Archive for April, 2008

643நெஞ்சம் பாடும்புதிய ராகம்

April 28, 2008

அவசரப்படாதீங்க சுந்தர் சார், இந்த பாடல் ஏற்கெனவே 27ஆம்தேதி ஏழாம் மாதம் 2006ல் பதிந்திருக்கிறோம். எதுக்கு மறுபடியும் என்று நினைக்காதீர்கள். தல பாட்ட எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத இனிப்பு அதுவும் இந்த மாதிரி டிஸ்கோ பாடல்கள் என்றால் அப்படியே சாப்ட்டுண்டே இருக்கலாம். சரி விஷயத்துக்கு வருகிறேன். நேற்று ஒரு வேளையாக சென்னை சென்றிருந்தேன் என் தோழர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அந்த சூட்டோட கோவைக்கு வந்து சென்னை தோழர்களூக்காக இந்த பாடலை ரவிவர்மா அவர்களை கேட்டு தொந்தரவு செய்யலாமே என்று அதிகாலை குறுஞ்செய்தி அனுப்பினேன். தீவிர பாலுஜி ரசிகரான திரு. ரவிவர்மா சார் எப்போது நான் செய்தி அனுப்பினாலும் உடனே முதல் நேயராக சூரியன் எப்.எம்ல் ஒலிப்பரப்புவார். இந்த தடவையும் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் இஷ்டமான ஓர் பாட்டை போட்டார் பாருங்கள். (சுந்தர் சார் இந்த பாட்டை உங்க கிட்ட கேட்டு எத்தனை தடவை போராடியிருப்பேன் நினைவிருக்கிறதா?) அசந்துட்டேன். யம்மா எத்தனை நாள் ஆயிடுச்சு இந்த பாடல் கேட்டு. இந்த பாடலை திரு.ரவிவர்மா அவர்களின் விளக்கம் சூப்பர்ப் போங்க. இந்த பாடலை எப்போது நான் கேட்டாலும் என் மனதில் தோன்றுவதை குஷ்பு இட்லி மாதிரி புட்டு புட்டு வைத்து என்னை மகிழ்ச்சிகடலில் மூழ்கடித்துவிட்டார். இந்த தடவை சென்னை நண்பர்களூக்காக அவர்களீன் விருப்பமாக கேட்டேன். அவர் பாலுஜி மீதும், அவரின் ரசிகர்களீன் மீதும் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பை பார்த்து அசந்துபோனேன். அவருக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இதோ பாடலுடன் வரும் அவரின் அபாரமான ரசிப்பு கேளுங்கள் இந்த ஒலிக்கோப்பு சுமாராக இருக்கும். பாடல் கேட்கவில்லை யென்றால். ஏற்கெனவே சுந்தர் சார் பதிந்த பழைய இதே பாடலை கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். திரு.ரவிவர்மா சாருக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.

படம்:நெஞ்சில் ஒரு ராகம்
நடிகர்கள்: தியாகராஜன், சரிதா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஜானகியம்மா
இசை: விஜய் டி ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA

சுந்தர் சாரின் பழைய பதிவு அதையும் ஒரு தடவை கேட்டுடுங்களேன்.

http://myspb.blogspot.com/2006/07/tr-bala-5.html

லலலலலல தரரரராராரா
ரபபபா ரபரபபபபபபபப பா

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

நீ எய்த பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

உன் குரல் கேட்கவே
குயில் கூட்டங்கள்
தலை நிமிர்ந்தன
தனை மறந்தன

எந்தன் வானத்தில் தொழுகின்ற மின்னல்
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே
எந்தன் வானத்தில் விழுகின்ற வார்த்தை
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே

மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை
மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எந்தன் பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ
ஏஏஏஏஏஏஏஏஏ ஏஹே
ஓஓஓஓஓஓஓ ஆஹா

லலலலா ரபபபபபபபபப
லலலலா ரபபபபபபபபப
பபபபபபப தாராதாரதாரதா

Advertisements

642 சங்கீத சாம்ராஜ்யம்: ரவிவர்மாவின் ரசிப்பு

April 22, 2008

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று (20.04.2008) கோவையில் ஓர் பிரமாண்டமான “சங்கீத சாம்ராஜ்யம்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை
மாமன்னர்கள் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.ராமமூர்த்தி அவர்களுடன் டாக்டர். எஸ்.பி.பி, பத்மபூஷன் பி.சுசில்லாம்மா, திருமதி.எஸ்.பி.ஷைலஜா மற்றும் இசைகுழுவினருடன்
பாடி கோவையை அமர்க்களப்படுத்திவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் முழு விமர்சனத்தையும் தமிழ்மண பதிவாளர் எங்கள் அன்புக்குரிய, அணைத்து பதிவாளர்களின் அன்புக்கும் பாசத்திற்க்கும் உரிய செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுகிற வாத்தியார் சென்ற வார நட்சத்திர வார பதிவாளர் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் எழுதிய இசை நிகழ்ச்சியின் பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது அதை எல்லோரும் தங்களூடைய விலைமதிப்பற்ற
நேரத்தை ஒதுக்கி வாசித்து மகிழ்ந்துருப்பீர்கள். அவரைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை அவரை பற்றி அவரின் அற்புதமான பதிவுகளே சொல்லிவிடும். இதோ அந்த பதிவின் சுட்டி கீழே இதுவரை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த ஒலிக்கோப்பை கேட்டால் தாங்கள் நேரில் கலந்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்படும்.

http://devakottai.blogspot.com/2008/04/blog-post_21.html

வாத்தியார் அவர்களிடம் ஏற்கெனவே மறுமொழியில் சொன்னபடி, என் பங்க்குக்கு இதோ
பாடும் நிலா பாலுவில் நிகழ்ச்சியில் நான் எம்.பி.3 ப்ளேயரில் பதிவு செய்யப்பட்ட ஒலிக்கோப்பை தங்களூக்காக வழங்குகிறேன். இந்த ஒலிக்கோப்புகளை கேட்கும் முன் என் தாழ்மையான வேண்டுகோள் கோப்பில் சில இடங்களில் தேவையில்லாத பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கும் அதை தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் அமர்ந்திருந்த இடத்திற்க்கும் நிகழ்ச்சியின் மேடை இருந்த இடத்திற்க்கு இடைவெளி கிட்டத்தட்ட 60 அடியிலிருந்து 80 அடிக்குள் இருக்கும். அப்படியென்றால் ஒலிபெருக்கி எவ்வளவு துள்ளியமாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒலிப்பெருக்கியை
பற்றி சிறிது கூட தவறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவிற்க்கு மிகவும் துள்ளியமாக இருந்தது. தயவு செய்து பொறுமையுடன் கேட்டு மகிழுங்கள் நல்ல கோப்பு கிடைத்தவுடன் பிறகு இதை எடுத்து விட்டு நல்ல ஒலிக்கோபை பதிவில் ஏற்றுகிறேன். இருந்தாலும் கோப்பு திருப்திகரமாக வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் நல்ல கோப்பு வந்தவுடன் போடலாமே? என்று நிறைய பேர் கேட்பது என் காதில் விழுகிறது. தங்களூக்கு சுடச்சுட வழங்க வேண்டும் என்ற ஓர் ஆர்வம், ஆர்வம் தான் ஐயா..

இரண்டு ஒலிக்கோப்புகளை கேட்கும் முன்…. ஓர் முக்கியமான விஷயம் என்னவென்றால்…

இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் கோவை பாலுஜி ரசிகர்கள் குழு சார்பாக 20 பேர் கலந்துகொண்டோம்.
அதில் ரசிகர் குழுவில் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து உற்சாகம் கொடுத்து வரும் முக்கிய நபர்களை நான் சொல்லியே ஆகவேண்டும். திரு.என்.ராமனாதன் அவர்கள் எப்போது நான் சென்று சந்தித்தாலும் உடனே எனக்கு 3 டிக்கெட்டுக்கள் வேண்டும் என்று முதலிலே ஆஜர் ஆகிவிடுவார். அவர் பாலுஜியின்மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பைக்கண்டு பலதடவை வியந்துருக்கிறேன். அதே போல் எனக்கு சமீபத்தில் பழக்கமானவர் திரு. ஆனந்த் அவர்கள் அவரும் எப்போது நான் போனில் பேசினாலும் நேரம் ஒதுக்கி பேசி தன் காரில் வந்து கலந்து கொண்டு எனக்கு ஆதரவு தருவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கோவையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பிற்க்கு அபராமான அவரின் ஆதரவு பாராட்ட வார்த்தைகளே இல்லை. இருவருக்கும், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் அனவருக்கும் என் நன்றி. இந்த என் நன்றியை என் வாயால் சொன்னால் போதாது.

இதோ…. முதலில் வரும் கோப்பில் சூரியன் எப்.எம்ல் ஆர்.ஜே வாக இரவு நேரங்களில் பணியாற்றி வரும் திரு. ரவிவர்மாவின் குரலில் “சங்கீத சாம்ராஜ்யத்தின்” நிகழ்ச்சியைப் பற்றி அவரின் அழகான சிறிய ஒலிப்பரப்பு விமர்சனம் (கனாகாணும் கண்கள் மெல்ல பாடலுடன்) என்னை மகிழ்ச்சியின் கடலின் ஆழத்திற்க்கே கொண்டு சென்றது. என் மகிழ்ச்சியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள் எல்லோருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த பதிவை நான் பதிவு செய்த நேரம் அதிகாலை 5.00 மணி. இந்த இனிய தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அணைத்துப்பாடல்களும் பதிவு செய்ய முடியவில்லை என்னால் முடிந்த அளவு பதிவு செய்து தந்துருக்கிறேன். கேளூங்கள் கேளூங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்.

தற்போது ஆஸ்திரேலியா பயணத்தில் இருக்கும் பாலுஜி அவர்களூக்கு பயணம் வெற்றிகரமாக நடைபெற அவரின் அன்பான ரசிகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

— கோவை ரவீ

திரு. ரவிவர்மாவின் ரசிப்பு (கனாகாணும் கண்கள் மெல்ல பாடலுடன்) ஒலிக்கோப்பு

Get this widget Track details eSnips Social DNA

நிகழ்ச்சியின் முதல் பகுதி

Get this widget Track details eSnips Social DNA

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி

Get this widget Track details eSnips Social DNA

641ராக்கால வேளையிலே:ரவிவர்மா ரசிப்பு

April 21, 2008

பாலுஜீ ரசிகர்களூக்காக ராக்கால வேளையிலே ரவி வர்மாவின் (சூரியன் எப்.எம். ஆர்.ஜே) பார்வையில்.

இன்று அதிகாலை வழக்கம் போல் நான் வாக்கிங் செல்லும் போது எப்.எம் ரேடியோ
கேட்க்கும் போது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை எஸ்.எம்.எஸ் செய்தேன்.
பாலுஜி பாடும் விதத்தைப் பற்றியும் அவரின் உச்சரிப்பு, சிரிப்புகள் பற்றி பல பாடல்களில்
ரசித்து எழுதியுள்ளேன். நீங்களும் வேறு வழியில்லாமல் படித்து மகிழ்ந்து இருக்கிறீர்கள்.
வித்தியாசத்திற்காக இதோ சூரியன் எப்.எம் ஆர்.ஜே திரு.ரவிவர்மா அவர்கள் ஒரு தீவிர
பாலுஜி ரசிகர். இவரைப்பற்றி ஏற்கெனவே பல பதிவுகளில் விளக்கி எழுதியிருக்கிறேன்.
திரு.ரவிவர்மா அவர்கள் பாலுஜியின் குரலை எப்படி அனுபவிச்சு ரசிச்சிருக்கிறார் அவர் குரலிலே கேளுங்கள்.

இதோ அவரின் இனிய குரலில் பாலுஜியைப்பற்றி.. கேட்பதற்க்கு முன் இந்த பதிவை திரு.ரவிவர்மாவுடன், சேர்ந்து நானும் சென்னை எஸ்.பி.பி ரசிகர் சாரிட்டி பவுண்டேசன் நிர்வாகிகள் திரு. கிரிதர் ராஜா அவர்களூக்கும், பொருளாளர்: திரு. அசோக் அவர்களூக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

மேலே திரு. ரவிவர்மா அவர்களின் பார்வையில் “ராக்கால வேளையிலே” பாடல் சரியாக பதிவாகவில்லை ஆகையால் அந்த பாடலின் ஒலிக்கோப்பு இதோ கீழே…

கேட்பதற்க்கு முன் பாடல் ஒரு வித டைப்பாக இருக்கும் ஜானகியம்மாவும், பாலுஜியும் கொடுக்கும் ஹம்மிங்ஸ் இருக்கே அடேங்கப்பா…. தாங்காதப்பா.. பாட்ட கேட்டு தீட்டாதீங்கப்பா ரவிவர்மா சொன்னபடி சிரிப்பையும், இனிமையை மட்டும் ரசிங்கப்பா…

படம்: மைதிலி என்னை காதலி
பாடியவர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
இசை: டி.ஆர். ராஜேந்திரர்

ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில

இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது….அஹ்
இதம் தேடி போராடுது

ராக்கால வேளையிலே என்
ராசாத்தி ஆடையிலே
என் மேனி சூடாகுது
எத தேடி போறாடுது
ஏய்..ஏய்..ஏய்..ஏய்ய்…..ஏய்.ஏய்.ஏய்
ஆ..அட..ஓ..அட..ம்ம்..அட..ஏ…..ஹோ. ஹோ. ஹோ. ஹோ

தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இஙு அழைக்குது அம்மாடியோ…ஹா..ஆ
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோ.வ்வ்..

ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில

ஹே…தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ..ஆ..ஆஅ
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோ வ்வ்

அடி ராக்கால வேளையிலே
என் ராசாத்தி நீ ஆடையிலே
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது

ராக்கால வேளையிலே
என் ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது
ஹ எத தேடி போராடுது

640கண்களூம் தூங்காதே

April 19, 2008
நடிகர் சரத்குமார் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் வைதீஸ்வரன் இந்த படத்தில் இந்த பாடலை திரு.விஜய்யேசுதாஸ் அவர்களும் நன்றாக பாடியுள்ளார். பாலுஜி தனக்கே உரிய ஸ்டைலில் தன் சோகத்தை கொட்டி நம் மனதை நிரப்பியிருக்கிறார். சென்ற பதிவுபோல் இல்லாமல் இந்த பாடலையும் திரு. சாத்தூர் சங்கர் (நல்லா பேரப்பா) அவர்கள் சில மாதங்களூக்கு முன் எனக்கு மின்னஞ்சல் செய்து பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். இதோ அவருக்காக பாலுஜி அவர்கள் சமர்ப்பணம் செய்துள்ளார். உங்களூக்கும் தான் கேட்டு சோகமாக இருங்கள் இல்லை இல்லை சந்தோசமாக இருங்கள்.

படம்: வைதீஸ்வரன்
நடிகர்: சரத்குமார்
பாடியவர்: எஸ்.பி.பி

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ

கண்களூம் தூங்காதே
தென்றலும் வீசாதே
நெஞ்சமே உன்னை விட்டு
எங்கும் போகாதே
விண்ணுக்கு சென்றவனே
திரும்பவும் வருவாயோ
உலகமே உன்னை வந்து
வாழ்த்தி பாடாதோ
உன் முகம் பாராமல்
உன்னிடம் சேராமல்
எந்தன் உயிர் எங்கும் போகாதே போகாதே

கண்களூம் தூங்காதே
தென்றலும் வீசாதே
நெஞ்சமும் உன்னை விட்டு
எங்கும் போகாதே

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ

எத்தனை ஜென்மம்
எத்தனை பாவம்
யாரறிவாரோ மனமே நீ கூறு
பிறந்தவன் மூச்சும்
இறந்தவன் மூச்சும்
இருப்பது எங்கே இறைவா நீ கூறு
கண்மணி பொண்மணி ஆராரிரோ
கண்விழி பூவிழி தாலேலோ
கண்மணி பொண்மணி ஆராரிரோ
கண்விழி பூவிழி தாலேலோ

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ

காலத்தின் தீர்ப்பு மானிடன் கணக்கு
ஹுஹ என்று முடியும் விதியே நீ கூறு
ஜெயித்தவர் பாதி தோற்றவர் பாதி
மானிட வாழ்வே புரியாத ஜோடி

கண்மணி பொண்மணி ஆராரிரோ
கண்விழி பூவிழி தாலேலோ
கண்மணி பொண்மணி ஆராரிரோ
கண்விழி பூவிழி தாலேலோ

கண்களூம் தூங்காதே
தென்றலும் வீசாதே
நெஞ்சமே உன்னை விட்டு
எங்கும் போகாதே
விண்ணுக்கு சென்றவனே
திரும்பவும் வருவாயா
உலகமே உன்னை வந்து
வாழ்த்தி பாடாதோ
உன் முகம் பாராமல்
உன்னிடம் சேராமல்
எந்தன் உயிர் எங்கும் போகாதே.. போகாதே

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ

639நானூறு பூக்கள்

April 17, 2008

சில வருடங்களூக்கு முன் சென்னை திரு. முரளிதரன் அவர்கள் என்னிடம் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது. பதிவிற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றுள்ள திரு. முரளிதரன் அவர்களூக்கு திரையுலக ஜாம்பவான்கள் வாலி, பாலுஜி,சங்கர் கனேஷ் ஆகியோரின் சமர்ப்பணம். (குறிப்பு: ஒரு பண்பலை ரேடியோவில் கேட்ட தகவல். ரொம்ப நாட்களாக யோசனை செய்ததால் தங்களூக்கும் தெரிவிக்கிறேன். சமர்ப்பணம், டெடிக்கேஷன் என்பது நாம் இயற்றிய அல்லது நாம் உருவாக்கியவற்றை தான் சமர்ப்பணம், டெடிக்கேஷன் என்று சொல்லவேண்டுமாம், எழுத வேண்டுமாம் ஹி ஹி அதனால் தான் மேலே உள்ளபடி எழுதினேன்) ரொம்பசரிதானுங்களே சார் திறமையான படைப்பாளிகள் எழுதுகிறார்கள் நமக்கு தருகிறார்கள். நடுவில் நாம் புகுந்து மற்றவர்களூக்கு சமர்ப்பணம் செய்கிறோம் என்றால் இது எந்த வகையில் சரி உண்மை தானே சார்?. சரி சரி பாடலை கேட்போம்.

படம்: உறவுகள் என்றும் வாழ்க
பாடகர் பாலுஜி
பாடலாசிரியர்: வாலி
இசை: சங்கர் கனேஷ்

பபிபபப பபிபப
நானூறுப் பூக்க‌ள்
மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை
வர வேண்டும் இங்கே
சிங்கார‌ வீணை சிரிக்கின்ற‌ கோல‌ம்
ச‌ங்கீத‌ம் போலே சுக‌மான‌ தேகம்
நானூறுப் பூக்கள்..

இடை மின்ன‌ல் கோடு
ந‌டை அன்ன‌ப் பேடு
இடை மின்ன‌ல் கோடு
ந‌டை அன்ன‌ப் பேடு
கிளி கொஞ்சும் கூடு
நெஞ்சில் ஏதோ செய்கின்றாள்
மணித் தென்ற‌ல் ஆடக் கூடாதோ
என் ம‌ன‌ம் என்னும் மேடை போதாதோ
நானூறுப் பூக்கள்.

ப‌ழ‌ச்சாறு கிண்ண‌ம்
ப‌ளிச்சென்று மின்னும்
ப‌னிக்கால‌ மேக‌ம் என்னை பார்க்க‌க் கூடாதோ
ம‌ல‌ர்ப‌ட்டுப் பாத‌ம் நோகாதோ
என் ம‌டி தொட்டு சாய‌க் கூடாதோ
நானூறுப் பூக்கள்..

ம‌து சிந்தும் க‌ண்க‌ள்
ஒளி சிந்தும் திங்க‌ள்
ம‌து சிந்தும் க‌ண்க‌ள்
ஒளி சிந்தும் திங்க‌ள்
இவ‌ள் போல‌ பெண்க‌ள் இங்கே கோடியில் ஒன்ற‌ல்லோ
மண‌க்கோயில் கொள்ள‌க் கூடாதோ
ஒர் புதுப்பாட‌ம் சொல்ல‌க் கூடாதோ

நானூறுப் பூக்க‌ள்
மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை
வர வேண்டும் இங்கே
சிங்கார‌ வீணை சிரிக்கின்ற‌ கோல‌ம்
ச‌ங்கீத‌ம் போலே சுக‌மான‌ தேகம் !

638தேவை இந்த பாவை

April 15, 2008

இந்த பாட்டிற்க்கு கமலின் தசாவதாரம் படங்க்ளை போட்டுள்ளானே என்று நினைக்காதீர் ஐயா. கமல் சார் மேக்கப்பில் பட்டையை கிளப்புகிறார் என்றால். பாலுஜி குரலிலே இந்தப்பாட்டில் பட்டையை கிளப்புகிறார் அதான் இந்த படங்கள். இந்த பாடலின் சிறப்பே பாலுஜி பாடல் வரிகளின் நடுவில் கபடி ஆடும் அந்த சில்மிஷங்கள் தான் அடெங்காப்பா அவர் பாடும் ஸ்பீடுக்கு என் விரல்கள் தட்டச்சு செய்ய முடியாமல் தட்டச்சு கீகளூக்க்கிடையே விரல்கள் சிக்கிக்கொண்டது தான் மிச்சம். அதுதான் விட்டுடேன் சார். சுத்தம், (டெல்லி பாலா இல்லைன்னா தப்பில்லாம அடிச்சிட்டாலும் என்று நீங்க புலம்பறது கேட்குது சார்). எத்தனை தடவை கேட்டாலும் தித்திக்காத இந்த பாடல் நிச்சயம் நீங்கள் கேட்டால் மெய் மறந்துபோவீர்கள்.

குறிப்பு: சுந்தர் சார் இது உங்க்ள் பதிவு நீண்ட நாட்களாக உங்களூக்காக தான் காத்திருந்தேன் முடியவில்லை பதிந்துட்டேன். மறுமொழியிலாவது வாங்க சார்.

பாலுஜி ரசிகர்கள் அனவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்: அந்த ஒரு நிமிடம்
பாடியவர்கள்: பாலுஜி
இசை: இளையராஜா

தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
நான் தானே தினம் சாய்ந்தாடும் தேர் போல வருவேன்
தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்

அழகே புது மலரே அடியேன் இளம் கிளியே
இதழோ மது ரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் என்னை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க ஹஆஆ
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே…
இங்கு வேடன்.. நானே.. கன்னி வைக்கும்
நாள் தானே இனி பாடங்கள் சூடாகும் பொழுது

சரியா இது முறையா தனிமை சுகம் தருமா
இதழால் உன்னை தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
குடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரித்தாய் ஒரு கனமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க..

மானே… இங்கு வேடன்..
நானே… கன்னி வைக்கும்
நாள் தானே இனி பாடங்கள்
சூடாகும் பொழுது

மானே…

637ஒரு புஷ்பம் மலர்ந்தது

April 10, 2008

கோவையில் சங்கீத சாம்ராஜியம்

கோவையில் குழந்தைகளின் இருதய சிகிச்சை நிகழ்ச்சிக்காக, கோவை ஹெல்ப் லைன் ஆர்ட்ஸ் அகாடமி வழங்கும் மெல்லிசை மன்னர்கள் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் திரு. ராமமூர்த்தி அவர்களின் மாபெரும் ”சங்கீத சாம்ராஜ்யம்” இசை நிகழ்ச்சி வருகின்ற 20.04.2008 ஞாயிற்று கிழமை அன்று மாலை 6.01 மணிக்கு, கோவை அழகேசன் ரோட்டில் உள்ள டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நமது அபிமானத்திற்க்கு சொந்தக்காரரான டாக்டர். எஸ்.பி.பாலுஜி, வெள்ளைக்க்குயில் பத்மபூஷன் பி.சுசீலாம்மா, திருமதி. எஸ்.பி.சைலஜா மற்றும் குழுவினருடன் பிரமாண்டமான இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சந்தேகமே வேண்டாம் நிச்சயம் எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடிய பழைய பாடல்கள் அதிகம் இடம் பெறவுள்ளது. தவறாது கலந்து கொண்டு குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாமும் கலந்து கொண்டு மகிழ்வோம்.

இசை நிகழ்ச்சிக்கு வரப்பிரியபடும் அன்பர்கள் என் மின்னஞ்சலுக்கு தங்களின் விருப்பத்தை எழுதலாம். என் மின்னஞ்சல்: rraveendran_citcivil@yahoo.com

அன்புடன் கோவை ரவீ.

பாலுஜி, சுசீலாம்மா பாடிய இந்த பாடல் சங்கர் கனேஷ் அவர்களீன் இசையில் வரும் பாடல் ஓர் பழைய பாடல் தான். எப்பவோ கேட்டது. நீங்களும் இப்போது கேளூங்கள்.

படம்: பருவம் ஒரு பாடம்
பாடியவர்கள்: பாலுஜி, சுசிலாம்மா
இசை: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு புஷ்பம் மலர்ந்தது
அதன் இஷ்டம் புரிந்தது
நான் கை கொண்டு பறித்தால்
மை கொண்ட கண்கள் ஏன் தான் சிவந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது
நீ கைகொண்ட பறிக்க மெய் கொஞ்சம் சிரிக்க
நாணம் பிறந்தது
ஒரு புஷ்பம் மலர்ந்தது

அந்தி மாலையில் அழைக்கும் கடல் அளக்கும் உன் சிரிப்பு

அந்த நிலையில் இருக்கும் கலை விளக்கம் உன் அணைப்பு

காதல் சாகரம் கரை புரள

கன்னித் தாமரை மடல் விரிய

நான் நீராட நினைத்து போராடி இருக்கு

காலம் கனிந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது

மோகமந்திரம் பயிலும் என்பருவம் உன் வசத்தில்

ஆஆஆஆ மூன்று வேலையும் உருகும் என் உள்ளம் உன்னிடத்தில்

வண்ண மாதுளம் வாய் திறக்க

வண்டுப்போல நான் வந்திருக்க

நீ கொண்டாடும் பொழுது உண்டாகும் சுகத்தில்

போதை பிறந்ததோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது

அதன் இஷ்டம் புரிந்தது

லலலல லலல்ல்லா லல லல்லா

கட்டு பூவுடல் கனிய கை அணைய நான் தவிக்க

கெட்டி மேளங்கள் முழ்ங்க என்னை வழங்க நான் இருக்க

இன்ப வேதனை இருவருக்கும்

தோளில் மாலைகள் வரும் வரைக்கும்

நான் அந்நளை நினைத்து அச்சாரம் கொடுத்தால்

ஆசை அடங்குமோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது

636ராசிதான் கை ராசிதான்

April 9, 2008

கேட்க கேட்க திகட்டாத ஓர் பாடல் தான் இந்த பாடல் என் ஆசை மச்சான் என்ற படத்தில் தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் பாலுஜி, சின்னக்குயில் சித்ரா இருவரும் பாடிய மெலோடி பாடல். இந்த பாடலின் ரிதம்ஸ் மனதுக்கு ரொம்ப இதமாக ஒத்தடம் கொடுத்தார் போல் இருக்கும். கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: என் ஆசை மச்சான்
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா
இசை: தேவா

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நினப்புல மிதப்புல
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளூம் நீ ஆசை வச்சானே
உன் கூட தான் நான் இருந்தேன்
ஒரு துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தனே
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ஊர்சனம் பார்க்கும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாத பூமியின் மீது
எனக்கு ஒரு குடையேது

கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேர மறந்து உன்பேரத்தானே
எப்போதும் நினைச்சேனே

பனிப்பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
காவல் மனந்தானே

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது இசப்பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதக்கேட்டு

ஒன்னாக கலந்து சந்தோச உறவு எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது

பட்டு பாய போட்டுது பன்னீர் தூவுது தூக்கம் நமக்காக

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ஆத்தாடி ..

உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவன்தான் தெரியாதா

பூச்சூடி ..

உன் நினப்புல மிதப்புல
இருப்பவ இவன் தான் புரியாதா

எந்நாளூம் நீ ஆசை வச்சானே

ம்ம்ம்ம்ம்ம்

உன் கூட தான் நான் இருந்தேன்
ஒரு துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தனே

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

635இரு மாங்கனி போல்..

April 6, 2008

வைரம் என்ற படத்தில் பாலுஜி ஜெயலலிதா பாடிய அழகான பழைய பாடல் இது. பலநாட்களாக கேட்டு ஓய்ந்து போன எனது நண்பர் டெல்லி பாலா விருப்பப் பாடலாகும். கண்ணதாசனின் வரிகளில் பாடல் மிகவும் அழகாக இருக்கும். நிறைய தடவை கேட்டிருப்பீர்கள் மறுமுறை கேட்டுடுங்களேன்.

படம் வைரம்
பாடியவர்கள்: பாலுஜி ஜெயலலிதா
இசை: டி.ஆர்.பாப்பா
பாடலாசிரியர்: கண்ணதாசன்

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்

பாடுது ராகம்

கண்மணி ராஜா பொங்குது நாளும்
பார்த்தது போதும்

ஒ ஒ காளைக்கு யோகம்
மங்கள் மேளம் குங்குமக்கோலம்
மணவறை மகிமை

ஹஹ அதுவரை பொருமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஏங்குது மோகம்
திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்

அதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்
சிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்

இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா

ஓஓ அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே

அதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்

கடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்

இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

மாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா

ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்

பாடுது ராகம்

ஹொ ஹொ ஏங்குது மோகம்

ஹா ஹா பாடுது ராகம்

லா லா ஏங்குது மோகம்

ம்ம் ம்ம் பாடுது ராகம்

634இனிய தென்றலே…

April 2, 2008

சந்திரசேகர் டைரக்ட் செய்த படம் அம்மா பிள்ளை இந்த படத்தில் பாலுஜி பாடிய ஓர் அருமையான மெலோடி பாடல் என மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்:அம்மா பிள்ளை
இசை: சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்: வாலி
பாடகர்: பாலுஜி

Get this widget | Track details | eSnips Social DNA

இனிய தென்றலே…
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா…
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

கடையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போல தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத நாட்டியம்
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்
கன்வில் அவை நாளூம்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்கிறாய்

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

கருமையான கூந்தல் நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்று சொல்வது

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ