Archive for February, 2009

நீயின்றி நானும் இல்லை

February 27, 2009

யாருப்பா அது – இந்தப் பாட்டை யாரோ எஸ்பிபி சரணாமே – அவருதான் பாடியிருக்காராமே! யார் காதுல பூ சுத்தப் பாக்கறீங்க?

ஐயா ரசிகர்களே – நீங்களே இந்தப் பாட்டை நாலஞ்சு தடவை நல்லாக் கேளுங்க. லவுட் ஸ்பீக்கர்ல கேட்டாலும் சரி – இல்லாட்டி போஸ் நாய்ஸ்லெஸ் ஹெட்ஃபோன்ல கேட்டாலும் சரி. கேட்டுட்டு இந்தப் பாட்டுல கலர்ல ஹைலைட் பண்ணியிருக்கற வார்த்தைகளை பாலு பாடவில்லை என்று நிரூபிச்சிட்டீங்கன்னா என்னோட ராஜ்யத்துல பாதியையும், என் பையனை மாப்பிள்ளையாகவும் தருவதாக உறுதியளிக்கிறேன்! அட மத்ததைக் கூட விடுங்கய்யா. “முகம் பார்க்க”ன்னு வருது பாருங்க. இதப் போயி பாலு பாடலைன்னா சின்னக் கொழந்தைகூட நம்பாது. சும்மாவா? 30000 பாட்டு கேட்ருக்கோம் இது வரைக்கும். பாலு பாடினது கூடவா எங்களுக்குத் தெரியாம இருக்கும்? ரவீ ஸார். நீங்களே சொல்லுங்க! :-)))

படம் : வாரணம் ஆயிரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: க்ளிண்ட்டன், எஸ்பிபிசரண் (and SPB ன்னு போடாம விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!)
நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யுமில்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான்
வலி கூட இங்கே சுகம்தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இனியுன்னைப் பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே
ஓ சாந்தி சாந்தி ஓம் சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி ஓ….
நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யுமில்லை
உனைக் காணும் நேரம் வருமா (வருமா)
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண்ணடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
லாயி லாயிலாயி லாயி லாயிலாயி
லாயி லாயிலாயி லாயி லா லா யி
Advertisements

735 நல்ல நாளூம் பொழுதுமா

February 27, 2009

நல்ல நாளூம் பொழுதுமா ஆமாங்க இன்று எனக்கும் உங்களூக்கும் நல்ல நாள் தான் 5 பாடல்கள் தொடர்ந்து கேட்கறீங்களே. கே.வி.எம் மாமா அவர்களின் இனிமையான பாடல் இது. ஜாமாய்ங்க. மெட்டு எங்கோயோ கேட்ட மாதிரி இருக்குதானே?

நல்ல நாளூம் பொழுதுமா
மலர்கின்ற பருவத்திலே
நடிகர்: ராஜசேகர், வனிதா
இயக்குனர்: எல்.வைதியநாத்
தயாரிப்பாளர்: எஸ்.பரமேஸ்வரன், ராஜ பிரியா
இசை: கே.வி.மகாதேவன்
வருடம்: 1980

Get this widget | Track details | eSnips Social DNA

நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா

கொள்ளைகாட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு
கொள்ளைகாட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு

ஆடு போல தள்ளாடு
அடி அழகு பொண்ணே நீயாடு
ஆடு போல தள்ளாடு
அடி அழகு பொண்ணே நீயாடு

நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் சோசியம்
நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு

ஆவாரம்பூ காத்தோரம் நதி
அலங்கப்போகும்?? ஆத்தோரம்
மீதி வந்தது காதோரம்
சேர்ந்து வந்தது ஆதாரம்
ஆவாரம்பூ காத்தோரம் நதி
அலங்கப்போகும்?? ஆத்தோரம்
மீதி வந்தது காதோரம்
சேர்ந்து வந்தது ஆதாரம்

கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த் குமரன் கோவில் தேராட்டம்
கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த் குமரன் கோவில் தேராட்டம்

சுத்திவந்தது நீரோட்டம்
சும்மா சும்மா போராட்டம்

நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்

பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு

குமரி பூவில் வண்டாட இடை
குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்போம் நன்றாக

குமரி பூவில் வண்டாட இடை
குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்போம் நன்றாக

மஞ்சள் முகமும் கனியாக பூ
மலர்ந்த மேனி கண்ணாக
மஞ்சள் முகமும் கனியாக பூ
மலர்ந்த மேனி கண்ணாக

இரவும் பகலும் ஒண்ணாக நம்
இளமை இன்னும் பொண்ணாக

நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்

நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்

பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா

பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு

பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா

734 சின்ன பொண்ணு நானும்

February 27, 2009

படம்: ஆளப்பார்த்து மாலை மாத்து
பாடியவர்கள்; எஸ்பி.பி, சுஜாதா

படத்தை நான் பார்க்கவில்லை தகவல்கள் தெரிந்த்வர்கள் தராலமே? இனிமையான பாடல். கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சின்ன பொண்ணு நானும் தனியா நிக்குறனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்குறனே
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா
சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா
குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா
குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா

நேத்து பழைய ரோட்டுலதான்
மொதமொத நான் பார்த்தேன்
பாலக்காட்டு பருவ பொண்ணு மனசுகுள்ளே ஏக்கம்

ஊட்டிமலை உருளைக்கிழங்கு என்னை தேடி வந்து
ஆட்டம் என்ன உன் மனசுல வயசுபுள்ள சொல்லு

என்னவோ தோனுது என்னானு தெரியல
என்னவோ தோனுது என்னானு தெரியல

தெரிஞ்சா சந்தோசம் தான்
தினமும் கும்மாளம் தான்
தெரிஞ்சா சந்தோசம் தான்
தினமும் கும்மாளம் தான்

சின்ன பொண்ணு நானும் தனியா நிக்குறனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்குறனே

குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா

குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

அன்னக்கிளி உன் நெனப்பு ஆறுதலா இருக்கும்
சொன்னபடி நான் நடப்பேன் கவலையெல்லாம் எதுக்கு

பொம்பளைங்க மனசுகுள்ளே பகைவன்?? தான் இருக்கு
புரிஞ்சா அதுபோதும் கவலையில்லை எனக்கு

அடுத்தது ஆவணி இனி ஏண்டி தாவனி
ஹஹ அடுத்தது ஆவணி இனி ஏண்டி தாவனி

முடிஞ்சா மாலை ஒண்ணு
கட்டுங்க தாலி ஒண்ணு
முடிஞ்சா மாலை ஒண்ணு
கட்டுங்க தாலி ஒண்ணு

சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா

குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

போடு குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா

லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ

733 இங்கே இங்கே இங்கே

February 27, 2009

இங்கே இங்கே இங்கே இதோ ஒரு கலக்கல் பழைய பாடல் இன்று வரும் எல்லாபாடல்களூம் இந்த் தளத்தின் நான்காவது வருட துவக்க விழா சிறப்பு பாடல்கள். ஆமாம் அன்பர்களே சென்ற 6.2.2009 அன்று இந்த தளத்தின் மூன்று வருடம் முடிந்து நான்காவது ஆண்டில் துவங்க்குகிறது. கோவை பாலுஜி விசிட் மற்றும் ஹைத்ராபத் சந்திப்பு என்ற பிசியில் சுத்த்மாக மறந்து விட்டேன். (சுந்தர் சார் நீங்களாவது நினவு படுத்தி ஒரு பதிவு போட்டிருக்கலாமே? மறந்தோட்டோம்) பரவாயில்லை. அதனாலே இன்று ஒரே மூச்சோடு உட்கார்ந்து பாடல் சேகரித்து குறைந்த பட்ச பதிவுகள் போட்டு கலக்கிடறேன். அன்பர்களே இன்னும் அதிகம் கேட்கபடாத பதிவுகள் காத்திருக்கிறது. பதிவு போட்டவுடனே அகில உலகம் முழுவதும் குறிப்பாக துபாய், அமெரிக்க, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், திருச்சி, திருப்பூர், கொச்சின் ஆகிய பாலுஜி ரசிகர்கள் தவறாது வருகை தருகிறார்கள் அவர்களூக்கு சுந்தர் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆத்ரவு தந்து எங்களை உற்ச்சாகப்படுத்துங்கள்.

படம்: மாடி வீட்டு ஏழை
சிவாஜிகனேசன், ஸ்ரீப்ரியா, சுஜாதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: அமிர்தம்
வருடம்:22.08.1981

Get this widget | Track details | eSnips Social DNA

இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே

சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே

நவரச பாவனை நடிகன் எங்கே
நல்ல மனிதர்களின் ஒருவன் இங்கே
ஆஆ…ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆ…ஆஆஆஆ..ஆஆஆஆ

இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே

மஞ்சள் வண்ண மாங்கனி
மின்னல் இடை மோகினி
முத்து மொழி பைங்கிளி
தத்திவரும் பூங்கொடி
ஆடும் உன்னோடு தான்
ஆடும் உன்னோடு தான்

கன்னி எனும் தாமரை
கண்ணம் அதில் தேன்மழை
சின்னஞ்சிறு புன்னகை
சிந்துகின்ற மேனகை
பாடம் பண்னோடுதான்

உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
தன்னை மறந்தது தோகை கொஞ்சம்

நல்ல இளமையின் வேகம் இங்கே
உள்ளம் வீணையின் ராகம் அங்கே
இங்கே இங்கே இங்கே

மொட்டு விட்ட மல்லிகை
தொட்டு விட புன்னகை
கிட்ட வந்து தென்றலை
எட்டி எட்டி சென்றது
ஏக்கம் என்னாவது
ஏக்கம் என்னாவது

அத்தை பெற்ற பிள்ளையோ
அள்ள அள்ள கண்மணி
மெத்தையிட சொலவதோ
என்னை இந்த பொன்மணி
மோகம் பொல்லாதது

பென்கள் பிறந்தது நீதான் கொஞ்ச
மன்ணன் பிறந்தது நான்தான் கெஞ்ச

கன்னிமலருக்கு நானா தென்றல்
மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்

இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே

732 ஆசை போவது விண்ணிலே

February 27, 2009

பாடல் என்றால் இப்படிதான் தான் இருக்கவேண்டும். எப்படி என்கிறீர்களா? என்னவொரு அழகான மெட்டு ஆர்பாட்டமில்லாத தாளம் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு போல் இருக்கிறது என் பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்கள் இவை. சீரான வரிகள் கேட்டு பாருங்கள் பாலுஜி எவ்வளவு அமர்க்களமாக வார்த்தை சுத்தமாக பாடியிருக்கிறார். இதுபோல் பாடல்கள் என்றால் நமக்கு கேட்டு வரிகள் தட்டச்சு செய்ய குதுகுலம் தான். ஆஹா..ஆஹா.. சரணங்களில் வரும் சீரான தாளம் மறக்க முடியவில்லை அனுபவியுங்கள் அன்பர்களே. இந்த தளத்தில் ஒரு நேயர் திரு. மகேஷ் அவரகள் சென்ற பதிவில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பதிவில் பாலுஜியைப் பற்றி தகவல்கள் மற்றும்
கேள்விகள் கேட்கலாமே என்று இணையதள அன்பர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று ஒரு யோசனையை வழங்கினார். இந்த தளம் ஆரம்பிக்கும் போதே இந்த யோசனை இருந்தது தான். அதிக பட்ச பாலுஜி நேயர்கள் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து
வைத்து இருப்பார்கள் இருந்தாலும் அறிதான புதிதான தகவல்கள் தரலாம் அதுமட்டுமல்லாமல் பதிவில் இடம் பெறாத கலைஞ்சர்களின் பெயர்களூம் கேள்வியாக கேட்கலாம் தெரிந்த அன்பர்கள் வழங்கலாம். ஒரு நல்ல யோசனையை வழங்கிய திரு. மகேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி. இனி வரும் பதிவுகளில் முடிந்த வரை தகவல்களூம் சேர்க்கப்படும்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: நாம் பிறந்த மண்
பாடியவர்: எஸ்.பி.பி
கதை: ராஜசேகர்
சிவாஜிகனேசன், கமலஹாசன், கே.ஆர்.விஜயா
இசைள் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: வின்செண்ட்
வருடம்: 7 அக்டோபர் 1977

ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் தாளாத தங்கங்கள்

கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது

ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை

இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்

இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்

பத்து பதினொன்னு பன்னிரண்டு
சொத்து பலகோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது

உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்

ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்
தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்

இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்

இறைவாஆஆஆஆ…. என்னை மன்னித்துவிடு

731 இளையராணி இவள் அழகு தனி

February 27, 2009

இதோ ஒரு பழைய பாடல் சுராங்கனி என்ற படத்தில் இருந்து //இளையராணி இவள் அழகு தனி.. எங்கே உன் பயனம் இனி சுராங்கனி .. சுராங்கனி… மயிலினம் ஆட மானினம் ஓட
மீனினம் மெல்ல நீரினில் துள்ள..// என்று துவங்குக்ம் பல்லவியே பரவசப்படுத்தும். சரணங்கள் ந்ம்மை எங்கெங்க்கோ கொண்டு செல்லும். பாடல் எப்பவோ நான் கேட்டது இப்போது கைக்கு கிடைத்தது. கேட்டு மகிழுங்கள். (யார் நடிகர்கள் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் தராலாமே?)

படம்: சுராங்கனி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி, சைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA

இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி…
மயிலினம் ஆட மானினம் ஓட
மீனினம் மெல்ல நீரினில் துள்ள

இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி…..

கட்டழகு கண்ணம்மா
சொல்லழகி செல்லம்மா
நடையழகி நல்லம்மா
எங்கே போறே சொல்லம்மா

இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி…

இன்பத்தின் எல்லை
வேறென்றும் இல்லை
காதலின் தொல்லை
உன்னை விடவில்லை

இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி..

ஆயிரம் என்னம்
எத்தனை வண்ணம்
பேதையின் உள்ளம்
சிந்த்னை வெள்ளம் ஆஆஆ

இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி..
சுராங்கனி..

முறிந்தது உறவு
நிரந்தர பிரிவு
கலைந்தது கனவு
நெருங்குது முடிவு

எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி.. சுராங்கனி..

730 ஏ.ஆர்.ரஹ்மான்ஜிக்கு ஜே..

February 23, 2009

ஏ.ஆர்.ரஹ்மான்ஜிக்கு ஜே..

இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களூக்கு அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், கோவை ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

இந்த தளத்தில் துவக்க காலத்தில் அதாவது 16.02.2006 அன்று பாஸ்டன் சுந்தர் அவரக்ளால் பதியப்பட்ட “காதல் ரோஜாவே” என்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனிசை மெலோடி பாடல். ரஹ்மான்ஜியின் தமிழில் முதல் படமான ரோஜா இந்த படத்தில் இருந்து மீண்டும் காதல் ரோஜாவே பாடலை வழங்கி அவருக்கு வாழ்த்து சொல்வதில் மிக்க் மகிழ்ச்சியடைகிறோம்.

என்றும் அன்புடன்
கோவை ரவி, வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்

729 ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா

February 20, 2009

படம்: சுராங்கனி
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா

அழகான பல்லவியை கொண்ட இந்த பாடலின் மெட்டை கேட்டால் ஏற்கெனவே வேறு
ஒரு பாடல் மெட்டு நினைவுக்கு வருகிறது மனதில் இருக்கிறது உதட்டிற்க்கு வரமாட்டேன்கிறது. பாடலில் சரணங்களின் மெட்டு மெய் மறக்க செய்யும். குறிப்பாக //அணைப்போமா.. இணைப்போமா…// கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

Get this widget | Track details | eSnips Social DNA

ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா

ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..

கண்ணோடு கையை கையோடு கையை
நெஞ்சோடு நெஞ்சை அணைப்போமா
இதழோடு இதழை
நூலோடு தேனை தீயோடு பஞ்சை இணைப்போமா
அணைப்போமா, இணைப்போமா

ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா

ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..

நான் தரும் மோக்ம தீராத மோகம்
தனியாத தாகம் தனிந்திடுமா

நான் ஆடும் மேகம் வேறேது பூலோகம்
இனிமே தான் சொர்க்கம் தெரிந்திடுமே

தனிந்திடுமா… தெரிந்திடுமே..

ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா

ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..

மூலிகை பலநூறு கலந்தது பாலாறு
வாசனை பன்னீரு வேடிக்கையோ
ஜில் என்ற பன்னீரு அருகினில் வா பாரு
களியாட்டம் பலநூறு வாடிக்கைத்தான்
வேடிக்கையோ….வாடிக்கைத்தான்

ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா

ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..

728 தந்தத்திலே செய்த நிலா

February 19, 2009

புதிய படமான மகேஷ், சரன்யா மற்றும் பலர் படத்தில் வித்யாசாகரின் இசை சூப்பர் தொடர் மெட்டு குறிப்பாக பாடலில் வரும் கிடாரின் இசை நெஞ்ச அள்ளிக்கொண்டுபோகும். // நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்// தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அருமையான பாடலை அமர்க்களமாக பாடியிருப்பார் பாலுஜி. கேட்டு மகிழுங்கள்.

படம்: மகேஷ், சரன்யா மற்றும் பலர்
நடிகர்கள்: சந்தியா, சக்தி, கீர்த்தி சாவ்லா, டேனியல் பாலாஜி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: வித்யாசாகர்

Get this widget | Track details | eSnips Social DNA

தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா

தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா

என்றும் பாதம் போல உன்னை எங்கள் பாசம் இங்கு தாங்கும்
உந்தன் பாதத்தோடு பேச இந்த சலங்கை கூட ஏங்கும்
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்

தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா

செல்லக்குறும்புகள் சின்ன சினுங்கல்கள்
அந்த நிமிடங்கள் நெஞ்சில் ஊறுமோ
எங்கள் இமைகளே இன்று குடையினில்
உந்த உறவிலே வெயில் காயுமோ
அன்பில் வீட்டை ஆளூம் போது
அன்னை இங்கு நீதானே
தங்கைக்காக வாழும் போது
அண்ணன் கூட நாய் தானே
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்

தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா

சின்னப்பறவையே உந்தன் நிழலுக்கும்
இங்கு நாங்களே சிறகாகுவோம்
எந்தன் தோட்டத்தில் வந்த வாழைக்கும்
இனி நாங்களே விழுதாகுவோம்
உள்ளங்கையில் ரேகைட்யை போல உள்ளம் என்றும் மாறாது
தொட்டில் போடும் தூர உன்னை விட்டு போகாது
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்

தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா

727 ரசிகன் ரசிகன் ரசிகன்..பகுதி 1 மற்றும் 2

February 17, 2009


ரசிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு -1

Get this widget | Track details | eSnips Social DNA

சுமார், ஆறு மாதங்களூக்கு முன் சென்னையில் இருந்து திரு. மணிவண்ணன் என்பவர் எனது கையடக்க பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை இணையத்தில் பார்த்திருக்கிறேன். அதை குறிப்பிட்டு பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சி ஒன்றை கலைஞ்ர் தொலைக்காட்சியில் பிரதி வாரம் ஞாயிறு அன்று ஒளிப்பரப்பி வருகிறது. அதற்கு, தாங்கள் ரசிகன் ஒரு நிகழ்ச்சியை தாருங்கள் அன்புடன் கேட்டுக்கொண்டார். நான் சென்னை நண்பர்களிடம் தெரிவித்து இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் நமது பாலுஜி ட்ரஸ்டிற்க்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று சொன்னதுடன் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்ட
சென்னை மற்றும் நாமக்கல் கோவை ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் கலந்து கொள்ள் முடியவில்லை அதனால் மிகவும் வருந்தினேன். ஏனென்றால் நிகழ்ச்சி மிக அற்புதமாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: திரு. பி.எஹ்.அப்துல் ஹமீது
நிகழ்ச்சியின் நடுவர்: திரு. மாணிக்க விநாயகம்

முதலில் பாலுஜி அவர்கள் தன் ரசிகர்கள் பற்றிய தன் மனதில் தோன்றிய கருத்துக்களை
தெரிவித்த ஒளீக்காட்சி காட்டப்பட்டது..

சென்னை அணி 1 >> அசோக், யுவராஜன், ராம்சந்தர்

நாமக்கல் அணி >> சேஷாத்திரி, நாராயணன், எஸ்.பாலாஜி

காஞ்சிபுரம் அணி >> பிரசன்னா, கார்த்திக் ராஜா, ஆரோக்யராஜ் ஜெனிபர்

கோவை மாநகர் அணி >> விஜய்கிருஷ்னன், ஸ்ரீனிவாசன், ராஜ்மோகன்

மேற்கண்ட 4 அணிகளூம் மிகவும் உற்சாகத்துடன் இருப்பதை தொலைக்காட்சியில் காணமுடிந்தது, அந்த அணிகளிடம் திரு.பி.எஹ் அப்துல் ஹமீது அவர்கள் கேட்ட கேள்விகளூக்கு திரு. அசோக், எஸ்.பாலாஜி, திரு.பிரசன்னா திரு. சேஷாத்திரி திரு. கார்த்திக் ராஜா, திரு. விஜய் கிருஷ்னன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அமர்க்களமான பதில்கள் தந்து கலக்கிவிட்டனர். அந்த சம்பாசனைகளை நான் எழுத்து வடிவில் இங்கு தரஇயலும ஆனால் ஒலிக்கோப்பு இருக்கும் போது நான் எழுதுவதை விட தங்கள் காதிலேயே கேட்டால் உங்களூக்கு ஓர் உற்சாகமாக இருக்கும். அதனால் அதிகம் உங்களை சோதிக்க விரும்பாமல் முதலிலேயே ஒலிக்கோப்பின் ப்ளேயரை தந்துவிட்டேன். தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளதால் தாங்கள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

குறிப்பாக, சென்னை அணியில் அதிரடியுடன் பாலுஜியின் பாடல் கேள்விகளூக்கு அவள் ஒரு நவரச நாடகம் என்றா பாடலை அசத்தலாக பாடிய திரு. அசோகிற்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அவர் இந்த மேடையின் வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்யிருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

நாமக்கல் அணியில் திரு.எஸ்.பாலாஜி அவர்கள் ஏற்கெனவே பல பக்தி பாடல் ஆல்பங்கள் வழங்கியிருப்பதால் அவரும் எந்தவித டென்சன் இல்லாமல் பாலுஜியின் லேட்டஸ்ட் பாடலான யாரோ யாரோடு யாரோ என்ற பாடலை சிறிதும் அலட்டிக்காமல்
பாடியது அனைவரையும் அசத்தியது. அவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

காஞ்சிபுரம் அணியில் திரு.ஆரோக்யராஜ் அதிரடியுடன் எங்கேயும் எப்போதும் என்ற பாடலை பாடி அனைவரையும் தாளம் போட வைத்துவிட்டார்.

கோவை மாநகர் அணியில் திரு.ஸ்ரீனிவாசன் பாடும் வாணம் பாடி பாடல் கேள்வியில் சரணவரிகள் கிடைக்காமல் மெட்டை விடாமல் பாடி திணறினாலும் முடிவில் பல்லவி பிடித்து பாராட்டை பெற்றார். திரு. ராஜ்மோகன் அவர்கள் தளபதி பாடல் ராக்கம்மா கையை தட்டு என்ற பாடலை மிகவும் பாலுஜி ஸ்டைலில் ரசித்து பாடியது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கும் வாழ்த்துக்கள்.

மேலும், இந்த ஒலிக்கோப்பில் இறுதியில் நடுவர் திரு. மாணிக்க விநாயகம் அவர்கள் பாலுஜியை பற்றி பொதுவான கேள்விகள் கேட்டார். அந்த பகுதியும் அவர் பாடிய பாலுஜியின் பாடலும் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் அணீக்கு பரிசு வழங்கும் பகுதியும் துரவதிர்ஷ்டமாக மின்தடை ஏற்பட்டு பதிவு செய்ய முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன் . நமது அன்பர்கள் எவரேனும் ஒளீக்காட்ட்சியாக பதிவு செய்திருந்தால் அதைக் காண ஆவலுட்ன் நானும் காத்திருக்கிறேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த வார பகுதிகாக இனி உங்களூடன் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது வழக்கம்போல் அனைவரின் அவருடைய பாணீயில் வழங்கி உள்ளத்திலும் மகிழ்ச்சியை உருவாக்கினார்.

இந்த முதல் எபிசோடை மிகவும் திறமையுடன் இயக்கிய திரு. மணிவண்ணன் அவர்களுக்கும், தயாரித்த நிறுவனமான கிரேவ்டி நிறுவனத்தாருக்கும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ரசிகன் ரசிகன் ரசிகன் ஒலித்தொகுப்பு 2

Get this widget | Track details | eSnips Social DNA

ரசிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு -2

அன்பு உள்ளங்களே..

சென்ற வாரம் 15.02.2009 ஞாயிறு அன்று நமது கலைஞர் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் 12 மணி வரை பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகன் என்ற அருமையான நிகழ்ச்சி முதல் பகுதி ஒளிப்பரப்பட்டது. இதை பாடும் நிலா பாலு தளத்தில் பதிவாக ஒலிக்கோப்புடன் வழங்கினேன். இதோ இந்த பதிவில் நேற்று 22.02.2009 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை 2 ஆவது பகுதி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர், சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து நமது யாகூ குழுவின் ரசிகர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து திரு.விஜயகுமா, திரு.பாலாஜி, திருமதி.ஆ.லக்‌ஷ்மி ஆகியோரும், சேலம் மாவட்டத்தில் இருந்து திரு.ஆர்.துரைராஜ், திரு.கோகுலகிருஷ்னன், திருமதி.ரமாதேவி மேலும் சென்னை 2 அணியில் இருந்து திரு.சி.பாலாஜி, திரு.பிரகாஷ்,திரு.ஏ.எஸ்.நடராஜன் ஆகியோரும் மற்றும் சென்னை 3 ஆவது அணியில் இருந்து திரு.ஏ.ராமன், திரு.எம்.நடராஜன், திரு. பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு இந்த 2ஆவது பகுதியை மிகவும் சிறப்பாக வழங்கினார்கள். இனி ஒவ்வொரு குழுவும் எப்படி தன் திறமை காட்டினார்கள் என்று தாங்கள் ஒலிக்கோப்பில் தரவிறக்கம் செய்து கேட்கலாம். இருந்தாலும் முன்னோட்டமாக சில குறிப்பிடுவனவற்றை நான் எழுத விரும்புகிறேன்.

வேலூர் மாவட்ட அணியில் இருந்து திரு. விஜயகுமார் பல தொலைக்காட்சி மேடைகளில் தன் குரல் திறமையை வெளிகாட்டியுள்ளார். இந்த மேடை அவரின் அபிமான பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சியில் தனிப்பட்ட திறமையை முன் நிறுத்தி மிகவும் அசத்தலாக வழங்கினார். எல்லாகேள்விகளூக்கும் அழகாக நறுக்கு தெரித்தார் போல் சரியான பதில்கள் தந்தது பாராட்டபட வேண்டிய ஒன்று. மேலும் அவர் மடை திறந்து என்ற பாடலையும், தனித்திறமை
சுற்றில் கலகல வென் கவிதைகள் என்ற பாடலையும் மிகவும் மிகவும் சிறப்பாக பாடி தன் பங்கை செவ்வனே செய்து பாலுஜியின் மீதுள்ள தன் அபிமானத்தை காட்டினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்கும் அவருடன் இருந்த மற்ற அன்பர்களூக்கும் வாழ்த்துக்கள்.

சென்னை 2 அணியில் திரு. ஆர். துரைராஜ் அவர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் அவருடன் சேர்ந்து ரமா தேவி அவர்களும் பாலுஜியின் ஆதிகால பாடலான ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடலை மிகவும் அனுபவபூர்வமாக உணர்ந்து பாடி கேட்பவர்களின் மனதை கொள்ளைக்கொண்டார் அதுமட்டுமல்லாமல் நடுவரின் சிறப்பான பாரட்டையும் பெற்றார். சென்னை 2 வது குழுவினருக்கும் வாழ்த்துககள்.

சென்னை 3 அணியில் பாலுஜியைப்போலவே உடல் வாகுவை போன்ற ரு.ஏ.எஸ்.நடராஜன் அவர்களின் புதுபுதுஅர்த்தங்கள் படத்தின் பாடலான கேளடி கண்மணி என்ற எனக்கு மிகவும் பிடித்த மெலோடி பாடலை மிகவுன் ரசித்து பாடி அசத்தினார். அவருடன் திரு. சி.பாலாஜியும் பாலுஜியின் சாரிட்டி பவுண்டேசன் பற்றிய தகவல்களை சொன்னது. அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் வெகுவாக பாராட்டி சொன்னது அசத்தலாக இருந்தது. அத்துடன் சாரிட்டி பவுண்டேசனில் எப்படி உறுப்பினராக சேர்வது என்ற வீடியோ க்ளிப்பிங் காண்த்தும் அதில் திரு. அசோக் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தது புதிய ரசிகர்கள் சேர்வதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது.

சேலம் மாவட்ட அணியில் இருந்து திரு. பாலாஜி அவர்கள் கடவுள் அமைத்து வைத்த பாடலையும் அதில் நடுவில் வரும் மிமிக்ரி நிகழ்ச்சியையும் சிறப்பாக ஒருவரே
பாடி காண்பித்து ஒட்டு மொத்த ரசிகன் நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பாக வழங்கினார். அருமையாக பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டார் என்று சொன்னால்
அது மிகையாகாது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக வருகை தந்தவர் இசையமைப்பாளர் திரு. சிற்பி அவர்கள். அவர் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் ரசித்து தன் பங்குக்கு குழுவினரிடம் சில அழகான கேள்விகள் கேட்டு அருமையான பதில்கள் பெற்றார். அவரும் பாலுஜியின் மீது உள்ள தன் அன்பையும் சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்ர்க வைத்தார். முடிவில் இந்த நான்கு குழுக்களூம் பாலுஜியின் மீதுள்ள அன்பின் காரணமாக மிகவும் நன்றாக பாடினார்கள் யாரின் அன்பையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை அனைவரின் அன்பையும் பிரித்து பங்குப்போட்டு யாரி அதிகம் அதிகம் அன்பு செலுத்திறார் என்று குறிப்பிட்ட விரும்பவில்லை ஆகையால் அனைத்து குழுவினருக்கும் அவர்களின் திறமையை பாராட்டி பரிசுகள் வழங்குகிறேன் என்று சொல்லி எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நடுவர்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் முன் தினம் இரவு 9 மணிக்கு ரசிகன் நிகழ்ச்சியின் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்ப்பு கொண்டு நாளை நிகழ்ச்சியை
பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். ரசிகர்களூக்கும் சொல்லுங்கள் என்று சொல்லி. சில மாதங்கள் கழித்து இது போல் இன்னும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வேன்
அதில் நீங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இந்த இரண்டு பகுதிகளையும் மிகவும் சிறப்பாக இயக்கி, சரியான இடத்தில் மிகவும்
எடிட் செய்து எங்கள் பாலுஜியின் சார்ட்டி பவுண்டேசன் பற்றி சிறிய ஒளிக்கோப்பும் சேர்த்து இந்த சமூகத்துக்கு மேலும் சில நற்பணிகளை செய்ய உதவி செய்த இயக்குநர்
அவர்களூகும் எங்களூக்கு இந்த வாய்ப்பு வழங்கிய தயாரித்த கிரேவிட்டி நிறுவனத்தாருக்கும் பாலுஜி சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்து
கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த இரண்டு நிகழ்ச்சியின்
ஒலித்தொகுப்பை பதிவு செய்து பாலுஜியின் பாடும் நிலா தளத்தில் வழங்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதற்க்கு மிகவும் ஒத்துழைத்த அனைத்து
அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் என் பணிவான நன்றி.