Archive for July, 2008

676தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது

July 29, 2008


காதல் ரோஜாவே இந்த படத்தை நான் பார்த்ததாக சுத்தமாக நினைவில்லை இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அணைத்தும் அருமையாக இருக்கும் இனிமையான மெட்டுக்கள் அமைந்த படம். அவற்றில் ஒன்று இந்த பாடல் துவக்கமே அமைதியாக ஆரம்பிக்கும் பிண்ணனி இசை திடிரென்று குதிரை பாய்ந்து செல்வது போல் “தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது” என்று இனிமையாக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கும். முதல் சரணம் இரண்டாவது சரணங்களில் இடையில் வரும் அந்த ஹம்மிங் அடடா அடடா என வியக்கும் தேன் சொட்டுக்கள். ஆமான் நண்பர்களே “சொட்டு சொட்டு தேன்குடம் ஆடுது” என்று நம்மையும் மறந்து முணுமுணுக்கவைக்கிறது.(இந்த பாடலின் இனிமையான பாடகி குரல் எனக்கு ஸ்வரனலதா போல் தெரிகிறது. ஆணால் இணையம் சுஜாதா என்றும் சில இடங்களில் தெரிவிக்கிறது. யார் பாடியது சரியாக தெரிந்தவர்கள் சொல்லலாம்). இந்த இனிமையான பாடல். ரொம்பா நாள் கழித்து கேட்கிறேன். இதோ உங்கள் காதுகளுக்கும்.

படம்: காதல் ரோஜாவே
பாடியவர்கள்: பாலுஜி, ஸ்வர்னலதா?? சுஜாதா??
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

ஆண்:
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ
ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் ஆகிறேன்

பெண்:
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண்:
என் சாமரம் போல் தென்றல் வந்து வீசுதே
மண் மேல் ஒரு மேனகை போல் முன்னால் நின்று பேசுதே

பெண்: ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்

ஆண்: னனனன்னாஆஆ

பெண்: ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்

ஆண்: னனனன்னாஆஆ

பெண்:
உன்னால் ஒரு தாமரைப்பூ மொட்டு அவிழ்ந்து ஆடுதே
உள்ளே புது தேன்சுரந்து ஓடை என ஓடுதே

ஆண்:
வஞ்சி நீ பூச்செண்டு வந்ததோ பொன் வண்டு

பெண்:
கேட்குதே ரீங்காரம் மெல்லவே காதோரம்

ஆண்:
இன்பமோ கொள்ளை இன்பமோ
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம்

பெண்
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ

ஆண்: னனனன்னாஆஆ

என்ன ஜாலமோ

ஆண்: னனனன்னாஆஆ

ராத்திரி

ஆண்: னனனன்னாஆஆ

நடு ராத்திரி

ஆண்: னனனன்னாஆஆ

இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் ஆகிறேன்

ஆண்:
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

பெண்:
முன்னாள் மணி மாளிகையில் வண்ணக்கிளி வாழ்ந்தது
இன்னாள் நீ விரித்த ஆசை வலை வீழ்ந்தது

ஆண்: ஆஆஹாஆஆஆ

பெண்: னனனன்னாஆஆஆ

ஆண்: ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்

பெண்: னனனன்னன

ஆண்
எங்கே எது நேருமென்று யாரும் சொல்லக்கூடுமோ
காலம் நம்மை சேர்த்து வைத்து நாளூம் விளையாடுமோ

பெண்
என்னையே பந்தாடும் மன்னவன் வாலிபம்

ஆண்
என்றுமே வந்தாடும் கண்மணி ஞாபகம்

பெண்:
பார்வையில் இன்ப ஊர்வலம்
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம்

ஆண்
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

பெண்
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண்: மாயமோ

பெண்: லலலல்லாஆஆ

ஆண்: என்ன ஜாலமோ

பெண்: லலலல்லாஆஆ

ஆண்: ராத்திரி

பெண்: லலலல்லாஆஆ

ஆண்: நடு ராத்திரி

பெண்: லலலல்லாஆஆ

இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் ஆகிறேன் ஹ ஹ ஹ் ஹாஆஆஆ

பெண்
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண்
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

Advertisements

675அதிகாலை நேரம் கனவில் உன்னை

July 24, 2008

அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் என்ற இனிமையான பாடல் நான் சொன்னதே சட்டம் என்ற படத்தில் வருகிறது. இந்தபாடலில் பாலுஜியுடன் திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள். எனன்வொரு இனிமையான குரல். ஏன் வடநாட்டு ரசிகர்கள் இந்த குரலுக்கு மயங்க மாட்டர்கள்? வடநாட்டு குரல் போலவா உள்ளது? தமிழ்நாட்டு பாடகி போல் அமர்க்களமாக பாடியுள்ளார்.

இந்த பாடலை எனது வானொலி நண்பர்கள் திரு. கனேஷ், மற்றும் திருப்பூர். அகிலா விஜயக்குமார் அவர்களின் விருப்பத்தின் பேரில் வானொலியில் ஒலிப்பரப்பட்ட பாடல். நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: நான் சொன்னதே சட்டம்
பாடியவர்கள்: ஆஷா போன்ஸ்லே, எஸ்.பி.பி

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ

முல்லைப்பூவை மோதும் வெண் சங்குப்போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் சேர்த்து

வீணைப்போல உன்னை கைமீட்டும் இந்த வேளை

நூறு ராகம் சேர்க்கும் நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது

மீதம் இன்றி தந்தாள் உன்னை ஏற்றுக்கொண்ட மாது

தேவியை மேவிய தேவனே நீதான்

நீதரும் காதலில் வாழ்பவள் நான் தான்
நீயில்லாமல் நானும் இல்லையே ஏஏஏஏ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்

மாலை ஒன்று சூடும் பொன்மேனியாகும் சூடு

மாதம் தேதி பார்த்து மனதை சொல்லி கேட்டு

வேளை வந்து சேறும் நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும்

காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சில் நீங்கும் தினம் அணலில் வெந்து வாடும்

வாடலும் கூடலும் மன்மதன் வேளை

வாழ்வது காதல் தான் பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தமல்லவோ ஓஓஓஓ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ

674எனக்கொரு காதலி இருக்கின்றாள்

July 22, 2008

ஜூன் 18 206ல் ஒரு ரசிகர் பாலுஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அவர் பாலுஜீயின் குரலை எப்படியெல்லாம் ரசித்திருக்கிறார் என்றும் அவரிடம் எப்படி உரிமையுடன் கேள்வி கேட்டு அவரே பதில் தந்திருக்கிறார் என்றும் கொஞ்சம் நேரம் எடுத்து படித்துப்பாருங்கள். இந்த பதிவை இந்த பதிவின் விளக்கமாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆகையால் இதுக்கும் மேல் நான் என்ன எழுதி கிழித்து விடப்போகிறேன். இந்த பதிவை பதிந்த திரு. முரளி வெங்கட்ராமனுக்க்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி

http://swara.blogspot.com/2006/06/spb-letter-to-spb-on-his-60th-birthday.html

படம்: முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, எஸ்.பி.பி
நடிகர்: தேங்காய் ஸ்ரீனிவாசன், ஜெய்கனேஷ்
இசைள் மெல்லிசை மன்னர் எம்ஸ.எஸ்.விஸ்வநாதன்
பாடாலசிரியர்: வாலி
வருடம்: 1976

Get this widget | Track details | eSnips Social DNA

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பாவையர் என்றும்
பஞ்சமம் பேசும் பாவையர் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
தைவதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாக

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடம் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடம் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் உன்புகழ் பேச
தைவதம் ஆகும் எதிர்காலம்
எதிர்காலம்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

தேன் சுவை கிண்ணம் ஏந்தியவன்னம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோஹனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

673கண்ணில் காந்தமே வேண்டாம்

July 17, 2008

”மௌனம் பேசியதே” படத்தின் பெயரே கவிதையாக இருக்கிறது. இந்த பாடலில் பாலுஜி தன் சக்தியை முழுவதும் திரட்டி குரலில் வெளிப்படுத்தி கலக்கியிருப்பார். இந்த பாடலில் பல இடங்களில் //அழகே… யேஏஏஏஏஏஏஏஏஏ.. அமுதே..ஏஏஏஏஏஏஏஏஏஏஏ// என்று அமர்க்களமாக இழுப்பார் பாருங்கள். வடிவேல் பாஷையில் சொல்வதென்றால் “யப்ப்ப்பாஆ ஆஆஆ இப்பவே மூச்சு முட்டுதே கண்ண கட்டுதே” என்று சொல்ல தோன்றுகிறது.

//உன்னில் இருந்திருக்கேன் எனக்கே தெரியல்லையே.. பெண்ணாய் நான் பிறந்த ரகசியம் புரிகிறதே// மேலும் //அடி உனக்கேதான் வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும்
இன்றோடு உலகம் முடிந்தால் அதுபோதும்.. இது போன்ற கலக்கலான வரிகள் நிறைய உண்டு . உயிரோட்டத்துடன் மிகவும் அனுபவித்து பாடியிருப்பார்கள் பாலுஜியுடன் தாரா என்ற பாடகி உங்களூக்கு இவரைப்பற்றி தெரிந்தால் தகவல்கள் தரலாமே?. மௌனம் என்ற வார்த்தைக்கு அழுத்தம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் பாடலில் இருக்கும் அழுத்தம் வித்தியாசமானது, அதை இந்த பாடலில் நான் நன்கு உணர்ந்தேன். நீங்களூம் மௌனமாக கேளூங்கள் உங்கள் மௌனத்தை உடைக்கும் சக்தி இந்த பாடலுக்கு உண்டு ஆமாம் உங்களை அறியாமல் நன்றாக வாயை திறந்து மனம் விட்டுப் பாடிவிடுவீர்கள். என்னங்க நான் சொல்றது?. சரிதானே?.

முழுப்பாடல் கீழே உள்ளது அதற்க்கு முன் பாலுஜி ரசிகைகள் கனடா திருமதி.மஹேஸ்வரி மேடம், கோவை ராஜேஸ்வரி மேடம் அவர்களின் விருப்பபாடலாக சூரியன் எப்.எம்ல் ஒலிப்பரப்பட்ட பாடல் இது. கேட்டுவிட்டு முழுப்பாடலுக்கு செல்லுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:மௌனம் பேசியதே
நடிகர்கள்: சூர்யா, திரிஷா, நந்தா, மஹா, அஞ்சு மஹேந்திரா
இயக்குநர்: அமீர்
இசை; யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. தாரா

லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா

கண்ணில் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே… யேஏஏஏஏஏஏஏஏஏ
அமுதே..ஏஏஏஏஏஏஏஏஏஏஏ

கண்ணில் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே… யேஏஏஏஏஏஏஏஏஎ
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா

யாரோடும் வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே
அது உயிரோடு வாழும் காலம்
அது உனக்கு மட்டுமே

இனி எந்தன் மடிசேர ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள

உன் கண்ணீரை துடைத்துக் கொள்ளு என் கண்ணே
கடல்வானும் காதல் செய்யும் நம் பின்னே

உன்னில் இருந்திருக்கேன் எனக்கே தெரியல்லையே
பெண்ணாய் நான் பிறந்த ரகசியம் புரிகிறதே
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா

கண்ணில் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே… யேஏஏஏஏஏஏஏஏஎ
லலலல லாலல்லா லலலல லாலல்லா

நான் சேர்ந்த சொந்தம் நீதான் நீ இரண்டாம் தாயே
சவமாக கிடந்தேன் தனியே நான் உன்னை கலக்கவே

தனிமைக்கே விடுமுறையா நாம் இதழ் சேர்க்க முதல்முறையா

அடி உனக்கேதான் வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும்
இன்றோடு உலகம் முடிந்தால் அதுபோதும்

நம்மை பிரிக்கிறதே இரவினில் முறை இதுவே
நாட்கள் நகர்கிறதே மணநாள் தேதி சொன்னேன்

லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா

கண்ணில் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்

தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே… யேஏஏஏஏஏஏஏஏஎ
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா
லலலல லாலல்லா லலலல லாலல்லா

கண்ணில் காந்தமே

Get this widget | Track details | eSnips Social DNA

672அட வா வா ராஜா என்னோடு பாட

July 16, 2008

”அட வா வா ராஜா என்னோடு பாட” என்று துவங்கும் இந்த அழகான, இனிமையான, அசத்தலான, மெட்டமைப்பு கொண்ட இந்த மெலோடி பாடல் ”பாட்டுப் பாடவா” என்ற படத்தில் வருகிறது. பாலுஜி ஆசைப்பட்பட்டு நடிக்க துவங்கிய காலத்தில் இரண்டாவது படம் என்று நினக்கிறேன். கதாநாயகன் வேடமென்றால் உடல் கட்டுக்கோப்பில் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்களோ என்னவோ? வழக்கத்திற்க்கு மீறி அதிகம் உணவு கட்டுப்பாட்டில் இருந்துருப்பார் என்று நினைக்கிறேன் ஆகையால் சில காட்சிகளில் மிகவும் சோர்ந்து போயிருப்பார் அந்த காட்சியில் அவர் முகம் மிகவும் வாடிப்போயிருருக்கும். எனக்கு மிகவும் மனதிற்க்கு கஷ்டமாக இருந்தது. ஒரு தடவை தான் படத்தை பார்த்தேன். மேலும் இளையராஜா இசையமைப்பில் பாலுஜி பாடிய பாடல் இது. புத்தி ஸ்வாதினமில்லாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் பங்குக்கு அவர் சரியாகதான் செய்திருந்தார். பாலுஜி தன் குரலில் ஒரு வித தனித்தன்மையுடன் வழக்கத்திற்க்கு மாறாக பேசியிருப்பார் இந்த மாதிரி குரலில் பேசுவதும் பாடுவதும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. ஸ்வாதிமுத்யம் என்ற தெலுங்கு படத்திலும் அதன் தமிழாக்கத்திலும் (சிப்பிக்குள் முத்து) நடிகர் கமல்ஹசனுக்கு படத்திற்க்கு முழுவதும் விவரமில்லாத நபர் பேசுவது போல் பின்னணி பேசியிருப்பார். பாலுஜியின் உடலமைப்பு இந்த கதாபாத்திரம் சரியாக பொருந்தவில்லை போலும் ஆகையால் படம் வியாபார ரீதியில் சரியாக போகவில்லை என்று நினைக்கிறேன். இந்த படத்தில் அதிக பட்சம் பாலுஜி தான் பாடியிருப்பார். இந்த பாடலின் பல்லவிக்கு போடப்பட்ட மெட்டு அபாரம் அபாரம் அதுமட்டுமல்லாமல் சரணங்களில் ஒவ்வொரு வரிக்கும் சக்கரைப் பாகுவாக உருகுவார். அதே போல் இந்த படத்தில் மேலும் மிகவும் இனிமையான தாய் மீது பாடும் பாடலும் உண்டு அந்த பாடலும் பின்னர் வரும்.

என் மனதில் நீண்ட நாட்களாக பதிவிற்காக காத்திருந்த இந்த பாடலை வழங்கிய என் அருமை நண்பர் சென்னை திரு. அசோக் ராமமூர்த்தி அவர்கள் விருப்பத்தின் பேரில் இந்த பாடல் உங்கள் செவிகளூக்கு.. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: பாட்டுப் பாடவா
இசை: இளையராஜா
பாடகர், நடிகர்: டாக்டர். எஸ்.பி.பி

காதலே நீ படுத்தும் பாடெல்லாம்
ஏட்டிலே எழுத்திலே எழுதிட கூடுமோ
சேர்ந்தாலும் நெஞ்சுருகும் பிரிந்தாலும் நெஞ்சுருகும்
விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

கல்யாணம் ஆகாத காதலும் இங்கு உண்டு
காதலே இல்லாத கல்யாணமும் இங்கும் உண்டு
இது போல நேர்ந்தாலும்.. நேராமல் இருந்தாலும்
காதல் தொடர்கதையே
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

உள்ளத்தில் வைத்து சொல்லாமல் போகும் காதல்
உள்ளத்தை விட்டு வெளியே சொன்னாலும் செல்லாமல் போகும் காதல்
உலகே திரண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை சூடும் காதல்
மாலை சூடிக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் மனம் பொருந்தாத காதல்
எத்தனை எத்தனை காதலடி
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

671மனமெனும் நாட்டிய மேடை

July 15, 2008

சில படங்களின் கதை மிகவும் அருமையாக திரைகதை அமைத்து எடுக்கப்பட்டிருக்கும். கதையமைப்பும் காட்சிகளூம், நடிக்கும் நடிகர்களும் பொருத்தமாக தேர்ந்து எடுத்து இருப்பார்கள். ஆனால் படம் வியாபார ரீதியாக வெற்றியடையாது. அந்த வரிசையில் அமைந்த படம் என்று நினைக்கிறேன். அதேபோல, படத்தின் கதையமைப்பு சில பாடல் வரிகளே படம் சூப்பராக இருக்கும் போல என்று நினைக்க வைத்துவிடும். அந்த வகையில் வெளிவந்த “ஊமையின் ராகம்” என்ற படம் உதாரணம். இந்த படத்தை நான் பார்த்ததாக நினைவே இல்லை ஏன் நடிகர் நடிகைகள் கூட நினவுக்கு வரவில்லை (இந்த படத்தின் தகவல்கள் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). இதோ இனிமையான க்ளாசிக்கல் மெட்டுடன் ஒரு சோகப்பாடல், என் மனதை கொள்ளை கொண்டு போய்விட்டது. முதல் சரணம், துவக்கத்தில், அழகான ஜதிகள் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும். ஜதிகள் தட்டச்சு செய்து முயன்று முடியாமல் போய்விட்டது. சில ஜதிகள் இலகுவாக பாடிவிடலாம் பாடலை கேட்டு தட்டச்சு செய்வது என்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. இதை விட மிகவும் கடிமான ஜதிகள் கொண்ட பாடல்கள் உள்ளன.

படம்: ஒரு ஊமையின் ராகம்
பாடியவர்:எஸ்.பி.பி
இயக்குநர்: ஜி.குருஷங்கர்
தயாரிப்பு: ஜ்.வி.பிலிம்ப்ஸ்
வருடம்:1991

Get this widget | Track details | eSnips Social DNA

ஹோஓஓஓஓஓஓஓஓஓ
ஆஹாஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை
மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை
மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை

மயில் உந்தன் கால்களூம் ஆடுமா
மனம் இங்கு காதலை பாடுமா
மனமெனும் நாட்டிய மேடை ஹாஆஆஆ

தகதிமி தகதிமி தாளம்
விழி கண்ணீரில் போடுகின்ற கோலம்
தகதிமி தகதிமி தாளம்
விழி கண்ணீரில் போடுகின்ற கோலம்

நித்தம் இனி எந்தன் மனம் ஓடும்
என் பச்சைக்கிளி என்னைவிட்டா ஓடும்
நித்தம் இனி எந்தன் மனம் ஓடும்
என் பச்சைக்கிளி என்னைவிட்டா ஓடும்

நான் தொடுத்த பூமாலை சூடிப்பார்க்கும் முன்னாலே
என்னை விட்டு ஏன் சென்றது
என் கண்ணிரண்டு குளமானது

மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை
மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை

மயில் உந்தன் கால்களூம் ஆடுமா
மனம் இங்கு காதலை பாடுமா
மனமெனும் நாட்டிய மேடை ஹோஓஓஓஓ

உடைந்திட்ட படகு எங்கே ஓடும்
இந்த ஊமைக்குயில் எங்கே இனி பாடும்
உடைந்திட்ட படகு எங்கே ஓடும்
இந்த ஊமைக்குயில் எங்கே இனி பாடும்

காலமெல்லாம் உன் நினைவில் வாழும்
காதலென்ன காதலென்று கூறும்
காலமெல்லாம் உன் நினைவில் வாழும்
காதலென்ன காதலென்று கூறும்

தன்னந்தனி பறவை இன்று உன்னை என்னி
பாடுகின்ற காதல் பாட்டு கேட்கவில்லையா
நெஞ்சில் நினைவு வந்து பூக்கவில்லையா

மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை
மனமெனும் நாட்டிய மேடை
புயலில் ஆடிடும் வேளை

ம்ஹா மயில் உந்தன் கால்களூம் ஆடுமா
மனம் இங்கு காதலை பாடுமா
மனமெனும் நாட்டிய மேடை
ஹோஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ

670நினைத்துப் பார்க்கிறேன்

July 3, 2008

“நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கிறது” ஆமாம் எப்போது எந்த நேரத்தில் கேட்டலும் நம் மனதை ஆக்ரமிக்கும் அழகான பாடல் தான் இது. மெட்டு அப்படி போடப்பட்டுள்ளது. //நடன சாலைகளில் மலையின் சோலைகளில்// என்ற முதல் சரணமும்
//இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் ஹாஆஆ// என்ற இரண்டாவது சரணம் தொடக்கத்தில் இந்த வரிகள் அடடா அடடா என்னவொரு இனிமை அதுவும் பாலுஜியின் குரலில் போங்க சார் எப்படி பாராட்டுவது வார்த்தைகளே இல்லை. மேலும் //remember me my sweet heart, oh oh remember ohooooooo, o my darling remember// பாலுஜிக்கே உரிய ஸ்டைலில் பாடி அசத்தியிருப்பார். எப்போது ஒரு முழுப்பாடலையும் ஆங்கிலத்தில் தருவார்? மிகவும் ஏங்குகிறேன்… ஏங்குகிறேன்.

இந்த பாடலை பாலுஜியின் ரசிகர் குழுவில் உள்ள திருமதி. கமலா ரவிக்குமார் அவர்களின் விருப்பப்பாடலாக வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

படம்: அவள் தந்த உறவு
பாடியவர்: எஸ்.பி.பி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA

நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது

ஹ்ஹ சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது

remember me my sweet heart
oh oh remember ohooooooo
o my darling remember

நடன சாலைகளில் மலையின் சோலைகளில்
நடன சாலைகளில் மலையின் சோலைகளில்
நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன
நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன

கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்
கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்

விழுந்த என்னங்களின் தடங்கள் இருக்கின்றன

oh oh remember ohooooooo
o my darling remember

இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் ஹாஆஆ
இரவு மேடைகளில் மழையின் சாரல்களில்

உறவு கோலம் இடு உலகம் அழைக்கின்றது
உறவு கோலம் இடு உலகம் அழைக்கின்றது

வசந்த புஷ்பங்களில் அசைந்த சந்தங்களில்
பிறந்த சொந்தங்கள் தான் கனவு வளர்க்கின்றது

oh oh remember ohooooooo
o my darling remember

நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது

ஹுஹ்ஹ சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
oh oh remember ohooooooo
o my darling remember

669மணிமணியாக- நாயகன்(புதுசு கண்ணா புதுசு)

July 1, 2008

சில வாரங்களாக பாலுஜி ரசிகர்கள் தாங்கமுடியாத சோகம் அதாங்க இரண்டு சிகரங்கள் நடித்த படங்களில் (தசாவதாரம், குசேலன்) பாடல்கள் பாட வாய்ப்பு தரவில்லை என்ற சோகம் தான் காரணம். அதன் தாக்கம் பாலுஜி ரசிகர் யாகூ குழுவில் அதிகம் தெரிந்தது. குறிப்பாக சாத்தூர் சங்கர் மற்றும் தீவிர பாலுஜி ரசிகர்கள் ரொம்பவும் நொந்து தான் போனார்கள் ஏன் நானும் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

என்னுடைய கணிப்பில் தாசாவரம் படத்தில் கமல் சர்தார்ஜி வேஷத்தில் பாடும் ஓஹொ சனம் ஒஹொ சனம் பாடலையும், குசேலனில் சங்கர் மகா தேவன் பாடும் சினிமா சினிமா பாடலையும் பாலுஜிக்கு தந்திருந்தால் பட்டையை கிளப்பி புழுதி பறக்கச்செய்திருப்பார். இது என் கருத்து. நீங்களூம் தங்களின் ஆதங்கத்தை பாலுஜி எந்தெந்த பாடல் தந்திருக்கலாம் என்று சொல்லலாமே?.

நிற்க, விஷயத்திற்க்கு வருகிறேன். மேற்படி மிகவும் வருந்தி வருந்தி கேட்டுக்கொண்ட நம் பாலுஜி ரசிகர்களை சமாதனப்படுத்த இதோ வரவிருக்கும் புதிய படமான “நாயகன்” படத்தில் இருந்து தன் இனிமையாகவும், மணி மணியாகவும் பாடும் நம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் புதுப்பாடல் இது. பாலுஜியுடன் சித்ரா மேடமும் பாடியிருக்கிறார்கள். படத்தில் யார் நடித்தது ஆர்.கே ரிதிஸ் இவர் யார் வாரிசுன்னு தெரியல (யாரவது வாசிசாக இருந்தாதானே சினிமா உள்ள சீக்கிரம் நுழைய முடியும்). அழகான மெட்டு, அதற்கு சிகரம் வைத்தாற் போல் வரிகள். பாடல் கலக்குகின்றன. நீங்களூம் கேட்டுத்தான் பாருங்களேன்.

இந்த பாடலை நமது அன்பின் சிகரம் பாலுஜி சாத்தூர் சங்கர் மற்றும் அவரின் அபிமான ரசிகர்களுக்காகவும் எனக்கும் சேர்த்து வழங்குகிறார்.

படம்: நாயகன் (புதுசு கண்ணா புதுசு எல்லாமே புதுசு)
நடிகர்: ஆர்.கே, ரிதிஸ்
இயக்குநர; சரவனா சக்தி
இசை: மரியா மனோகா
வருடம்: 2008

மணிமணியாக என்னில் மழையென பொழிந்து
உடலிலே கலந்து உயிரிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

பன்னிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களூம் பசித்த நேரங்களூம்
என்னில் மறந்திட செய்தாய்

உன் இதழ்களில் உன்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்

உன் மனதினில் என் முகம் வரை படம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவன்

என்னை ஆளவந்த ஒரு தேவதை நீயடி

பெண்மையை வெல்ல வந்த என் மன்மதன் நீயாட

மணிமணியாக என்னில் மழையென பொழிந்து
உடலிலே கலந்து உயிரிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களூம் பசித்த நேரங்களூம்
என்னில் மறந்திட செய்தாய்

என் வீட்டிலே உன் கொலுசு ஒலி கேட்குமா

என் தோட்டத்தில் உன்னோட கைக்குட்டை போக்குமா

பிஞ்சிலே பழுத்த என் ரகசிய காதலை
உன்னிடம் சொல்லவே வார்த்தை இல்லை

தோன்றிய எண்ணங்கள் உன்னிடம் சொல்லாமல்
கண்கள் இரண்டுமே தூங்கவில்லை

இது வரை ஒருதலை காதல் கஷ்டங்கள்
இனி இல்லை இனி இல்லை எந்த நாளுமே

கடவுள் கருவறை கதவுகள் திறந்திட
காதலும் காதலும் சேர்ந்து கொள்ளுமே

சிறுபிள்ளையாய் உன்னை கண்ட ஞாபகம்
சிலிர்த்திட வைக்குது ஹ எந்தன் மேனியில்

வயதுக்கு வந்தது உன்னைப் பார்த்து தான்
பரவசம் அடைகிறேன் உந்தன் மார்பினில் தான்

கனவெது நிஜமெது பிடிபட மறுக்குது
உணர்வுகள் வெடித்திட உனக்குள் சரணடைந்தேன்

மணிமணியாக என்னில் மழையென பொழிந்து
உடலிலே கலந்து உயிரிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

என் தோளிலெ என் ஜீவனும் தூங்குதே

என் சாலையில் உன்னோட வாசனை வீசுதே

உனக்கென வாழ்வதும் உனக்கென வீழ்வதும்
உன்மடி சாய்வதும் பிடிக்கிறதே

உனக்கென தவிப்பதும் உனக்கென அழுவதும்
உனக்குள்ளே தொலைவதும் இனிக்கிறதே

முதல் முறை பார்த்தது முதல் முறை சிரித்தது
முதல் முறை ரசிக்கிறது பிடிக்கிறதே

முதல் முறை நினைத்தது முதல் முறை அணைத்தது
முதல் முத்தம் கொடுத்ததும் இனிக்கிறதே

உயிருக்குள்ளேயே உன்னை மறைத்துவைக்கிறேன்
இதழ்களில் தேனை திறந்து விடுகிறேன்

என் இதயத்திலே உன்னை ஒளித்துவைக்கிறேன்
அனுஅனுவாய் என்னை திருடி செல்கிறாய்

உனக்குள்ளே நான் எழ எனக்கு நீ எழ
இருவரும் ஒருமுறை இணைந்திடும் நாளிதுதான்

மணிமணியாக என்னில் மழையென பொழிந்து
உடலிலே கலந்து உயிரிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களூம் பசித்த நேரங்களூம்
என்னில் மறந்திட செய்தாய்

உன் இதழ்களில் உன்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்

உன் மனதினில் என் முகம் வரைபடம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவன்

என்னை ஆளவந்த ஒரு தேவதை நீயடி

பெண்மையை வெல்ல வந்த என் மன்மதன் நீயாட

Get Your Own Hindi Songs Player at Music Plugin