Archive for June, 2008

668பனி மழை மேகங்கள்

June 30, 2008

இதோ பாலுஜி, சுசீலாம்மா தேன் குரல்களில் கலகலக்கும் ஒரு மெல்லோடி பழைய பாடல். கேட்டு மகிழுங்கள்.

பனி மழை மேகங்கள்
படம்: தொட்டதெல்லாம் பொன்னாகும்

Get this widget | Track details | eSnips Social DNA

பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே
புதுக்குரல் கொடுக்கட்டுமா

பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்னா
புதுக்குரல் கொடுக்கட்டுமா

மரகத பூஞ்சிட்டு மணிமன்ற காற்று
மலைமுகில் கூந்தலை இழைப் பின்னிக்காட்டு

குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் காற்று
கொஞ்சட்டுமே இங்கு உன் மொழி கேட்டு

பூவையின் கண்னத்தில் பூ மெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்னே
புதுக்குரல் கொடுக்கட்டுமா

அணி அணியாய் வரும் நகை முத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை

மணி மணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறேன்ன வேலை

தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை
கோதையின் மயக்கத்தில் விடியட்டும் காலை

பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்னா
புதுக்குரல் கொடுக்கட்டுமா

பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே
புதுக்குரல் கொடுக்கட்டுமா

Advertisements

667ராதா ராதா அனுராதா

June 25, 2008

ராதா ராதா அனுராதா என்ற ஓர் இனிமையான பாடல் இது ரொம்ப நாளாகவே பதிய வேண்டும் ஆசை நேரம் சரியாக அமையவில்லை இப்போது தான் இந்த பாடலுக்கு நேரம் வந்தது. நடிகர் சூர்யா நடித்த படம் சந்திப்போமா திரையில் இந்த படத்தை திரையில் நான் சந்திக்கவே இல்லை. அதனால் காட்சியமைப்பு விளக்கமுடியவில்லை. அதனால் என்னங்க இந்த மாதிரி பாடல்கள் ஆயிரக்கணக்கில் பாலுஜி தேனில் முக்கிய பலாச்சுளைகள் போல அதிகம் தந்து நம்மை தியேட்டர் பக்கமே போகவிடாம செய்துவிடுகிறார். நீங்களூம் தான் கேட்ருங்களேன். இசையமைப்பு நம் மனதை கொள்ளை கொண்டு போகும். வரிகளும் தான் இசையுடன் போட்டி போட்டுகொண்டு நம் உதடுகளில் இந்த பாடலை தவழ விடுகின்றன.

படம்: சந்திப்போமா
நடிகர்: சூர்யா
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்

உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி

காதலன் கையோடு மிதக்கும் வேளையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி

வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு
வாழ்ந்திருப்போமா பனிமலரே

பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு
போய்விடுவோமா சொல் உயிரே

உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது

ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ

பூக்களாய் இருந்தால் தான் நாம் உதிர்ந்து போகலாம்
பூமீயாய் இருப்போம் நாம் நிறைந்து வாழலாம்

காதலனே உன் கண்களிலே
உன் காதலி வாழ வீடு கொடு

கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்துவிடு

துனிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்த பின்னே மார்போடு

ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்

உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்

666மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி

June 20, 2008

மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, இதோ அவர்களூக்கு வழங்கப்பட்ட கணினியின் படங்கள்.

கோவை சேவா நிலயத்தின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் ஆத்மாஸ் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஆத்மாஸ் திரு. சுந்தர் ஸ்ரீனிவாசன் அவர்கள் குழுவினரும், கோவை பாலுஜி ரசிகர்களூம் உபயோகப்படுத்தப்பட்ட ஏழு கணினிகள் வழங்கி மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி வழங்க பாலுஜியின் பிறந்த நாளில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் சேவா நிலைய இணை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ மற்றும் கீதா ஆகியோர் எஸ்.பி.பி ரசிகர்கள் சேவையை பாராட்டினர்.

இதோ இந்த நிகழ்ச்சியுடன் சேர்ந்து அழகான இனிமையாடலும் கேளூங்கள்.

மனம் என்னும் நாட்டிய மேடை

படம்: ஓர் ஊமையின் ராகம்

Get this widget | Track details | eSnips Social DNA

665கருணாலயாவில் பாலுஜியின் விஜயம்

June 19, 2008

போட்டோ உதவி: பாலுஜியின் அபிமான ரசிகர் திரு. ப்ரசன்ன வர்த்தன், சென்னை. நன்றி பிவி.

சென்னை, கலைச்செல்வி கருணாலயாவில் பாலுஜியின் விஜயம்

சென்ற ஞாயிறு அன்று பாடும் நிலா பாலுஜி சென்னை, மொகப்பேரில் உள்ள கலைச்செல்வி கருணாலலாயவில் தன் அன்பு ரசிகர்களுடன் தன் பிறந்தநாள் சிறப்பு விஜயம் செய்தார். ஜீன் 4ஆம் தேதி தன் 62 ஆவது பிறந்த நாளை தன் சொந்த ஊர்ரான நெல்லூரில் தன் தாயுடன் சேர்ந்து கொண்டாடினார். மேலும், தன் அபிமான ரசிகர்களுடன் சென்ற ஞாயிறு அன்று சேர்ந்து சென்னை, மொகப்பேரில் உள்ள கலைச்செல்வி கருணாலலாயவில் முதியோர்களூக்கும், குழந்தைகளூக்கும் தேவையான பொருட்கள் வழங்கி அவர்களூடன் சேர்ந்து பாடல்கள் பாடி மிகவும் மகிழ்ந்தார். நான் விலாவாரியாக எழுதுவதை விட இதோ அவர் கலந்து கொண்டு தன் ரசிகர்களூடன் பாடி மகிழ்ந்ததையும், அவர்களூக்கு அன்புடன் தன் வாழ்த்துக்களை தெரிவித்தையும் இந்த ஒலிக்கோப்பில் கேட்டு மகிழுங்கள்.

ஒலிக்கோப்பு உதவி. திரு.ஆர்.ரங்கராஜன், சென்னை ஆன்லைன்.காம். நன்றி சார்.

Get this widget | Track details | eSnips Social DNA

664ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா

June 15, 2008

இதுவும் என் பள்ளிப் பிராயத்தில் கேட்டது ரொம்பவும் மகிழ்ச்சியாக ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா என்று விரும்பி விரும்பி கேட்ட பாடல். இப்பவும் இந்த பாடல் கேட்டாலும் புல்லரிக்குதுங்க.. கீழே திரு.ஜி.ராகவன் சாரின் ஒளிக்கோப்பு பாருங்கள் நம்ம நாட்டமை பெல்பாட்டத்தில் என்னம்மாக கலக்குகிறார்.

படம்: வருவான் வடிவேலன்
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிகர்: (நாட்டாமை) விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி ??
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஜாய்புல் சிங்கப்பூர்.. சிங்கப்பூர்.. சிங்கப்பூர்..
கலர்புல் மலேசியா.. மலேசியா.. மலேசியா..

ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா

ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா

ஆகாய பந்தலுக்கு ஆனவட்ட மேகங்கள்
அழகான மலைநாட்டின் மூன்று மொழி ராகங்கள்

ஆகாய பந்தலுக்கு ஆனவட்ட மேகங்கள்
அழகான மலைநாட்டின் மூன்று மொழி ராகங்கள்

சீனக்கிளிப்போல் சிரிக்கும் அழகை
காணகண்கோடி இப்போது தேவை

நீலக்கடல் போல் மிதக்கும் பிடியில்
காதல் கதைப்பாட வந்தாளே பாவை

ஜாய்புல் சிங்கப்பூர்

கலர்புல் மலேசியா

திருந்திய பூங்காவைப் போலே அதில்
இருமகள் உன் கூந்தல் மேலே
ஒருமலர் நான் சூட வேண்டும் இனி
ஒரு மலர் நீயாக வேண்டும்

அரும்பிய குளிர் காற்று மோதும்,
அரும்பிய குளிர் காற்று மோதும் என்
அழகிய இளமேனி வாடும்
கரும்பென இதழ் தந்தச் சாறும் என்
தரைமீது ஆசையை தூண்டும்

ஜாய்புல் சிங்கப்பூர்

கலர்புல் மலேசியா

மரத்திலும் பெண் போன்ற குணங்கள்
அதன் மடியிலும் பாலூறும் இடங்கள்

நிழலுக்கு சுகமான வனங்கள்
நாம் ஒதுங்கிட சரியான இடங்கள்

ஜாய்புல் சிங்கப்பூர்

கலர்புல் மலேசியா

ஆடு தொட்டில் மஞ்சம் போடும்
கண்ணிர் மலையில் பக்கம் வந்து
ஆடு கண்ணா ஆடு இங்கே

நாடு விட்டு நாடு வந்து
காதலிக்கும் இன்ப நிலை
பாடு கண்ணே பாடு இங்கே

காமனுடன் போட்டீயிட்டு
கைகலந்து மெய் கலந்து
காதலிக்கும் ஜோடி இங்கே

காலமகள் ஆசை கொண்டு
பூவிரித்த மெத்தைதனில்
சேர்ந்திருக்க வாடி இங்கே

ஆடு தொட்டில் மஞ்சம் போடும்
கண்ணிர் மலையில் பக்கம் வந்து
ஆடு கண்ணா ஆடு இங்கே

ஆடு கண்ணா ஆடு இங்கே

ஜாய்புல் சிங்கப்பூர்

கலர்புல் மலேசியா
கலர்புல் மலேசியா

ஜி.ராகவன் சார் ஒளிக்கோப்பு உபயம். ஜி.ஆர் சார் ரொம்ப நன்றிங்க.

663சின்ன சின்ன மேகம்

June 15, 2008

காற்றுக்கென்ன வேலி யார் நடித்தது சுத்தமாக நினவில்லை. அமர்க்களமான மெலோடி பாடல். பாடல் துவக்கமே ஒரு பேய் வீட்டுக்குள் போகும் ஹம்மிங். சென்ற சனிக்கிழமை அன்று என்னோடு பாட்டு பாடுங்கள் ரொம்ப வருடங்கள் கழித்து பாலுஜி பாடிய பாடல் ஒன்றை நடுவர் இசையமைப்பாளர் திரு. சிவாஜி ராஜா இசையமைத்தது கேட்க நேர்ந்தது. இந்த பாடலை இசையமைப்பாளரே நிகழ்ச்சியின் முடிவில் பாடினார். எப்போது கேட்ட பாடல் என் பள்ளிப்பருவத்தில் கேட்டது. நேற்று கேட்டவுடன் இந்த பாடல் எங்கே கிடைக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டே இணையத்தில் தேடினேன் என்னவொரு ஆச்சரியம் உடனே கிடைத்தது. விடுவேனா? இதோ பாடல் ரெடி செய்து உங்கள் காதுகளூக்கும். இசையமைப்பாளர் திரு. சிவாஜி ராஜாவைப்பற்றி நான் சொல்வது விட பாலுஜியே விலாவாரியாக விவரிக்கிறார். கேளூங்கள் அப்படியே பாட்டையும் தான்.

Get this widget | Track details | eSnips Social DNA

பாடல்:சின்ன சின்ன மேகம்
காற்றுக்கென்ன வேலி
இசை: சிவாஜி ராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

சின்ன சின்ன மேகம் என்னைத்தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம் என்னைத்தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

பிடிவாத காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்கும்
புல்லுறங்கும் சோகம் கண்திறந்து பார்க்கும்
ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம் என்னைத்தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

அனல் மீது பூக்கும் அந்த கொடி பின்னல் வேறில்லை
இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகலளின் நூறு பந்தி வைக்கும் காதல்
கோதை மகள் பேரைச்சொன்னால் ராகம் இனிக்கும்

நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
சின்ன சின்ன மேகம் என்னைத்தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

662பாட்டுத்தலைவன் பாடினால் எப்.எம்ல்

June 14, 2008

பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான். யாரு இல்லைன்னாங்க? எத்தனை தடவையா போடுவீங்க? கடல் போல பாடல்கள் பாடியிருக்கிறார் பாட்டு பஞ்சமோ? இது ரொம்ப டூமச் டூமச் (இரண்டே இரண்டு தடவை தானுங்க) என்று நீங்க புலம்புவது கேட்குதுங்க. கோச்சுங்காதீங்க தலைவா., ராசய்யா இசையையும் பாலுஜியின் குரலையும் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதே… உண்மைதானே? (யப்பா எஸ்கேப்) பாடல் மறுமுறை பதிவு செய்ய வேற எந்த விதமான விஷேச நோக்கமும் இல்லைங்க. நம்ம பசங்க விருப்பப்பட்டு என்னோடைய பெயரும் சேர்த்து போடுங்கன்னு ரொம்பவே அழுதாங்க. ஹி ஹி அதான் மறுபடியும் இந்த பாடல் இப்ப அவங்க குஷியாயிடுவாங்கல்ல..

பாடல் வரிகள் மற்றும் விளக்கமும் சுந்தரின் முந்தைய பதிவில் இருக்குது ஒரு பார்வை பார்த்துட்டு பாடல் கேளூங்களேன். (இது வேறயா? உங்க ரவுசு தாங்கமுடியல சாமி..)

http://myspb.blogspot.com/2007/06/blog-post_2670.html

கோவை ரசிகர்கள் திரு. ஜீவன்லால், வெள்ளக்கினர் திரு.செந்தில் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களூக்காகவும் இந்த விருப்பப்பாடல். கேட்டுடுங்க.. மகிழ்ச்சியா இருங்க.

Get this widget Track details eSnips Social DNA

661. ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு

June 6, 2008

ஏற்கனவே ஏணிப்படிகள் படத்தில் வரும் பூந்தேனில் கலந்து என்ற அருமையான பாடலைப் பதிவுசெய்திருந்தோம்.

K.V. மகாதேவன் இசையில் சுசீலாவும் பாலுவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் ரொம்பவே ரொமாண்ட்டிக்கான பாடல். பல்லவியிலேயே வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள் இரண்டு பேரும். பாலுவின் முதல் வரியின் முடிவில் பாலுவின் சிரிப்பைக் கேளுங்கள். இந்தச் சிரிப்புக்காகவே அவர் பாடலைக் கேட்டவர்கள் எத்தனையோ ரசிகர்கள்! ‘ஊர்வசி’ ஷோபா, சிவக்குமார் நடித்த அருமையான படம் ஏணிப்படிகள்.

ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு – ஆஹா..

சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச் சிட்டு அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந் தொட்டு குணந் தொட்டு இடந் தொட்டு வலந் தொட்டு

ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு – ம்..
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு – ம் ஹும்..

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

வயசுல முல்லை மொட்டு
வாலிபம் காளைக் கட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந்தொட்டு குணந்தொட்டு இடந்தொட்டு வலந்தொட்டு

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

தாமரைக் காலிரண்டும் தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை நீ ரசிப்பே சந்தோஷமா

தாமரைக் காலிரண்டும் தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை நீ ரசிப்பே சந்தோஷமா

தாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்
தாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்

ஜதி சொல்ல நீ பொறந்தே சந்தேகமா – நானும்
சுதி சொல்ல சேத்துக்கிட்டேன் சந்தோஷமா

புல்லாலே மஞ்சம் போட்டு – ஹஹா
பூ மெத்தை மேலே போட்டு – ஹஹா
நல்லாத்தான் கடவுள் வச்சான்
நடக்கட்டும் நடக்கட்டும் நமக்குள்ளே இருக்கட்டும்

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம் சில காலமா

கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம் சில காலமா

பல்லாக்கு ஒடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
பல்லாக்கு ஒடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
சும்மாவா நானிருப்பேன் சரிதானம்மா
என்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல வருவாயம்மா

நான் ரொம்ப புதுசு மச்சான்
வயசுல சிறிசு மச்சான்
நீ கொஞ்சம் சொல்லித் தந்தா
நடக்கிறேன் சிரிக்கிறேன் அணைக்கிறேன் ரசிக்கிறேன்

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு

Get this widget | Track details | eSnips Social DNA

பாலுஜிக்கு ரசிகரின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்

June 5, 2008

பாடல் இயற்றியவர்: த.உ.உதயபானு
பாடியவர்: ‘Musicfully’ கார்த்திக்

Thamizhinil Thiruk…

பல்சுவை!: பாடும் நிலாவும் பரம ரசிகனும்!

June 5, 2008

பல்சுவை!: பாடும் நிலாவும் பரம ரசிகனும்!