Archive for April, 2009

770 லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு

April 30, 2009

ஜெர்மனியின் செந்தேன் மலர் திருமதி. ராகினி பாஸ்கரன் லண்டன் தமிழ் வானொலி

லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு ஒலிஉலா வரவிருக்கிறது கூடிய விரைவில்.

பாடும் நிலா பாலு தளத்தின் மூலம் பாலுஜியின் அற்புதமான பாடல் தொகுப்புக்கள். கோவை சூரியன் பண்பலை, ஆல் இந்தியா ரேடியோ, ஆகிய வானொலிகளில் பாலுஜியின் சிறப்பு ஒலித்தொகுப்புக்கள் வந்துள்ளன இதோ இந்த ஒலித்தொகுப்பு கடல்
தாண்டி வாழும் நம் தமிழ்நெஞ்சங்களூக்காக பாலுஜியின் சிறப்பு கவிதை ஒலித்தொகுப்பு தான் இது. கூடிய விரைவில் லண்டன் தமிழ் வானொலியின் மூலமாக
வானவெளியில் வலம் வரகாத்திருக்கிறது அன்பர்களே ஆச்சரியமான விசயம் ஆகும். முதலில் இதை உருவாக்கிய இசைப்பிரியை பாலுஜியின் குரல் மீது பாசமிகு அன்பை கொண்டுள்ள மழலை கொஞ்சும் குரல்யாளினி தொகுப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும், இந்த தளத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பாலுஜி அவர்களூக்கு நன்றியை தெரிவிக்கும் வாய்ப்பை வழங்கிய வற்றாயிருப்பு சுந்தர் அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இனி திருமதி.ராகினி பாஸ்கர் அவர்களின் ரத்தின சுருக்கமான சிறிய ஓர் அறிமுகம் இவர் லண்டன் தமிழ் வானொலி மற்றும் டி.ஆர்.டி தமிழ் வானொலிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளினி, மழலை கொஞ்சும் குரல்யாளினி தன் கவிதைகள் மூலம் திரை இசைப்பாடல்களை வழங்கி வெளிநாடுகளில் வாஞ்சையுடன் வாழும் தமிழ் நெஞ்சகளூக்காக மகத்தான சேவை செய்கிறார். இவரின் அற்புதமான பணி பாராட்டுக் குரியது. சமீபத்தில் எனக்கு அறிமுகமான இவரிடம் நான் “டாக்டர் எஸ்.பி.பி மீது உங்கள் கொஞ்சும் குரலில் ஒரு கவிதை ஒலித்தொகுப்பு வழங்குங்கள் எங்களுக்காக” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அவர் இருக்கும் வேளை பளூவிலும் நடக்குமா என்ற சந்தேகத்துடன் தான் இருந்தேன். என்ன ஒரு ஆச்சரியம் ஒரே நாளில் அவர் மீது கொண்ட அன்பால் கவிதைகள் புணைந்து பாடல்கள் தேர்வு செய்து ஒலித்தொகுப்பாக வழங்கியது சாதாரணமான விசயமல்ல. அவர் கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தை கண்டு பிரமித்துப்போனேன். எப்படி எப்படி முடியும் என்று இன்னும் கூட என் ஆச்சரியம் தீரவில்லை. அவர் தொகுத்துள்ள அதிக பட்ச பாடல்கள் இதுவரை இந்த தளத்தில் இடம் பெறவில்லை என்பதே சிறப்பு. அது மட்டுமல்லாமல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் அன்பரே என்று தொகுப்பையும் முதன் முதலாக அனுப்பியும் விட்டார். நான் அதை பாலுஜியின் அபிமானத்தை பெற்ற அன்பர்களூக்காக வழங்குவதில் அவருடன் சேர்ந்து நானும் பெருமை கொள்கிறேன். இப்பேர்பட்ட இசையன்பர்களை வழங்க காரணமாக இருந்த பாலுஜிக்கு நான் ஆயுள் முழுவதும் கடமைப்பட்டவனாவேன்.

கவிதைகளை எத்தனைபேருக்கு படிக்கப் பிடிக்கும், கேட்கப்பிடிக்கும்? எனக்குக் கேட்பது தான் இனிமை. வைரமுத்து அவர்கள் கவிதைகளை படித்தாலே மிகவும் அற்புதமாக இருக்கும் போதாதற்கு பாலுஜியின் கேட்டால்… அடெங்கப்பா.. வேணாம் உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது எழுதிவிடுவேன். தொகுப்பாளினி எவ்வளவு அனாயசமாக கவிதைகளை குற்றால அருவியாய் கொட்டுகிறார் என்று கேட்டுத்தான் பாருங்களேன்.

இனி கவிதைச்சோலைக்குள் நுழையலாமா அன்பர்களே..

Get this widget | Track details | eSnips Social DNA

துவக்கமே அமர்க்களமாக துவங்குகிறார் தொகுப்பாளினி..திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.

ஜெர்மனியின் செந்தேன் மலரே….

உலகம் முழுவதும் வியாபித்து விலா நோக வேலை செய்யும் அன்பு தமிழ் வாழ் நெஞ்சங்களின் இசைரசனையையும்,அவர்களின் இசைஆர்வத்தையும் அவ்வளவு சீக்கிரம் கூண்டுக்குள் அடைத்து வைத்த கிளி போல் யாரும் கட்டிவைத்து விட முடியாது என்று சொல்லாமல் சொல்லி மிகவும் அனாயசமாக இந்த பாடலை தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் அவரின் அற்புதாமான கவிதை பூங்கொத்தாக தொடுத்திருக்கிறார்.

1.குயிலப்பிடிச்சு கூண்டிலடைச்சு

யாரை பார்த்து பிரம்மிக்கின்றது உன் இதயம்
இசையும் கவியும் சேரும் இடம் மாறியதே
கடவுள் குற்றம் எனில் நீ என் செய்வாய் நான் என் செய்வேன்
வற்றிய நதியில் துருப்பிடித்த படகாய்.. நம் காதல் ஆனது..

2. இது குழந்தை பாடும் தாலாட்டு.. (இல்லை கொஞ்சும் குழந்தை பாடும் கவித்தாலாட்டு)

மேகத்தின் இருளின் மின்னல் போடும் அட்டகாசத்தை விட
உன் வார்த்தை கொட்டியது என் காதினில் இடியாய்
காத்திருந்தேன் காத்திருந்தேன் நீ ஒதுங்கி ஒதுங்கி சென்று விட்டாய்
என் காதலை சொன்னேன்.. என்னிடம் இதயமே இல்லை என்கின்றாய்

3.மேகம் தான் இதில் மழையே இல்லை (அபூர்வமான பாடல் அமர்க்களமாக)

என்னை நெருங்கிய வசந்தமே உண்மை
சொல்லத் தெரியாத உதட்டின் மொழியே
என் மனதில் இருக்கும் ஆசைகளை
எடுத்துரைத்த முடியாத இதயம்
ஊமையாய் இருப்பதைக்கண்டு
என் கோழைத் தனத்தை பார்த்து
வெட்கி நிற்கின்றேன் எனக்கு
காதல் தேவை தானா என்று..

4.பூங்கொடிதான் பூத்ததம்மா (இல்லை ஜெர்மனியின் செந்தேன் மலர் பூத்தது)

உன் பின்னே நிழலாய் பின் தொடர்ந்தேன்
நீ தந்த தண்டனையா இது ஜன்னல் திறக்கப்படவில்லை
சலங்கையின் ஓசைகள் மட்டும் கேட்க்கின்றதே
பாதாளச் சிறையில் என்னை தள்ளிவிட்டு
நடமாடும் பெண்ணே ஏன் என்று புரியவில்லை
கேள்விகளை தொடுத்து பதில் தெரியாத
புதிராய் கதவுகளை திறக்க சாவியை
தொலைத்த பாவி நான் உன்னை மீட்பதற்க்கு
இரும்புச்சாவியாய் இவரை அழைத்து வந்தேன்..

5.நானும் உந்த உறவை தேடி வந்த பறவை (பறவை மட்டுமா இந்த பாசக்கார பயல்களூம் தான்)

சங்கீதத்தின் ஸ்வரங்களில் ஏழிசை கீதமாய் வாழ்ந்தவளே
என்னை தடுமாற வைத்துவிட்டாய் என் வாழ்வுதனை
ஒவ்வொரு வினாடி பொழுதும் உன்னை
படைத்திட்ட கண்கள் உறங்க மறுக்கின்றதே
என் குரல் கேட்டால் உன் முகம் மலர்ந்திடும்
என்ற காலத்தை எரித்துவிட்டாய் இன்று
எரிவது நீயல்ல… நான்….

6.ஏழு ஸ்வரமும் இங்கே தடுமாறுது (உன் குரலை நேசிக்காதவர்களூக்கு)

பேசாதே நீ.. நான் பேசிய நாட்களெல்லாம்
நீ பேச மறுத்தாய் நான் பேச நேரமில்லை
நீ அழைப்பு விடுக்கின்றாய் அன்று நீ கேட்ட படலை
வழி மறுத்து உன் வாசமாக்கிவிட்டு நான் வாடிவிட்டேன்
என்ன சுகம் தர முடியும் உன்னால் எனக்கு
சுதந்திரமாய் நீ இருக்கையில் உதிர்ந்த மலர் உனக்கு எதற்கு

வாழிய பல்லாண்டு வாழிய வாழியவே.

7.வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.. (ஹஹ…)

என்ன அன்பர்களே
கவிதைப்பா இனிக்கிறதா?
திருமதி.ராகினி பாஸ்கரின்
கொஞ்சும் மழலைக்குரலில் கேட்டால்
இன்னும் தேன்பாகாக தித்திக்கும்.

8.முகம் என்ன மோகம் என்ன.. (என்னவொரு இனிமை இதுதான் தித்திக்கும் தேன் சுவை என்பதா?)

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவம்

ஒலித்தொகுப்பை மிகவும் சிரமப்பட்டு ஒலிப்பதிவு செய்து அனுப்பிய தொகுப்பாளினிக்கு அகில இந்திய பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

அன்பர்களே.. பாலுஜியின் வித்தியாசமான குரல் பாடல்கள் விரைவில் இங்கே இதிலே.. ஒலிக்கோப்பு தொகுப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன். காத்திருப்புக்கள் என்றும் வீண்போவதில்லை.

Advertisements

769 மயிலாடும் பாறையிலே

April 29, 2009

இசையன்பர்களே ஒரு விறுவிறுப்பான குத்துப்பாட்டு கேட்போமா? இந்த பாடலின் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். இந்த பாடல் கேட்க்கும் போது உங்கள் தலை, கை மற்றும் உடம்பு தாளத்திற்கேற்றார் ஆடியே தீரும். ஆடவில்லையென்றால்.. ஆடவில்லையென்றால் என்னத்த சொல்ல.. ஆடும் சார் ஆடும்…

அது சரிங்க.. “ராகினி பாஸ்கரன்” இந்த பெயரை கேட்டிருக்கீங்களா எங்கேயோ கேட்ட பார்த்த நினவு வருதுதானே? நிச்சயம் இணையதள நண்பர்கள் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஆமாம் அன்பர்களே லண்டன் வானொலிகளில் தமிழ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குபவர். இவர் கவிதைகளையும் பாடல்களையும் கலந்து ஐஸ்கிரிமிசேர்த்து தரும் ப்ரூட் சாலட் போன்று பல தொகுப்புக்களை வழங்கியவர். இவரின் கொஞ்சும் குரலுக்காகவே இணைய தள வானொலிகளில் அதிகம் பேர் தவம் கிடக்கிறார்கள். சமீபத்தில் இவரின் தொகுப்புக்கள் நான் கேட்க முடிந்தது. அடெங்கப்பா அருவி போல் கவிதைகள் இவர் குரலில் குற்றாலமாய் கொட்டுகிறது அதுவும் அவர் தேர்ந்தெடுக்கும் பாடலகளுடன் கேட்கும் போது அபாரம். இவர் தீவிர இசைப்பிரியர் மேலும் டாக்டர் எஸ்.பி.பியின் அபரிதமான அபிமானம் கொண்டவர். தமிழ் நெஞ்சங்களூக்காக பாடல்கள் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். அவரின் பேச்சு சுபாவத்திற்க்கு எதிர்மறையான பாடல் தான் இது… கேட்டுப்பாருங்க

பாடகி: உமா ரமணன்

படம்:பாண்டிய நாட்டுத்தங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, உமாரமணன்
இசை:இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

திருச்சி சேலம் தஞ்சாவூர் பாண்டி பொள்ளாச்சி போலே
ராணி போலே நாட்டியம் ஆடி பெருமை தானே??

பேரு பெத்த சென்னையிலே பரிசு பல வாங்கிவந்தேன்

பெரியவங்க கையலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்

ஆட்டம்பாட்டத்துல என்னை யாரும் ஜெயிக்க வரல

போடும் ஆட்டத்துல?? என்னை யாரும் எதிர்க்க வரல

தாளகட்டுக்குள்ள ராகமெட்டுக்குள்ள என்னை எதிர்த்து பாடி பாரு

தாம்ததக்கதீம் தாம்தக்கதீம் எனக்கு யாரும் ஈடு இல்ல

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

தகிட தகிட

ஆடும் குயிலு பார்த்தா மயிலு ஆஹா ஹொய்யோ அப்பப்பா..
ஆடும் போதும் பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு ஹோய்.. ஹோய்..

தாளம் எதுவும் தப்பவில்லை
பாடும் சுதி விட்டதில்ல

மேளம் இன்னும் கொட்டவில்லை
தாலி ஹ கொடி கட்டவில்லை

பாத்தி கட்டி வெச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்

நாட்டு சக்கரயே பார்ததுக்க கொடு?? காத்த்து நிக்குறேன்

ஜாதி மல்லிகையே சேர்த்துக்க என்னைதான் கூடி எடுக்க நாளும் பாரு

தாம்ததக்கிடதீம் தாம்தக்கிடதீம் தாளம் எடுத்து பாடி பாரு

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

போடு..

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

768 சின்ன சின்ன மழைத்துளி மெல்ல

April 22, 2009

சமீபத்தில் என் கைக்கு கிடைத்த இந்த பாடல் பற்றி படத்தகவல்கள் கிடைக்கவில்லை
இனிமையான, அருமையான டப்பிங் படப்பாடல் போல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. // சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே.. செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே.. தேகத்தை கண்ணே தாங்கவா மோகத்தை கொஞ்சம் தீர்க்கவா ஓடிவா..// யாருக்காவது படத்தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்காலாமே? இந்த படப்பாடல் வரிகள் எழுதுவதுக்குள்ளாகவெ இசையின் ஆக்கிரமிப்பால் அதிக இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை அதான் பல இடங்களில் ??.

Get this widget | Track details | eSnips Social DNA

சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே
செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே
தேகத்தை கண்ணே தாங்கவா மோகத்தை கொஞ்சம் தீர்க்கவா ஓடிவா..

சின்ன சின்ன மழைத்துளி தக்கத்திமி தாளம் போடுதே
ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே
குளிருது குளிருது கிட்டவா குளிருக்கு நெருப்பை கொட்டவா..திரும்பிவா…

சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே

ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே

சிங்கார மின்னலை கண்டு பூவை போலே
லேசான நெஞ்சம் தவழும் முன்னாலே
இந்திரன் கண்ணம் கண்டு ???? போலே
அச்சாரம் தந்தாய் என்ன பெண் பூவே

நானும் மாட்டேன் என்றா உன்னிடம் சொல்லப்போறேன்
நித்தமும் முத்தமும் கொஞ்சிட நான் வாறேன்
நாளூம் இப்படி இங்கே இருவரும் இருந்திட வேண்டும்
இதுபோல் இன்பம் எங்கும் இல்லை

ராத்திரி நேரத்து பூவிழி?? நான் தான் உந்தன் காதலி.. ஆகிறேன்..

சின்ன சின்ன மழைத்துளி தக்கத்திமி தாளம் போடுதே

செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே

மேலாடை மூடிய அழகை கண்ணுக்கு இங்கே
நீ காட்டக்கூடாத என் பூ மானே
நூலாடை போலே உந்தன் மேனியின் மேலே
உறவாட வரவா சொல்லு பொன் மீனே

இங்கே பூமியை தண்ணீர் கேட்டா பெய்யுது வானம்
விண்ணை தீண்டும் ஏங்குது ??
என்னை இஷ்டம் போலே வண்டாய் சுற்றும் கண்ணும்??
கண்கள் கானும் திருநாள் இது தானே

தயக்கம் இன்னும் ஏனடி
மயங்கட்டும் மயங்கட்டும் பூவிழி.. காதலி…

சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே

ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே

தேகத்தை கண்ணே தாங்கவா..

குளிருது குளிருது கிட்டவா..

767 மூணாம் பிறையே முத்தமிழே

April 21, 2009

தளபதி, இளைய தளபதி, புரட்சி தளபதி, இதய தளபதி இப்போ சின்ன தளபதி.. அடபோங்கப்பா… ”மூணாம் பிறையே முத்தமிழே – சின்ன தளபதி..” நிச்சயமா இந்த பாடலுக்கு படப்பெயர் இதே தாங்க. அருமையான ஒரு சோகப்பாடலுக்கு இப்படி ஒரு தலைப்பு. சரி படத்தகவல் பற்றி ஏதாவது இணையதளத்தில் கிடைக்குதா என்று தேடினால் எப்படி குட்டி கரணம் போட்டும் சின்ன தளபதி என்று தேடினால் மேலே இருக்காரே பரத் அவர் தான் டபக்கு டபக்குன்னு வந்து விழுறார். சரிங்க //பாலும் சோறும் நிலவைக் காட்டி உனக்கு ஊட்டவில்லை.. சங்கத் தமிழை சங்குல ஊத்தி தந்தது கொஞ்சமில்லை.. சொந்தம் வேறு ஒன்று பார்க்கல்ல சொர்க்கம் உன் சிரிப்பில.. அன்பை போல இன்றி மண்னில சொந்தம் எதுவும் இல்லை.. ஊருக்குள் குளிரு நடுங்கும் தளிரு போர்வை மூடட்டுமா.. என்றும் இன்னிசை பாடட்டுமா.. // இந்த இனிமையான வரிகளூக்காகவே கேட்டுட்ங்களேன். அப்படியே பாட்ட கேட்டுக்கொண்டே படத்தகவல் தாங்களேன்…

Get this widget | Track details | eSnips Social DNA

மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
தேனே தித்திக்கும் வானமுதே
தங்கத்தாமரை மடலே தாலேலோ
மடியில் பூத்த மல்லிகையே
எனக்கு தாயாக வந்தவளே ஹோய்
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு

மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ

மாமா அடிச்சதாரோ மல்லியப்பூச்செண்டாலே
அத்த அடிச்சாளோ அல்லிப்பூ தண்டாலே

யாரடிச்ச சொல்லிவிடு என் அன்னமே சொல்லிவிடு
பொன் அங்கிலில் தொட்டில் போட்டு தென்றலும் தூங்குதம்மா
அன்னக்கிளிகள் ஆலமரத்தில் கண்களை மூடுதம்மா
திண்ணை வானத்துல வென்னிலா ஹோய் மேக தோகை மூடுதே வண்னபூக்களெல்லாம் பூக்களெல்லாம் மௌனமாய் ஹோய்
செவிகள் மூடி தூங்குதே
என்னென்ன கனவு ஏதோ நினைவு கண்மணி தூங்கிடம்மா
இன்னும் நித்திரை நாடகமா

மூனாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
மூனாம் பிறையே முத்தமிழே

இது யாரு கொம்பு யாரு கொம்பு ஐயன் கொம்பு
ஐயன் எங்கே பூப்பறிக்க பூ எங்கே
காயா போச்சு காய் எங்கே
காய் எங்கே பழமா போச்சு
பழத்த எங்கே தின்னுட்டா
அவன வெட்டுட்டா குத்துட்டா வெண்ணீர் காய்ச்சி ஊத்துட்டா

பாலும் சோறும் நிலவைக் காட்டி உனக்கு ஊட்டவில்லை
சங்கத் தமிழை சங்குல ஊத்தி தந்தது கொஞ்சமில்லை
சொந்தம் வேறு ஒன்று பார்க்கல்ல சொர்க்கம் உன் சிரிப்பில
அன்பை போல இன்றி மண்னில சொந்தம் எதுவும் இல்லை
ஊருக்குள் குளிரு நடுங்கும் தளிரு போர்வை மூடட்டுமா
என்றும் இன்னிசை பாடட்டுமா

மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ

மடியில் பூத்த மல்லிகையே
எனக்கு தாயாய் வந்தவளே
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு

766 சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி

April 17, 2009

//வளைக்கரம் உன்னை வளைக்குது மெல்ல.. மனசுல உள்ள வெவரத்த சொல்ல
பெஞ்சாதி நீயிங்கு ஆனபின்னாலே.. பஞ்சாங்கம் பார்க்கனுமா..// பாலுஜியும், சித்ராமேடமும் இந்த பாட்டுல கலக்குறாங்கப்பா.. பல்லவியே அமர்க்களம்…இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்: ஈஸ்வரி
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி
சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

மாரியம்மன் தேரு மஞ்ச வாழை தாரு
பெண்னரசி இந்த பெண்னரசி
பல்வரிசை பாரு பச்சரிசி சோறு
பொன்னகை தான் இது புன்னகைதான்

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி
சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

மாரியம்மன் தேரு மஞ்ச வாழை தாரு
பெண்னரசி இந்த பெண்னரசி
பல்வரிசை பாரு பச்சரிசி சோறு
பொன்னகை தான் இது புன்னகைதான்

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

வித்தை அன்னாடம் காட்டும் மாமனுக்கு
கை மத்தாளம் போலே மானிருக்கு
கயத்து ஏறி நடக்குற ஆளூ
விழியில் தடுகு விழுந்தது பாரு
தெற்கால பாயுற தாமரபரணி
தெம்மாங்கு பாடிவரும்
சொல்லாம நான் அதில் நீச்சல் போட
உல்லாசம் கூடி வரும்
மெத்வா மெதுவா நீராடு
மாலை மயங்கும் நேரத்தோடு

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

மாரியம்மன் தேரு மஞ்ச வாழை தாரு
பெண்னரசி இந்த பெண்னரசி
பல்வரிசை பாரு பச்சரிசி சோறு
பொன்னகை தான் இது புன்னகைதான்

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

பச்ச தன்ணீரை தேடும் பூச்செடியே
மச்சான் தோள் சேர ஏங்கும் காவடியே

வளைக்கரம் உன்னை வளைக்குது மெல்ல
மனசுல உள்ள வெவரத்த சொல்ல
பெஞ்சாதி நீயிங்கு ஆனபின்னாலே
பஞ்சாங்கம் பார்க்கனுமா

மந்தாரப்பூவிது மாமன் சொன்னாலே
செந்தேனை வார்க்கனுமா
எடுத்தா கொடுத்தா தீராது
உனக்கும் எனக்கும் வேண்டும் போது

சிவப்பா ஒருத்தி சிரிச்சா பருத்தி புதுப்புது சேதி
கண்ணில் படிக்கும் சிங்காரி

மாரியம்மன் தேரு மஞ்ச வாழை தாரு
பெண்னரசி இந்த பெண்னரசி
பல்வரிசை பாரு பச்சரிசி சோறு
பொன்னகை தான் இது புன்னகைதான்

765 முத்தான முத்தம் தந்தானே நித்தம்

April 16, 2009

//பூவரசன் பூவே பூவின் தேனே அடிபொன் மானே..நாவரசன் பாடும் பாடல் தானே அது செந்தேனே..கன்னி எழுது கவிதை முழுதும்.. புன்னகையில் தாளம் போடும் கோலம் தான்
கையில் எழுத ஏடு கொடுத்தாய்.. உன் உடலில் தாகம் தீரும் நேரம் தான்.. வீணை மடியில் விரலின் தயவில் மெல்லிசையை.. மீட்டும் யோகம் யோகம் தான்// இது போன்ற இனிமையான வரிகள் அடங்கிய பாடல் பாலுஜி, சித்ரா குரலில் கலக்குகின்றன… கேட்டு அனுபவியுங்கள்..

படம்: கருப்பு பூக்கள் ??
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA

முத்தான முத்தம் தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
தன்னந்தனி தனிமையில் தத்தளிக்கும்
தத்தையிடம் பாடுகிறான் கவிதை

பொன்னாகும் கண்ணம் புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும் கொண்டாடும் என்னம்
தங்கச் சிலை இவள் என்னருகில் வந்து
நின்று தேடுகின்றாள் உறவை

வில்லெடுத்து அன்பெடுத்து வஞ்சி என்னை வம்பிலுத்து
வெற்றி பெரும் கட்டழகன் நீ தானோ
பொன்னாகும் கண்ணம் புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும் கொண்டாடும் என்னம்

பூவரசன் பூவே பூவின் தேனே அடிபொன் மானே
நாவரசன் பாடும் பாடல் தானே அது செந்தேனே
கன்னி எழுது கவிதை முழுதும்
புன்னகையில் தாளம் போடும் கோலம் தான்
கையில் எழுத ஏடு கொடுத்தாய்
உன் உடலில் தாகம் தீரும் நேரம் தான்
வீணை மடியில் விரலின் தயவில் மெல்லிசையை
மீட்டும் யோகம் யோகம் தான்

வில்லெடுத்து அன்பெடுத்து புன்சிரிப்பில் வம்பிலுத்து
வெற்றி பெரும் கட்டழகி நீ தானோ

முத்தான முத்தம் தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்

நீலகிரி மேலே உள்ளதாரே அந்த வெயில் கூட
காதலனை போலே எந்தன் மேலே வந்து விளையாட
பனியில் நனைந்து வெயிலில் உளர்ந்து
பருவ சுகம் தேடும் போது ஆனந்தம்

மாலை கொடுத்து மஞ்சம் கொடுத்தால்
இரவு வர நானும் அங்கு வாறேனே
காலை வரைக்கும் ஹமேனி துடிக்கும்
கதை எழுதும் நாளை என்னி மகிழ்வேனே

வில்லெடுத்து அன்பெடுத்து வஞ்சி என்னை வம்பிலுத்து
வெற்றி பெரும் கட்டழகன் நீ தானோ

முத்தான முத்தம் தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
தன்னந்தனி தனிமையில் தத்தளிக்கும்
தத்தையிடம் பாடுகிறாள் கவிதை

பொன்னாகும் கண்ணம் புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும் கொண்டாடும் என்னம்
தங்கச் சிலை இவள் என்னருகில் வந்து
நின்று தேடுகின்றாள் உறவை

764 மாதன்னை படைத்தான் உனக்காக

April 15, 2009

ராஜராஜ சோழன் படமென்றாலே அனைவருக்கும் ஒரு சேர நினைவிற்க்கு வருவது நடிகர் திலகத்தின் செமத்தியான நடிப்பும் அடுத்தது “ஏடுதந்தானடி தில்லையிலே” என்ற பாடல் தான் பட்டென்று நினைவுக்கு வரும். இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று இப்போதெல்லாம் கணக்கு எடுக்க முடியாது. படம் பார்க்கும் போது பார்த்தததோடு சரி. சமீபத்தில் இந்த பாடல் என் கைக்கு கிடைத்தவுடன். அடடே.. அடடே.. இது போன்ற பொக்கிஷங்கள் எல்லாம் இருக்கின்றனவே இன்னும் எத்தனை எத்தனையோ என்று வழக்கம்போல் ஆச்சரியப்பட்டுக்கொண்டே எல்லோரும் விரும்பும் எல்.ஆர்.ஈஸ்வரி(ய)அம்மனின் குரலுடன், வியக்கவைக்கும் அபூர்வகுரலுடைய எம்.ஆர்.விஜயா அவர்களின் குரலும் சேர்ந்து, ஏழிசை வேந்தன் அவர்க்ளும், பாலுஜி அவர்களூம் இருவரும் சேர்ந்துகொண்டு மாதங்களைப் பற்றி எப்படி புட்டு புட்டு வைக்கிறார்கள், அமர்க்களம் பாடலை உடனே கேட்டுடுங்களேன்..

படம்: ராஜ ராஜ சோழன்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், பாலுஜி, எம்.ஆர்.விஜயா,எல்.ஆர்.ஈஸ்வரி

Get this widget | Track details | eSnips Social DNA

மாதன்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
மாதன்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக

மாதன்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எங்கள் கண் பறிக்கும் உந்தன் பேரழகி
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எங்கள் கண் பறிக்கும் உந்தன் பேரழகி

மார்கழி மாதத்து கனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் கண் அழகு
மார்கழி மாதத்து கனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் கண் அழகு

தைமகளே அத்தை மகளே என்னை
தழுவிட பிறந்த தமிழ் மகளே
தைமகளே அத்தை மகளே என்னை
தழுவிட பிறந்த தமிழ் மகளே

நாவின்?? இல்லாத நான்மணியே
இந்த அனாதை?? தேடிய நன்மகனே

பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ

சித்திரை மாதத்து வானல் நீ
உங்கள் மெல்லிய புலவரின் வேதம் நீ
சித்திரை மாதத்து வானல் நீ
உங்கள் மெல்லிய புலவரின் வேதம் நீ

வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே
வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே

ஆனை மஞ்சளும் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆனை மஞ்சளும் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே

ஆடி காவேரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே
ஆடி காவேரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே

புரட்டாசி திங்களில் மறுமணம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
புரட்டாசி திங்களில் மறுமணம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
நம் திருமணம்

மாதன்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக

763 என் கண்மணி என் பாடல் கேளடி

April 11, 2009

இசையமைப்பாளர்: திரு. ஜெர்ரி அமல்தேவ்

நடிகர் ரகுமான் அவர்கள் நடித்த இந்த நினைவோ ஒரு பறவை படத்தில் வருகிறது இந்த மெலொடியான பாடல். ஆமாங்க தலமுடிய பிச்சுககாதீகங்க 1986ஆம் ஆண்டு தயாரித்த இந்த படம் வெளிவரவே இல்லைங்க ஹி.. ஹி.. இசை ஜெர்ரி அமல்தேவ் என்பவர் அருமையாக மெட்டு போட்டுள்ளார் பால்ஜி யாரையும் விட்டு வைக்கவில்லை போலே.. இந்த் அபடத்திலும் மேலும் 2 பாடல்கள் பாடியுள்ளார் பாலுஜி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் மெலோடி பாடல்கள் எத்தனை கணக்கில் வராமல் பதுங்கு குழியில் உள்ளனவோ? பாடல் வரிகள் அசத்தலாக உள்ளாது யாருங்க நம்ம கள்ளிக்காட்டு கம்பன் வைரமுத்து சார் தான். ராஜ்பரத் அவர்கள் இயக்கிய இந்த படத்தை கே. அஜித் அவர்கள் தயாரித்துருக்கிறர்ர். ஏன் படம் வெளிவரவில்லை என்று மட்டும் என்னிடம் கேட்காதீங்க. ஒகே… அமைதியாக பாட்டை மட்டும் கேளூங்க.

படத்தகவல்கள் மற்றும் போட்டோ; தூள் டாட் காம். மற்றும் ஒலிக்கோப்பு உதவி திரு.ஆர்.ஜி.நாராயணன் பெங்களூரு.

Get this widget | Track details | eSnips Social DNA

என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
கண்ணே கணா வரும்
அதில் நிலா வரும்

என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
கண்ணே கணா வரும்
அதில் நிலா வரும்

தென்றல் ஹ விழிகளை வருடி வருடி வீசும்
தென் போகும் பொன் மேகம்
நீ தூங்கு அழகை கூர்ந்து பார்க்குமே… மானே
ஹஹகனவுக்கு கடிதம் எழுத தேனே நிலாவும் விண்மீனும்
முன் வாசல் வந்து காவல் காக்குமே..
உன் பட்டு மேனி ஹ எதில்லை நான் இங்கிருந்து
முத்தம் வைக்கிறேன்… பூங்கொடி

என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
கண்ணே கணா வரும்
அதில் நிலா வரும்

வானம் ஹ பொழிகின்ற மழையின் ஒலியில் கானம்
பொன் வானம் என்னோடு சங்கீதம் இன்று பாடுகின்றதா.. ஹ
மழைத்துளி சுரங்கள் பிரித்து பாடும் என் தேவி உன் கண்கள்
என் பாடல் கேட்டு தூங்கவில்லையா.. உன் கட்டில் மேலே
ஒரு தொட்டில் போலே நான் தென்றலாக வந்து போகுதே பூவிரல்

என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொண்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
லலலாஆஆ ரரராஆஆஆஆ
ம்ம்ம்ம்ம் ஹாஆஆஆஆஆ
ரரரரராஆஆஆஆஆ

762 முல்லைக்கொடி அள்ளிக்கடி

April 9, 2009

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வறுமை நிறம் சிகப்பு படத்தில் பாலுஜியும் ஜானகியம்மாவும் ஒரு இனிமையான பாடலை பாடியிருப்பார்கள். அந்த பாடல் சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்து பார்க்க என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் கலக்குச்சு ஏன் இன்றும் கூட பாலுஜி தன் நிகழ்ச்சியில் பாடி பட்டையை கிளப்புகிறார். அது மட்டுமல்லாமல் இந்த பாடலில் ஜானகியம்மா குரலுக்கு சிறுசு முதல் இளசு வரை ச்ந்தங்கள் பாடுவதை கேட்டால் அடெங்கப்பா.. சரிங்க இந்த கச்சேரி இப்ப எதுக்கு என்று கேட்பது எனக்கு இங்கே கேட்குதுங்க். சரி விசயத்துக்கு வருவோம்..

கிட்டத்தட்ட அந்த பாடலில் இருப்பது போலவே ஜானகியம்மா போட்டி சந்தங்கள் பாட பாலுஜி வரிகளால் பொளந்து கட்டுவார். அதே போலவே வாணிஜெயராம் அவர்கள் இந்த பாடலில் தனன தந்தனனனன் என்று சந்தங்கள் பாட பாலுஜி வெளுத்துகட்டுவார்.. எப்படிங்கறீங்க? நீங்களே கேட்டுடுங்க.. பாடல் இடம் பெற்ற படம் பந்தம். நடிகர் திலகம் நடித்தது முயற்சி முயற்சி செய்து யோசிச்சு பார்த்தால் காட்சியமைப்பு கண் முன் வர மறுக்கிறது.. நீங்களே பாடலை கேட்டு காட்சிகள் வந்தது என்றால் கொஞ்சம் இங்கே விவரிங்க… ப்ளீஸ்…

பண்பலை அறிவிப்பாளர் எனது ஆருயிர் நண்பர் திரு.ரவிவர்மா சார் வேண்டுகோளின் படி அவருக்கு இந்த பாடலை வழ்ங்குகிறேன். ஆர்.வி சார் அனுபவிங்க…

படம்: பந்தம்
நடிகர்: சிவாஜிகனேசன்
பாடியவர்கள்: பாலுஜி, வாணிஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட
காதல் கொண்டாட கையோடு கொத்தாட

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

தங்கப்பழம் தொட்டில் கட்டி
ஆடுங்கடி இங்கே பொன்னூஞ்சல்
ஜாமத்திலே கட்டில் இட்டு
சாய்ச்சுக்கடி கண்ணே என் நெஞ்சில்

மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது
மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது

போடு தோள் சேர்த்து தாலாட்டம்மா

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட
காதல் கொண்டாட கையோடு கொத்தாட

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

நெஞ்சத்திலே பஞ்சு மெத்தை
நித்தம் நித்தம் தந்தால் ஆகாதோ
வஞ்சிமகள் வித்தை எல்லாம்
இங்கே வந்து சொன்னால் ஆகாதோ

சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை
சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை

முள்ளேதும் இல்லாத ரோஜா இது ஹோய்

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிகடி
உச்சிமுதல் பாதம் வரைக்கும்
வச்சபக்கம் தேனா இனிக்கும்

761 குளு குளு என்று குளிர்கிறதே

April 7, 2009

மோகன்லால் நடித்த படம் கேரளாவில் சக்கைபோட்ட படம். இந்த படத்தில் பாலுஜி டப்பிங் கொடுத்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். இந்த பாடல் மொழி மாற்றம் செய்த பாடலோ என்னவோ தெரியவில்லை?. சில இடங்களில் இசையும் வரிகளூம் சேர்ந்தால் போல் வருவதால் வரிகளை தாளம் ஆக்ரிமித்து விடுகிறது. பாடல் வரிகள் சரியாக புரியவிலலை. நீங்களே கேட்டு பாருங்களேன்.

படம்: அசோகன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி சித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

Get this widget | Track details | eSnips Social DNA

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே

சுடச்சுட வந்து படம் எழுதும்
இளமையின் பார்வைகளே

உடனே மலரும் உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ

குளிர்கின்ற இரவு இதோ

மலர்கின்ற பருவம் இதோ

இளமையின் கவிதை இது

இருவரின் இதழால் எழுதுவது

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே

சுடச்சுட வந்து படம் எழுதும்
இளமையின் பார்வைகளே

முத்தம் போலே கண்கள் இரண்டும் மோதும்
என்னைப்பார்த்து விண்ணில் மீனும் மாறும்

கடைசியில்?? உன்போல் விழியே
நித்திரையை விற்று விட்ட விழியே

இலையில் தேடும் துணையே
இனியிவள் கொண்ட தனியே

சிற்பமும் முன்னே

சிற்பியின் பின்னே

கற்சிலைக்கு காதல் வந்ததே

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே

சுடச்சுட வந்து படம் எழுதும்
இளமையின் பார்வைகளே

உடனே மலரும் உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ

குளிர்கின்ற இரவு இதோ

மலர்கின்ற பருவம் இதோ

இளமையின் கவிதை இது

இருவரின் இதழால் எழுதுவது

குளிர்காலத்தை தாங்காது எந்தன் மேனி
குளிர்காயத்தான் வாராய் எந்தன் ராணி

இடையில் சேர்த்தால் வழியே
எங்கிருந்து இன்ப கங்கை குளியே

புதுமை நேப்பாள் நகரம்
உன்னைப்போல அழகுக்கு சிகரம்

சொர்க்கமே வந்தோம்

சுகமே கண்டோம்

ஏழை வந்து இன்று சங்கமம்??

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே

சுடச்சுட வந்து படம் எழுதும்
இளமையின் பார்வைகளே

உடனே மலரும் உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ

குளிர்கின்ற இரவு இதோ

மலர்கின்ற பருவம் இதோ

இளமையின் கவிதை இது

இருவரின் இதழால் எழுதுவது

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுகம் தரும் கனவுகளே