Archive for December, 2009

887 குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

December 31, 2009

//காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க.. கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல.. எவரும் இல்லையே பிறர் அறியாமல்…பிறர் அறியாமல் .. பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது//

இது போன்ற அபாரமான வரிகள் உள்ள இனிமையான பாட்டை ஏன் இத்தனை போடாமல் விட்டோம் என்று வருத்தப்பட்டேன் ஏனென்றால் பாலுஜி தீவிர ரசிகை பதிவில் அடிக்கடி வருபவர் தேடி பார்த்து கிடைக்காமல் ஏன் இந்த பாட்டை போடாமல் இருக்கிறீர்கள் என்று சண்டைக்கு வராத குறையாக மின்னஞ்சல் அனுப்பினார். சித்ரா மேடம் இது போன்ற அதிகம் கேட்கப்படும் பாடல்கள் மலைப்போல் குமிஞ்சு உள்ளன. இந்த பதிவின் நோக்கமே அதிகம் கேட்கப்படாத பாடல்கள் பதிவதை முன்னுரிமையாக வைத்திருக்கிறோம். பிரபலமான பாடல்கள் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வரும் எதையும் நாங்க விடமாட்டோம். சுந்தர் சாருக்கு இது நல்லாவே தெரியும். அவரும் உதவுவார் என்ட்று நம்புகிறேன். இது போன்ற பாடல்கள் பதிய தாமதமாகும் அவ்வளவே. இருந்தாலும் நீங்கள் நேரம் ஒதுக்கி மின்னஞ்சல் செய்ததற்க்கு நன்றி. இந்த பாடலையே இந்த வருடத்தின் கடைசி பாடலாக உங்களூக்கும் நம் பாலுஜி ரசிகர்களூக்கும் வழங்குகிறேன். போனஸாக ஒளிக்காட்சியுடன். அனவருக்கும் இனிமையான வருட கடைசி வாழ்த்துக்கள் (புதுவருட வாழ்த்துக்கள் எத்தனை தடவை தான் சொல்றது சார்) நாளை புத்தாண்டில் புதிய பதிவுடன் பார்ப்போம்.

பாடல்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
படம்:அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்
பாடலாசிரியர்:வாலி

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன

மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு
மேனிமீது எழுதும் மணல்தான் உறவு
தலையிலிருந்து பாதம் வரையில்
தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நான்…அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைகடலில்தான் அலையும் படகோ

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே
பிறர் அறியாமல்…பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது

வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
சுவை குறையாமல் இருக்கும் கீதம்

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு
இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

Advertisements

886 பொன்னாங்காணி பூத்து வந்ததோ

December 29, 2009

நட்சத்திரம் இந்த படம் எப்ப்பவோஓஓஓஓஓ பார்த்தது பாடல்கள் பட்டைய கிளப்பின என்று சொல்லவும் வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அவள் ஒரு மேனகைபாடலை மறந்துதான் போகுமா சமீபத்தில் வானொலியில் இந்த பாடலை கேட்டேன் விடுவோமா? கபால்ன்னு புடிச்சு போட்டுடோம்ல..பாடல் வரிகள் கேட்டால் பொண்ணாங்கானி கீரையை சுடு சாததுல பிசைந்து சாப்பிட்டது போல் ஓர் பீலிங்ஸ்ப்பா..

படம்: நட்சத்திரம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, பி.சுசீலா
இயக்குனர்: தசாரி நாராயணராவ்
தயாரிப்பாளர்: கிரிஜா பக்கிரிசாமி, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி, கே. எஸ். நரசிம்மன்
நடிப்பு: ஹரிபிரசாத் ஸ்ரீபிரியா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

பொன்னாங்காணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியது அம்மா
பல்லாங்குழி சோழிகளெல்லாம்
பல் வடிவில் வந்ததம்மா
ஆத்தா உன்னை நானே
பார்த்தா புள்ளி மானே

பொன்னாங்காணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியது கன்னா
பல்லாங்குழி சோழிகளெல்லாம்
பல் வடிவில் வந்தது கன்னா
ஆத்தா உன்னை நானே
பார்த்தா புள்ளி மானே

காடு வெட்டி வீடு கட்டி கண்ணாலம் மெத்தையிட்டு
கோடி கட்டி ஜோடியிட்டு கொண்டாடவா

சேலைகட்டி கொண்டையிட்டு சிங்கார சண்டையீட்டு
பாதையிட்டு தாலியிட்டு நீ ஆடவா
கண்ணால பார்த்தாலே எல்லோரும்தா
பொன்னோடு நீ வந்தா நல்லா இருக்கும்
கண்ணால பார்த்தாலே எல்லோரும்தா
பொன்னோடு நீ வந்தா நல்லா இருக்கும்
வெகுநாளா ஆசைவெச்சேன் உன் மேல தான்
வெகுநாளா ஆசைவெச்சேன் உன் மேல தான்
ஆத்தா உன்னை நானே
பார்த்தா புள்ளி மானே

ஆயக்குடி மாமனுக்கும் அத்தை போல பொன்னிருக்கு
அதத விட்டு உங்க கிட்ட தான் ஆசை வெச்சேன்

காரைக்குடி அத்தைகிட்ட கன்னங்கரு பிள்ளை உண்டு
கன்னைவிட்டு உன்னையும் தான் காதலிச்சேன்

எல்லார்க்கும் புரியாது தாள கட்டு
எழுத்தாமே சேராது தாலி கட்டு
எல்லார்க்கும் புரியாது தாள கட்டு
எழுத்தாமே சேராது தாலி கட்டு

அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு
அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு

பொன்னாங்காணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியது அம்மா
பல்லாங்குழி சோழிகளெல்லாம்
பல் வடிவில் வந்ததுகன்னா
ஆத்தா உன்னை நானே
பார்த்தா புள்ளி மானே

885 எனக்கு நீ உனக்கு நான்

December 24, 2009


//நாளான பின் தெரியும் தெரியும்.. நான் யாரென புரியும் புரியும்.. நீர் மேகங்கள் விலகும் விலகும்.. நெடு வானமும் விளங்கும் விளங்கும்.. சில நேரம் தென்றல் கூட.. புயல் போல தோன்றலாம்… பாலும் கள்ளாகும்.. சிறு பூவும் முள்ளாகும்.. பிழை பார்த்திடும் பார்வையால்//

//பகையாகுமா இமையும் விழியும்… பிரிந்தோடுமா கரையும் நதியும்.. திசை மாறுமா நிழலும் உடலும்.. தனியாகுமா நினவும் மனமும்.. உருவான கோபம் தாபம்
விதி செய்த நாடகம்… நீயும் இல்லாது இனி நானும் இங்கேது.. ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே//

மேலே கீழே உள்ளவை என் மனதை கவர்ந்த வரிகள். அருமை அருமை.. இப்பாடலை விரும்பி கேட்டவர்: கோவை கோபாலக்ருஷ்னன் சார்.

படம்: வாழ்க்கை சக்கரம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா

நாளான பின் தெரியும் தெரியும்
நான் யாரென புரியும் புரியும்
நீர் மேகங்கள் விலகும் விலகும்
நெடு வானமும் விளங்கும் விளங்கும்
சில நேரம் தென்றல் கூட
புயல் போல தோன்றலாம்
பாலும் கள்ளாகும்
சிறு பூவும் முள்ளாகும்
பிழை பார்த்திடும் பார்வையால்

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா

பகையாகுமா இமையும் விழியும்
பிரிந்தோடுமா கரையும் நதியும்
திசை மாறுமா நிழலும் உடலும்
தனியாகுமா நினவும் மனமும்
உருவான கோபம் தாபம்
விதி செய்த நாடகம்
நீயும் இல்லாது இனி நானும் இங்கேது
ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே

எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் திர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

884 நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும்

December 24, 2009

//பொம்பளையும் துனிஞ்சாச்சு ரொம்ப ரொம்ப திமிறாச்சு.. எம்பொழப்பு சிரிபாச்சு நீ இழுத்த இழுப்பாச்சு.. நான் குய்யோ முய்யோ என்று கத்த அய்யோ என்னாச்சு.. அடி யம்மா யம்மா சும்மா கத்துற கும்மாளமாச்சு//

ஆகா சூப்பாரப்பூ… சூப்பரப்பு…

வேலை கிடைச்சிடுச்சு
சத்யராஜ் – கதாநாயகன்
சரத்குமார் – வில்லன்
பி.வாசு – இயக்குநர்

Get this widget | Track details | eSnips Social DNA

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு

பொம்பளையும் துனிஞ்சாச்சு ரொம்ப ரொம்ப திமிறாச்சு
எம்பொழப்பு சிரிபாச்சு நீ இழுத்த இழுப்பாச்சு
நான் குய்யோ முய்யோ என்று கத்த அய்யோ என்னாச்சு
அடி யம்மா யம்மா சும்மா கத்துற கும்மாளமாச்சு

மொத மொத குளிக்கிற சுகத்த போத்தய்யா??
அடிக்கடி திறக்கிற கதவ சாத்தய்யா
ஒரு சேலை இழுத்த பார்க்க ஒரு கேள்வி இருக்கு சேர்க்க
பதில சொல்லி பாடு எனக்கு நல்ல மூடு
வெளியில போக விடமாட்டேன்

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

முக்கனியை பிழிஞ்சச்சு மோகரசம் வழிஞ்சாச்சு
பக்கம் வந்து படைச்சாச்சு வெச்ச கண்ண அடைச்சாச்சு
நீ கிள்ள கிள்ள அங்கே இங்கே முள்ளு குத்தாதா
நான் அள்ளி அள்ளி வச்சதெல்லாம் இன்னும் பத்தாதா

வரவர மனசு ஒரு தினுசா ஆஆஆஆ.. மாறுது
உரசுற வயசு அது வரம்ப..ஏஏஏஏ… மீறுது
அட சோப்பு இருக்கு தேய்க்க நெஞ்சு சேரடிக்க துடிக்க போக்க
அடி தேய்க்க தேய்க்க ஜோரா தொட்டு தேய்ச்சு விட்டது யாரு
எனக்கு ஒரு கோடி சுகமாச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு

ச்ச்சீ….ம்ம்ம…

883 கிளி ஜோசியம் பார்த்தேன்

December 22, 2009

இந்த பாட்டை கேட்டு பாருங்க.. வித்தியாசமான பாடல் படங்களில் தான் இருக்கும் ரேடியோவில் கேட்பது மிக மிக அபூர்வம் ஏனென்றால் பாடல் அப்படி.. அப்படிப்பட்டது. இது போல முன்னமேயே இதே தளத்தில் இப்படி பட்ட பாடலை தளத்தின் சொந்தக்காரர் வற்றாயிருப்பு சுந்தர் சார் பதிந்திருக்கிறார் டாக்ஸி டாக்ஸி(இந்த பதிவில் உள்ள பாடலை கேட்பீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது தவறாம இணைய நண்பர்களின் பின்னூட்டஙக்ளை அவசியம் நீங்க படிக்கிறீங்க.. படிக்கீறீங்க.)என்று தொடங்கும் பாடல். அந்த பாடலில் இந்த பாடலுக்கு அப்படியே எதிர்மறை இதில் சித்ரா மேடம் பாடுவாங்க அதில் பாலுஜி பாடுவார். இந்த இடத்தில் அதை நினைவுக்கூறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் இது போல் எப்போதாவது தான் அமையும் அப்படி தானே சுந்தர் சார்?) அந்த படத்தையும் இந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆகையால் காட்சிகளை விவரிக்க முடியவில்லை. சரியாப்போச்சு இந்த கர்மத்துக்கு விளக்கம் வேற தேவையான்னு அம்மணிகள் பொலம்புவது கேட்கிறது கேட்கிறது. பாட்டில் பாலுஜி தாவு கழண்டுவிடுகிறது. அமர்க்களம் போங்கள்.. கேட்டு மகிழுங்கள்.

ஒலிக்கோப்பு வழங்கி இந்த விருப்பப்பாடலை விரும்பி கேட்டவர் கோவை கோபலகிருஷ்னன் சார். அவருக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.

படம்:பேண்டு மாஸ்டர்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி,சித்ரா.
நடிகர்கள்:சரத்குமார், ரஞ்சிதா (அட இதுலயும் இருக்காங்களே!)

Get this widget | Track details | eSnips Social DNA

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

போச்சுடா…
ஏய்..ஏய்.. ஏய் இப்ப சொல்லிட்டேன்
கிட்ட வராத அடிப்பேன்..ஹ..
அய்ய… ஆள உட்ரீஈஈஈ

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

இப்ப என்னாங்கற?

நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

இன்னிக்கி அம்மாவாசை..

என் வாசலில் வைத்த பூசணி பூவும் நீ தானய்யா

மாடு மேயும்..

என் ராசா ராசா
ஜோசியம் பார்த்தேன்

ம்ம்

அந்த மதுரை மீனாட்சி திருகல்யாண சீட்டு வந்ததய்யா

ச்சே ஆள வுடு

தேக்குமர உடம்பு என்ன படுத்துது படுத்துது பாடா படுத்துது
நாக்கு வர வேர்த்து மனம் கொதிக்குது கொதிக்குது சூடா கொதிக்குது
சிக்குமுக்கு சிக்குமுக்கு சிக்குமுக்கு

இவங்க வேறய்யா..

அச்சோ தேக்குமர உடம்பு என்ன படுத்துது படுத்துது பாடா படுத்துது

வேண்டா..

நாக்கு வர வேர்த்து மனம் கொதிக்குது கொதிக்குது சூடா கொதிக்குது

ஐஸ் வெச்சுக்கோ..

போதை ஒன்னு ஏறுது ஏறுது கைகளும் தாவுது மாமனை நினைக்கயிலே

பேசாமே தூங்குடி..

சின்னப் பொண்னு சீறுது சீறுது தாகத்தில் தூங்குது நீயும் அணைக்கலையே

ச்சீ..

ஆசை அடங்கலையே

ஏய்..ஏய்..

என் மாமன் மடங்கலையே

ச்சீ.. உட்றீ

சோப்பு கறையிலையே என் சோக்கு புரியலையே

அதெல்லாம் புரியுது

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

ச்ச்சசசச…சூசூசூ..சிச்சீசீ.. சேச்சே…

வெவ்வ்வ்வ்வ்வெவேஏஏஏ

மூக்கு முனை சிவந்து உடல் முறுக்குது முறுக்குது மூடா இருக்குது
நாத்து நடும் வயலு அத உழுகல உழுகல காடா கிடக்குது

சே..மூக்கு முனை சிவந்து உடல் முறுக்குது முறுக்குது மூடா இருக்குது

முருகா..

நாத்து நடும் வயலு அத உழுகல உழுகல காடா கிடக்குது

சாமியேய்..

வேப்பெண்ணையை தடவுறேன் தடவுறேன்
காலையும் தோளையும் அமுக்கி புடிக்கறேன்ய்யா..

மஸாஜ் பன்றய்யா..

மாப்பிள்ளைக்கு சுடுதண்ணி போடுறேன்
மதமதப்பாக சுழுக்கு எடுக்கறன்ய்யா

சேலை வழுக்குதய்யா அதில் சேதி இருக்குதய்யா

ஆசை பொறக்கலைய்யா இந்த பூவு புடிக்கலைய்யா

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

என் வாசலில் வைத்த பூசணி பூவும் நீ தானய்யா
என் ராசா ராசா
ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

கோபம் வருது அடிச்சன்னா பல்லு முப்பத்திரண்டும் உடைஞ்சிடும்
கிட்ட வராதே..கிட்ட வராதே..
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
போடி வெளியே போறீயா..இல்லையா
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

சரிதான்..போடி…

882 மல்லிகை பூவழகில் பாடி வரும்

December 21, 2009


//ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை.. உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே.. மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே//

படம்:அன்னை வயல்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:சிற்பி
பாடலாசிரியர்:பழனி பாரதி

Get this widget | Track details | eSnips Social DNA

மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகைப்பூவழகில்..

தேவி பாதையாவும் திரு கோயிலாக மாறும்
பார்வை ஏக்கம் தீபம்
உந்தன் வார்த்தை வேதமாகும்
கண்கள் எழுதும் நானும் புது காதல் ஓவியம்
பெண்ணீன் நானம் பேசும்
அதில் வண்ணம் ஆயிரம்
கொஞ்சம் மனச்சந்தம் அதில்
உந்தன் மொழியே
எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே குளித்திடும்

ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே

உந்தன் அழகை பேசும் தென்றல்
பூவின் வாசம் வீசும்
மூங்கில் தோளில் சாயும்
தென்றல் ரகம் அதில் வாழும்
தலையில் கூந்தல் கோலம் சொல்லும் மோகனப்புன்னகை

ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே

சொந்தம் இது சொர்க்கம் என்பது அருகே
சிந்தும் மகரந்தம் அது என் வழியே
நனைந்திடும் அனைத்திடும்

ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறாவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை

881 மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்

December 18, 2009


//பரீட்சை தான் நெருங்க நெருங்க படுத்து தூங்குவோம்… பரீட்சை ஹாலில் உள்ள வந்தா பேப்பர் மாத்துவோம்… வாத்தியார் தடுக்க வந்தா வம்பு பன்னுவோம்.. அதையும் மீறி புடிக்க வந்தா கந்தலாக்குவோம்…படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை.. அப்படியும் பாஸான்னா தேவலை… படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை.. அப்படியும் பாஸான்னா தேவலை… அடிச்ச காப்பி கொஞ்சமில்ல அந்த கதை இப்ப எதுக்கு//

என்னுடைய கோப்பில் ரொம்ப நாளாக இருந்த பாடல் இது பசங்க காலேஜ் கலாட்டா பாடல் “மனப்பந்தல்” என்ற படத்தில் வருகிறதாம். எனக்கென்னவோ இது ஒரு மொழி மாற்றத்தில் எடுக்கப்பட்ட படத்தில் வருவது போல் தோன்றுகிறது. இணையத்தில் தேடினால் அசோகன் நடித்த படங்களில் ஒன்று என்று சொல்கிறது. இந்த படத்தின் தகவல்களை நம்ம பதிவர் ஜாம்பவான்கள் தெரிவித்தால் நானும் தெரிந்துகொள்வேன். அட.. காலேஜ் கலாட்டா பாடல் நல்லாதான் இருக்குப்பா.. கேட்டு மகிழுங்கள்.

படம்:மனப்பந்தல்
பாடியவர்கள்:டாக்டர்:எஸ்.பி.பி குழுவினர்

Get this widget | Track details | eSnips Social DNA

மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்
படிக்க வந்த பொன்னு எல்லாம் டீனேஜ்
கண்ணு உத்து பார்த்தா டேமேஜ்
கட்டிபுடி கட்டமாட்டோம் மேரேஜ்
ஊட்டியில்ல காட்டேஜ் ஆடைக்குதான் சார்ட்டேஜ்
ஊட்டியில்ல காட்டேஜ் ஆடைக்குதான் சார்ட்டேஜ்
மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்
படிக்க வந்த பொன்னு எல்லாம் டீனேஜ்

பப்பரப்ப பப்பரப்ப பப்பரப்ப பாப்பா
பளப்பளக்கும் கூந்தல் தான் சோக்கா
பப்பரப்ப பப்பரப்ப பப்பரப்ப பாப்பா.. பாப்பா..
பளப்பளக்கும் கூந்தல் தான் சோக்கா.. சோக்கா..

பஸ் ஸ்டாண்டு பக்கத்துல மீட் பன்னுவோம்
பக்குவமா பொன்னு வந்தா கிண்டல் பன்னுவோம்
பத்தினி தான் பனிஞ்சுபுட்டா வண்டி ஏத்துவோம்
கூட்டமில்லா தியேட்டருக்கு கொண்டு செல்லுவோம்
அடுத்த கதை என்னென்னு தான் புரியல
அடுத்த கதை ஆரம்பிச்சா தேவலை
அடுத்த கதை என்னென்னு தான் புரியல
அடுத்த கதை ஆரம்பிச்சா தேவலை
இடத்தை மாத்தி படத்தை பாரு எல்லாம் உனக்கு புரியும் குரு
மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்
படிக்க வந்த பொன்னு எல்லாம் டீனேஜ்

பப்பரப்ப பப்பரப்ப பப்பரப்ப பாப்பா
பத்தினி போடும் சட்டுனு போடும் தாழ்பா
பப்பரப்ப பப்பரப்ப பப்பரப்ப பாப்பா…பாப்பா..
பத்தினி போடும் சட்டுனு போடும் தாழ்பா..தாழ்பா

பரீட்சை தான் நெருங்க நெருங்க படுத்து தூங்குவோம்
பரீட்சை ஹாலில் உள்ள வந்தா பேப்பர் மாத்துவோம்
வாத்தியார் தடுக்க வந்தா வம்பு பன்னுவோம்
அதையும் மீறி புடிக்க வந்தா கந்தலாக்குவோம்
படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை
அப்படியும் பாஸான்னா தேவலை
படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை
அப்படியும் பாஸான்னா தேவலை
அடிச்ச காப்பி கொஞ்சமில்ல அந்த கதை இப்ப எதுக்கு

மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்
படிக்க வந்த பொன்னு எல்லாம் டீனேஜ்
கண்ணு உத்து பார்த்தா டேமேஜ்
கட்டிபுடி கட்டமாட்டோம் மேரேஜ்
ஊட்டியில்ல காட்டேஜ் ஆடைக்குதான் சார்ட்டேஜ்
ஊட்டியில்ல காட்டேஜ் ஆடைக்குதான் சார்ட்டேஜ்
மன்னன் வந்த பக்கம் எஙக காலேஜ்
படிக்க வந்த பொன்னு எல்லாம் டீனேஜ்

880 தாய் பாடினால் அன்று நான்

December 18, 2009


//பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி.. நீ வந்த கோலம் என்றும் மாறாது கோடி
பெண் பார்த்த போது மண் பார்க்க விரும்பினேன்.. தூங்காமல் தேடும் நாள் தோறும் உன்மடி.. உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி..//

அருமையான மனதை சோகத்தில் அமுக்கும் பாடல் வரிகள். கை படத்தில் அம்லா நடித்திருக்கிறாராம். உண்மையா சுந்தர் சார் (உங்க தலைவியின் பெரிய்ய்ய்ய படம் எதுவும் கிடைக்கல மன்னிக்க்கவும் உங்க தலைவியோட பதிவு ரொம்ப நாள் கழித்துபதிவி வந்துருக்காங்க சந்தோசம் தானே?)

இந்த பாடலை விரும்பி கேட்டவர் திரு.ராம்,யுஎஸ், ஒலிக்கோப்பு அன்பளிப்பு: திரு.வி.கோபாலக்ருஷ்னன், கோவை.

படம்:உத்தம புருஷன்
பாடியவர்கள்:எஸ்.பி.பி,சித்ரா
நடிகர்கள்:பிரபு,அம்லா,ரேவதி,சார்லி,வி.கே.ராமசாமி,
இசை:சங்கர் கனேஷ்,
இயக்குநர்:கே.சுபாஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:உத்தம புருஷன்
பாடியவர்கள்:எஸ்.பி.பி,சித்ரா

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி
நீ வந்த கோலம் என்றும் மாறாது கோடி

பெண் பார்த்த போது மண் பார்க்க விரும்பினேன்
தூங்காமல் தேடும் நாள் தோறும் உன்மடி

உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்

ஆரிரோ ஆரிரோ

பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்
மெய்யான சாட்சி வந்து ஆகாயம் தோறும்

மேகங்கள் வானில் சாயாது சூரியன்
என்வானில் நீயோ தேயாத சந்திரன்

கூடாத கைகளும் ஓர் நாளீல் கூறலாம்

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

879 என்னம்மா வருத்தம் வானம் தான்

December 17, 2009


//சித்திர தாமரை எப்பவும் வாடாது.. ராத்திரி வேளையில் கண்களை மூடாது
இந்த இன்பமும் துன்பமும் பேசிட வார்த்தைகளே.. இந்த இரண்டையும் வேறெங்கும் பார்த்ததில்லை.. இது படித்தா கண்டுப் பிடிச்சா.. ஒரு பதில் சொல்ல தெரியல்லையே
என்ன கணக்கோ என்ன வழக்கோ.. இந்த வாழ்க்கை புரியலையே//

கோவை பாலுஜி தீவிர ரசிகர் திரு.வி.கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல். இந்த பாடலை எத்தனைபேர் கேட்டிருக்கீங்க?

படம்: பத்தினிப் பெண்
நடிகர்கள்:ரூபினி,ஜனகராஜ்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குநர்: ஆர்.சி.சக்தி
வருடம்:1993

Get this widget | Track details | eSnips Social DNA

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா
வாழுற வாழ்க்கை மேடையில் போட்டாச்சு
ஆளுக்கு ஆளுக்கொரு பாத்திரம் ஏத்தாச்சு
இதில் இன்பமும் துன்பமும் மாறுகிற காட்சியம்மா
இதில் வீட்டுக்கு வீடு ஆயிரம் சாட்சியம்மா
இதை அறிஞ்சா உண்மை தெரிஞா
எந்த கலக்கமும் தேவையில்ல
இங்கு அழுதா தினம் தொழுதா
நல்ல பெயருடன் போவதில்லை

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

தருமமும் நியாமும் எப்பவும் சாகாது
சத்தியம் எப்பவும் பொய்யிடம் தோக்காது
சுடும் தீயிலும் தானிங்கு சாதமும் வேகுதம்மா
வரும் தீமையில் தானிங்கு நண்மையும் தோனுதம்மா
இருள் இருந்தா ஒளி இருக்கும்
இது உலகத்தின் இயற்க்கையம்மா
ஒன்னு இழந்தா ஒன்னு கிடைக்கும்
இந்த வாழ்க்கையில் கனக்ககிதம்மா

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

சித்திர தாமரை எப்பவும் வாடாது
ராத்திரி வேளையில் கண்களை மூடாது
இந்த இன்பமும் துன்பமும் பேசிட வார்த்தைகளே
இந்த இரண்டையும் வேறெங்கும் பார்த்ததில்லை
இது படித்தா கண்டுப் பிடிச்சா
ஒரு பதில் சொல்ல தெரியல்லையே
என்ன கணக்கோ என்ன வழக்கோ
இந்த வாழ்க்கை புரியலையே

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

878 நையாண்டி மேளசத்தம் கேட்டு

December 16, 2009

//பாடுவது என்னம்மா சொல்லம்மா கண்ணம்மா.. வேண்டியது சொல்லம்மா அம்மம்மா செல்லம்மா.. அன்பான மாமா அருகில் வரலாமா.. பொல்லாத அட்சம் வெட்கம் மிச்சம் ஏனம்மா//

பாலுஜி, சித்ரா இருவரின் இனிமையான குரல்களில் இந்த வரிகளுடன் இந்த பாடல் அதிகாரியில் வருகிறதாம் படத்தை யாரு பார்த்தாங்க? அழகான பாடல் உங்கள் செவிகளுக்கும்.

பாடல்:நையாண்டி மேளம்
படம்:அதிகாரி
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,சித்ரா
இசை: கங்கை அமரன்
பாடலாசிரியர்: வாலி

Get this widget | Track details | eSnips Social DNA

நையாண்டி மேளசத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு

நையாண்டி மேளசத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலையத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு

நையாண்டி மேளசத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலையத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு

வாழ்வில் ஒரு பொன்னாளு ஒரு நன்னாளு இன்னாளூ
வண்ண விழி அம்மாளூ நீ தாண்டி நம்மாளு
உன்னாலே தானே உயிர் பொழச்சேனே
அன்னாடம் பூவும் பொட்டும் சூடும் பொன் மானே

வீட்டையிடும் கூட்டம் தான் நோட்டம் தான் போடத்தான்
காட்டு வழி நானும் தான் நாளும் தான் ஓடத்தான்
உன்னால தானே பொழச்சது இந்த மானே
என்னோடு மேடையேறி ஆடும் மச்சானே

நீ யாரோ நான் யாரோ அப்போது

நீ வேறோ நான் வேறோ இப்போது

நம் நேசம் பாசம் மாறாது

நையாண்டி மேளம் சத்தம் கேட்டு

அடடடடடடடட நான் பாடப் போறேன் ஒரு பாட்டு

கைத்தாளம் போட்டு

ஹோய் ஹோய் தலையத்தான் ஆட்டு

மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு

பூவை முடிச்சு வந்த ராணி
காத்து படிச்சு வந்த தேனி
சூடி கிடச்சதடி மானே
ஷோக்கா இருக்கதடி மேனி

பொன்னான ஆளு பூவான ஆளு

ஜாடையிலே நான் பேச என் கூட நீ பேச
சாயங்கலை நான் பூச என் மேல நீ பூச
தென்பாண்டி மீச?? தென்றல் அது வீச
அம்மாடி மேலும் கீழும் தேகம் தான் பூச

பாடுவது என்னம்மா சொல்லம்மா கண்ணம்மா
வேண்டியது சொல்லம்மா அம்மம்மா செல்லம்மா
அன்பான மாமா அருகில் வரலாமா
பொல்லாத அட்சம் வெட்கம் மிச்சம் ஏனம்மா

தன்பட்டா?? கை பட்டா தொட்டா என்னாகும்
மின்சாரம் இந்நேரம் ராகம்

என் வேகம் தேகம் தாங்காது

நையாண்டி மேளசத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலையத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு

நையாண்டி மேளசத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலையத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு