Archive for August, 2009

823 அய்யம் பேட்டை அய்யரே

August 31, 2009


இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் தேடித்தேடி ஓய்ஞ்சு போன போது கிடைச்சிடுச்சு..”வேலை கிடைச்சிடுச்சு” என்ற படத்தில் தான் இந்த பாடல் என்று இணையத்தில் தேடினால் அடேங்கப்பா அருமையான படத்தகவல் மாயம்.காம் தளத்தில் கொட்டிகிடந்தது. இந்த தளத்தில் விவரமாக இந்த படத்த்தின் தகவல்களை தந்தவருக்கு பா.பி.பா தளத்தின் சார்பாக நன்றி.

பி.வாசு டைரக்ட் செய்த “வேலை கிடைச்சிடுச்சு” படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர். பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

“என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். “பொன்மனச் செம்மல்” படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.

டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.

பிரபுவை வைத்து “சின்னத்தம்பி” படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து “வேலை கிடைச்சிடுச்சு” படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.

சரத்குமார்
“வேலை கிடைச்சிடுச்சு” படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், “சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது” என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். “ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டார். நான் அவரிடம், “உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.

சண்டைக்காட்சி

சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம். “வேலை கிடைச்சிடுச்சு” படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம். தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்

சொல்லியனுப்பினார்.ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. “எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது” என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.

வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.

படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, “மீண்டும் உங்கள் சத்யராஜ×க்கு வேலை கிடைச்சிடுச்சு” என்று குறிப்பிட்டார்!

வேலை கிடைச்சிடுச்சு” படத்தில்
சத்யராஜ் – கதாநாயகன்
சரத்குமார் – வில்லன்
பி.வாசு – இயக்குநர்

Get this widget | Track details | eSnips Social DNA

அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே

அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
பாக்கு வெச்சு தேதி ஒன்னு பார்த்து சொல்லுங்க??

நாயர்தெரு மகளுக்கும் கவுண்டரோட மகனுக்கும்
கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்

அய்யரே அய்யரே அய்யாரய்யரே
பாக்கு வெச்சு தேதி ஒன்னு பார்த்து சொல்லுங்க?

கூப்பிடீங்களா?

உன்னையில்லமா கிரகமே..உட்காரு

இரண்டு.. இரண்டாந்தேதியா ?
இல்லை ஏழு.. ஏழாந்தேதியா?

ஏழுக்கு முன்னாடி இரண்டு
இரண்டு பின்னாடி ஏழு.. இருபத்தி ஏழு

யப்பா இருபத்தி ஏழு

அத்வும் தேதியில்ல வயசு

அய்யரே இப்ப நீ உத வாங்கப்போற

யே நான் தேதி வைக்கப்போறேன்

மாசி மாசம் வெள்ளி கிழமை ஆறாம் நாள்
மூகூர்த்தம்..மூகூர்த்தம்…சுபமூகூர்த்தம்

ரொம்பவுந்தான் குனிஞ்ச பொன்னு
ஊரையெல்லாம் கூட்டி வந்து
மனு கொடுத்தா மாப்பிள்ளையை மடக்கிப்புட்டா
கைவளையல் புடிச்சுப்புட்டா ஹ..
காரியத்தை முடிச்சுப்புட்டா ஹ.. ஹ..

இப்பவும் நான் சமைஞ்ச பொன்னு
உன்னை என்னி பச்சத்தண்ணி குடிச்சதில்ல
கண்ண மூடி படுத்ததில்ல
என் கவலை உனக்கு இல்ல
எப்பவுமே ஊர் கவலை

நான் புடிச்ச உத்தமபுத்திரன் தான்
நாடறிஞ்ச சத்தியசுந்தரந்தான்

நாளூமது நெஞ்சை அள்ளூற
மஞ்ச பூசுற மஹாலக்ஷ்மிதான்

சாமி பார்த்து சேர்த்து வச்ச புருஷன் தான்
யாருக்குமே இல்லை இங்கு வருத்தம் தான்
மாலை சூடும் காட்சிதான்
எல்லோருமே சாட்சி தான்

கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே

புள்ளி மயில் மனசு வெச்சு பூவிலங்க பொட்டு வச்சு
என்ன புடிச்ச என்னம் போல கதமுடிச்ச
ஆசையதான் அமுக்கடிச்சா அவபக்கம் இழுத்தடிச்சா

வீட்டுகுள்ள சைட்டு அடிச்சு நெஞ்சுக்குள்ள பைட் அடிச்சு
மயங்க வச்சான் என் மனச மலர வச்சான்
என் மனச படம் புடிச்சான் எப்படியோ இடம் புடிச்சான்

சீர்வரிசை பந்தலில் வச்சுடுவேன்
மாப்பிள்ளைக்கு சூட்டுக்கள் தெச்சிடுவேன்

உள்ள?? நான் பொங்க வைக்கனும்
பூசவைக்கனும் எங்க வீட்டுலதான்

நூறு ஆண்டு பூவும் பொட்டும் மனக்கனும்
ஆறு ஏழு புள்ள குட்டி பொறக்கனும்

வண்ண வண்ண வாழை தான்
மாட்டிகிற வேளைதான்

கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே
பஞ்சங்கத்தான் பாத்துங்க பாக்கு வெத்தலை மாத்துங்க
ல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே

Advertisements

822 வெற்றி மேல வெற்றி தான்

August 27, 2009

//ஏதுமில்ல ஜோலி எப்பவுமே ஜாலி.. கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே..நாங்கதானே ஹீரோ ஆமா.. ஆமா.. ஆமா.. ஊரசுத்தும் ரோமியோ ஆமா.. ஆமா.. ஆமா..// இப்படித்தான் பாலுஜி பிரியர்கள் பித்தாக அலைகிறார்கள். என்னவொரு எனர்ஜிடிக்கான பாடல் இது பாடல் வருமோ இனி வருமோ?.. நீங்கள் எப்பவோ என்னைப்போல் கேட்டிருப்பீங்க மீண்டும் அனுபவிங்க சார்.

படம்:நல்லவன்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி குழுவினர்
நடிகர்:விஜயகாந்த்

Get this widget | Track details | eSnips Social DNA

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே
ஏதுமில்ல ஜோலி எப்பவுமே ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே
நாங்கதானே ஹீரோ ஆமா.. ஆமா.. ஆமா..
ஊரசுத்தும் ரோமியோ ஆமா.. ஆமா.. ஆமா..

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
தக்கததகனி
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே
கிடத்தக்க

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே

தேதி என்ன பாரடி தேவை என்ன கூறடி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி நானும் கூட வாரண்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி

தேதி என்ன பாரடி தேவை என்ன கூறடி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி நானும் கூட வாரண்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி
என்ன மட்டும் நம்பிடனும் நம்பிடனும் ..நம்பிடனும்
சம்மதத்தை தந்திடனும் தந்திடனும் …தந்திடனும்
அச்சமென்ன அஞ்சுகமே ஹஆசை தீர கொஞ்சனுமே
கோவமென்ன கோகிலமே கொஞ்ச வரனுமே

ஹேய்.வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே.. ஆமா
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே..

முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ

முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ

வந்த இடம் நல்ல இடம்
சின்ன இடை கிள்ளிடனும்
ரோட்டு மேல போறப்புள்ளே
காருக்குள்ள வாடிபுள்ளே
பின்னாடி ரொம்ப தொல்லை
ரொம்ப ராங்கித்தான்

ஏய் வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே
வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே

ஏதுமில்ல ஜோலி எப்பவுமே ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே
நாங்கதானே ஹீரோ ஆமா.. ஆமா.. ஆமா..
ஊரசுத்தும் ரோமியோ ஆமா.. ஆமா.. ஆமா..

வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே
வெற்றிமேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிகாசு என்றுமே நம்ம பையிலே

821 விதி என்ற நாடகம் தெய்வம் போடும்

August 25, 2009

நம் வாழ்க்கையிலே நாம் ஒன்றும் நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும் இது ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உருவாவது. இறைவன் விதி என்ற பெயரில் போடும் நாடகத்தின் சோகக்கதையை உணர்த்து பாடல் இது. //தாலி சொந்தம் தாய்க்கு இல்லை..கணவன் பந்தம் வெறுத்தாள் இல்லை
மகன் இருந்தும் அதை சொல்லாமல்.. மனைவிகளாய் சுகம் இல்லாமல்..தனிமரமாய் ஒரு ஆண் உள்ளம்..தன் தவறால் சிலை போல் வாழும்..
போராட்டம் வாழ்வானதே..பூந்தோட்டம் காடாக மாறிப்போனதே// இந்த வரிகள் பாலுஜியின் குரலில் அழுத்தமான சோகத்தை வெளிக்கொணரும் சுகமான சோகபாடல்.. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: போக்கிரி பொண்ணு
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமர்

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
உயிரோடு உறவாடும் சோகமோ
துணை சேர வழி தெய்வம் என்று காட்டுமோ

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்ம..ம்ம்ம்ம்ம..ஓஓஓஓ..

தாலி சொந்தம் தாய்க்கு இல்லை
கணவன் பந்தம் வெறுத்தாள் இல்லை
மகன் இருந்தும் அதை சொல்லாமல்
மனைவிகளாய் சுகம் இல்லாமல்
தனிமரமாய் ஒரு ஆண் உள்ளம்
தன் தவறால் சிலை போல் வாழும்

போராட்டம் வாழ்வானதே
பூந்தோட்டம் காடாக மாறிப்போனதே

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்.. ஹாஆஆஆஆ..

விதை போட்டது மரமானது
விதி வந்து தான் விளையாடுது
சொந்தங்கள் பகையாய் மாற
உள்ளங்கள் தனியாய் வாழ
அட இறைவா இது சரிதானா
ஏன் பிரித்தாய் இது முறைதானா

தீயாகும் உள்ளம் வெந்து வாடுமா
எதிர்காலம் வந்து ஒன்று சேர்த்து பார்க்குமா

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்ம..ம்ம்ம்ம்ம..ஓஓஓஓ..

820 ஆயிரம் ஆயிரம் ஆசிகளில்

August 24, 2009

சீரான தாளத்துடன் அருமையான.. இனிமையான மெட்டுடைய பாடல் இது. இந்த படத்தை நான் பார்க்கவில்லை ஆகையால் இணையத்தில் தேடிப்பர்த்ததில் துரை படத்தின் அட்டகாசமான திரை விமர்சனத்தை கேபிள் சங்கர் தளத்தில் கண்டேன் அந்த தளத்திற்க்கு நன்றி. மேலும் இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய கோவைக்காரர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தார். பா.நி.பா தளத்தின் தீவிர ரசிகர் மட்டுமல்ல பாலுஜியின் குரல் மீது அபிமான காதல் கொண்டவர் அவருக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாடல் அதிகம் வானொலிகளில் இடம் பெறவில்லை ஆகையால் பிரபலாமகவில்லை. இதோ இந்த பாடல் உங்கள் செவிகளூக்காக அதற்க்கும் முன் அந்த படத்தின் கேபிள் சங்கர் தளத்தில் வந்த திரை விமர்சனம் படித்தால் முழு படம் பார்த்த திருப்தி இருக்கும். பதிவாளரின் ஹாய்சமான விமர்சனம் என்னை கவர்ந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். இதோ விமர்சனம்.

ஓரு ராஜாவிடம் விசுவாசமான ஓரு தளபதி..தளபதிக்கு அழகான மனைவி, மகள், தளபதியை ஓரு தலையாய் காதலிக்கும் ராஜகுமாரி, தன் மகனிடம் அரசாட்சியை ஓப்படைக்க இஷ்டமில்லாமல் தளபதியை அடுத்த வாரிசாக அறிவிக்க, அரசரின் மகன் தனது ராஜா ஆசையின் காரணமாக தன் தந்தையை கொன்றுவிட்டு பழியை தளபதி மீது போட்டுவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட பணிக்கிறான். தளப்தி மட்டும் தப்பிவிட்டு ஓரு க்ளேடியேட்டர் ஆகி அவனது நாட்டுக்கே திரும்ப வந்து அரசனை கொன்று நல்லாட்சி த்ருகிறான்.. இது தான் க்ளேடியேட்டரின் கதை.

ராஜாவுக்கு பதிலாக ஓரு நல்ல அரசியல்வாதி, நேர்மையான அல்லக்கை ஹீரோ, ஹீரோவுக்கு நல்ல அழகான மனைவி, மகன், அரசியல்வாதியின் மகள் ஓரு தலையாய் ஹீரோவை காதலிக்கிறாள். அரசியல்வாதியின் மகன் அடுத்த முதல்வர் ஆக அசைப்பட்டு தன் தந்தையை கொன்று பழியை ஹீரோவின் மீது போட்டு போலீசை விட்டு என்கவுண்டர் செய்ய போக அதிலிருந்து தப்பித்த ஹீரோவுக்கு தான் யார் என்று மற்ந்து போய்விட, அதனால் தான் யார் என்றே தெரியாமல் அலைய, பின்னால் ஓரு மணிநேரத்திற்கு பின் ஞாபகம் வந்து தன் நிலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து எல்லோரையும் கொன்று வென்று வெற்றி வாகை சூடுகிறார்.ஆவ்..ஆவ்..

பிக்சர் சூசினப்புடு நான் ஏன் அனுமானம் ஓஸ்துந்தி அண்டே..? சே.. என்ன தெலுங்குல எழுத ஆரம்பிச்சிட்டேன்..சாரி பக்கா மசாலா தெலுங்கு படம் பார்த்த பீல்ல எழுதிட்டேன்.

வர வர விவேக்குக்கு செல்ப் எடுக்க மாட்டேங்கிறது.. செம போர்.. அர்ஜூன் வழக்கம் போல ரோபோ போல் முகம் வைத்து தன்னுடய் சிக்ஸ்பேக்கை யெல்லாம் காட்டுகிறார். இவருக்கு இருக்கும் சிக்ஸ் பேக்கில் ஹீரோயின் கீரத்துக்கு கொடுத்திருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கும்.. மரபாச்சி பொம்மை போல் இருக்கிறார்.

சில நல்ல கதைகளை உல்டா செய்யும் போது இப்படி கொத்து புரோட்டா போல் ஆகிவிடுவது உண்டு, இவ்ர்களும் ஓழுங்காய் பண்ணாமல், அதனால் நல்லா பண்றவங்களையும் பண்ண்விட மாட்டாஙக.. அது போலத்தான் துரையும்..

திரை விமர்சனம் உதவி: நன்றி.கேபிள் சங்கர் தளம்

படம்: துரை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:அர்ஜுன்
இசை: இமான்

Get this widget | Track details | eSnips Social DNA

ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
தினந்தோறும் பூக்கிறதே ஒரு கோடி புன்னகையே
தேவதைகள் வந்து கோலமிடும் ஒரு அதிசய வீடு இது
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது

செல்லப்பிள்ளையை தோளில் தூக்கிக்கொண்டு
ஒரு சந்தையிலே ஆஹா சுற்றையிலே
பூமாலைகள் சூட்டிய மாமன்னன் போலே
தோன்றுமடா ஏய் தோன்றுமடா
செல்ல மனைவியை தோட்டத்தின் ஓரத்திலே
ஆஹா கொஞ்சுகையில்.. ஆஹா கொஞ்சுகையில்
அதை பார்த்திட்ட பிள்ளைகளின் கேலிக்கு பூக்கும்
வெட்கத்துக்கு ஏய் விலையென்ன
போதுமடா போதுமடா வேறென்ன வேனுமடா
நூறு ஜென்மம் எடுத்தாலும் இந்த செல்லங்கள் போதுமடா

ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது

ஒரு தாயினை போலே பார்த்துக் கொள்வாள்
ஓ மனைவியே ஓ மனைவியே
ஆஹா தூக்கிட தோன்றும் வேளையில் ஏங்க
எங்களைத்தான் இனி எங்களைத்தான்
அந்த வார்த்தையை கேட்டு மேனியெல்லாம்
ஆஹா சிலிர்க்குமே ஆஹா சிலிர்க்குமே
அட வீதியை நோக்கிய வாசலிலே
அவள் நின்றிடுவாள் அவள் நின்றிடுவாள்
ஆம்படையான்?? வந்ததுமே இழுத்து அணைத்தாளே
உழைத்து வந்த ஆண் தன்மகனை
அவள் முத்தத்தில் துடைப்பாளே

ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
தினந்தோறும் பூக்கிறதே ஒரு கோடி புன்னகையே
தேவதைகள் வந்து கோலமிடும் ஒரு அதிசய வீடு இது
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது

819 வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க

August 21, 2009

”சுவர் இல்லா சித்திரங்கள் என்று நினைக்கிறேன் அந்த படத்தில் பாலுஜி கோவையை பற்றி வெல்கம் வெல்கம் என்ற தொடங்க்கும் ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பதிவு இந்த தளத்தில் கூட பதிந்துள்ளேன்.” அந்த பாடலை போலவே இந்த பாடல். வரிகளை கேட்கவே வேண்டாம் படித்தாலே மொழி மாற்றம் படத்திற்க்காக எடுக்கப்பட்ட பாடல் என்று தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். நம்ம அபிமான பாடகர் பாலுஜி ஊட்டிக்கு வரச்சொல்றாங்க சார். ஊட்டியை பற்றி எல்லோரும் அதிகம் தெரிந்தவர்கள் தான். வெளி ஊர்களில் இருந்தும் ஏன் வெளி நாட்டிலிருந்தும் ஊட்டியை விரும்பி பார்க்க வருவார்கள். நான் கோவையில் இருந்து போக முடிவதில்லை (அதாவது ஆந்திராவிலும், திருப்பதியில் இருப்பவர்கள் அடிக்கடி திருமலைக்கு செலவதில்லை அதுபோல நண்பர்களூம் எனக்கு இருக்கிறார்கள் அதுபோலதான்) ஓரிரு தடவைதான் சென்றுள்ளேன் மல்ர் காட்சி சீசன்களில் மனுசன் நடக்க கூட முடியாது மலரை பார்க்க செல்கிறார்களோ இல்லையோ அந்த சீதோஷ்ன நிலையை அனுபவிக்கவாவது வருடம் தவறாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். சரி விசயத்துக்கு வருகிறேன் இந்த பாடலை எப்பவோ கேட்ட நினைவு ஹிந்தி மெட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். கேட்டவர்களூக்கு ஹிந்தி பாடலின் மெட்டை நிச்சயம் முணுமுணுக்க வைக்கும் என்பது உண்மை. பாலுஜியின் வழக்கம் போல் மெய் மறக்கு குரலில் அவருக்கே உரிதான சில்மிஷங்கள் நிறைந்த பாடல் கேட்ட்த்தான் பாருங்களேன். அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் உங்கள் பின்னூட்டங்களையும் பாலுஜி பார்க்க வாய்ப்புண்டு ஏனென்றால் அவருக்கும் இந்த சுட்டியை வழக்க்ம் போல் அனுப்பிவிடுவேன். இனி அடுத்த பதிவில் பார்க்கலாம். வற்ட்ட்டாஆஆ..

இந்த பாடலிலும் என் மனதை கவர்ந்த வரிகள் //சிம்ஸ் பார்க்கும் உண்டு நீங்க ஜோடி சேர்ந்து வாங்க..இயற்கை காட்சி தாங்க உங்க மனசுக்கு இதமுங்க.. எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு..இதைப்போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க..இதை தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்..அதைப்போல தடை தாண்டி வெற்றி தேடுங்க..தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹாஆ..சிங்காரத் தோட்டம் இது தானுங்க..இந்த இயற்கை கெடுத்து விடாமல்..அதை காக்கனும் நீங்கய்யா..இது செல்வரும் ஏழையும் சேர்ந்து ரசிக்கிர இடமய்யா
//

படம்: இது வயசல்ல
பாடியவர்: டாக்டர். எஸ்.பி.பி
இசை:மனோஜ்

Get this widget | Track details | eSnips Social DNA

வருக… வருக… வெல்கம் டூ ஊட்டி
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி
இது துன்பத்தை தீர்க்கிற ஊரு
இது இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் பூமி
இதில் ஊர்வலம் செல்லுங்க

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி

இது பொட்டானிக்கல் கார்டன்
இங்கே பொழுது போக்க வாங்க


இது தொட்ட பெட்டா சிகரம்
இதை தொட்டு பார்க்க வாங்க

அழகான மலர் காட்சி வருஷம் தோறுமுண்டு
அதைப் பார்க்க வருவாங்க மக்கள் கோடியே
படகு ஓட்டி விளையாட ஏரி இங்கே உண்டு
பல பேரு வருவாங்க சுகம் தேடியே
மாப்பிள்ளை போலே மேகங்கள் வந்து
மலை மங்கை நாண உறவாடுமே
இந்த மலைகளின் உயரத்தை போலே
எங்க மனங்களூம் பெருசுங்க
அந்த மரங்களின் நிழலைப்போலே
பிறர் வாழ்ந்திட உதவுங்க

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி ஹாஆ

சிம்ஸ் பார்க்கும் உண்டு நீங்க ஜோடி சேர்ந்து வாங்க
இயற்கை காட்சி தாங்க உங்க மனசுக்கு இதமுங்க
எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு
இதைப்போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க
இதை தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்
அதைப்போல தடை தாண்டி வெற்றி தேடுங்க
தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹாஆ
சிங்காரத் தோட்டம் இது தானுங்க
இந்த இயற்கை கெடுத்து விடாமல்
அதை காக்கனும் நீங்கய்யா
இது செல்வரும் ஏழையும் சேர்ந்து ரசிக்கிர இடமய்யா

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி

இது துன்பத்தை தீர்க்கிற ஊரு
இது இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் பூமி
இதில் ஊர்வலம் செல்லுங்க

வருவோமே நாங்க.. தேங்க்யூ..
ஊட்டிக்கு தாங்க..மெனி மோர்
வாழ்வெல்லாம் வருவோமே இனி நாங்க
தட்ஸ் வெரி குட்

818 அடடா என்ன அழகு….

August 17, 2009

1980 – 90ல் பாலுஜியின் பல மெலொடி பாடல்கள் நம் மனதை கொள்ளைக்கொண்டு போனவை அதில் சில ஒற்றை வார்த்தைகளையே திருப்பி திருப்பி பாடி அமர்க்களமான தென்றல வருடும் பாடல்களை வழங்கியது அவரது ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். உதாரணத்திற்க்கு நினைத்தாலே இனிக்கும், நினைவெல்லாம் நித்யா நித்யா போன்ற பாடல்கள் அவரது ரசிகர்களை அவரின் மந்திரகுரல் கட்டிப்போட்டது என்பது நூறு சதவீதம் உண்மை. இதோ சமீபத்தில் வெளிவந்த பாடல் இது அதுபோலவே தான் “அடடா என்ன அழகு” என்ற ஒற்றை வார்த்தையை திருப்பி திருப்பி பாடி பலாச்சுளையை தேனில் தோய்த்து தருவது போல தேன் சொட்ட சொட்ட இனிமையான் மெலோடியாக வழங்கியிருக்கிறார்கள் அசத்தலாக மெட்டமைத்த இசையமைப்பாளருக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி. மேலும் எனது கோவை நண்பர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் இந்த பாடலை பாலுஜி ரசிகர்களுக்காக வழங்கியுள்ளார். அவருக்கும் எனது பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:அடடா என்ன அழகு
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, கோபிகா பூனிமா
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ்,கருனாஸ், ரகுவரன், ரேகா
இசை: ஜீவன் தாமஸ்
தயாரிப்பு:திருப்பூர் எம்.வி.ராமசாமி

லலலலலாஆஆ.. லலலலலாஆஆஆஅ
லலலலலாஆஆ.. லலலலலாஆஆஆஅ
னனனனன.. னனனனனனன..
னனனனன.. னனனனனனன..

அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
ஹேஏஏஏஏஏ.. னனனன்னனனனாஆ
லலலலலாஆஆ.. லலஆஆஆஅ

அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
லலஆஆ.. ஆஆஅஆஆஅ
லலலஆஆ.. லலலலலாஆஆஆஅ
அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..
லலலலலலலலலாஆஆஆஅ

லலலலலாஆஆ.. லலலலலாஆஆஆஅ

னனனனன.. னனனனனனன..
னனனனன.. னனனனனனன..

ஹேஏஏஏஏஏஏ… வாட் ஏ ப்யூட்டி புல்

னனனனன.. னனனனனனன..

ஹே ஹேஏஏஏஏஏ ஆஆஆஆ….ஆஆஆஆ.

னனனனன.. னனனனனனன..
னனனனன.. னனனனனனன..

அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..

அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..

அடடா என்ன அழகு..அடடா என்ன அழகு..

லலலலலாஆஆ.. லலலலலாஆஆஆஅ
லலலலலாஆஆ.. லலலலலாஆஆஆஅ

817 யே ந்நாஜாரி பியாரே பியாரி

August 14, 2009

புதுமண தம்பதிகள் திரு.விகாஸ் காம்ப்ளே, திருமதி.ப்ரியா விகாஸ், மும்பை

”யே ந்நாஜாரி பியாரே பியாரி” (Ye naajaari pyaaree pyaari) இந்த பாடல் கங்கை கரைப்பாட்டு படத்தில் வருகிறது பாலுஜியுடன் நம்ம சின்னகுயில் சித்ரா மேடமும் கலக்கலாக பாடியிருக்கிறார்கள். பாலுஜி பாடுவது எல்லா வரிகளும் ஹிந்தி மொழியில் ”பிரமாதம்” என்ற ஒரு வரியை தவிர. சித்ரா மேடமும் ஒரு கலக்கியிருக்கிறார் ரொம்ப நாளாக என் கோப்பில் இருந்தது.

மும்பையில் வசிக்கும் பாலுஜியின் அதிதீவிர ரசிகர் திரு.விகாஸ் காம்ப்ளேயின் மனதிற்க்கு பிரியமான பிரியா இருவரின் திருமணம் சென்ற 11 ஆம் தேதி மும்பையில் நடைப்பெற்றது.

பாலுஜி, சித்ரா மேடம் இருவருடைய வாழ்த்துக்களூடன் கோவை பாலுஜி ரசிகர்கள் மற்றும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் அனைவரும் அவர் என்றென்றும் புதுமண தம்பதிகளாக மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ வாழ்த்துகிறோம். இந்த தளத்தின் உரிமையாளர் திரு.சுந்தர், மற்றும் பங்காளி கோவை ரவி நாங்களூம் மனதார வாழ்த்துகிறோம்.

குறிப்பு:
ஹிந்தி பாடல் வரிகள் எனக்கும் புரிந்த வரை தமிழ்ஹிந்தியில் தட்டச்சு செய்துள்ளேன் நிச்ச்யம் தவறுகள் இருக்கலாம். பொருத்தருள்க. சரியான விளக்கங்கள் பின்னூட்டத்தில் தரலாமே தெரிந்தவர்கள் (டெல்லி பாலா உங்களூக்கு தான் இந்த வரி. எப்படி இருக்கிறது உங்கள் மண் வாழ்க்கை?)

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: கங்கை கரைப்பாட்டு
பாடியவர்கள்:எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்: நிழல்கள் ரவி (நல்ல குரல்வளம் கொண்டவர்), ஜனகராஜ், ரூபஸ்ரீ,வருன்ராஜ்
இயக்குநர்: மணிவன்னன்
இசை: தேவா??

Ye Nazaare pyare Pyare
Dil Jhhume.. Dil Ko Chume.

பரவாயில்லையே… ஹாஹா

ராஜா ராஜா.. ஹ

சின்ன ராஜா ஐயோ..

என்றும் நானே உந்தன் ரோஜா

Raaz kehna hain kuchh pass aa na
ab chalega na koi bahana

Ye Nazaare pyare Pyare
Dil Jhhume.. Dil Ko Chume.

இந்த கடல் வானமும் அந்த மலையாகுமே
அது மறைந்தாலும் மறையாது நம் சொந்தமே
கண்ணில் இமை போன்றது மண்ணில் மனம் போன்றது
அன்பில் உருவான இளம் காதல் சுகபந்தமே

Teri meri haseen zindagani
hain khushi ki ladi ki ravaani

அச்சா பெண்மணி ஹ
தும்மேரி கண்மணி ஆஹா

இவள் இலையோடு பழமான புதுமாங்கனி

பிரமாதம்

Ye Nazaare pyare Pyare
Dil Jhhume.. Dil Ko Chume.

அள்ளித்தழுவாமலே அங்கம் குளீராமலே
எந்தன் மனம் எங்கும் சுகமென்னும் சுமையானது
சொல்லிப்புரியாதது சொல்லில் அடங்காதது
அந்த சுமைதானே இளம் நெஞ்சின் சுவையானது

Milke Jungle mein mangal manaale
hum mohabbat ka poora maja le…

அச்சா பெண்மணி தும்மேரி கண்மணி
இவள் அதிகாலை மலர் தூவும் பெரும்பூம்பனி??

அச்சா பெண்மணி ஹ
தும்மேரி கண்மணி ஆஹா

Ye Nazaare pyare Pyare
Dil Jhhume.. Dil Ko Chume.

ராஜா ராஜா.. ஹ

சின்ன ராஜா ஐயோ..

என்றும் நானே உந்தன் ரோஜா

யே நஜாரி.. பியாரே பியாரி
தில்லு ச்சுமே தில்கே ச்சிம்மே ஒகேன்னா

ராஜா ராஜா.. ஹ

சின்ன ராஜா ஐயோ..

என்றும் நானே உந்தன் ரோஜா

Raaz kehna hain kuchh pass aa na
ab chalega na koi bahana

816 எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம்

August 14, 2009

“எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம்” என்ற இன்னிசை நிகழ்ச்சி சென்னையில் கடந்த 9 ஆம் தேதி மாலை நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விரிவான வர்ணனையை எனது நண்பர் திரு.தமாம் பாலா அவர்கள் மிகவும் அழகாக வர்ணித்து ஒரு பதிவாக அவரின் பாலாவின் பார்வை என்ற தளத்தில் பதிந்து எனக்கு உடனே சுட்டியை அனுப்பிவைத்து பாலுஜியின் ரசிகர்களை மனம் குளிரவைத்துள்ளார். இணையதள பாலுஜி ரசிகர்கள் நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளார். அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் கோவை ராசிகர்கள் சார்பாகவும் அவருக்கும் நன்றிகள் பல. ஒலிக்கோப்பு இருந்தால் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். ஒலிக்கோப்பு இதில் சேர்க்க முயற்சி செய்கிறேன்.இங்கே சென்னையில் எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம் விவரங்கள் படித்து விட்டு உங்கள் உணர்வுகளை ஒருவரியில் வழங்குங்கள்.

ஒளிகாட்சி இங்கே அழுத்தவும்

815 ராத்திரி ராத்திரி அது முழிக்குது

August 6, 2009

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது.. காலையில் காலையில் அது தூங்குது தூங்குது
என்னத்த முழிக்குதோ? என்னத்த தூங்குதோ? படத்தை பார்த்தவர்கள் தவிர யாருக்கு தெரியும்.
வித்தியாசமான வரிகள் கொண்ட இனிமையான பாடல். கேட்டு மகிழுங்கள்.

படம்: அன்னைபூமி
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி டாக்டர்.எஸ்.ஜானகி
நடிகர்: விஜயகாந்த், கௌதமி, ராதாரவி, நளினி, இளவரசி,பேபி சோனியா அனுராதா
இசை:இளையராஜா
இயக்குநர்:ஆர்.தியாகராஜன்
வருடம்:1985.

Get this widget | Track details | eSnips Social DNA

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

காலையில் காலையில் அது தூங்குது தூங்குது

வென்னிலாவோ பெண்னிலாவோ

ஆடை கொண்டதும் ஆசை தந்ததோ

ஆளைத் தொட்டு தோளைத் தொட்டு கிள்ளுதோ

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

வானமென்னும் ராஜ வீதியில் தேவலோக
வெள்ளை யானை பவனி வந்தது

உன்னை என்னை தாண்டி வந்தது
ஊர்வலத்தில் தேவ கூட்டம் ஆடவிட்டது

என்னி என்னவோ வர்ண ஜாலங்கள்
மெல்லிசைகளின் ராக தாளங்கள்

ராஜராஜனின் ராணியல்லவா
பூஜை செய்திட மேனியல்லவா

ஆதிஅந்தம் அற்புதம் அழகு என்ன சித்திரம்
ஆணவம் கூடவா வாஆஆஆ

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

காலையில் காலையில் அது தூங்குது தூங்குது

வென்னிலாவோ பெண்னிலாவோ

ஆடை கொண்டதும் ஆசை தந்ததோ

ஆளைத் தொட்டு தோளைத் தொட்டு கிள்ளுதோ

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

வெள்ளி மேகம் மெத்தை போடுது
வானவில்லின் வண்ண வண்ண பூவைத் தூவுது

ஈரவாடை காத்து வீசுது
சூடு கொஞ்சம் ஏறும் போது ஆற வைக்குது

மின்னல் தேவதை ஆடி வந்தது
மௌன ராகங்கள் பாடி வந்தது

வானம் மீன்களூம் தோழி ஆனது
விடிவிளக்குகள் ஏற்றி வைக்குது

காமன் தேவன் பண்டிகை
காண வேண்டும் கன்னிகை
வாலிபம் ஏங்குது வாஆஆஆ

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

காலையில் காலையில் அது தூங்குது தூங்குது

வென்னிலாவோ பெண்னிலாவோ

ஆடை கொண்டதும் ஆசை தந்ததோ

ஆளைத் தொட்டு தோளைத் தொட்டு கிள்ளுதோ

ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது

814 அழகே அழகே நீ என் அழகே

August 5, 2009

டாக்டர் எஸ்.பி.பாலுஜியுடன் ஆயுர்வேத டாக்டர்கள் இருவர் திரு.ராதா கிருஷ்னன், திரு.சி.டி.சிபி.

மலேசியாவில் உள்ள ஆயுர்வேத டாக்டர்கள் இருவர் திரு.ராதா கிருஷ்னன் மற்றும் திரு.சி.டி.சிபி ஒரு தமிழ் ஆல்பம் தயாரித்து இருக்கிறார்கள். ஆல்பத்தின் பெயர் நேசியப்பா (அழகான பெயர்) அந்த ஆலபத்தில் டாக்டர்.எஸ்.பி.பி, திரு.உன்னிமேனன், திரு.ராஜேஸ் வைத்யா, திரு. மதுபாலகிருஷ்னா, மற்றும் அலிண்டா அல்போன்ஸ், பிரீத்தா ப்ரசாத் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர். இந்த ஆல்பத்திலிருந்து நமது பாலுஜி அவர்களூம் ப்ரீத்தா பிரசாத் இருவரும் ஒரு அழகான பாடல் பாடியிருக்கிறார்கள் வரிகள் அருமை இசையமைப்பு மிகவும் இனிமை. இந்த ஒலிக்கோப்பை ஆஸ்திரேலியா, பெர்த் நகரிலிருந்து பாலுஜியின் அதிதீவிர ரசிகை அனுப்பி வைத்த செல்வி.சாம்ளா அவர்களுக்கு அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பில் நன்றி.

இந்த ஆல்பத்தின் முழு விபரங்கள் ஆங்கிலத்தில் படிக்க இங்கே அழுத்தவும்

உயிரே உயிரே என் உயிரே
அழகே அழகே நீ என் அழகே
யாரோ நீ யாரோ என் அழகே
நிலவே நிலவே உன் விழிகள் கவிதை
உயிரே உயிரே என் உயிரே
உன் அழகில் நான் மறைந்தேன்
என் நினைவில் நீ நிறைந்தாய்
உன் அருகில் நான் இருந்தேன் அழகே

உன் அழகில் நான் மறைந்தேன்
என் நினைவில் நீ நிறைந்தாய்
என் அழகே என்றும் என் ஸ்வாசம் தானே
அழகே அழகே நீ என் அழகே
யாரோ நீ யாரோ என் அழகே

வானவில் பார்த்த வர்ணம் நீ தானே
அழகவில் பார்த்த நெஞ்சம் நீ தானே

மேகமாய் பெய்த நானும் கனவுக் கண்டேனே
மேகமாய் பெய்த நானும் கனவுக் கண்டேனே

வானவில் பார்த்த வர்ணம் நீ தானே
அழகவில் பார்த்த நெஞ்சம் நீ தானே

நீயின்றி நானும் வாழ நினைத்து முடியவில்லை
நீயின்றி நானும் வாழ நினைத்து முடியவில்லை

பார்க்க முடியவில்லை பாட வந்த ராகம் நீதானே

அழகே அழகே நீ என் அழகே
யாரோ நீ யாரோ என் அழகே

இந்த பாசம் உந்தன் கூட
என்றும் தானே ஆசை ராசா
என்னிடத்தில் மனதுக்குள் நீதானே

இந்த பாசம் உந்தன் கூட
என்றும் தானே ஆசை ராசா
என்னிடத்தில் மனதுக்குள் நீதானே

வண்டுகள் தேடும் பூவை நின் அழகே அழகு
தனிமையில் இனிமை என்றும் உன் பாசம்

உன் இதயமதில் நீ இல்லாமல் நான் இல்லை
உன் இதயமதில் நீ இல்லாமல் நான் இல்லை

வண்டுகள் தேடும் பூவை நின் அழகே அழகு
தனிமையில் இனிமை என்றும் உன் பாசம்

என்னகம் கண்டு காதல் நெஞ்சம் உன் நெஞ்சம்
என்னகம் கண்டு காதல் நெஞ்சம் உன் நெஞ்சம்

பார்க்க முடியவில்லை பாட வந்த ராகம் நீதானே

அழகே அழகே நீ என் அழகே
யாரோ நீ யாரோ என் அழகே
நிலவே நிலவே உன் விழிகள் கவிதை
உயிரே உயிரே என் உயிரே..

Get this widget | Track details | eSnips Social DNA