Archive for September, 2007

536கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

September 29, 2007

வைரமுத்து அவர்களின் அழகான வரிகளில் சோகப்பாடல் இந்த பாடல். என்றும் மார்க்கண்டேயன் திரு.சிவக்குமார் அவர்களின் அற்புத நடிப்பில் வெளிவந்த படம் மனிதனின் மறுபக்கம். இந்த பாடலில் பாலுஜியுடன் சேர்ந்து ஜானகியம்மா தங்கள் குரல்களில் இருவரும் நம் மனதை கலங்கடித்து நம் கண்ணில் நீர் கோர்க்க வைத்துவிடுவார்கள்.
பலதடவை கேட்டாலும் மறுபடியும் கேட்கத்தூண்டும் பாடல். கேட்டுத்தான் விடுங்களேன்.

பாடல்: கல்லுகுள்ளே வந்த ஈரம் என்ன
படம்: மனிதனின் மறுபக்கம்
பாடகர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
இசை: மேஸ்ட்ரோ ராசய்யா
வரிகள்: வைரமுத்து

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா

நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே
நெஞ்சத்தில் தாகம் என்று நீயும் சொல்லம்மா

காலங்கள் செல்லச்செல்ல ஆயுள் இன்று கூடும்
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாடும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்துக்கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும் காலம் என்ற காலம் இந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயே இன்று வாழ்த்துச்சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த மேளச்சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித்தா

தாளத்தை தள்ளிவைத்து ராகம் எங்கு போகும்
பாசத்தை தள்ளிவைத்து ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓடும் கண்ணே கட்டி பெண்ணே இந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

Get this widget | Share | Track details
Advertisements

535இடியோசைகள் கேட்கட்டும்

September 25, 2007


பாலுஜி ஆவேசப்பாடல் கேட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டது போன்ற ஒரு பிரம்மை. கிழக்குக்கரை படத்தில் ஒரு ஆவேசப்பாடல் ஒன்றை கேட்கலாமே? அழகான ஆவேச வரிகளின் நடுவில் “ஹரிஹர நந்தினி” ஸ்லோகத்தை தொடர்ந்து ஒரு புல்லாங்குழலின் இனிமையான இசையும் நம் மனதை ஆக்ரமித்துக்கொள்கின்றன இந்த இடியோசைகள் கேட்கட்டும் பாடல். படத்தை பார்த்ததாக நினவில்லையாதலால் பாடலில் வரும் அந்த “ஜும் ஜுஜுஜும்” எதற்கு என்று தெரியவில்லை இருந்தாலும் நடுவே நடுவே கேட்பதற்கு இனிமையான மெலோடியான வரிகளூம் இடம்பெறுவது மகிழ்ச்சியை தருகிறது. நீங்களும் தான் கேளூங்களேன்.

படம்: கிழக்குக்கரை
நடிகர்:பிரபு, குஷ்பு
பாடியவர்: டாக்டர். எஸ்.பி.பாலு
இசை: தேவா

இடியோசைகள் கேட்கட்டும் மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்
எங்கள் நெஞ்சம் அஞ்சிடுமா எங்கள் கண்கள் துஞ்சிடுமா
இந்த காலம் உள்ளவரை எங்கள் கையில் கிழக்குக்கரை
மயக்கம் கலக்கம் தயக்கம் நடுக்கம் இனியேது

இடியோசைகள் கேட்கட்டும் மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும் ஹ

தாய் மானம் மீது தாளாத பாசம்
நீ வைத்ததாலே உனகென்ன லாபம்
பூ பந்தலோடும் பொன்னூஞ்சலோடும்
நீ காணவில்லை கல்யாணக்கோலம்
காவல் துறை ஒன்று தான் சாட்சியாக
கொண்டேனம்மா உன்னை நான் தாரமாக
மேல தாளமில்லை மணமேடை யேதுமில்லை ஹ
நானும் நீயுமின்றி ஒரு சொந்தம் யேதுமில்லை
இதுதான் விதியா இறைவன் சதியா இளமானே

இடியோசைகள் கேட்கட்டும் மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும்…… ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்.. ஹஹ

வாடாமால் காப்பேன் தாயான பெண்ணை
வளைகாப்பு போட நான் தானே அன்னை
மாதங்கள் ஏழு ஆயாச்சு கண்ணே
வேலைகள் செய்ய கூடாது சொன்னேன்
நான் அல்லவா சேவைகள் செய்ய வேண்டும்
கால் வீங்கினால் என்மனம் நொந்து போகும்
வாச பொன்மலரா ஒளி வீசும் வெண்னிலவா
ஆசை காவியமா விழி பேசும் ஒவியமா
மகனும் வருவான் சுகமும் தருவான் காலங்காதே

இடியோசைகள் கேட்கட்டும் மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜுஜிம் ஜும் ஜும்
எங்கள் நெஞ்சம் அஞ்சிடுமா எங்கள் கண்கள் துஞ்சிடுமா
இந்த காலம் உள்ளவரை எங்கள் கையில் கிழக்குக்கரை
மயக்கம் கலக்கம் தயக்கம் நடுக்கம் இனியேது

Get this widget | Share | Track details

534தேன் மழையிலே தினம்

September 22, 2007

எப்பவோ கேட்ட பாடல் ஒன்று முரளி நடித்த படத்தில் ஒரு ஜாலியான பாடல் நம்மையும், நம் மனதையும் தேன் மழையிலே தினம், தினம் நனையவைக்கும் குரல் பாலுஜியின் குரல். ஆமாம் ரசிகர்களே “புதியவன்” என்ற படத்தில் கலக்கலான பாடல் இது. பாடலைக்கேட்டால் உங்களூக்கு அந்தநாள் நினவை உங்களாலே தடுத்து நிறுத்த முடியாது.

படம்: புதியவன்
நடிகர்கள்: முரளி, அனிதா
பாடியவர்: பாலு
இசை: வி.எஸ்.நரசிம்மன்
இயக்கம்: அமீர்ஜான்
வருடம்: 1984

தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே

இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்
இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்

உன்னை நினக்கிறது குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
குயில் இங்கே வசந்தம் அங்கே
நீ வா நீ இங்கே

தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே

எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா
எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா

கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
உன்னைத்தான் நானே நனைத்தேனே
வா பொன் மானே

தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே

Get this widget | Share | Track details

533செந்தமிழ் தேன் மொழியாள்

September 21, 2007பாலுஜி ரசிகர்களூக்கு தற்போது பெரிய ஆதங்கம் என்னவென்றால் பாலுஜி அதிகம் படங்களில் பாடுவதில்லையே என்பதுதான். அதனாலென்ன அவர் அதிகம் பாடவில்லையென்றால் என்னங்க. அதான் தினமும் அவர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறோமே. ஆமாங்க தொலைக்காட்சி சீரியல்களில் முகப்பு பாட்லாக அதிக சீரியல்களீல் பாடுகிறாரே அது போதாதா ரசிகர்களூக்கு. அந்த வகையில் சமீபத்தில் துவங்கிய ஒரு தனியார் தொலைக்காட்சியில் இரவு
9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தேன்மொழியாள்’ சீரியலில் பெண்ணைப்பற்றி ஓர் அழகான முகப்பு பாடல் நெஞ்சை அள்ளும் வரிகளில் அற்புதமான இசையமைப்பில் பாலுஜி தன்
கந்தர்வக்குரலில் கலக்கியிருப்பார். இதேபோல் ஓர் இரண்டு அல்லது மூன்று வருடங்களூக்கு முன் ‘நம்பிக்கை’ சீரியலில் முகப்பு பாடலாக பாடினார் அந்த பாட்லை இந்த பாடலை
அகில உலக அளவில் பிரபலாமானது. மேடை நிகழ்ச்சியில் கூட இந்த பாடலை பாடச்சொல்லி உலக பெண் இசைபிரியர்களூக்காகவும் முக்கியமாக பாலுஜியின் பெண் ரசிகைகளுக்கும் சமர்ப்பணம் செய்வதில் மிகவும் பெருமையடைகின்றேன். மேலும், இந்த பதிவுக்காக
‘தேன்மொழியாள்’ சீரியலின் காட்சிகள் சிலவற்றை சிரமப்பட்டு தேடித்தந்து எனக்கு உதவிய, பாலுஜியின் குரலின் மீது அளவில்லாத அன்பு வைத்துள்ள பெண்மணி திருமதி. உஷா,
ஹைத்ராபாத் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்வதில் நன்றியுடன் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இனி, இந்த பாடலை இரவு 9.00 மணிக்கு மட்டுமல்ல எப்போது கேட்க
தோன்றுகிறதோ உடனே இந்த வலைப்பூவில் மகிச்சியுடன் கேட்கலாம்.

K Balachander will don the mantle of director-supervisor for a mega-serial titled Thenmozhiyal for the to-be launched Kalaignar TV. He will guide his lieutenant Samudirakani, who will pen the story, screenplay besides wielding the megaphone for the serial.

K Balachander says, “Thenmozhiyal is the common woman whom you run into in your daily life”. According to producer Pushpa Kandaswamy, “You will find
the happening in your next door bracket”.

Swarna of Chandramukhi fame plays the title role. Subalekha Sudhakar, Kavithalaya Krishnan among others are in the cast.

Thanks to India glitz for view and serial snaps.

சீரியல்: தேன் மொழியாள்
நேரம்: 9.00 இரவு (இந்திய நேரம்)
டிவி: கலைஞர் டிவி
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: ராஜேஸ் வைத்யா
இயக்குநர்: சமுத்திரக்கனி
தயாரிப்பு; கே.பாலசந்தர்

பெண்ணே வணக்கம்
தமிழ் பெண்ணே வணக்கம்
இந்த மண்ணின் மகளே
எங்கள் கண்ணே வணக்கம்

தேன் மொழியாள் தேன் மொழியாள்
தெள்ளுதமிழர் கண்மணியாள்
பூங்கொடியாள் பூங்கொடியாள்
புதுமைப்பெண்களின் தாய்மொழியாள் இவள்
புலவர் எழுதிய குறளின் ஓவியம்
அழகு முழுவதும் உயரும் தமிழகம்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

தேன் மொழியாள் தேன் மொழியாள்
தெள்ளுதமிழர் கண்மணியாள்
பூங்கொடியாள் பூங்கொடியாள்
புதுமைப்பெண்களின் தாய்மொழியாள் இவள்
புலவர் எழுதிய குறளின் ஓவியம்
அழகு முழுவதும் உயரும் தமிழகம்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மொழியாள்

பல்லவ நாட்டு சிற்பம் போலே
அறிவு ஒளிர பெண்மணியாள்
பாண்டி நாட்டு தங்கம் போலே
அறிவு பெற்ற அம்மனியாய்

தேன் மொழியாள்..ஆஆஆஆ
செந்தமிழ் தேன் மொழியாள்

சேர நாட்டு வில்லாய் சீவி
வீரம் சொல்லும் வித்தகியாள்
சோழ நாட்டு நதியாய் மாறி
சோறு போடும் நெல் மணியாள்
கட்டு விறகை சுமக்கும் பெண்ணாள்
நாட்டு நடப்பும் அறிவாயே..ஏஏ..
கற்புத்தாவி தவறாய் போனால்
கொட்டும் விழியும் சிவப்பாயே
இவ சங்க காலத்தின் தாயின் ஜாதி
பொங்கி எழும் நெஞ்சுக்கு நீதி

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

தேன் மொழியாள் தேன் மொழியாள்
தெள்ளுதமிழர் கண்மணியாள்
பூங்கொடியாள் பூங்கொடியாள்
புதுமைப்பெண்களின் தாய்மொழியாள் இவள்
புலவர் எழுதிய குறளின் ஓவியம்
அழகு முழுவதும் உயரும் தமிழகம்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

தேன் மொழியாள் தேன் மொழியாள்
தெள்ளுதமிழர் கண்மணியாள்
பூங்கொடியாள் பூங்கொடியாள்
புதுமைப்பெண்களின் தாய்மொழியாள் இவள்
புலவர் எழுதிய குறளின் ஓவியம்
அழகு முழுவதும் உயரும் தமிழகம்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

செந்தமிழ் தேன் மொழியாள் எங்கள்
செல்லப் பெண்மணியாள்

Get this widget | Track details | eSnips Social DNA

532ஜவ்வாது சந்தன பூவு

September 20, 2007

சட்டத்தின் திறப்பு விழா படத்தை எப்பவோ பார்த்த நினவு உள்ளது. காட்சிகள் எதுவுமே கண்முன் வரதயங்குகிறது. இந்த் பாடலை பாலுஜியும், ஜானகியம்மாவும் இருவரும் மிகவும் ஜாலியாக ஹஸ்கி குரலில் அமர்க்களமா பாடியிருப்பார்கள் ஒரு வித்தியாசத்திற்காக கேளூங்கள். இசையமைபாளர் சங்கர் கனேஷ் அவர்களின் இசையமைப்பு மிகவும் நன்றாக இருக்கும்.

பாடல்: ஜவ்வாது சந்தனப்பூவு
படம்: சட்டத்தின் திறப்புவிழா
பாடியவர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
இசை: சங்கர் கனேஷ்

ஏய் ஜும் ஜும்.. ஏய் ஜும் ஜும்
ஆஹாஆஆஆஆ

ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு
ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு

பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
உன்னாசை தீயிலே என் மேனி வேகுதே
ஹோ ஹோ ஹஹா ஹோஓஓஓ

ஜவ்வாது சந்தன பூவு
ஜும் ஜும்
தொட்டாலே ஏறுது சூடு
ஜும் ஜும்

பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
உன்னாசை தீயிலே என் மேனி வேகுதே
ஹோ ஹோ ஹோஓஓஓ

கண்ணால் கானும் நேரம் உன்னால் ஆசை மோதும்

பொன்னால் ஆன தேகம் தந்தாள் மோகம் தீரும்

கண்ணா உந்தன் கையில் ஆடும்
ரோஜாஆஆஆ பூ
ஹஹஹாஆஆஆ

இன்னும் என்ன பென்னே அங்கே
வீராப்பு ஹஹ

காலம் நேரம் வரும் வரை பொருத்திரு

போதும் போதும் விரும்பியதை கொடுத்திடு

ஜவ்வாது சந்தன பூவு
ஜும் ஜும்
தொட்டாலே ஏறுது சூடு
ஜும் ஜும்

பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
உன்னாசை தீயிலே என் மேனி வேகுதே
ஹோ ஹோ ஹோஓஓஓ ஹ

ஹா இன்னும் தேவ லோகம் அங்கே நாமும் போவோம்

வெள்ளிபூவை அள்ளி மாலை சூடிக்கொள்வோம்

நிலா மேக தங்கத்தேரில் செல்வோமேஏஏஏ

சுராபானம் நானும் உண்டு பார்ப்போமே

சொர்க்கம் அங்கே கதவுகள் திறக்குது

பாடல்கள் கண்டேன் கனவுகள் பிறக்குது

ஹ ஜவ்வாது சந்தன பூவு
ஜும் ஜும்
தொட்டாலே ஏறுது சூடு
ஜும் ஜும்

பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
உன்னாசை தீயிலே என் மேனி வேகுதே
ஹோ ஹோ ஹோஓஓஓ ஹ

Get this widget | Share | Track details

531கவிதை பாடு குயிலே

September 18, 2007

இந்த பாடலை கேட்டாலே மைக் மோகன், ஜெயஸ்ரீ நடித்த தென்றலே என்னைத்தொடு படம் தான் நினவுக்கு வரும். எல்லோரும் சுத்தமாக மறந்து போயிருந்த ஜெயஸ்ரீ, சின்னத்திரையினில் திருவாளர் திருமதி நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக விதவிதமான புடவைகளில் வந்து அவரது ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த பாடலின் இனிமையுடன் சேர்ந்து பாலுஜியின் இறுதியில் வரும் அந்த //ரபப்பா பப்பா பப்பா பவ் பவ் பப்பா.. ரபப்பா பவ் பவ் பவ் பவ் பப்பா// இந்த ஹம்மிங்கிற்காகவே எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த பாடலின் மெட்டு தேன் சொட்டு.

போட்டோ: நன்றி இண்டியாக்ளிட்ஸ்.காம்

பாடல்: கவிதை பாடு குயிலே
படம்: தென்றலே என்னைத்தொடு
நடிகர்கள்: மைக் மோகன், ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா
வருடம்:1985

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

நூறு வண்ணங்களில் சிரிக்கும் தூங்கும் புஷ்பங்களே
ஆசை என்னங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வானவெளியில் வலம் வரும் பறவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காற்று என்பக்கம் வீசும் போது
காலம் என் பெயரை பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

கோயில் சிற்பங்களை பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து
ஒளி வீசும் நட்ச்சத்திரம்
கூட எனது நிழல் என வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை பெண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் மேனி மலர
நாளூம் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
ரபப்பா பப்பா பப்பா பவ் பவ் பப்பா
ரபப்பா பவ் பவ் பவ் பவ் பப்பா

Get this widget | Share | Track details

530நந்தவனம் இந்த மனம்

September 17, 2007


கிழக்குக்கரை படத்தில் ஓர் அழகான மெலோடி பாடல் இது கேட்டு மகிழுங்கள். குறிப்பாக இரண்டாவதாக வரும் வரிகள் அனுபல்லவியோ அல்லது சரணமோ எனக்கு சரிவர தெரியவில்லை. அந்த வரிகளை திரு.நாகூர் ஹனிபா அவர்களின் அழகான தெய்வீகக்குரல் போன்று எனக்கு தோன்றுகிறது (தவறாக இருப்பின் மன்னிக்கவும்) படம் பார்க்கவில்லையாதலால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை தெரிந்தவர்கள் விளக்கலாம்.

படம்: கிழக்குக்கரை
நடிகர்:பிரபு, குஷ்பு
பாடியவர்: டாக்டர். எஸ்.பி.பாலு
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி

நந்தவனம் இந்த மனம்
நல்லதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதெல்லாம் இந்த் மனம்
ஏலேலங்குயிலே

இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும் நாள் கூறுமடா
இதை கண்ணா உனக்கு எடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே

நந்தவனம் இந்த மனம்
நல்லதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதெல்லாம் இந்த் மனம்
ஏலேலங்குயிலே

ஆகாயம் இரவு கூட
அப்பப்பா வெப்பமாச்சு
கார்கால ஊதக்காற்று
கத்திரி வெயிலாச்சு
கண்ணீர நான் வடித்து
கையெழுத்து அணிந்திடலாம்
கண்ணீரை கூட்டினாலும்
தலையெழுத்து அழிந்திடுமா

என்னப்பெத்த தாய்க்கூட
என் பேர் சொல்ல வெட்கம் தான்
என்ன செய்ய பாடல் மாறி
விடை செய்ய துக்கம் தான்
இருக்கிற என்றும் இவன் மனம்
அந்த தாயின் பக்கம் தான்

அவள் சொல்லும் வார்த்தையை மீறி
எப்போதும் தான் சொல்லாதவன்
என்ன சொல்ல காலத்தின் கொடுமை
இப்போது நான் பொல்லாதவன்
அட உனக்கும் ஒரு நாள்
நான் படும் பாடு என்னென்ன்று புரியுமடா

நந்தவனம் இந்த மனம்
நல்லதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதெல்லாம் இந்த் மனம்
ஏலேலங்குயிலே

செல்வங்களூம் வீடும் வாழும்
வந்தால் என்ன என்னோடு
எப்போது தான் கால்கள் செல்லும்
நியாயங்களின் பின்னோடு
எதற்க்கு இங்கே இருப்பது
ஒரு கொள்கை கோட்பாடு
என்னோடு தான் நிழலென வந்தால்
கண்ணே உந்தன் தாய்தானனம்மா
உன்னில் எங்கள் தீபத்தை மீறி
கொண்டாடிடும் சேய் தானம்மா
அட சுகமோ துயரோ வருவது வரட்டும்
சொல்லாது இணைந்திருப்போம்

நந்தவனம் இந்த மனம்
நல்லதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே

இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும் நாள் கூறுமடா
இதை கண்ணா உனக்கு எடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே

நந்தவனம் இந்த மனம்
நல்லதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதெல்லாம் இந்த மனம்
ஏலேலங்குயிலே

Get this widget | Share | Track details

529நமக்குள் ஏன் அன்பே

September 13, 2007

Image and video hosting by TinyPic

மற்ற பிரபல பாடகர்கள் பாடும் பாடல் மெட்டுக்கள் நம்ம பாலுஜி பாடினால் எப்படி இருக்கும் என்று பல தடவை ஆதங்கப்பட்டிருக்கேன். அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் இன்று ஒரு பாடல் எனக்கு கிடைத்தது. நான் கேட்ட பாடல் உங்களூக்கு சொல்லாமல் விடுவதா?
இதோ இந்தபாடல் பாலுஜியும் ஜானகியம்மாவும் பாடியிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது.

சரி விஷயத்துக்கு வருகிறேன் இந்த பாடலை கேளூங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் உதடுகள் வேறு ஒரு வரிகளை பாடும் அது போல மெட்டு கொண்ட பாடல். அந்த பாடலின் வரிகள் வருவதை உங்கள் உதடுகள் முனுமுனுப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆமாம், திரு. மனோ, சித்ரா பாடிய பாடல் தான் அது. தெரியாதவர்களூக்காக அந்தபாட்டின் வரிகளை “மதுர மரிக்கொழுந்து வாசம்” எழுதுகிறேன். எங்க ஊரு பாட்டுக்காரனில் வரும் இந்த பாடலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் அபாரமாக இருக்கும். பாலுஜி அவர் ஸ்டைலில் எப்படி கலக்கியிருக்கிறார் என்று கேளூங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

குறிப்பு: கோப்பின் தரம் சிறிது குறைவாக இருக்கும் மன்னிக்கவும்.
தயவு செய்து ஒலியின் அளவை தாங்கள் விரும்பியபடி
அதிகரித்துகொள்ளவும்.

படம்: காதல் தேவதை
நடிகர்: சிரஞ்சீவி, ஸ்ரீதேவி
பாடியவர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
உடனடி தகவல்: திரு.எஸ்.பாலா

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி

அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

அங்கெங்கே நீ தொடும் என்ன
நான் தொடும் மெல்ல கையைக்கட்டி
கொஞ்சுதான் சின்னச் குட்டி
வெள்ளியிலான வெத்தலைப்பெட்டி
என்னை நீ தாலிகட்டி
மத்தளம் கொட்டி
போடனும் மெட்டி
உன்னை நான் மெல்லக்கட்டி
அள்ளற பொன்னு வெல்லக்கட்டி
சின்ன சின்ன தீபமிட்டு
நானும் மெல்ல மெத்தையிட்டு
நெஞ்சு நிறைய ஆசைப்பட்டு
சேரும் சேரும் தூக்கம் விட்டு

மின்னும் பொன்னா வஞ்சி நின்னாச்சு
கைப்பட்டதால கூச்சம் விட்டாச்சு
வண்டத்தான் கூத்தக்குயம்மா
தொட்டு முத்தாட சந்தோசமம்மா
அடி கைத்தொடவும் கண் படவும்
பாட்டு சொன்ன மாமன் இதோ

நமக்குள்
ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

பட்டு மெத்தை வாங்கி வச்சி
பாலு வச்சி பழமும் வச்சி
பக்கம் இந்த பூவும் கொஞ்ச
மெல்ல மெல்ல கூடும் நெஞ்ச
நீயும் உன் வெட்கம் விட்டு
தோளைக்கட்டி அழகா தொட்டு
போதையில் துள்ளூம் மெட்டு
பருவக்கதை பேசுமடி
சேலை ஒன்னு கட்டும் பெண்ணு
ஹஹ எங்கும் இந்த கன்னிப்பொன்னு
ஆசையுடன் ஒட்டிக்கட்டி
யவ்வனத்தை பாடுமடி

உன்னப்பார்த்து வந்தேன் இங்கு மாமா நான்
கொஞ்சும் அதை கண்டேன் இங்கு மாமா
ரட்சிக்க தன்ணியத்தான் கூட
தினம் கட்டிலிலே பொங்கி எங்கு ஓட
அத நீ சொல்லவா நான் சொல்லவா
ஆசை என்னை அசைத்திடுதோ

நமக்குள்
ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி

அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்

Get this widget | Share | Track details

528ரவி வர்மன் ஓவியமோ

September 12, 2007

Image and video hosting by TinyPic

புதுவயல் இந்த படத்தை நான் பார்த்ததாக சிறிதும் நினவில்லை. இசையமைப்பாளர் திரு. அரவிந்த் எனது நண்பர் கோவையில் அதிக மேடை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். தாசண்ணா குரலில் கலக்குவார். சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தில் தன் வேலையை விட்டு விட்டு நுழைந்தவர். இந்த படம் தான் அவரது முதல் படம் என்று நான் நினைக்கிறேன் இந்த படத்தில் மற்றொரு பாடலையும் பாலுஜி பாடியிருப்பார். பாடலின் மெட்டு நன்றாக உள்ளது. பாடல். பாடாலாசிரியர் திரு.புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் கேட்பதற்கு மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும் பாலுஜியின் குரல் பாடலுக்கு இன்னும் இனிமையை சேர்க்கிறது. கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: புதுவயல்
பாடியவர்: பாலு, ஸ்வர்னலாதா
இசை: அரவிந்த்
பாடாலாசிரியர்: திரு.புலமைப்பித்தன்

ரவி வர்மன் ஓவியமோ
ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ
ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ

தென்றல் காற்றோ தென்னங்கீற்றோ
உன் சலங்கை ஒலி கல கலவென
குழுங்கி வரும் தேவதையோ
வானில் வரும் தாரகையோ

ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ ஓஓ

தாதத்தி தாவென்று நீ தத்தி ஆடுஎன்று
நா தெற்க்கு பாட்டொன்று யார் தந்தது

நீ வந்த நேரத்தில் வானத்தில் வேகத்தில்
தேன்சிந்தும் வான்வில்லை யார் வைத்தது
விழிகளீல் அபிநயமோ விரல்களீல் அபிநயமோ
இயற்க்கையின் அதிசயமோ இளமையின் ரகசியமோ
பாதங்கள் மண் மீது மேவாமாலே
பார்க்கின்ற என் உள்ளம் நோகாமலே
அழகே வருவாய் அருகே இளமையிலே புதுவயலே

ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ

ம்ம்ம்ம் ஹாஆஆஆ லலலாஆஆஆ
ஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கூகுக்கூவென்று என்ற ஆனந்த பாட்டு ஒன்று
பாடட்டும் பாடட்டும் கோகிலங்கள்
தேன் சொட்டும் பூவொன்று பூஞ்சிட்டு நாளின்று
ஆடட்டும் ஆடட்டும் நாட்டியங்கள்
அடிமுதல் முடிவரையும் அமுதத்தில் நதி வழியும்
எவனடி உன்னை படைத்தார் இளமையை சிறை வடித்தார்
நீர்கொண்டு போகின்ற மேகங்களே
தேர்கொண்டு பூமிக்கு வாருங்களே
மயிலும் பரதம் பயிலும் கலை நிலவு வரும் பொழுது

ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ

தென்றல் காற்றோ தென்னங்கீற்றோ
உன் சலங்கை ஒலி கல கலவென
குழுங்கி வரும் தேவதையோ
வானில் வரும் தாரகையோ

ரவி வர்மன் ஓவியமோ
நான் தினம் பாடும் மோஹனமோ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

Get this widget | Share | Track details

526நான் தான் உங்கப்பண்டா

September 11, 2007

எத்தனை நாளைக்கு காதல், சோகப்பாடலாக கேட்பது இதோ ஒரு வித்தியாசத்திற்காக ஒரு சண்டை பாடல் கேட்போம். பத்மஸ்ரீ கமல் ஹாசன் நடித்த ஒரு படம் ராம் லக்ஷ்மன் அபாரமான கமர்ஷியல் படம். இந்த படத்தில் கமல் புகுந்து விளையாடியிருப்பார், பாடலில் பாலுஜி தன் அதிரடி குரலால் விளையாடியிருப்பார். இந்த படத்தை எப்பவோ பார்த்தது யானை ஒன்று நடித்ததாக நினவு. கதாநாயகி முகம் கூட மறந்துவிட்டது. பொதுவாகவே சின்ன பசங்க படங்களில் சண்டைக்காட்சி வந்தால் கை பரபரக்கும் பக்கத்தில் இருப்பவரை யாரையாவது நொங்கு நொங்குன்னு நொங்கலாமா என்று தோன்றும். இதறகாக படத்தை பார்க்க வேண்டியதில்லை இந்த பாடலை கேளூங்கள் ஆனால் பக்கத்தில் இருப்பவரை அடிக்க உங்கள் கைகள் பரபரத்தால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல.

படம்: ராம் லஷ்மன்
நடிகர்: பத்மஸ்ரீ கமல்ஹாசன்
பாடியவர்: பாலு
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
வருடம்:1981

நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா வாடா

நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா வாடா
தெரியுண்டா எனக்கு புரியுண்டா
காட்டமுடியுண்டா கராத்தே ஹூ ஹா
புலியடா எவனும் எலியடா
முகமதுஅலியாடா அண்ணாத்தே

ஹு ஹா ஹு ஹா ஹூ ஹா

வீரன் படு சூரன் நான்
கட்டபொம்மன் பேரன்
வீரன் படு சூரன் நான்
கட்டபொம்மன் பேரன்

நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா
வாடா.. வாடா.. வாடா.. டேய்..

பாகன் இல்லாத யானையைப் போல
பொன்னு திரிஞ்சா பூமியின்மேல

பாகன் இல்லாத யானையைப் போல
பொன்னு திரிஞ்சா பூமியின்மேல
அடக்கிட தாண்டி கண்ணு
இந்த ஆம்பள ஜாதி என்னு
அடக்கிட தாண்டி கண்ணு
இந்த ஆம்பள ஜாதி என்னு

அத்தைக்கு மீசை முளைப்பதேது
சித்தப்பாவா ஆவம் ஏது

அன்பு வைச்சா பால் குடிப்பேன்
வம்பு செஞ்சா வால் அறுப்பேன்
எவண்டா என்னோடு எதிர்த்து நிற்பவன்
இருந்தா என் முன்னாடி வாஆஆ

நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா வாடா டேய் ஹொ ஹோ
நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா வாடா இங்க வாடா டேய்

ஹா.. ஹோ

அடியாள் இங்கே எத்தன பேரு
அடடா எல்லாம் தண்டச்சோரு

அடியாள் இங்கே எத்தன பேரு
அடடா எல்லாம் தண்டச்சோரு
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
கும்.. கும்..
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
கும்.. கும்..

மிச்சதெக்கெல்லாம் தப்பவன்நாண்டா
வந்தது இங்கே வாங்கிதாண்டா
போட்டுப்பாரு சிலம்பு சண்டை
நொறுக்கி வைப்பேன் எலும்பு துண்ட
முடியாது என்னோடு மோதிப்பார்க்கலாம்
ஜெயிச்சா கில்லாடிதான்

நான் தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவண்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பண்டா வாடா

தெரியுண்டா எனக்கு புரியுண்டா
காட்டமுடியுண்டா கராத்தே ஹூ ஹா ஹா
புலியட எவனும் எலியடா
முகமதுஅலியாடா அண்ணாத்தே

வீரன் படு சூரன் நான்
கட்டபொம்மன் பேரன் ஹவ் ஹவ் ஹெய் ஹெய்
வீரன் படு சூரன் நான்
கட்டபொம்மன் பேரன்
வீரன் படு சூரன் நான்
கட்டபொம்மன் பேரன் ஹு ஹு ஹு

Get this widget | Share | Track details