Archive for January, 2009

722 எஸ் ஜானகியம்மாவிற்கு டாக்டர் பட்டம்

January 30, 2009

இசைககுயில் ஜானகியம்மாவிற்கு டாக்டர் பட்டம் 07.03.2009 அன்று மைசூர் பல்கலைகழகத்தில் வழங்கப்படுகிறது.

பிரபல பின்ணனி பாடகி திருமதி. எஸ்.ஜானகியம்மா அவர்களூக்கு மைசூர் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற ஜானகியம்மா அவர்களூக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் நீடுழி வாழ்ந்து பல இனிமையான பாடல்கள் வழங்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

இதோ; இதோ ஜானகியம்மாவிற்க்கு பிரியமான பாடகி திருமதி. சித்ரா அவர்கள் பாலுஜி பாடிய கிளியே இளங்கிளியே அபூர்வமான அதிகம் கேட்டறியாத பாடலை தங்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பாடலை பல தடவை இந்த தளத்தில் விரும்பி கேட்ட பாலுஜி ரசிகர் திரு. சபி அவர்களூக்கு சமர்ப்பணம்.

இந்த தகவலை வழங்கிய திரு.ராஜேஷ் (ஜானகியம்மா ரசிகர் குழு) அவர்களூக்கு நன்றி

பாடல்: கிளீயே இளங்கிளியே
படம்: ராட்சசன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

பருவம் பாலாறு வயசென்ன மூவாறு
இமயம் என்னோடு பகையானதே

வயசு கோளாறு அதனாலே தகராறு
அணியும் உடை கூட சுமையானதே

உலகம் பலித்தாலும் உறவே வெறுத்தாலும்
உயிரே உன்னோடு உறவாடுமே

அடடா கண்ணமிரண்டும் அழகுச் செவ்வாணம்

அதிலே முத்தம் கொடுத்தாள் உனக்கு சன்மானம்

முத்தங்கள் அள்ளித்தருவேன் மத்ததும் சொல்லித்தருவேன்

விளக்கு அணைத்து விளக்கம் கொடுத்து
விடியும் வரைக்கும் வகுப்புகள் நடத்து

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

அன்னமே தோள் சேர்க்கவா

கண்ணனே நாள் பார்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கண்ணே காஷ்மீரில் என்னென்ன கோலங்கள்
எல்லாம் பெண்மைக்கு ஈடாகுமா

ஆஹா மலையேறி வானத்தை தொடுவோமா
அங்கே நிலவோடு நாம் வாழ்வோமா

இரவோடு இரவாக உடையோ சிறகாக
பறவை போலே நாம் போவோமம்மா

பருவம் தவிக்கிறதே பதில் சொல்லவேண்டும்

அடியே விடியும் வரை விடைச்சொல்ல வேண்டும்

கட்டிலில் கட்டிலோடு அட்டைப் போல் ஒட்டிக்கொள்ளுவேன்

இதழில் இருந்து பருவ விருந்து அருந்து அருந்து என மனம் துடிக்கும்

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements

721 பாலுஜியின் பரவசப்பாடல் தொகுப்பு

January 29, 2009

//1. மௌனமான நேரம், சலங்கை ஒலி, 2. மாலை சூடும் வேளை, நான் மகான் அல்ல,
3. தேன் பூவே வா, அன்புள்ள ரஜினிகாந்த், 4. ரோஜாவை தாலாட்டும் தென்றல், நினைவெல்லாம் நித்யா, 5. கண்மணியே காதல் என்பது, ஆறிலிருந்து அறுபது வரை, 6. கீதம் சங்கீதம், கொக்கரக்கோ, 7. பூந்தளிர் ஆட, பன்னீர் புஷ்பங்கள், 8. இசை மேடையில் இந்த வேளையில், இளமை காலங்கள், 9. சந்தனம் காற்றே, தனிக்காட்டு ராஜா//

Get this widget | Track details | eSnips Social DNA

இந்த பாடலகள் தலைப்புக்கள் ஏற்கெனவே கேட்ட மாதிரி இருக்குதுன்னு நினைக்கிறீர்களா அன்பர்களே? அதிகபட்ச பாடல்கள் ஏற்கெனவே இந்த தளத்தில் வலம் வந்தவை தான். பாலுஜி அவர்கள் பாடிய தேனருவி போன்ற பாடல்களீல் குளித்தாலும் தெவிட்டாதே. தித்திக்கும் தேனருவி தான் இந்த ஒலித்தொகுப்பு. சரிங்க.. சரிங்க.. விசயத்துக்கு வருகிறேன்.

சென்ற வாரம் 25.01.2009 ஓர் ஞாயிறு இரவில் அமர்க்களமாக இந்த தொகுப்பை வழங்கியிருந்தார். இசையன்பர்களே இந்த ஒலித்தொகுப்பு தலைப்பிற்கேற்ப பரவசப்பாடல்கள் தான். ஜானகியம்மாவுடன் சேர்ந்து நம் மனதை மயக்கடிக்கும் குரலினில் பாலுஜி அவர்கள் வழங்கிய மெலோடி பாடல்களின் ஒலித்தொகுப்பு வழங்கியவர் பாலுஜியின் தீவிர ரசிகை
திருமதி. கீதாலட்சுமி நாராயணன் அவர்கள். வெகு வருடங்களாக தன் மனதில் அடக்கி வைத்த ரசனையை வானொலியில் வாய்ப்பு வந்ததும் கொட்டி தீர்த்துவிட்டார்கள்.

இந்த ஒலித்தொகுப்பில் அவரின் பாடல் தொகுப்புக்களை எப்படி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று
செல்பேசியில் உடனே நேயர்களிடம் பேசி கருத்துக்கள் கேட்டது மிகவும் சந்தோசம். அறிவிப்பாளர் திரு.ரவிவர்மா நேயர்களிடம் ஒவ்வொருவரிடமும் பொதுவான கேள்வி கேட்டார். அது பாலுஜியின் குரல் எந்த நடிகருக்கு பொருத்தமாக இருக்கும்? என்று கேட்டதில் அதிக பட்சம் கமல்ஹாசனுக்குதான் மிகவும் பொருந்தும் என்று பிரதான நேயர் கீதா லக்‌ஷ்மி உடபட ஏக குரலாக சொன்னார்கள். உண்மைதான். அறிவிப்பாளர் என்னங்க ஒட்டு மொத்தமாக பேசி வைத்து சொல்கிறீர்களா? ஏன் ரஜினிகாந்து அவர்களூக்கு பொருந்தாதா? விட்டேனா பார் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்கள் இல்லையில்லை கமலுக்கு தான் மிகவும் பொருந்தும் என்று ஆணீத்தரமாக சொன்னார்கள்.

ரவிவர்மா சார் நான் உங்கள் பக்கம். பாலுஜியின் குரல் கமல் சாருக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கும் பாடும் போது எந்த வித குரல் வித்தியாசம் காட்டாமல் அவர்கள் பாணியில் கிட்டக்க கொண்டு வந்து எல்லாப்பாடல்களூம் பாடியிருப்பார் அவர்கள் பாணியில் திரையில் பார்க்கும் போது. பாலுஜியின் குரல் நன்றாக பொருந்தும் இந்த கருத்தை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்துக்கு பாடிய அழகாக பொருந்திய பாடல்கள் ஏகப்பட்டது மலைப்போல் குவிந்து இருக்கிறது. எதச்சொல்றது எத விடுவது. உதாரணத்திற்க்கு அத்திந்தோம் சந்திரமுகி பாடல் ஒன்று போதும். குரலை மாற்றி பல
நடிகர்களூக்கும் பாடியிருக்கிறார். விஜயகாந்துக்கும் பொருந்தும் வகையிலும் பல பாடல்கள் பாடியிருப்பார். சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வென்னிறாடை மூர்த்தி போன்றவர்களூக்கும் அவர் குரல் சாயலில் முழுவதும் குரலை மாற்றி பல பாடல்கள் பாடியிருக்கிறார். இது போல பல குரல்களில் பாடிய ஒலித்தொகுப்பையையும் கூடிய சீக்கிரம் வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு ஒன்று வரவிருக்கிறது. இந்த பதிவின் ஆதாரமாக தெரிவிக்கவே அந்த ஒலித்தொகுப்பு வரவேண்டும் என்பது ஆசை.

இந்த ஒலித்தொகுப்பில் செல்பேசியில் தன்கருத்துக்களை தெரிவித்த இசையன்பர்கள் 1. திரு.மாரிமுத்து, அம்மாப்பாளையம், திருப்பூர் 2. திருமதி.கீதாலக்ஷ்மி, (பிரதான நேயர்), 3. திரு. மணி, கள்ளியம்புதூர், ஈரோடு மாவட்டம், 4. திரு. ரவி, 5. திரு. ராஜு
6. திரு.விஜயகுமார், ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஒலித்தொகுப்பு வழங்கிய பாலுஜி யாகூ குழுமத்தின் தீவிர ரசிகை திருமதி. கீதாலக்‌ஷமி அவர்களூக்கும். மிகவும் அழகாக, இனிமையாக, சீரான வெள்ளி நூலிழைப்போல் பேசிய எனது அருமை அன்பர் திரு. ரவிவர்மா அவர்களூக்கும் உலகளவில் விசாலமாக பரந்து இருக்கும் பாலுஜியின் ரசிகர்கள் சார்பாகவும், கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் பாலுஜி சார்பாகவும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

வாழ்த்துக்கள் கீதா மேடம்.

ஒலித்தொகுப்பை வழங்கியவர்.

திருமதி. கீதா லக்‌ஷ்மி நாராயணன்
உப்பிலிபாளையம்
கோவை.

720 அனங்கன் அங்கஜன் அன்பன்

January 23, 2009


வெண்நிலவைக் குடைபிடித்து
வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
கண் முல்லை, தாமரை,மா
தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!

இசையன்பர்களே… இந்த தொகையறா இந்த பாடலின் துவக்கத்தில் வருவது. ஒரு சின்ன வேலை உங்களூக்கும் இந்த ஒலிக்கோப்பில் இந்த பாடல் 2 ஆவதாக வரும். இது ஒரு வானொலியில் எனது ஒலித்தொகுப்பாகும். மற்ற பாடகர்க்ள் பாடிய 9 பாடல்களில் நமது பாலுஜி பாடிய பாடல் தான் ஹைலைட்டாக முன் நிற்கிறது என்று வானொலி அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் கருத்து. அதையே முன் மொழிந்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன்.

10.01.2009 அன்று சனிக்கிழமை என் வாழ்நாளில் மீண்டும் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி ஆம் அன்பு உள்ளங்களே கோவை சூரியன் பண்பலை, இரவின் மடியில் நிகழ்ச்சியில பூரண நிலா வந்த தினமான நிலா ஒளியில் ”பாடும் நிலாவின் பாலுவின்” அவரகளின் தொடர்புடைய நான் வழங்கிய ஒரு ஆக்கமான பாடல் தொகுப்பு ஒன்று ஒலிப்பரபப் பட்டது. என்னென்ன பாடல்கள் என்பதை ஒலித்தொகுப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். (வையாதீர்கள் அய்யா)

இந்த ஒலித்தொகுப்பு மட்டுமல்ல எனது வானொலி நண்பர்களின் வித்தியாசமான ஒலித்தொகுப்பின் ஆக்கங்களை தேன் கிண்ண தளத்திலும் வாரம் ஒன்றாக வழங்கி வருகிறேன். அந்த ஒலித்தொகுப்புக்களை கண்ட “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டு நல்ல ஆதரவு தருகிறார்.

Mr.S.V.R.சுப்பையா

மேலும், எனது ஆருயிர் நண்பர் பாலுஜியின் ரசிகர் தமிழ்மண இணைய தள பதிவாளர் நமது சக பதிவாளர் நாம் பிரியமுடன் ”வாத்தியார் ஐயா” என்று அன்புடன் அழைக்கும் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் எனது ஒலித்தொகுப்பை கேட்டு தனது பல்சுவை தளத்தில் உடனே பதிந்தும் விட்டார். நான் இரண்டு வாரங்களாக பதிவாக போட காத்திருப்பது ஒரு முக்கியமான காரணத்திற்காக. அதற்குள், நான் பதிவில் சொல்ல வேண்டிய அணைத்தையும் வாத்தியார் அவர்கள் எழுதிவிட்டார். போதாதற்கு அறிவிப்பாளரை அலேக்காக தூக்கி உச்சத்தில் ஏற்றி வைத்துவிட்டார். அந்த பாராட்டு அறிவிப்பாளரின் குரலுக்கு கிடைத்த பாராட்டு. அறிவிப்பாளரின் போட்டோவை போடவேண்டும் என்று என்னிடம் வாத்தியார் ஐயா கேட்டார் என்னிடம் இல்லை அவரிடம் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தேன். (ஆர்.ஜி.எல்.என் சார் சீக்கிரம் ஒரு போட்டோ ஒன்று அனுப்பிவைப்பீர்களா?) அவரின் குரலை கேட்டு பல இணைய அன்பர்கள் எப்படி இருப்பார் என்று? ஒரே ஏக்கமாக இருக்கிறார்கள். ஆகவே காத்திருபோம் அன்பர்களே. அவர் நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் இது “காத்திருப்புக்கள் என்றும் வீண்போவதில்லை” ரொம்ப கரெக்டதான். காத்திருப்போம்.

என் நிகழ்ச்சியை நானே தேன் கிண்ணத்தில் போடுவதை விட நமது வாத்தியார் அவர்கள் அவரின் தளத்தில் வெளியிட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியே அவரின் கருத்துக்களை பெருமையுடன் படித்து மகிழ்கின்றேன். இந்த ஒலித்தொகுப்பு உருவானதை
பற்றி சிலவற்றை சொல்லியே ஆகவேண்டும். வானொலியில் நான் புதிது ஆகவே எனது வானொலி நண்பர்கள் ஜாம்பவான்கள் திருப்பூர், அகிலா விஜயகுமார், மற்றும் சேலம் திரு. காசக்காரனூர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து அவர்களின் சிறப்பான யோசனைகளூடன் ஊக்கத்துடன் உருவான ஆக்கம்தான் இந்த ஒலித்தொகுப்பு. இசையன்பர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து ஒரு கருங்கல்லாக எடுத்து அறிவிப்பாளரிடம் வழங்கினோம். அதை அவர் கைத்தேர்ந்த சிற்பி போல் தன் குரல் என்ற உளியால் அழகான ஒரு சிலையை வடிவமைத்து வழங்கியுள்ளார். எல்லாப்புகழும் என்னைவிட இவர்களுக்குதான் போய் சேரும். ஏற்கெனவே இந்த பதிவைப்பற்றி வாத்தியார் அய்யா அதிகம் பல்சுவை பகுதியில் எழுதியிருப்பதால் நான் இத்துடன் நிறுத்திக்கொண்டு. இந்த ஆக்கத்தை சிறப்பக ஒலிப்பரப்ப உதவியாக இருந்த அறிவிபாளர்கள் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கும், அவருக்கு பெரிதும் உதவியாக இருந்த திரு. ரவிவர்மா அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றி.

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கும்போது குறுஞ்செய்திகள் அனுப்பி வாழ்த்துக்கள் சொன்ன இரவின் மடியில் ஆஸ்தான நேயர்களான …

1. திருமதி.கவுரி, ராம்நகர்
2. திரு.ரசாக், சாய்பாபாகாலனி
3. திரு.ராமசாமி, பூலவாடி
4. திரு.பிரகாஷ், ஆவராம்பாளையம்
5. திரு. வி.எஸ்.பால்சந்திரன்
6. திரு. பி.என்.புதூர், ஆனந்த்
7. திரு. காசக்காரனூர் ராஜ்குமார்
8. திருமதி. சுகந்தி ரகுநந்தன்
9. திருமதி. காத்தியாயினி, பாரதியார் யுனிவர்சிட்டி
10. திரு.பாலு, வெள்ளக்கோவில்
11. திரு.சையத் ரசூல், செல்வபுரம்
12. திருமதி.உமாதேவி, கீரணக்கவுண்டன்பாளையம்
13. திரு. மஹாதேவன், பாலாக்காடு

வாழ்த்துக்கள் தெரிவித்த நேயர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. மேலும், என் செல் பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பர்கள்..

1. திரு. அகிலா விஜயகுமார், திருப்பூர், 2. திரு. நடராஜன், உடுமலை, 3. திரு.கந்தசாமி, நரசீபுரம், 4. திரு. கௌசல்யா, காந்திநகர், 5. திரு.மோஹன சுந்தரம், திருப்பூர் 6. ஜி.டி.சித்தார்த்தன், பெரியநாயக்கன் பாளையம், 7. திரு. சக்தி ஆனந்த், சாய்பாபா காலனி, 8. திரு. ஜெகதீஸ், சுந்தராபுரம், 9. திரு. தேவராஜன், சுந்த்ராபுரம் மற்றும் திரு. கனேஷ், ஹோப் காலேஜ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு வாழ்த்து மடல் அனுப்பிய அனைத்து நபர்களில் என்னை கவர்ந்த மடல் இதோ..

பாராட்டு

ன்பு உள்ளம் கொண்ட கோவை ரவி அவர்களூக்கு,
ருயிர் உள்ளம் கொண்ட உடுமலை நடரஜன் பாரட்டுமடல்!
ரவின் மடியில் நிகழ்ச்சியில் 283ஆவது வார நேயராக கல்ந்தீரே!
டு இணையில்லை மகனே உமது கருத்துத் கோர்வைகளூக்கு!
ண்மையாக மக்களின் இன்றைய ரசிப்பினையறிந்து – நல்ல
ன்று கோலான பாடல்களை சரித்திரச்சுவையுடன் தந்தீரே
வ்வளவோ வாரங்கள் கழித்து கருத்துடன் பாடல்கள் வாராத என
ங்கி இருந்த நெஞ்சங்களுக்கு நல்ல நிம்மதி கிடைத்தது!
ரு நாளிலே கேட இன்றைய பாடல் ஓடிப் போகிறது இன்றே!
ராயிரம் முறை கேட்டாலும் பழைய பாடல் ஒன்றிப்போகிறது உள்ளத்துடன் என்றும்!
யமுறச் சொல்கிறேன் நல்ல அருமையான விளக்கங்கள்!
வை அளித்த ஆத்திச்சூடியின் அறிவே இளஞ்சிறார்களுக்கு!
அஃதறிந்த உமது பாடல்களின் அருமையே அணைத்து நேயர்களுக்கு!

எமக்கும், அன்புடன்
கே.நடராஜன்
(ஓய்வு பெற்ற-வட்டாசியர்-உடுமலை)
நாள்:12.1.2009
ஸ்ரீ தாமரையம்மன் இல்லம், 10,குமரன் வீதி, உடுமலைப்பேட்டை
தொலை பேசி:95-4252-220164, அலைபேசி:98433 20164

இந்த வாழ்த்து கடிதத்தி அனுப்பிய மதிப்பிற்குரிய ஐயா திரு.நடராஜன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.

இந்த ஒலிக்கோப்பை 12.12.2009 தேதி வரை நமது இணைய தள இசையண்பர்கள் 275 பேர் தரவிறக்கம் செய்து கேட்டுள்ளார்கள் அவர்களூக்கும் நன்றி. இணையத்தொடர்பில் கேட்கமுடியாதவர்கள் தயவு செய்து தரவிறக்கம் செய்து கேட்கலாம். (TRACK DETAILS க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்யலாம்)

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: கண்காட்சி
நடிகர்: சிவக்குமார், பத்மனி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி
இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்
இசை: கே.வி.மகாதேவன்

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம்
வழங்கும் உன் புகழ் சொல்லவா

கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே

கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா

ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்

குணம்கொள் பெண் அனங்கே உன்
மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

கலந்தன்பின் நலம் காணுவோம்

இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

மன்னா வா..

கண்ணே வா..

நீ வா…..

வாஆஆஆஆ

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா

719 மயிலிறகாய் வருடும் மணியின் குரல்

January 21, 2009

// 1. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, 2. அமுதும் தேனும் எதற்க்கு, 3. அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் 4. பிறக்கும் போது அழுகின்றாய்., 5. மயக்கும் மாலை பொழுதே, 6. முல்லை மலர் மேலே, 7.ஒரு நாள் போதுமா 8. பொட்டு வைத்த முகமோ //

என்னங்க இது தேன் கிண்ணத்துல வரவேண்டிய பதிவு இங்கே… எப்படி?

அடடே… அடடே.. இருங்க சார்.

Get this widget | Track details | eSnips Social DNA

மயிலிறகாய் வருடும் மணியின் குரல்

அன்பு உள்ளங்களே… வணக்கம்.

ஒரு வார இடைவெளியில் பதிவில் வந்திருக்கிறேன் வேறு ஒன்னுமில்லைங்க
சென்ற வாரம் மட்டுமல்ல இந்த மாதமே விடுமுறை மயம் தான். பதிவில் வராததற்க்கு
அதுவும் ஒரு காரணம்.

இந்த பதிவு பற்றி முக்கியமாக ஒன்று ஒலிகோப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள். ஒலித்தொகுப்பின் நீளம் கருதி இந்த வேண்டுகோள். முதன் முறையாக இந்த தளத்தில் மற்ற பாடகர்களின் பழைய இனிமையான பாடல்களின் ஒலித்தொகுப்பு தான் இவை. ப்ளாக்கர் தளத்தில் மற்ற பாடகர்களுக்காகவே தேன் கிண்ணம் தளம் இருக்கும் போது இங்கு எப்படி வரலாம் ? என்று அவசரப்படுகிற பாலுஜி பிரியர்களே கொஞ்சம் பொறுங்கள் தித்திக்கும் பலாச்சுளைகள். பலாச்சுளைகளை தேனில் முக்கியெடுத்து சுவைக்க வழங்கினால் உங்களூக்கு கசக்கவா செய்யும்?

ஆமாங்க.. இந்த பாடல்களை தேர்ந்தெடுத்து வழங்கியவர் உரிமையுடன் நாம் சொல்லிக்கொள்ளும் நம் பாலுஜி தான். தமக்கு பிடித்த பாலுஜி அவர்களின் தெரிவுகள் தான் இந்த பாடல்கள். இப்ப சொல்லுங்க நான் செய்தது சரிதானே? அமர்க்களமான பாடல்களூக்கு மத்தியில் நம்ம பாலுஜி அவர்கள் அவருக்குரிய பாணியில் குரல் அமைதியாக தேனில்
தோய்த்து எடுத்து நம் மனதை லேசாக வருடும் உணர்வு தெவிட்டாத தித்திகும் சுவை. அதை நீங்கள் கேட்டால் தான் சுவைக்கமுடியும்.

சென்ற வார பொங்கல் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக பாலுஜி வழங்கினார். கோவை ரெயின்போ பண்பலைக்காக வழங்கிய ஒலித்தொகுப்பு எப்போது எப்படி பதிவு செய்தார்கள் யோசித்து யோசித்து நான் தலைமுடியை பியித்து கொண்டதுதான் மிச்சம். எனக்கு தெரிந்த தகவல் படி கோவையில் பதிவு செய்யவில்லை என்பது நிச்சயம்.
சென்னையில் பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எங்கு பதிவு செய்தால் என்ன? நமக்கு தேவை பஞ்சாமிர்தம் தானே அன்பு உள்ளங்களே. நான் முன்னமே ஒரு பதிவில் சொன்னது தான். பாலுஜியிடம் இசை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டுவிடக்கூடாது
அப்படியும் கேள்வி கேட்டு பதில் சொல்றார் என்றால் ஏகப்பட்ட தகவல்கள் கொட்டும். இந்த தொகுப்பில் தன்னை அடக்கிக்கொண்டு தகவல்கள் வழங்கியிருக்கிறார். அதிக பட்ச தகவல்கள் நமக்கு தெரியாதது தான். அதுக்காகவே அவசியம் எல்லோரும் கேட்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை கோவை எஸ்,பி,பி ரசிகர்களுக்காக வழங்கிய கோவை ரெயின்போ பண்பலை நிர்வாகத்திற்க்கும். பி.எஸ்.ஆர் சில்கிஸ், கோவை விளம்பாரத்தாருக்கும், பாலுஜியின் சார்பாகவும் கோவை மற்றும் அனைத்துலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் நன்றி.. நன்றி.. நன்றி.

நீங்களூம் கேட்டு விட்டு ஒரு வரியில் வாழ்த்தையும் சொல்லிடுங்களேன் ஆக்கத்தை உருவாக்கிய அன்பர்களூக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

718 கோவை சேவா நிலையம் தில்லையம்மாள் அஞ்சலி

January 19, 2009

கோவை சேவா நிலையம்

ஒரு வருடத்திற்க்கு முன் பிப்ரவரி மாதத்தில் டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் சேவா நிலயத்திற்க்கு சென்று குழந்தைகளூக்கு தேவையான பொருட்கள் வழங்கி நிலைய தலைவியிடம் ஆசி பெற்ற காட்சி.

அவர் பிரிவால் வாடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் பாலுஜி அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறார்.

கோவை சேவா நிலையம் தில்லையம்மாள் அஞ்சலி

18.02.2009 அன்று கோவை சேவா நிலையம் தலைவி 94 வயதுடைய தில்லையம்மாள் அவர்கள் இயற்க்கை எய்தினார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாவல்ல இறைவனை பிரார்த்திகிறோம்.

கோவை எஸ்.பி.பி ரசிகர்கள், அகில உலக எஸ்.பி.பி ரசிகர்கள், எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன், சென்னை, நிர்வாகிகள், மற்றும் ரசிகர்கள்.

717 வளமிகு இந்தியாவில் நலமிகு இளைஞர்கள்

January 13, 2009

வளமிகு இந்தியாவில் நலமிகு இளைஞர்கள்

12.01.2009 அன்று இளைஞர் தினமாக விவேகானந்தரின் பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். இதோ வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு. கோவையில் உள்ள ஒரு கல்லுரியின் நாட்டுப்பணி நலத்திட்ட மாணவ மாணவிகளீன் நிகழ்ச்சி ஒன்று பொள்ளாச்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைப்பெற்றது. அதில் எனது நண்பர் வானொலி அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல்.நாராயணா அவர்களும் அவர் நணபரும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் ஆதங்கம்ங்களை என்னங்களை சேகரித்து ஒரு ஒலித்தொகுப்பாக புத்துணர்ச்சியூட்டும் இனிமையான பாடல்களூடன் ஒலிப்பரப்பினார். கேட்பதற்கு நன்றாக இருந்தது. பாடும் நிலா தளத்தில் இந்த ஒலித்தொகுப்பு ஒரு வித்தியாசத்திற்காக வழங்குகிறேன். நமது பாலுஜியின் ரசிகர்கள் அனைவரும் ஒலிகோப்பை இறக்குமதி செய்து கேட்டு மகிழுங்கள். அப்படியே உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதிடுங்க.

அதுசரிப்பா மாணவ மாணவிகள் புதுசா இந்த தளத்திற்க்கு எங்கிருந்து வந்தாங்கன்னு யோசிக்கிறீங்களா அன்பர்களே? ஏன்? எப்படின்னு? ஒலிக்கோப்பை கேட்டு அப்புறம் சொல்லுங்க சார்.

Get this widget | Track details | eSnips Social DNA

716 வைகறை பனியே.. பூமியின் அழகு

January 12, 2009

கவிஞர் திரு. யுக பாரதியின் அழகான வரிகளில் வயலினும், நாதஸ்வர்மும், தவிலும் போட்டி போட்டுக்கொண்டு பிண்ணனியில் அசத்தலான மெலோடி பாடல் இது. அப்பப்பா அப்பபா என்ன வரிகள் என்ன வரிகள். ரொம்பவருடம் ஆகிவிட்டது இதுபோல் பாடல் கேட்டு. புதுப்படம் தான் பார்க்கவேண்டும் என்ற ஆசையே ஏற்படுத்தவில்லை இந்த அழகான வரிகள் அதுவும் அனுபல்லவியின் இனிமை இருக்கே அடடா அடடா பாலுஜி //நீ எனக்கும் நான் உனக்கும் அழகு.. அழகு.. அழகே.. அழகு// என்னவொரு ஸ்வீட் சூப்பர்ப். படம் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால் அது காட்சிகள் எப்படி படமாக்கியிருக்கிறார்கள் என்று தான் பார்க்கவேண்டும். பாலுஜி ரசிகர்களூக்கு ஓர் அருமையான பனிவிழும் மலர்வனம் போல ஒரு பிரம்மை. அனுபவியுங்கள் அன்பர்களே. புதுப்பாடலை வரிக்கு வரிக்கு அனுபவிக்கலாம் வாருங்கள் இசையன்பர்களே. இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் உள்ளது. அது அடுத்த பதிவில்.

படம்: மகேஷ், சரன்யா மற்றும் பலர் (தலைப்பிற்க்காகவது படத்தை பார்த்துட வேண்டும்)
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி

அனைவருக்கும தமிழ் புத்தாண்டு தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

வைகறை பனியே.. பூமியின் அழகு
வாழ்க்கையின் துணையே.. வாலிப அழகு
ஏற்றிய தீபங்கள் கோவிலின் அழகு
மார்கழி கோலங்கள் வாசலின் அழகு
நீ எனக்கும் நான் உனக்கும்
அழகு..அழகு…அழகே.. அழகு

வைகறை பனியே.. பூமியின் அழகு
வாழ்க்கையின் துணையே.. வாலிப அழகு

அழகு அத்தனை அறியும் கண்களை
தெரிந்துகொள்வது சந்தோஷம்
உறவு அத்தனை உணரும் நெஞ்சிடம்
இணைந்து கொள்வது சந்தோசம்
புலிகள் எத்தனை பொழியும் மானிடம்
நனைந்து கேட்பது சந்தோசம்
நிறங்கள் எத்தனை மலர்ந்த பூவிடம்
மறைந்து பார்ப்பதும் சந்தோசம்
ஓடி வரும் நதிபோலே விரும்புமே சந்தோசம்
தேடி வரும் சுகம் யாவும் எழுதுமே சந்தோசம்

நீ எனக்கும் ஹஹ நான் உனக்கும்
அழகு..அழகு…அழகே.. அழகு

வைகறை பனியே.. பூமியின் அழகு
வாழ்க்கையின் துணையே.. வாலிப அழகு

எழுதும் சொற்களின் இனிமை மொத்தமும்
இசையில் சேர்வதால் உண்டாகும்
தவழும் தென்றலை வருடம் மெல்லிசை
செவியை சேர்வதால் நன்றாகும்
செவியை தொட்டிடும் இசையின் கற்பனை
மனதை சேர்வதால் மெய்யாகும்
இதனைப் போலவே இதயம் என்றும் இதயமே
இணைய சேர்வதே அன்பாகும்

ஆசைகள் தொடுவானை அடைவதே கல்யாணம்
காதலுடன் கலந்தாலே ஆகலாம் எந்நாளும்

நீ எனக்கும் நான் உனக்கும்
அழகு..அழகு…அழகே.. அழகு

வைகறை பனியே.. பூமியின் அழகு
வாழ்க்கையின் துணையே.. வாலிப அழகு
ஏற்றிய தீபங்கள் கோவிலின் அழகு
மார்கழி கோலங்கள் வாசலின் அழகு
நீ எனக்கும் நான் உனக்கும்
அழகு..அழகு…அழகே.. அழகு

715 ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை

January 2, 2009


பாடல் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். ஒரு ஹோட்டலுக்குள் சென்று வெளூத்துகட்டுன பீலிங்க்ஸ்ப்பா. நிச்சயமாக இந்த படத்தை நான் பார்கவே இல்லை. தேங்காய் சீனிவாசன் நடித்தது என்று தெரிகிறது. யம்மாடி அண்ணனும், தங்கையும் பாடல்கள் நடுவில் அடிக்கற கூத்தை கேட்டீர்களென்றால். அறண்ட்ருவீங்க சார். அன்றே இந்த மாதிரியெல்லாம் கூததடித்திருக்கிறார்கள். கலக்கல் பாடல் அனுபவீங்க, இதுக்கு முன்னாடி எத்தனைப் பேர் கேட்டிருக்கீங்க?

இந்த பாடல் புது வருட ஸ்பெஷல் அயிட்டம்.

படம்: மாமான் மச்சான்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்

இத்தப்பாடமே எத்தை எத்தையோ கூவிக்கினுக்கிறயே எங்க பாடு
பாடட்டுமா எப்படி பாடறனு சும்ம கேளு சும்ம ஜகா வாங்ஜறேன் பாரு ஹ

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதம்மே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதம்மே வாசம்

நைசா பூந்துட்ட தம்மத்துண்டு மனசுல
நாஸ்டா புடிக்கல நாளு நாளா உடம்புல

நைசா பூந்துட்ட தம்மத்துண்டு மனசுல
நாஸ்டா புடிக்கல நாளு நாளா உடம்புல

புரிஞ்சிக்கிட்டேன் கயிதே நான் போக்குவேனா பொய்தே??
புரிஞ்சிக்கிட்டேன் கயிதே நான் போக்குவேனா பொய்தே??

படிக்கட்டுமா நான் பாட்டு நான் பாய விரிச்சு போட்டு
பாய விரிச்சு போட்டு

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
தோசை மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்

டாப்ன்னா டாப்பு டக்கர்நன்னா டாப்பு
டூப்ப்ன்னா டூப் டுபாக்கூர் டூப்பு

டாப்ன்னா டாப்பு டக்கர்நன்னா டாப்பு
டூப்ப்ன்னா டூப் டுபாக்கூர் டூப்பு

டாவு அடிக்கனும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி

டாவு அடிக்கனும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி

மாமா என்னைப பாரு நான் மைலாப்பூரு தேரு
மாமா என்னைப பாரு நான் மைலாப்பூரு தேரு

வயது வந்த பொட்டை உன் சைசுகேத்த கட்டை
உன் சைசுகேத்த கட்டை

ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
தோசை மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்

துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்

பார்த்தியா ஜகா வாங்கிட்டேன் அம்ம்மாஆஆ…