769 மயிலாடும் பாறையிலே

இசையன்பர்களே ஒரு விறுவிறுப்பான குத்துப்பாட்டு கேட்போமா? இந்த பாடலின் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். இந்த பாடல் கேட்க்கும் போது உங்கள் தலை, கை மற்றும் உடம்பு தாளத்திற்கேற்றார் ஆடியே தீரும். ஆடவில்லையென்றால்.. ஆடவில்லையென்றால் என்னத்த சொல்ல.. ஆடும் சார் ஆடும்…

அது சரிங்க.. “ராகினி பாஸ்கரன்” இந்த பெயரை கேட்டிருக்கீங்களா எங்கேயோ கேட்ட பார்த்த நினவு வருதுதானே? நிச்சயம் இணையதள நண்பர்கள் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஆமாம் அன்பர்களே லண்டன் வானொலிகளில் தமிழ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குபவர். இவர் கவிதைகளையும் பாடல்களையும் கலந்து ஐஸ்கிரிமிசேர்த்து தரும் ப்ரூட் சாலட் போன்று பல தொகுப்புக்களை வழங்கியவர். இவரின் கொஞ்சும் குரலுக்காகவே இணைய தள வானொலிகளில் அதிகம் பேர் தவம் கிடக்கிறார்கள். சமீபத்தில் இவரின் தொகுப்புக்கள் நான் கேட்க முடிந்தது. அடெங்கப்பா அருவி போல் கவிதைகள் இவர் குரலில் குற்றாலமாய் கொட்டுகிறது அதுவும் அவர் தேர்ந்தெடுக்கும் பாடலகளுடன் கேட்கும் போது அபாரம். இவர் தீவிர இசைப்பிரியர் மேலும் டாக்டர் எஸ்.பி.பியின் அபரிதமான அபிமானம் கொண்டவர். தமிழ் நெஞ்சங்களூக்காக பாடல்கள் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். அவரின் பேச்சு சுபாவத்திற்க்கு எதிர்மறையான பாடல் தான் இது… கேட்டுப்பாருங்க

பாடகி: உமா ரமணன்

படம்:பாண்டிய நாட்டுத்தங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, உமாரமணன்
இசை:இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

திருச்சி சேலம் தஞ்சாவூர் பாண்டி பொள்ளாச்சி போலே
ராணி போலே நாட்டியம் ஆடி பெருமை தானே??

பேரு பெத்த சென்னையிலே பரிசு பல வாங்கிவந்தேன்

பெரியவங்க கையலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்

ஆட்டம்பாட்டத்துல என்னை யாரும் ஜெயிக்க வரல

போடும் ஆட்டத்துல?? என்னை யாரும் எதிர்க்க வரல

தாளகட்டுக்குள்ள ராகமெட்டுக்குள்ள என்னை எதிர்த்து பாடி பாரு

தாம்ததக்கதீம் தாம்தக்கதீம் எனக்கு யாரும் ஈடு இல்ல

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

தகிட தகிட

ஆடும் குயிலு பார்த்தா மயிலு ஆஹா ஹொய்யோ அப்பப்பா..
ஆடும் போதும் பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு ஹோய்.. ஹோய்..

தாளம் எதுவும் தப்பவில்லை
பாடும் சுதி விட்டதில்ல

மேளம் இன்னும் கொட்டவில்லை
தாலி ஹ கொடி கட்டவில்லை

பாத்தி கட்டி வெச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்

நாட்டு சக்கரயே பார்ததுக்க கொடு?? காத்த்து நிக்குறேன்

ஜாதி மல்லிகையே சேர்த்துக்க என்னைதான் கூடி எடுக்க நாளும் பாரு

தாம்ததக்கிடதீம் தாம்தக்கிடதீம் தாளம் எடுத்து பாடி பாரு

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

போடு..

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கிருக்கோம்

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

நாங்க போகாத ஊருமில்லை
நாங்க இப்ப வாங்காத பேருமில்லை

Leave a comment