Archive for November, 2007

562என் கண்ணின் மணியே

November 28, 2007

ராஜாராஜேஸ்வரி படத்தில் இருந்து ஓர் அற்புதமான பாடல் இந்த படம் பாடகி திருமதி. டி.கே.கலா தயாரித்த படம் என்று நினைக்கிறேன். சென்னையில் பாலுஜியின் பவுண்டேசன் சாரிட்டி சார்ப்பில் டிசம்பர் 2ஆம் தேதி ரத்த தாணம் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ரசிகர் குழுவின் நிர்வாகிகள் திரு.அசோக், திரு.தாசரதி , திரு.வெங்கி மற்றும் ரசிகர்கள் அனவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பாலுஜியின் பாடல்கள் மட்டும் கேட்காமால் அவரின் அன்பு ரசிகர்கள் அதுவும் சென்னை ரசிகர்கள் முடிந்த வரை பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை நல்லவிதமாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த பாடலை கேட்டு நிச்சயம் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ரத்த தாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளூம் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

பாடல்: என் கண்ணின் மணியே
படம்: ராஜா ராஜேஸ்வரி
பாடகர்கள்: பாலுஜி, டி.கே.கலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: சங்கர் கனேஷ்

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா
செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா
தங்கத்தில் ஓர் தொட்டில் நான் போடவா
பெற்ற தாய் போல தாலாட்டு நான் பாடவா

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

கல்யாணம் ஊர்கோலம் போகின்றது
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது
கல்யாணம் ஊர்கோலம் போகின்றது
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது

ஈரைந்து மாதத்தில் தாயாகலாம்
தாயென்றாலும் நீ எந்தன் சேயாகாலாம்

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

ஆஆஆஆ…ஆஆஆஆ….ஆஆஆஆ…ஆஆஆஆ..

அண்ணா அண்ணாவென்று யார் சொன்னது
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது
அண்ணாஆஆ அண்ணாவென்று யார் சொன்னது
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது
கண்ணோடு ஒளியாக யார் நின்றது
உன்னை காணாமல் நான் வாழ யார் செய்தது

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
கண்கள் வளர்வாய்…….கண்கள் வளர்வாய்

Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements

561தேவீ நீயின்றி நானதேம்மா

November 26, 2007

மைக் மோகன் படங்களில் பாடல்களூக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் போதாதற்கு அவர் பாடலுக்கு நடிக்கும் விதம் இருக்கே அப்பப்பா மனுசன் ரொம்ப ரொம்ப ரசிச்சு நடிப்பார். அதுவும் பாலுஜி, வாணி மேடத்தின் குரலுடன் பாடல்கள் என்றால் அவரின் ரிக்கார்டிங்கிற்கே நேரில் வந்து இவர் ஸ்டைலை படங்களில் பயன்படுத்துவார் மைக்குடன் அடிக்கடி தலையை ஆட்டுவாரே அது தவிர. நிரபாராதி இந்த படத்தில் வரும் இந்த பாடல் நம் மனதை அப்படியே ஐஸ்கிரீமாய் உருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களூம் தான் கொஞ்சம் உருகுங்களேன்.

படம்: நிரபராதி
பாடகர்கள்: பாலுஜி, வாணிஜெயாராம்
இசை: சங்கர் கனேஷ்

ஹோஓஓஓஒ ஹோஓஓஓ ஹோஓஓஓஓ
ஹோஓஓஓஒ ஹோஓஓஓ ஹோஓஓஓஓ

பாலு:
தேவீ நீயின்றி நானதேம்மா
ஓஓஓஒ என் உயிர் நீதானம்மா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நான் என்றும் வாழ்வது உனக்கே

வாணிஜெயாராம்:
தேவா நீயின்றி நானேதய்யா
ஓஓஓஒ என் உயிர் நீதானய்யா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நான் என்றும் வாழ்வது உனக்கே

பாலு:
கோடி ஜென்மம் எடுப்பேன்
உன்னை நினத்து தேடி வந்து மனப்பேன்

வாணிஜெயாராம்:
ஏங்கித் தவம் இருப்பேன்
சனக்கனமும் உன்னை என்னித் துடிப்பேன்

பாலு:
தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை
எனக்கோர் இந்த கங்கை

வாணிஜெயாராம்:
எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
கரையை கடந்து செல்லும்

பாலு:
தேவீ நீயின்றி நானதேம்மா ஆஆஆஆ

வாணிஜெயாராம்:
ஓஓஓஒ என் உயிர் நீதானய்யா

பாலு:
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்

வாணிஜெயாராம்:
என் உயிரின் உயிரே
நான் என்றும் வாழ்வது உனக்கே

கங்கை நதி சுடுமா
இன்று பிரிவு எங்களூக்குள் வருமா

பாலு:
சங்கமத்தில் இணைந்தோம்
நெஞ்சம் கலந்து சாசனங்கள் வரைந்தோம்

வாணிஜெயாராம்:
எங்கள் அன்பு ராகம்
இந்த இன்ப நாதம்
யுகங்கள் தோறும் கேட்கும்

பாலு:
காலம் மாறும் இந்த கோலம் மாறும்
உறவோ நிலைத்து வாழும்ம்ம்ம்ம்ம்

வாணிஜெயாராம்:
தேவா நீயின்றி நானேதய்யா

பாலு:
ஓஓஓஒ என் உயிர் நீதானம்மா

நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்

பாலு:
என் உயிரின் உயிரே
நான் என்றும் வாழ்வது உனக்கே

வாணிஜெயாராம்:
ஆஹாஆஆஆஆ

பாலு:
ஹோஓஓஓஒ ஹோஓஓஓ

லல்லாஆஆஆ
லல்லாஆஆஆ

Get this widget | Track details | eSnips Social DNA

560விதாத நினைவினில்

November 23, 2007

ராகதேவதை இந்த படம் மொழிமாற்றம் படம் என்று நினைக்கிறேன். “விதாத நினைவினில்” இந்த பாடல் எனக்கு கேட்ட நினவு இல்லை. முதல் முறை கேட்பதால், பாலுஜியும், சுசீலாம்மாவும் பாடலை பாடிய விதம் அருமையாக இருந்தது. ஒரு தளத்தில் கேட்ட பாடலை தங்களின் செவிக்கும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

பாடல் ஒலிக்கோப்பு மற்றும் பாடல் வரிகள் உபயம்: நன்றி, தூள்.காம்

பாடல்: விதாத நினைவினில்
படம்: ராகதேவதை
இசை: கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்: பாலுஜி, சுசீலாம்மா
இயக்குநர்: கே.விஸ்வநாத்

விதாத நினைவினில்
மலர் மலர்ந்தது
வற்றாத ஜீவ கீதம்
ஓம்..

உயிர் நாடிகளின்
மெல்லிய ஓசை தான்
ஆதி ப்ரணவ நாதம்
ஓம்..

அழகுக் கண்களில்
ப்ரதிபிம்பம் தான்
விஸ்வரூப விளையாடல்

இதயங்களிலே ப்ரதித்வனி தான்
விரிஞ்ஜ்யன் வீணா கானம்

கயிலை மலை ஊற்றானது பாயுது
சாமவேத சாரமென

கயிலை மலை ஊற்றானது பாயுது
சாமவேத சாரமென

நான் பாடிடும் ஜீவ கீதம்
சங்கீதம்

விரிஞ்ஜ்யனாய் எழுதிவிட்டேன் தீங்கவிதை
மனமுருகிப் பாடுகிறேன் இன்னிசையில்

சரனம் 1

மார்கழி மங்கையைப் பார்த்து கதிரவன்
மோகனராகம் பாட
காற்றில் பறவை இனங்கள் மகிழ்ந்து
சிறகினில் வீணை மீட்ட (2)

பைங்கிளி நடமிட மூங்கிலும் இசைத்திட
இயற்கை எனும் மகள் தானாட
இசைக்கு இலக்கணம் இதுவென உரைத்து

விரிஞ்ஜ்யனாய் எழுதிவிட்டேன் தீங்கவிதை
மனமுருகிப் பாடுகிறேன் இன்னிசையில்

சரனம் 2
==========

பிறந்த பிள்ளையின் குரலினில் மழலைகள்
ஜீவ நாதம் இசைக்கும்

தென்றலில் முத்தங்கள் மூங்கிலில் புகுந்து
இனிய மோகனம் பாடும்

தென்றலில் முத்தங்கள் மூங்கிலில் புகுந்து
இனிய மோகனம் பாடும்

இசைத்த ராகம் ஆதி தாளத்தில்
அகன்ற காவிரியாய் ஓடும்
அழகிய உலக வினோதங்களை

விரிஞ்ஜ்யனாய் எழுதிவிட்டேன் தீங்கவிதை
மனமுருகிப் பாடுகிறேன் இன்னிசையில்

என் உள் சுவாசம் கவிதை
என் வெளி சுவாசம் கானம்

என் உள் சுவாசம் கவிதை
என் வெளி சுவாசம் கானம்

கயிலை மலை ஊற்றானது பாயுது
சாமவேத சாரமென
நான் பாடிடும் ஜீவ கீதம்
சங்கீதம்

Sorry, your browser doesn’t support the embedding of multimedia.

559சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?

November 23, 2007

ரொம்ப நாட்கள் கழித்து இந்த பாடல் ரேடியோவில் கேட்டேன். டைரக்டர் உதயகுமார் படத்தில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார். அந்த வகையில் பாலுஜிக்கு ஓர் செமி சோகப்பாடல் தந்து நம் மனதையும் கலங்கடிக்கிறார். கேட்டுப்பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.

படம்: வெள்ளி நிலவே
பாடகர்: பாலுஜி
இசை: கரண்
பாடலாசிரியர்: உதயகுமார்
வருடம்: 1999

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன? ஏய்..
என்னைவிட்டு போனால் லாபம் என்ன
சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?

தந்தை நானே.. தாயும் நானே
சின்ன பெண்ணே செல்லத் தேனே
எந்தன் செல்வம் நீ கண்ணே

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?

உன்னை எண்ணித் தானே நானும் மண்ணில் வாழ்கிறேன்
சின்ன மணிக்கண்கள் இரண்டில் தெய்வம் காண்கிறேன்
உன்னை எண்ணித் தானே நானும் மண்ணில் வாழ்கிறேன்
சின்ன மணிக்கண்கள் இரண்டில் தெய்வம் காண்கிறேன்

சத்தம் இன்றி நீயும் முத்தம் தரவேண்டும்
சித்தி உன்னைப் பார்த்து ஹ்ஹ கற்றுக் கொள்ள வேண்டும்
நாளை ஒரு பூபாளம் நீ பாட வேண்டும்

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?
தந்தை நானே.. தாயும் நானே
சின்ன பெண்ணே செல்லத் தேனே
எந்தன் செல்வம் நீ கண்ணே

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?

மேடு பள்ளம் வந்தால் கூட பாதை பாதைதான்
இன்பம் துன்பம் இரண்டும் உண்டு வாழ்க்கை வாழ்க்கைதான்
மேடு பள்ளம் வந்தால் கூட பாதை பாதைதான்
இன்பம் துன்பம் இரண்டும் உண்டு வாழ்க்கை வாழ்க்கைதான்

பாதைகளைப் பார்த்து எட்டு வைக்க வேண்டும்
நம்பிக்கையை நெஞ்சில் நட்டு வைக்க வேண்டும்
துன்பம் தரும் கண்ணில் இனி இன்பம் தோன்றும்

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?
தந்தை நானே.. தாயும் நானே
சின்ன பெண்ணே செல்லத் தேனே
எந்தன் செல்வம் நீ கண்ணே

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?

சின்னஞ்சிறு மானே கோபம் என்ன?
என்னைவிட்டு போனால் லாபம் என்ன?

Get this widget | Track details | eSnips Social DNA

558’நினைத்தாலே இனிக்கும்’ -சென்னை நிகழ்ச்சி

November 20, 2007

2007, அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்று சென்னையில் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் ஓர் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. ‘நினைத்தால் இனிக்கும்’ என்ற தலைப்பில்
நடைபெற்ற இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பாலுஜியுடன் சேர்ந்து குழுவின் பாடகர்கள் அருமையாக பாடி நிகழ்ச்சி சிறப்பித்தார்கள். ஆங்கில தளத்தில் திரு.தாசரதி சார் அற்புதமான ஒரு வர்ணனையை தந்தது யாவருக்கும் தெரிந்ததே. அதில் அவர் குறிபிட்ட எல்லா பாடல்களும் சேகரிக்க முடியவில்லையாதலால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மின்சார
தடங்கள் காரணமாக 8 பாடல்கள் மட்டும் பதிவு செய்ய முடிந்தது. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

பொதுவாக பாலுஜி அவர்களின் பாடல்கள் குறிப்பாக பழைய பாடல்கள் 25 ஆண்டுகள் முன் பாடிய பாடல்களை அந்த சிறிய வயதின் குரலை இப்போ அதிகம் கேட்க வாய்ப்பில்லை. ஆகையாலே, தற்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாலுஜியின் தற்போது இனிமையான குரலில் பழைய பாடல்கள் கேட்க கொடுத்து வைத்துருக்க வேண்டும். அதனாலேயே அவரின் நிகழ்ச்சிகளை முடிந்தவரை சேகரித்து பதிந்துள்ளேன். இந்த பாடல்கள் கோப்புகளை கேளுங்கள் உங்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் படங்களூடன் மறுபடியும் கேட்டு மகிழ்ச்சியாய் இருங்கள்.

நிகழ்ச்சி படங்கள் உதவி : நன்றி லக்ஷ்மன் ஸ்ருதி.காம்

1. சின்னபுறா ஒன்று – அன்பே சங்கீதா

Get this widget | Track details | eSnips Social DNA

2. காதலே என் காதலே – டூயட்

Get this widget | Track details | eSnips Social DNA

3. மடை திறந்து – நிழல்கள்

Get this widget | Track details | eSnips Social DNA

4. நம்ம ஊரு சிங்காரி – நினைத்தாலே இனிக்கும்

Namma Ooru Singari…

5. பாட்டு தலைவன் பாடினால் – இதயகோயில்

Get this widget | Track details | eSnips Social DNA

6. சம்சாரம் என்பது வீணை – மயங்குகிறாள் ஒரு மாது

Get this widget | Track details | eSnips Social DNA

7. விடிய விடிய சொல்லித்தருவேன் – போக்கிரி ராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

8. யாரோ யாருக்குள் யாரோ – சென்னை 600 028

Get this widget | Track details | eSnips Social DNA

557ஆரம்பகாலத்தில் அது இருக்கும்

November 17, 2007

நடிகை சிவக்குமார், பிரமிளா இருவரும் நடித்த அரங்கேற்றம் படம் ஒரு குஷாலான படம்தான். இந்த படத்தில் இப்படி ஒரு பாட்டு வருவது ஒன்றும் தவறில்லை. திரு.வி,குமார் சாரைபற்றி சென்ற வாரம் எ.பா.பா வில் பாலுஜி ரொம்பவும் சில்லாகித்து சொன்னது. வி.குமார் சார் எத்தனையோ அருமையான பாடல்கள் போட்டிருந்தாலும் விஸ்வநாதன் சார், இளையாராஜா சார் மாதிரி பேசப்படாதது எனக்கு மிகவும் வருத்தம் என்று ஆதங்கத்துடன் சொன்னார். மேலும், வி.குமார் இசையில் பாலுஜியும், சுசிலாம்மாவும் என்னமாக பாடி நம்மை எல்லாம் ஒரு வழி செய்திடுவாங்க. ரொம்ப நாள் கழித்து நான் கேட்கிறேன். நீங்களூம் தான் கேளூங்களேன்.

படம்: அரங்கேற்றம்
பாடகர்கள்: பாலுஜி, சுசீலாம்மா
இசைள் வி.குமார்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

படம்: அரங்கேற்றம்

பி.சுசீலா
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்

பாலு
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பகாலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்

சின்னச் சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேலிருந்து
என்னையே பார்ப்பதேன்

பி.சுசீலா
கன்னி அந்த முத்தம் ஒன்று
காணவில்லை இன்னும் என்று
இதழை கேட்டதேன்

பாலு:
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே

பி.சுசீலா:
கேளாமல் தந்தால் என்ன

பாலு:
ஆரம்பகாலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்

தொட்டிலிட்ட மொட்டு இரண்டு
துள்ளித் துள்ளி நெஞ்சைத்தொட்டு
என்னையே வெல்வதேன்

பி.சுசீலா:
காதலர்க்கு போதை வந்து
கண்ணிரண்டும் மெல்ல மெல்ல
எதையோ சொல்வதேன்

பாலு:
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்

பி.சுசீலா:
அதுதானே பெண் என்பது

ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA

556சங்கீத வானில்

November 12, 2007

மற்றுமொரு பாலுஜி, வாணிஜெயாராம் குரலில் அழகான ஒரு பாடல் சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தில் வரும் இந்த பாடல் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் எழுதி இசையமைத்தது. பாடலின் இசையமைப்பும் மெட்டும் காதுகளூக்கு தேன் குயில் வந்து தேன் துளிகளை சொட்டுவது போல் மனதிற்கு இனிமையாகவும், இதமாகவும் இருக்கும். மேலும், இந்த பாடலில் வரும் தாளம் பாடல் முழுவதும் ஒரே சீராக வந்து அந்த ஆலாபனைக்கு எவ்வளவு இனிமை சேர்க்கின்றது கேளூங்கள். நீங்களும் தான் அனுபவியுங்களேன்.

பாடல்: சங்கீத வானில்
படம்: சின்னப்பூவே மெல்லப்பேசு
பாடகர்கள்: பாலுஜி, வாணிஜெயாராம்
நடிகர்கள்: பிரபு, ராம்கி, சபிதா ஆனந்தி, சுதா சந்திரன்
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்: 1987

சங்கீத வானில் சந்தோசம் பாடும்
சிங்கார தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே
தோள் மீது வா உன்னை தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
எங்கெங்கும் என் நெஞ்சம் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோசம் பாடும்
சிங்கார தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

ஹாஆஆஆஆஆஆஆஆ

ஆனந்த ராகங்களில் நான் ஆலாபனை செய்கிறேன்

வாஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆ

நானும் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன்

கண்ணங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கின்னமே

கண்ணா உந்தன் குழல் நாதங்களால்
எந்நாவிலும் இன்று குளிர்கின்றதே

ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோசம் பாடும்
சிங்கார தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆ

பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்

ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆ

கண்ணென்னும் ஓடங்களில் கரைத் தேடி நான் ஓடினேன்

கண்ணில் இன்னும் சுவை கூட்டுதே
காணும் முகம் இன்று என்னை வாட்டுதே

பன்மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே

இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோசம் பாடும்
சிங்கார தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா உன்னை தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
எங்கெங்கும் என் நெஞ்சம் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோசம் பாடும்
சிங்கார தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூமயிலே..

Get this widget | Track details | eSnips Social DNA

555என் இதய ராணி தேகம்

November 9, 2007

என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் என்னவொரு ஆழகான பல்லவி. நாலு பேருக்கு நன்றி இந்த படத்தில் வரும் இந்த மெலோடியான பாடல் என் தலையை போட்டு பிய்த்துக்கொண்டேன் காட்சியமைப்பு கண் முன் வந்தால்தானே? யார் நடிகர்கள் என்று கூட மறந்து விட்டது. அதற்காக ஓர் நல்ல இனிமையான பாடலை தாமதம்மாக்குவது நல்லதல்ல.இந்த பாடல் பல தடவை என் மனசை என்னென்னமோ செய்திருக்கிறது. குறிப்பாக, //
தென்னங்குருத்தாட தென்றல் அழைக்காதோ
தென்னங்குருத்தாட தென்றல் வளைக்காதோ
பின்னிப் பிணைந்தாட பக்கம் நெருங்காதோ

மெல்லத் தொடும் போது மின்னல் இரண்டாக
மெல்லத் தொடும் போது மின்னல் இரண்டாக
சொல்லில் அடங்காதோ அர்த்தம் விளங்காதோ

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ//

இந்த வரிகள் பாலுஜியின் குரல் தென்னக்குருத்து போல நம் மனதை தென்றல் போல வளைத்து சொர்க்கத்துக்கே கொண்டு செல்கிறது. பாடலின் நடுவில் வரும் ஆலாபனைகளே அசர வைக்கிறது.

படம்:நாலு பேருக்கு நன்றி
இயக்குநர்: எம்.ஆர்.ராஜாமணி
வருடம்: 1983

ஆஆஆஆ. லலலல.. ஆஆஆஆ
ஆஆஆஆ. லலலல.. ஆஆஆஆ

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

கங்கை பரிசாக கொஞ்சம் வனப்பாக
கங்கை பரிசாக கொஞ்சம் வனப்பாக
மங்கை மடிசாய மஞ்சள் நதிபாய

சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப்பார்க்க வேண்டும்

தென்னங்குருத்தாட தென்றல் அழைக்காதோ
தென்னங்குருத்தாட தென்றல் வளைக்காதோ
பின்னிப் பிணைந்தாட பக்கம் நெருங்காதோ

மெல்லத் தொடும் போது மின்னல் இரண்டாக
மெல்லத் தொடும் போது மின்னல் இரண்டாக
சொல்லில் அடங்காதோ அர்த்தம் விளங்காதோ

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப்பார்க்க வேண்டும்

சின்னக் கிளி பாவை கொஞ்சும் தனிப்பாவை
அன்னக் கொடி போல ஆடை சுமந்தாட

காமன் கடைப்பார்வை கையில் கொடுத்தானோ
மாலை பொழுதாக மையல் வளர்த்தானோ

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ

என் இதய ராணி தேகம்

ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்

அதை பாடிப்பார்க்க வேண்டும்

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஹாஆஆஆஆ

லலலல.. லலலல… லலலல

ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஹேஏஏஏ….

Get this widget | Track details | eSnips Social DNA

554எங்கேயும் எப்போதும்

November 9, 2007

தீபாவளி திருநாளில் அதிகபட்ச எல்லா தொலைக் காட்சி சிறப்பு காட்சிகளில் “பொல்லாதவன்” படத்தின் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் காட்சிகள் எப்படி படமாக்கினார்கள் என்று போட்டு போட்டு தாக்கிவிட்டார்கள். அந்த படத்தில் பல பாடல்கள் இருக்கும் போது. இந்த பாடலை பற்றி தான் அதிகம் விவரித்து ஒளிப்பரப்பினார்கள். அந்த தாக்கம் இன்னும் என்னை விட்டுப்போகவில்லை. அங்கில தளத்தில் சென்ற வாரம் பதிவு செய்தேன். இருந்தாலும் தமிழில் வழங்க வேண்டும் என ஆசையாய் இருந்தது. இக்கால இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் திரு. யோகி அவர்கள் இசையமைத்து கலக்கியிருக்கிறார். அவர் இசையமைப்புக்கு யுகபாரதி தன் வரிகள் நல்ல பொருத்தமாக அமைந்துள்ளது. பாலுஜி அதே கவிஞர் கண்ணதாசன் வரிகளை பாடியுள்ளார். அதே பழைய பாடலை போன்றெ என்னவொரு எனர்ஜி. அப்பப்பா குறிப்பாக இந்த இரண்டு பாடல்களிலும் வரும் அந்த “ரர்ர்ராராரா.. ஹெ.ஹெ..ஹே… ஹோஓஓஓஓஓஓஒ” சூப்பர் போங்க. பழைய பாடலில் வரும் அந்த பாம்பின் மகுடி இசையை இந்த ரீமிக்ஸில் முதலிலேயே அமைத்தது அமர்க்களமாக இருக்கிறது. இதுவும் கேட்க ஒரு வித்தியாசமாகத்தான் இருக்குங்க. பாலுஜி இந்த பாடலில் தன் பங்கை நூறு சதவீதம் சரியாக செய்துள்ளார்.

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: பாலுஜி, யோகி, சுனிதா சாரதி
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன், யுகபாரதி

Engeyum Epothum-Po…

கமல் இடுப்புக்குமேல் பட்டா பெல்ட் போட்டு இன் செய்த வெள்ளை முழு நீள பெல்பாட்டம் பேண்டில் வெள்ளை நிற காலரின் ஓரத்தில் பூப்பூவாக டிசனைல் முழுக்கை சட்டையை அணிந்து கொண்டு அந்த ட்ரம்பட் இசைக்கருவியை ஒயிலாக வாசித்திக்கொண்டே ஒரு பக்கவாட்டில் ஹிப்பி முடியுடன் ஒரு போஸ் கொடுத்த அட்டகாசமான நினைத்தாலே இனிக்கும் பாடல் காட்சி எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடும் போது எடுத்தது அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா? அந்த அமர்க்களமான பாடலை இத்தனை நாள் கழித்து பதிவு செய்ய முக்கிய காரணம். சமீபத்திய திரைக்கு வரப்போகும் பொல்லாதவன் படத்தில் பாலுஜி திரும்பவும் அதே பாடல் வரிகளூடன் பாடியுள்ளார். இந்த புதிய ரீமிக்ஸ் பாடலிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பகுதியை தன் பாணியிலேயே அதே உற்சாகத்துடன் பாடியிருப்பது பாராட்டபட வேண்டிய ஒன்று. இந்த கால இளைஞர்களூக்காக இசையமைக்கப் பட்ட பாடல். மலேசிய பாப் பாடகர் யோகி அவர்களின் இசையமைப்பில் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கும். துவக்கத்திலே பாடலில் வரும் அந்த மகுடியின் இசைக்கும் வார்த்தைகளைப் போட்டு கல கலக்கவைக்கிறார் இசையமைப்பாளர். பாடலை கேட்டு தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் தெரிவியுங்கள்.

படம்:நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: பாலுஜி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும் ஹ உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

காலை ஜப்பானில் காபி மாலை நியுயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்

உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமதுப்பக்க்கம் விடிய விடிய கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி ஹொ எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவையில்லை

தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டும் கமான் எவ்ரபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும் ஜாயின் மீ ஹா
ஹோ ஹோ ஹா ஹா
தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

கமான் எவ்ரபடி ஜாயின் டுகெதர்
ஹ .. ஹ .. ஹ.. ஹ
ஹ .. ஹ .. ஹ.. ஹ
ஹ .. ஹ .. ஹ.. ஹ

Get this widget | Track details | eSnips Social DNA

553அவளே என் காதலி

November 7, 2007

ஓர் பழைய பாடல் கேட்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வாணி மேடத்தின் குரல் சில நேரங்களீல் நம் மனதை என்னென்னவோ செய்துவிடும் அதுவும் பாலுஜியுடன் சேர்ந்து பாடும் அந்த ஷார்ப் குரல் நம் பழைய நினவுகளை கிளறி நம்மை சொர்க்கத்துக்கே அழைத்து சென்றுவிடும். அந்த வகையில் நவரச திலகம் நடிகர் முத்துராமன் நடித்த படம் “பேரும் புகழும்” மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் உருவான பழைய படமானதால் “அவளே என் காதலி” பாடல் காட்சி கண்முன் வரமறுக்கிறது. என்னவொரு இனிமை ஆஹா ஆஹா ஆஹா.. ஒரு கிலோ அல்வாவை முழுங்கின மாதிரி இருக்குதுங்களே…

பாலுஜி ரசிகர்கள் அனனவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படம்: பேரும் புகழும்
பாடியவர்கள்: எஸ்.பி.பி,வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்: 1976

அவளே என் காதலி
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

பாராட்டும் பிள்ளை ஒன்று
தாலாடும் பெண்ணைக்கண்டு
போராட்டம் செய்வதென்ன
இலையோ மலரோ கனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ இதுவோ எதுவோ

அவளே என் காதலி

நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
பட்டான வெள்ளி க்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ குலமோ பயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம் நாணம் வெட்கம்

அவனே என் காதலன்

கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

Get this widget | Track details | eSnips Social DNA