Archive for May, 2008

653மஸ்து மஸ்து.எப்.எம்ல்

May 27, 2008

நகைச்சுவை நடிகர் திரு। சுருளிராஜன், திரு.தேங்காய் சீனிவாசன், ஆகியோர் குரலில் பாலுஜி தன் குரலை மாற்றி பலபாடல்கள் பாடியுள்ளார். சமீபத்தில் கூட நான் திரு. ராதாரவி சார் குரலில் பாடிய அப்பன் பேச்சை கேட்டவன் யாரு என்ற பாடலை வழங்கினே இதோ அதன் சுட்டி இங்கே…
http://myspb.blogspot.com/2008/03/blog-post_27.html

இதெல்லாம் தெரிந்த கதைதானே எதுக்கு இந்த பில்டப் என்கிறீர்களா?. இந்த பதிவின் பாடலில் பாலுஜி அவர்கள் திரு.விஜயகாந்த் அவர்களின் குரலில் பேசி அவர் போலயே பாடியிருப்பார். என்ன அசத்தப்போவது யாரு? மற்றும் கலக்கப்போவது யாரு? தொலைக்காட்சியில் கேப்டன் அவர்களைப்போல் பேசி பேசி பிய்ச்சி எடுக்கிறாங்களே அவங்க அடிக்கடி சொல்றது போல “ம்ஹ்” “யேய்” என்று நாக்கை கடிச்சி முக்கி பேசி நம்ம ப்ராணனை வாங்கறாங்களே அத மட்டும் பாலுஜி உபயோக்கிமால் கேப்டன் விஜயகாந்த் பாடுவது போல் பாடி கலக்குறார் போதாதற்க்கு நம்ம ஜானகியம்மாகூட பாலுஜியுடன் சேர்ந்து கூத்தடிப்பாங்க… பாருங்க… ஒரே கலீஜா இருக்கும்….

எனது நண்பர் ஆர்.ஜே. திரு. ரவிவர்மா இந்த பாட்டை ரொம்பத்தான் ரசிச்சிருக்காருங்க எப்படின்னு நீங்களே கேட்டுடுங்களேன். இந்த பாடலை எனக்காக வழங்கிய அப்படியே அவருக்கு ஒரு வாழ்த்தையும் தந்துடுங்க..

இதோ முழுமையான பாடல்

படம்: திருமூர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஜானகியம்மா
நடிகர்: கேப்டன் விஜயகாந்த்

மஸ்து மஸ்து இது மதுரகார மஸ்து
கொத்து கொது இது கத்திரிக்கா கொத்து

ஹுஹஹ்ஹாஹ

யே என்னடி சிரிப்பு இத பாரு
மொத மொதல்ல தொழிலுக்கு போறேன்
என்கிட்ட வம்பு பன்னாதே ஹன்ஹாஆ

ஹன்ஹா இந்த மதுரகார மச்சானுக்கு
மஸ்து ரொம்ப ஜாஸ்திதான்டி

மதுரகார மச்சானுக்கு ஜாஸ்தி தான்
மஸ்து ஜாஸ்தி தான்
ராணி மங்கம்மா மனசு வச்சா நாஸ்தி தான்
மஸ்து நாஸ்தி தான்

ஹ மஸ்து மஸ்து மஸ்து
இவ மசங்கிடாத மஸ்து
ஹ கொத்து கொத்து கொத்து
நீ கத்திரிக்கா கொத்து

வந்தான் பாரு ராசா
அடி ஒன்னா நம்பரு லூசா
விட்டாப் போச்சு லேசா
நம்மல விரட்டுவாண்டி தூசா

ஹ மஸ்து மஸ்து மஸ்து
இவ மசங்கிடாத மஸ்து
ஹ கொத்து கொத்து கொத்து
நீ கத்திரிக்கா கொத்து

காக்கா கருப்பழகா
காரம் போன கொடமொளகா

யேய்

கேட்ட கொடுக்கறயே டகில்பாட்டம் காட்டறயே
அடி
முட்டை முழியழகா முந்திரிக்கா மூக்கழகா
பட்டம் விரிக்கறயே பட்டாசா வெடிக்கறயே
ஆம்பளங்க ஆதிக்கத்தை காட்டாதே
என்னை ஆழம் பாக்க வாலை இங்க நீட்டாதே யேய்

மத்தவங்க ஓட்ட வண்டி ஓட்டாதே
இந்த ராணியம்மா கையில தான் மாட்டாதே

வந்துன்ன பாரு

அட சிலுப்பிகிட்டு நேரா வந்து நிற்காதே
ஹேஏ
என் ஜம்மாகிட்ட?? சிக்கி கிட்டு முக்காதே
ஹெ ஹெ ஹெ

ஹ மஸ்து மஸ்து மஸ்து
இவ மசங்கிடாத மஸ்து
ஹ கொத்து கொத்து கொத்து
நீ கத்திரிக்கா கொத்து

ஏ பொட்டப்புள்ளா டாப்பு
இப்ப பாடிடுவார் ராப்பு

வ்வே வ்வே வ்வே வ்வே
வவ்வவ் வவ்வவ் யேய்

மகாராணி மங்கம்மாக்கு ஜாஸ்தி தான்
மஸ்து ஜாஸ்தி தான்
அடி மதுரகாரன் மனசு வச்சா நாஸ்தி தான்
மஸ்து நாஸ்திதான் ஹ

ஹஹ

வாடி தகரப்பொட்டி ஆடட்டுமா தவுலதட்டி ஹ
ஆடி அலுக்கறயே சிலுக்காட்டம் குலுக்கறயே ஏய்

காஞ்ச கழனித்தொட்டி வாசம் போன சோப்பு கட்டி
மூஞ்சி சிவக்குறயே ரசம் போல கொதிக்கறயே

ஹேய் ஆம்பளய கேவலமா என்னாதே
இங்கு ஆட்டம் போட்டு சேட்டை எல்லாம் பன்னாதே
ஹா
முட்டையிடும் கோழிக்கென்ன கித்தாப்பு
உங்க முகரையெல்லாம் நவுத்துப்போன மத்தாப்பு

அஹ சரக்கு எல்லாம் எடுத்து விடு முன்னாலே
இங்கு சலாம் வகுத்து காட்டுறேண்டி பின்னாலே

இடியட்

அட மஸ்து மஸ்து மஸ்து இவன் மயங்கிடாத மஸ்து
அ கொத்து கொத்து கொத்து ஹ இது கத்திரிக்கா கொத்து ஹா

தொட்டு பாரு ஆள இது பாண்டி சீமை காளை
முட்டுச்சுன்னா மேலே பல்லு கொட்டி விடும் கீழே

மகாராணி மங்கம்மாக்கு ஜாஸ்தி தான்
மஸ்து ஜாஸ்தி தான்
அடி மதுரகாரன் மனசு வச்சா நாஸ்தி தான்
மஸ்து நாஸ்திதான் ஹ

அட மஸ்து மஸ்து மஸ்து இவன் மயங்கிடாத மஸ்து
ஏய் கொத்து கொத்து கொத்து யேய் இது கத்திரிக்கா கொத்து

வெப்பேன் பாரு வேட்டு அது கழண்டு போகும் மூட்டு
தப்பாது என் ரூட்டு டப்பாங்குத்து பாட்டு

அட மஸ்து மஸ்து மஸ்து ஹேய் இவன் மயங்கிடாத மஸ்து போடி
அ கொத்து கொத்து கொத்து இடியட் இது கத்திரிக்கா கொத்து
ஆய்ய்ய்ய்ய……ப்ப்ப்ப்போடி

Advertisements

652 பாடும்நிலாவும் பரம ரசிகனும்:ஒலிமுன்னோட்டம் முதல், இரண்டாவது பகுதி

May 26, 2008

தினமும் இரவு 10 மணி முதல் – 11 மணி வரை ஒலிபரப்பப்பட்டு வரும் இனிய இரவு இரவின் மடியில் சூரியன் சிற்றலையில் பாலுஜியின் ஓர் நிகழ்ச்சி வரப்போகிறது என்பது நீங்கள் யாவரும் அறிந்ததே மீண்டும் டிஜிட்டல் குரலோன் ஆர்.ஜே. திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயனா அவர்கள் இதோ மறுபடியும் அவர் குரலில் ஒரு சிறிய ஒலிமுன்னோட்டம் ஒலிபரப்பி நம் ஆவலை அதிகப்படுத்திவிட்டார். இதில் என்னதான் இருக்கிறது நீங்களே கேளுங்கள். கூடிய சீக்கிரம் சிற்றலையில் இந்த நிகழ்ச்சியின் முழுவடிவம் ஒலிபரப்பப்பட்டதும் பதிவேற்றப்படும். அதுவரை உங்களூடன் சேர்ந்து நானும் மிக மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். : கோவை ரவி

பாடும் நிலாவும் பரம ரசிகனும் : ஒலிமுன்னோட்டம் முதல், இரண்டாவது பகுதி.

Get this widget | Track details | eSnips Social DNA

651மணிமேகலையே மணியாகலையே

May 22, 2008

இளையதளபதி நடித்த படம் “காலமெல்லாம் காத்திருப்பேன்” நடிக்க ஆரம்பித்த சமயத்தில் வந்ததால் இந்த படத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏன் நான் கூட பார்த்ததில்லை இந்த மாதிரி படங்களில் எப்படியாவது பாடல்கள் ஹிட் செய்து விடவேண்டுமென்று பாலுஜி போல் பிரபல பாடகர்களை வைத்து பாட்டுக்களை பாடவைச்சுடறாங்க. அதனால இந்த மாதிரியான அழகான மெலோடி பாடல்கள் பிரபலமாகமலே போய்விடுகிறது. எவ்வளவு அழகான மெட்டுடன் தேனிசை தென்றலார் தேவா அவர்கள் தந்துருக்காங்க கேளுங்க. பாடல்வரிகள் யாருன்னு தெரியல மனதை கொள்ளை கொண்டு போகுது குறிப்பாக இந்த வரிகள்
// நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்கநகை இல்லாமலே, கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா, சொந்தம் பந்தமே அன்புதானம்மா அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே//

மேலும் // தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா.. என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்//

பாலுஜியின் குரலில் கேட்டால் இந்த கோடை வெயிலில் மனசு ஐஸ்க்ரீமாய் உருகவைக்குது அதுவும் தென்றல் வருமா சேதி சொல்லும்ம்மாஆஆஆ // ஆஹா ஆஹா சூப்பர்ப் எத்த்னை ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் திகட்டாத சுவை போல இனிக்குது..

Get this widget | Track details | eSnips Social DNA

மேலும், இந்த பாடலை சென்னையில் உள்ள பாலுஜியின் தீவிர ரசிகைகளான திருமதி. சவும்யா, திருமதி. மதுமிதா, செல்வி. ப்ரியா அவர்களின் விருப்பபாடலாக வழங்குகிறேன். சூரியன் எப்.எம்ல் ஆர்.ஜே வாக பணிபுரியும் திரு. ஸ்ரீனிவாஸ் இவர்கள் மூன்று பெயரையும் ஒலிப்பரப்பினார் திரு. ஸ்ரினிவாஸ் பட்டாசு போல் படப்படபாக பேசினாலும் கேட்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர் பேசும் அவசரத்தில் மதுமிதா என்ற பெயரை மாரிமுத்து தவறாக சொல்லிவிட்டார் (ஸ்ரீரினிவாஸ் அண்னே இதெல்லாம் சகஜம்ங்கண்ணே) . அவ்வப்போது என் நண்பர்கள் மற்றும் பாலுஜி ரசிகர்களுக்காக இப்படி நான் பாலுஜி பாடிய ஏதாவது பாடலை கேட்பதுண்டு. அப்படி நான் கேட்ட பாடலை அவர் ஒலிபரப்பவில்லையானாலும் திரு. ஸ்ரீனிவாஸ்க்கும் சேர்த்து இந்த பாடலை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவர்களூக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்..

படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
பாடியவர்: எஸ்.பி.பி
நடிகர்: விஜய்
இசை: தேவா
வருடம்:1998

Get this widget Track details eSnips Social DNA

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ
செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

650. ஒருவன் ஒருவன் முதலாளி

May 22, 2008

பொதுவாகவே பிராணிகள் எனக்குப் பிடிக்கும் (எல்லா அப்பிராணிகளுக்கும் பிராணிகள் பிடிக்குமோ?) என்றாலும் குதிரை மீது எப்போதும் பிரமிப்பு உண்டு. எத்தனை நாட்கள் குளிக்காவிட்டாலும் குறையாத அதன் பளபளப்பும், பிடரியும் கம்பீரமும் ஆச்சரியமாக இருக்கும் – எல்லாக் குதிரைகளும் அப்படியில்லை. குதிரைக்கேயுரிய பிரத்யேக குணங்கள் ஆச்சரியப்படுத்தும். காதுகளை விடைத்துக்கொண்டு தனித்தனியே திருப்பிக்கொள்வதும், பக்கவாட்டுக் கண்களும். அதன் பார்வைத் திறனும் குணாதிசயங்களும் ஆச்சரியமானவைதான்.

மதுரையில் அப்போது குதிரை வண்டிகள் நிறைய சுற்றிக் கொண்டிருந்தன. நோஞ்சான் குதிரைகள் – அதன் கண்களை சதுர வடிவ உலோகக் கண்ணாடி போட்டு தரையை மட்டும் பார்க்கும்படி வைத்திருக்க, விட்டைக் குட்டையைத் தாண்டி மூக்கை மூடிக்கொண்டு அருகில் நெருங்கி வண்டியில் ஏறவேண்டும். வண்டிக்காரரும் குதிரை மாதிரியே எலும்பும் தோலுமாக இருப்பார். பின்னால் படியில் கால் வைத்து ஏறும்போது முன்பக்கம் வண்டி அப்படியே ‘லம்பி’ குதிரை தூக்கில் மாட்டிக்கொண்டு தொங்கிவிடுமோ என்று பயந்திருக்கிறேன்.

திருச்சியில் ப்ளாஸா தியேட்டர் என்று நினைக்கிறேன். பென் ஹர் படத்தை முதல் வரிசையில் அமர்ந்து இடவலமாக டென்னிஸ் மாட்சைப் பார்ப்பது போலத் தலையைத் திருப்பிப் திருப்பிப் பார்த்தது நினைவிருக்கிறது. இரண்டு முறை பார்த்தேன் – முதல் முறையிலேயே முழுப்படத்தையும் பார்த்து முடியவில்லை – இடைவேளையெல்லாம் சேர்த்து நான்கு மணிநேரம் ஓடியது என்று நினைக்கிறேன். பிறகு தியேட்டர் ஆப்பரேட்டரே எடிட்டராக மாறி தேவையில்லாத (?) காட்சிகளை வெட்டி நீளத்தை மூன்று மணி நேரத்துக்குக் குறைத்தார்.

படத்தில் ஏராளமான குதிரைகள் தலைதெறிக்க ஓட நிறைய குதிரைகள் பொத்தென்று கழுத்தொடிய விழும். காலில் கயிறு கட்டி ஓடவிட்டு வெடுக்கென்று இழுத்து விழச் செய்வார்கள் என்று படித்தேன். கழுத்து உடைந்து செத்த குதிரைகள் நிறைய – ஊனமானவையும் நிறைய (அதையும் போட்டுத் தள்ளி விடுவார்களாமே!). இன்று வரை குதிரை வரும் எல்லாப் படங்களிலும் அவற்றைத் தடுக்கிவிழச் செய்துகொண்டிருக்கிறார்கள் – எந்த அளவுக்கு என்றால் தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி போன்ற அற்புதமான காதல் பாடலுக்குக் கூட குதிரைகளை விழச்செய்யும் காட்சி வைக்குமளவிற்கு! பயங்கர எரிச்சலாக வரும் – பாவமாக இருக்கும். மருதநாயகம் ஒருவேளை எடுக்கப்பட்டால் இன்னும் எத்தனை குதிரைகளுக்கு ‘இருக்கிறதோ’?

பணக்காரக் கல்யாணங்களில் வெண்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் மாப்பிள்ளை அழைப்பு வைபவங்களைப் பார்த்த நினைவுகளும் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நிழலாடுகின்றன. மாட்டு வண்டி போலவே குதிரை வண்டிச் சக்கரங்களும் ‘கட்டைச்’ சக்கரங்கள். முசிறியில் வசித்த காலங்களில் தெருவிலிருந்த ஒரே பங்களாவிலிருந்த ஒரே (முன்னாள்) ஜமீன்தார் (‘பையா’ மாமா) அவரது வெண்குதிரையொன்றை சைக்கிள் சக்கரங்கள் பொருத்திய வண்டியில் பூட்டி ‘ஹேய்’ என்று தெருவில் விரட்டிக்கொண்டு எங்கோ செல்வார். வண்டி ஒரு அதிர்வும் இல்லாது, சத்தமெழுப்பாது பூப்போல ரொங்கிக்கொண்டே செல்ல குதிரையின் குளம்பொலி மட்டும் கேட்கும்! ‘குளம்பொலி’ என்றதும் நினைவுக்கு வருகிறது. அவ்வார்த்தை இடம்பெறாத சரித்திர நாவல்களோ, கதைகளோ எனக்குப் பிடித்ததேயில்லை!

ஆளாளுக்கு ‘அரேபியக் குதிரை’ என்று வர்ணித்து எழுதியெழுதி அரேபியக் குதிரையைப் பார்க்க ஆவல் ஏகத்துக்கும் அதிகமாகியிருந்தது – ஆனால் மஸ்கட்டில் இருந்த ஆறு வருடங்களில் அரேபியக் குதிரையைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவேயில்லை – நிறைய ஒட்டகங்களைப் பார்த்ததைத் தவிர. இங்கே அமெரிக்காவில் ஆறுதலாக சில அரேபியக் குதிரைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது – பெண்கள் ரூபத்தில்! (ஆத்தா இது சோக்காக்கும். ஒடனே கம்பெடுத்துட்டுக் கெளம்பிராதீய)

நிற்க. பாடலுக்கு வருவோம்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று பேக் புரொஜக்ஷனில் எம்ஜியார் ஜெயலலிதாவும் பாடிய சாரட் வண்டிப் பாட்டு ரொம்ப பிரபலமானது. அதே பாடலை பாலு மோகன்லாலுக்காக ஒரு மலையாளப் படத்தில் பாடிய ஒளிக்கோப்பைப் பார்த்திருப்பீர்கள் – மலையாள ஊடகங்களில் வருமளவிற்கு பிற மொழிச் சேர்க்கையை வேறு எந்த மாநில ஊடகங்களிலும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகந்தான். தமிழ்ப் பாடல் பாடப்படாத இசை நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லிவிடலாம்போல. ஆனால் இங்கு தமிழ் ஊடகங்களில் தமிள் வாள்கிறபடியால் வேறு மொழிகள்? மூச்! அய்யோ – மறுபடியும் நிற்க.

முத்து படத்தில் வரும் இந்தப் பாட்டின் Orchestration அபாரமானது. ரஜினியின் அறிமுகப்பாடல் பாலுவால் பாடப்படவேண்டும் என்பது நியதி. சிவாஜி வரை அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது (எதை வைத்து பல்லேலக்காவை மோசமென்று வர்ணித்தாரோ அது அந்த ஹரன் பிரசன்னாவுக்கே வெளிச்சம்! ஒரு வேளை பாடலை முதலில் ‘பார்த்து’ விட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை கேட்கும்போதும் தொடர்ந்ததோ?).

இசைப்புயலின் இசையில் குதிரைகள் காற்றாய் பறந்து செல்ல, ஷங்கர் இயக்காத எளிமையான ரஜினி பாடிக்கொண்டே வரும் இந்தப் பாடலில் இன்னொரு விசேஷம் – ஸ்லோ மோஷனில் பாடலின் தாளத்திற்குத் தகுந்த மாதிரி குதிரைகளின் இயக்கத்தைப் படமாக்கியிருப்பது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்க வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ‘கெடைக்கிறது கெடைக்காம இருக்காது – கெடைக்காம இருக்கிறது கெடைக்காது’, ‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வந்துருவேன்’ போன்ற பஞ்ச் டயலாக்குகள் மிகப் பிரசித்தம். இரண்டாவதைப் பிடித்துக்கொண்டு இன்றுவரை அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று பத்திரிகைகளும் ரசிகர்களும் நம்பிக்கையுடன் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம்.

குதிரையைப் போலவே கம்பீரமான இசை – நரம்புகளைச் சுண்டும் மெட்டு – எல்லாவற்றிற்கும் மேலாக அபாரமாகப் பாடலைத் தன் குரலால் கையாண்டிருக்கும் பாலு – முத்து படத்தில் இப்பாடல் ஒரு நல்முத்து! ரஜனியும் அட்டகாசமாகச் செய்திருப்பார். அதிலும் ‘மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே’ என்ற வரிகளுக்கு அவர் காட்டும் பாவம் – அற்புதம்! சரத்பாபுவும் அசத்தலாக நடித்து அண்ணாமலையில் நிரூபித்தமாதிரி இதிலும் நிரூபித்திருப்பார் – ரஜினிக்கு ஈடுகொடுத்து.

இந்தப் பாடலின் ஆரம்ப இசையை ஆயிரந் தடவைகள் ‘குங்குமம்’ இதழுக்கான விளம்பரத்தில் சேர்த்து ஒலி/ஒளிபரப்பி ஆச்சி மசாலாப்பொடி ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டது கொடுமை.

அது சரி – ஏன் சென்னையில் குதிரையை Ghuதிரை என்று உச்சரிக்கிறார்கள்?

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது – அட
முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

Get Your Own Hindi Songs Player at Music Plugin

649பாடும் நிலாவும் பரம ரசிகனும் ஒலி முன்னோட்டம் 1

May 15, 2008

எஸ்.பி.பியின் இனிய இரவு

பாடும் நிலாவும் பரம ரசிகனும் ஒலி முன்னோட்டம் 1

நம் தலையை சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பகல் பூராவும் வெளியில் தலை காட்டாமல் அலுவலகத்திலும், வீட்டிலும் பதுங்கி தங்கள் வேலையை மும்முரமாக செய்துகொண்டிருநக்கும் இசைப்பிரியர்கள் தினமும் இரவு நேரம் 10மணி எப்போது வரும் என்று மிக ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தற்போது கோவையில் நான்கு சிற்றலை வானொலி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் முதன் முதலாகக் கால் பதித்து கோவை மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வானொலி சூரியன் எப்.எம் 93.5 .

இவர்களின் நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ் பெற்றது ”இனிய இரவு, இரவின் மடியில்” என்ற ஓர் அற்புதமான, அசத்தலான, அமைதியான, குளிர்ச்சியான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் ஸ்வாஸ்வத (ஆதர்ச) அறிவிப்பாளர் “டிஜிடல் வாய்ஸ்” என்று செல்லமாகக் கோவை ரசிகர்களாலும் மற்றும் இசைப்பிரியர்களாலும் அழைக்கப்படும், ரசிகர்களது பேரபிமானத்தைப் பெற்ற அறிவிப்பாளர் (ரேடியோ ஜாக்கி) திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயணா அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

வசீரக காந்தக் குரலையுடைய திரு. ஆர்.ஜி.எல்.என் அவர்கள் கோவை மக்களுக்கு இரவில் தன் குளிர்ச்சியான தாலாட்டும் குரலால் காலத்தால் மறக்க முடியாத திரையிசைப் பாடல்களையும், புகழ் பெற்ற சினிமா காட்சிகளையும் ஒலிபரப்பி (அக்காலத்தில் மொத்த சினிமாவையும் கூம்பு ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பும்போது காட்சிகளுக்கிடையில் காட்சி மாறுவதை உணர்த்த வரும் ‘ட்ர்ர்ர்ர்ர்ரியோங்’ என்ற ஒலி இன்னும் காதில் ஒலிக்கிறது.. திருவிளையாடல்!!!), அதுவும் ரசிகர் விரும்பியபடி ரசிகர்களே தேர்ந்தெடுத்துத் தயாரித்த ஒலிக்கோப்புகளை ஒலிபரப்பி, தன் காந்தக் குரலால் இரும்பான இதயம் கொண்ட கோவை மக்களின் இதயத்தை இழுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றால் மிகையாகாது.

அந்த அன்புக் கட்டுப்பாட்டில் அசந்து போயிருக்கும் கோவை டாக்டர் எஸ்.பி.பி ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் தன் மென்மையான வெண்ணெய்க் குரலால் இசை ராஜாங்கம் நடத்தி வரும் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி ஓர் நிகழ்ச்சி தயாரித்து தர அவர் பெருந்தன்மையுடன் இசைந்துள்ளார். அதன் முன்னோட்டமாகத்தான் இந்த சிறிய ஒலிக்கோப்பு.

‘அப்படி என்னதான்யா.. சொல்லப்போகிறார்..?’ என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. 1970, 1980 & 1990 களில் என்னைப் போன்ற திரையிசையை ரசித்து வரும் அன்பர்களுக்கு பாலுவைப் பற்றிய தகவல்கள் தெரிந்து இருக்கும் இப்பதிவின் நோக்கம் தற்போது நேரங்காலம் பார்க்காமல் உலக அளவில் பரந்து விரிந்து கணிணியே தவமென இருக்கும் இளைய தலைமுறை பாலுவைப் போன்ற வாழும் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இது ஒரு சிறிய ஒலி முன்னோட்டம் தான். இந்த அரிய பெரிய நிகழ்ச்சி “பாடும் நிலாவும் பரம ரசிகனும்” என்ற தலைப்பில் வரவுள்ளது. எப்போது? எப்போது? எப்போது? என்று ஆவலுடன் கேட்கத் தூண்டுகிறதல்லாவா? பொறுமையுடன் இருங்கள் “இனிய இரவில்” கூடிய விரைவில்! நானும் உங்களுடன் மிக்க ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நாள் நிச்சயம் நமக்கும் நமது அன்பான பாலுஜிக்கும் ஒரு மறக்கமுடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போதைக்கு இந்தச் சிறிய ஒலிக்கோப்பைக் கேளுங்கோ கேளுங்கோ கேட்டுக்கிட்டே இருங்கோ.

– கோவை ரவீ

Get this widget Track details eSnips Social DNA

648.திருத்தேரில் வரும் சிலையோ எப்.எம்ல்

May 11, 2008

பாலுஜியின் நெருங்கிய கோவை நண்பர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு. பார்த்திபன் அவர்களீன் விருப்பமாக மீண்டும் இந்த பாடல் நேயர் விருப்பமாக சூரியன் எப்.எம்ல் ஒலிபரப்பப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு முறை கேட்டாலும் தித்திக்காத பாலுவின் குரல் //தாலாட்டு கேட்கின்ற மழழை இது// கேளூங்கள் மகிழ்ச்சியா இருங்கள்.

திரு.பார்த்தீபன், டாக்டர். எஸ்.பி.பி, திரு. ரமேஷ் மற்றும் கோவை ரவீ

இதோ முந்தைய பதிவு:

http://myspb.blogspot.com/2007/01/blog-post_18.html

படம்: நான் வாழவைப்பேன்
நடிகர்: நடிகர் திலகம் சிவாஜிகனேசன், சூப்பர்ஸ்டார்.ரஜினிகாந்த்
இசை: இளையராஜா

Get this widget Track details eSnips Social DNA

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..

647 தலைவி தலைவி..

May 10, 2008

துவக்கத்திலே அமர்க்களமான நாதஸ்வரம், தவில் இசையுடன் துவங்கும் இந்த பாடல் மோஹனப்புன்னகை?? என்ற படத்தில் வருவது தலைவி தலைவி என்ற பாடல் பாலுஜி தன் பேஸ் வாய்ஸ் துவங்கினாலும் செல்ல செல்ல சன்னமான வெள்ளிக்கம்பி போல் குரலுடைய வாணி ஜெயராம் அவர்களூடன் சேர்ந்து தனக்கே உரிய பாணியில் கலக்கலாக பாடிய இந்த அழகான பழைய பாடல் நம் மனதை என்னென்னவோ பன்னும் கேட்டுத்தான் பாருங்களேன். ஆமாம் நம்மை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் பாலுஜி..

படம்: மோஹன புன்னகை
பாடகர்கள்: பாலுஜி, வானிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ

விளக்கம் எதற்க்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏனிந்த சந்தேகமோஓஓஓஒ

விளக்கம் எதற்க்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏனிந்த சந்தேகமோஓஓஓஒ

இது பெண்ணோடு உண்டானது

அதை துண்டாடி கொள்ளாதது

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவும் வந்து
பூபாளம் போட்டாரம்மா

ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவும் வந்து
பூபாளம் போட்டாரம்மா

ரசமும் மிகுந்ததுண்டு
ரசிகன் இருப்பது கண்டு
யாரென்று கேட்டாரய்யா

ரசமும் மிகுந்ததுண்டு
ரசிகன் இருப்பது கண்டு
யாரென்று கேட்டாரய்யா

அது நான் என்று யார் சொன்னது

அதை நான் இன்று யார் தந்தது

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

646 ஹீரோ வந்தாச்சுடிஎப்.எம்ல்

May 6, 2008


ஜீவா படத்தில் ஓர் பாடல் ஹீரோ வந்தாச்சுடி என்ற அமர்க்களம்மான ஜாலியான பாடல் இது. பெங்களூரு திரு.ஆர்.ஜி.நாராயணன் அவர்களின் விருப்பப்பாடல் இது. எப்.எம்ல் ஒலிப்பரப்பான இந்த பாடலை திரு.ரவிவர்மா பாலுஜியின் குரலை எப்படி ரசிச்சிருக்கிறார் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

மேலே ஒலிக்கோப்பு சரியில்லையாதலால் கீழே சரியான ஒலிக்கோப்பு கேட்டு மகிழுங்கள்.

படம்: ஜீவா
நடிகர்கள்: சத்யராஜ், அம்லா, சில்க்ஸ்மிதா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
இசை: கங்கை அமரன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே
ஆஹா இது ஒரு காவிய காதல்
பாடம்மா ஒரு டூயட் பாடல்
வாடி யம்மா யம்மா
உன் மேலே சும்மா சும்மா ஹ

ஹீரோ இப்போதுதான் வரவேணுமா
மாலை கையோடுதான் வரவேணுமா

ஏய்யா முறைக்கிற சாமி
உன் வீரம் எங்கே காமி

ஏம்மா குதிக்கிற வீனா
நீ மீசை இல்லாத ஆணா

வீராப்பு வேண்டாம்
ஆண் பிள்ளை ஆனா தினுசு

ஹே ஆத்தாடி மானே
அதுக்காக தானே குறும்பு

உன்னை சோதிக்கப்போறவ நானே
இனி சாதிக்கப்போவது நீயே

நான் ஆறடி ஆளடி மானே
என்னை யாருன்னு காட்டுறேன் தானே

ஹீரோ இப்போதுதான் வரவேணுமா யெஸ் யெஸ்
மாலை கையோடுதான் வரவேணுமா ஹ ஹ

ஆஹா இது ஒரு காவிய காதல்
வேனாய்யா ஒரு டூயட் பாடல்
போதும் யம்மா யம்மா
இந்த காதல் சும்மா சும்மா

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே

வேனாம் கலவரம் வேணா
நல்ல நேரம் போச்சே வீனா

வா வாநவரச பேச்சா
உன் வீரம் தீரம் போச்சா

பொன்னுக்கு முன்னே
நடக்காது கண்ணே
தரலாம் யம்மா தரலாம்

சொல்லாமல் நானும்
ஒழுங்காக நீயும் வரனும் வரனும்

உன்னை வீட்டையை மாட்டிக்குதே
இன் தோளிலில் சாஞ்சிடுவேனே ஹ

மார்கழி மாதத்து காத்து
உன் வாலிப போர்வையை போத்து

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே ஆஹா
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே ஆஹா
ஆஹா இது ஒரு காவிய காதல்
பாடம்மா டூயட் பாடல்
வாடி யம்மா யம்மா
உன் மேலே சும்மா சும்மா ஹ

லல லல்ல லா ஹ ஹ
லல லல்ல லா ஹ ஹ

645 என் காதலே.. யேஏஏஏஏஏ…

May 3, 2008

4.5.2008 ஞாயிறு அன்று பாலுஜியின் அபிமானத்தை பெற்ற அவரின் சென்னை ரசிகர்கள் மற்றும் யாகூ ரசிகர் குழுவின் தோழர்கள் மகிழ்ச்சியுடன் பாண்டிச்சேரி ஒரு நாள் சுற்றுலாவில் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். அவர்கள் பயணம் சிறப்பாக இருக்க கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் சென்னை ரசிகர்களின் ஒற்றுமை ஒத்துழைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதனால் புதிய படமான பிடிச்சிருக்கு என்ற படத்தில் இருந்து பாலுஜியின் ஓர் அமர்க்களமான பாடலுடன் உங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

பாலுஜி அவர்களின் குடும்பத்தில் மற்றுமோர் இரண்டு புதிய ஜீவன்கள் சமீபத்தில் (மே 1 தேதி) வருகை தந்தன. ஆமாம் நண்பர்களே பாலுஜியின் அன்பு மகளான திரு.பல்லவி கிரிதர் ராஜா அவர்களூக்கு இரட்டை குழந்தைகள் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வருகை தந்துள்ளன. பாலுஜி அவர்கள் மேலும் அந்த பிஞ்சு குழந்தைகளூக்கு மீண்டும் “தாத்தா” வாகியுள்ளார். அவருக்கும் அவர் மருமகன் திரு.கிரிதர் ராஜா அவர்களூக்கும் கோவை பாலுஜி ரசிகர்கள் நண்பர்கள் சார்பாக வாழ்த்துவதில் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நீங்களூம் அவர்களை வாழ்த்துங்கள்.

மேலும் நீண்ட நாள் விருப்பமாக இந்த பாடலை பதிவேற்றும் படி தெரிவித்த சென்னை திரு,கார்த்திக் மற்றும் ஹைத்ரபாத் உஷா மேடத்திற்க்கும் சமர்ப்பணம்.

படம்: பிடிச்சிருக்கு
பாடியவர்: எஸ்.பி.பி & கோரஸ்
நடிகர்கள்: அசோக், விசாகா, கஞ்சா கருப்பு, சரண்யா
தயாரிப்பு: சென்பககுமார், சுரேஷ்
இசை: மனு ரமேஷன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஹாஆஆஆஆஅ… ஹாஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஅ… ஹாஆஆஆஆஆ
என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே
உயிரே எதிரே வருவாயா
பிரிவின் துயரம் அறிவாயா
எனக்கே என்னை தருவாயா.. ஓஓஓஓஓஒ

இரவும் பகலும் தனியாக
கனவே தினமும் உணவாக
உருகும் என்னை நீ மறந்தாயா?
கால்களே சுமையாக யாத்திரை போகிறேன்
என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே
ஹாஆஆஆஆ.. ஹாஆஆஆஆஆஆஆஆஆ

நிழல் தோன்றவே வெயில் வேண்டுமே
நிழல் வாழ்வதே வெயிலாலேதான்
நிழல் போலவே தொடர்வேனடி,
நான் வாழ்வதே உன்னாலேதான்

தோற்கின்ற காதல் ஊரிலில்லை
தோற்றால் அதன் பேரே காதலில்லை
யாராலும் காதல் சாவதில்லை, காதல் செய்வோம்..
வாழ்க்கைக்கு காதல் தோன்றவில்லை
என்றால் நாம் வாழ்கை வாழ்வதில்லை
கானல் நீர் நீரின் ஜாதியில்லை காதல் செய்வோம்..

காதலில் தொலையாத வாழ்கையே வீணடி
என் காதலே.. என் காதலே..
கண் தேடுதே என் காதலே..

உன்னை தேடிடும் நினைவாலேதான்
என் தேகமே உயிர் தாங்குதே
உன்னை பார்க்கிற நாள் ஒன்றில்லே
உயிர் நீங்கினால் அது போதுமே

காதல் நாம் நெஞ்சில் தோன்றும் நேரம்
பூமியே எட்டி தாங்கும் தூரம்
பென்னே நீ எங்கு போககூடும் சேர்ந்திடத்தான்
பாஷைகள் மாறிப்போன தேசம்
ஆசைகள் மாறிடாதா நெஞ்சம்
வேஷங்கள் நீக்கி மெல்ல கைகள் கோர்த்திடத்தான்
தூரிகை கலையாமால் ஓவியம் தோன்றுமா

என் காதலே.. என் காதலே..
கண் தேடுதே என் காதலே..
ஹாஆஆஆஆ.. ஹாஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஆஆ.. ஹோஓஓஓஓஓஓஓஓஒ
ஹாஆஆஆஆ….

644ஈரத்தாமரைப் பூவே :எப்.எம்ல்

May 1, 2008

பாய்மரக்கப்பல் என்ற படத்தில் வரும் ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் என்ற இந்த அழகான பாடல் பாலுஜி அவர்களூம் அவரது தங்கை எஸ்.பி.ஷைலஜா அவர்களூம் பாடியது. அதிகம் கேட்கமுடியாத இந்த பாடல் பாலுஜி ரசிகர்களூக்காக என் வேண்டுகோளுக்கிணங்க திரு. ரவிவர்மா அவர்கள் சூரியன் எப்.எம்மில் ஒலிபரப்பினார். பாலுஜி ரசிகர்கள் சார்பில் அவருக்கு நன்றி. உண்மையிலே சொல்லவேண்டுமென்றால் பாலுஜி பாடியபடி //புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்// இல்லை இல்லை பல வருடங்கள் ஆமாம் தோழர்களே என்னை பித்தன்னாக்கியது அவரது மென்மையான குரல்.. மிக மிக அழகான வரிகளை கொண்ட மெலோடி பாடல் உங்களை மெய்மறக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல் கோப்பு சரியாக வரவில்லையாதலால் கோப்பை தனியாக தந்துள்ளேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: பாய்மரக்கப்பல்
நடிகர்: ஜனகராஜ் ஹாஸ்ய நடிகர்
பாடகர்கள்: எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா
இசை: கே.வி.மகாதேவன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஈரத்தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே ஹஹ பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

ஹ ஆஆஆஆ ஈரத்தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

ஈரத்தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
விரல்கள் வெள்ளரி பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
விரல்கள் வெள்ளரி பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ

ஈரத்தாமரைப் பூவ்வ்வே ம்ம்ம்ம்
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

கூந்தல் என்பது சமுத்திரமோ ம்ம்ம்ம்
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
கூந்தல் என்பது சமுத்திரமோ
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
இலைகள் இல்லா பூமரமா
உன் இமையே உனது சாமரமோ
நீ இலைகள் இல்லா பூமரமா
உன் இமையே உனது சாமரமோ

ஈரத்தாமரைப் பூவே ம்ஹாஆ
உன் இதழில் எத்தனை சாரங்கள் ஹாஆ
புத்தன் நானே ஹஹ பித்தன் ஆனேன் அஹாஆ
உறங்கவில்லை சில வாரங்கள்
உறங்கவில்லை சில வாரங்கள்