Archive for October, 2009

852 டாக்டர்.எஸ்.பி.பிக்கு பி.சுசிலா விருது

October 31, 2009


வெள்ளைகுயில் பி.சுசீலா ட்ரஸ்ட் மூலம் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்க்கு நவம்பர் 14ல் சென்னையில் சாதனையாளர் விருது. விவரங்களுக்கு படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

செய்தி உதவி: நன்றி தினகரன் நாளிதழ்
போட்டோ உதவி: இணைய தளத்தின் மூலம் கோவை எஸ்.பி.பி ரசிகர்கள் சந்திப்பு போட்டோ எடுத்தவர்: ஸ்ரிதர், சென்னை

எஸ்.பி.பி.க்கு பி.சுசீலா அறக்கடளை விருது

பின்னணி பாடகி பி.சுசிலாவின் அறக்கட்டளை விருது, இந்தாண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. இது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:

திரையுலகில் சாதனை படைத்த இசை கலஞர்களூக்கு எனது அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சுசீலா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகி பெற்றார். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். ரூபாரய் 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ஆம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் விழா நடக்கிறது. பாலமுரளீக்கிருஷ்ணா, டி.எம்.எஸ், எம்.எஸ்,வி,,இளையராஜா, எஸ்.ஜானகி,பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று யூ.கே.முரளி இசையில் பாடுகின்றனர். இதில் திரளூம் நிதியில் பாதி, ஆர்ந்திர வெள்ள நிவரணத்டுக்கு வழங்கப்படு, தலைமை தாங்குவதற்க்கு மகல்ஹாசனை அழைக்க உள்ளேன். இவ்வாறு பி.சுசீலா கூறினார்.

Ingiaglitz website Function Slideshow here

Covai and All India Dr.SPB Fans Thanks to http://www.indiaglitz.com site

Advertisements

851 ஒத்தையாய் நானிருந்தேன்

October 28, 2009

எபப்வோ என்னிடம் இந்த பாடலை விரும்பி கேட்ட தீவிர பாலுஜி ரசிகர் திரு.கிருஷ்னன் அவர்களூக்காக மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்து தான் அனுபவியுங்கள் அன்பர்களே.
//பந்தம் பாசம் வேணாம் என நானும் சொன்னது அப்போது.. சொந்தம் சொர்க்கம் என்று ஒரு ஞானம் வந்தது இப்போது.. ஞானம் வந்தது இப்போது..ஒரு ஞானம் வந்தது இப்போது
ஓஓஓஒ..ஓஓஓஓ..ஓஓஓஓ.. ஆனந்தம் என்பது ஆரம்பமானது வீடு தேடியே வந்தது.. வாழ்வுதான்.. ஹ ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல.. ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல.. நெஞ்சுக்குள் ஏதோ ஒரு நேசம் பூக்க.. நேசத்த பத்திரமா நானும் காட்ட
பாசம் வச்சு பேச ஒரு ஆத்தா வந்தாச்சு.. பழம் பாட்டு தினம் பாட ஒரு தாத்தா வந்தாச்சு
ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல.. ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல// அழகான வரிகள் உள்ள பாடல் பொதுவாகவே தையல்காரன் படத்தில் பாடல்கள் அனைத்தும் அபாரமாக இருக்கும் தினம் தினம் வானொலி கேட்கும் நானே இந்த பாடல்களை பல தடவை எதிர்பார்த்து ஏமாந்துருக்கேன். எந்த வானொலியிலும் ஒலிப்பரப்புவதில்லை. குறிப்பாக இந்த தளத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட இந்த படத்தின் இனிமையான மெலோடி பாடல் மை மை கண் மை பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பாடலை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை பாடலை கேட்காதவர்கள் இங்கே கேட்கலாம்.

படம்:தையல்காரன்,
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி,எஸ்.பி,சைலஜா
நடிகர்கள்:பார்த்தீபன், ஐஸ்வர்யா

Get this widget | Track details | eSnips Social DNA

ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல
ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல
நெஞ்சுக்குள் ஏதோ ஒரு நேசம் பூக்க
நேசத்த பத்திரமா நானும் காட்ட
பாசம் வச்சு பேச ஒரு ஆத்தா வந்தாச்சு
பழம் பாட்டு தினம் பாட ஒரு தாத்தா வந்தாச்சு
ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல
ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல
தன்னனா தான்னா தான்னா நான்னா
தன்னனா தான்னா தான்னா நான்னா

அழகா பூனை ஒன்னு பூந்தது வீட்டுல
அதுக்கும் பிள்ளை குட்டி ஏழு எட்டும் ஆயாச்சு
இனிமே யாரும் வந்தா படுக்கனும் ரோட்டுல
ஹவுஸ்புல்லுன்னு போர்டு ஒன்னு போட்டாச்சு

விளக்கு ஏத்தி வைக்க தங்கச்சியும் வந்தேனே
என்னத்தான் வாழவைக்கும் அண்ணாச்சியும் கண்டேனே
உறவுகள் ஏதும் வர கூடுதுன்னு சொன்னாரு
சொன்னவரு பாவம் இன்னிக்கி மாட்டிக்கிட்டு நின்னாரு

உறவின் சொகத்தை இப்பத்தான் பார்க்குற
ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல
ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல
தன்னனா தான்னா தான்னா நான்னா
தன்னனா தான்னா தாராரா

மன்மதலீலையை வென்றோர் உண்டோ
நாடக பாட்டுக்கு நித்தமும் பாட இதுதான் ஏற்ற இடமாச்சு
ஈரெண்டு மாசங்கள் நான் சுமக்காம எனக்கொரு மகன் தான் கிடைச்சாச்சு
நேசமும் பாசமும் வேணும் ஞானும் பரஞ்சது சரியல்லோ
கேரள பெண்குட்டி பேச்சை நீயும் கேட்பது முறையல்லோ

பந்தம் பாசம் வேணாம் என நானும் சொன்னது அப்போது
சொந்தம் சொர்க்கம் என்று ஒரு ஞானம் வந்தது இப்போது
ஞானம் வந்தது இப்போது..ஒரு ஞானம் வந்தது இப்போது
ஓஓஓஒ..ஓஓஓஓ..ஓஓஓஓ
ஆனந்தம் என்பது ஆரம்பமானது வீடு தேடியே வந்தது.. வாழ்வுதான்
ஹ ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல
ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல
நெஞ்சுக்குள் ஏதோ ஒரு நேசம் பூக்க
நேசத்த பத்திரமா நானும் காட்ட
பாசம் வச்சு பேச ஒரு ஆத்தா வந்தாச்சு
பழம் பாட்டு தினம் பாட ஒரு தாத்தா வந்தாச்சு
ஒத்தையாய் நானிருந்தேன் நேத்து வீட்டூல
ஒவ்வொன்னா சொந்தம் வர சேர்த்தேன் கூட்டுல
தன்னனா தான்னா தான்னா நான்னா
தன்னனா தான்னா தான்னா நான்னா

850 உன்னை நான் தொட்டதுக்கு

October 27, 2009


//அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே.. அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை.. வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா.. வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா.. வெட்கத்துக்கு பயந்தமனம் துக்கங்கள சுமக்குதடா
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்// இந்த கலக்கல் வரிகள் ஊர் மரியாதை படத்தில் வருகிறது. படம் பார்க்கவில்லை இருந்தாலும் சோகசூழ்நிலைக்கான பாடல் பாலுஜி ரொம்பத்தான் மனச பிழியறார். சுகமான சோகப்பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:ஊர் மரியாதை
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சரத்குமார்,நெப்போலியன்

Get this widget | Track details | eSnips Social DNA

உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்ச வண்டி மானம் கெட்டு போன வண்டி
உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்ச வண்டி மானம் கெட்டு போன வண்டி
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

கொஞ்சும் கிளி மனசு வச்சா குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா கொலைகாரன் ஆயிருப்பேன்
கொஞ்சும் கிளி மனசு வச்சா குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா கொலைகாரன் ஆயிருப்பேன்
தாங்காத மனசால தத்தளித்து தவிக்கிறேன்டி
தாங்காத மனசால தத்தளித்து தவிக்கிறேன்டி
தப்பு ஏதும் செய்யாமலே தண்டனைக்குள் விழுந்தவன்டி
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
ஹஹ இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே
அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை
அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே
அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை
வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா
வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா
வெட்கத்துக்கு பயந்தமனம் துக்கங்கள சுமக்குதடா
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்ச வண்டி மானம் கெட்டு போன வண்டி
உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்ச வண்டி மானம் கெட்டு போன வண்டி
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

849 கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்

October 24, 2009

//வரிசை பல்முத்து அழகு பூங்கொத்து.. நகையில் நான் ஆடவா.. வதன செவ்வந்தி பதியும் வண்ணத்தில்.. மெதுவாய் நான் பாடவா// ஆஹா..ஆஹா அருமை இவ்வளவு இனிமையான வரிகளுடன் பாலுஜி குரலில் கேட்க பிரம்மிப்பாக உள்ளது. இதுபோன்ற பாடல்கள் படிக்கும் போது கேட்டது இது போல் இனி எப்போது வருமோ? கேட்டு மகிழுங்கள்.

படம்:மேயர் மீனாட்சி
இயக்குனர்: மதுரை திருமாறன்
தயாரிப்பாளர்: அபிராமி மூவீஸ்
நடிப்பு: ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா
இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்
வருடம்: 1976

Get this widget | Track details | eSnips Social DNA

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ – இது
சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ

அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவ பெண்னாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ

இது அத்தானின் முத்தாரமோ – இந்த
அத்தானின் அச்சரமோ
இது அத்தானின் முத்தாரமோ – இந்த
அத்தானின் அச்சரமோ

ராஜாவின் வட்டாரமோ – இந்த
ராஜாத்தி வித்தாரமோ

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

வரிசை பல்முத்து அழகு பூங்கொத்து
நகையில் நான் ஆடவா
வதன செவ்வந்தி பதியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா

அடிமை பெண்னேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கை உண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா

நான் கண்ணாடி பார்த்தாலென்ன

அதை கண்ணத்தில் பார்த்தாலென்ன

நெஞ்சத்தை பார்த்தாலென்ன

அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்

அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

மணமகன்
மணமகள்
மணவறை கோலமே

848 வாடியம்மா பொன்மகளே

October 22, 2009

நம்ம நாட்டாமை விஜயகுமார் நடித்த படமுங்கோ.. பாடல் துவக்கதிலே அழகான தொகையாறாவுடன் துவங்கி தொடர்ந்து //வெல்கம்…. ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ// என்று எட்டரை கட்டை சுதியில் பாலுஜி துவங்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொண்டது தொடர்ந்து // ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ.. வடிவேலன் தேவி வருக
பதினாரு ஆண்டு ரதிதேவியாக.. மணிமாலை சூடி வருக// என்று அழகான வரிகளில் பாடல் நம் மனதையும் ஆக்ரமித்து கொண்டு அதிரவைக்கிறது. பாடல் சில இடங்களில் பிண்ணனி இசை ரசிக்கும் படி இருக்கிறது அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே என்று தொடர்ந்து பாடவைக்கவும் செய்கிறது. அருமை அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:பாலூட்டி வளர்த்தக்கிளி
பாடியவர்கள்.எஸ்.பி.பி, பி.சுசீலா
நடிகர்கள்: விஜயகுமார், ஸ்ரீபிரியா

Get this widget | Track details | eSnips Social DNA

எட்டு வகை திருமகளூம் ஒட்டு மொத்தமாக
அரன்மணையில் குடிபுகுந்தாள்
தெற்கு முகமாக நின்று வலது காள் எடுத்துவைத்து
ஸ்ரீ தேவி மனை புகுந்தாள்
யூ ஆர் வெல்கம்..

வெல்கம்…. உஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி வா வா வா வா

ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாரு ஆண்டு ரதிதேவியாக
மணிமாலை சூடி வருக

தொட்டிலுக்குள் என்னை இட்டு
என் அன்னை தாலாட்டினால்
கட்டிலுக்குள் உன்னை வைத்து
உன்னுடன் நீராட்டினால்

வாடியம்மா உஹ்ஹ்ஹு
பொன்மகளே உஹ்ஹ்ஹு
வந்த இடம் உஹ்ஹ்ஹு
நல்ல இடம் உஹ்ஹ்ஹு
ராணி மகள் ராணியடி வா வா வா வா

மணி மேடை போட்டு வலியோடு நானும்
விழி போல பெற்ற மகளே
மகராஜன் வீடும் நம் வீடுதானே
இனியேது வாழ்வில் கவலை

அத்தையம்மா கொஞ்சம் நில்லு
என்னுடன் நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தாள்
வேறென்ன நான் சொல்லட்டும்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி வா வா வா வா

847 தழுவி தழுவி வரும் அருவி

October 21, 2009

//தழுவி தழுவி வரும் அருவி குளிரு..என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே..ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே..அருகில் அருகில் வந்து உருகி உருகி..நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே..நான் மறுநாளூம் இது போலே..மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே// பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை பல்லவி மற்றும் அனுபல்லவியும் சேர்த்து பாடலாசிரியர் அனுபவிச்சு எழுதியிருக்கிறார் போல ஊட்டி அல்லது கொடைக்கானல் சென்று ரூம் போட்டு எழுதியிருப்பாரோ? அமர்க்களம் போங்கள் அதுவும் பாலுஜியின் குரலில் சொல்லவும் வேண்டுமோ. கேட்டு அனுபவியுங்கள் அன்பர்களே…

படம்:ஒயிலாட்டம்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:தேவா
இயக்குநர்:ஆர்.சுந்தரராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே

மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே
நான் மறுநாளூம் இது போலே
மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே

தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே

அந்திச் செவ்வானம் மஞ்சள் செந்தூர ஆடை போர்த்துதே
ஆடை கொண்டாடும் பாவை நெஞ்சுக்குள் ஆசை வேர்க்குதே
அந்திச் செவ்வானம் மஞ்சள் செந்தூர ஆடை போர்த்துதே
ஆடை கொண்டாடும் பாவை நெஞ்சுக்குள் ஆசை வேர்க்குதே

தொட்டு தொட்டு கேக்குமே சொர்க்கம் எட்டிப் பார்க்குமே
தொட்டு தொட்டு கேக்குமே சொர்க்கம் எட்டிப் பார்க்குமே
தாகம் கொண்ட மேகமே பாசமழை தூவுமே

தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே

ஹேய்.. ஹெய் ஹெய்..
ஹேய்.. ஹெய் ஹெய்..

கண்ணில் சந்தோசம் மின்னல் உண்டாகும் காலம் வந்ததே

பன்னீர் செண்டாக பொன்மான் நெஞ்சுக்குள் தாகம் என்றதே

ஆஆஆஆ

கண்ணில் சந்தோசம் மின்னல் உண்டாகும் காலம் வந்ததே

பன்னீர் செண்டாக பொன்மான் நெஞ்சுக்குள் தாகம் என்றதே

அந்திப்பகல் யாவுமே சொந்தம் இனி பேசுமே
அந்திப்பகல் யாவுமே சொந்தம் இனி பேசுமே

சென்பகப்பூ வாசமே இன்பம் அள்ளிப்பூசுமே

தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே ஹஹஹஹ்
அருகில் அருகில் வந்து உருகி உருகி அஹஹ
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே

மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே
நான் மறுநாளூம் இது போலே
மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே

தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே ஹஹஹஹ்
அருகில் அருகில் வந்து உருகி உருகி அஹஹ
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே

846 ராஜமோகினி சுபராக தேவி நீ

October 20, 2009

அமர்க்களமான மெட்டுடன் பல்லவியும் சேர்ந்து பாடல் மனதை திருடுகிறது. இந்த பாடல் படத்தை போலவே வெளியே தெரியவே இல்லை. எப்பவோ வானொலியில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா ஒலிப்பரப்பினார். இப்பேர்பட்ட மெலோடி வெளியே தெரியாம இருக்கே என்று உடனே சேமித்து வைத்தேன். இப்போது தான் பதிய நேரம் கிடைத்தது. அழகான வரிகள் இனிமையான, அமைதியான இசை பாடல் கேட்க சுகமாக இருக்கிறது. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

படம்: காதல் ஓய்வதில்லை
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: இசைஞானி இளையராஜா
இயக்குநர்: மணிவண்ணன்

Get this widget | Track details | eSnips Social DNA

ராஜமோகினி சுபராக தேவி நீ
ராஜமோகினி சுபராக தேவி நீ

தடுத்தேன் குடங்கள்
இடைமேல் சுமந்து போகும்
ராஜமோகினி சுபராக தேவி நீ

காதல் என்றும் ஓய்வதில்லை கவிதை சொன்னது

காதல் கண்ணில் தூக்கம் இல்லை கவிஞர் சொன்னது

இரு கண்ணில் உன் பேரை எழுதி பார்க்கிறேன்

உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்

எந்த நாளும் எந்தன் ஜீவன்

நீயேஏஏஏஏ…..ஏஏஏஏ

ராக ராஜனே.. நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும் இசையில் குறுதி சேர்க்கும்
ராக ராஜனே.. நீ எந்தன் ஜீவனே

நாணம் கொண்டு போகும் பெண்மை என்னை மீறி போகுமா

வேகமாக போகும் மேகம் வானம் தாண்டி போகுமா

மடிமீது தலை வைத்து மயங்கப் போகிறேன்

விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன்

உன்னை அள்ளி கொண்ட பின்பு

என்னை அள்ளி கொண்ட பின்பு

இனியேது..

ராஜமோகினி சுபராக தேவி நீ
ராஜமோகினி சுபராக தேவி நீ

இதயம் துடிக்கும் இசையில் குறுதி சேர்க்கும்
ராக ராஜனே.. நீ எந்தன் ஜீவனே

சுபராக தேவி நீ

845 ஜாம் ஜாம் என்று சந்தோசமா

October 16, 2009

//காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு… ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு.. நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு.. அந்த நாலோரு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு… ஜாம் ஜாம் என்று சந்தோசமா.. நீ தளிர் நடை போடடா ராஜபீமா//

பாலுஜி தீவிர ரசிகர்கள் அனைவருக்கும் தீபவொளி திருநாள் நல்வாழ்த்துக்கள். பாலுஜி நறுக்குத்தெரித்தார் போல் நாலு வரிகள் பாடினாலும் கலக்கல் மேலே உள்ள வரிகளைத்தான் குறிப்பிடுகிறேன். அமர்க்களமான பாடல் ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன் தித்திக்கும் சுவைகளீலே மூழ்கி தீபாவளி கொண்டாடும் அன்பு உள்ளங்களூக்கு இந்த ஜாம் ஜாம் பாடல் கூட ஓர் தித்திப்பின் சுவை தான். மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: யானை வளர்த்த வானம்பாடி மகன்
பாடியவர்கள்:எஸ்.பி.பி.பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்

ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

தாயில்லா பிள்ளைப்போல் காடும் கிடக்கு
அதை தாலாட்டா வானிலே மேகம் இருக்கு
தாயில்லா பிள்ளைப்போல் காடும் கிடக்கு
அதை தாலாட்டா வானிலே மேகம் இருக்கு

தனியா உன்னைப்போல் கோயிலிருக்கு??
அதை வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு

ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா

காடெங்கும் உண்டாகும் சொந்தம் இருக்கு??
காற்றாலை கூட்டத்திலே சந்தம் இருக்கு??
காடெங்கும் உண்டாகும் சொந்தம் இருக்கு??
காற்றாலை கூட்டத்திலே சந்தம் இருக்கு??

உங்களூக்கும் எனக்கும் பந்தம் இருக்கும்
இந்த உறவை விலை சொல்லி இன்னும் இருக்கு

நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை பார்த்தாயே முன்னாலும் சொல்லலாமா?
தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை பார்த்தாயே முன்னாலும் சொல்லலாமா?
வாயார முத்தம் ஒன்று இடலாமா
என்னை வளர்த்ததுக்கு பரிசு ஒன்னு தரலாமா?

ஆஆஆஆ..ஆஆஆஆ..ஓஓஓஒ.. ஓஓஒஹோ

காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு
காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
அந்த நாலோரு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு

ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

844 முத்து மணியே முத்து மணியே

October 16, 2009

//கிளியங்க்காட்டில்… ஆஆஆஆ… கிழங்கு பறிச்சா… ஓஓஓஒ.. கிழங்கு பறிச்ச குழியில் எனது மனசு பொதச்ச்ச்ச்ச.. சேனைகிழங்காய்… ஹஹஹஹஹ.. சேலைகிடந்தாய்??? ஹோஓஓஓஓ.. கேட்டு சிரிச்சே கேனச் சிரிக்கி பாட்டு படிச்சா.. நான் பார்த்த பொண்ணு நலுங்காத கண்ணு.. நான் பார்த்த பொண்ணு மலைவாழை கண்ணு.. ஆகாயம் போலே எட்டாத ஒன்னு.. முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா.. முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா.. இந்த வீரய்யனை பார்த்து ஏன் விட்டு வச்ச நாத்து.. இந்த விஜயனை பார்த்து நீ குத்த வச்ச கீத்து… ஆஆஆஆ.. ஆஆஆஆ.. முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா// என்று இரு இமயங்கள் அதாங்க தாஸண்ணாவும் பாலுஜியும் இருவரும் சேர்ந்து அமர்க்களமான பாடல் இது. மேலே உள்ள வரிகளில் படிப்பதற்கு சிரம்மாக இருக்கும் பாடலில் கேளூங்க என்னவொரு எனர்ஜிடிக் இருவரிடமும். அபாரம் போங்க இது போன்ற பாடல்கள் கேட்டு ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு இன்னும் இது போன்ற புதிய பாடல்கள் கேட்க எத்தனை யுகங்களோ?.. கேட்டு மகிழுங்கள்.

படம்: மலைச்சாரல்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.கே.ஜே யேசுதாஸ்
வருடம்: 1990

Get this widget | Track details | eSnips Social DNA

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

இந்த வீரய்யனை பார்த்து ஏன் விட்டு வச்ச நாத்து

இந்த விஜயனை பார்த்து நீ குத்த வச்ச கீத்து

ஆஆஆஆ.. ஆஆஆஆ

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

கிளியங்க்காட்டில்… ஆஆஆஆ
கிழங்கு பறிச்சா… ஓஓஓஒ
கிழங்கு பறிச்ச குழியில் எனது மனசு பொதச்ச்ச்ச்ச

சேனைகிழங்காய்… ஹஹஹஹஹ
சேலைகிடந்தாய்??? ஹோஓஓஓஓ
கேட்டு சிரிச்சே கேனச் சிரிக்கி பாட்டு படிச்சா

நான் பார்த்த பொண்ணு நலுங்காத கண்ணு

நான் பார்த்த பொண்ணு மலைவாழை கண்ணு

ஆகாயம் போலே எட்டாத ஒன்னு

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

இந்த வீரய்யனை பார்த்து ஏன் விட்டு வச்ச நாத்து

இந்த விஜயனை பார்த்து நீ குத்த வச்ச கீத்து

ஆஆஆஆ.. ஆஆஆஆ

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

ஓடக்கரையில்…. ஆஆஆஆ
வாடைக்குளிரில்….ஓஓஓஓஒ
என்ன நினைச்சு கண்ணு முழிச்சு காத்து கிடந்தாஆஆ

வேடந்தொரையில்??… ம்ம்ம்ம்
விடியும் வரையில்….ஐயய்யோஓ
கன்னிவேட்டில் கன்னச்சூட்டில் காதல் கொடுப்பா

ஜடை தொட்டபோது அனலாச்சு மூச்சு யப்ப்பா

இடை தொட்டபோது வரவில்லை பேச்சு

அவ தொட்டபோது விவகாரமாச்சு அடடடட

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

இந்த வீரய்யனை பார்த்து ஏன் விட்டு வச்ச நாத்து

இந்த விஜயனை பா..ர்த்து நீ குத்த வச்ச கீத்து

ஆஆஆஆ.. ஆஆஆஆ

முத்துமணியே முத்துமணியே முத்தமிட வரலாமா

முந்தி விரிச்சு பந்தி நடத்த உத்தரவு பெறாலாமா

அட பு..த்..தி..கெட்டதாலே அடி பொங்குதடி மூடு

அட உன் த..ங்..க உடல் மேலே என்ன தாவணியை போடு

843 மீனா மீனா நீ என்ன மீனா

October 16, 2009

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:கனவுக்கன்னி
பாடியவர்கள்:பாலுஜி, சித்ரா
இசை:மரகதமணி

மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா
தண்ணீரும் நம்மை தொட்டதா
பன்னீரும் வாசம் கண்டதா
கனவு கன்னியே நிலவு தான் தண்ணீரில் ஆடுது
மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா

ஹாஆஆ நிலா… நிலா..
அல்லி மெல்ல வந்து பள்ளி கொண்டு பெண்மைக் கண்டதோ
துணையை தேட தேட உன்னை கண்டதோ

ஓஓஓஒ.. கண்னே.. கண்ணே..
உனது அந்தரங்கம் என்னை வந்து அள்ளீக்கொண்டதோ
துணிந்து அத்து மீறி ஆசை வந்ததோ

உன்னைக் கண்ட பின்பு என் கண் மூடினேன்
தேவலோகம்?? வேண்டுமென்று நான் வாடினேன்

இருவரும்… நீந்துவோம்…
சுகம் என்ற கரை சேறுவோம்…
எனது புன்னகை ராணியே
புது ஜென்மம் கொள்ளலாம்..

மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா

ம்வாஆஆஆ அன்பே.. அன்பே..
எனது கண்கள் காட்சி யாவும் கனவு இல்லையே
இங்கென்ன இரவும் இல்லை பகலும் இல்லையே

வாஆஆஆ…பெண்ணே.. பெண்ணே..
நமது காதல் வீட்டில் எந்த நாளூம் கதவு இல்லையே
எப்போதும் உறவு உண்டு பிரிவு இல்லையே

பெண்மை கொண்ட அர்த்தம் என்ன இன்று கான்கிறேன்
போகப்போக புதிய அர்த்தம் உன்னைக் கேட்கிறேன்

கண்மணி… காதலி…
உன்னோடு உயிராகினேன்..
தினமும் இன்பமே தொல்லையே
முத்தாடும் முல்லையே

மீனாஆஆஆஆ…..
மன்னாஆஆஆஆ….

மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா