922 இளவேனில் இது வைகாசி மாதம்

தனிமையில் கண்மூடிக் கேட்டால் அப்படியே பாட்டு முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைக்க வைக்கும் பாட்டு. ”விழியோரம் மழை ஏன் வந்தது” என்பதை எப்படிப் பாடுகிறார் கேளுங்கள்! நடுவில் எங்கேயோ நம்மைச் சஞ்சரிக்க வைக்கும் ஆலாபனைகள் வேறு. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கமல் சொன்னதுதான் இங்கும் “பாலுவுக்கு நிகர் பாலுவே”

படம் -காதல் ரோஜாவே
பாடியவர் -பாலு
இசை – இளையராஜா

ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதே…..ஓ….ஓ

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அன்னாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஆ………ஆ………..

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்

Isaithenral.Com – Illavenil .mp3
Found at bee mp3 search engine
Advertisements

One Response to “922 இளவேனில் இது வைகாசி மாதம்”

  1. jungsimmons79365 Says:

    Bewusst essen und genieu00dfen ist der Schlu00fcssel zu einer gesunden Ernu00e4hrung im Alltag. Click https://twitter.com/moooker1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: