913 நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

February 20, 2010

//இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம்.. என்னை இழுக்கின்றது.. இன்பரசங்களை காதோடு பாடி.. எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ.. இந்த மனதினில் என்னென்ன ராகம்.. விந்து விழுகின்றது.. சந்தம் புதியது சந்தோசப் பாடம்.. நெஞ்சில் எழுகின்றது.. பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம்.. என் பார்வையில் இது தோன்றுவது பாசமலர்.. பாடல் கோடியாகும்//

Image and video hosting by TinyPic

என்னவொரு அமர்க்களமான பாடல் இப்போதும் கேட்கபதற்க்கு விவரிக்கமுடீயாத புத்துணர்ச்சி ஏற்படுகிறது நீங்களூம் உணர்வீர்கள். 21ஆம் தேதி சென்னையில் பாலுஜி ரசிகர்கள் சாரிடபில் பவுண்டேசன் சார்பில் நடத்தும் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

படம்:குழந்தையைத் தேடி
நடிப்பு: ஜெய்சங்கர், அனுராதா
இசையமைப்பு: கங்கை அமரன்
இயக்குனர்: பி. பட்டாபிராமன்
தயாரிப்பாளர் எம். சாந்தி நாராயணன்
ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ்
வருடம்:1979

Get this widget | Track details | eSnips Social DNA

நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

நான் ராகம் என்ற பாட்டினில்
வாழுகின்ற உயிர் பாடகன்.. பாடகன்
ஹே… ஹே… ஹே…
நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம்
என்னை இழுக்கின்றது
இன்பரசங்களை காதோடு பாடி
எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ
இந்த மனதினில் என்னென்ன ராகம்
விந்து விழுகின்றது
சந்தம் புதியது சந்தோசப் பாடம்
நெஞ்சில் எழுகின்றது
பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம்
என் பார்வையில் இது தோன்றுவது பாசமலர்
பாடல் கோடியாகும்

நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் ராகம் என்ற பாட்டினில்
வாழுகின்ற உயிர் பாடகன்.. பாடகன்
நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

தங்கரதம் என் தள்ளாடும் மேனி பருவங்களில்
பொங்கி வழிந்திடும் பொன்னான இன்பம்
கன்னி இதயங்களில் ஹ ஹ

மொட்டு மலர்களில் முநநூறு வண்ணம்
சொக்கும் அழகுகளில்
பச்சை இதழ்களில் பாலூறும் கிண்ணம்
கத்தும் உறவுகளில்
ஆயிரம் ராகங்கள், வந்து ஆடிடும் காலங்கள்
இது வாலிபத்து காவியங்கள்
பாடுகின்ற ஓவியங்கள் பாசம் என்று வேண்டும்

Advertisements

912 தட்டி கேட்க ஆளில்லேன்னா

February 16, 2010

சென்னை பாலுஜி சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஆவலாக உள்ள இசையன்பர்களே அந்த நிகழ்ச்சியை நினைத்தாலே இனிக்கிறது அப்படி தானே? இதோ ஒரு குட்டியான அடிதடி பாட்டு கேட்டுட்டு தங்களூக்கு நேரம் இருந்தால் கமல், ரஜினி ரசிகர்கள் அனைவரும் பாலுஜி ரசிகர்கள் தான் கொஞ்ச நேரம் ஒதுக்கி கீழே உள்ள ஒளீக்கோப்பையு கண்டு மகிழுங்கள். நிச்சயம் உங்கள் நினைவுகள் “நினைத்தாலே இனிக்கும்” அதே சந்தோசத்தில் சென்னை சந்திப்பிற்க்கு தயார் ஆகுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA

தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசங்கம்
தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசங்கம்
ரீம் படக் படக் டுஸூம்..டுஸூம்
உடம்பெல்லாம் படக் படக்
உடம்பெல்லாம் படக் படக்
ததீகனத்தோம் தீம்தனதோம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
தலைவலிச்சா வாலுக்கு மருந்தா
தலைசெஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா
தலைவலிச்சா வாலுக்கு மருந்தா
தலைசெஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா

“நினைத்தாலே இனிக்கும்” ஒளீக்கோப்பு கண்டு மகிழுங்கள்.

ninaiinkirajkamaold1 @ Yahoo! Video

911 வாலிபா வா வா

February 16, 2010

இசையன்பர்களே வருகின்ற 21ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் பாலுஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் சந்திக்கிறார். பாலுஜி ரசிகர்கள் சாரிடபிள் பவுண்டேசன் சார்ப்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைவரையும் கலந்து கொள்ள இந்த தளத்தின் சார்பாக அன்புடன் அழைக்கிறேன் அழைப்பிதழ் மேலே அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்.

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, SP பாலசுப்ரமணியம், சித்ரா

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
(வாலிபா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
(வைகுண்டமும்..)

Thanks to MyFriend,Thenkinnam blog for lyrics and song

காதல்

February 14, 2010

வாழ்க்கையைக் காதலிக்கும் காதலர்களுக்குக் காதலர்தின நல்வாழ்த்துகள். பாலுஜியைத் தீவிரமாகக் காதலிக்கும் என்போன்ற ரசிகர்களுக்கு சதாகாலமும் காதுகளில் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

இன்று காதலர்தினத்தை முன்னிட்டு அவரது சில பாடல்களை அவசரமாக எடுத்துப் போட்டிருக்கிறேன். மொத்தமாக எடுத்துப் போடவேண்டுமானால் இன்னும் பத்து வருஷமாவது ஆகும் – ஆகவே, இப்போதைக்கு இதை அப்பிட்டைஸராக எடுத்துக் கொள்ளவும்!

909 அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்

February 13, 2010

//உள்ளம் உள்ள பேர்களுக்கு.. உண்மையான ஆட்களுக்கு.. நாயைப் போல காவல் நிற்பவன்
தாய்குலத்தை வாட்டுகின்ற.. பேய்குலத்தை காக்கும் போது.. தீயை போல மாறுகின்றவன்
தருமம் வெற்றி காணும்.. தருணம் இந்த நேரம்.. துனிஞ்சால் கேள்வி கேட்கலாம் ஹாஆ
முடிஞ்சால் மோதி பார்க்கலாம்.. நினைத்தவன்னம் முடிக்க தானே.. சபையில் நானும் வந்தேன்..//

ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா.. ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
திரைபடபாடல் மூலம் பாலுஜியின் வாழ்த்தை பெறும் இன்று பிறந்த நாள் காணும் நபர் யார்?… யார்?

படம்: மங்கம்மா சபதம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:கமல்,மாதவி,சத்யராஜ், சுஜாதா
இயக்குநர்: கே.விஜயன்

Get this widget | Track details | eSnips Social DNA

மதுரயிலே பிறந்தவன் நானே
மங்கம்மா பரம்பரைதானே
தாய் சொல்லை காக்க வந்தேனே
தாய்மீது ஆணையிட்டேனே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்
மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க

ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா

பாடி ஓடு வீடு வாசல்
ஜோடியோடு ஆடல் பாடல்
யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய்
கேள்வி கேட்க நாதி இல்ல
தட்டி கேட்க யாருமில்ல
மழை அடிக்கும் உங்கள் காட்டிலே
காலம் மாறியாச்சு அட
இனிமேல் என்ன பேச்சு
யாரும் நீண்ட காலமா
ஏற்றால் பூமி தாங்குமா
புதிய நீதி உதயமாகும்
எதிரில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல்வாழ்த்துநான் கூறுவேன்

உள்ளம் உள்ள பேர்களுக்கு
உண்மையான ஆட்களுக்கு
நாயைப் போல காவல் நிற்பவன்
தாய்குலத்தை வாட்டுகின்ற
பேய்குலத்தை காக்கும் போது
தீயை போல மாறுகின்றவன்
தருமம் வெற்றி காணும்
தருணம் இந்த நேரம்
துனிஞ்சால் கேள்வி கேட்கலாம் ஹாஆ
முடிஞ்சால் மோதி பார்க்கலாம்
நினைத்தவன்னம் முடிக்க தானே
சபையில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல் வாழ்த்து நான் கூறுவேன்
ஹா.. ஹா.. ஹா.. ஏய்ய்ய்ய்ய்ய் ஹா

908 ஆடலாமா அன்னநடை பின்னலிட

February 10, 2010

ஹா..ஹா..ஹா..சிரிப்பு சிரித்தே பேர் வாங்கினவர் பழம் பெரும் நடிகர் திரு.பி.எஸ்.வீரப்பா ஆவர்கள் அவரின் ஆஜானுபாகுவன அவரின் தோற்றமே அப்போது சிறு பிள்ளைகளூக்கு (ஹி ஹி ஹி என்னைப்போல)பயத்தை ஏற்படுத்தும் போதாதென்று “ஹா..ஹா..ஹா..சரியான போட்டி” என்ற வசனமும் அந்த சிரிப்பும் இதனாலேயே அவர் பெரும் புகழ் பெற்றார் சேர்ந்தார் போல் வசதியும் சேர்ந்தது. பணத்தை சேர்த்து எல்லோரும் போல் படத்தயாரிப்பில் ஈடுபட்டார் அவர் தயாரித்த படங்களில் இந்த படமான மங்கம்மா சபதம் (எதை வைத்து பழைய படத்தின் பெயர் வைத்தாரோ தெரியவில்லை ஏதாவது காரணம் இருக்கலாம் தற்போது படமான ஆயிரத்தில் ஒருவன் மாதிரி யாரு கண்டாங்க?). சரி விசயத்துக்கு வருகிறேன் பழைய படமும் பார்க்கவில்லை இந்த புதிய படமும் பார்க்கவில்லை நம்ம அன்பர்கள் யாராவது உபயோகமான தகவலுடன் கலாய்க்கறாங்களா என்று பார்ப்போம். அதுவரை இந்த ஆடாலாமா பாடலை கேட்டு மகிழலாம்.

பாடல்: ஆடலாமா அன்னநடை பின்னலிட
படம்:மேகத்துக்கும் தாகமுண்டு
பாடியவர்:டாக்டர்.எஸ்பிபி,வாணிஜெயராம்
மேகத்துக்கும் தாகமுண்டு
இயக்குனர் எஸ். ஜெகதீசன்
தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ், பி. எஸ். ஹரிஹரன்
நடிப்பு சரத் பாபு, ரஜனி சர்மா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ
வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை
வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை

உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் கோணாமல் வந்தது இந்த சோலை
உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் கோணாமல் வந்தது இந்த சோலை

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ

கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணம் நானல்லவோ

முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ
கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணம் நானல்லவோ

உள்ளத்தில் ஒன்றாக
சொல்லோடு ஒன்றாக
சொல்லாத பெண்ணல்லவோ

உன்பேரை அல்லாமல்
வேறெந்த பேர் மீதும்
சாயாத பெண்ணல்லவோ

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ

குயிலென இசை கொண்டு மயிலென நடை கொண்டு
உரிமை சிறகும் கடமை மொழியும் நிறைந்தவளே
எனது மடியில் உலகம் முழுதும் மறந்தவளே
சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் ஆடுகின்றாள்
சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் ஆடுகின்றாள்
என்னோடும் வாடுகின்றாள் கண்ணாலே பேசுகின்றாள்
சந்தன மோகினி குங்கும ராகினி
மங்கள் மேகலை பொங்கிய தேவதை
ரதியும் நதியும் இவளே

வேங்கட மாயவன் வள்ளியின் வேலவன்
கண்ணகி நாயகன் மன்னவானவன்
கனவும் நினைவும் இவனே

எனக்கொரு புதுமுகம் கொத்தவள் நீயடி

நினைக்கையில் இனிக்குது மனந்தவன் காலடி

எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே
எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ

907 ஊத்திக்க ராசா ராசா

February 10, 2010

1985 ஆண்டு வெளிவந்த படம் மங்கம்மா சபதம் நம்ம உலக நாயகன் நடிச்சதுங்க கதாநாயகி மாதவி படம் பேர்வைத்து இணையத்தில் தேடினால் பழைய நடிகர் ரஞ்சன் அவரக்ள் நடித்த படம் தகவல் கிடைத்தன இது 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது இங்கே எங்கடா பாலுஜி வந்தார் என்று யோசித்துக்கொண்டே கூகுளில் கீழே சென்றால் கமல் சாரும் மாதவியும் சேர்ந்து ரசிகரக்ளை கலங்கடித்த மொழி மாற்றம் செய்த படம் அல்லது பாடல் மொழி மாற்றம் செய்த பாடல் ஆமாங்க இந்த பாடலோட ஒரிஜனல் மெட்டு மனசுல ரீங்காரமிடுது உதடு வரைக்கும் வருது வெளி வரமாட்டீங்குது பாடினா ஊத்திக்க ஊத்திக்க ராசா ராசா என்று தான் வருதுங்க. பாலுஜி பாடி மொழி மாற்றம் செய்த பாடல் கேட்டு ரொம்ப நாளாயிடுச்சுங்க மொழி மாற்றம் செய்யும் பாடல்களில் அவர் பாட்டுக்கு சௌகரியத்துக்கு மனுசன் புகுந்து வெளாடுவாரு. ஆஹா ஓஹோ ஆஹா.. இந்த ஒலிக்கோப்பின் தரமா அல்லது இசைகருவிகளின் ஆதிக்கமா தெரியவில்லை இறைச்சலா இருக்குங்க..நீங்களும் ஒரு வித்தியாசத்துக்காக கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பாடல்: ஊத்திக்க ராசா ராசா
படம்: மங்கம்மா சபதம்
படியவர்கள்: டாக்டர் எஸ்பி.பி, வாணிஜெயராம்
நடிகர்கள்:கமல்,மாதவி,சத்யராஜ், சுஜாதா
இயக்குநர்: கே.விஜயன்

Get this widget | Track details | eSnips Social DNA

ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா
ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா
ஆஹா ஓஹோ ஹெஹெ

பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே
பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே
ஆஹா ஓஹோ ஆஹா

பைத்தியமே பைத்தியமே ஏஏஏஏ

பார்த்துக்கடா வைத்தியமே ஒஹோஓஓ

ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா

பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே

ஹேஏஏஏ

ஊதுங்கள் இங்கே வாருங்கள் இங்கே
தட்டுங்கள் தாளம் கைத்தாளம் தாளம்

இப்போதே யோகம் எப்போது வாய்க்கும்
எல்லோருக்கும் இன்று இறை அதுவன்று??
வேட்டைன்னா வேட்டை இது ஹேஹேஎ

தூண்டிலிலே மாட்டியது ஒஹோ ஹோ

ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா

பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே
ஆஹா ஓஹோ ஆஹா

முட்டாளின் மூளை எப்போதும் வேலை
செய்யாது போடா நீ மூடா நீ வாடா ஹா

கட்டிக்கோ சேலை வெச்சுக்கோ பூவை
நீ என்ன ஆணா என்மூனா?? சரிதானா

மாப்பிள்ளை மாத்திக்கோ ஓஹோ ஹோ

மாராப்பை போர்த்திக்கோ ஹேஏஏஏஏ

ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே

ஊத்திக்க ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பார்த்தாக்கா பச்சப்புள்ளே பாவங்கள் மிச்சமில்லே

906 இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

February 9, 2010


அன்பு உள்ளங்களே.. கமல், ரஜினி இருவரும் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பாலுஜியின் ஓர் இனிமையான பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் விருப்பத்துடன் இந்த பாடல் பதிகின்றேன் அருமையான மெலோடி பாடல் இது. மிகவும் சிரமப்பட்டு தேடி பிடித்து நமக்காக அதாவது, பாலுஜியின் ரசிகர்களுக்காக வழங்குகிறார் அவரின் அபார முயற்சியை பாராட்டி இந்த பாடல் அவருக்காக. அப்படியே நாமும் கேட்டு மகிழ்வோம் அன்பர்களே.

படம்:அலாவுதீனும் அற்புதவிளக்கும்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:கமல்,ரஜினிகாந்த், எஸ்.ஏ.அசோகன்,மனோகர்,ஜெயபாரதி,ஸ்ரீப்ரியா
இசை:ஜி.தேவராஜன்
வருடம்:1979

Get this widget | Track details | eSnips Social DNA

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

பழரசங்கள் ஊருகின்ற உதடோ
அது பவள மாளிகையின் கதவோ
பழரசங்கள் ஊருகின்ற உதடோ
அது பவள மாளிகையின் கதவோ

ஒரு கொடி ஆட இரு கனி ஆட
பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட
மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அழகே ரோஷினி

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

இந்த நதியில் நீந்த வந்த படகோ
உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ
இந்த நதியில் நீந்த வந்த படகோ
உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

இதழ் மடல் மீது கதை எழுதாது
எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது
மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.. பெண்ணும்.. ஓரினம்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

905 ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

February 7, 2010


இந்த பாடல் ஏற்கெனவே இணையத்தில் ரசிகர்களால் பேசப்பட்ட பாடல் தான் எனக்கு இப்போது தான் பதிய நேரம் கிடைத்தது. அழகான வரிகள் கொண்ட பாடல் இது கேட்டு மகிழுங்கள் அன்பர்களே

படம்:நங்கூரம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி.டாக்டர்.எஸ்.ஜானகி

Get this widget | Track details | eSnips Social DNA

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம்
அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம்

ஆதிகால தென்னை இது
நீதி காக்கும் என்னை

நீரில் வந்த சொர்க்கம்
அதன் வாசல் தானே வெட்கம்

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்

ஏழு லோகம் எங்கும்
இந்த தேவி போல இல்லை

ஏழை காத்த ரோஜா
அதை காவல் காக்கும் ராஜா

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை

அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

904 சுந்தரி…….. நீ எந்திரி

February 4, 2010

வணக்கம் வாத்தியாரே ஆமாங்க இது படம் பேரு இந்த படத்தில் ஒரு அமர்க்களமான அதிரடி பாடல் இது ரொம்ப வருடங்களாயிற்று இது போல் பாடல் துவக்கத்திலும் சரணங்கள் நடுவிலும் பாலுஜி அவருக்கே உரிதான ஸ்டைலில் நாயகியை கிண்டலடிக்கும் ஸ்வரங்களூடன் கில்பான்ஸ் வரிகள் என்னான்னு தெரியுனுமா? அஸ்க் அஸ்க் அஸ்கு…ஆசை தான், அடெங்கப்பா… ஸூப்பர் ஸூப்பர்.. கேட்டு மகிழுங்கள்.

படம்:வணக்கம் வாத்தியாரே
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக்,சரன்யா, ராதா
தயாரிப்பு:பி.எச்.ஹரிஹரன்
இயக்குநர்:அமீர்ஜான்

Get this widget | Track details | eSnips Social DNA

சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி
தண்ணிக்குள்ள தவமிருக்கும் சுந்தரி
உன் தாவனிதான் வேணுமின்னா எந்திரி
தண்ணிக்குள்ள தவமிருக்கும் சுந்தரி
உன் தாவனிதான் வேணுமின்னா எந்திரி

மாடு மேய்க்க வந்திருக்கும் நாட்டுக்கட்டேய்
நீ மாமன் கிட்ட வம்பு இழுத்து மாட்டிக்கிட்ட

சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி

தண்ணியில காத்திருந்தா கால்கடுத்து
உன் தங்க நிற மேனியில மீன் கடிக்குமே ஹேய்
கொக்கு ஒன்னு உன்ன கொத்த காத்திருக்கும்
அட கவலையெல்லாம் உன்னை வந்து காதலிக்குமே
மாமானுக்கு பெரிய மனசு கன்னித்தேனே
இரண்டு கையும் தூக்கி வந்தா மன்னிப்பானே
மாமானுக்கு பெரிய மனசு கன்னித்தேனே
இரண்டு கையும் தூக்கி வந்தா மன்னிப்பானே

சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி

கட்டழகு மேனியினை மூடக்கூடுமா
நீ கட்டி வெச்ச ஒட்டு முடி ஆடையாகுமா
மல்லுக்கட்டி பார்க்குறியே ரெண்டு வாரமா
மாட்டு கொம்பில் பால் கறந்தா பால் இருக்குமா
கொட்ட கொட்ட முழிக்கிறியே பட்டிக்காடு
இப்போ குட்டி கரணம் போடச்சொன்ன வெட்ககேடு
கொட்ட கொட்ட முழிக்கிறியே பட்டிக்காடு
இப்போ குட்டி கரணம் போடச்சொன்ன வெட்ககேடு

சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி
தண்ணிக்குள்ள தவமிருக்கும் சுந்தரி
உன் தாவனிதான் வேணுமின்னா எந்திரி
தண்ணிக்குள்ள தவமிருக்கும் சுந்தரி
உன் தாவனிதான் வேணுமின்னா எந்திரி

மாடு மேய்க்க வந்திருக்கும் நாட்டுக்கட்டை
நீ மாமன் கிட்ட வம்பு இழுத்து மாட்டிக்கிட்ட

சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி
சுந்தரி…….. நீ எந்திரி.. ஹோய்ய்ய்ய்ய்ய்