Archive for September, 2009

836 பட்டிமன்றம் பட்டிமன்றம்

September 30, 2009

விசு டைரக்ட் செய்த படம் ஆகையால் பாடல் மெட்டு அவருடைய சம்சாரம் அது மின்சாரம் பாட்டில் வரும் மெட்டு போல் சில இடங்களில் தெரியும் உதாரணத்துக்கு இந்த வரிகளை சொல்லலாம் //வெள்ளம் பள்ளம் தேடும் உள்ளம் உள்ளம் தேடும் தீராது அது மாறாது ஆண்மை பெண்னை தேடும் பெண்மை ஆணை தேடும் ஓயாது விதி மாறாது// தற்போது விழாகாலங்களில் தொலைக்காட்சியில் பட்டி மன்றம் இல்லையென்றால் வூட்டுக்கார அம்மணிகளுக்கு திருப்தி ஏற்படாது ஆகையால் இந்த தளத்தில் நாம் மட்டும் ஏன் விட்டு வைக்கனும் ஆணால் இது பட்டிமன்றம் இல்லை பட்டிமன்றத்தை பற்றியே ஒர் பாடல் அமர்க்களமாக பாலுஜி பாடியிருக்கிறார். கேட்டு தான் பாருங்களேன். இந்த பாலுஜி பாடலை தேடிப்பிடித்து தினமும் இந்த தளத்தில் தொடர்ந்து பின்னூட்டம் தந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் கோவை ரசிகர் திரு. கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு 2 பாடல்களூக்கு முன் ஓர் டப்பிங்க பட பாடலுக்கு சரியான தகவலை தந்ததினால் அவருக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி கோபால்கிருஷ்னன் சார்.

படம்:உரிமை ஊஞ்சலாடுகிறது
இசை:சங்கர் கனேஷ்
நடிப்பு : ரமேஷ் அரவிந்

Get this widget | Track details | eSnips Social DNA

பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
சுகம் எதில் மிக உண்டு ஆண் பெண்னை தொடும் போதா
சுகம் எதில் மிக உண்டு பெண் ஆணை தொடும் போதா
தீர்வென்ன இதில் தீர்ப்பென்ன
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்

வெள்ளம் பள்ளம் தேடும் உள்ளம் உள்ளம் தேடும் தீராது அது மாறாது
ஆண்மை பெண்னை தேடும் பெண்மை ஆணை தேடும் ஓயாது விதி மாறாது

ஆணும் பெண்ணும் இல்லையேல் பூமி வெறும் காடுதான்
காதல் மட்டும் இல்லையேல் தங்கம் கூட ஓடு தான்
வாழவைத்த காதலையே வாழ்த்துவோம் வா
பூமி சுற்றும் காலைவரை காற்று மட்டும் ஓயாது
காற்று சுற்றும் காலம் வரை காதல் இங்கு தீராது

பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
சுகம் எதில் மிக உண்டு ஆண் பெண்னை தொடும் போதா
சுகம் எதில் மிக உண்டு பெண் ஆணை தொடும் போதா
தீர்வென்ன இதில் தீர்ப்பென்ன
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்

எந்தப் புத்துக்குள்ளே எந்த பாம்போ என்று பார்க்காதே அது கூடாதே
எந்தப் பூவுக்குள்ளே எந்த தேனோ என்று நீ தேடு அது பண்பாடு
காதல் கொண்ட நெஞ்சிலே துனபம் கூட இன்பமே
கண்ணுறக்கம் இன்றியே கனவுகள் தோன்றுமே
ஜாதிமத ஜாதகம் தேவையா வா
எத்தனைப் பேர் காதலித்தும் காதல் இன்னும் மிச்சம் உண்டு
உச்சரிக்கும் ஆளவச்சு காதலுக்கு அர்த்தம் உண்டு

பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
சுகம் எதில் மிக உண்டு ஆண் பெண்னை தொடும் போதா
சுகம் எதில் மிக உண்டு பெண் ஆணை தொடும் போதா
தீர்வென்ன இதில் தீர்ப்பென்ன
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்

Advertisements

835 எண்ணமெனும் ஏட்டு நான் பாடும்

September 25, 2009

//எண்ணமெனும் ஏட்டு நான் பாடும் பாட்டு// என்ற அழகான பாடலை இந்த தளத்தின் தீவிர ரசிகர் ஹேமாஸ்ரீ கேட்டுள்ளார் அவர் விருப்பத்தின் பேரில் இந்த பாடல் நமக்காக. ஹேமா ஸ்ரீ மேடம் //வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது.. ஆமா.. கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது..// நீங்க கேட்ட பாட்டு அருமையான பாட்டு.. கரெக்ட் இது கரெக்ட். எனக்கு பிடித்த இனிமையான வரி இதோ //ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்.. ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம் தாளம் பாவம் அன்பைக் கூஊஊஊஊஊறு// அபாரம் போங்க.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:ரிக்‌ஷாமாமா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,டாக்டர்.எஸ்.ஜானகி
நடிகர்:சத்யராஜ்

எண்ணமெனும் ஏட்டு நான் பாடும் பாட்டு நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் .. அய்யய்யோ கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்க
என்னங்க பாடிறீங்க? அப்படியில்ல.. நான் பாடுறேன் பாருங்க

ம்ஹ்ஹ் வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காத்தேஏஏஏஏ

வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது..
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது..
கரெக்ட் இது கரெக்ட்

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தே
துணை வரவேண்டும் என்று தூது சொல்லத்தான்

மூண்டுவரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்

ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்

ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம் தாளம் பாவம் அன்பைக் கூஊஊஊஊஊறு

வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது..

யாரின் மனம் யாருக்கு என்று இறைவன் வகுத்தான்
இருமனம் சேர்வது இங்கு தேவன் சொல்லித்தான்

பூஜைக்கிது ஏற்றதென்று மலரைப் படைத்தான்
தலைவன் மாலை இன்று சூடிக்கொள்ளத்தான்

ஓர் நெஞ்சின் ராகம் தான் விழி பாடும் நேரம்தான்

ஓர் நெஞ்சின் ராகம் தான் விழி பாடும் நேரம்தான்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காஆஆற்று

வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது

கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

இது அன்பின் வேதன்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காத்தேஏஏஏஏ

வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது

கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

834 வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..

September 23, 2009

//வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ.. ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்// அழகான பல்லவியுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் சரணங்களின் ஓட்டத்தில் நம்மை கதிக்லங்கவைக்கும் இனிமை.. அபார இனிமை. இந்த தளத்தின் தீவிர ரசிகர் சென்னை.நாரயணன் அவர்கள் விருப்பப்பாடல் இது. எப்பவோ கேட்டபாடலை இப்போது நினவு படுத்தியதற்க்கு நன்றி நாராயணன் சார்.

படம்:நான் நானேதான்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
பாடலாசிரியர்:கவிஞர் கண்ணதாசன்
இசை:கே.வி.மகாதேவன்

Get this widget | Track details | eSnips Social DNA

வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்

வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ

புன்னகையில் பூத்தெழுந்த மல்லிகைப்பூக்கள்
அவள் பொன்னிதழ்கள் செம்பருத்தி பூத்திடும் பூக்கள்
புன்னகையில் பூத்தெழுந்த மல்லிகைப்பூக்கள்
அவள் பொன்னிதழ்கள் செம்பருத்தி பூத்திடும் பூக்கள்
கண் இரண்டும் நிறங்கள் காட்டும் சங்கு புஷ்பங்கள்
கண் இரண்டும் நிறங்கள் காட்டும் சங்கு புஷ்பங்கள்
அவள் கண்ணம் வெள்ளை தாமரையின் கவிதை வண்ணங்கள்
வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்

இடைதெரிய ஆடைக்கட்டும் இளையபூங்கொடி
அந்த இடையின் மீது நடனமாடும் அழகு மாங்கனி
இடைதெரிய ஆடைக்கட்டும் இளையபூங்கொடி
அந்த இடையின் மீது நடனமாடும் அழகு மாங்கனி
அடி அடியாய் எடுத்து வைக்கும் பஞ்சுப்பாதங்கள்
அடி அடியாய் எடுத்து வைக்கும் பஞ்சுப்பாதங்கள்
அவள் அழகை சேர்த்து இந்த நாட்டில் ஐந்து வேதங்கள்

வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்

வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்

Advertisements

833 ஏண்டி ராங்க் நெம்பர்

September 20, 2009

“ஏண்டி ஹலோ ராங்க் நெம்பர் ஆசை விடாதா” >> இசையன்பர்களே, இவ்வளவு பாடல்கள் இந்த தளத்தில் கேட்டுட்டே வந்துருக்கீங்க இதோ இந்த பாடல் உங்களுக்கு ஒரு பரீட்சை. இந்த பாடலின் படத்தகவல்கள் பாடல் காட்சி தருபவருக்கு அடுத்த சூப்பர் பாடல் ஒன்று பரிசாக சமர்ப்பணம் செய்யப்படும். போட்டியில கலந்துக்குங்க.

Get this widget | Track details | eSnips Social DNA

ஏண்டி ஹலோ ராங்க் நெம்பர் ஆசை விடாதா
டெல் சிலியன் ரீமர்?? மோகம் கொள்ளாதா
காலை மாலை இன்று காமன் லீலை
நான் தான் காண கட்டில் போட்டால் என்ன

ஏண்டி ஹலோ ராங்க் நெம்பர் ஆசை விடாதா
டெல் சிலியன் ரீமர்?? மோகம் கொள்ளாதா
காலை மாலை இன்று காமன் லீலை
நான் தான் காண கட்டில் போட்டால் என்ன

கொஞ்சும் கணாக்கள் தூஞ்சும் நெஞ்சம் மயங்க
சூடும் தள்ளாட மூடும் நீதான் வழங்க

ஆடும் செவ்வாழை வாடும் ஏதோ தவிப்போ
துள்ளூம் செம்மேனி சொல்லும் காதல் துடிப்போ

கன்னி சமைந்தால் கண்கள் துஞ்சாதோ

காளை அமைந்தால் கைகள் கொஞ்சாதோ

நாளூம் குளிர்தான் உன்னால் உண்டாச்சு

தோளூம் தொட்டாட மேலே என்னாச்சு

நானும் வசந்தம் கண்ணா நாளும் வளர்ந்தேன் பெண்ணா
இன்னும் ஆசை என்னென்ன

ஏண்டி ஹலோ ராங்க் நெம்பர் ஆசை விடாதா
டெல் சிலியன் ரீமர்?? மோகம் கொள்ளாதா
காலை மாலை இன்று காமன் லீலை
நான் தான் காண கட்டில் போட்டால் என்ன

யாரும் விடாத தாளம் நானும் படைத்தேன்
கண்ணீல் கவாளி பாடும் பெண்ணை பிடித்தேன்

இன்னும் விடாத ஏக்கம் நெஞ்சை எரிக்க
கைகள் படாத வேகம் எங்கே தடுக்க

தேனும் தராத போதை நீயாகும்

நீயும் வராத பங்கும் தேன் போகும்

ஆளில் நிலை?? நீ மோதும் பனி நான்

மேனி கெடாது தீண்டும் இதோ நான்??

இசையும் லயமும் கூட ஏங்கும் இடையோ ஆட
மோகம் பன்னீர் தூவாதா

கிஸ்மீ ஹலோ ராங்க் நெம்பர் நானோ ஓர் நிலாதான்
டேக் மீ யங் லவ்வர் சொர்க்கம் இதோ தான்

ஜோ ஜோ லாலி பட்டுப் பாப்பா லாலி
பூவே பொன்னே எந்தன் தோள் தான் ஜூலி

கிஸ்மீ ஹலோ ராங்க் நெம்பர் நானோ ஓர் நிலாதான்

டெல் சிலியன் ரீமர்?? மோகம் கொள்ளாதா

ராங் நெம்பர்.

Advertisements

832 தார் ரோட்டுல ஒரு தேர் போகுது

September 18, 2009

//தேரில் போகும் தேவதையே.. ரோட்டில் என்ன வேண்டுதலோ.. கோபம் கொண்ட பைங்கிளியே.. நாங்கள் கண்ட கண்மணியே.. பாவை பாவம் வந்தனமே.. பாடுங்கள் பாடுங்கள் பைரவி மந்திரமே// என்று அசத்தலாக துவங்கும் இந்த பாடல் மதுமதி என்ற படத்தில் வருகிறது அதிகபட்ச பாடல்கள் இதில் அபாரமாக இருக்கும் தேனிசை தென்றல் தேடி பிடிச்சு மெட்டு அமைத்திருப்பார். பாடலாசிரியர் காளிதாசன் அவர்கள் அதிக பாடல்களூக்கும் எழுதியிருக்கிறார். இனிமையான மெட்டை பாலுஜி தன் குரலில் வழக்கம் போல் வூடு கட்டி பாடியிருப்பார். எப்பவோ கேட்ட பாடல் இது இதோ உங்கள் செவிகளூக்கும்… கேட்டு மகிழுங்கள்.

தேரில் போகும் தேவதையே
படம்: மதுமதி
பாடியவர்கள்: பாலுஜி,
தேவா இசை: தேவா
பாடலாசிரியர்: காளிதாசன்

Get this widget | Track details | eSnips Social DNA

தேரில் போகும் தேவதையே
ரோட்டில் என்ன வேண்டுதலோ
கோபம் கொண்ட பைங்கிளியே
நாங்கள் கண்ட கண்மணியே
பாவை பாவம் வந்தனமே
பாடுங்கள் பாடுங்கள் பைரவி மந்திரமே

தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்கடா
ஹேய்.. தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்கடா

அலுங்காமலே உடல் குலுங்காமலே
இந்த அலங்காரி பின்னாலே போங்கடா

தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்ங்ங்கடா

கண்டவுடன் காதலென்று சந்திரபாபு ஆடினார்
ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ.. மச்சான்
கண்டவுடன் காதலென்று சந்திரபாபு ஆடினார்
காதல் ஒரு வேதம் என்று கண்ணதாசன் பாடினார்
கன்னிப்பொன்னு ஜொலிக்கிற வண்ணக்கிளி
ஹஹ்ஹ ஹஹஹ கண்டவுடன் அடிக்குது நெஞ்சுவலி ஹைய்யோ
இவ பூம்ப்பாதம் பார்த்தா பல சாம்ராஜ்ஜியம் மாறுமே

தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்ங்ங்கடா

அலுங்காமலே உடல் குலுங்காமலே
இந்த அலங்காரி பின்னாலே போங்கடா
தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்ங்ங்கடா வாங்கடா டோய்
மப்பு அடிக்குது நெஞ்சுக்குள்ளே
உள்ளே உள்ளே உள்ளே..
மஞ்சக்கிழங்கு பிஞ்சுக்குள்ளே..
உள்ளே உள்ளே உள்ளே..
வெத்தல பாக்கு வெச்சு ஹஹாஆ
மத்தள மேளம் தட்டு.. தட்டூ

சின்னப்பையன் சைட் அடிச்சான் வைகாசி படத்துல
டண்டன்ண்ட டன்ண்டன்னா ட்ண்ட்டக டண்டக ஹேய்
சின்னப்பையன் சைட் அடிச்சான் வைகாசி படத்துல
ஆத்தா உன் கோவிலுக்கு பூசாரி கிடைக்கல
சின்னக்கிளி தூதுபோ செல்லக்கிளி.. போலாம் ரைட்..
தெற்க்குதெரு மச்சானின் என்னப்படி ஹஹ
அடி காவேரி புது நதி நாம் சேர்ந்தாலே மதுமதி

தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்ங்ங்கடா
அலுங்காமலே உடல் குலுங்காமலே
இந்த அலங்காரி பின்னாலே போங்கடா
தார் ரோட்டுல ஒரு தேர் போகுது
மச்சான் காதோரம் பூச்சூட வாங்ங்ங்கடா

Advertisements

831 வானம் பூமி ரெண்டுக்கும்

September 18, 2009

//வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே.. அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்// பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது விஜயகாந்த், ராதிகா இருவரும் ரொம்ம்ம்ம்ப பிசியாக நடித்துக்கொண்டு இருந்த காலம் அந்த காலம். இந்த பாடல் சரணங்களில் அசத்தாலான தன்னம்பிக்கை தரும் வரிகளை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கும் பிடித்த வரிகள் இவை //அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே.. அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே.. அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே.. அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே.. உதய சூரியன் உதிக்கையிலே.. உலகம் எங்கும் ஒளி மழையே .. நல்லோர் போகும் பாதையிலே
எந்த நாளும் தோல்வியில்லை// ஆமாங்க ரொம்ப சரிதான் இந்த அருமையான் மெலோடி பாடலை நிங்களும் ஒரு தடவை கேட்டுடுங்களேன். //சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ// (வேறே ஒன்னுமில்லைங்க டாடா சொன்னேன் அவ்ளோ தான்) அடுத்த பதிவில் சந்திக்கலாம்ங்களா?

வானம் பூமி ரெண்டுக்கும்
படம்: நல்லவன்
நடிகர்:விஜயகாந்த், ராதிகா

Get this widget | Track details | eSnips Social DNA

ஹே ஹே ஹே..ஹேஏஏஏஏ….
ஹோ..ஹோ..ஹோ.ஹோ….
ஓஹோ..ஓஹோ..ஓஹோ….

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்…சச்சசம் சச்சசம் சச்ச்சம்..

பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக்கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே… ஹ
பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக்கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே
நாளைய உலகம் நம் கையிலே
நாளூம் உழைப்போம் வாழ்க்கையிலே
நல்லவனாக வாழ்ந்திடனும்
நண்மைகளை நீ செய்திடனும்

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்

டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ

லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்…ஹோய்.. ஹோய்..

சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ

அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே
அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே
உதய சூரியன் உதிக்கையிலே
உலகம் எங்கும் ஒளி மழையே
நல்லோர் போகும் பாதையிலே
எந்த நாளும் தோல்வியில்லை

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்

டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்…ஹோய்.. ஹோய்..

லல்லா லல்லா லுல்லூ லுல்லூ லுல்லூ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
ஹஹாஆ டுட்டூ டுட்டூ டுட்டூ குக்கூ குக்கூ குகுரு
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லா ஹஹ்ஹாஆஆஆ

Advertisements

830 உலகம் ஒரு வாடகை வீடு

September 17, 2009

//ஈரேழு ஜென்மம் இது ஒன்று போதும்.. இனி மேலும் காதல் வேண்டாமம்மா..
சுகம் வாங்க போனேன் சுமை தாங்கியானேன்.. இனி மேலும் பாரம் தாங்காதம்மா
எங்கே உன் வீடு அங்கே உன் வாழ்வு.. நலமாகத்தானே நான் வாழ்த்துவேன்..
இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி.. அம்மமா.. அம்மம்மா..அம்மம்மாஆஆ// இது போன்ற இனிமையான வரிகள் அடங்கிய ஒரேஏஏஏஏ சோகப்பாடல் இது. அது மட்டுமல்லாமல்,
இந்த பேப்பர் கட்டிங்கில் இருக்கும் தகவல் விட வேறே என்னத்த நான் எழுதி கிழித்து விடப்போகிறேன்?. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இது போன்ற மனதை மயக்கும் பாடல்கள் நிறைந்த படங்கள் பாடல்களூக்காகவே ஒட வேண்டும் என்று ஆசை. இந்த சோகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும் என்பது நிச்சயம்.

படம் : தையல்காரன்
நடிகர்கள்: பார்த்திபன், ஐஸ்வர்யா
பாடகர்கள்: டாக்டர்.பாலுஜி
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Get this widget | Track details | eSnips Social DNA

உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் என் சொந்தமா
காதல் ஒரு காவலைப் போலே
நினைச்சேன் அதை ஒரு காவிரி போலே
தூண்டில் போட்டதே என் பாவமா
இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி
அம்மமா.. அம்மம்மா..அம்மம்மாஆஆ

உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் என் சொந்தமா

யேஏஏஏஏ…. தானா தானாஆஆஆ
தானானன்னாஆஆ தானாஆஆஆஆஆ
தானானன்னாஆஆ தானாஆஆஆஆஆ
ஹோய்…தானானன்னாஆஆ தானாஆ

வேண்டாத பாசம் வரவேற்ற பாவம்
விடியாமல் போச்சே என் வானம் தான்
மீட்டாத வீணை நான் மீட்டும் வேளை
முடியாமல் போச்சே என் கானம் தான்
தேன் வார்த்த முல்லை என்னோடு இல்லை
கடந்தாச்சு எல்லை நேற்றோடு தான்
இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி
அம்மமா.. அம்மம்மா..அம்மம்மாஆஆ

உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் என் சொந்தமா

ஈரேழு ஜென்மம் இது ஒன்று போதும்
இனி மேலும் காதல் வேண்டாமம்மா
சுகம் வாங்க போனேன் சுமை தாங்கியானேன்
இனி மேலும் பாரம் தாங்காதம்மா
எங்கே உன் வீடு அங்கே உன் வாழ்வு
நலமாகத்தானே நான் வாழ்த்துவேன்

இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி
அம்மமா.. அம்மம்மா..அம்மம்மாஆஆ
உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் ஹஹ என் சொந்தமா
வந்த பேரெல்லாம் என் சொந்தமா

Advertisements

829 தகடு தகடு தகர தகடு

September 16, 2009

”மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு” ஆமாங்க தற்போது வரும் தொலைகாட்சி மெகா சீரியல்களிலோ அல்லது சினிமாக்களில்லோ நாயகன் அல்லது வில்லன்கள் தண்ணி அடிக்க ”சிட்டிங்” போட்டார்களென்றால் உடனே மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று ஒரு ப்ளாஷ் செய்தியாக போடுகிறார்கள். இப்படி மீடியாக்களில் போடவேண்டும் என்று இந்தியாவில் சட்டமே உள்ளது. நம்ம ப்ளாக்கரிலும் பின்பற்றினால் என்ன என்று? முதல் முறையாக என் மனப்பட்சி சொல்லுசுங்க. அதனால இந்த பாட்டுலேயே போட்டுலாம் என்று துணிஞ்சுட்டேன். ஆமாங்க நடிகர் சத்யராஜ் அவர்களின் பேவரிட் வார்த்தையான தகடு தகடு என்ற சொல்லை வெச்சு அதுவும் பாலுஜிக்கே ஒரு பாட்டை ஜீவா படத்துல தந்துட்டாங்க அதுவும் இந்த வரிகளில் //பூமியே சுழலுது போட்டுட்டு ஹஹ புரளூது பாவம்.. சமுத்திரம் அலையுது குடிஸ்ஸிட்டு ஆடுது.. சல்பேட்டா நீ புல் போட்டா சுதி ஏறும் ஏறும் என்னென்னமோ கிளம்புது// குடிச்சிட்டுன்னு சாதாரணமாத்தான் நாம் சொல்லுவோம் மறுபடியும் கவனமா கேளுங்க சார் ”ச்” க்கு பதில் ஸ்ஸிட்டு என்று எவ்வளவு மெர்ஜாய்யிட்டு பாடியிருகார்… கலக்கல் பாட்டு சார் இது (நான் சொன்ன கலக்கல் வேறேங்க) ஹி..ஹி..ஹி..

படம்:ஜீவா
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:சத்யராஜ்

Get this widget | Track details | eSnips Social DNA

தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா

தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா டேய்

ஓடும் ஆறெல்லாம் என் சாமி மில்லி ஆகாதோ உஹஹ்ஹ்ஹா
காடு மேடெல்லாம் தண்ணீராய் கள்ளூ பாயாதோ ஹூஊஊஊ
பூமியே சுழலுது போட்டுட்டு ஹஹ புரளூது பாவம்
சமுத்திரம் அலையுது குடிஸ்ஸிட்டு ஆடுது
சல்பேட்டா நீ புல் போட்டா சுதி ஏறும் ஏறும் என்னென்னமோ கிளம்புது

தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய்
தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
தகடு தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா

கோழி கூவாது எப்போதும் சேவல் ஆகாது ஹஹ்ஹாஆ ஹஹ்ஹா
சேவல் ஆனாலும் அப்போது முட்டை போடாது ஆமா
ஆட்டுக்கும் நாலு கால் மாட்டுக்கும் நாலு கால்
யாருக்குஏஏஏ தெரியுது நான் சொன்னா புரியுது
அண்ணாசி என் ஆராய்ச்சி நீ கேளூ இன்னும் என்னென்னமோ இருக்குது

தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டாய்யா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய்

தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
ம்ஹ்ம்… ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ம்…

ஸ்டில்ஸ் உதவி: நன்றி, ஜீவாஒளிகூடம்

Advertisements

828 வானம்பாடி பாடும் நேரம்

September 15, 2009

//வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்.. அந்தி பொன்வானம் எங்கே என் மேகம் சிந்து பாடுதே// பாலுஜி, சித்ரா இருவரின் குரல்களில் இனிமையான மெட்டில் அழகான வரிகளில் துவங்கும் இந்த பாடல் மனதை என்னென்னமோ செய்யும் ரொம்ப நாள் கழித்து கேட்கும் பாடல். உங்களூக்கும் வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்.

படம்: எல்லாமே என் தங்கச்சி
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்: ராம்கி,ராதா, பாண்டியராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்

அந்தி பொன்வானம் எங்கே என் மேகம் சிந்து பாடுதே

ஆஆஆ அந்த நேரத்தில் மண் மீது தூவ சந்தம் போடுதே

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்

நானும் நீயும் சேரும்போது தேகம் தீபாவளி

பூவும் பூவும் மோதும்போது ராகம் கீதாஞ்சலி

நடையை பார்த்து இடையை கேட்டு
தாளம் உண்டானது அன்பே தேகம் திண்டாடுது

வானம்பாடி பாடும் நேரம்

வானம் வாழ்த்தி பூவை தூவும்

பூவின் மேலே பாவும்?? காற்று பாடும் பூபாளமே

சேலை மூடும் சோலையாகும் காமன் போராட்டமே

விழியின் ஓரம் பொழியும் ராகம்
யாரும் பாடாதது அன்பே பூமி கேளாளது

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்

அந்தி பொன்வானம் எங்கே என் மேகம் சிந்து பாடுதே

ஓஓஓ அந்த நேரத்தில் மண் மீது தூவ சந்தம் போடுதே

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்

Advertisements

827 வணக்கம்மய்யா வனக்கம்

September 10, 2009

”வணக்கமய்யா வணக்கம்” இது ஒரு நூறு சதவீதம் பிள்ளையார் பக்தி பாடல். இந்த பாடலை பிள்ளையார் சதூர்த்திக்காக பதிவு செய்ய தேர்வு செய்த பாடல். மறந்துடோம்ல.. ஹி.ஹி. அதனாலென்ன தினமும் தானே பிள்ளையாரை நினைக்கிறோம். இப்ப கேளூங்க பாடலை மேலும், இந்த பாடல் வாலிபமே என்ற படத்தில் வருகிறது. படம் பார்த்ததாக யாருக்காவது நினவு இருக்கிறதா? இருந்தால் படக்காட்சியை விளக்குங்கள் நான் பார்க்காத படங்களில் இதுவும் ஒன்று. அழகான வரிகள் கொண்ட பாடல். வழக்கம் போல் பாலுஜி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

படம்: வாலிபமே
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,குழுவினர்

Get this widget | Track details | eSnips Social DNA

ஜெய் ஜெய் கனேசா ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் விநாயகா ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் கனேசா ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் விநாயகா ஜெய் ஜெய்

வணக்கமய்யா உனக்கு அய்யா செய்தோமய்யா தேவா
இங்கு ஏழை இங்கே உள்ளம் தானே பூத்திருக்கு பூவா
நல்லவங்க வாழ்க்கையிலே காவல் வரவேணுமய்யா
ஏழைகளை ஆதரிச்சு ஆசிதர வேணுமய்யா..
ஹோஓஒ.. ஹோஓஒ…ஹோஓஓஓஓஓஓஒ

வணக்கமய்யா உனக்கு அய்யா செய்தோமய்யா தேவா
இங்கு ஏழை இங்கே உள்ளம் தானே பூத்திருக்கு பூவா

சின்னஞ்சிறு சிங்காரி இது பிள்ளையாரை இப்போது இங்கே
சாரம்தான் தாங்கி செல்லுது பாவம்.. ஹேய் ஹேய்
முத்துவகை இன்றைக்கு இங்கே பொழியதய்யா முகத்தில் இங்கே
ஹோஓஒ.. ஹோஓஒ…வாழ்க வாழ்க ஹேய் ஹேய்
அம்பாரிதான் தூக்குகிற எந்த வரம்… அய்யயோ அய்யா
யாருக்குமே கிடைக்குமா இந்த தினம்… அய்யயோ அய்யா
இனிக்குதய்யா இனிக்குதய்யா இதயம் இங்கே ஏஏஏஏ

வணக்கமய்யா உனக்கு அய்யா செய்தோமய்யா தேவா
இங்கு ஏழை இங்கே உள்ளம் தானே பூத்திருக்கு பூவா

பணத்தை அடுக்கி சும்மா சனம் போடுற ராணி நீயானாலும்
நெஞ்சில் கொள்ளாதே வீணே கர்வம் ஹேய் ஹேய்
இமயம் கூட இடிந்து விடும் எதற்கும் ஒரு காலம் வரும்
என்றே நீ என்ன வேண்டும் ஹேய் ஹேய் ஹேய்

தும்பிகையே எங்களது நம்பிக்கையே அப்பனே விநாயகா
காலங்களை நீக்கும் உன் பாதங்களே அப்பனே விநாயகா
தினம் உன்னை வலம் வரும் பூலோகமேஏஏஏஏ

வணக்கமய்யா உனக்கு அய்யா செய்தோமய்யா தேவா
இங்கு ஏழை இங்கே உள்ளம் தானே பூத்திருக்கு பூவா
அடடடட நல்லவங்க வாழ்க்கையிலே காவல் வரவேணுமய்யா
ஏழைகளை ஆதரிச்சு ஆசிதர வேணுமய்யா..
ஹோஓஒ.. ஹோஓஒ…ஹோஓஓஓஓஓஓஒ

வணக்கமய்யா உனக்கு அய்யா செய்தோமய்யா தேவா
இங்கு ஏழை இங்கே உள்ளம் தானே பூத்திருக்கு பூவா

ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
விநாயகா ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
விக்னேஸ்வரா ஜெய் ஜெய் ஜெய்

Advertisements