Archive for July, 2009

813 ஆடிப்பாடும் அழகான என் தங்கை

July 30, 2009

//தாயாக நீ மாறும் திருநாளிலே.. இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்
ஆசைகளோ இசைப்பாடுமே .. ஆசைகளோஓஓ இசைப்பாடுமே .. அழியாத உன் வாழ்க்கை கலைகாவியம் எழில் ஓவியம் .. ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு.. நீதானே நான் கண்ட திருசன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி.. உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போலே ஒரு சொந்தம் வருமோ இனி.. மறு ஜென்மங்கள்.. உண்மையென்றால்.. மறு ஜென்மங்கள்ள்ள்.. உண்மையென்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே.. வரம் வேண்டுமே//

பாடியவர்கள்:அண்ணன் பாலுஜி, தங்கை சைலஜா
படம்: தங்கைக்கு ஒரு தாலாட்டு
isai: sankar ganesh
lyrics kaaLithaasan

Get this widget | Track details | eSnips Social DNA

உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ லாஆஅயி
உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ

ஆடிப்பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

கல்யாண எழில் மேடை நீ காணவே
இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்

தாயாக நீ மாறும் திருநாளிலே
இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்
ஆசைகளோ இசைப்பாடுமே
ஆசைகளோஓஓ இசைப்பாடுமே
அழியாத உன் வாழ்க்கை கலைகாவியம் எழில் ஓவியம்

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

நீதானே நான் கண்ட திருசன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி
உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போலே ஒரு சொந்தம் வருமோ இனி
மறு ஜென்மங்கள்.. உண்மையென்றால்
மறு ஜென்மங்கள்ள்ள்.. உண்மையென்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே.. வரம் வேண்டுமே

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி

Advertisements

812 செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி

July 27, 2009

26.07.2009 அன்று பிறந்த நாள் கொண்டாடிய சின்னக்குயில் சித்ரா மேடத்திற்க்கு நல்வாழ்த்துக்கள்.இளைய தளபதி விஜய், யுவராணி, கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி படத்தில் ”செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட” இந்த இனிமையான பாடல் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அதி தீவிர ரசிகை சாம்ளா அவர்களுக்கு சமர்ப்பணம். இது அவரின் விருப்பபாடல் ஒலித்தொகுப்பிலும் கேட்டு மகிழுங்கள்.

செந்தூரப்பாண்டி
பாடகர்கள்:எஸ்.பி.பி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
உனக்கு அது நிறைவேறும்

நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

உச்சிமேலே முடிஞ்சு வெச்சேன் மரிக்கொழுந்து வாசம்
உன்னோடயை பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்

கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே
ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே

உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது
ஹஹ்ஹஹ்ஹாஆஆ

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெற்க்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது

அம்மன் கோயில் சிலை எழுந்து அசைஞ்சு வரும் போது
உள் மனசு தொட்டடிக்கும் உறக்கமென்பது ஏது

நீதான் என்னை தீண்டும் தீண்டும் ஏதோ ஒரு நாளாச்சு

நான் தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு

கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே

உஹஹ்ஹஹ்ஹாஆஆ

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

தந்தனந்தன்ததாஆஆ..

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

தந்தனந்தன்ததாஆஆ..

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
உனக்கு அது நிறைவேறும்

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

811 பட்டு பாவடைக் கட்டி படபடக்கும்

July 23, 2009

சமீபத்தில் இந்த பாடல் எனக்கு கிடைத்தது. எப்படி என் ஒலிக்கோப்புக்களில் வந்ததுன்னே தெரியல. பட்டைய கிளப்பும் பாடல் (யார் பட்டையை என்று மட்டும் கேட்காதீங்க?) கிராம சூழ்நிலையில் உள்ள மெட்டுடன் உடைய இந்த பாடல் பாலுஜிக்கு பாடுவது என்பது வெல்லக்கட்டியாட்டம். ஒவ்வொரு வரியிலும் எப்படி அனுபவப்பூர்வமாக பாடியிருக்கிறார் என்று கேளூங்கள் அதுவும் சரணங்கள் இடையிலும் பாடல் இறுதியிலும் ”போடு” என்ற வார்த்தைக்கு பிறகு அவருக்கே உரிய பாணியில் அடிக்கற கூத்து வெள்ளாவியில் வெச்ச வெள்ளை துணியாட்டம் வெளூத்து கட்டுகிறார். அடெங்கப்பா.. அடெங்கப்பா.. எவ்ளோ நாளாச்சு இந்த மாதிரியான பாடலை கேட்டு.

படம்: சந்தனக்காற்று
நடிகர்கள்: விஜயகாந்த், கௌதமி
இசை:சங்கர் கனேஷ்
இயக்குநர்: மணிவன்னன்
வருடம்:1990

Get this widget | Track details | eSnips Social DNA

பட்டு பாவடைக் கட்டி படபடக்கும் தாவணியில்
பக்குவமா குனிஞ்சு நிக்குறா.. எதன்ணே..?..?
தலைய பக்குவமா குனிஞ்சு நிக்குறா

அட பட்டு பாவடைக் கட்டி படபடக்கும் தாவணியில்
பக்குவமா குனிஞ்சு நிக்குறா..
தலைய பக்குவமா குனிஞ்சு நிக்குறா

ஹே மாமன் மதுரகாரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்
ஹே மாமன் மதுரகாரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்
நல்லது எது கெட்டது எது
அட நல்லது எது கெட்டது எது
நாலும் தெரிஞ்சுதான் நடந்துக்குவேன்
நாலும் தெரிஞ்சுதான் நடந்துக்குவேன்

பட்டு பாவடைக் கட்டி படபடக்கும் தாவணியில்
பக்குவமா குனிஞ்சு நிக்குறா..
தலைய பக்குவமா குனிஞ்சு நிக்குறா ஆஆஆஆ

குடத்த எடுத்து வாரா
குட்டி கும்பகோணம் தேராட்டம் ஜோரா
குடத்த எடுத்து வாரா
குட்டி கும்பகோணம் தேராட்டம் ஜோரா
குண்டுமல்லி பூவை அள்ளி
அட குண்டுமல்லி பூவை அள்ளி
அவ கொண்டையில் சொருகி வச்சுக்கிட்டு
அவ கொண்டையில் சொருகி வச்சுக்கிட்டு

பட்டு பாவடைக் கட்டி படபடக்கும் தாவணியில்
பக்குவமா குனிஞ்சு நிக்குறா..
தலைய ப..க்..கு..வமா குனிஞ்சு நிக்குறா

சின்னப்பொண்ணு சிரிச்சா
அவ கண்ண மெதுவா அடிச்ச்சா
கன்னிப்பொண்ணுதான் கனவில் நிக்குறா
அட கன்னிப்பொண்ணுதான் என் கனவில் நிக்குறா
என் கண்ணோடு கலந்து மனச இழுக்கறா
என் கண்ணோடு கலந்து மனச இழுக்கறா

அட பட்டு பாவடைக் கட்டி படபடக்கும் தாவணியில்
பக்குவமா குனிஞ்சு நிக்குறா..
தலைய பக்குவமா குனிஞ்சு நிக்குறா

போடு…

810 நான் என்னும் பொழுது.

July 21, 2009

//நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.. என்றும் அது கலைவிதில்லை
என்னங்களூம் நனைவிதில்லை.. அந்தநாள் ஆஆஆஆஆஆ… அந்தநாள்.. அந்நாள்.. எந்நாள்.. ஆனந்தமோ//

இந்த பாடலும் பாடல் இறைச்சல் காரணமாக சரிவர வரிகள் புரியவில்லை தெளிவான பாடல் கோப்பு கிடைத்ததும் மாற்றப்படும். மேலே உள்ள வரிகள்.. ஆலாபனை ஆகியவை இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ரீங்காரமிடும்.. சலீல் சௌத்ரி அருமையான் மெலோடி பாடல் கேட்டு மகிழுங்கள் தோழர்களே..

அழியாத கோலங்கள்
இயக்குனர் பாலுமகேந்திரா
தயாரிப்பாளர் தேவி பிலிம்ஸ்
நடிப்பு பிரதாப் போத்தன், கமல்ஹாசன், ஷோபா
இசையமைப்பு சலீல் சௌத்ரி
வெளியீடு டிசம்பர் 7, 1979

நான் என்னும் பொழுது

நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவிதில்லை
என்னங்களூம் நனைவிதில்லை

Get this widget | Track details | eSnips Social DNA

ஒளிக்கோப்பு இங்கே

809 லக்கில லவ் பன்னுறா..

July 21, 2009

//லக்கில லவ் பன்னுறா.. வயசுக்கு வந்த புறா.. நல்லதான் அடிச்சேன் ஒரு சான்ஸ்
நான் சொல்லுறேன் யம்மா ஒரு தாங்க்ஸ்//

இவ்ளோ தான் வரிகள் கேட்க முடிந்தது ஏனென்றால் ஒலிக்கோப்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது. நல்ல ஒலிக்கோப்பு கிடைத்தது மாற்றி விடுகிறேன் அது வரை இந்த பாட்டை கேளூங்க.. மேலும்..

திரைப்படத் தணிக்கை வாரியத்தினால் ‘சட்டத்தை உடைக்கிறேன்’ என வெளிவரவிருந்த இத்திரைப்படம் ‘சட்டத்தை திருத்துங்கள்’ என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

தகவல் உபயம்: நன்றி, விக்கிபீடியா

மைக் மோகன், நளினி நடித்த சட்டத்தை திருத்துகிறேன் என்று படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. படத்தை யாரு பார்த்தாங்க?.. பாலுஜியும், ஜானகியம்மாவும் குரலுக்காகவே நிறைய தடவை கேட்ட பாடல். பாடல் வரிகள் நன்றாக இருக்கும். நீங்களூம் கேட்டு பாருங்க.

படம்: சட்டத்தை திருத்துங்கள் << சட்டத்தை உடைக்கிறேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்
வருடம்: 1984
இயக்குநர்: இராம நாராயணன்
தயாரிப்பாளர்கள் ; பி. நாகேஸ்வரராவ், பி. என். ஆர். பிக்சர்ஸ்

Get this widget | Track details | eSnips Social DNA

808 மாலை நேரத்துல மன்னன்

July 17, 2009

//தேனாற்றில் பொன் ஓடம்.. நீ தானே என் காதல் தீபம்.. தேனாற்றில் பொன் ஓடம்
நீ தானே என் காதல் தீபம்.. என் வானிலே மேகமாய் பாடவா.. என் வானிலே மேகமாய் பாடவா// அழகான வரிகள் இனிமையான எஸ்.பி.பி, எஸ்.பி.எஸ் குரல்களில் நிச்சயம் இந்த பாடலும் மலரும் நினைவுகள் தான். கேட்டு மகிழுங்கள்.

படம்:மலரும் நினவுகள்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA

மாலை நேரத்துல மன்னன் பக்கத்துலே
ஏன் இந்த நாணம் உன் கண்கள் கோலம்
ஏன் இந்த நாணம் உன் கண்கள் கோலம்

மாலை நேரத்துல மன்னன் பக்கத்துலே
ஏன் இந்த நாணம் இது பெண்கள் ஜாலம்
ஏன் இந்த நாணம் இது பெண்கள் ஜாலம்
மாலை நேரத்துல மன்னன் பக்கத்துலே

சந்தோச ராகம் பண்பாடும் ராகம்
சங்கீத தேன் பாயும்
சந்தோச ராகம் பண்பாடும் ராகம்
சங்கீத தேன் பாயும்

தேனாற்றில் பொன் ஓடம்
நீ தானே என் காதல் தீபம்
தேனாற்றில் பொன் ஓடம்
நீ தானே என் காதல் தீபம்
என் வானிலே மேகமாய் பாடவா
என் வானிலே மேகமாய் பாடவா

மாலை நேரத்துல மன்னன் பக்கத்துலே

தீராத தாகம் பாராத மோகம்
வாராயோ உன் தேகம்
தீராத தாகம் பாராத மோகம்
வாராயோ உன் தேகம்

மஞ்சத்தில் பாய் போட்டு
பாடுங்கள் ஆனந்த பாட்டு
மஞ்சத்தில் பாய் போட்டு
பாடுங்கள் ஆனந்த பாட்டு
சொர்க்கத்திலே நீந்தலாம் ஜோடியாக
சொர்க்கத்திலே நீந்தலாம் ஜோடியாக

மாலை நேரத்துல மன்னன் பக்கத்துலே
ஏன் இந்த நாணம் உன் கண்கள் கோலம்

ஏன் இந்த நாணம் இது பெண்கள் ஜாலம்

807 நிலா நீ வா.. விழா காண வா வா

July 16, 2009

// கண்ணாலே சங்கீதம் தினம் பாடும்.. தன்னாலே உண்டாகும் சுகம் நூறு.. நீலவான மேகம் போல .. நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே .. நிலா நீ வா…விழா காண வா வா //

ஆஹா.. ஆஹா.. மெய்யாலுமே நெஞ்சம் ஊஞ்சல்லாடுதய்யா..கலக்கல் பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA

திரைப்படம்: அனுக்கிரஹம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
இசை: ஆர்.ராமானுஜம்

நிலா நீ வா…விழா காண வா வா
நிலா நீ வா…விழா காண வா
நிலா நீ வா…விழா காண வா

காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
கண்ணாலே சங்கீதம் தினம் பாடும்
தன்னாலே உண்டாகும் சுகம் நூறு
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வா…விழா காண வா வா
நிலா நீ வா…விழா காண வா

ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
மோகக்கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
மோகக்கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
உன்னாசை பொன்னோடம் நான்தான்
உன் பார்வை எந்நாளும் தேன்தான்
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வா…விழா காண வா
நிலா நீ வா…விழா காண வா

பாடல் வரிகள் உதவி: நன்றி தூள்.காம்
இசையமைப்பளர் படம் உதவி: ஷாமலா, பெர்த், மற்றும் tfmpage.com

806 மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ

July 14, 2009

//மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ.. என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ// அமர்க்களமான பல்லவியுடன் ஆரம்பிக்கும் பாடல் இது. நம்மை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. நிச்சயம் உங்களையும் தான்.

மாலை நேரத்தென்றல்
நீரும் நெருப்பும்
டாக்டர்:எஸ்.பி.பி, பத்மபூஷன்,பி.சுசீலா
இயக்குனர் பி. நீலகண்டன்
தயாரிப்பாளர் தின்சா கே. தோராணி
மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர் ஜெயலலிதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு அக்டோபர் 18, 1971

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:நீரும் நெருப்பும்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ
மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ

ஓடி வந்த கோழை என்று என்னி என்னுதோ??

இந்த பூவைப் போல மென்மை இல்லை என்பதோ ஓஓ

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

தங்கநிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

தங்கநிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

பனிக்காலம்…

அடங்காதோ…

அது போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

பனிக்காலம்…

அடங்காதோ…

அது போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

விளங்காதோ..

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

புன்ன்கை?? என்மனம் உன்வசம் வந்தது
உன் மந்திரப் புன்னகையோ..உன் மந்திரப் புன்னகையோ

கன்னிலம்?? பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ..

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

பட்டு நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

பட்டு நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

போனால் என்னவோ செல்லமாய் கிள்ளவோ

ஆஹஹா ஆஹஹா ஆஹஹா ஆஹஹா
ஆஹஹா ஆஹஹா ஆஹஹா ஆஹஹா

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ

ஓடி வந்த கோழை என்று என்னி என்னுதோ??

இந்த பூவைப் போல மென்மை இல்லை என்பதோ ஓஓ

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

805 இது கனவோ இது நிஜமோ

July 11, 2009

என்‌.சி‌.மணி‌கண்‌டன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள பு‌தி‌ய படம்‌ “பு‌கை‌ப்‌படம்‌”. இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌. இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌,ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகி‌யோ‌ருடன்‌ சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌, ஞா‌னசம்‌பந்‌தம்‌, சி‌வபா‌லன்‌, முத்‌துரா‌ஜ்‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

புகைப்படம் குறித்து அதன் இயக்குனர் ராஜேஷ்லிங்கம் கூறியதாவது:-

பு‌கை‌ப்‌படம்‌ பி‌ரண்ட்‌‌ஸ்‌ பற்‌றி‌‌ய படம்‌. என்‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ல எல்‌லா‌மே‌ நண்‌பர்‌களா‌ல்‌தா‌ன்‌ நடந்‌தி‌ருக்‌கு. நா‌ன்‌ கா‌லே‌ஜ்‌ முடி‌த்‌த பி‌றகு சி‌னி‌மா‌வு‌ல சே‌ர்‌ந்‌தது, ஏன்‌ இந்‌த படம்‌ எடுக்‌கி‌ற வரை‌க்‌கும்‌ கூட எல்‌லா‌மே‌ பி‌ரண்ட்‌‌ஸ்‌ஸா‌லதா‌ன்‌. பி‌ரண்‌ட்‌ஸ்‌ஷி‌ப்‌பி‌லே‌யே‌ என்‌ வளர்‌ச்‌சி‌ முன்‌னே‌ற்‌றம்‌ இருந்‌ததா‌ல என்‌ முதல்‌ படம்‌ எடுக்‌கும்‌ போ‌து பி‌ரண்‌ட்‌ஸ்‌ பத்‌தி‌ன படமா‌த்‌தா‌ன்‌ எடுக்‌கனும்‌னு நி‌னை‌த்தி‌ருந்‌‌தே‌ன்‌. அது மா‌தி‌ரி‌ இது பி‌ரண்‌ட்‌ஸ்‌ பத்‌தி‌ன படமா‌ உருவா‌யி‌ருக்‌கு. இந்‌த படத்‌துல‌ யதா‌ர்‌த்‌தமா‌ன கல்‌லூ‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌. அதுல நட்‌பு மே‌லோ‌ங்‌கி‌யி‌ருக்‌கும்‌. தமி‌ழ்‌சி‌னி‌மா‌ யதா‌ர்‌த்‌தமா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ நி‌றை‌ய கா‌ட்‌ட ஆரம்‌பி‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஆனா‌ல்‌ கா‌லே‌ஜ்‌ல நடக்‌கி‌ற யதா‌ர்‌த்‌த வா‌ழ்‌க்‌கை‌யை‌ சி‌ல படங்‌களை‌ தவி‌ர நி‌றை‌ய படங்‌கள்‌ சொ‌ன்‌னது கி‌டை‌யா‌து. அதுல ஒரு சி‌ன்‌ன முயற்‌சி‌‌தா‌ன்‌ இந்‌த பு‌கை‌ப்‌படம்‌.

//காதல் தேவதை அருகினில் இருக்க.. சாலை நீள்வது தெரியாது.. கூந்தல் காற்றினில் அலைந்திடும் போது.. வேறு ஞாபகங்கள் கிடையாது.. முன்பு அறியாத புரியாத பேரின்மொன்று.. என் மனதுக்குள் தெரியாமல் நுழையாதோ.. நான் கண்மூடி கனவோடு வாழ்கின்ற காலம்.. உன் உடல் எங்கும் பனியாக பொழியாதோ.. இதை சொல்லாமல் தான் போகிறேன்.. மொழி இல்லாமல் நான் வேகிறேன்.. வலிகள் இனிக்கும் என்றே கண்டேன்//

இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌,ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகி‌யோ‌ருடன்‌ சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌, ஞா‌னசம்‌பந்‌தம்‌, சி‌வபா‌லன்‌, முத்‌துரா‌ஜ்‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. இருந்தால் என்னங்க இவர்களூக்கும் பாலுஜி குரல் கொடுததிருக்காரே இதோ அவர் இனிமையான் அகுரலில் அழகான வரிகள் உடைய இந்த புதிய படப்பாடல் இனிமையான மெலோடி. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

இது கனவோ இது நிஜமோ
புது மழையில் முதல் துளியோ
உன்னுடன் வாழ்கையில்
உன் நிழல் ஆகிறேன்
உன் விழியில் பாத்திருப்பேன்
உன் வழியில் காத்திருப்பேன்

இது கனவோ இது நிஜமோ
இது கனவோஓஓஓஓஓஓஒ

காதல் தேவதை அருகினில் இருக்க
சாலை நீள்வது தெரியாது
கூந்தல் காற்றினில் அலைந்திடும் போது
வேறு ஞாபகங்கள் கிடையாது
முன்பு அறியாத புரியாத பேரின்மொன்று
என் மனதுக்குள் தெரியாமல் நுழையாதோ
நான் கண்மூடி கனவோடு வாழ்கின்ற காலம்
உன் உடல் எங்கும் பனியாக பொழியாதோ
இதை சொல்லாமல் தான் போகிறேன்
மொழி இல்லாமல் நான் வேகிறேன்
வலிகள் இனிக்கும் என்றே கண்டேன்

இது கனவோ இது நிஜமோ
புது மழையில் முதல் துளியோ
உன்னுடன் வாழ்கையில்
உன் நிழல் ஆகிறேன்
உன் விழியில் பாத்திருப்பேன்
உன் வழியில் காத்திருப்பேன்

இது கனவோ இது நிஜமோ
இது கனவோஓஓஓஓஓஓஒ

வானில் இருந்தது பூமியில் விழுந்தது??
எதுவும் தெரியவில்லை கண்ணில்
இதயம் குளிர்ந்தது இளமை மறந்தது
எதுவும் புரியவில்லை ஹஎன்னில்
என் உள்ளெங்க்கும் நிறைவாகி வழிகின்ற காதல்
ஒரு நதியாகி உன் பாதம் சேராதோ
இந்த அழகான பயணங்கள் நிகழ்கின்ற காலம்
ஒரு நாளில்லை யுகமாக மாறாதோ
ஒரு இறகாக நான் மாறினேன்
இந்த காற்றோடு போராடினேன்
எங்கே சென்று உன் தோள் சேர்வேன்

இது கனவோ இது நிஜமோ
புது மழையில் முதல் துளியோ
உன்னுடன் வாழ்கையில்
உன் நிழல் ஆகிறேன்
உன் வழியாய் பாத்திருப்பேன்
என் வழியில் காத்திருப்பேன்

இது கனவோ இது நிஜமோ
இது க..ன..வோ..ஓஓஓஓஓஓஒ

புகைப்படம் உதவி: நன்றி இண்டியாக்ளிட்ஸ்.காம்
படத்தகவல் உதவி: அலைகள்.காம்
ஒலிக்கோப்பு மற்றும் பாடல் வரிகள் உதவி: திருமதி.உஷா,ஹைத்ராபாத்

804 போகப் போக நல்லா இருக்கும்

July 9, 2009

//ஏய் டூயட் பாடலாமா?.. ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா?.. யாராவது பார்த்துட போறாங்க..ம்ம்ம்ஹாஆஆ//

இந்த பாட்டின் வரிகள் கேட்க கேட்க பாலுஜி, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் காத்தக்குரல்களின் கலப்படத்தில் ”போக போக நல்லாத்தான் இருக்கும்” பாட்டைப் பற்றியும் காட்சியமைப்பை பற்றியும் நான் ஏதாவது விளக்கம் சொல்லப் போய்… எதுக்குப்பா வம்பு.. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடப்போறாங்க. பாடலை கம்முன்னு குஜாலா கேட்டுவிடுங்க…

படம்:அன்புக்கு ஒரு அண்ணன்
பாடியவர்கள்: பாலுஜி எல்.ஆர்.ஈஸ்வரி
இயக்குனர்: என். எஸ். மணியம்
தயாரிப்பாளர்: நீலநாராயணன், கருணா பிலிம்ஸ்
நடிப்பு :ஜெமினி கணேசன், நிர்மளா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜூலை 22, 1971

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:அன்புக்கோர் அண்ணன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி

ஏய் டூயட் பாடலாமா?
ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா?
யாராவது பார்த்துட போறாங்க..ம்ம்ம்ஹாஆஆ

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க

கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
அதுக்கென்ன இப்போ
கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
அதில் என்ன தப்போ

எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க.. ம்ஹாஆ
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..ம் ஹாஆ
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க.. ம் ஹாஆ

உலலலாஆஆஆயீ
ஆரிரரஓஒ .. உலலலாஆஆஆயீ
ஆரிரரஓஒ …ஆரிரரஓஒ ..
உலலலாஆஆஆயீ…உலலலாஆஆஆயீ..

நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
நமக்கு வேளை எப்போ
என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
நடக்கட்டும் இப்போ ம்ம்மாஆஆ

மாலை போட்டு மண்டி?? வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க..
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க..

இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
மினுக்கட்டும் இப்போ
இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
துடிக்கட்டும் இப்போ

காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
காதல் போட போட காதல் புனிதமானது

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க