Archive for January, 2008

606நெனச்செதெல்லாம் நடக்க போற

January 31, 2008

இதோ ஓர் ஜாலியான பழைய பாடல். நம் மனதை குஜாலாக குதுகலப்படுத்தும் இதுபோல அழகான வரிகள் //பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு, கொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு, எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு, வாய்யா..அய்யோஓஓ.. பக்கத்துல வாய்யா..ம்ஹாஆஆ// மறுபடியும் இந்த மாதிரி பாடல்கள் எப்போது கேட்க போகிறோம் என்ற ஆவல் அதிகரிக்கிறது. எல்லோரும் பாடலை கேட்டு ஜாலியாக, சந்தோசமா இருங்க.

படம்: உறவாடும் நெஞ்சம்
இயக்குனர் தேவராஜ் மோகன்
தயாரிப்பாளர் வி. கந்தசாமி
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
நடிப்பு சிவகுமார், சந்திரகலா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு நவம்பர் 27, 1976

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி

இது தானா மோகம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
செவ்வாயில் மீன்கள் வருகின்ற நேரம்
தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
வாம்மா
ம்
பக்கத்துல வாம்மா
ம்ஹும்

என் காதல் ராணி நான் தானே தேடி
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி

இரவோடு நிலவு கதை பேசும் போது
உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
பொன்மேனி என்றும் பூவாட வேண்டும்

வாய்யா
ம்ஹாஆ
பக்கத்துல வாய்யா
ம்ஹஹஹஹா

என் காதல் ராஜா நான் தானே ரோஜா
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாயா
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு

சொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு

எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு

வாய்யா

அய்யோஓஓ

பக்கத்துல வாய்யா

ம்ஹாஆஆ

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

என் காதல் ராணி நான் தானே தேடி

Get this widget | Track details | eSnips Social DNA

605நினைத்தால் நான் வானம்

January 29, 2008

நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்து சக்கைப்போடு போட்ட படம் நான்கு சுவர்கள். இதில் பாலுஜி, சுசிலாம்மா ஒரு சூப்பர் மெலோடி பாடல் பாடியிருப்பார்கள். இந்த பாடலை எந்த நேரத்திலும் பாட்டின் பல்லவி போல் நினைத்தால் நான் வானம் சென்று சொல்வது போல் பாட்டு கேட்டு ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: நான்கு சுவர்கள்
நடிகர்கள்: ஜெய்சங்கர், வாணிஸ்ரீ
குரல்: பாலுஜி, பி.சுசீலாம்மா
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குனர் கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர் வி. எஸ். சர்மா
ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்
பி. ஏஸ். மணி
வருடம்: 6, 1971

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே

வாணவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும் போது மெல்ல கிள்ள வேண்டும் கண்ணம்

நினைத்தால் நான் வாணம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும் போது நாமும்
ஆடிப்பார்க்க வேண்டும்

ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கு போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

604தங்கத் தேரோடும் அழகினிலே

January 28, 2008

முதலில் இந்தியாவின் பெரிய விருதான “பத்மபூஷன்” விருதை பெற்ற தென்னிந்தியாவின் லதாமங்கேஷ்கர் பி.சுசில்லாம்மாவிற்க்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதோ ஒர் பாலுஜியுடன் பாடிய இனிமையான பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA

அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.

எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான்; வந்த வம்பையும் விடமாட்டான்!

முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான்.

இந்த நிலையில், முறைப்பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும்போது துடித்துப்போவான். “உன்னைக் கெடுத்தவனை, உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும்வரை ஓயமாட்டேன்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே, வில்லனை கொன்று, பிணத்தை முறைப்பெண் முன் கொண்டு வந்து போட்டுவிட்டு போலீசில் சரண் அடைவான். – பேட்டி டைரக்டர் துரை.

படவிளக்கம் உதவி: நன்றி. ரஜினிரசிகர் தளம்.

தங்கத்தேரோடும் அழகினிலே என்ற பாடல் அழகான பாடல் பாலுஜி தீவிர ரசிகர் திரு.துரைராஜன் விருப்பத்திற்காக இந்த பாடல். நீங்களும் கேட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

படம்: ரகுபதி ராகவ ராஜாராம்
பாடகர்கள்: பாலுஜி, பி.சுசீலா
பாடலாசிரியர்: வாலி
நடிகர்: ரஜினிகாந்த்
இசை: சங்கர் கனேஷ்
வருடம்:1977

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்

அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோககினால்

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்

அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்

அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினால்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினால்

தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ

தங்கத் தேரோடும் அழகினிலே

இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

இந்த ராஜாவும் தவமிருந்தால்

603ஏதோ ஒரு நதியில் நான்

January 24, 2008

இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் இணையத்தில் தேடினால், சொன்னதை செய்வேன் பெயரா? அல்லது என்ன தவம் செய்தேனா? ஒரே குழப்பமாக உள்ளது பாலுஜி, சுசிலாம்மவின் இனிய குரல்களில் ”லல்ல லல்ல லல்லலலலலாஆஆ, லல்ல லல்ல லல்லலலலலாஆஆ” என்ற ஹம்மிங் ஒன்று போதும். அந்த குழப்பத்தில் இருந்து மீட்டு கொண்டுவர.. அழகான பழையபாடல் நீங்களூம் தான் கேளூங்களேன்.

படம்: என்ன தவம் செய்தேன்
பாடகர்கள்: பாலுஜி, சுசிலாம்மா
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் டி. சுப்பையா
நலந்தா மூவீஸ் எஸ்.எம். டி. ரங்கநாயகி அம்மாள்
ஆர். ஜெயந்த்குமார் நடிப்பு விஜயகுமார், சுஜாதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜனவரி 14, 1977

Get this widget | Track details | eSnips Social DNA

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

லல்ல லல்ல லல்லலலலலாஆஆ
லல்ல லல்ல லல்லலலலலாஆஆ

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

சிங்கார செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும்கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாண பந்தலிடும் கலைச் சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

கண்ணம் சிறு குழி விழ சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ம்ம்ம்ம்ம்ம்

தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்

என் வீட்டு பச்சைக் கிளி
இன்று என் தோளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து
என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி

ஏதோ ஒரு நதியில் ஆஆஆஆ நான் இறங்குவதைப் போலேஆஆ
ஏதோ ஒரு இன்பம் ஆஆஆஆ நீ அருகில் இருந்தாலே ஆஆஆ

மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆஆஆஆ

மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ம்ம்ம்ம்ம்

ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே

கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாளிரு

கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும்
அன்பு கொண்ட கண்ணாயிரு

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

602பசியெடுக்கிற நேரம் வந்தா…

January 24, 2008

எனக்கு பசியெடுக்கிற நேரம் வந்தா பாலுஜி பாட்ட கேட்பேன். உங்களூக்கு பசியெடுத்தா?? என்ன செய்வீங்க?? தகவல்கள் தேடுவீங்களா?? (என்னடா இதுன்னு?? யோசிக்காதீங்க சார். இந்த படத்தின் தகவல்களூம் கிடைக்கல்ல அதான்) பழைய படத்தகவல்கள் இணையத்தில் பஞ்சம் போல். அம்மா தாயே! அய்யா சாமி!! ப்ளிஸ் ஹெல்ப் மீ…..

படம்: பட்டாம் பூச்சி
நடிகர்:கமல், ஜெயச்சித்ரா
இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாசம்
நாவல்: ரா.கி.ரங்கராஜன்
இசை: தேவராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்ன கேக்கனும்

பசி எடுக்கிற நேரம் வந்தா என்னப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் உன்ன கேக்கனும்

அடி ராஜாத்தி புது ரோஜாப்பு அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதைச் சொல்லக்கூடாதோ

இள ராஜாத்தி புது ரோஜாப்பு இதை தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதைச் சொன்னால் தீராதோ

சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன

கண்ணப் பழம் இது தின்னத் தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும் ரகசியம் காட்டி தரலாமோ

கண்டவர் கண்படும் முன்னாலே
என் கைப் பட ஆறிடும் தன்னாலே

இள ராஜாத்தி புது ரோஜாப்பு இதை தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதைச் சொன்னால் தீராதோ

பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்

பருவத்தின் தேவை எல்லாம் உன்ன கேக்கனும்

காலநேரம் பார்க்காம மேளசத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் பெண்னானது

நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் ஒன்றன் முன்பே கொஞ்சம் போரடாவா

இன்றொரு பாதி நாளை பாதி
இன்றொரு பாதி நாளை பாதி

பாதி இல்லாத வாலிபம் ஏது..

601பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ

January 24, 2008

1978ஆம் வருடம் வெளிவந்த “சீர்வரிசை” படம் சுத்தமாக மறந்துவிட்டது. இந்த படத்தில் பாடல்கள் அனைத்துக் தேன் மழை தான் போங்கள். இந்த பாடலில் முக்கியத்துவமே ஹம்மிங் தான் சூப்பர். முத்துராமன், லதா நடித்திருக்கிறார்கள். உங்களூக்கு படக்காட்சி நினைவுக்கு வருதுங்களா? நீங்களூம் சுவரசியமான தகவல்களூம் தரலாமே??

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: சீர்வரிசை
நடிகர்: முத்துராமன், லதா, ரோஜாமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: கே.சொர்ணம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
கம்பெனி: கே.சி.ப்லிம்ஸ்
வருடம் : 1978

பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களா ஆஆஆஆஆ சொல்லம்மா

ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்

காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது தேத்திக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது

பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது

ஆஆஆஆ ஏஏஏஏ
ஆஆஆஆ ஓஓஓஒ

மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உன்னட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்ம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்

ஆஆஆஆஆஆ ஹோஓஓஓஓஓ
ரர்ரரரரரரர்ராஆஆஆஆ ஹெஹேஏஏஏஏ
ஆஆஆஆஆஆ

தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க

தொட்டல் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க

சின்னம் சிருசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ

மாங்கனி கண்ணம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கனும்…

600கண்ணில் ஆடும் ரோஜா

January 22, 2008

இந்த பாட்டு வரும் படத்தை இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்ட்டேன். அழகான பாடல். யாராவது உதவிக்கு வாங்கப்பா.

படம்: கேப்டன்
நடிகர்: சரத்குமார்
இசை: சிற்பி
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்குநர்: கோடி ராமகிருஷ்னா

கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ

கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே

முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்

கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ

கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ

மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ

அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை

இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ

கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

Get this widget | Track details | eSnips Social DNA

599அலைகளில் மிதக்குது

January 21, 2008

”அந்த ஒரு நிமிடம்” இது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படம் (சுந்தர் நீங்க போடுவீங்கன்னு எத்தனை நாள் தான் காத்திருப்பது ஒரு அழகான பாடல் அனாவசியாமாக காத்து கிடக்கக்கூடாதேன்னு நானே பதிஞ்சுட்டேன் ஹி ஹி ஹி). பச்சோந்தியே கேளடா போன்ற பாடல்கள் இடம் பெற்ற படம் கமல் ஒரு காட்சியில் பொம்மை பச்சோந்தியின் மீது ஏறி குதிரையில் வருவது போல் வருவார் என்று நினைக்கிறேன். பாடல் காட்சிகள் சில இடங்களில் சிறுவர்களை குஷி படுத்த எடுத்தது போன்ற பிரம்மை ஏற்படும். இந்த படத்தில் எல்லா பாடல்களூம் பாலுஜியும், ஜானகியம்மாவும் சேர்ந்து தங்கள் குரல்களில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். இந்த பாடல் சீரான தாளகதியில் ஒரு குஜாலான பாடல் வைரமுத்து சார் வரிகளில் எல்லையில்லாமல் புகுந்து விளையாடியிருப்பார். அதுதான் சார் ”அலைகளில் மிதக்குது நிலவு ஒன்று குளிக்குது” என்று துவக்கத்தின் பல்லவியே அமர்க்களப்படும். பொத்தாம் பொதுவாக சொல்லவேண்டுமென்றால் பாடல் ஒரே கும்த்தலக்கா கும்மாவாக குத்து பாட்டு போல் இல்லாமல் ஒரு வித ”இது”வாக இருக்கும். பாலுஜி, ஜானகியம்மா இருவரின் இனிமையான குரல்களை மட்டும் அனுபவித்து கேளூங்கள். ஹும்ம்ம்ம்ம்ம்ம் எத்தனை நாள் ஆச்சு இந்த மாதிரி பாடல்கள் கேட்டு அப்படின்னு நீங்க நினக்கிறது கேக்குதுங்க.

படம்: அந்த ஒரு நிமிடம்
நடிகர்கள்: கமல்ஹாசன், ஊர்வசி
பாடகர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்குநர்: மேஜர் சுந்தராஜன்
வருடம்: 1985

Get this widget | Track details | eSnips Social DNA

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கைக்கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைத்தொடு
தேகம் உருகியதே ஆடை உருகியதே நீரும் சூடு ஏற

வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மறத்திருச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகிப்போச்சு
வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
ஹய்யோ
முன்னூறு தாங்காது தந்தாலும் தகராறு

இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஹோ புது ரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி

நான் இங்கு நானில்லை நீ இன்னும் ஆளில்லை
ஆடை காணவில்லை
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கைக்கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைத்தொடு

தேகம் மறத்திருச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகிப்போச்சு
வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

லா லா லா லா
ஆஹா ஆஹா

லா லா லலலல
அஹாஹா ஹஹஹஹ

லா லா
ஆஹா
லா லா
ஆஹா

ஆணுக்கு ஆவேசம் வந்தாலே சந்தோசம்

உம்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்

வெயிலுக்கு நிழல் கொடு
வெயிலுக்கு நிழல் கொடு மயிலுக்கு உடை கொடு மாமனே

ஹய்யயோ இருக்கிற வேட்டிய கொடுத்திட்டு தவிப்பது பாவமே

பஞ்சாங்கம் பார்க்காதே என் அங்கம் தாங்காதே நீரு ஈரமில்லை

வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

தேகம் உருகியதே ஆடை உருகியதே நீரும் சூடு ஏற

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கைக்கொடு

வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி

598என்னை வெச்சு காமெடி, கீமெடி பன்னலயே?

January 18, 2008

எப்போதும் பாலுஜி பாட்டு பாட்டு என்று பதியப்படும் இந்த தளத்தில் ஒரு வித்தியாசத்திற்க்காக ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நிச்சயம் யாரையும் மனது புண்படுத்துவதற்காக பதியப்படவில்லை. ஆகவே முதலில் பாலுஜி சார்பாகவும், அவரது ரசிகர்கள் சார்பாகவும் இந்த ஒலிக்கோப்பை பதிவாக பதிந்ததற்காக, சில நிமிடங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட டைரக்டர் மனோ பாலா அவர்களிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன்.

எல்லா தொலைக்காட்சிகளில் தற்போது டான்ஸ், டூப்ளிகெட், பாட்டு என்று நிகழ்ச்சிகளை நடந்து வருவதை கிண்டல் செய்து கலாய்க்கிற நிகழ்ச்சி கூட வந்து விட்டது இதன் உச்சக்கட்டமாக திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியை கூட விட்டு வைக்கவில்லை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பொங்கல் திருநாளில் எல்லோரும் மிகவும் ரசித்தது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பிய பாஸ்கி அவர்களின் “அல்வா பொங்கல்” நான் மட்டுமல்ல பார்த்தவர்கள் எல்லோரும் மிகவும் ரசித்துருப்பார்கள். இதில் ஒரு பகுதி என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் நடந்தது. பாவம் மாட்டிக்கொண்டவர் சினிமா டைரக்டர் திரு. மனோபாலா அவர்கள். இந்த நிகழ்ச்சியை தவறவிட்டவர்களூக்காக இணைய தள பாலுஜி ரசிகர்களுக்கும் தமிழ்மண வாசகர்கள் அனைவருக்கும் இந்த ஒலிக்கோப்பை வழங்கி உங்களூடன் சேர்ந்து நானும் மறுபடியும் ரசிக்கிறேன். இது ஒரு ஹாஸ்ய நிகழ்ச்சி டைரக்டர் மனோபாலாவை நகைச்சுவைக்காக எப்படி கலாய்க்கிறார் பாலுஜி கேளூங்கள். ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !!!!

ஒளிக்கோப்பாக பார்த்திருந்தால் இன்னும் நன்றாக ரசிக்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

597எங்களுக்கும் வெயிலடிக்கும்

January 14, 2008


இந்த தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து எங்களூக்கு ஆதரவுதந்து உற்சாகத்தை ஏற்படுத்தும் அனைத்து ரசிகர்களூக்கும், குறிப்பாக பாலுஜி ரசிகர்களுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், பாலுஜி ரசிகர்கள் சாரிடபில் பவுண்டேசன் சார்ப்பிலும் இனிய “பொங்கல் நல்வாழ்த்துக்களை” தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ சமீபத்தில் வெளிவந்த சத்யராஜ் நடித்து வெளிவந்த ஒன்பது ரூபா நோட் படத்தில் பாலுஜியின் இனிய குரலில் உழவர்களூக்காக, பொங்கல் கொண்டாடும் விவசாய உழவர்களூக்காகவும் பாடும் இந்த பாடல் கேட்டுத்தான் பாருங்களேன். உங்களை உங்கள் பிறந்த ஊருக்கு இட்டுச்சென்று விடும் பாடல். இந்த பாடலை பலநாட்களாக அன்புடன் ஒலிபரப்பும் படி பாலுஜி தீவிர ரசிகர் திரு. நாமக்கல் கார்த்திக் அவர்களூக்கு இந்த அழகான பாடலை சமர்ப்பணம் செய்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

படங்கள் உதவி: நன்றி, இந்தியா க்ளிட்ஜ்.காம்

படம்: ஒன்பது ரூபாய் நோட்
நடிகர்கள்; சத்யராஜ், அர்ச்சனா
பாடியவர்: பாலுஜி
இசை: ப்ரத்வாஜ்
இயக்குநர்: தங்கர் பச்சான்

எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழையடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் பூமி
இல்லேன்னு சொல்லவா சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லவா சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி

காடாய் முள்ளிருக்கும்
கருவேல மரமிருக்கும்
குத்தும்கூரா கல்லிருக்கும்
கொத்த வரும் பாம்பிருக்கும்
முள்ளிருக்கும் காடுன்னு வெறுக்காதீங்க
அங்கே மூலிகையும் முலைச்சிருக்கும் மறக்காதீங்க
நம்பி கழுத்தருக்கும்
நரிப்போல குணமிருக்கும்
நன்றி எல்லாம் மறந்திருக்கும்
நடு வீட்டில் முள்ளவைக்கும்
நஞ்சிருக்கும் ஊருன்னு வெறுக்காதீங்க
இன்னும் நல்லவங்க இருக்காங்க மறக்காதீங்க
வயச மறங்க வாய்விட்டுச் சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுத்து உண்டு வாழ்ந்து பாருங்க

ஹோஓஓஓஓ ஓஓஓஓஒ
ஹேஏஏஏஏஏ ஹோஓஓஓஒ

எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழையடிக்கும் சாமி

நல்ல மனசிருக்கு
வேலை செய்ய தெம்பிருக்கு
பேச்சு துணைக்கு தேங்காமர??? தோப்பிருக்கு
சோறு தண்ணி காசு பணம் வேணாமுங்க
இந்த சுத்தமான காத்திருக்கு போதுமுங்க
அன்பு சுற்றம் உண்டு
தாய்போல ஊரும் உண்டு
கடல் தாண்டி பூமி உண்டு
மதம் தாண்டி சொந்தம் உண்டு
உசுரு கொடுத்த மண்ணைவிட்டு போகாதீங்க
இந்த ஊரவிட்டு எங்கேயும் போய் சாகாதீங்க

வயச மறங்க ஹ வாய்விட்டுச் சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுத்து உண்டு வாழ்ந்து பாருங்க

ஹோஓஓஓஓ ஓஓஓஓஒ
ஹேஏஏஏஏஏ ஹோஓஓஓஒ

எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழையடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் பூமி
இல்லேன்னு சொல்லவா சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லவா சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி

Get this widget | Track details | eSnips Social DNA