Archive for October, 2008

697எந்தன் தேவனின் பாடல் என்ன

October 31, 2008

//நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, அள்ளவோ உண்ணவோ
அள்ளவோ உண்ணவோ//

பொன்மகள் வந்தாள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த பாடல் துவக்கத்திலேயே ஓர் குதுகலமான ஹம்மிங் வரும் அதை மேலே உள்ள வரிகள் அதிகப்படுத்திவிட்டன… நீங்களூம் அனுபவியுங்கள்..

படம்: பொன் மகள் வந்தாள்
படியவர்கள்: எஸ்.பி.பி. பி.சுசீலா
இயக்குனர் விஜய நாராயணன்
தயாரிப்பாளர் பழனியப்பன்
மனோரமா மூவீஸ்
நடிப்பு ஜெய்சங்கர்
லக்ஸ்மி
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு ஏப்ரல் 13, 1972

சுசிலா:
ஆஆஆஆ.. ஆஆஆஆ
லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஅ

பாலு
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஅ

சுசிலா:
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

லலல்லலலா

பாலு:
ஆஆஆஆ

சுசிலா:
லலல்லா

பாலு:
ஆஆஆஆ

சுசீலா:
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏதோ ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏதோ ஏக்கம் என்ன

பாலு:
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ உண்ணவோ
அள்ளவோ உண்ணவோ

எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சிப் பெண் கண்ணுக்குள் நீராட கண்டேனே

சுசீலா:
நீலவானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் பாடல் என்ன வாழ்கவென்று பாடுங்களேன்
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

பன்னீரும் மை வன்ண் ஜவ்வாதும் கண்ணோடு
கொண்டாடும் என்மேனி உன்சொந்தம்

பாலு:
வெள்ளி வன்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளிக்கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ

சுசிலா:
எந்தன் தேவனின் பாடல் என்ன

பாலு:
லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஆ

பெண்:
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements

696எங்கே நிம்மதி நிம்மதி என்று

October 25, 2008


//தாயும் துன்பம் தீர்ப்போம் என்று வேலக்காக வேஷம் போட்டேன் வாயில் வந்த பொய்யைச் சொல்லி, நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன், வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம் போல வேலையைலக் காட்ட, மந்தகாசப் புன்னகையாலேகன்னியவளும் காதலைச் சொல்ல
நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் கிழவி இந்த நிலையில் எவன் இருந்தாலும் ஆக வேண்டும் அவனே துறவி இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா
மனுசனுக்கு நிம்மதி வருமா ?//

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

படம்: நடிகன்
நடிகர்: சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா
பாடியவர்: எஸ்.பி.பி
இயக்குநர்: பி.வாசு
வருடம்: 1990

Get this widget | Track details | eSnips Social DNA

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

பள்ளிக்கூடம் படிக்கும் போது
பாடத்திலே நிம்மதி இல்லே
பாடமின்றி விடுமுறை என்றால்
காசு இன்றி நிம்மதி இல்லே
காசுக்காக மேலே படிக்க
கல்லூரியில் சீட்டும் இல்ல
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா
வேலையின்றி நிம்மதி இல்லே
துன்பம் மறக்க வெளியே சென்றால்
பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்
கனவினிலும் நிம்மதி இல்லே
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே
கொஞ்சம் நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

தாயும் துன்பம் தீர்ப்போம் என்று
வேலக்காக வேஷம் போட்டேன்
வாயில் வந்த பொய்யைச் சொல்லி
நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்
வந்த இடத்தில் வாலிப வயது
வழக்கம் போல வேலையைலக் காட்ட
மந்தகாசப் புன்னகையாலே
கன்னியவளும் காதலைச் சொல்ல
நொந்து போன மனதுக்குள்ளே
வந்து வந்து போகும் கிழவி
இந்த நிலையில் எவன் இருந்தாலும்
ஆக வேண்டும் அவனே துறவி
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா
மனுசனுக்கு நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

695ஊர் உறங்க நீ உறங்க

October 24, 2008

//வாழ்ந்தாலும் உன்னோடு வீழ்ந்தாலும் உன்னோடு
என் காதல் எந்நாளூம் மாஆஆ றாஆஆ து மானே//

”ஊர் உறங்க நீ உறங்க” இந்த பாடலும் மிக மிக இனிமையான மெட்டமைந்த சோகப்பாடல் எனலாம். பாலுஜியின் பழைய பாடல்கள் தமிழிலேயே கடல் போல் இருக்கும் எப்படி தேடி தேடி பதிவதோ? தலையே சுத்துகிறது. தெலுங்கிலும், கன்னட மொழிகளில் கேட்கவே வேண்டாம் இது போல பழைய பாடல்கள் மலைப் போல் குவிந்து கிடக்கிறது. என்னைப்பொருத்த வகையில் இசையமைப்பாளர்கள் பாடலுக்கு மெட்டமைப்பதை விட, இசையமைப்பாளர்களின் மெட்டுக்கு பாட்டு எழுதுவது மிகச்சுலபமாக தெரிந்தாலும். ரொம்ப சிரமப்படவேண்டும் போல் தெரிகிறது. ஏனென்றால் பாடல் மெட்டின் இனிமை துளியளவும் குறையாமல் வார்த்தைகளைப் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த பாடல் எப்படி பதிவு செய்யப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரசிகர்களூக்கு வேண்டியது மனதை மயக்கும் இனிமையான பாடல்கள் தான். அந்த வகையில் இந்த பாடல் அமர்க்களமாக உள்ளது. ஏற்கெனவே இணையத்தில் கேட்டிருந்தாலும் மறுபடியும் இந்த இனிமையான பாடலை கேளூங்கள்.

படம்: நெஞ்சங்கள் பிரிவதில்லை
பாடியவர்கள்: பி.சுசீலாம்மா, எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

பெண்:
ஊர் உறங்க நீ உறங்க
வான் உறங்க மீன் உறங்க
நானும் நீயும் தூங்கவில்லை
நேசம் பாசம் நீங்கவில்லை
பாவம் என்னவோஓஓஓஒ

ஆண்:
ஊர் உறங்க நீ உறங்க
வான் உறங்க மீன் உறங்க
நானும் நீயும் தூங்கவில்லை
நேசம் பாசம் நீங்கவில்லை
பாவம் என்னவோஓஓஓஒ

ஆண்:
தூதாக நீ செல்லு ஓ வென்னிலா

பெண்:
தேயாமல் தேயும் இங்கு ஓர் பெண்ணிலா

ஆண்:
நாள்தோறும் கேட்கும் வளையோசை எங்கே

பெண்:
நானென்ன சொல்ல சிறை வாசம் இங்கே

ஆண்:
வாழ்ந்தாலும் உன்னோடு வீழ்ந்தாலும் உன்னோடு
என் காதல் எந்நாளூம் மாஆஆ றாஆஆ து மானே

பெண்:
ஊர் உறங்க நீ உறங்க
ஆண்:
வான் உறங்க மீன் உறங்க
பெண்:
நானும் நீயும் தூங்கவில்லை
ஆண்:
நேசம் பாசம் நீங்கவில்லை
பெண்:
பாவம் என்னவோஓஓஓஒ

பெண்:
கண்ணீரில் போவதென்ன என் ஓடமே

ஆண்:
காற்றோடு போனதென்ன என் கானமே

பெண்:
நான் வந்து சேர சிறகேதும் இல்லை

ஆண்:
நீ இன்றி வாழ வேறேது எல்லை

பெண்:
பக்தர்க்கு கைக் காட்டும் கர்த்தர்க்கு என் நேரம்
பெண் பாவை என் பாடல் கேட்காததேனோ ஓஓஒ

ஆண்:
ஊர் உறங்க நீ உறங்க
பெண்:
வான் உறங்க மீன் உறங்க
ஆண்
நானும் நீயும் தூங்கவில்லை
பெண்
நேசம் பாசம் நீங்கவில்லை
ஆண்:
பாவம் என்னவோஓஓஓஒ

பெண்:
ஊர் உறங்க நீ உறங்க

694சோறு கொண்ட போறப்புள்ள

October 22, 2008

//ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூறப்பட்டு வாடி புள்ளே வாக்கப்பட்டு
கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு
கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு
கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு//

இந்த அழகான வரிகள் முன் வரும் அந்த ஹம்மிங் அதாங்க ஆடு, மாடு மேய்க்கிற ஹம்மிங் அடேங்கப்பா பாலுஜி என்னமாக கலக்குகிறார். கிராமத்தையே நம் கண் முன்னாடி கொண்டு நிறுத்துகிறார். அழகான வரிகள் இனிமையான மெட்டு. அடடா அடடா படத்துக்கு பெயர் கூர என் ஆசை மச்சான் பொருத்தமாக வச்சுருக்காங்க. இந்த பாட்ட
கேட்டு விட்டு நம்ம பாலுஜி ரசிகைகள் ரொம்ப தான் வெட்கப்படுவாங்க போங்க….

இந்த பாடலை எஸ்.பி.பி தீவிர ரசிகை கோவை சிங்காநல்லூர திருமதி. கீதா நாராயணன் அவர்களூக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

சோறு கொண்ட போறப்புள்ள
நடிகர்கள்” விஜயகாந்த், ரேவதி
படம்: என் ஆசை மச்சான்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை: தேனிசை தென்றல் தேவா

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாடு இறக்கு
சோறு தண்ணீ சாப்பிடுல கொஞம் ஊட்டி விடு எனக்கு

சோறு கொண்டு போற புள்ளே அந்த சும்மாடு இறக்கு

வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க

ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

சோலைக்குயில் பாடுதம்மா சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

சேலகட்டும் செவத்த பொண்ணு சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மால போட வேணும்ன்னு மாமங்கிட்ட மயங்கும் நின்னு

சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி

காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாடு இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணீ சாப்பிடுல கொஞம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ளே அந்த சும்மாடு இறக்கு

ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூறப்பட்டு வாடி புள்ளே வாக்கப்பட்டு

கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு

கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாடு இறக்கு
சோறு தண்ணீ சாப்பிடுல கொஞம் ஊட்டி விடு எனக்கு

ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

Get this widget | Track details | eSnips Social DNA

693சின்னவரே சின்னவரே

October 20, 2008

எங்கிருந்த போதும் உன்னை என் விழிகள் காணும், உன் உணர்வு தொட்டால் உடன் என் உடம்பு மாறும், நீ அருகில் வந்தால் ஒரு தெய்வ நிலை கண்டேன், தேவி உந்தன் பூம்பாதமே வேதம் என கொண்டேன்,ஜீவன் போகும் முன்னே சேர்ந்து வாழும் வரம் கேட்டேன்
தெய்வம் நேரில் வந்து வரம் கேட்டால் ஹஹ என்ன சொல்வேன்.

இந்த படத்தை பார்க்கவில்லையென்றாலும் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என்று ஜானகியம்மாவும், பாலுஜியும் சேர்ந்து தன் கொஞ்சும் குரல்களில் காட்சியை கொண்டுவந்துவிடுகிறார்கள் மேலும் ஐஸ்க்ரீமாய் என்னமாக உருகவைக்கிறார்கள் பாடல் முச்சூடும் கேட்டுடுங்களேன்.

பாடல்:சின்னவரே சின்னவரே
படம்: கருப்பு நிலா
நடிகர்: விஜயகாந்த்
பாடியவர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி

சின்னவரே சின்னவரே
நெஞ்சில் வந்த என்னவரே
எந்தன் உயிர் உனக்காகதான்
ஏழ் பிறப்பும் உறவாடத்தான்

சின்னவளே சின்னவளே
சொந்தம் சொல்லி வந்தவளே
அன்பு என்னும் உயிர் கூட்டில்தான்
பூஜை செய்தேன் உன்னை வைத்துதான்

கண்ணளந்து பார்தால் உன்னை
செந்தமிழும் தானோ
விண்ணளந்து பார்த்தால் அது
உன் இதயம் தானோ

என் விழியில் அன்பே உன்னை
நான் எழுதிப் பார்த்தேன்
கண் இமைகள் மூடாமலே
காலமெல்லாம் காத்தேன்

நீ நிமிர்ந்த போது நீ பார்த்த வானம் ஆனேன்

நீ நடந்த போது நான் தாங்க பூமியானேன்

என்ன சொல்ல என் உயிரே என்னைக் கலந்தாயே

சின்னவளே சின்னவளே
சொந்தம் சொல்லி வந்தவளே
அன்பு என்னும் உயிர் கூட்டில்தான் ஆஆஆஆ
பூஜை செய்தேன் உன்னை வைத்துதான்

எங்கிருந்த போதும் உன்னை என் விழிகள் காணும்
உன் உணர்வு தொட்டால் உடன் என் உடம்பு மாறும்

நீ அருகில் வந்தால் ஒரு தெய்வ நிலை கண்டேன்
தேவி உந்தன் பூம்பாதமே வேதம் என கொண்டேன்

ஜீவன் போகும் முன்னே சேர்ந்து வாழும் வரம் கேட்டேன்

தெய்வம் நேரில் வந்து வரம் கேட்டால் ஹஹ என்ன சொல்வேன்

காதல் அது உன்மை என்றால் உன்னை அது வெல்லும்

சின்னவரே சின்னவரே
நெஞ்சில் வந்த என்னவரே
எந்தன் உயிர் உனக்காகதான்
ஏழ் பிறப்பும் உறவாடத்தான்

ஆஆஆ சின்னவளே சின்னவளே
சொந்தம் சொல்லி வந்தவளே
அன்பு என்னும் உயிர் கூட்டில்தான்
பூஜை செய்தேன் உன்னை வைத்துதான்

Get this widget Track details eSnips Social DNA

692சின்னமுத்து சின்னமுத்து

October 10, 2008

மிகவும் இனிமையான பாடல் சரணத்தில் வரும் இந்த வரிகள் கேடக கேட்க இனிக்கும்.

//சின்னமுத்து வீட்டிலே வண்ண முத்து பிறந்ததம்மா
கொஞ்சி கொஞ்சிப் பேசி இந்த சின்னப் பிள்ளை சிரிக்குதம்மா
கல்விகற்று செல்வம் பெற்று ஞானம் வெல்லப் போகுதம்மா
சாதிசனம் பேரைச்சொல்லி என்றும் வாழ்த்தப் போகுதம்மா/

கேளூங்கள் சந்தோசமாக இருங்கள்.

படம்: சின்னமுத்து
நடிகர்கள்: ரூபேஸ் ராஜா, ஆஷா
பாடகர்: எஸ.பி.பி
இசை: தேவா
வருடம்: 1994

சின்னமுத்து சின்னமுத்து
சிங்காரச் செல்லமுத்து
வாழையடி வாழையென
வாழ வந்த வண்ணமுத்து

சின்னமுத்து சின்னமுத்து
சிங்காரச் செல்லமுத்து
வாழையடி வாழையென
வாழ வந்த வண்ணமுத்து

குலக்கொடி பூத்து இன்று முல்லை மலரானா
அண்ணன் சீர் கொண்டு போக அவ புது நிலவானா
பொட்டு வச்சி பூ மூடிச்சு புது நந்தவனமானா

சின்னமுத்து சின்னமுத்து
சிங்காரச் செல்லமுத்து
வாழையடி வாழையென
வாழ வந்த வண்ணமுத்து

சின்னமுத்து வீட்டிலே வண்ண முத்து பிறந்ததம்மா
கொஞ்சி கொஞ்சிப் பேசி இந்த சின்னப் பிள்ளை சிரிக்குதம்மா
கல்விகற்று செல்வம் பெற்று ஞானம் வெல்லப் போகுதம்மா
சாதிசனம் பேரைச் சொல்லி என்றும் வாழ்த்தப் போகுதம்மா

சின்னமுத்து சின்னமுத்து
சிங்காரச் செல்லமுத்து
வாழையடி வாழையென
வாழ வந்த வண்ணமுத்து

Get this widget | Track details | eSnips Social DNA

691மேகம் தான் இதில் மழையே இல்லை

October 3, 2008

இன்றைய ஸ்பெஷல் மனதை கசக்கி பிழியும் ஓர் சோகப்பாடல்.

படம்: நெஞ்சில் ஒரு ராகம்
இயக்குநர்: விஜய ராஜேந்தர்

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்றேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை

ஜோதியென்றேன் இருளைப் போக்கயில்லை
தோணியென்றேன் நதியைக் கடக்கயில்லை
நிலவென்றேன் மேகத்திலே மறைந்துகொண்டாளா
மலரென்றேஎன் இதழ்களை மூடிக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளா
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளா ஹஹ
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளா

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை

பொன் மாலையென்றேன் தென்றல் வீசவில்லை
பூ மாலையிட யோகம் எனக்கு இல்லை
சொப்பனத்தில் நினைத்திருந்தேன் ராமனாக
சுயம்வரத்தில் என்னை நினைத்தால் ராவணன் போல
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்றேன்

Get this widget | Track details | eSnips Social DNA