விழுந்த பள்ளம் அது
கன்னிப்பெண்னின் உள்ளம் அது
யானை விழுந்த பள்ளம் அது

சித்தர்களூம் சொல்லியது
சிந்தையிலே நின்றிடுது.

Get this widget | Share | Track details

512சம்சாரம் என்பது வீணை

August 28, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

1975 ஆம் ஆண்டு வெளிவந்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தில் வரும் இந்த பாடல் சம்சாரம் என்பது வீணை அந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பாடல். இத்தனை நாள் இந்த தளத்தில் பதியாதது ஆச்சரியம் தான். பழைய பாடல்கள் ஒவ்வொன்றாக பதிந்து வரும் பட்டியலில் இன்னும் ‘ச’ வரிசையீல் நுழையாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதற்க்குள் ரசிகர் குழுவில் திரு. நடராஜன் அவர்கள் பாடலை நன்றாக விவரித்து எனக்கு ஒரு மடல் அனுப்பியிருந்தார். குறிப்பாக என் மடலில் அவர் குறிப்பிட்டது வீடியோ பாடல்களில் சில வரிகள் பார்க்க நன்றாக இருக்கும் என்றார். அவருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் சில நேரங்களீல் வீடியோ சிடி சரியாக பார்க்க முடிவதில்லை ஆனால் ஆடியோ கோப்புகள் நல்ல தரத்துடன் பாடல்கள் கேட்க முடியும் என்பது என் கருத்து. ஆகையால் நான் அதிகம் வீடியோ காட்சிகள் உடைய பாடல்கள் பதிய விரும்புவதில்லை. அவரின் யோசனக்கு மிக்க நன்றி. இந்த பாடலை சுந்தர் ஏற்கெனவே தளத்தில் பதிந்திருப்பார் என்று தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை எப்படியோ விட்டுப்போச்சு. இதோ திரு.நடராஜன் அவர்களூக்காக இந்த பாடலை பதிவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் மறுபடியும் ஒரு தடவை பல நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்க நினவு படுத்தியதற்க்கு அவருக்கு மிக்க நன்றி. மேலும் இத்தனை நாள் மேம்போக்காக தான் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன் மெட்டு நன்றாக இருந்தால் ஓரிரு தடவை கேட்பதோடு சரி, பாடும் நிலாவில் எழுத ஆரம்பத்ததும் பாடல் வரிகள் தட்டச்சு செய்யும் போது சில வார்த்தைகள் சரியாக புரிவதில்லை, அதனால் தட்டச்சில் நிறைய பிழைகள் ஏற்பட்டுவிடுகிற்து. அந்த வகையில் இந்த பாடலில் ஒரு சில வரிகள் எனக்கு விளக்கம் புரியவில்லை அவை பல்லவியில் வரும் மூன்றாவது வரி “சலனங்கலதி இல்லை” இதற்க்கு யாருக்காகவது விளக்கம் தெரிந்தால் தெரிவிக்கலாம். மற்றவர்களூம் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடகர்: பாலு
இசை:: விஜயபாஸ்கர்
வருடம்: 1975

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை சிறந்த ஏடு
அது ஆசை கிளியின் கூடு
என் வாழ்க்கை சிறந்த ஏடு
அது ஆசை கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
ஹஹ இது போன்ற ஜோடி இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்

இந்த காதல் ராணி மனது
அது காலம்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

Get this widget | Share | Track details

511. ஆலோலம் கிளி தோப்பிலே

August 27, 2007

சிறைச்சாலை படத்தில் இன்னொரு இனிமையான பாடல் பாலு சித்ரா ஆகிய ஆலோலங்கிளிகள் ரெண்டும் பாடிய இந்தப் பாடல். வழக்கமான மெட்டுகளிலும் தாளக்கட்டுகளிலும் அடங்காத இன்னொரு வித்தியாசமான மெட்டு இசைஞானியிடமிருந்து. அழகான பாடல். தபுவுக்காகத் தபதபவென்று ஓடிவந்து பார்த்த கூட்டம் அதிகம் என்ற நினைக்கிறேன். 🙂

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்
துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ
காதல் விழாக் காலம் கைகளில் வாவா ஈர நிலாப் பெண்ணே
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
வீணை புது வீணை சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய்
பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

Get this widget | Share | Track details