Archive for December, 2008

714 அழகிய அழகிய கிளி ஒன்றை

December 31, 2008

பாடும் நிலா பாலு தளம் நேயர்களூக்கு 2009 ஆம் ஆண்டு ஆங்கில புது வருட நல்வாழ்த்துக்கள். இந்த புதுவருடத்தில் ஒரு நல்ல சந்தோசமான பாடல் பதியலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு வித்தியாசத்திற்காக சமீபத்தில் வெளிவந்த “அபியும் நானும்” என்ற படத்தில் ஒரு செமி சோகப்பாடல் ஒன்றை பதிய வாய்ப்பு கிடைத்தது. இந்த புதிய படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை ஏனென்றால் பார்க்க வாய்ப்பு இன்னும் அமையவில்லை. பாலுஜி பாடிய பல பாடல்கள் இன்னும் நான் பார்க்காதது ஏகப்பட்டது இருக்கின்றது.
அவர் பாடிய பாடல்களில் அதிக பட்சம் காட்சி அமைப்புகள் அற்புதமாக அமைந்திருக்கும். கமல், ரஜினி போன்ற பிரபலமான நட்சத்திரங்கள் பாடல் காட்சி சரியாக வர மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால் பாடல்களினாலே பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. காட்சியமைப்பிற்காகவே நான் படக்காட்சிகளை பார்ப்பேன். ஏதொ ஒரு சதவீதம் தான் சரியாக அமைவதில்லை. ஆகையால் நேயர்களே கவலையே படாதீர்கள் இந்த
படத்திலும் பாடல் வரிகளை பார்த்தால் அற்புதமாக இருக்கும் என தோன்றுகிறது. குறிப்பாக இந்த வரிகள் // தாய் தான் அழுதால் ஊனம்?? நனையும்.. தந்தை அழுதால் வீடே அணையும்.. ஊமை மொழியில் உள்ளம் எரியும்.. பெண்னை பெற்றால் ஹ உமக்கும் புரியும்// பாலுஜி மிகவும் அற்புதமாக அனுபவித்து பாடியிருப்பார். ஏன் பாடல் முச்சூடும்
கேட்டால் நம் மனதிலும் ஒரு வித இனம் புரியாத வலி ஒன்று நூலிழையாக ஓடும். அனுபவித்து தான் பாருங்களேன்.

அனைவருக்கும் சோகத்திலும் சுகம் காணும் மீண்டும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

படம்: அபியும் நானும்
பாடியவர்கள்: எஸ்.பி.பால்சுப்ரமணியம்
நடிகர்கள்: பிரகாஷ்ராஜ், திரிஷா, ஐய்ஸ்வர்யா
தயாரிப்பு: பிரகாஷ்ராஜ்
இசை: வித்யாசாகர்
வருடம்: 2008
டூயட் மூவிஸ்

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: அபியும் நானும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:
வருடம்: 2008

அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை
ஐயோ ஐயோ அநியாயம் ஐய்யய்யோ
உயிர்போல் வளர்த்தேன் உன் உறவு பொயய்யோ
நூலானது இழையும் இழையும்
தறியானது வழிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே

அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை
ஹோஓஓஓஓ…

உயிரின் பிரிவு முழுசாய் மரணம்
உறவின் பிரிவு பாதி மரணம்
விதியின் பிடியில் நானே சகலம்
யாரும் பழக இதுவே தருணம்

என் வாசனை வாசனை வாடையோ
இன்று வானரசேனையிடம்
அட பாவிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி சேருமிடம்
என் கண்ணாடி கைமாறி கல் சேருமோ
நூலானது இழையும் இழையும்
தறியானது வழிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே

தாய் தான் அழுதால் ஊனம்?? நனையும்
தந்தை அழுதால் வீடே அணையும்
ஊமை மொழியில் உள்ளம் எரியும்
பெண்னை பெற்றால் ஹ உமக்கும் புரியும்

தான் ஆசையில் சேமித்த புதையலை
ஒர் அன்னியன் தீண்டுவதோ ஹாஆஆ
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ

இனி என் வாழ்வு பெண் வாழவு என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
பகல் என்பது பிரிவின் கொடுமை
முடிவு என்பது முதுமை தனிமை
பூங்காற்றே என்பேன்

Advertisements

713 பூவே பூவே பன்னீர் பூவே

December 30, 2008

திரைப்படத் தணிக்கை வாரியத்தினால் ‘சட்டத்தை உடைக்கிறேன்’ என வெளிவரவிருந்த இத்திரைப்படம் ‘சட்டத்தை திருத்துங்கள்’ என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

தகவல் உபயம்: நன்றி, விக்கிபீடியா

மைக் மோகன், நளினி நடித்த சட்டத்தை திருத்துகிறேன் என்று படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. படத்தை யாரு பார்த்தாங்க?.. பாலுஜியும், ஜானகியம்மாவும் குரலுக்காகவே நிறைய தடவை கேட்ட பாடல். பாடல் வரிகள் நன்றாக இருக்கும். நீங்களூம் கேட்டு பாருங்க. //பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று.. அந்தக் கனவை நனவாய் மாற்று.. நேத்து ராத்திரி அம்மம்மா.. பார்த்த ஞாபகம் அப்பப்பா// கடைசியில் பல்லவி எப்படி கலக்குதுல்ல..?

படம்: சட்டத்தை திருத்துங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்
வருடம்: 1984
இயக்குநர்: இராம நாராயணன்
தயாரிப்பாளர்கள் ; பி. நாகேஸ்வரராவ், பி. என். ஆர். பிக்சர்ஸ்

Get this widget | Track details | eSnips Social DNA

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று
நேத்து ராத்திரி அம்மம்மா
பார்த்த ஞாபகம் அப்பப்பா

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேத்து
அந்தக் கனவை நனவாய் மாத்து

ஹேய் வாங்கிப் போக வந்தேன்
வாசப் பூவின் செந்தேன்
ஹேய் வாங்கிப் போக வந்தேன்
வாசப் பூவின் செந்தேன்

போதை ஏறும் நடை பாதை மாறும்
பூவிதழே கோடி மலரே
நீபாட நான் ஆட காதல் மழையே

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று

நேற்று நேற்று ஒன்று
பெண்மை கேட்கும் இன்று
நேற்று நேற்று ஒன்று
பெண்மை கேட்கும் இன்று
வீனை மீட்ட வரவா காட்ட வராவாஆஆ

கோடி மலரின் கூட வரவா
பொன்மேனி உன் மேனி மூட வரவா

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று
நேத்து ராத்திரி அம்மம்மா
பார்த்த ஞாபகம் அப்பப்பா

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று

712 வாடி அம்பிகையே வாடா மல்லிகையே

December 27, 2008

நடிகை ஜீவிதா நடித்த மௌனம் கலைகிறது படத்தில் இந்த பாடல் ஒரு கலக்கல் பாடல் மெட்டைமைப்பு மற்றும் பின்ணனி டைமிங்ஸ் இசை மிகவும் இனிமையாக இருக்கும். //ஆடை உனக்கொரு ஓடை.. நாளூம் பார்வையில் ஓடும்.. மீண்டும் மன்மத வேலை.. போதை தலை வரை ஏறும்// இந்த வரிகளை எவ்வளவு அனுபவித்து பாடியிருக்கிறார் பாட்டை மட்டும் கேட்டு அனுபவியுங்கள். பாடல்முடிவில் கடைசி சரணங்களில் பாலுஜி அடிக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் போல லூட்டி இருக்கே அடடா அடடா போட வைக்குக்ம். இது போல் பாடல்கள் எப்போவருமோ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: மௌனம் கலைகிறது
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளூக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள , ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளூக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள , ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ராதா உனக்கொரு தோதா
நான் தான் வாலிபக்காளை
உனக்கே என்னடி வேளை
மாலா இடை ஒரு நூலா
நான் தான் இத்தனை நாளா

எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா
வருமே சுகம் ஒரே தரம்
வழங்கலாம், மாலை மயங்கலாம்

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளூக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள , ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ஆடை உனக்கொரு ஓடை
நாளூம் பார்வையில் ஓடும்
மீண்டும் மன்மத வேலை
போதை தலை வரை ஏறும்
கால்கள் நடனங்கள் ஆடும்
கீதங்கள் நயனங்கள் ஆடும்
இதோ இதழ் , இதோ இடை
வழங்கலாம், தீயை அணைக்கலாம்
ஆசை அருவியிலே குளித்திட வா வா

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளூக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள , ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

711 ரா ரா நா பாவா

December 26, 2008

இந்த பாடல் இடம் பெறும் படம் நான் பார்த்ததாக சுத்தமாக நினைவு இல்லை. அதனால்
என்னங்க இதோ தேங்காய் சீனிவாசனுக்கு பாலுஜியும், மனோரமாவும் அடிக்கற கூத்த. சித்த கேட்டுத்தான் பாருங்க. தெலுங்க்கும், தமிழும் கலந்து பாடுற பாடல் கலக்கறாங்கபா..

படம்:குங்குமம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, மனோரமா
நடிப்பு: தேங்காய் சீனிவாசன், மனோரமா

Get this widget | Track details | eSnips Social DNA

ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா
ஹரே ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

அக்கட இக்கட சூஸ்தாவா
அசடு போலே சேஸ்தாவா
ஹோய் அக்கட இக்கட சூஸ்தாவா
அசடு போலே சேஸ்தாவா

ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

ரி, ரி, ரி, ரி வீட்டுக்காரி
நான் அதுல பாதி, இதுல பாதி அர்த்தநாரி
பேச்சு விடய்யா ரி ரி ரி
நான் அதுல பாதி, இதுல பாதி அர்த்தநாரி

ஆம்பளப்போலே மீசை அடுப்பங்கரை தோசை

ஆம்பளப்போலே மீசை அடுப்பங்கரை தோசை

சுட்டு வெச்சேன் பொரிச்சு வெச்சேன் பொம்பளயே
மாரிப்போட்டேன் உன்னாலே
மூஸ்கோயா நோரு மூஸ்கோய்யா

ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

தொட்டு தாலி கட்டியது தமிழலே
நீ தினம், தினம் திட்டுவது தெலுங்காலே
அவ்னு திட்துன்னு, அப்படியா
தொட்டு தாலி கட்டியது தமிழலே
நீ தினம், தினம் திட்டுவது தெலுங்காலே

ஒட்டிப் பாஷை அன ஒதுங்கிப்போனது ஆசை
ஒட்டிப் பாஷை அன ஒதுங்கிப்போனது ஆசை

ஆசை உந்தி பாசம் உந்தி ஆம்பளப்போலே
ஏமிய்யோய் ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

ஆசைப்பட்டு சுத்திவந்தேன் வெருப்பா
நான் அவதிப்பட்டு , கசந்துப்புட்டேன் முறைப்பானேன்
தலையெடுப்பது பெண்மை
தலை கவுந்தப்பட்டது ஆண்மை

தேவுடண்டே தேவுடு அபாயி
மனுசனுயே மா?றுவாரு நீவ்வே செப்பய்யா
தேவுடே ஒர்ரேய்

அட என்னடாது

ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

அக்கட இக்கட சூஸ்தாவா
அசடு போலே சேஸ்தாவா

ரா ரா நா பாவா
நுவ்வு ராங்கான பாதையிலே போதாவா

அக்கட இக்கட சூஸ்தாவா
அசடு போலே சேஸ்தாவா

710 பூவைப்போல் வாழவோ

December 19, 2008

//வாடுவதோ நெஞ்சிலே வேதனையோ கண்ணிலே, எந்நாளும் இவ்வாறு புன்னகை தேன் என
பொங்கிட ஹஹ்ஹஹாஆஆ//

இது போன்ற மனதை மயக்கும் வரிகள் உள்ள இந்த பாடல் வருவது ஸ்வரந்தி படத்தில். இது ஒரு மொழி மாற்றம் படம் என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை. இதே பாடல் தங்கை எஸ்.பி.ஷைலாஜவுடன் சிறிய பாடலாக பாடியிருப்பார். அதில் பல்லவியே திரும்ப திரும்ப வரும். என பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல் எனக்கு பாடல் கிடைத்து வெகு நாளாயிற்று பதிய நேரமில்லையாதலால் தாமதம். பாடல் எப்போது கேட்டாலும் புல்லரிக்கும் பாலுஜியின் வாய்விட்டு சிரிக்கும் அந்த இனிமையான சிரிப்பு //ஹஹ்ஹஹாஆஆ// என்றும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

படம்: ஸ்வரந்தி
பாடகர்: எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

பூவைப்போல் வாழவோ புன்னகை வழங்கவோ
பொழுதெல்லாம் ஹஹ்ஹஹாஆஆ சிரிககவோ
கவலையை மறக்கவோ
வானவில் போல் வாழ்க்கை தான்
வண்ணங்களோ மாயந்தான்
நெடுங்காலம் நிலக்குமோ
நாயகன் நெஞ்சிலே நிம்மதி ஹஹ்ஹாஹாஆஆ

பூவைப்போல் வாழவோ புன்னகை வழங்கவோ
பொழுதெல்லாம் ஹஹ்ஹஹாஆஆ சிரிககவோ
கவலையை மறக்கவோ

ஒரு பிள்ளை நகைபோட்டால்
மனமே மயங்கும் அல்லவோ
பகைமையில்லாத மாம்பலச் செவ்வாய்
பால் போல் சிரித்து கொஞ்சுமோ
மறையாத பிரேமைக்குள் சந்தோஷமோ
சிரியுங்கள் எந்நாளும் ஏன் சோகமோ
வாடுவதோ நெஞ்சிலே வேதனையோ கண்ணிலே
எந்நாளும் இவ்வாறு புன்னகை தேன் என
பொங்கிட ஹஹ்ஹஹாஆஆ

பூவைப்போல் வாழவோ புன்னகை வழங்கவோ
பொழுதெல்லாம் ஹஹ்ஹஹாஆஆ சிரிககவோ
கவலையை மறக்கவோ

உதயத்திலே புத்தொளி போல் சிரித்தாளென்ன
மனமொரு கோவில் கனவு எங்கே போச்சு உயிர்களே
மரணங்கள் என்னை இங்கு உயிர் கொல்லுமோ
கைபாறை மழைநீரில் தான் உருக்குமோ
இவ்வுலகோ நாடகம் என் கதை தான் காவியம்
ஆனந்தமே இசைக் கோர்க்க
கவிதை நான் என்னங்கள் இல்லைதான்

பூவைப்போல் வாழவோ புன்னகை வழங்கவோ
பொழுதெல்லாம் ஹஹ்ஹஹாஆஆ சிரிககவோ
கவலையை மறக்கவோ
வானவில் போல் வாழ்க்கை தான்

வானவில் போல் வாழ்க்கை தான்
வண்ணங்களோ மாயந்தான்
நெடுங்காலம் நிலக்குமோ
நாயகன் நெஞ்சிலே நிம்மதி ஹஹ்ஹாஹாஆஆ

709நீயின்றி நானோ

December 13, 2008

நமது மக்கள் எல்லோரும் ரொம்ப பிசியாக இருக்கிறார்கள் போலும் பதிவுகளை பார்க்கிறார்களா என்று கூட தெரியவில்லை. மகரந்தம் படத்தில் வரும் இந்த பாடல் பல்லவி ”பாலுஜியின் மீது நான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவது போல் உள்ளது”.
//வாடாத மேனி ஹசூடான ராணி.. வாடாத மேனி சூடான ராணி.. பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ// மேலும் இந்த வரிகள் வரும் சரணம் பாலுஜியின் இனிமைக்கு அந்த லைட்டான சிரிப்புக்கு ஏகாந்தம் சேர்க்கிறது. கேளூங்கள் நீங்களூம் அதை உணருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

பாடல்:நீயின்றி நானோ
படம்: மகரந்தம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., பி.சுசீலா
இசை; சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

நீயின்றி நானோ நானின்றி நீயோ
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ இதை நினைவில் கொள்வாயோ

ஏன் இந்த கோபம் இதில் என்ன லாபம்
ஏன் இந்த கோபம் இதில் என்ன லாபம்
என் காதல் தீபம் எந்நாளூம் நீயன்றோ

வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில்லில் ஏழு வண்ண காட்சியன்றோ

வாடாத மேனி ஹசூடான ராணி
வாடாத மேனி சூடான ராணி
பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ

பாடாத ராகம் போடாத தாளம்
பாடாத ராகம் போடாத தாளம்
ஆடாத தீபம் என் தெய்வம் நீயன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ

காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ

விரும்பாத என்னம் திரும்பாத வண்ணம்
விரும்பாத என்னம் திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை குறுநகையும் சிந்தாதோ

அரும்பாக மின்னும் குறும்பான என்னம்
அரும்பாக மின்னும் குறும்பான என்னம்
கரும்பாகும் வன்னம் பென் பார்வை சொல்லதோ

வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ