Archive for December, 2007

581விஷ் யூ ஹேப்பி நியு இயர் 2008

December 31, 2007எத்தனை வருடங்கள் போனாலும் ஒவ்வொரு ஆங்கில புது வருடம் முதல் தேதியில்
இளமை இதோ இதோ என்ற பாடலை ஏதாவது ஒரு மூலையில் ஒலிப்பரப்பாமல் இருக்க மாட்டர்கள். அந்த வகையில் இந்த பாடலின் மெட்டும், அமர்க்களமான பாலுஜியின் குரலும் அதிரவைக்கின்றன. அதுவும் இந்த வருடம் எல்லா தொலைக்காட்சி சேனலில் ஒரு வாரகாலமாக புது வருட ஸ்பெஷல் நிகழ்ச்சிகளின் விளம்பரங்களில் இந்த பாடலைத் தான் ஒலிபரப்பினார்கள். அந்த அளவிற்கு பிரபல மாயிருக்கும் இந்த பாடல் தன் தனித்தன்மையை இழக்காமல் எல்லா இளைஞர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கின்றன. இந்த பாடல் வரும் சகல கலா வல்லவனில் கமலின் நடிப்பு அமர்க்களமாக இருக்கும் அந்த ஜிகினா உடையையும், தலமுடியின் அந்த செம்பட்டை கலரில் கலக்கினார். அதுமட்டுமல்லாமல் குறிப்பாக

//ரபப்பிர்பபா ரபபபா
பர்ரபப்பா ஹேய்ய்ய்ய்ய்ய்
தக தக தக தக தகதக தக ததத்தா
ஹேய்ய்ய்ய்ய்ய் ததத்தா ததவ்த்தா
தத தக தக தக தக தத தக தக தக தக
தக தக தக தக தகதக தக ஹேய்ய்ய்ய்ய்ய்//

நம்ம பாலுஜியும் தன் பங்குக்கு அடிக்கற லூட்டி சொல்லி மாளாது மறக்க முடியுமா இதை?. இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் அனவருக்கும் பாலுஜி சார்பாகவும் , கோவை பாலுஜி ரசிகர்கள் சார்ப்பாகவும் என் புது வருட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

படம்: சகலகலா வல்லவன்
நடிகர்: கமல்ஹாசன், அம்பிகா
பாடியவர்: பாலுஜி
இசை: இளையராஜா

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்
ஹேஏஏஏஎ ஹேஏஏஏஏ

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ஹெ ஹே
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏதும் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளூங்கள்
கைதாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே.. லலலா
ஏன்டி நீ பார்த்தியே..லலலா
எனக்காக ஏக்கம் என்னம்மா..
களத்தூரின் கன்னம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

ரபப்பிர்பபா ரபபபா
பர்ரபப்பா ஹேய்ய்ய்ய்ய்ய்
தக தக தக தக தகதக தக ததத்தா

ஹேய்ய்ய்ய்ய்ய் ததத்தா ததவ்த்தா
தத தக தக தக தக தத தக தக தக தக
தக தக தக தக தகதக தக ஹேய்ய்ய்ய்ய்ய்

ஹா கம்பு எடுத்து ஆடுவேன்.. லலலா
கத்தி சண்டை போடுவேன்.. லலலா
குத்துவதில் சூரன் நான்.. லலலா
குஸ்திகளின் வீரன் நான்.. லலலா

என்னை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
என்னை வெல்ல யாரும் கிடையாது
எதிர்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

லலலா லலலா லலலா லலலா
கமான் எவ்ரி படி
லலலா லலலா லலலா லலலா
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹூஹுஹு
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹூஹுஹு
ஹெய் ஹெய் ஹுரபரபரிபராஆஆ.

Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements

579மாலை மலர் பந்தலிட்ட

December 29, 2007

மேகத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் குரலாக வாணிஜெயராம் குரல் வருவது அக்கா படத்தில். பாலுஜியும், வாணிம்மாவும் ஒரு வித காந்தசக்தியுடன் அழகான மெலோடியாக இந்த பாடலை வழங்கியிருப்பார்கள். கொஞம் செவி சாய்த்து அனுபவித்து தான் பாருங்களேன்.

படம்: அக்கா
பாடியவர்கள்: பாலுஜி, வாணிஜெயராம்
வருடம்:1976

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

கார்கமல கூந்தலிலே இளம் தென்றல் விளையாடி ஓட
கலிப்பாக்கு வெற்றிலையைப் போல
வரும் செவ்வாயில் இசைப்பாடல் பாட
இவள் திருமகள் புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில் அவன் தந்த தெய்வீகம்

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

ஞான மகள் வீணையுடன்
மகராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
நகை ஒரு வகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் சிருங்கார கல்யாணி

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்

Get this widget | Track details | eSnips Social DNA

580. பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

December 29, 2007

குதூகலம் என்று ஒரு உணர்வு இருக்கிறதே, கேட்கையில் நம்முள் அதை எழுப்புமிந்தப் பாடல்.

பாலுவும் ஜானகியும் சரி- அவர்கள் பாடும் விதத்தைக் கேட்கும்போதே – It is so sweet that I can’t bear any more – என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகிறது. திகட்டத் திகட்ட இனிமையாகப் பாடுகிறார்கள். அருமையான மெட்டில் தென்றலாக நம் செவிகளைத் தழுவுகிறது இந்தப் பாடல்.

மெல்லிசை மன்னரென்று எம்எஸ்வியைக் குறிப்பிடுகிறோம். இம்மாதிரி இனிமையான பாடல்களைத் தந்ததற்காக இளைராஜாவை மெல்லிசை இளவரசர் என்று கூப்பிடலாமா? இசைஞானி அது இதுவென்று சொல்லி பாமர ரசிகனை பயமுறுத்தி அவரைத் தூரத்தில் வைத்துவிடக்கூடாது.

‘நான் பார்த்தது அழகின் ஆலயம்’ என்று பாலு பாடுவதைக் கேட்டால் ‘ப்பா.. போதும் இந்த ஜென்மத்திற்கு இது’ என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. மூன்று சரணங்கள் வருவதே தெரியாதபடிக்கு சரணங்களுக்கிடையேவரும் இசையின் நீளம் ஒவ்வொரு சரணத்திற்கும் குறைந்து மூன்றாவது சரணம் கிட்டத்தட்ட உடனே ஆரம்பித்துவிடுவதைக் கவனியுங்கள்.

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

இடையொரு கொடி இதழொரு கனி
இன்ப லோகமே உன் கண்கள்தானடி
மலரெனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பபபபபா பபபபபபாபா

புதுமழையிது சுவைதருமது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமையென்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பபபபபா பபபபபபாபா

நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலையுந்தன்வசம்
கங்கையாறுபோல் இனி பொங்குமங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை

நம் இருவர் கையிலே
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
லாலாலலா லாலாலலா
பபபபபா பபபபபபபா

PeraiChollavaaAdhu…

578கற்பூரம் காட்டி.. கற்பூரம் காட்டி

December 28, 2007

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த படம் ஸ்வதேசி. பெயருக்கு தகுந்தார் போல படம் எப்படி எடுத்திருப்பார்களோ என்ற பயத்திலே ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களோ தெரியவில்லை. படத்தை நானும் பார்க்கவில்லை எப்போது திரைக்கு வந்ததோ என்று கூட நினவில்லை விஜயகாந்த் ரசிகர்கள் தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும். இந்த படத்தில் பாலுஜி அசத்தாலான சுறு சுறுபான பாடலை நமக்கு தந்துருக்கிறார் எவ்வளவு பேர் கேட்டிருப்பர்கள் என்று எனக்கு தெரியாது. பாடல் பல்லவியே வித்தியாசமாக இருக்கும் அனுபல்லவி, சரணங்கள் மற்றும் கோரஸ் பகுதி கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது. பாடல் வரிகள் மனசுக்கு உற்சாகமூட்டுகிறது யார் எழுதியது என்று தெரியவில்லை.

படம்: ஸ்வதேசி
நடிகர்: விஜயகாந்த்
பாடியவர்: பாலுஜீ

போட்டோ : நன்றி Indiaglitz.com

கற்பூரம் காட்டி கற்பூரம் காட்டி
கைக்கூப்ப வேணும் எம்மக்களே
வெள்ளாமைக் காட்டில் தனியாத சூட்டில்
நெல் அள்ளிப்போடும் பொன்மக்களே
ஓடி உழைச்சா நித்தம் நித்தம்
கூட்டிக் கழிச்சா வேர்வை மிச்சம்

அட கல்லாம இங்க இல்லாம போனா
இல்லாமை நீங்குமப்பா இங்கு
பதினாலு கோடி கைகள் தான் சேர்த்தா
அம்மாடி சொர்க்கமப்பா
அட ஒன்னு எண்ணு ஒன்னாக சேர்த்து வைச்ச
தமிழுக்கு நன்றியப்பா

கற்பூரம் காட்டி கற்பூரம் காட்டி
கைக்கூப்ப வேணும் எம்மக்களே
வெள்ளாமைக் காட்டில் தனியாத சூட்டில்
நெல் அள்ளிப்போடும் பொன்மக்களே

கஞ்சிக்கு வழியின்றிப் போனால் அட
கம்புயூட்டர் தின்பானா யாரும்
விஞ்ஞான வேகத்துக்கு ஈடா
நாம் விவசாயத்த செய்யத்தான் வேணும்
நகரம் எல்லாம் நரகம் ஆகும்
கிராமம் இங்கே இல்லாவிட்டா
தகரமும் கூட தங்கமாகும்
இந்த மண்ணில் நட்டு வைத்தா
இந்த தேசத்தின் பசியை தீர்க்கின்ற நீதான்
எந்நாளும் எதிர்த்தாயே
தினம் ஆகாரம் தந்து பூலோகம் வாழ ஆதாரமானாயே
அட ஒன்னு எண்ணு ஒன்னாக சேர்த்து வைச்ச
தமிழுக்கு நன்றியப்பா

வாழ்க்கை உந்தன் வாழ்க்கை
அது பத்தோடு பதினொன்னு இல்லையப்பா
தூக்கம் தூக்கிப்போடு நீயும்
கானாத இன்பங்கள் கொள்ளையப்பா
தோரயமாத்தான் ஆராய்ஞ்சுபார்த்தா
துன்பங்கள் பூஜ்ஜியம் தான்
நம்பிக்கையோடு நாம் வாழும் போது
இன்பத்தின் ராஜ்ஜியம் தான்
உன் அருகில் பார்க்கிறோம் உழைப்பே ஆயிரம்
துணிந்து போரிடு இன்பத்தைக் கொண்டாடு வாழ்க்கையில்
வாழ்க்கை உந்தன் வாழ்க்கை
அது பத்தோடு பதினொன்னு இல்லையப்பா
தூக்கம் தூக்கிப்போடு நீயும்
கானாத இன்பங்கள் கொள்ளையப்பா

மின்னல் வரும், இடியும் வரும், மழையும் வரும்
வெயிலும் வரும் மண்ணாக நீ தாங்கனும் ஹா
கல்லும் வரும், முள்ளும் வரும், கடலும் வரும்
நதியும் வரும் காற்றாக நீ தாண்டனும் ஹோய்
கண்ண என்னாலும் பூக்காது வாணம்
நெஞ்சம் நீ கூட பூட்டது இரு
கண்ண எப்போது மூடாது பூமி
ஓய்வை நீ கூட நாடதிரு
இப்போதே நீ ஓடி பணம் காச தேடு
எந்நாளும் அச்சம் இல்லே
முப்பாட்டன் சொத்தத்தான் நீ நம்பி வாழ்ந்தால்
வாழ்வில் அர்த்தம் இல்லே
உழைக்க குனிந்தால் நிமிறும் வாழ்க்கையடா
சுருண்டு கிடந்தால் எறும்பும் ஏய்க்குமடா ஹோய்

வேல் வேல் வேல் வேல் வேல்

Get this widget | Track details | eSnips Social DNA

577. பறந்தாலும் விடமாட்டேன்

December 27, 2007

ஸ்ரீதேவியும் கோயான் கோபுவும் ஹெலிகாப்டரில் வர, மஞ்சள் நிற சிறிய விமானத்தில் ஹெலிகாப்டரை கமல் சுற்றிச் சுற்றி வர, இருவரும் போட்டிப்பாடலாகப் பாடிக்கொள்ளும் இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். வாகனத்தை மாற்றியிருந்தால் சுற்றி வருவது சிரமம். ஹெலிகாப்டராக இருக்கப் போய் அந்தரத்தில் நின்று கொள்ள கமல் சுற்றி வர வசதியாக இருந்தது! 🙂

அது சரி. விமானங்களாச்சே – மகா இரைச்சலான பாடலாக அல்லவா இருந்திருக்க வேண்டும். ரயில் வண்டிப் பாடல்களுக்கு ரயிலின் ஓட்ட கதியே தாள கதியாக வைத்து நிறைய பாடல்களைப் போட்டிருக்கிறார் ராஜா. விமானத்தில் என்ன தாளம்? காதடைத்துப் போய் சில்வண்டின் ரீங்காரம் போல பெருத்த ரீங்காரம் ஒன்றுதான் கிடைக்கும்! ஆகவே விமானச் சத்தத்தைத் தவிர்த்து அருமையான மெல்லிசைப் பாடலைத் தந்திருக்கிறார் ராஜா.

ம்ஹும். இப்போது ஆளரவமற்ற இடத்தில் நாயகனும் நாயகியும் பாடும் பாடலையே போர் விமான இரைச்சல் இசையுடன்தான் பல படங்களில் அமைக்கிறார்கள். ராஜா அப்போது விமானத்தில் பயணிக்கும் போது பாடும் பாடலையே ஆளரவமற்ற இடத்தில் பாடுவது போல அவ்வளவு மென்மையான இசையுடன் அமைத்திருக்கிறார்.

ஸ்ரீதேவி ‘பறக்காதே’ என்று எசப்பாட்டை ஆரம்பித்ததும் அருகில் இருக்கும் கோயான் கோபு அவரை எதற்காக முறைத்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

இனி காற்றில் பறப்பது போன்ற இந்த இனிய பாடலைக் கேளுங்கள்!

Hey My Dear, Look here, here I say huh
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Senyorita, How do you feel about me now I say? hahaha
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do!
wow..

நதியிருக்கு தலை குளிக்க
விதியிருக்கு மணம்முடிக்க
இணங்கிவிட்டால் சுகமிருக்கு
இதயத்திலே இடமிருக்கு.. ஹ.
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?

விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Baby, Hey Baby, How do you feel about me now huh?

பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்

52.ParandhaalumVid…

576முதல் முதல் வரும்

December 27, 2007

நடிகர் முத்துராமன் அவர்கள் நடித்த பழைய படம் “காலங்களில் அவள் வசந்தம்” பிரபலமான பாடலின் பல்லவியே படத்தின் பெயராக வைத்தால் நன்றாக ஓடும் என்று வைத்துருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் படம் பார்க்கவில்லையாதலால் இந்த பாடல் காட்சி சுத்தமாக மறந்துவிட்டது யாரவாது தகவல்கள் தரலாம். பாடல் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக இருக்கும் குறிப்பாக சரணங்களில் பாலுஜியின் குரல் பாசந்தி சாப்பிட்ட திருப்தி ஏற்படும். நீங்களும் தான் கேளூங்களேன்.

படம்: காலங்களில் அவள் வசந்தம்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் எஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
நடிப்பு முத்துராமன் சந்திரலேகா
இசையமைப்பு வி. விஜய பாஸ்கர்

முதல் முதல் வரும் சுகம் எதுவென
இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது

உன்னை நானும் என்னை நீயும்
உனர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ
தடைகள் சொல்லாதே

மனதில் மனது சேர்ந்த போதும்
பாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால்
மடியில் விழலாமே

பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்து கிடப்பது என்ன லாபம்

முதல் முதல் வரும் சுகம் எதுவென
இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது

இந்த அழகும் பருவ சுகமும்
நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு
எங்கும் மாறாது

அந்த உண்மை அறியும் உள்ளம்
எனக்கு கிடையாதாஆஆ
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
உனக்கு தெரியாதாஆஆ

அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித் தருவேன்

முதல் முதல் வரும் சுகம் எதுவென
இளமை கேட்கிறது

Get this widget | Track details | eSnips Social DNA

575. ஆடுங்கள் பாடுங்கள்

December 26, 2007

‘குருவில் குரு’ என்று மதுரை குரு திரையரங்கத்தில் குரு படம் திரையிடப்பட்டபோது பேசிக்கொண்டோம். பெத்தானியபுரத்தில் இருக்கிறது குரு திரையரங்கம். அந்தப் பக்கம் மதி, இந்தப் பக்கம் குரு, இரண்டிலொன்றில் கட்டாயம் கமல் படங்கள் வெளியாகும்.

வணிகரீதியாக வெற்றிபெற்ற சரியான மசாலா படம் குரு (1980). பலத்த பாதுகாப்பிலிருக்கும் தங்க மீனை தலை கீழாக வந்து எடுப்பது. முத்திரையாக கழுகு சின்னத்தை உபயோகப்படுத்துவது. அவனவன் ஜீப், கார் என்று ஆலாய் பறக்க குதிரையில் வந்து குற்றம் புரிந்து காணாமல் போவது என்று ஒரு ரீதியாகவே படத்தை எடுத்திருப்பார்கள். குதிரை என்பதால் காரைப் போல நம்பர் ப்ளேட், போலி நம்பர் ப்ளேட் என்று தொல்லைகள் இல்லை. ஆனால் அது விட்டை போட்டால் அதை வைத்து போலீஸ் நாய் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட முடியாதா என்று அப்போது யோசித்திருக்கிறேன்.

கமல், ஸ்ரீதேவி ஜோடியாக வந்து கலக்கிய பெருவெற்றிப் படங்களில் குருவும் ஒன்று. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் அதே நாயகன் கதைதான் குருவிலும். எந்த ஆங்கிலப் படத்தின் தழுவல் இது என்று தெரியவில்லை. ஐ.வி.சசி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வந்த படம்.

பழுப்பும் வெளுப்பும் கலந்த நிறத்திலிருக்கும் புரவியில் புழுதி பறக்க வருவார் கமல். சின்னப் பையன் குதிரையில் போவதைக் காட்டி தூரத்திலிருந்து குதிரை அருகில் வரும்போது பெரியவனாகி கமல் ஆகியிருப்பார். சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே குதிரை சவாரி செய்வார் கமல் (அவர் எதைத்தான் செய்யவில்லை?). படத்திற்கு ஒரு தீம் இசை வேறு படம் நெடுக வரும். நம்பியார், சிலோன் மனோகர் என்று வில்லன்கள். கமல் அறிமுகமாகம் காட்சியில் அட்டகாசமான ஆங்கிலத்தில் பிளந்துகட்டுவார் பாருங்கள். இதன் ஒளிக்கோப்பு யூட்யூபி்ல் இருக்கிறது.

படத்தில் பல பாடல்கள் அருமையானவை. அவற்றிலொன்று குழந்தைகளுடன் குரு பாடுவதாக வரும் இந்தப் பாடல். பாலுவின் குரலே வித்தியாசமாக இருக்கிறது கேட்பதற்கு.

குழந்தைகளிடம் ‘நீ என்னவாகப் போறே?’ என்று கமல் கேட்க, கலெக்ட்டர், டாக்டர், போலீஸ் என்று ஒவ்வொரு குழந்தையாகச் சொல்லிக்கொண்டே வர, ஒரு பையன் ‘நான் குருவாகப் போறேன்’ என்று சொல்வான். உடனே உணர்ச்சிவசப்பட்டு அப்பையனை அறைந்துவிடுவார் கமல். பிறகு அதை நினைத்து வருந்தி, தன் மீதே கோபத்துடன் ஜன்னல் கண்ணாடியை முஷ்டியால் குத்தி (நிஜமாகவே) உடைப்பார்.

குழந்தைகளோடு கோரஸ்ஸாக பாலு பாடிய இன்னொரு பாடல் (அதுவும் கமல் படத்தில்தான்) இன்னொரு பதிவில் பார்ப்போம் (ஏற்கெனவே கோவை ரவீ பதிந்திராத பட்சத்தில் :-)). இனி ஆடுங்கள் பாடுங்கள்!

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

கோபம் போலே வானங்கள்
பாபம் போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

முந்துங்கள் ம்… தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

கண்ணே பாப்பா தூங்காதே
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

Guru-AadungalPaadu…

574. விழியிலே மணி விழியில் மெளன மொழி

December 24, 2007

நூறாவது நாள் (1984) சத்யராஜுக்குப் புகழ்தந்த மற்றுமொரு படம். மொட்டைத்தலையில் வந்த மனிதர் மிரட்டியிருப்பார். அவரது மிரட்டல் நடிப்பிற்கு முன்பு மோகன் மைக்கோடு தலைமறைவாகியிருப்பார். நளினி நாயகி. விஜயகாந்தும் நடித்திருக்கிறாரா என்ன?

பாலுவும் ஜானகியும் இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருப்பார்கள். அவர்களுக்கேயுரித்தான பாணியில் இடையிடையே சிரிப்புகளும் சிணுங்கல்களும் திணித்து கேட்பவர்களுக்குக் காதல் வரும்படி இனிதாகப் பாடியிருப்பார்கள். இளையராஜா இசை. ஏனோ இந்தப் பாடலைக் கேட்கும்போது சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே பாடலும் நினைவில் ஒலிக்கிறது.

வரிகளைப் பார்த்தால் வைரமுத்து எழுதியது மாதிரி தோன்றுகிறது.

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
ம்ஹும் ம்ஹும்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ.. அர்த்த ஜாமங்களில்
நடக்கும்… இந்த யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
அந்தச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அணைத்தறி
மழலையானோம் மாதிரி
மடியில் தூங்கும் ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ.. அர்த்த ஜாமங்களில்
நடக்கும்… இந்த யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்

Vizhiyile.mp3

573. வெண்ணிலவே வெண்ணிலவே

December 24, 2007

‘கல்லூரி மாணவன்’ முரளி, கூடப்படிக்கும் சார்லி, விவேக், கெளசல்யா நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் பாடல்கள் மென்மையாக ஒலிக்கக்கூடியவை. ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ பாட்டை ஹரிஹரன் அருமையாகப் பாடியிருப்பார். (அப்ப, மணியடிச்சாத்தான் என் ஞாவகம் வருமா? எப்பயும் ஒன் நெனப்புத்தான்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னதெல்லாம் பொய்யா? – என்று கெளசல்யா கோபிப்பாரா என்று தெரியவில்லை). காதல் கோட்டை பாணியில் பார்க்காமலேயே காதல்தான் இதிலும். அதில் அஜீத்தும் தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமல் காதலிப்பார்கள். இதில் கெளசல்யாவுக்கு முரளியைத் தெரியும் – ஆனால் முரளிக்குக் கெளசல்யாவைத் தொலைபேசியில் மட்டுமே அறிமுகம். கெளசல்யாவைப் பார்க்கவேண்டுமென்று தவிப்பார். அப்புறம்… சரிசரி.. வேண்டாம் விடுங்கள்.

மனோ குழுவினரோடு ‘பகவானே பகவானே’ பாடலைப் பாடியிருப்பார். தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். தேவாவும் ஓரிரு பாடல்கள் பாடியிருந்த நினைவு.

பாலுவும் ஸ்வர்ணலதாவும் சேர்ந்து பாடியிருக்கும் வெண்ணிலவே வெண்ணிலவே என்ற இந்தப் பாடல் அருமையான பாடல். கல்யாண ஊர்வலத்தின் போது வரும் பாட்டு என்பது இசையிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனோ தெரியவில்லை ஸ்வர்ணலதா சில வார்த்தைகளை உச்சரிப்பதைப் புரிந்துகொள்வதில் எனக்குச் சிரமம் இருக்கிறது. பாலு வழக்கம்போல தெளிந்த நீரோடையாக ஜமாய்க்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் – இது போன்று படத்தில் ஆறுதல் பரிசுகள் உண்டு.

பல்லவியில் பிரச்சினையில்லை. சரணத்தைக் கேட்கும்போது மனம் அப்படியே பாலு பாடியிருக்கும் ‘சின்னப்புறா ஒன்று’ பாடலை நோக்கி ஒவ்வொரு வரிக்கும் செல்கிறது! அதே ராகத்தில் இந்தப் பாடலும் அமைந்திகிறதோ?

படத்தின் இறுதியில் கெளசல்யாவிடம் முரளி காதலைச் சொன்னாரா? முடிவை வெள்ளித் திரையில் காண்க!

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா

வெள்ளிப் பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள் (சின்னப்புறா ஒன்று)
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல்தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை
வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கமென்ன சின்னத் தயக்கமென்ன
இந்தக் காலங்கள் தவக்கோலங்கள்

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா

ஆஹாஹஹா ஆஹாஹஹா
ஓ…ஓ…லாலாலாலால லலலா

ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா?
அந்தச் சுரம் பாடினால் தொட்டச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் துளிர் நானம்மா
நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
புத்தம்புது பார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்
புது தாலாட்டுத்தான் பாடுமா?

வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..
வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

572. கண்ணால் பேசும் பெண்ணே

December 19, 2007

மொழி சமீபத்தில் பார்த்து மகிழ்ந்த அருமையான படம். ஏற்கெனவே நிறைய பதிவர்கள் விமர்சனம் எழுதிவிட்டபடியால் அதிகம் படத்தைப் பற்றி எழுதப் போவதில்லை. ஆனாலும் சில குறிப்புகள்.

* ஜோதிகா – குஷியில் வந்த ஜோதிகாவுக்கும் மொழியில் வந்த ஜோதிகாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! நடிப்பில் அசத்தியிருக்கிறார்

* தமிழ்த்திரையுலகிற்கு நிறைய பிரகாஷ்ராஜ்கள் வேண்டும். அழகிய தீயே, கண்டநாள் முதல் போன்று – குடும்பத்துடன் பார்க்கும் வரையில் எளிமையான கதைக்கருவுடன் – அழகான வாழ்த்து அட்டை போன்ற படங்களின் வரிசையில் – மொழியைத் தந்ததற்காக.

* இசை எப்படி இருக்கும் என்பதற்கு ஜோதிகாவின் கைகளைப் பிடித்து ஸ்பீக்கரில் வைத்துவிட்டு இசையை ஓடவிட்டு காற்றில் கைகளால் ப்ரிதிவிராஜ் அபிநயம் செய்யும் அந்தக் காட்சி – கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் நான் பார்த்தவரையில் – பிரமிக்கச் செய்தது அந்தக் காட்சி. ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளைக் கையில் உணர்ந்து, ப்ரிதிவிராஜின் கைகளின் நடனத்துடன் அந்த அதிர்வை ஒத்திசைத்துப் பார்த்து – ஒலியை, இசையைப் ‘புரிந்து’ கொள்ளும் காதுகேளாத ஜோதிகாவின் முகத்தில் தோன்றும் பாவங்கள் – நிஜமாகவே புல்லரிக்க வைத்த காட்சி அது. படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் இதுதான். யாருடைய யோசனையில் உதித்ததோ – அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள் – சுருக்கமாக ஒரு வார்த்தையில் சொன்னால் – அற்புதம்

வித்யாசாகர் அருமையாக இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி – அருமையாக ஒலிக்கின்றன.

பல்ராம் பாடியிருக்கும் காற்றின் மொழி, ஒலியா இசையா – அற்புதப் பாடல். திப்பு, கார்த்திக், ஸ்ரீநிவாஸ் என்று அவரவர் பங்குக்கு அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

பாலு ‘கண்ணால் பேசும் பெண்ணே’ பாடலைப் பாடியிருக்கிறார். கேட்கையில் மயிலிறகால் வருடப்பட்ட உணர்வைத் தருகிறது பாடல். என்ன இனிமை! என் குழந்தைகள் இரண்டும் இந்தப் பாட்டையே திரும்பத்திரும்ப ஒலிக்கக் கேட்டு, பாடிக்கொண்டே இருக்கிறார்கள் – வசியம் செய்யப்பட்டவர்களைப் போல.

அவர் Oh I’m sorry I’m sorry I’m sorry என்று கொஞ்சிப் பாடுவதைக் கேட்டால் படத்தின் நாயகி ஜோதிகாவே வாயைத் திறந்து ‘Don’t be’ என்று சொல்லிவிடக் கூடும் – அத்தனை இனிமை.

வே.விளையாடு, மொழி பார்த்ததற்குப் பிறகு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வருடங்களுக்குப் பின் அமலாவுக்கு அடுத்தபடியாக எனது இரண்டாவது தலைவியாக ஜோதிகாவை ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஹிஹி!

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறிச் செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
கறையை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன்
இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அருகில் மீசை வரைய மாட்டேன்
மெளனம் பேசும் போது
சத்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் போதே
நிலவைத் தேட மாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh I’m sorry I’m sorry I’m sorry Oho I’m sorry I’m sorry I’m sorry
Oh I’m sorry I’m sorry I’m sorry Oho I’m sorry I’m sorry I’m sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணீரில் கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்
பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh I’m sorry I’m sorry I’m sorry Oho I’m sorry I’m sorry I’m sorry
Oh I’m sorry I’m sorry Oho I’m sorry I’m sorry I’m sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறிச் செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி

Get this widget | Track details | eSnips Social DNA