Archive for February, 2008

613வரவேண்டும் மஹராஜன்: பாலுஜி தரிசனம் 2

February 29, 2008

பாலுஜியின் அமர்க்களமான கோவை சந்திப்பு பகுதி : 2

நிகழ்ச்சியன்று, 17ஆம் தேதியன்று காலையிலே சென்னையில் இருந்து ஒரு பெரும் படை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியது. அதை தொடர்ந்து ஹைத்ரபாத், மும்பை, பெங்களூர், பொள்ளாச்சி இருந்தும் ரசிகர்கள் கலந்து கொள்ள கொள்ளை ஆவலாக வந்தனர்.

நான் காலை 11.30 மணிக்கு, சாரிட்டியின் முதல் நிர்வாகி திரு. கிரிதர் ராஜா அவர்கள் (இவர் பாலுஜியின் மருமகன் என்பது குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்) பெங்களூரில் இருந்து வருகை தந்தார். பல தடவை விமான நிலையத்திற்க்கு வரவேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டாலும். நானும், எனது கோவை புதிய ரசிகர் திரு. ஆனந்த் அவர்களூம் காரில் அவரை வரவேற்க்க சென்றோம். பாலுஜி 12.45 விமானத்தில் வருகிறார் என்று தகவல். திரு.கிரிதர் ராஜா சாரை அவரகளின் திருமணத்தில் அவரைப் பார்த்தது, அதற்கு பிறகு சென்னையில் நிலவும் மலரும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்தது. இருந்தாலும், பாலுஜியை பார்க்கும் அதே ஆவலுடன் கிரிதர் சாரையையும் எதிர்பார்த்தேன். பெங்களூர் விமானம் 45 நிமிடம் தாமதமாக வந்தது. விமானநிலையத்தில் தூரத்திலே என்னை அடையாளம் கண்டு கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. ஒரு மணி நேர இடைவெளியில் நாம் பாலுஜியை வரவேற்க்க முடியாமல் போய்விடுமோ அச்சத்தில் இருந்த எனக்கு கிரிதர் சார் ஒரு நல்ல தகவலை சொன்னார். மாமா 15 நிமிடத்தில் வந்துவிடுவாரே ஒன்றாகவே சென்று விடலாமே என்று யோசனை சொன்னார். நான் சொன்னேன் நாம் போகலாம் சார் மாமாவை அழைத்து செல்ல திரு ரமேஷ் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார் என்றேன் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளல்லாமே என்றேன். பரவாயில்லை சேர்ந்தே போகலாம் என்றார். அதற்குள்ளே பாலுஜி அவர்களின் விமானமும் வந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து தவித்தேன் தூரத்தில் அவரைக் கண்டதும் 25 வருடத்திற்க்கு முன் இதே விமான நிலையத்தில் பாலுஜியை வரவேற்க்க படை சூல மலர்மாலைகளுடன் சென்றது இன்றும் என் கண் முண் வருகிறது அதுமட்டுமல்லாமல் என் கால்பாதங்களுக்கு கீழ் பூமி நழுவுவது போல் ஒரு பிரம்மை ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது அதே உணர்வு ஏற்பட்டது. முதல் தடவை அதற்கு பின் பல தடவை அவரை வரவேற்க நண்பர்கள் படை சூழ சென்றதும் அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவரிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொண்டதும் வேறு விஷயம்.

பாலுஜி விமானத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு தான் நடந்து வந்தார், சோர்வாக இருந்தது நன்றாகவே நடையில் தெரிந்தது. ஏனென்றால் முதல் இர்ண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். முன்னரே கிரிதர் ராஜா அவர்கள் பாலுஜியிடம் உடல் நிலை சரியில்லாமல் வரவேண்டாம் நிகழ்ச்சி மற்றொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். (எங்கள் வயிற்றிலும் புளியை கரைத்தார்) அதற்கு அவசியமில்லாமல் பாலுஜி, இல்லையில்லை என்னை பார்க்க பல ஊர்களில் இருந்து வருகை தருகிறார்கள், இப்போது என் உடல் நிலை பரவாயில்லை நிகழ்ச்சி வருகிறேன். என்று சொன்னதும், நிகழ்ச்சி நடை பெறும் போதும் குறிப்பிட்டதும். அவர் தன் ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று நினைத்து புல்லரித்து போனேன். என்னைப்பார்த்ததும், நான் வரவேற்றேன் என் அருகில் வந்தவுடன் என்னங்க கேப்டன் சவுக்கியமா? (அன்று நான் வழக்கம் போலவே கல்ப் தொப்பி அனிந்திருந்தேன்) என்றார். பாருங்க, யார் யாரையை கேப்டன் என்பது ? சார் நீங்க தான் எங்களூக்கு கேப்டன் என்று சொல்ல நினைத்தேன் அதற்குள் கூட்டம் சேர்ந்ததால். அவரை பத்திரமாக காருக்கு அழைத்து சென்று. ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தோம். அந்த காரின் பின்னேயே திரு.ஆனந்த் காரின் மஞ்சள் பறவை பறந்தது.

எப்போதும் போலவே காரில் இருந்தே என் கைப்பேசியில் இருந்து திரு. அசோக், திரு.சேசாத்திரி இருவருக்கும் வருகிறோம் என்ற தகவல்கள் பறந்தன. எளிமையான வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலிலே தங்கினார். அவருடன் ஹோட்டலில் 20 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது பொதுவாக தன் பழைய கோவை நண்பர்களிடம் நினைவுகூர்ந்து பேசியது மகிழ்ச்சியை தந்தது. பேச்சின் நடுநடுவே திரு. ஆனந்த் அவர்களையையும் மீறி எட்டி எட்டிப்பார்த்து தொலைகாட்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா கிரிகெட் போட்டியை பார்த்துகொண்டே பேசியது. அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அதீதமான காதலை புரிந்து கொண்டேன்.

பாலுஜிக்கு வருகைக்கு முன், 3.00 மணியளவில் கோவை சேவா ஆசிரமத்திற்கு அழைத்து செல்லலாமா என்று திரு. சேஷாத்திரி என்னிடம் தெரிவித்தார் முன்னமேயே சொல்லவில்லையா என்று கூட என்னிடம் செல்லமாக கடிந்து கொண்டார். அதற்கு எந்தவித மூடில் வருகிறார் தெரியவில்லை ஹோட்டல் வந்ததும் சொல்லலாம் என்றேன். அவரிடம் தகவல் தெரிவித்ததும் சரி என்றவுடன் நமது சென்னை நண்பர்கள் பரப்பானாகள்.

மாலை 3.00 பாலுஜியுடன் கிளம்பினோம் கோவை சேவா நிலையத்திற்க்கு குழந்தைகள் “வணக்கம் ஐயா” கோசத்துடன் பாலுஜியை வரவேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

முதலில் அங்கு சேவா நிலையம் நடத்தி வரும் 96 வயதில் மூதாட்டி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டது அவர் பணிவை காட்டியது. இந்த வயதிலும், அந்த சேவா நிலையத்தை நடத்தி வருகிறார் என்று கேட்டு அதிசயப்பட்டு போனார். பாலுஜியிடம் அவர் ரசிகர்கள் வழங்கும் பொருட்களின் போட்டோ ஆல்பத்தை வழங்கினேன் பார்த்து மகிழ்ச்சிடைந்தார். குழந்தைகளூடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போதும் அவரின் நகைச்சுவை உணர்வு விட்டு போகவில்லை போட்டொ கிராபர் திரு. ஷ்ரிதர் அவர்களிடம் குழந்தைகள் போட்டோவில் நன்றாக விழவேண்டும் என்றார். குழந்தைகள் ஆவல் மிகுதியால் பாலுஜியை அடிக்கடி திரும்பி பார்க்க எல்லோரையும் கேமராவை பாருங்கள் அப்போது தான் உங்கள் முகம் தெரியும் என்று சொல்லி ஷ்ரிதர் இன்னும் இரண்டு படங்கள் எடுங்கள் சேர் மீது ஏறி எடுங்கள் என்று சொன்னவுடன் தொடர்ந்து குழந்தைகளே இப்போது பாருங்கள் அவர் தொப்புகடீர் என்று விழுவார் என்று சொன்னது அவரின் சூழ்நிலை நகைச்சுவையை உணர்வை நன்றகவே உணரமுடிந்தது. பொதுவாகவே புதிய நபர்களிடமும் ஜாலியாக பேசுவார் பழைய நண்பர்களிடம் கேட்கவே வேண்டாம் அதிகம் உரிமை எடுத்துகொண்டு மிக ஜாலியாக பேசுவார் அவரிடம் பழகுபவர்களுக்கு தான் அவரின் குழந்தைதனமான மனம் புரியும். மேலும், குழந்தைகளின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ”நலம் வாழ எந்நாளூம் நல் வாழ்த்துக்கள்” என்ற அழகான பாடலை பாடி குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். பொதுமக்கள் கூட்டம் சேரத்துவங்ககியதுமே பாலுஜி டென்சன் ஆவதற்குள் பாலுஜியை ஆசிரமத்தை விட்டு கிளம்பிக்கொண்டு காரில் ஏற்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு கிளம்பினோம்.

10 நிமிட பயணத்திலும் கிரிக்கெட் வர்ணனையை கேட்க அவர் தவறவில்லை நண்பரின் காரில் எப்.எம் தேடி பிடித்து கேட்டார் ஸ்டேசன் கிடைப்பதற்க்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடமும் வந்து விட்டது. இருந்தாலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கும் செல்ல 15 நிமிடம் தாமதமாகிவிட்டது. பாலுஜிபார்க்க அவரின் ரசிகர்கள் மிக ஆவலுடனும், ஏக்கத்துடனும் உணர்ச்சி பிழம்பாக காத்திருந்தது பார்க்க ஆசையாகவும் இருந்தது கண்கொள்ளா காட்சியாகவும் இருந்தது.

கோவை பாலுஜி நண்பர்கள் ரசிகர்கள் சேர்ந்து அவரை வரவேற்பு அழைப்பிதழுடன் வரவேற்றோம். வருகை தந்த அனைவருக்கும் வரவேறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

முதலில் நிகழ்ச்சி நிரல் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. திரு. அசோக் அவர்களின் அருமையான பக்தி பாடலுடன் துவங்கியது. முன்னதாக சாரிட்டி சார்பாக மலர் கொத்து வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது அதை தொடர்ந்து, கோவை பாலுஜி நண்பர்கள் ரசிகர்கள் குழு சார்பாக மலர் கொத்து வழங்கி வரவேற்ப்பு தரப்பட்டது,

சென்னை ரசிகர்கள் திரு.அசோக், திரு.ஷேசாதிரி மற்றும் திருமதி. மதுமிதா மேடம்

கோவை ரசிகர்கள்: திரு. ராமானாதன், திரு.சேஷாதிரி மற்றும் கோவை ரவீ

தொடர்ந்து, ரசிகர்கள் நெடுநாளான கனவான அவருடன் போட்டோ எடுத்துகொள்ளவேண்டும் என்ற கனவு நினைவானது, குறைந்த நேரம் காரணமாக நான்கு, நான்கு பேராக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது அவர் பேசிய நகைச்சுவை பேச்சுக்கள் அபாரம் இங்கு எல்லாவற்றையும் எழுத முடியாது. அந்த அனுபவத்தை அதை நேரில் அனுபவித்து பார்த்தால் தான் புரியும் (குறிப்பு: இதன் வீடியோ ஒளிக்கோப்பு தகவல் பின்னர் குழுவில் தரப்படும் தேவைப்பட்டவர்கள் முன் பதிவு செய்து வாங்கிக்கொள்ளாலாம்).


கோவை சேவா நிலையத்திற்க்கும் குழந்தைகளிடம் பாலுஜி வழங்கும் பொருட்கள்

பின்னர், சாரிட்டி சார்பில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற நற்பணிகளை ஸ்கிரினில் காண்பித்தார்கள். வாசித்தும் காண்பித்தார்கள். இவற்றை ஆங்கில தளத்தில் திரு. தாசரதி சார் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளார். இங்கே சுட்டீ http://spbindia.blogspot.com/2008/02/annual-meet-with-spb-for-year-2007-17th.html
அதை தொடர்ந்து,


பிரபல பாட்கர்கள் திரு. பாலமுரளீ கிருஷ்னா, பாடகி திருமதி. சின்னகுயில் சித்ரா மற்றும் தபேலா இசைக் கலைஞர் திரு. பிரசாத் ஆகியோர் பாலுஜியைப் பற்றி புதிதான அருமையான தகவல்களூடன் நினவு கூர்ந்து பேசியபோது கூடியிருந்த ரசிகர்களை பரவசப்படுத்தியது. எல்லோரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்கள் என்று அவர்களின் முகமே காட்டியது.

அடுத்தது சுவாசரியமான கேள்வி பதில்களுடன்… அதுவரை இந்த பழைய பாடல்..கேளுங்கள்.

படம்: பகடை பண்ணிரண்டு
பாடகர்கள்: பாலுஜி, சுசீலாம்மா
இசை: சக்ரவர்த்தி

Get this widget | Track details | eSnips Social DNA

வரவேண்டும் மஹராஜன்
தரவேண்டும் சுபராகம்
வரவேண்டும் மஹராஜன்
தரவேண்டும் சுபராகம்

இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு

மஹராணி நெஞ்சில் ஊஞ்சலாடு

வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்
வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்

இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு

மஹராஜன் நெஞ்சில் ஊஞ்சலாடு

கையோடு கைசேர்த்து கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்
கையோடு கைசேர்த்து கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்

இதழில் சொல்லும் மந்திரம் ஒன்று
இனிக்க வைத்தது சுவையும் இன்று
கண்ணா எந்தன் கட்டளை கண்டு
கதை படிக்குது காதலுக்கு இன்று
காணாததை கண்டேன் இன்ப கண்ணா

வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்

பூப்போட்ட மஞசங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டேன் நெஞ்சங்கள் கூட
பூப்போட்ட மஞசங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டேன் நெஞ்சங்கள் கூட

இரவு என்பது இன்பங்கள் கொள்ள
உறவு என்பது உடலுக்கு அல்ல
நிலவு என்பது சாட்சியும் சொல்ல
நெருப்பை கொல்லுங்கள் தென்றலை வெல்ல

ராதை போல் நானே கிருஷ்ன தேவா

வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்

இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு

மஹராணி நெஞ்சில் ஊஞ்சலாடு

வரவேண்டும் மஹராஜன்

தரவேண்டும் சுபராகம்..ம்ம்..ம்ம்

Advertisements

612. ஓ ராகினி

February 29, 2008


மருமகன் என்று ஒரு படம். கார்த்திக், மீனா, கவுண்டமணி, செந்தில், ராதாரவி, மனோரமா, நாகேஷ், ஆர்.சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார்கள் – நீங்கள் நினைப்பது தப்பு – சுந்தர்.சி. இயக்கவில்லை! 🙂 மணிவாசகம் இயக்கியிருக்கிறார்.

மாப்பிள்ளை என்று ரஜினி நடித்து வந்த படம் நினைவிருக்கும். அது சரி. மருமகனுக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன வித்தியாசம்? இது என்ன பூ, புஷ்பம் மாதிரியா?

மருமகனில் கார்த்திக் பாம்பேயிலிருந்து பலவிதமான தையல்கலை நுட்பங்களைக் கற்று ஊருக்கு வந்திருக்கும் புதிய தையல்காரர். பெண்களைத் தொடமலே அளவெடுக்கும் அளவிற்கு ‘டெக்னிக்’ கற்றவர். மொத்த ஊர்ப்பெண்களும் வரிசையில் நின்று அளவு கொடுப்பதற்காகக் காத்திருக்க, முன்னாள் எம்பி ராதாரவியின் மகளான மீனாவிடம் கார்த்திக் தொடாமலே அளவெடுத்து கண்கள் சந்தித்ததும் காதல் மலர, கவுண்டமணி வழக்கம்போல செந்திலையும் இன்னும் சிலரையும் உதைத்து சிரிப்பு மூட்ட, நாகேஷை அநியாயாமாக வீணடித்து…. அடப் போங்கப்பா. ஆளை விடுங்க.

மேலே கவுண்டரின் படம் நான் உதை வாங்காமலிருக்கவும், அவரின் அதிர்வேட்டு ஆங்கிலத்திற்காகவும்! (சுவீட் நெம்)

தேவா இசையில் இது ஒரு அழகான சிறிய பாடல். சோகப்பாடல்தான் – ஆனாலும் பாலுவும் ஜானகியும் பாடுவதைக் கேட்டால் தாலாட்டுப் பாடல்போல தென்றலாக ஒலிக்கிறது.

ஓ ராகினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி
மழையில் நனைந்துமே எரிந்தவன் நானடி
நான் வாங்கப்போனது சிறகு
இன்று வாங்கிவந்தது விலங்கு
நியாயமா?

ஓ ராகினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி

அலைவந்து அடித்து பாறைகள் அழுது
பார்த்தவர் யாருமில்லை
நிலைகுலைந்தாலும் மலை விழுந்தாலும்
நீ என்றும் அழுததில்லை
பாரம் என்ன பாரம் நீ சொல்லாமல் எவ்வாறு தீரும்
தூரம் நெடுந்தூரம் நீ கடக்காமல் எவ்வாறு தீரும்
என்ன என்ன உன் சோதனை
சொன்னால் தீரும் என் வேதனை

ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன எந்தன் முன்னே
சுமையை என்னிடம் தந்து போ கண்ணனே
உந்தன் காதல் நாயகி நானே
உந்தன் காதல் தெய்வமும் நானே ராஜனே

ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன எந்தன் முன்னே

OhRagini.mp3

611எங்க வீட்டில் தங்கத்தேரில்:பாலுஜி தரிசனம் 1

February 28, 2008

தெய்வ தரிசனம் : பாலுஜியின் அமர்க்களமான கோவை சந்திப்பு பகுதி :1

பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஞாயிறு அன்று கோவையில் எஸ்.பி.பி ரசிகர்களூக்காக, எஸ்.பி.பாலுஜியின் தரிசனம் அமர்க்களமாக கிடைத்தது. முதலில், என் அலுவலக வேலை பளு காரணமாக இந்த பதிவை தாமதமாக பதிவதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

பாலுஜியுடன் அன்று நான் அனுபவித்த ஸ்வாரசியமான இன்பங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

முதலில், அகில உலக எஸ்.பி.பி ரசிகர்கள் நடத்தும், எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பு சென்ற வருடம் பெங்களூரில் அதிகாரப்பூர்வமாக பாலுஜி அவர்களால் அனுமதி பெற்று துவக்கப்பட்டது. இருந்தாலும், 2004 ஆண்டு முதலே நற்பணிகள் துவக்கப்பட்டு விட்டது. சென்னையில் இரண்டு தடவை சந்திப்பும், ஒரு தடவை ரத்த தாண முகாமும் நடத்தப்பட்டது . சென்ற வருடம் பெங்களூரில் அற்புதமான ரசிகர் சந்திப்பு நடைப்பெற்றது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இனி கோவை வருகையை பற்றி பார்ப்போம்.

1980 ஆம் முதலே கோவையில் பாலுஜிக்கு ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அந்த காலத்தில் பாலுஜி கொடிகட்டி பறந்த நேரம் அற்புதமான பாடல்கள் அதிக பாடியிருந்தாலும், அந்த சமயம் பயணங்கள் முடிவதில்லை, சங்கராபரணம், நினைவெல்லாம் நித்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படத்தின் அழகான பாடல்கள் அகில உலக ரசிகர்களின் உள்ளங்களை ஆக்ரமித்து கொண்டுவிட்டார். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? கோவை பாலுஜி நண்பர்கள் மற்றும் ரசிகர் வட்டம் அன்று முதல் இன்று வரை நல்ல படியாகவே நடந்து வருகிறது.

சென்னை ரசிகர்கள் நிர்வாகிகளாக இருக்கும் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பின் நண்பர்கள் இந்த தடவை கோவையில் வைக்கலாமா என்று என்னிடம் கேட்ட போது சிறிது பயத்துடனனும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுவரை சிறிய சிறிய நன்கொடைகள் தந்தாலும், கோவை ரசிகர்கள் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள்ளே இருந்தது என்பது உண்மை. இதோ அதை செய்து முடிக்க ஓர் அற்புதமான வாய்ப்பு என்று மகிழ்ந்தேன். அதன் படி மிகவும் அற்புதமாகவும் பாலுஜி, ரசிகர் சந்திப்பு நடைப்பெற்றது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சந்திப்பு கோவையில் என்று முடிவு செய்யப்பட்ட முதலில் இருந்தே எனக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு முதலே கோவைக்கு வந்த திரு. சேஷாத்திரி அவர்களும் மற்றும் திரு. வெங்கி அவர்களூம் நிகழ்ச்சி நடைபெறும் இடமும், அனாதை இல்லம் தேர்வு செய்ய வந்து அவர்களின் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி கோவையில் ரயில் நிலையம் எதிரே சந்தில் பல ஹோட்டல்களூக்கு இடையே இருந்த புதிய கிராண்ட் ப்ளாசா என்ற ஓட்டலில் நடைபெறுவது என்றும்,

கோவை கிராண்ட் ப்ளாசா ஹோட்டல்

சிரியன் சர்ச் ரோடில் உள்ள 100 பெண் குழந்தைகளை பராமரித்து வரும் கோவை சேவா நிலையத்திற்க்கும் பொருட்களை வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

கோவை சேவா நிலையம்

எல்லா ஏற்பாடுகளும் முன்னரே முடிவு செய்யப்பட்டபடி எந்த வித தடங்களும் இல்லாமல் நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி நெருங்குவது என் மனதை என்னென்னவோ செய்தது. ஒரு வித பதட்டம். நிகழ்ச்சி எல்லாம் நல்ல விதமாக நடைபெற வேண்டுமோ என்ற பயம் கூட இருந்தது. இந்த பயத்தை அடிக்கடி போக்கியவர் பாலுஜியின் நெடு நாளைய நண்பர் கோவை ரசிகர்கள் நல்ல வழிக்காட்டி திரு. ரமேஷ் சார் என் பயத்தை போக்கி தைரியத்தை வரவழைத்தார். அவர் செய்த உதவி மறக்க முடியாத ஒன்று.

போட்டோவில்: பாலுஜி, நண்பர்கள் திரு.பார்த்தசாரதி, பாலுஜி, திரு.ரமேஷ்,மற்றும் நான்

நிகழ்ச்சி தேதியும் நெருங்கிவிட்டது. முன்னரே நாளிதழில் ரசிகர் சந்திப்பு என்று வெளியிட்டது மிகவும் சுலபாமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால். திட்டமிட்டபடி எல்லாம் நன்றாக அமைந்தது.

Photobucket

நிகழ்ச்சி முதல் நாளே எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. ஏற்பாட்டை கவனிக்க முதல் நாளே சென்னை திரு. சேஷாத்திரி அவர்களூம், பெங்களூர். திரு. ஆர்.ஜி. நாராயணன் அவர்களூம் வருகை தந்தது. எனக்கும் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.


திரு.சேஷாத்திரி, சென்னை, மற்றும் திரு. ஆர்.ஜி.நாரயணன், பெங்களூர்

பாலுஜியின் தரிசனம் தொடரும்…. அதுவரை தங்கத்தேரின் திருவிழாவை கேளுங்கள்…

எங்கவீட்டில் தங்க தேரில் இந்த மாதம் திருவிழா!!! ஆமாம்… ஆமாம்..

எங்களூக்கு (கோவை ரசிகர்களூக்கு) பிப்ரவரி 17ஆம் தேதி இன்று தான் திருவிழா..

படம்: அருனோதயம்
பாடல்: எங்க வீட்டில் தங்கத்தேரில்
நடிகர்கள்: முத்துராமன், லக்‌ஷ்மி
இசை: கே.வி.மஹாதேவன்
பாடாலசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்: பாலுஜி, சுசிலாம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதெல்ல
பெண்னை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஓஹோ ஒஹோ

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

போகச்சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
பேச சொன்னது வாய் பேசும் போது
நானம் வந்து வந்து மூட சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது..
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

அன்னவாஹனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதணம்
தர்மதரிசனம் அதை தலைவன்
மட்டும் காண்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

610. My name is Billa

February 26, 2008

ரஜினி மீது பைத்தியமாக இருந்த வருடங்களில் வந்த படங்களில் ஒன்று பில்லா. பில்லா என்றதும் ரஜினியை முந்திக்கொண்டு நினைவுக்கு வருவது ‘மை நேம் இஸ் பில்லா’ என்ற பாலுவின் கம்பீரமான குரல் என்றால் மிகையில்லை. மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் இன்று வரை அடித்துக்கொள்ள ஆளில்லாத பாட்டு இது.

பில்லா படத்தில் ரஜினி அசத்து அசத்து என்று அசத்தியிருப்பார். காரின் பின் சீட்டில் சரிந்து கண்கள் திறந்திருக்க இறக்கும் ஒரிஜினல் பில்லா பாத்திரமாகட்டும், பாட்டுப்பாடி நளின நடை பயிலும் ரஜினியைப் பிடித்து பாலாஜி நகல் பில்லாவை உருவாக்குவதாகட்டும், ஸ்ரீப்ரியாவுடன் ‘பங்கியடிச்சேண்டி’ என்று அடிக்கும் கூத்தாகட்டும் – ரஜினி தனிக்காட்டு ராஜாவாகக் கலக்கிய படம் பில்லா.

அஜீத்தின் பில்லா 2007 வந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நல்லது. பாடலை ரீமிக்ஸ் செய்தவர்கள் அதோடு பாலுவையே அந்தப் பாடலைப் பாட வைத்திருந்தால் மூலப் பாடலை விட இன்னும் சிறப்பாகப் பாடிக் கலக்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இழப்பு பாலுவுக்கு அல்ல!

மை நேம் இஸ் பில்லா என்ற வரியை இரண்டாம் முறை பாடும் போது சிம்ம கர்ஜனை போன்று கரடு முரடாகப் பாடுகிறார் பாடுங்கள் (முந்தைய பதிவில் கமலுக்காக அப்படிப் பாடியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன்) – இது மாதிரி குரலில் பல எல்லைகளைத் தொட்ட வேறு பாடகர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்லே போகாதே ஊரில்லே ஐயா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்லே போகாதே ஊரில்லே ஐயா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா

பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே மாற்றம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்லே போகாதே ஊரில்லே ஐயா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா

நீரோட்டம் போலெந்தன் ஆசை
தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை
போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்லே போகாதே ஊரில்லே ஐயா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா

609. ஆனந்தம் அது என்னடா

February 26, 2008

‘நான் இரு நிலவுகள் என்ற படத்தை எடுத்தேன். அதில் கமல்ஹாஸனுக்கு இரண்டு வேடங்கள். ஞாபகமறதி மருத்துவராக ஒரு வேடம். இரண்டு மூன்று நாட்கள் படபிடிப்புக்குப் பிறகுதான் கமல் என்னை அந்தப் பாத்திரத்திற்கு உதாரணமாக வைத்துக்கொண்டு என்னைப் போலவே நடையுடை பாவனைகளைப் பின்பற்றி நடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தேன். அதையும் அட்சர சுத்தமாகச் செய்துகொண்டிருந்தார் மனுஷன்!’ – இப்படிச் சொன்னவர் சிங்கீதம் சீனிவாசராவ். கமல்ஹாஸன் என்ற அற்புத விளக்கை வைத்து சில அற்புத படங்களை நமக்குத் தந்த இயக்குநர்.

இரு நிலவுகள் படத்தில் பாலு ஒரு அருமையான பாடலைப் பாடியிருக்கிறார். ‘ஆனந்தம் அது என்னடா? அது காணும் வழி சொல்லடா?’ என்று கேள்வியைக் கேட்கும் பாட்டைக் கேட்பதுதான் ஆனந்தப்படும் வழி! 🙂 ஒரு முறை கேட்டாலே எளிதாக மனதில் ஒட்டும் மெட்டு. ‘நமக்கே படைத்தான் பூமியை’ என்று கரகரவென்று பாலு பாடுவது போல் பாடினால் தொண்டை சுளுக்கிக்கொள்ளம் போல இருக்கிறது. அவர் இது மாதிரி கமல் பாடல்கள் இன்னும் சிலவற்றில் செய்திருக்கும் ஞாபகம். சட்டென நினைவுக்கு வருவது இளமை இதோ பாடலில் நடுவே ரபப்பாப ரபப்பாப ரிபாரபபா என்று இதே பாணியில் பாடியிருப்பது.

நிறைய சேட்டைகளுடன் பாலு பாடியிப்பதைக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஆனந்தம் அது என்னடா ஏ.. ஹே..ஹே..
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

காதல் வித்தை நாள் முழுக்கக் காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தான் போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஒரு கோட்டில் குறியாயிரு
கண்கூட மயங்காதிரு
ஏ.. நீலங்கள் கனிகின்றதே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றம் செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

துணிவோடு தோள் தட்டடா
தடையேதும் கிடையாதடா
நீ உன்னை அறிந்தாயடா
நமக்கே படைத்தான் பூமியை
நமக்கே படைத்தான் பூமியை

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

Get this widget | Track details | eSnips Social DNA

608ஓர் தங்க கொலுசு: வாழ்த்துக்கள் சுந்தர்

February 8, 2008

இரண்டு வருடம் முடிந்து முன்றாம் வருடம் காலில் தங்க கொலுசு கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்கும் “வற்றாயிருப்பு சுந்தர்” அவர்களின் கனவுத் தளமான மை எஸ்பி.பி (பாடும் நிலா பாலு) தளத்தின் கூட்டுப் பங்காளி என்ற பெருமையுடன். சுந்தர் சாருக்கு, என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த தளம் மேன் மேலும் பல பாடல்களை அள்ளி வழங்க இறைவன் அருள் புரியட்டும். — கோவை ரவீ

இதோ இணையத்தில் இந்த பாடலின் படத்தகவல்கள் தேடித் தேடி தேய்ந்து போனது தான் மிச்சம். ஓர் தங்ககொலுசு அழகான மெலோடி பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். கேட்டுக்கொண்டே தகவல்கள் தாருங்கள்.

படம்: தங்க கொலுசு

Get this widget | Track details | eSnips Social DNA

ஓர் தங்க கொலுசு
நான் தந்த பரிசு
வேறு என்ன வேண்டும் கண்மணி

ஓ நந்தலாலா
நீ வந்ததாலா
பூவாக பூத்தாள் பைங்கிளி

இருவரல்ல இனி நாம் ஒருவரடி

இறுதிவரை இனி நான் உனது வழி

ஓர் தங்க கொலுசு
நான் தந்த பரிசு
வேறு என்ன வேண்டும் கண்மணி

எந்நாளும் நீயும் நானும்
நீரில் தோன்றும் தேவை போல
ஏகாந்தம் ராகம் பாடும்
யோகம் இந்த ஜென்மத்திலே

ஏன் இன்று நம்மை கேட்க
எட்டிப்பார்க்க யாரும் இல்லை
எல்லைகள் ஏது நீந்தும் போது
இன்ப வெள்ளத்திலே

மெல்லத்தான் இந்த இளமையின் பயிற்றிட
இலக்கியம் முழுவதும் சொல்லித்தான்

சொல்லத்தான் சின்ன இதழ்களில்
வழிந்திடும் பழரசம் முழுவதும் அள்ளித்தான்

நாலுவகை ஓடம் நின்றது

நாளும் வர நீந்தி நின்றது

ஓ நந்தலாலா
நீ வந்ததாலா
பூவாக பூத்தாள் பைங்கிளி

நூறாண்டு நீரும் இன்றி,
சோரும் இன்றி வாழ்வேன் கண்னே
நீயின்றி வாழ ஏக்கம் சூழ
நெஞ்சம் தாங்கிடுமா

நான் இங்கு வாங்கும் மூச்சும்,
பேசும் பேச்சும் நீதான் கண்ணா
நீ என்றும் வாடும் நீரில் ஆடும்
கண்கள் தூங்கிடுமா

அம்மம்மா ஆஆஆஆ
இந்த இதயத்தின் கதவுகள்
உனக்கென்ன திறந்தது கண்ணம்மா

எங்கேயோ ஓஓஓஓ
உந்தன் திருவடி நடந்திடும்
இவள் மனம் தொடர்ந்திடும் அங்கெல்லாம்

நானும் உந்தன் பாதி அல்லவா

நாடறிந்த சேதி அல்லவா

ஓர் தங்க கொலுசு
நான் தந்த பரிசு
வேறு என்ன வேண்டும் கண்மணி

ஓ நந்தலாலா
நீ வந்ததாலா
பூவாக பூத்தாள் பைங்கிளி

இருவரல்ல இனி நாம் ஒருவரடி

இறுதிவரை இனி நான் உனது வழி

ஓர் தங்க கொலுசு
நான் தந்த பரிசு
வேறு என்ன வேண்டும் கண்மணி

607கோவையில் டாக்டர் எஸ்.பி.பாலு

February 6, 2008


Photobucket

செய்தியை வெளியிட்டு ஆதரவு தந்த தினகரன் மற்றும் தினமலர் நாளிதழுக்கு எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவையில் எஸ்.பி.பியுடன் ஒரு நாள்

Get this widget | Share | Track details

இந்த பாடலை ஏற்கெனவே நமது தளத்தில் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் இந்த அழைப்பிதழ்க்காக மறுமுறை கேளுங்கள்.

3ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் பாடும் நிலா பாலு தளத்தின் இந்த அற்புத நாளைல். அன்பு எஸ்.பி.பி ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி,

வருகின்ற 17.02.2008 ஞாயிறு அன்று கோவைக்கு நமது ஜம்போ டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் அவரின் அபிமான ரசிகர்களுடன் கலந்து உரையாட வருகை தருகிறார். இந்த சந்திப்பில் உலகம் முழுதும் உள்ள அவரின் அபிமான ரசிகர்கள் சென்னையில் நடத்தி வரும் எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் அனாதை குழந்தைகள் இல்லத்திற்க்கு தேவையான பொருட்கள் சிலவற்றை இலவசமாக வழங்க உள்ளார். ஆகையால் அவரது உள்ளத்தில் வீற்றிருக்கும் அன்பு ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு, கோவை எஸ்.பி.பி நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் குழு சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட மொபைல் எண்களூக்கு தொடர்பு கொள்ளவும்.

திரு. அசோக், சென்னை : 98408 884410, திரு. ஷேஷாத்ரி, சென்னை: 98849 24987 மற்றும் கோவை ரவி: 94435 66558