Archive for October, 2007

549நீலக்குயில்கள் ரெண்டு

October 31, 2007


இந்த பாடலின் துவக்கமே அபாரமாக இருக்கும். துவக்கத்தில் இசைமைப்பாளரின் சந்திரபோஸின் குரல் நம்மை எங்கோ ஒரு கேரளா கடற்கரைக்கு அழைத்து செல்வது போல் இல்லாமல். நம்மையே படகில் அமர்ந்து துடுப்பு போடவைக்கும் அருமையான மெட்டுகொண்ட பாடல். ஆமாம், நீலக்குயில்கள் ரெண்டு பாடல் தான் அது. நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டார் ரஜினியும், கன்னட சூப்பர் ஸ்டார் விஸ்னுவர்த்தனும் இணைந்து பட்டைய கிளப்பிய படம். இந்த பாடலில் வரும் சில வரிகள் // மாலை இட்ட மாமன் கூட, பொண்னும் இருக்க மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க, நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சும் கொதிக்க, நேரம் வந்து சேரும் என்று ஹான் காத்துக்கிடக்க //
மேலும்
//நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு, நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு ஹாஆ ஹா, கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது, காணவில்லை நான் தான் கண்ட ஹ கன்னியழகு,, தேடி அணைத்தால் தேவி வரத்தான், நாளெல்லாம் ஏதோ தாகம்//
பாலுஜியின் அல்வா குரலில், நம் மனதை அப்படியே தூக்கிச்சென்று தேன் குளத்தில் முக்கோ முக்கோ என்று முக்கி ஒரு வழி ஆக்கிடறாங்கப்பா .. …

படம்: விடுதலை
நடிகர்கள்: சிவாஜி கனேசன், ரஜினிகாந்த், விஸ்னுவர்த்தன், மாதவி
பாடியவர்: பாலு
இசை: சந்திரபோஸ்

ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹோஓஓஓஒ
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹோஓஓஓஒ
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹோஓஓஓஒ

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு

ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்

ஓஓஓஒ ஓஓஓஓ ஓஓஓஒ
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

மாலை இட்ட மாமன் கூட
பொண்னும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க

நானும் ஒரு மானை எண்ணி
நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று ஹான்
காத்துக்கிடக்க

மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹாஆஆ
ஆயிரம் ஆசைகள் கொண்டு

நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு ஹாஆ ஹா
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான் தான் கண்ட ஹ கன்னியழகு
தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஊஊஊ
ஆயிரம் ஆசைகள் கொண்டு

Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements

548அண்ணன் ஒரு கோயில்

October 30, 2007

இந்த பாடலின் துவக்கமே அலாதியான ஹம்மில் பாலுஜி பட்டைய கிளப்பியிருப்பார். பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிப்புக்கு சொல்லவும் வேண்டுமா?. அந்த மேக்கப்பில் சும்மா கும்மென்று இருப்பார் தங்கையாக வரும் சுமித்ரா அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருப்பார். அதுவும் இந்த வரிகளில் //அண்ணன் இன்றி யாரும் உண்டோ.. இன்னும் ஒரு சொந்தம் உண்டோ.. அதன் பேர் பாசம் அன்றோ// ஒரே வரியில் சிவாஜி (ரஜினி சார் போல்) சொல்லும் பஞ்ச் டயலாக்கில் சொல்வேண்டுமென்றால்.
“அவர் நடிப்பில் சிவாஜி, இவர் குரலில் சிவாஜி.. ” ஹி.. ஹி.. எப்படிங்க அதிருதுல்ல…?

ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ

அண்ணன் ஒரு கோயில் என்றால்
தங்கை ஒரு தீபம் அன்றோ
அன்று சொன்ன வேதம் அன்றோ
அதன் பேர் பாசம் அன்றோ

பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணன் இன்றி யாரும் உண்டோ
இன்னும் ஒரு சொந்தம் உண்டோ
அண்ணன் இன்றி யாரும் உண்டோ
இன்னும் ஒரு சொந்தம் உண்டோ
அதன் பேர் பாசம் அன்றோ

அண்ணன் ஒரு கோயில் என்றால்
தங்கை ஒரு தீபம் அன்றோ ஓஓஓஒ

தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளில் இட்ட தந்தையில்லை
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளில் இட்ட தந்தையில்லை

கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வம் அன்றோ
அதன் பேர் பாசம் அன்றோ

அண்ணன் ஒரு கோயில் என்றால்
தங்கை ஒரு தீபம் அன்றோ ஓஓஓஓ

Get this widget | Track details | eSnips Social DNA

547. பூஜா வா பூஜா வா

October 26, 2007


தமிழ்திரையிசைக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்த பெரும் பொக்கிஷம் பாடகர் ஹரிஹரன். தமிழ்த் திரையுலகத்தில் தனது முதற் பிரவேசத்துடன் அவரையும் அறிமுகம் செய்து வைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தமிழ்த் திரையுலகம் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. ஹரிஹரன் தமிழில் ரோஜாவுக்காகத் ‘தமிழா, தமிழா’ என்று நமது நரம்புகளைச் சுண்டச் செய்த அந்தப் பாடலைப் பாடியபோது அவருக்கு வயது 37! அவரது 50-வது பிறந்த நாளில் நடத்தப் பட்ட இசை நிகழ்ச்சியின் போது பாலு இதைப்பற்றிக் குறிப்பிட்டு “உங்களை நாங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்திருக்கவேண்டும். என்ன செய்வது better late than never” மிகவும் வருத்தப்பட்டது நினைவிருக்கிறது.

பிறகு அதே மணிரத்னம் இயக்கிய, அதே இசைப்புயல் இசையமைத்த பம்பாய் படத்தின் ‘உயிரே’ பாடலுக்காக (சித்ராவுடன் இணைந்து பாடியது) 1995-இல் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை அவர் பெற்றார்.

மலர்களே மலர்களே, வெண்ணிலவே வெண்ணிலவே என்று பல பாடல்கள். அஜீத், சூர்யா, விஜய், கமல் என்று கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுக்கும் அசத்தலான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

எனக்கு விஜய் என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது அவரது பல படங்களில் ஹரிஹரன் பாடியிருக்கும் அற்புதமான பாடல்கள். நீ காற்று நான் மரம் – பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படியே புல்லரிக்கச் செய்யும் பாடல். நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு இன்னொரு அற்புதப் பாடல். அதே போல காதலுக்கு மரியாதையில் வரும் – இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து ‘நான் எப்பவும் ராஜா’ என்று நிரூபித்த படம் – ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’ பாடலை மறக்க முடியுமா? (நான் மேடையேறி முழு ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இசையில் கால்கள் நடுங்க, கால்சராய் பைகளில் கைகளைத் திணித்துக்கொண்டு – நடுங்குவது தெரியாதிருக்க – பாடிய ஒரே பாடல் அந்தப் பாடல்தான் – ஹிஹி). நிற்க.

ப்ரியமுடன் படத்திலும் ஹரிஹரன் பாடியிருக்கும் “ஆகாஷவாணி” பாடல் மிகவும் மென்மையான அருமையான பாடல்.

ப்ரியமுடன் படத்தில் பாலு சித்ராவுடன் சேர்ந்து ராஜஸ்தான் பாலைவன மணல் தெறிக்கத் தூள் கிளப்பியிருக்கும் இன்னொரு அற்புதப் பாடல் இந்தப் பாடல். இந்தப் பாடலுக்காகவே பூஜா என்று பெயர் வைத்திருக்கும் பெண்களைத் தேடித்தேடிக் காதலிக்கலாம் போல – நல்ல வேளை – என் மனைவி பெயரிலும் பாடல்களைப் பாடி வைத்து குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்த பாலுவிற்குக் கோடானுகோடி நன்றிகள்!

இளம் வயதில் நீரின் மேற்பரப்பு போல எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும் உணர்வுகளும், பந்தங்களும், அன்பும், பாசமும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருந்த நாம் பிற்காலத்தில் வாழ்க்கையின் இயந்திரகதிக்குத் தள்ளப்பட்டு அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் மூழ்கிப் போய்விடுவதால் சில நேரங்களில் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய குறைந்தபட்ச நட்பையும், அபிமானத்தையும் கூட காட்டுவதில்லை – வீட்டிலும் வளைய வளைய வந்து கொண்டிருந்தாலும் புன்னகை சிந்தி குடும்பத்தினரிடம் பேசும் தருணங்களும் அரிதாகிப் போய்விடுகின்றது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதோ, இருபது வயதுகளிலோ இப்படி இருந்தோமா என்று சற்று யோசித்துப் பார்த்தால் வெட்கமாக இருக்கும்.

எனக்கு பாலுவின் பாடல்கள் அந்த விதத்தில் உணர்வுகளை மரத்துப் போகாமல் வைத்திருக்க உதவுகிறது என்று சொல்வேன்.

//தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
//

என்ற வரிகளை அவர் பாடும் விதத்தைக் கேட்டால், மரத்த உணர்வுகள் துளிர்க்கும். பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்தை ஒரு நொடி நிறுத்தி சகதர்மிணியை / காதலியை வெட்கப்படும்படி பார்க்கச் செய்யும்!

//நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே//

என்ற வரியைக் கேட்கையில் ‘இன்னிக்கு நான் ஆபிஸ்க்குப் போகலப்பா’ என்று தடாலடியாகச் சொல்ல வைத்து அவளைப் புருவம் உயர்த்திப் பார்க்கச் செய்யும்! 🙂

இதோடு விட்டால் பரவாயில்லை மனுஷன்.

//உன் உலகில் என்னை பரப்பிவிடு// வரியில் *பரப்பிவிடு* என்பதில் காட்டியிருக்கும் சேட்டையைப் பார்த்தீர்களா?

பிறகு //அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே// என்பதைக் கேட்கையில் இதற்கு மேல் தாங்க முடியாமல் எழுந்து நின்று ‘யோவ்’ என்று கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

சின்னக்குயில் என்னதான் ஈடுகொடுத்துப் பாடியிருந்தாலும் மலைமுன் மடுவாகத் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை (இப்படிச் சொல்வதற்காகச் சின்னக்குயில் ரசிகர்கள் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பாதீர்கள் என்ற கேட்டுக் கொள்கிறேன்!) ஆனாலும் சரணங்களில் விட்டதைப் பல்லவியை பாலுவோடு கடைசியில் சேர்ந்து பாடுகையில் ஈடுகட்டிவிட்டார்.

தேவாவின் இசை இன்னொரு அற்புதம். பாடல் முழுதும் வரும் அந்த வித்தியாசமான ‘ம்ம்க்’ இசை பாடல் நமக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இன்னும் ஒரு படி கூட்டியிருக்கிறது. இருந்தாலும் சரணங்களில் மாறும் தாளம் (உன் பேரைச் சொன்னாலே – போன்ற வரிகளில்) ப்ரியம் படத்தின் ‘தில்ரூபா’ பாடலின் தாளத்தை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை!).

மொத்தத்தில் பூஜா வா, பூஜைக்கு உகந்த, இதயத்தைத் தடதடக்க வைக்கும் இன்னொரு அற்புதப் பாடல்!

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா

ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா

தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்
ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்

உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் (சத்தங்கள்?)
நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் (நம் கண்கள்?)

நீ போடும் ஒரு கோலத்திலே புள்ளியைப் போல் நான் இருந்தேனே
நீ தீண்டும் அந்த நேரத்திலே பறவையைப் போல் நான் பறந்தேனே

நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா

விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்
உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்

மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்
மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்

உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு
கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு
அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே

பூஜா… பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா

தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

Tamilmp3world.Com …

546எங்கிருந்தோ இளங்குயிலின்

October 26, 2007

குறிப்பு: இந்த பாடலின் விளக்கம் தட்டச்சு செய்து பதிந்து பிறகு தான் மின்சாரப் பிரச்சனையால் காரணமாக விளக்கம் விடுபட்டு போயிருந்தது பார்த்தேன். தாமதமாக பதிந்ததற்கு மன்னிக்கவும்.

மேஸ்ட்ரோ ராசய்யா அவர்களின் இசையமைப்பில் இனிமையான பியானோவில் இருந்து கிளம்பும் அமைதியான இசையை தொடர்ந்து தட தட தட தடவென தொடர்ச்சியாக, ஆர்பரிக்கும் அலைகடலாக தாளத்தின் ஊடே பாலுஜியின் இனிமையான குரலில் கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் தென்றலாக நுழைந்து. நம் மனதை விஸ்வரூபமாக ஆக்ரமித்துக்கொண்டு பெரும் பாடு படுத்துகிறது இந்த பாடல். அதற்கு உதாரணமாக சொல்லலாம் //நீங்காமல் தானே நிழல் போல நானே வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்// மற்றும் //பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு, மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய், இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா// போன்ற
அழகான வரிகளூம், இனிமையான குரலும் எப்படி போட்டிக்கொண்டு நம்மை இழுக்கின்றன கேளூங்கள்.

படம்: பிரம்மா
நடிகர்: திரு. சத்யராஜ்
பாடியவர்: டாக்டர். பாலுஜி
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
வருடம்:1991

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

Get this widget | Track details | eSnips Social DNA

545வண்ணம் இந்த வஞ்சியின்

October 25, 2007

திரு.பாலாஜி அவர்கள் தாயாரிப்பில் வெளிவந்த படம் பிரேமபாசம் இந்த படம் கன்னட படத்தின் தழுவல் படம். இந்த படத்தில் ஓர் பாடல் பாலுஜியும், ஜானகியம்மாவும் பாடியிருப்பார்கள். அழகான மெலோடி பாடல் “வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்” என்ற பல்லவியில் தொடங்கும் இந்த பாடலின் காட்சியில். விட்டலாச்சிரியார் படத்தில் பேய், பிசாசு வரும் போது கலர் கலராக புகை வரும்தானே அதே போல் முதன் முதலில் கதாநாயகிக்கு வெள்ளை புடவை கட்டி பாடல்காட்சியில் மரத்தையோ, அல்லது புல்வெளியிலோ ஓடி ஆடும் போது காட்சியில் கலர், கலராக கிராபிக்ஸில் மாயாஜாலம் காட்டி ஆவென்று வாயபொளந்து அதிசயமா நம் கண்ணை நிலை குத்தச்செய்து பார்க்க வைத்த முதல் படம் என்று நான் நினக்கிறேன். இதே போல் கன்னடப்படத்திலும் காட்சி அமைத்துருப்பார்கள். பல்லவி வண்ணம் வண்ணம் என்று வருவதாலோ இயக்குநர் இதே போல் காட்சியமைத்திருக்கலாம். யார் கண்டது? பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கும். இந்த பாடலை தேடோ தேடோ என்று பல வருடங்களாக தேடி பிடித்து உங்களூக்கு கலர் கலராக கண்களூக்கு (மன்னிக்கவும்) காதுகளூக்கு வழங்குகிறேன்.

படம்: பிரேம பாசம்
நடிகர்கள்: திரு. சிவக்குமார், திருமதி.ரேவதி
பாடியவர்கள்: டாக்டர் பாலு, ஜானகியம்மா
இசை: திரு.கங்கை அமரன்
தயாரிப்பாளர்: திரு.கே.பாலாஜி

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ ஏங்கிய வண்ணம் நான் வழங்கிட என்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் ஏங்கிய வண்ணம் நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

கருநீல திராட்சைகள் தானோ
கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள் தானோ
கலையாத கூந்தலின் வண்ணம்

விழி மீது ஒவ்வொரு நாளும்
அன்பே உன் கற்பனை வண்ணம்
நீ தானே நெஞ்சினில் இருந்தே
நீங்காத காவிய வண்ணம்

மங்கை என்னும் தங்ககின்னம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க

அம்மம்மா உன் வண்ணம் வந்து அள்ளி எடுக்க
அள்ளிக் கொண்ட பின்னும் இங்கு மிச்சம் இருக்க

வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்

அதிகாலை சூரியன் போலே
திறப்பதும் உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன்
அழகான தேவதை வண்ணம்

பிரியாத ராத்திரி நேரம்
வழி மீது தொங்கிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே
உனக்காக தோகையின் வண்ணம்

அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச் செல்லும் மின்னல் வண்ணமோ

மன்னம் வந்த உள்ளம் என்ன மின்னல் வண்ணமோ
மெல்லப் போகும் காளைப் போல வெள்ளை வண்ணமோ

வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்

Get this widget | Track details | eSnips Social DNA

544விடுகதை ஒன்று

October 24, 2007

நடிகர் விஜயன் அழகாக நடித்த ஓர் படம் விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று இந்த படம் எப்போது பார்த்தேன் என்று நினவு இல்லை.இந்த படத்தில் ஓர் பாடல் இந்த பாடலின் காட்சியமைப்பு சுத்தமாக நினவு இல்லை. தெரிந்தவர்கள் தகவல்கள் தரலாம். இந்தப் பாடலில் அதிக இடங்களில் நூல் போல் ஓர் சன்னமான சோகம் செல்வதை நாம் உணரலாம். அழகான பாடல்.

படம்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
பாடியவர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
பாடலாசிரியர்: கவிஞர்.கண்ணதாசன்
இசை: கங்கை அமரன்

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை இதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
மகன் போல உன்னை
மடியேந்தும் என்னை

யார் என்று நீ கேளடா.. அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
செம்மலை இளம் காற்றே மடல் வாழை தீர்ப்பே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை இதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

நாள் தோரும் உன்னை
நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்தது உன்னையே

நீ சொல்லுவாய் அன்னையின் நன்றியை
எது மனதில் மோதும் ஒரு மனதின் தாகம்
தூரம் அதிகம் கதை இது கண்ணே காண்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை இதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

Get this widget | Track details | eSnips Social DNA

543.பாரதிக்கு கண்ணம்மா

October 23, 2007


இன்று பரபரப்பாக திரையுலகில் இயங்கித் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் எனக்கு அறிமுகமானது ஆரம்பகால சன் மியூசிக்கின் மிட்நைட் மசாலாப் பாடல்களில்தான்! கொத்துபுரோட்டா போன்ற நாயகிகளோடு அஜால் குஜால் பாடல்களுக்கு ஆடி, ஸி சென்ட்டர்களில் பகல் காட்சிகளிலும் கூட்டத்தை நிரப்பி, ஏ, பி ஸென்ட்டர் கனவான்கள் இரவு இரண்டாமாட்டத்திற்கு ரகசியமாகப் போய்க்கொண்டுமிருந்த அற்புதமான ஆச்சி மசாலாப் படங்களில்மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியோ, தயாரித்தோ, விஜயகாந்த் அரசு இயந்திரத்தையோ, தீவிரவாதத்தையோ, எதையோ எதிர்த்து, சிவந்த கண்களுடன், காலைச் சுழற்றிச் சுழற்றிச் சண்டை போடும் ஏதோவொரு மாமூல் படத்தில் படத்தில் அவர் அறிமுகமான நினைவு. செந்தூரப்பாண்டியில் யுவராணியுடன் அவர் கபடியாடியதை தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்பறையில் தொலைக்காட்சியில் குடும்ப சகிதமாக அமர்ந்து பார்த்ததைப் பார்த்து தமிழர்களுக்கு விளையாட்டில் இவ்வளவு ஆர்வமா என்று மலைத்துப் போனேன்.

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி, கோத்தகிரி குப்பம்மா, அடடா அலமேலு ஆவின் பசும்பாலு, தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டை பரோட்டா போன்ற காலத்தாலழியாத பாடல்களைப் பாடி, நடனமாடிக் கொண்டிருந்தவரையில் அவரது படங்களில் கவனத்தைச் செலுத்தியதில்லை. சேற்றில் முளைத்த செந்தாமரை போல (எவ்வளவு வருஷமாச்சு இந்த உதாரணத்தை உபயோகப்படுத்தி!!அப்பாடி!) ‘ஒரு கடிதம் எழுதினேன்’ போன்ற அருமையான மெல்லிசைப் பாடல்களும் அவர் படத்தில் அவ்வப்போது தலைகாட்டி வந்தன.

அறிமுகமாகி கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்கு சாதாரணமான படங்களில் சாதாரணமாக வந்து போன விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்தபடம் 1996-இல் வந்த பூவே உனக்காக. விக்கிரமன் இயக்கியது. தமிச்சினிமா இலக்கணப்படி வெற்றியடைந்த நாயகர்களின் வெற்றிப்படத்தைப் போலவே வரிசையாகப் படமெடுத்து கிட்டத்தட்ட போண்டியான தருணத்தில் நேருக்கு நேரும், காதலுக்கு மரியாதையும் வந்து காப்பாற்றின. அதற்குப் பிறகு அவர் படுவேகத்தில் உச்ச இடத்திற்கு உயர்ந்தது எல்லாருக்கும் தெரியும் – இடையிடையே சில சறுக்கல்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும்.

இன்று விஜய் அடைந்திருக்கும் உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்தின் படிக்கட்டுகளாக அவரது அயராத உழைப்பும் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

அவரது நடனத்தை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. அபாரமான நடனத் திறமை, நகைச்சுவைக் காட்சிகளிலும் பிய்த்து உதறும் திறமை, என்று நல்ல பல திறமைகளிருந்தும் கால் ஷுவை காமிராவுக்குக் காட்டி பஞ்ச் டயலாக் பேசி மசாலாப் படங்களை இன்றும் கொடுத்துக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்.

பிரியமுடன் (1998) என்ற இந்தப் படம் நன்றாக ஓடினதா என்று நினைவில்லை. கெளசல்யா நடித்தது. வழக்கம்போல இப்படத்தின் பாடல்களும் பிரபலமாகின என்று எளிதாக எழுதிவிட முடியவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களாகிவிட்டபின்னும் இன்று வரை என்னை பைத்தியமாக அடிக்கின்றன இப்படத்தில் பாலு பாடியிருக்கும் இரண்டு பாடல்கள். அவற்றில் ஒன்று இப்பதிவில். இன்னொன்று அடுத்ததில். தேனிசைத் தென்றலின் இசை கடுங்காப்பியா, பில்ட்டர் காப்பியா, இன்ஸ்டண்ட் காப்பியா எனற விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அவரது பல படங்கள் சுக்குமல்லிக் காப்பிபோன்று காரம், இனிப்பு கலந்து மணத்து ஒலித்ததை மறுக்கவே முடியாது. இப்படத்திலும் பாடல்களில் அருமையான இசையை அளித்து அசத்தியிருப்பார் தேவா.

இப்படத்தில் விஜய் வில்லத்தனம் செய்யும் கதாநாயகனாக வந்து கொலைகள் செய்து காதல் செய்வார். கெளசல்யாவை வெறித்தனமாகக் காதலித்து அதற்காக கொலை செய்யுமளவு போகும் நாயகனின் பாத்திரம்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் எடுத்திருக்கும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே வெப்பம் தாக்கி வேர்த்து ஊற்றிவிடும் போல. அட்டகாசமான ஒளிப்பதிவு. விஜய்க்கு நல்ல நடன அசைவுகள் – கலக்கியிருப்பார். கெளசல்யா ஐயோ பாவம்!.

பாடலை எப்போது கேட்டாலும் மனதை என்னவோ செய்யும். முதற்காரணம் பாலு இதைப் பாடியிருக்கும் விதம். மனிதர் அநாயசமாக குரலில் தாபத்தையும், ஏக்கத்தையும், காதலையும் குழைத்து என்னமாய் பாடியிருக்கிறார்!

இரண்டாவது காரணம் மெட்டு, உபயோகப் படுத்தியிருக்கும் இசைக் கருவிகளின் இசை.

வழக்கமான பின்னல்களாக இருந்தாலும் ‘பாரதிக்குக் கண்ணம்மா’ என்ற அணுகுண்டு போன்ற வீரிய வார்த்தைகள் பாடலை எங்கோ கொண்டு செல்கிறது. அதைத் தவிர

//என் இலையுதிர் காலம் போனது
உன் நிழலும் இங்கே பூத்தது
//

போன்ற அட போட வைக்கும் வரிகளும் உண்டு.

//நான் பறவையாகும்போது உன் விழிகள் அன்பு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
//

என்ற வரிகளைப் பாலு பாடிய விதமும், பின்னணியில் ஒலிக்கும் இசையும் நம்மை மேகக்கூட்டத்திற்குள் சஞ்சரிக்க வைக்கின்றன.

பிரியமுடன் – The sound of Love – என்று சும்மா பெயர் வைக்கவில்லை!

பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தனிங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர் காலம் போனது
உன் நிழலும் இங்கே பூத்தது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

ஐயய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
ஹே கல்லைத் தான் தட்டத்தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்டத்தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக் கேட்டு வந்தால்
என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக் கேட்டு வந்தால்
என் உயிரில் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு

பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

பூட்டுக்குள் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்கும் பாதை போடும் காற்றாய் வந்தாயே
தரத்தாரரதித்தாரதா
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அன்பு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி

பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தனிங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர் காலம் போனது
உன் நிழலும் இங்கே பூத்தது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

542அங்குசிங்குசான் சங்குசங்குசான்

October 18, 2007

குருசிஷ்யன் படத்துல சூப்பர் ஹிட் பாடல் இது. இந்த பாடலுக்கு விளக்கமே தேவையில்லை ஏனென்றால் பாலுஜி சூப்பர் ஸ்டார் ரஜினிசாருக்கும், இளையதிலகம் பிரபு சாருக்கும் சேர்ந்து புகுந்து விளையாடிப்பார். பாடலில் என்னமாக ஒரு வெயிட் கேளுங்க.

படம்: குருசிஷயன்
பாடல்: கண்டுபிடிச்சேன்
பாடகர்கள்:டாக்டர். பாலுஜி
நடிகர்:சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த், இளையதிலகம் திரு. பிரபு
இசை: மேஸ்ட்ரோ திரு. ராசய்யா
இயக்குநர்:திரு.எஸ்.பி. முத்துராமன்

அங்குசிங்குசான் சங்குசங்குசான்
சங்குசான் சான் சங்குசங்குசான்
திங்குறாதாங்குதான் தங்குறகதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ

ஹேய்
கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்.. ஹா

மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும் பன்னாளா
உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற

த்தனக்கட த்தனக்கட த்தனக்கட
த்தனக்கட த்தனக்கட த்தனக்கட தின தின

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாமா கொள்ளாம மூடுறே
ஹ்ஹோய் ஹ்ஹோய் ஹோய் ஹோய்
எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்
எங்கிட்ட நீ மறைக்காதே
சோத்துல முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
காதில் பூவை சுத்திப்பார்க்க
நீ தான் நினைச்ச நடக்காதே

கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
தர தரத்தானனனனா

த்னத்துன
காதல் கலையில் நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கிள்ளாடி
கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ

ஜிங்குரதாண்த்தா..ஜிங்குரதாண்த்தா
பெண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ

ஹோய் ஹோய் ஹோய்ய்ய்ய்ய்ய்

ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே
தூண்டியில மீணாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே
திட்டம் போட்டு வட்டம் போடு
குருவின் பேர கெடுக்காதே

கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று ஹஹஹ

கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
கண்டுப் பிடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்.. ஹோய்.

Get this widget | Track details | eSnips Social DNA

541மேகம் அந்த மேகம்

October 15, 2007

மேஸ்ட்ரோ ராசய்யா அவர்களின் அதிகபட்ச இசையமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் இசையமப்பாளர், வயலினில் பட்டையை கிளப்பும் வயலின் கலைஞர் திரு.வி.எஸ்.நரசிம்மன் அவர்களை அதிகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சென்ற சனிக்கிழமை (13.10.2007) அன்று பாலுஜி அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் நடுவராக வந்தவர் திரு. நரசிம்மன் பாலுஜி அவர்களூக்கு ராசய்யா போல் அருமையான மெலோடி பாடல் வழங்கியவர். அவரின் எல்லா படங்களின் இசையமைப்பு வித்தியாசமாக இருக்கும். குறைந்த படங்களையே இசையமைத்த அவர் எல்லாபாடல்களையும் பிரபலபடுத்தியவர். அவரைப்பற்றி பாலுஜி மிகவும் சிலாகித்து சொன்னது. “இசையமைப்பில் 50 வருடம் அனுபவம் பெற்ற அமைதியாக இருக்கும் அவர் அதிகம் கோவப்பட்டதே கிடையாது அவர் கோபப்பட்டு நான் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று தெரிவித்தது எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. அவர் சொன்னது போல் நானே எப்பவோ பார்த்தது. ஒரு மேடை கச்சேரியில் அதுவும் பாலுஜி முன்னாடி நிற்க வைத்து அவரின் சோலோ வாசிப்பை வாசிக்கச்சொல்லி மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பாலுஜி அவர்கள் தற்போதும் ஆவரின் திறமைக்கு வணங்கி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. திரு.நரசிம்மன் அவர்களை பார்த்ததும் இவர் பாடலை தளத்தில் போட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டதே என்று நினைத்து. இன்று அவர் இசையமைத்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் இந்த அழகான மெலோடி பாடலை வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. பாலுஜியின் குரலில் தேன் மழை பொழியும் அந்த மேகத்தை தான் கேளூங்களேன்.

படம்: ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாடல்: மேகம் அந்த மேகம்
பாடகர்: டாக்டர். பாலுஜி
இசை: திரு. வி.எஸ்.நரசிம்மன்

மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம் அது
தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம் அது
தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

தென்றல் உன் சொந்தம் தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்
இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே
லலலா லல்லா லலலா லல்லா
லலலா லல்லா லலலா லல்லா
ல ல ல ல
ல ல ல ல
தென்றல் உன் சொந்தம் தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்
இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே

காதோரம் கீதாஞ்சலி
சாய்ந்தாடும் பாவைக்கிளி
மனமே உன்னை வணங்குதே

மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம் அது
தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்
தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
ம்ம்ம்ம்.. லல்லா.. அஹாஆஆ லல்லா
லலலாஆ ஆஆ லலலா ஆஆ
ல ல ல ல
ல ல ல ல
சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்
தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா

பாடாமல் ஊமைக்குயில்
தாலாட்டும் வேளை இது
மலையும் பனியும் உறங்குதே

மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம் அது
தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

Get this widget | Track details | eSnips Social DNA

540சந்திரனே சூரியனே

October 10, 2007


பத்மஸ்ரீ கே.ஜே. தாசண்ணா அவர்களும், பாலுஜி அவர்களூம் இதே பாடலை தனித்தனியாக அவரவர் ஸ்டைலில் இந்த படத்தில் பாடியுள்ளார்கள். அமரன் படத்தில் இந்த பாடல் சமீபத்தில் எனக்கு கிடைத்தது. இங்கே பாலுஜி பாடிய இந்த பாடலை தங்கள் காதுகளூக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

படம்: அமரன்
பாடியவர்கள்: திரு.கே.ஜே.யேசுதாஸ், பாலுஜி
நடிகர்கள்: கார்த்திக், பானுப்ரியா
இசை: திரு.ஆதித்யன், திரு.சிவகுரு
இயக்குநர்: திரு.கே.ராஜேஸ்வர்

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்க முடியுமா
கண்ணுல முள்ளு தைச்சா இமையும் மூட முடியுமா
பாரத கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியம் தான்
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

நீயும் நானும் வாழனும்னா தீமையெல்லாம் தீயிடு
கெட்டது இங்கே அழியனும்னா கொடுமையெல்லாம் பழிகொடு
கண்னன் கீதையிலே சொன்னது போல் நடந்திடு
பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கதை நான் எழுதல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

Get this widget | Track details | eSnips Social DNA