557ஆரம்பகாலத்தில் அது இருக்கும்

நடிகை சிவக்குமார், பிரமிளா இருவரும் நடித்த அரங்கேற்றம் படம் ஒரு குஷாலான படம்தான். இந்த படத்தில் இப்படி ஒரு பாட்டு வருவது ஒன்றும் தவறில்லை. திரு.வி,குமார் சாரைபற்றி சென்ற வாரம் எ.பா.பா வில் பாலுஜி ரொம்பவும் சில்லாகித்து சொன்னது. வி.குமார் சார் எத்தனையோ அருமையான பாடல்கள் போட்டிருந்தாலும் விஸ்வநாதன் சார், இளையாராஜா சார் மாதிரி பேசப்படாதது எனக்கு மிகவும் வருத்தம் என்று ஆதங்கத்துடன் சொன்னார். மேலும், வி.குமார் இசையில் பாலுஜியும், சுசிலாம்மாவும் என்னமாக பாடி நம்மை எல்லாம் ஒரு வழி செய்திடுவாங்க. ரொம்ப நாள் கழித்து நான் கேட்கிறேன். நீங்களூம் தான் கேளூங்களேன்.

படம்: அரங்கேற்றம்
பாடகர்கள்: பாலுஜி, சுசீலாம்மா
இசைள் வி.குமார்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

படம்: அரங்கேற்றம்

பி.சுசீலா
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்

பாலு
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பகாலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்

சின்னச் சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேலிருந்து
என்னையே பார்ப்பதேன்

பி.சுசீலா
கன்னி அந்த முத்தம் ஒன்று
காணவில்லை இன்னும் என்று
இதழை கேட்டதேன்

பாலு:
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே

பி.சுசீலா:
கேளாமல் தந்தால் என்ன

பாலு:
ஆரம்பகாலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்

தொட்டிலிட்ட மொட்டு இரண்டு
துள்ளித் துள்ளி நெஞ்சைத்தொட்டு
என்னையே வெல்வதேன்

பி.சுசீலா:
காதலர்க்கு போதை வந்து
கண்ணிரண்டும் மெல்ல மெல்ல
எதையோ சொல்வதேன்

பாலு:
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்

பி.சுசீலா:
அதுதானே பெண் என்பது

ஆரம்பகாலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA

Leave a comment