Archive for September, 2008

690மஞ்சள் நிலா இரவில்

September 27, 2008

படத்திற்க்கு திருமூர்த்தி என்று எதை நினைத்து பெயர் வைத்தார்கள் என்னவோ எனக்கு தெரியாது. ஆணால் இந்த பாடலின் மெட்டு உங்களூக்கு பழக்கப்பட்ட மெட்டாக தான் இருக்கும். இந்த பாடல் வந்த புதிதில் பாடல் மெட்டின் மீது ஒரு விவாதமே நடந்தது என்று சொல்லலாம். பாடலின் இனிமையை யார் பார்க்கிறார்கள் எங்கே எதிலே பிரச்சனை உருவாக்கலாம் என்று ஒரு கூட்டமே இருக்கிறதே அவர்களூக்கு அதுவே பழக்க மாயிட்டது என்னத்தே சொல்ல? கேப்டன் விஜயகாந்த் நடித்த இந்த படம் அடிதடி படம் என்று நினைக்கிறேன் நான் பார்த்ததாக நினவுஇல்லை. இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் இந்த பாடலின் மெட்டு மற்றும் இசையமைப்பு கேட்பவரின் தலையை தன்னையறியாமல் அசைக்கவைக்கும் அந்த தபேலாவின் தாக்கம் உண்மைதானே நண்பர்களே?. மேலும், பாலுஜியின் குரலில் பாடல் வரிகள் உச்சரிப்பு முக்கியமாக // ஹ பார்த்தால் பதினாறு தான்.. பாவை பழச்சாறு தான்.. பூச்சூடும் புவையின் பூவிதழில் தேன் வடியாதோ// இந்த வரிகளீல் ஆஹா ஆஹா .. பூவிதழில் தேன் வடியுதோ இல்லையோ நம் காதில் தேன் வடியவில்லை… அலை அலையாய் பாயுது… அனுபவியுங்கள்.. மகிழ்ச்சியுடன் ரசியுங்கள் படத்தைப் பார்க்கமலே கண்னை மூடிக்கொண்டு ரசிக்கலாம். இதே போன்ற பலபாடல்கள் உள்ளன ஒன்றா ரெண்டா? காத்திருந்து பாடல்கள் கேட்டாலும் அதிலும் ஓர் இனிமையான் சுகம் தான், அவையும் உங்கள் காதுகளூக்கு தேனாக பாயும்.. அதுவரை காத்திருங்கள்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: திருமூர்த்தி
நடிகர்: விஜயகாந்த்

மஞ்சள் நிலா இரவில் திருமூர்த்தியைப் பார்த்தேன்
மெல்லிய வாடைக் காற்றில் அவன் கீர்த்தியை கேட்டேன்
மஞ்சள் நிலா இரவில் திருமூர்த்தியைப் பார்த்தேன்
மெல்லிய வாடைக் காற்றில் அவன் கீர்த்தியை கேட்டேன்

அவன் அழகனோ அன்பு தலைவனோ
நெஞ்சில் நிலைத்திடும் பச்சைத் தமிழனோ

நிலவுக்கெல்லாம் மன்னவன் வந்தானோ
புயலுக்கு இன்று மையலை தந்தானோ

செவ்விளநீரை தாங்கி நிற்கும் பூங்கொடியைப் பார்த்து
ஒவ்வொரு நாளூம் வாங்கிக் கொண்டான் கையிரண்டை சேர்த்து

விளக்கேற்றும் வரையிலே வைகைப் பூங்கரையிலே
காத்திருந்தேன் கண்கள் பூத்திருந்தேன்

வளையோசை குலுங்கிட வாவென்று முழங்கிட
ஓடிவந்தேன் உன்னை நாடி வந்தேன்

சேயாடும் இரு வேலாடும் விழி வேலாடும்
உயிர் காதல் சித்திரமே

ஹ பார்த்தால் பதினாறு தான்
பாவை பழச்சாறு தான்
பூச்சூடும் புவையின் பூவிதழில் தேன் வடியாதோ

ஐவகை அம்பை மன்மதன் விட்டானோ
மைவிழி பெண்ணை முற்றுகையிட்டானோ

என்னடியம்மா ஆதி அந்தம் அனல் மெழுகா ஆச்சா
சொல்லடியம்மா ராத்திரியில் தூக்கம் கெட்டுப் போச்சா

கருநாகப் பழத்திலே கள்ளூரும் பொழுதிலே
நான் வரவோ கண்ணே நான் தொடவோ

விரல் தீண்டும் இடத்திலே விளைகின்ற சுகத்திலே
வேர்த்திடுமோ ஆசை வேர் விடுமோ

காதோரம் இரு கண்ணோரம் தினம் வாயோரம்
சொல்லும் சோலைத் தென்றலிலே

வா வா நிழல் மேகமே வந்தால் நலமாகுமே
நாள் தோறும் கோடையில் நீவரத்தான் நான் தவித்தேனே

சிக்குன ஆடை கட்டிய சித்தாட
சில்லென வாடை கொஞ்சிய மொட்டாட

பத்தரை மாத்து தங்கத்தைப் போல பளப்பளக்கும் தேகம்
சித்திரை மாச வெயிலைப் போல மினுமினுக்கும் நேரம்

மஞ்சள் நிலா இரவில் திருமூர்த்தியைப் பார்த்தாள்
மெல்லிய வாடைக் காற்றில் அவன் கீர்த்தியை கேட்டாள்

அவள் அழகியோ வண்ண குமரியோஓஓஒ
நெஞ்சில் நிலைத்திடும் தங்கப் பதுமையோ

செவ்விள நீரை தாங்கி நிற்கும் பூங்கொடியைப் பார்த்து
ஒவ்வொரு நாளூம் வாங்கிக் கொண்டான் கையில் இரண்டை சேர்த்து

689பெண்மை என்பது..

September 19, 2008

பெண்மை என்பது அட உண்மை இல்லையா என்ற பாடல் நடிகர் கார்த்திக் நடித்த காதல் கீதம் என்ற படத்தில் வருகிறது. பாடல் விளக்கத்தை என்னதே போய் எழுதறது பார்த்த படங்களே காட்சிகள் நினவுக்கு வரமாட்டீங்குது. போங்க சார். இணையத்தில் தேடி தேடி முடியல சார். யாராவது சொல்லுங்க. இனிமையான செமி சோகப்பாடல். பதியாமல் இருக்க முடியவில்லை. நீங்களும் கேட்ருங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

லலலாஆஅ லலலாஆஆ
பெண்மை என்பது அட உண்மை இல்லையா
பெண்மை என்பது அட உண்மை இல்லையா
காதல் என்றா வானவில்லின்
கையில் சேர்வதில்லையா
யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

பெண்மை என்பது அட உண்மை இல்லையா
காதல் என்றா வானவில்லின்
கையில் சேர்வதில்லையா
யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

லலலாஆஅ லலலாஆஆ

குளிர்ந்த ஏரி தண்ணீர் வெறும் நீரானதே
திறந்த பூவின் தேனும் கண் நீரானதே
காதல் வந்து எறித்த நெஞ்சு காயமானதே
காயம் செய்த கண்கள் இன்று மாயமானதே
நீ இல்லாத ஞாபகங்கள் வேறானதே
நீ இல்லாத ஞாபகங்கள் வேறானதே
நோயில்லாதபோது மேனி நூலானதே

பெண்மை என்பது ஹஹ லலலாஆஆ

மறந்து போக நினைத்தேன் நடு உன் தொல்லையே
இறந்து போக நினைத்தேன் தடு தாய் முல்லையே
வாழ்வும் இல்லை சாவும் இல்லை என்ன வாழ்க்கையோ
காதலுக்கு கண்னீர் மீது ரொம்ப வேட்கையோ
முள்ளின் மீது மெத்தை வைத்து நான் தூங்கவோ
முள்ளின் மீது மெத்தை வைத்து நான் தூங்கவோ
மரணம் வந்த பின்பு வந்து நீ காணவோ

பெண்மை என்பது அட உண்மை இல்லையா
பெண்மை என்பது அட உண்மை இல்லையா
காதல் என்ற வானவில்லின்
கையில் சேர்வதில்லையா
யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

லலலாஆஅ லலலாஆஆ
லலலாஆஅ லலலாஆஆ

688தாழம்பூ சேல மானே உன் மேல

September 11, 2008

படம்: சந்திரமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பி & சித்ரா

ஆண்:
தாழம்பூ சேல ……
தாழம்பூ சேல மானே என் மேல
தாகத்தை சொல்லுதுடி தொட்டுகொள்ள வேகத்த சொல்லுதுடி

பெண்:
தாழம்பூ சேல மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா தொட்டுகொள்ளும் வேகத்த சொல்லுதய்யா

ஆண்:
இளவட்டம் இரண்டும் சரிமட்டம்
மனமெங்கும் இன்பம் கொடிகட்டும் கொடிகட்டும்
சுகம் சொல்லி உன்னை சுத்தும்

பெண்:
தாழம்பூ சேல மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா தொட்டுகொள்ளும் வேகத்த சொல்லுதய்யா

ஆண்:
தாமரைப்பூவுக்கு தாலியும் கட்டி தாங்கி புடிச்சேன் மா..னே
வாலிப கூட்டுக்கும் நேரமும் வந்தது வெட்கம் இனியென்ன ஹமா..னே

பெண்:
பொங்கி வந்தாள் இந்த தங்ககுடம் உங்கள பெத்தா மாமா
அந்தரங்க சுகம் சந்தம் மட்டும் அப்புறம் அப்புறம் மாமோய்

ஆண்:
அடி இதுஎன்ன பேச்சு அனலாச்சு மூச்சு
இனி உள்ளம் தாங்காதடி

பெண்:
தாழம்பூ சேல மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா தொட்டுகொள்ளும் வேகத்த சொல்லுதய்யா

பெண்:
தூங்கி கிடக்கும் ஆசை மனச தட்டி எழுப்பாதே மா..மா
தாங்கி புடிச்சதும் போதும் போதும் தள்ளி நில்லுங்க ஆ..மா

ஆண்:
அங்கங்கள் அங்கங்கு பொங்கிடும் அழகு ஆசையை தூண்டுது மா..னே
தங்க குடத்துக்குள் தேனை எடுக்க தவிச்சு நிக்குறேன் மா..னே

பெண்:
அட இது என்ன கூத்து உனக்கென்ன ஆச்சு
அதுக்கொரு ஒரு நேரம் உண்டு

ஆண்:
தாழம்பூ சேல மானே என் மேல
தாகத்தை சொல்லுதுடி தொட்டுகொள்ள வேகத்த சொல்லுதுடி

பெண்:
தாழம்பூ சேல மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா தொட்டுகொள்ளும் வேகத்த சொல்லுதய்யா

ஆண்:
இளவட்டம் இரண்டும் சரிவட்டம்

பெண்:
மனமெங்கும் இன்பம் கொடிகட்டும் கொடிகட்டும்
சுகம் சொல்லி உன்னை சுத்தும்

ஆண்:
தாழம்பூ சேல மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா தொட்டுகொள்ளும் வேகத்த சொல்லுதய்யா

Get this widget | Track details | eSnips Social DNA

687பேசும் பூவே பூவே..

September 10, 2008

ஓர் அழகான சோகப்பாட்டு இது. புதுப்பொண்ணு படத்தில் வரும் இந்த பாடல் நம் மனதை என்னென்னவோ செய்யும் நிச்சயமாக. இதோ சில சாம்பிள் வரிகள்
//அன்னை மடியில் சில காலம் இருந்தேன்
அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்
பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்
உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்
காதலுக்கேஏஏஏஏ.. காதலுக்கே வாழ்ந்திருந்து
கந்தல் என ஆணேன்
எல்லாமே அன்று இருளாச்சு உன்னால் விடியும்//

இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் தேடி தேடி ஓய்ந்து போய் தான் பாடலை பதிவேற்றுகிறேன். நம்ம் ஜி.ஆர், கானா பிரபா போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் வரை எனக்கென்ன கவலை. த்கவல்கள் தந்துட மாட்டாங்களா என்ன? நீங்களும் தான் கொஞ்சம் சோகத்தில் மூழ்குங்களேன்.

படம்: புதுப் பொண்ணு
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

மூனாம் பிறையே உன்னை மார்பில் அணைச்சேன்
இன்று முதலா கொஞ்சம் வாழ நினைச்சேன்

பூ உதிர்ந்தா கோர்த்துக்கலாம் நானே உதிர்ந்தேன்
கானலுக்கு ஆசைப் பட்டு தீயில் நடந்தேன்
ஆண்டவனே..ஏஏஏஏஏ.. ஆண்டவனே போதுமடா
ஆண் பிறப்பே வேண்டாம்
பெண் நேசம் வெறும் பொய் தானோ இன்னும் எதற்கு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

அன்னை மடியில் சில காலம் இருந்தேன்
அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்
பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்
உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்
காதலுக்கேஏஏஏஏ.. காதலுக்கே வாழ்ந்திருந்து
கந்தல் என ஆணேன்
எல்லாமே அன்று இருளாச்சு உன்னால் விடியும்

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாணம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

686சின்ன எஸ்.பி.பியின் வானொலிப்பேட்டி

September 9, 2008

ஒரு ஞாயிறு அன்று மாலை நேரத்தில் திடிரென ரேடியோவை பாடவைத்ததும் சுரியன் எப்.எம்ல் (என்னடா எப்பப்பார்த்தாலும் சூரியன் எம்.எம் மட்டும் தான் இவரின் காதுக்கு கேட்குமா வேறு எந்த அலைவரிசையும் காதுக்கு கேக்காதா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சார். என் கைபேசியில் அல்லது எம்பி3 ப்ளேயரில் சூரியன் எப் எம் மட்டும் தான் மிகவும் துள்ளியமாகவும் எந்த வித தடங்களூம் இல்லாமல் கேட்கிறது வேறு எந்த அலைவரிசையும் விட்டு விட்டு கேட்கிறது என்னங்க செய்றது?) நம்ம பாலுஜியின் வாரிசு சின்ன எஸ்.பி.பி கல்யாண் சரண் (சரண் என்று தான் அதிகம் பேருக்கு தெரியும்) கல்யாண் சரண் நானே மறந்து இருந்தேன். அந்தபெயரை குறிப்பிட ஆசையாய் இருந்தது. சரோஜா படக்கதை மற்றும் அதில் நடிக்கும் தனது நண்பர்களைப்பற்றியும் பேசினார் அத்துடன் த்ன் கதாபாத்திரத்தையும் விலாவாரியாக பேசியது நம்ம பாலுஜி அவர்கள் சினினப்பையானாக இருக்கும் போது பாடல்கள் பாடியுள்ளாரே அந்த குரலை மீண்டும் கேட்ட உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது. பேட்டி பாதியில் இருந்து தான் சேமிக்க முடிந்தது இருந்தும் கேட்க இனிமையாக இருந்தது. நீங்களூம் கேளூங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

685மீண்டும் சந்திப்போம்

September 8, 2008

எப்பவும் நான் தான் வானொலிகளில் பாலுஜி பாடிய பாடல்களை எஸ்.எம்.எஸ் மூலம்
செய்தி அனுப்பி எனது நண்பர்களூக்காக விரும்பிக்கேட்பேன். இந்த பதிவு மூலம் ஒரு
வித்தியாசத்திற்காக சூரியன் எப்.எம்ல் பணிபுரியும் எனது நண்பர் இனியவன் ரவிவர்மா
அவர்கள் இந்த தளத்தில் அவருக்காக விரும்பி கேட்டுகொண்டதற்க்கு இணங்க இந்த
பாடலை தேடீப்பிடித்து பதிகின்றேன். எனது ஒலிநாடாக்களில் பதியப்பட்டிருந்த இந்த பாடல்
ரொம்ப வருட காலங்களூக்கு முன் பதிந்தது தரம் எப்படி இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே மறுபடியும் புதியதாக முயற்சி செய்து (தேடுவதற்க்கு சிரமப்பட்டேன் என்பது வேறு விஷயம்) பதிந்துள்ளேன். பாலுஜி எவ்வளவு கெமிஸ்ட்ரியுடன் அப்பவோ பாடிகலக்கி நம்பளையும் கலங்கடிக்கிறார். நீங்களும் கேட்டு மகிழ்ச்சியாயிருங்கள்.

இந்த பாடல் கேட்டு பதியும் போது ஒன்று நினவுக்கு வந்தது. இன்று அதிகாலை (5.30 மணிக்கு) ஈரோடில் இருந்து ஒரு நேயர் நண்பர்கள் மாதத்திற்க்கு ஒரு முறையாவது சந்தித்துக்கொள்ளவேண்டும் அப்போது தான் இளமைக்காலங்கள் நினைவுக்கு வரும் என்று அனுப்பியிருந்தார். அதற்க்கு திரு. ரவிவர்மா அவர்கள் அவரின் சொந்த கருத்தாக
வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி சந்திப்பதாம்? (ஆர்.வி சார் இந்த காலத்தில் அதெல்லாம் ரொம்ப சகஜம் சார்) தூய நண்பர்கள் சந்தித்துக்கொள்ளாமல் இருப்பதே நன்று. என்று அவரின் சொந்தககருத்தை தெரிவித்தார். அவர் எதை நினைத்து சொன்னார் என்று எனக்கு தெரியாது. கானாமல் பேசிக்கொண்டால் நட்பு மீண்டும் அதிகம் பலப்படும் என்று நினைத்து சொல்லியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் இருக்கட்டும்.
ஆர்.வி சார் பயப்படாதீங்க சார். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம். உங்கள் மனநிலையை இந்த பாடலில் வரும் வரிகள் போல் ”இன்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டுள்ளோம்”. சரீங்களா? மீண்டும் சந்திப்போம்..

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: சிகப்பு மலர்கள்
பாடியவர்: எஸ்.பி.பி.

ஒரு நாடகத்து மேடையிலே ஒன்றாக
ஆடித்திரிந்தோம் பாடித் திரிந்தோம்
இடைவேளை வருவது போல்
இந்நாளில் பிரிகின்றோம்
இந்நாளில் பிரிகின்றோம்…. ஆணால்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்
இன்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால்
மீண்டும் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்
இன்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால்
மீண்டும் சந்திப்போம்

இன்று ஒருவரை ஒருவர் பிரிந்த போது
மீண்டும் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்

பள்ளிப்படிப்பை புள்ளிமானிடம் படித்தேன்
அதை அர்த்தப்படுத்தி சொல்லுவாளேன துடித்தேன்
ஆஆஆஆஆ
பள்ளிப்படிப்பை புள்ளிமானிடம் படித்தேன்
அதை அர்த்தப்படுத்தி சொல்லுவாளேன துடித்தேன்

ஒரு விடைதான் பெற காத்திருந்தேன்
நெடுநாள் எதிர் பார்த்திருந்தேன்
ஒரு விடைதான் பெற காத்திருந்தேன்
நெடுநாள் எதிர் பார்த்திருந்தேன்

அதில் கிடைக்காத போதும்
மனம் சலிக்காமல் பாடும்
இந்த இரு கோடும் ஒருநாளில் சேரும் பாருங்கள்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்
இன்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால்
மீண்டும் சந்திப்போம்

நெஞ்சைப் பறித்துக் கொண்டு போனவள் சிரிக்க
இளம் சித்தம் கலங்கி கொள்ளைப் போனவன் தவிக்க
நெஞ்சைப் பறித்துக் கொண்டு போனவள் சிரிக்க
இளம் சித்தம் கலங்கி கொள்ளைப் போனவன் தவிக்க

இதை அறிவாள் அந்த பூங்குழலி
அலைப்போல் எழும் தேனருவி
இதை அறிவாள் அந்த பூங்குழலி
அலைப்போல் எழும் தேனருவி

இது சுகமான காதல்
ஹஹ ஒரு சுவையான மோதல்
அந்த மணநாளில் என்னைச்சேரும்
வாழ்த்துக் கூருங்கள்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்
இன்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால்
மீண்டும் சந்திப்போம்
இன்று ஒருவரை ஒருவர்
பிரிந்த போது மீண்டும் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்

684பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுப்பு

September 5, 2008

பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுப்பு

முதலில் பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுபபை வழங்கிய சூரியன் பண்பலைக்கும் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்களூக்கும். கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 1.9.2008 அன்று சூரியன் பண்பலை இனிய இரவு நிகழ்ச்சியில் பாலுஜியின் சிறப்பு நிகழ்ச்சி திடிரென்று ஒலிப்பரப்பினார்கள். தினமும் இரவு 10 மணியளவில் இனிய இரவு நிகழ்ச்சியை கேட்பேன் அன்று மட்டும் வேலை பளுவின் காரணமாக அசதியுடன் தூக்க கலக்கத்தில் இருந்த என்னை பீளமேடு. திரு,கனேஷ் அவர்கள் ”பேசு மனமே பேசு” என்ற என் கைபேசி அழைப்பு பாடலுடன் அழைத்து ரவி சார் பாலுஜியின் பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது கேளூங்கள் என்ற் தகவலை தெரிவித்தார். அடடடே என்று அவசர அவசரமாக நிகழ்ச்சியை சேமிக்க முயற்சி செய்வதற்க்குள் அவரைப் பற்றிய சில தகவல்கள் போய்விட்டிருந்தன. அமைதியான குரலையுடைய அறிவிப்பாளர் திரைக்கதையை திறம்பட அறிவிக்கும் அன்பு அறிவிப்பாளர் திரு. கே.எஸ். நாதன் அவர்கள் பாலுஜியின் வாழ்க்கையில் ஏற்பட்ட தகவல்களை அழகுடன் சொன்னது மறக்கமுடியாது. அதனுடன் பாலுஜியின் பாடல்களூம் ஒலிப்பரப்பினார். அதன் ஒலிக்கோப்பை உஙகளுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதில் உள்ள பாடல்கள் ஏற்கெனவே நீங்கள் கேட்டது தான். இருந்தாலும் இனிய இரவு நிகழ்ச்சியில் கேட்பதற்க்கு இன்னும் இனிக்கிறது.

குறிப்பு: உங்கள் மதிப்பான 40 நிமிட நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை ஆகவே இந்த பதிவை திறந்து ப்ளேயரின் உள்ள TRACK DETAILS க்ளிக் செய்தீர்களானால் இறக்குமதி செய்யும் வகையில் பதிந்துள்ளேன். ஆகவே இந்த கோப்பை இறக்குமதி செய்து கேட்கலாம் நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழலாம். மேலும் காற்ற்லையில் ஒலிப்ப்ரப்பும் போது பதிவு செய்யப்பட்டதால் ஒலியின் தரம் சிறிது குறைவாக இருக்கும் தங்களூக்கு தேவையான ஒலியின் தரத்தை கூட்டி வைத்துக்கொள்ளவும். – கோவை ரவீ.

Get this widget | Track details | eSnips Social DNA

683கடவீதி.. எப்.எம்ல்

September 1, 2008

அதிகாலையிலே சூரியன் எப்.எம் பண்பலை அறிவிப்பாளர் எனது இனிய நன்பர் இனியவன் ரவிவர்மா சார் எனக்காகவும் கோவை ரசிகர்கள் திரு. எஸ்.பி. சன்முகம் மற்றும் திரு. ந்ல்லமுத்து அவர்களூக்கும் சேர்த்து நம்ம கட வீதி கலகலக்கும் என்ற பாடலை ஒலிப்பரப்பினார். ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன். இதோ உங்களூக்குகாகவும். இது போன்று கலக்கலான பாடல் ராசய்யா பாலுஜி கூட்டணியில் எப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓஒ கேட்கபோகிறோம்?. ஏக்கமாக இருக்கிறது.

Get this widget | Track details | eSnips Social DNA

இதோ முழுமையான பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA