514. T.R. & Bala – # 15: தங்க நிலவே உன்னை உருக்கி


தே.ராஜேந்தரின் பாசமலர் தங்கைக்கோர் கீதம் படம். நல்ல பாடல்கள் பல இப்படத்தில் இருக்கின்றன. ஆனாலும் ‘தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி’ பாடலை மட்டும் குறிப்பிட்டு கேலி செய்வது சிலருக்கு வழக்கம். அதை விடுங்கள்.

எளிய இசையில் புல்லாங்குழல் கூட வர பாலு அருமையாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிய பாடல். அழகான தாலாட்டுப் பாடல். இரவில் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டி தூங்க வைக்கச் செய்ய முடியும் பாடல்.

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே
ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன் ஹ..
ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன்
நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன்
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்
கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்

தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

Get this widget | Share | Track details

Leave a comment