609. ஆனந்தம் அது என்னடா

‘நான் இரு நிலவுகள் என்ற படத்தை எடுத்தேன். அதில் கமல்ஹாஸனுக்கு இரண்டு வேடங்கள். ஞாபகமறதி மருத்துவராக ஒரு வேடம். இரண்டு மூன்று நாட்கள் படபிடிப்புக்குப் பிறகுதான் கமல் என்னை அந்தப் பாத்திரத்திற்கு உதாரணமாக வைத்துக்கொண்டு என்னைப் போலவே நடையுடை பாவனைகளைப் பின்பற்றி நடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தேன். அதையும் அட்சர சுத்தமாகச் செய்துகொண்டிருந்தார் மனுஷன்!’ – இப்படிச் சொன்னவர் சிங்கீதம் சீனிவாசராவ். கமல்ஹாஸன் என்ற அற்புத விளக்கை வைத்து சில அற்புத படங்களை நமக்குத் தந்த இயக்குநர்.

இரு நிலவுகள் படத்தில் பாலு ஒரு அருமையான பாடலைப் பாடியிருக்கிறார். ‘ஆனந்தம் அது என்னடா? அது காணும் வழி சொல்லடா?’ என்று கேள்வியைக் கேட்கும் பாட்டைக் கேட்பதுதான் ஆனந்தப்படும் வழி! 🙂 ஒரு முறை கேட்டாலே எளிதாக மனதில் ஒட்டும் மெட்டு. ‘நமக்கே படைத்தான் பூமியை’ என்று கரகரவென்று பாலு பாடுவது போல் பாடினால் தொண்டை சுளுக்கிக்கொள்ளம் போல இருக்கிறது. அவர் இது மாதிரி கமல் பாடல்கள் இன்னும் சிலவற்றில் செய்திருக்கும் ஞாபகம். சட்டென நினைவுக்கு வருவது இளமை இதோ பாடலில் நடுவே ரபப்பாப ரபப்பாப ரிபாரபபா என்று இதே பாணியில் பாடியிருப்பது.

நிறைய சேட்டைகளுடன் பாலு பாடியிப்பதைக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஆனந்தம் அது என்னடா ஏ.. ஹே..ஹே..
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

காதல் வித்தை நாள் முழுக்கக் காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தான் போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஒரு கோட்டில் குறியாயிரு
கண்கூட மயங்காதிரு
ஏ.. நீலங்கள் கனிகின்றதே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றம் செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

துணிவோடு தோள் தட்டடா
தடையேதும் கிடையாதடா
நீ உன்னை அறிந்தாயடா
நமக்கே படைத்தான் பூமியை
நமக்கே படைத்தான் பூமியை

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

Get this widget | Track details | eSnips Social DNA

Leave a comment